rp

Blogging Tips 2017

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்..

பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை பணிநிரவல் செய்தல் தொடர்பான அரசாணை

CLICK HERE-G.O.No. 270 Dt : July 10, 2012- EXTRA TRS -SURPLUS G.O REG

New dist transfer application

குற்றச்சாட்டில் இடமாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு கலந்தாய்வில் மீண்டும் அதே இடம் வழங்கக் கூடாது: தமிழக அரசின் முதன்மைச் செயலர் உத்தரவு!!

குற்றச்சாட்டு காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டவர்களை பொதுமாறுதல் கலந்தாய்வில் மீண்டும் அதே இடத்துக்கு இடமாறுதல் செய்யக் கூடாது என்று தமிழக அரசு முதன்மைச் செயலாளர் சபிதா உத்தரவிட்டுள்ளார்.

பள்ளி கல்வித்துறை சார்பில், ஆண்டு தோறும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நடக்கும். இந்த ஆண் டுக்கான கலந்தாய்வு மாநிலம் முழுவதும் தொடங்கி உள்ளது. இதில் கடைப்பிடிக்க

தொடக்கக்கல்வி - மாவட்ட மாறுதல் கலந்தாய்வுக்கு புதிய நெறிமுறைகள் - புதிய மாறுதல் விண்ணப்பம் - விண்ணப்பிக்க கடைசி நாள் 18/08/2015 - இயக்குனர் செயல்முறைகள்

முதல்முறையாக மற்ற தேர்வர்களின் மதிப்பெண்ணையும் பார்க்கலாம் குரூப் 2 கலந்தாய்வுக்கான ரேங்க் பட்டியல் வெளியீடு

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 கலந்தாய்வில் பங்கேற்போருக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, தமிழ்நாடு அரசு பணியாளர் ேதர்வாணைய தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் கூறியதாவது:

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 பதவிகள் அடங்கிய உதவி பிரிவு அதிகாரி (மாவட்ட வணிகவரித்துறை), சப்-ரிஜிஸ்திரார், வருவாய் உதவியாளர் உள்ளிட்ட பதவிகளில் காலியாக உள்ள 1,136 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்து தேர்வை கடந்த ஆண்டு நவம்பர் 8, 9ம் தேதிகளில் நடத்தியது.

69-ஆவது சுதந்திர தினம்: மதிப்புக் கூட்டு சேவைகளுக்கு பி.எஸ்.என்.எல். சிறப்புச் சலுகை அறிவிப்பு

சுதந்திர தினத்தை முன்னிட்டு, செல்லிடப்பேசி வாடிக்கையாளர்கள் பயன்படுத்தும் இணையத் திட்டங்களுக்கு (Data Plans) சிறப்புச் சலுகையை தமிழக தொலைபேசி வட்டம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக தொலைபேசி வட்டம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
நாடு முழுவதும் சனிக்கிழமையன்று, 69-ஆவது சுதந்திர தினம் கொண்டாடப்படுகிறது. இதை முன்னிட்டு, பி.எஸ்.என்.எல். வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

RTE - RIGHT OF CHILDREN TO FREE AND COMPULSORY EDUCATION ACT - 2009,NORMS AND STANDARDS FOR A SCHOOL (PUPIL-TEACHER RATIO)

உஷார்: 'வாட்ஸ் அப் குழு'வை நிர்வகிப்பவரா நீங்கள்?

புதுப்புதுச் செய்திகளாக உலவும் வதந்திகளையோ, உளறல்களையோ விட்டுவிடாமல், நிஜ உலகத்தோடு அவற்றை சம்பந்தப்படுத்துகிறோம்.

              "ஹேய் மச்சி, வாட்ஸ் அப் இன் வாட்ஸப்?" என்பதுதான் பெரும்பாலான இளைஞர்களின் முதல் கேள்வியாக இருக்கிறது. வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகில், நமக்குத் தெரியாமலேநம்மை இணைத்துக் கொள்ளும் ஏராளமான வாட்ஸப் க்ரூப்பில், நாமும் இணைந்தே இருக்கிறோம்.

முனைவர் பட்டத்திற்கு 'ஆன்லைன்' விண்ணப்பம்முனைவர் பட்டத்திற்கு 'ஆன்லைன்' விண்ணப்பம்

 காந்திகிராம பல்கலையில் பல்வேறு துறைகளில் முனைவர் பட்டங்களுக்கு 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம். பதிவாளர் பாலசுப்ரமணியன் கூறியதாவது: பல்கலையில் சமூக அறிவியல், அறிவியல், தமிழ், ஆங்கிலம், எதிர்காலவியல், மகளிரியல் உள்ளிட்ட 22 துறைகளில் முனைவர் பட்டங்களுக்கு 2015--16 க்கான விண்ணப்பங்கள் www.ruraluniv.ac.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது.

ஆதார் எண் இல்லாத மாணவர்களுக்கு புகைப்படம்: தலைமையாசிரியர்களுக்கு அறிவுறுத்தல்

ஆதார் எண் இல்லாத மாணவர்களை சிறப்பு முகாமிற்கு அழைத்துச்சென்று அந்த அட்டைக்கான புகைப்படம் எடுக்க வேண்டும்,என, தலைமைாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தி உள்ளது.

'மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை கொடுங்க!' எல்.ஐ.சி.,க்கு ஐகோர்ட் கண்டிப்பான உத்தரவு

எல்.ஐ.சி.,யில், பயிற்சி வளர்ச்சி அதிகாரிகளுக்கான பணியிடங்களில், 3 சதவீதத்தை, மாற்று திறனாளிகளுக்காக, காலியாக வைத்திருக்க வேண்டும்' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

          வேலுார் மாவட்டம், தெக்குபட்டு கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன்; எல்.ஐ.சி., முகவராக பணிபுரிகிறார். மாற்று திறனாளியான இவர், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு:ஜூன், 1ம் தேதி, 664 பயிற்சி வளர்ச்சி அதிகாரிகள் பணியிடங்களுக்கு, 'ஆன் - லைன்' மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. பொது பிரிவினருக்கு,

தொடக்கக்கல்வி - பணிநிரவல் - ஆசிரியர் மாணவர் விகிதாசார பட்டியல

TNPSC Department Exam May- 2015 Results published

  • CLICK HERE - Results of Departmental Examinations - MAY 2015

தமிழக ஆசிரியர் 22 பேருக்குதேசிய விருது அறிவிப்பு

தமிழகத்தில், கல்விப்பணியில் சிறப்பான பங்களிப்பை அளித்த, 22 பேர், தேசிய விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். மறைந்த முன்னாள் ஜனாதிபதி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான, செப்., 5ம் தேதி, தேசிய அளவிலும், மாநில அளவிலும், ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. கல்விப்பணியில் சிறந்து விளங்கும் ஆசிரியரை தேர்வு செய்து, மத்திய, மாநில அரசுகள், விருது மற்றும் ரொக்கப்பரிசை வழங்கி கவுரவிக்கிறது.

தமிழ்நாட்டிலே அதிசய பள்ளிகூடம

் -படித்து விட்டு பகிரவும் நண்பர்களே!!!!!!!
பள்ளி மாணவர்களுக்கு வேட்டி சட்டை .... சீருடை !
'' மதுரையில் .. டி.கல்லுப்பட்டி காந்தி நிகேதன் மேல்நிலைப் பள்ளி i சீருடை.... வேட்டி சட்டை தான் !
இந்தியா சுதந்திரம் பெறுவதற்குச் சரியாக நான்கு நாட்களுக்கு முன் தொடங்கப்பட்ட பள்ளி இது.
அந்தப் பள்ளியின் மாணவர்கள். சாலையில் அணி அணியாக நடந்து வந்தால், ஏதோ அரசியல் கட்சி ஊர்வலமோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
அவர்கள் உடுத்தி இருப்பது சாரதி வேட்டியோ, பாலியெஸ்டர் வேட்டியோ கிடையாது.
கதர் வேட்டிதான்.
வேட்டிகளைத் துவைக்க கதர் சோப் தயாரிக்கும் முறையையும் பள்ளியிலேயே கற்றுக் கொடுக்கிறார்கள்.
பள்ளியில் ஆசிரியைகளை 'அக்கா’ என்றும்,
ஆசிரியர்களை 'ஐயா’ - என்றும் உறவு சொல்லி அழைக்கிறார்கள் மாணவ- மாணவிகள்.
தலைமை ஆசிரியருக்கும் விதிவிலக்கு கிடையாது.
வகுப்பு மாணவர்கள் வேட்டி அணிவதைப்போல, மாணவிகள் பாவாடை தாவணி அணிகிறார்கள்.
சிறு குழந்தைகளும்கூட வாரத்தில் மூன்று நாட்கள் கதர் ஆடை மட்டுமே அணிகிறார்கள்.
திங்கள் கிழமை தோறும் நடக்கும் கொடி வணக்கத்தின்போது, பல்வேறு தேச பக்திப் பாடல்களை மாணவர்கள் பாடுவார்கள்.
புதன்தோறும் நடைபெறும் சர்வ சமயப் பிரார்த்தனைக் கூட்டத்தில் பைபிள், பகவத் கீதை, குர்ஆன், திருக்குறளையும் சேர்த்து வாசிப்பார்கள்.
ஒழுக்கத்துக்குப் பேர் போன பள்ளி இது.
காலாண்டு, அரையாண்டுத் தேர்வுகளின்போது மாணவர்களை கண்காணிக்கவே தேவை இல்லை.
காப்பி அடிக்காமல் சுய ஒழுங்கைக் கடைப்பிடிப்பார்கள்.
பொதுத் தேர்வில் பங்கு ஏற்கும் மாணவர்கள் தங்களது பெற்றோரைப் பள்ளிக்கே அழைத்து வந்து ...
பாத பூஜை செய்யும் வழக்கமும் இங்கே உண்டு.

அக்டோபர் 8-இல் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம்- க.செல்வராஜ்.பொதுசெயலர் பொறுப்பு

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் அக்டோபர் 8-இல் வேலைநிறுத்தம் செய்ய உள்ளனர். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு பல்வேறு கட்டங்களாக

பத்தாம் வகுப்பு தனித் தேர்வுக்கு ஆக.17 முதல் விண்ணப்பிக்கலாம்



இது தொடர்பாக அந்த இயக்ககம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
இந்த ஆண்டு பத்தாம் வகுப்பு தனித் தேர்வு செப்டம்பர் 28 முதல் அக்டோபர் 6 வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையத்துக்குச் சென்று ஆகஸ்ட் 17 முதல் 26 வரை இணைய வழி மூலமாக இந்தத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

கடந்தாண்டு கலந்தாய்வில் பங்கேற்றவர் இந்தாண்டு பங்கேற்க முடியாது!

இந்தாண்டு பொது மாறுதல் கலந்தாய்வு ஆக., 12 முதல் செப்., 16 வரை நடக்கின்றன. இதற்காக ஆக.,7 வரை ஆசிரியர்களிடம் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. கலந்தாய்வில் பங்கேற்க சம்பந்தப்பட்ட ஆசிரியர் அந்த பள்ளியில் குறைந்தபட்சம் மூன்று கல்வியாண்டுகள் பணியாற்றியிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதிக்கப்பட்டு 1.6.2012 தகுதி நாளாக அறிவிக்கப்பட்டது.
இதற்கு ஆசிரியர்களிடம் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து குறைந்தபட்சம் ஒருகல்வியாண்டு போதும் என நிபந்தனை தளர்த்தப்பட்டது. இதன்படி 1.6.2014 தகுதி நாளாக அறிவுறுத்தப் பட்டது.ஆனால் கடந்தாண்டில் பங்கேற்றோர் இந்தாண்டு பங்கேற்க முடியாத நிலையுள்ளது

பிளஸ் 2 துணைத் தேர்வு:செப்டம்பர்/அக்டோபர் 2015 கால அட்டவணை

செப்டம்பர் 28 - மொழிப்பாடம் தாள்-1,
செப்டம்பர் 29 - மொழிப்பாடம் தாள்-2,
செப்டம்பர் 30 - ஆங்கிலம் தாள்-1,
அக்டோபர் 1 -  ஆங்கிலம் தாள்-2,
அக்டோபர் 3 -  இயற்பியல், பொருளியல்,
அக்டோபர் 5 -  கணிதம், விலங்கியல், நுண் உயிரியல், ஊட்டச் சத்து- உணவுக்                கட்டுப்பாடு,

பி.எட். மாணவர் சேர்க்கை எப்போது? படிப்பு காலத்தை அதிகரிப்பதிலும் குழப்பம்

இந்த கல்வியாண்டு (2015-16) பி.எட். சேர்க்கை எப்போது நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள், கல்வியாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது.பி.எட். படிப்புக் காலம் இரண்டு ஆண்டுகளாக அதிகரிக்கபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு மீதான விசாரணை நவம்பருக்கு ஒத்திவைக்கப்பட்டிருப்பதால்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 3 ஆயிரம் ஆசிரியர்கள் கூடுதலாக பணியாற்றிவருவதாக தகவல் : கணக்கெடுக்கும் பணி தீவிரம்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் 3 ஆயிரம் ஆசிரியர்கள் கூடுதலாக பணியாற்றிவருவதாக தகவல் தெரிவிக்கின்றது.அரசு பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருகிறது. மாணவர் சேர்க்கையை அதிகரிக்க பள்ளிக் கல்வித்துறை தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.


பல இடங்களில் தமிழ் வழி கல்வி மட்டுமின்றி ஆங்கில வழி கல்வி பாடத் திட்டமும் செயல்படுத்தப்படுகிறது. ஆனாலும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைகிறது.

அகஇ - 22/08/2015 அன்று உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும், 29/08/2015 அன்று தொடக்கநிலை ஆசிரியர்களுக்கும் CRC வகுப்புகள் நடைபெறும்

கவுன்சலிங்கில் கலந்து கொள்ள "ஆன் ட்யூட்டி' சலுகை - ஓ.பி., அடிக்க ஆசிரியர்கள் பயன்படுத்துவதால் அதிருப்தி.

பணிமாறுதல் கவுன்சலிங்குக்கு, விண்ணப்பித்தவர்களுக்கு, இரண்டு நாள் வரை ஆன்டூட்டி சலுகை வழங்கப்படுகிறது. பல ஆசிரியர்கள் கவுன்சலிங்கில் கலந்து கொள்ளாமல், இச்சலுகையை, "ஓ.பி.,' அடிக்க பயன்படுத்துவதால், தலைமை ஆசிரியர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளும், ஐந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும் உள்ளன. இவற்றில் பணிபுரியும் ஆசிரியர்களுக்காக, ஆண்டுதோறும் பொது இடமாறுதல்

தொடக்கக்கல்வி : 4 - 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு "எரிசக்தி சேமிப்பு" ஓவியப்போட்டி நடத்துதல் சார்ந்து இயக்குநர் செயல்முறைகள்


இடமாறுதல் கவுன்சிலிங் அரசு கண்டிப்பு உத்தரவு

'அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங்கில், ஜூன் மாதம் முதலே கல்வி ஆண்டு கணக்கில் எடுக்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு, கடந்த 8ம் தேதி கவுன்சிலிங் நடந்தது. இதில், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தை, கல்வி ஆண்டாக எடுத்துக் கொண்டு, இட மாறுதல் வழங்க ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதன்படி, சிலருக்கு இடமாற்ற உத்தரவு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அரசு பள்ளிஆசிரியர்கள் வேலை நிறுத்தம் அறிவிப்பு

ஆசிரியர்களின், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசுக்கு எதிராக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், அக்டோபர், 8ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளனர்.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின், 24 சங்கங்கள் இணைந்து, 'ஜேக்டோ' என்ற கூட்டு நடவடிக்கைக்குழுவை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இக்கூட்டுக்குழுவின் ஆலோசனைக் கூட்டம், தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் ரெங்கராஜன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், வரும் அக்டோபர், 8ம் தேதி வியாழக்கிழமை, அனைத்து அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களும் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட முடிவு செய்யப்பட்டதாக, தெரிவித்தார்.

14, 15ல் விடுப்பு எடுக்க ஆசிரியர்களுக்கு தடை

சுதந்திர தினத்தை முன்னிட்டு, வரும், 14, 15ம் தேதிகளில், ஆசிரியர்கள் விடுப்பு எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.நாட்டின், 69வது சுதந்திர தினம், வரும், 15ம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. வழக்கமாக, ஞாயிற்றுக்கிழமைக்கு முதல் நாள், அரசு விடுமுறை தினமாக வரும் போது, ஆசிரியர்கள், மூன்று நாட்கள் சேர்த்து விடுமுறை எடுத்து விடுவர்.

தீர்ந்தது ஆசிரியர் சம்பள பிரச்னை

தமிழக பள்ளிக் கல்வியில், மத்திய அரசு திட்டம் கீழ் பணியாற்றும், 50 ஆயிரம் ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கான, சம்பள பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், புதிய அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.அரசு பள்ளிகளில் தரம் உயர்த்தப்பட்ட, 1,000 உயர்நிலை, 8,000 நடுநிலை பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட, 50 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் மற்றும் பள்ளிக்கல்வி பணியாளர்களுக்கு, மத்திய அரசின்,

ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வு 12-ஆம் தேதி தொடங்குகிறது.

பள்ளி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு வருகிற 12-ஆம் தேதி தொடங்குகிறது.

        தமிழகத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஆசிரியர் பணியிட மாறுதல் தொடர்பான இணையவழிக் கலந்தாய்வு மே மாதத்தில் நடைபெறுவது வழக்கம். அவ்வாறு மே மாதம் பணியிட மாறுதல் தொடர்பான கலந்தாய்வு நடைபெறுவதன் மூலம், அந்தக் கல்வியாண்டில், கலந்தாய்வில் தேர்வு செய்யும் பள்ளிகளுக்குச் செல்வது எளிது. மேலும்

01.06.2014க்கு முன் பணிபுரிபவர்களுக்கு மட்டுமே பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்துக்கொள்ள அனுமதி - தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறை (11/08/2015)


DSE - Online District Transfer Norms Regarding Instructions (Published on 5.8.15)

அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை: செப்டம்பர் 30 வரை நீட்டிப்பு - இயக்குனரின் செயல்முறைகள்


தொடக்கக் கல்வி - சுதந்திர தின விழா கொண்டாடுதல் - இயக்குநர் செயல்முறைகள்

தொழில்நுட்ப கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ரத்து

அண்ணா பல்கலை இணைப்பில் உள்ள தொழில்நுட்ப கல்லுாரிகளில், ஏழு கல்லுாரிகள், இந்த ஆண்டு, பல்கலை அனுமதி பெற்று, மாணவர் சேர்க்கையை நிறுத்தி விட்டன.


அதேநேரத்தில், இரண்டு கல்லுாரிகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. எம்.பி.ஏ., நிறுத்தம்: கோவை, கீர்த்திகா ஸ்கூல் ஆப் பிசினஸ் மற்றும் செங்குந்தர் பி ஸ்கூல் பார் உமன்.எம்.சி.ஏ.,நிறுத்தம்

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - 01.01.2015ன் நிலவரப்படி 2015-16ம் கல்வியாண்டிற்கான அரசு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்விற்கான தேர்ந்தோர் பட்டியல் வெளியிடப்பட்டது - திருத்திய முன்னுரிமை பட்டியல் வெளியிடுதல் சார்பு

DSE - HIGH SCHOOL HM PANEL RELEASED REG PROC CLICK HERE...

DSE - HIGH SCHOOL HM PANEL AS ON 01.01.2015 CLICK HERE...

எஸ்.எஸ்.ஏ., கூடுதல் கல்வி அலுவலர் பணியிட கலைப்பின் பின்னணி என்ன?

அனைவருக்கும் கல்வி இயக்கக (எஸ்.எஸ்.ஏ.,) கூடுதல் முதன்மை கல்வி அலுவலர் பணியிடம் கலைக்கப்பட்டுள்ளது. திட்டத்தை நிறுத்தப் போவதற்கான அறிகுறியே இது என்கின்றனர் பணியாளர்கள்.

பள்ளி வயதுள்ள அனைத்து குழந்தைகளும், கட்டாயம் ஆரம்பக் கல்வி பெற வேண்டும் என்ற நோக்கில், மத்திய அரசு, கடந்த, 2002ல், அனைவருக்கும் கல்வி இயக்ககத்தை (எஸ்.எஸ்.ஏ.,) ஏற்படுத்தியது. மத்திய அரசு, 65 சதவீதம், மாநில அரசு, 35 சதவீதம் நிதி ஒதுக்கீடு வழங்கி வருகின்றன.

காஞ்சிபும் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் பொதுமாறுதல் குறித்து முக்கிய அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறித்த காலத்தில் சம்பளம் வழங்க இயலுமா?

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பெற்றுத் தரும் பணியில் ஈடுபட்டுள்ள கருவூலத் துறை அலுவலர்களுக்கு, இப்போது புதிய பணி கொடுக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்களின் ஊதியம் உள்ளிட்ட இதர புள்ளிவிவரங்களைச் சேகரித்து, சென்னையில் நடக்கும் கூட்டத்தில் பங்கேற்க அடிக்கடி அழைப்பு விடுப்பதால் ஊதியம் வழங்கும் பணியில் தொய்வு ஏற்படுவதாகப் புகார் எழுந்துள்ளது.


இதனால், அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு மாதமும் குறித்த காலத்தில் சம்பளம் வழங்க இயலுமா என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. தமிழகத்தில் 14 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களும், 8 லட்சத்துக்கும் அதிகமான ஓய்வூதியதாரர்கள்- குடும்ப ஓய்வூதியதாரர்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஊதியமும், ஓய்வூதியத்தையும் அளிக்கும் பணியில் கருவூல அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர். சம்பளப் பட்டியலை ஆய்வு செய்து உரிய முறையில் ஊதியம் வழங்கும் பணியைச் செய்து வருகின்றனர். 
இந்த நிலையில், கருவூல அலுவலர்களுக்கு சென்னையில் உள்ள இயக்ககத்தில் இருந்து கூட்டங்களுக்கு அடிக்கடி அழைப்பு விடுக்கப்படுகிறது. அதுவும் ஒரு மாதத்துக்குள் இரண்டு அல்லது மூன்று முறையாவது கூட்டம் நடத்தப்படுவதாகப் புகார் கூறப்படுகிறது. 
இதுகுறித்து சென்னையில் உள்ள அலுவலர்கள் கூறுகையில், கருவூல அலுவலர்கள், கூடுதல் அலுவலர்களுக்கான கூட்டங்கள் கடந்த 23, 31 ஆகிய தேதிகளில் நடந்தன. அதற்குள்ளாக, அடுத்தக் கூட்டம் வரும் 11 ஆம் தேதி நடக்கவுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஓய்வூதியதாரர் விவரங்களைக் கணினிமயமாக்குவது உள்பட 38 அம்சங்கள் குறித்து விவாதிக்க வேண்டுமெனவும், அதுதொடர்பான விவரங்களைச் சேகரித்து வரும்படியும் கூறப்பட்டுள்ளது. இதைத் தயார் செய்ய 20 நாள்கள் வரை ஆகும். இந்தப் பணியில் ஈடுபட்டால் அரசு ஊழியர்களுக்கான ஊதியப் பட்டியல்களைச் சரி செய்து குறித்த காலத்தில் அவர்களுக்கு ஊதியம் வழங்க முடியாது என்று தெரிவித்தனர். 
மேலும், கருவூலத் துறை என்பது இப்போது புள்ளிவிவரங்களைச் சேகரிக்கும் துறையாக மாறி விட்டதாகவும் அவர்கள் கூறினர். ஓய்வூதியதாரர் இறந்தால்...: புள்ளிவிவரங்களைச் சேகரிக்கும் பணி ஒருபுறம் இருக்க, ஓய்வூதியதாரர்கள் வழியிலும் வேறு பிரச்னைகள் வருவதாகத் தெரிவிக்கின்றனர். 

பள்ளிக்கல்வித்துறையில் பணிநிரவல் கவுன்சிலிங் நடத்துவதில் சிக்கல்

பள்ளிகல்வித்துறை புதிய விதிமுறைகள் ,கலந்தாய்வு தேதி PDF FORMAT

பள்ளிகல்வித்துறை ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு.                             ( கலந்தாய்வில் விண்ணப்பம் அளித்தவர் மட்டுமே கலந்தாய்வு
மையத்தில் இருக்க வேண்டும் அரசு எச்சரிக்கை) விதிமுறைகள் மற்றும் தேதி பதிவிறக்கம் செய்ய இங்கே கிளிக் செய்யவும்

தேசிய திறனறி தேர்வு அறிவிப்பு

'பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான மாநில அளவிலான தேசிய திறனறித் தேர்வு நவ., 8ம் தேதி நடைபெறும்' என அறிவிக்கப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள் ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி உதவித்தொகை பெற வேண்டுமெனில் மத்திய அரசு சார்பில் நடத்தப்படும் தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். இந்த கல்வி ஆண்டுக்கான திறனறித் தேர்வு குறித்த அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டு உள்ளது.

தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர் சதவீதம் அதிகரிப்பு.

தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர் சதவீதம் ஆண்டுக்கு, ஆண்டு அதிகரித்து வருகிறது&'&' என முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் தெரிவித்தார்.

          காரைக்குடியில் பள்ளி கட்டடங்களை திறந்து வைத்து அவர் பேசியதாவது: 
ரூ.15 லட்சத்தில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இது மக்கள் வரிப்பணம். ஆறாம் வகுப்பு படிக்கும் சராசரி மாணவர் 2-ம் வகுப்பு தொடர் சொற்களை திறம்பட எழுத தெரியவில்லை. 
தமிழகத்தில் கடந்த ஐந்து ஆண்டுக்கு முன் வரை 27

ஓவியம் உள்ளிட்ட கலைப் பிரிவுகளுக்கு முதல்முறையாக பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஓவியம் உள்ளிட்ட கலைப் பிரிவுகளுக்கு முதல்முறையாக பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
           புதிய பாடத்திட்டம் நடப்பு கல்வியாண்டில் வெளியிடப்படும் என கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.தமிழகத்தில், பள்ளி மாணவர்களின் தனித்திறன்களை மேம்படுத்தும் நோக்கில் செயல்படுத்தப்பட்ட ஓவியம், தையல், இசை மற்றும் உடற்கல்வி ஆகிய பாடங்களுக்கு பாடத்திட்டங்கள் இல்லாமல் பெயரளவில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், தமிழ்நாடு கலையாசிரியர்கள் சங்கத்தின் கோரிக்கை அடிப்படையில், நடப்பு கல்வியாண்டில் புதிய பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.அதன் படி, இரண்டு கட்டமாக நடந்த பாடத்திட்ட தயாரிப்பு பணிமனை இரு நாட்களுக்கு முன், நிறைவு பெற்றது. சென்னை கவின் கலை கல்லுாரி பேராசிரியர்கள் ஆலோசனை படி, அரசு அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்களின் உதவியுடன் இப்பணி நிறைவு பெற்றுள்ளது.ஓவியத்தை பொறுத்த வரை,

போட்டித்தேர்வு மூலம் அரசு பள்ளிகளில் 1,400 சிறப்பாசிரியர்கள் நியமனம்: அறிவிப்பு விரைவில் வெளியாகிறது

அரசு பள்ளிகளில் ஏறத்தாழ 1,400 சிறப்பாசிரியர்கள் (தையல், ஓவி யம், உடற்கல்வி) போட்டித்தேர்வு மூலம் நியமிக்கப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகிறது.

பள்ளிக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் அரசு உயர்நிலை, மேல் நிலைப் பள்ளிகளிலும், மாநக ராட்சிப் பள்ளிகளிலும் தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர்கள் முன்பு பதிவு மூப்பு (சீனியாரிட்டி) அடிப்படை யில் நியமிக்கப்பட்டு வந்தனர்.

சுதந்திர தின கொடியேற்ற நேரம் மாற்றம்

தமிழகத்தில் இதுவரை காலை 8 மணிக்கு அரசு சார்பில் தேசிய கொடி ஏற்றும்நிகழ்ச்சி நடந்து வந்தது. மலைப்பகுதியான நீலகிரியில் மட்டும் காலை 10 மணிக்குவிழா நடைபெற்றது. ஆனால், இந்த ஆண்டு நீலகிரி மாவட்டம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களிலும் காலை 10மணிக்கு தேசிய கொடியேற்றுமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.

தொடக்கக்கல்வி-2015-மாறுதல் குறித்த தகவல்கள்

தொடக்கப்பள்ளி மாறுதல் கலந்தாய்வுஇயக்குனர் நெறிமுறைகள்   click here
தொடக்கக்கல்வி மாறுதல்அட்டவணைமற்றும் ஆணைகள்
clik here

கலை ஆசிரியர் தேர்வு ரத்து :டி.ஆர்.பி., புது முடிவு

 அரசு பள்ளிகளில், 762 கலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, இரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட அறிவிப்பை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., திடீரென ரத்து செய்துள்ளது;

         'விரைவில் போட்டித் தேர்வு அறிவிக்கப்படும்' என்றும் அறிவித்துள்ளது. அரசு பள்ளிகளில், ஓவியம், தையல், இசை மற்றும் உடற்கல்விப் பாடப்பிரிவுகளில் காலியாக இருந்த, 762 கலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப, 2013ல், டி.ஆர்.பி., அறிவிப்பு வெளியிட்டது. மாநில அளவில், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில், 1:5 என்ற

கல்லூரி கல்வி இயக்குனர் திடீர் நீக்கம்:உயர்கல்வி துறையில் தொடரும் சர்ச்சை

தமிழக கல்லுாரி கல்வி இயக்குனர் கூடுதல் பொறுப்பில் இருந்து, செய்யாறு கல்லுாரி முதல்வர் தேவதாஸ், திடீரென நீக்கப்பட்டு உள்ளார். அதே நேரத்தில், புதிய இயக்குனரையும், கூடுதல் பொறுப்பிலேயே நியமித்துள்ளதற்கு, கல்லுாரி ஆசிரியர்கள் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்.தமிழக கல்லுாரி கல்வி இயக்குனர், தமிழகம் முழுவதும் உள்ள, 700 கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளை நிர்வகிக்கும் பொறுப்பு உடையவர்.

3 தமிழக பல்கலைக்கு அங்கீகாரம் ரத்து

விதிகளை மீறி செயல்பட்டதாக, தமிழகத்தில், அண்ணாமலைப் பல்கலை, தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலை உட்பட, நாடு முழுவதும், 31 பல்கலைகளின் அங்கீகாரத்தை, மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இதனால், இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை நடத்துவதில் சிக்கல்ஏற்பட்டுள்ளது.அஞ்சல் வழியில், தொலை நிலை பட்டப்படிப்புகளை நடத்தும் பல்கலைகளை, இதுவரை தொலை நிலை கல்வி கவுன்சில் கண்காணித்து வந்தது. இதில் பல புகார்கள் வந்ததால், இந்த கவுன்சில் கலைக்கப்பட்டு, யு.ஜி.சி.,யின் நேரடி கட்டுப்பாட்டில் தொலை நிலை கல்வி அமைப்பு உருவாக்கப்பட்டது.

              இந்த அமைப்பின் மூலம், திறந்தவெளிப் பல்கலைகளின் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டு, விதிகளை மீறும் பல்கலைகளின் அங்கீகாரம், தயவு தாட்சண்யமின்றி ரத்து செய்யப்படுகிறது. நடப்பு கல்வி ஆண்டில், தமிழகத்தில், மூன்று பல்கலைகள் உட்பட, நாடு முழுவதும், 31 பல்கலைகளுக்கு, தொலை நிலை கல்வி வழங்குவதற்கான அங்கீகாரத்தை, யு.ஜி.சி., ரத்து

படிக்கட்டில் தொங்கும்மாணவர்களுக்கு 'அட்வைஸ்'

  'பஸ் படிக்கட்டில் தொங்கும் மாணவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு பள்ளி பிரார்த்தனை கூட்டத்தில், அறிவுரை வழங்க வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

           அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், அரசு வழங்கும் பஸ் பாஸ் பயன்படுத்தி, அரசு பஸ்களில், பள்ளிகளுக்கு செல்கின்றனர். அப்படி செல்லும் போது, பல மாணவர்கள், பஸ்சின் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே செல்வதை

மாணவர்கள் வங்கிக்கணக்கு துவக்குவதில் தாமதம்

தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வில், தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு வங்கிக்கணக்கு துவக்கி, அதற்கான விபரங்களை, ஆன்லைனில் பதிவு செய்வதில், பள்ளி தலைமை ஆசிரியர்கள் தாமதம் செய்து வருகின்றனர்.
          இதை கண்டித்தும், உடனடியாக பதிவேற்றம் செய்யவும், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார். மத்திய அரசின் மனிதவளத்துறையில், தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் பெயர் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.

பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து வைக்கப்படும் உணவுகளை உண்பதால் தைராய்டு மற்றும் வழுக்கை வரும்

 எவர்சில்வர் பாத்திரங்களைவிட கழுவுவதற்கு எளிதாக உள்ளது என பல குடும்பத்தலைவிகள் தங்களது பிள்ளைகளுக்கும், கணவர்களுக்கும் பிளாஸ்டிக் டப்பாக்களில் உணவுகளை கட்டித் தந்தனுப்புகின்றனர். இதில் உள்ள மிகப்பெரிய ஆபத்து பற்றி சமீபத்திய ஆய்வின் முடிவு எச்சரித்துள்ளது.

         பெங்களூரில் உள்ள பிரபல கிளினிக்கில் முடி உதிர்வு சிகிச்சைக்காக வந்தவர்களில் 430 பெண்கள், 570 ஆண்கள் என மொத்தம் ஆயிரம் பேருக்கு நடத்தப்பட்ட ஆய்வில்,
இவர்களில் 92 சதவீதம் பேரின் ரத்தத்தில் 'பிஸ்பெனால் ஏ' (BPA) எனப்படும் பிளாஸ்டிக்கின் சேர்மம் கலந்துள்ளதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் அனைவரும் 20 முதல் 45 வயதுக்குட்பட்ட பிரிவை சேர்ந்தவர்கள் என்றும், வேலைக்கு செல்லும் தரத்தினரான இவர்கள் அனைவரும் அன்றாடம் 4-6 முறை பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்து வைக்கப்படும் உணவு வகைகளை உண்ணும் பழக்கம் உடையவர்கள் என்பதும் தெரியவந்துள்ளது.

ஆசிரியரை அடித்த ஆசிரியையின் பணிநீக்க உத்தரவு ரத்து

அரசு உதவி பெறும் சிறுபான்மை பள்ளியின் ஆசிரியை, பணிநீக்கம் செய்யப்பட்டதை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. அவரை,
மீண்டும் பணியில் அமர்த்த உத்தரவிட்டுள்ளது.
ஆறு மாதத்திற்குள்...:வேலுார் மாவட்டம், அரக்கோணம், சி.எஸ்.ஐ., மத்திய தொடக்கப் பள்ளியில், இடைநிலை ஆசிரியையாக, 1987ல், செலினா மார்க்கரெட் நியமிக்கப்பட்டார். பின், 2000ல், புனித ஆண்ட்ரூஸ் மேல்நிலைப் பள்ளிக்கு, இடமாற்றம் செய்யப்பட்டார். 2006ல், பள்ளி வளாகத்தில், குடும்ப விழா நடந்தது.

ஆசிரியர் பயிற்றுநர்கள் 'பரஸ்பர' இடமாறுதல்11க்குள் விண்ணப்பிக்க 'கெடு'

அனைவருக்கும் கல்வி இயக்க ஆசிரியர் பயிற்றுநர்களுக்கு 'பரஸ்பர' இட மாறுதலுக்கான அறிவிப்பை மாநில திட்ட இயக்குனரகம்
அறிவித்துள்ளது.
2015--16 கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி இயக்க (எஸ்.எஸ். ஏ.,) திட்டத்தில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியர் பயிற்றுநர்கள் 'பரஸ்பர' இடமாறுதல் பெற வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு பிரச்னை : ஆக.18ல் இறுதி விசாரணை

ஆசிரியர் நியமனத்துக்கான 'டெட்' தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு அளித்த அரசாணையை மதுரை உயர் நீதிமன்ற கிளை ரத்து செய்ததை எதிர்த்து ஓராண்டுக்குப் பின் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்து உள்ளது.ஆசிரியர் பணி நியமனத்துக்கான டெட் தேர்வு 2013 ஆகஸ்டில் நடந்தது; 4.5 லட்சம் பேர் எழுதினர். இதில் தேர்ச்சி பெற மொத்த மதிப்பெண்ணான 150க்கு 60 சதவீதமான 90 மதிப்பெண் பெற வேண்டும். அதன்படி 16 ஆயிரத்து 492 பேர் 90 மதிப்பெண் பெற்றனர்

தமிழ்நாடு மின் வாரியத்தில், புதிதாக, 7,500 ஊழியர் நியமிக்கப்பட உள்ளனர்.

தமிழ்நாடு மின் வாரியத்தில் கள உதவியாளர், பொறியாளர் என, 90 ஆயிரம் ஊழியர் பணிபுரிகின்றனர்; 50 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளன. ஓய்வுஊழியர் பற்றாக்குறையால் மின் உற்பத்தி, மின் வினியோகம் உள்ளிட்ட ஏராளமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

மாதம்தோறும், 500 - 750 ஊழியர் ஓய்வு பெறுவதால், 20 பேர் செய்யும் வேலையை, ஒரு ஊழியர் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது.

web stats

web stats