rp

Blogging Tips 2017

தமிழகத்தில் வரும் 2015-16ஆம் கல்வியாண்டில் புதிதாக தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை தொடங்குவதற்கு வரும் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

தமிழகத்தில் வரும் 2015-16ஆம் கல்வியாண்டில் புதிதாக தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை தொடங்குவதற்கு வரும் 10ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தொடக்க கல்வி இயக்குனர் கூறியுள்ளார்.
இதுகுறித்து தொடக்க கல்வி இயக்குனர் இளங்கோவன், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி உள்ள அறிக்கையில், ''அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் 2015-16ஆம் கல்வியாண்டில்

காலாண்டு தேர்வு மதிப்பீட்டு பணிகள் தீவிரம்

மாவட்ட பள்ளிகளில், காலாண்டு தேர்வு முடிவுகள் குறித்த மதிப்பீட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. அரசுப் பள்ளிகளில், படிக்கும் மாணவர்களின் கல்வித்தரத்தை உயர்த்த பல்வேறு நடவடிக்கைகள், பள்ளிக் கல்வித்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாலை நேர சிறப்பு வகுப்புகள், வழிகாட்டி கையேடுகள், பாட ஆசிரியர்களுக்கு பயிற்சி, கற்றல் குறைபாடுள்ள மாணவர்கள் மீது சிறப்பு கவனம் என பல்வேறு முயற்சிகள் எடுக்கப்படுகின்றன.


அடுத்த கட்டமாக, ’காலாண்டு தேர்வில் 60 சதவீதத்திற்கும் குறைவாக பெறும் பள்ளிகளின் மீதும், தலைமையாசிரியர்கள் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்’ என்று சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன்படி, மதிப்பீட்டு பணிகள் தீவிரமாக நடக்கிறது.

ஒரேநாளில் 20 ஆசிரியர்கள் லீவு: விடுமுறை விடப்பட்ட அரசுப் பள்ளி

ஒரே நாளில் 20 ஆசிரியர்கள் விடுப்பு எடுத்ததால், திருத்தங்கல் அரசு பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இப்படி செயல்பட்டால் விருதுநகர் மாவட்டம் எப்படி நூறு சதவீத தேர்ச்சி இலக்கை எட்டுவது? என பெற்றோர்கள் புலம்புகின்றனர். கல்வியை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஆண்டுதோறும் பலகோடி நிதி ஒதுக்கீடு செய்கிறது. ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புதல், பள்ளி உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மாணவர்கள் இடைநிற்றல் இல்லாமல் கல்வியை தொடர வேண்டும் என பல முயற்சிகளை மேற்கொண்டு கல்வியின் தரத்தை மேம்படுத்த தீவிரம் காட்டப்படுகிறது.

அரசு எவ்வளவுதான் முயற்சிகள் செய்தாலும் ஆசிரியர்கள் முழு ஈடுபாடு பணியாற்றினால்தான் அரசின் நோக்கம் நிறைவேறும். விருதுநகர் மாவட்டம் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் 25 ஆண்டுகளாக மாநில அளவில் முதலிடம் பெற்று வந்தது. கடந்த ஆண்டுகளில் இந்த தேர்ச்சி சதவீதம் குறைந்து முதலிடத்தை தக்க வைக்க முடியாமல் போனது. பொது தேர்வுகளில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் அதிகாரிகளும் தொடர் முயற்சி மேற்கொள்கின்றனர்.

தொடக்கக் கல்வி - கல்வி தகவல் மேலாண்மை முறை () தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் பயிலும் மானவர்களுக்கு எடை மற்றும் உயரம் அறிதல் சார்பான இயக்குனரின் அறிவுரை

DEE - EMIS - DIRECTORS INSTRUCTIONS REG TO MEASURE STUDENTS HEIGHT / WEIGHT CLICK HERE...

தொடக்கக் கல்வி - கல்விச்சுற்றுலாவின் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவ்டிக்கைகள் சார்ந்த வழிகாட்டு நெறிமுறைகள்

DEE - EDUCATIONAL TOUR REG INSTRUCTIONS CLICK HERE..

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் தொலைதூர கல்வியை பிற மாநிலங்களில் வழங்க தடை

தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள், பிற மாநிலங்களில் தொலைதூர கல்வியை வழங்க யுஜிசி தடைவிதித்துள்ளது. தங்கள் ஆளுகையின் கீழ் உள்ள பகுதிகளில் மட்டுமே இந்த திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது. தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் பாடங்களை தொலைதூர கல்வி திட்டத்தில், வீட்டில் இருந்து கொண்டோ அல்லது வேலை பார்த்து கொண்டோ படிக்கலாம். இந்த கல்வியை தமிழகத்தில் மாநில அரசின் கீழ் உள்ள 10 பல்கலைக்கழகங்களும், சில நிகர்நிலை பல்கலைக்கழகங்களும் வழங்கி வருகின்றன.

TRB PGT NOTIFICATION | முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வை அறிவித்தது TRB

முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான எழுத்துத் தேர்வை அறிவித்தது TRB | 
விண்ணப்ப விநியோகம் 10.11.2014 முதல் 
 கடைசி தேதி 26.11.2014 
 எழுத்துத் தேர்வு 10.1.2015 
 மொத்த பணியிடம் 1807 
 தமிழ்-227, 
ஆங்கிலம்-209, 
கணிதம்-222, 
இயற்பியல்-189,
 வேதியியல்-189,
.வரவியல்-95, 
விலங்கியல்-89, 
வரலாறு-198, 
பொருளியல்-177, 
வணிகவியல்-135, 
உடற்கல்வி இயக்குநர்-27 
 விரிவானவிவரங்கள்..

பிளஸ் 1 வகுப்பு: அடுத்த கல்வியாண்டிலும் புதிய பாடத் திட்டத்துக்கு வாய்ப்பில்லை?

பி.இ., எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட பட்டப் படிப்புகளில் மாநிலப் பாடத் திட்ட மாணவர்கள் திணறி வரும் நிலையில், அடுத்த கல்வியாண்டிலும் (2015-16) பிளஸ் 1 வகுப்புக்கான பழைய பாடத் திட்டம் மாற்றப்படாது எனத் தெரிகிறது.

பிளஸ் 1 வகுப்புக்கு 2014-15-ஆம் கல்வியாண்டிலும், பிளஸ் 2 வகுப்புக்கு 2015-16-ஆம் கல்வியாண்டிலும் பாடத் திட்டங்களை மாற்ற திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், பல்வேறு காரணங்களால் இது தள்ளிப்போனது. பிறகு, பிளஸ் 1 வகுப்புக்கு 2015-16-ஆம் ஆண்டிலிருந்தும், பிளஸ் 2 வகுப்புக்கு 2016-17-ஆம் ஆண்டிலிருந்தும் புதிய பாடத் திட்டம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

நவ.,14ல் பள்ளிகளில் பேச்சு போட்டி

இம்மாதம் 14 ம் தேதி குழந்தைகள் தினவிழாவில் பள்ளி மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடத்த வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் தின விழா நவ.,14 ல் கொண்டாடப்படுகிறது. அன்று அனைத்து பள்ளிகளிலும் அனைத்து வகுப்பு மாணவ, மாணவியருக்கு பேச்சு, கட்டுரை, கவிதை உள்ளிட்ட போட்டிகள் கண்டிப்பாக நடத்த வேண்டும்.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு நோடிபிகேஷன் இன்று வெளியிடப்பட்டு உள்ளது.

விண்ணப்பங்கள் வரும் 10.11.2014 முதல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலத்தில் கிடைக்கும்.
விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி நாள்: 26-11-2014.
தேர்வு நாள்: 10.1.2015
ஒவ்வொரு பாடத்திற்கும் உள்ள காலி பணியிடங்கள் பற்றிய விவரம் வருமாறு :-
தமிழ் - 277
ஆங்கிலம் - 209

விதிமீறும் சிபிஎஸ்இ பள்ளிகள்


 சிபிஎஸ்இ பள்ளிகள் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்துவதாகவும், கூடுதல் கல்விக் கட்டணம் வசூல் செய்வதாகவும் புகார் எழுந்துள்ளது.

தமிழகத்தில் தனியார் மெட்ரிக் பள்ளிகள் கூடுதல் கல்விக் கட்டணம் வசூலிப்பதாக புகார் இருந்தது. தற்போது அந்நிலை மாறி, தற்போது மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) மற்றும் இந்திய இடைநிலைக் கல்வி சான்றிதழ் வாரியத்தின் (ஐசிஎஸ்இ) கீழ் செயல்படும் தனியார் பள்ளிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. தவிர, இப்பள்ளிகளில் முன்கூட்டியே மாணவர் சேர்க்கை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது.

முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான போட்டி எழுத்து தேர்வு 10.01.2015 அன்று நடைபெறவுள்ளது I விண்ணப்பங்கள் 10.11.2014 அன்று காலை 10மணி முதல் விற்பனை செய்யப்படவுள்ளது I இதற்கான அறிவிக்கை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிடவுள்ளது

ஆசிரியர் தேர்வு வாரியம் ந.க.எண்.9287/அ3/2014 நாள்.05.11.2014ன் படி முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கான (2013-14 மர்றும் 2014-15) போட்டி எழுத்து தேர்வு 10.01.2015 அன்று நடைபெறவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் 09.11.2014க்குள் முதன்மை கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
விண்ணப்பங்கள் 10.11.2014 அன்று காலை 10மணி முதல் உரிய மையங்களில் விற்பனை செய்யப்படவுள்ளது. இதற்கான அறிவிக்கை ஆசிர்யர் தேர்வு வாரியம் விரைவில் வெளியிடவுள்ளது.

தொடக்கக் கல்வி - 2015-16ம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் புதிய பள்ளிகள் (தொடக்க / நடுநிலைப் பள்ளிகள்) துவங்க கருத்துருக்கள் அனுப்ப இயக்குனர் உத்தரவு

DEE - 2015-16 NEW PRIMARY & UPGRADE MIDDLE SCHOOLS - PROPOSAL CALLED REG PROC CLICK HERE...

தொடக்கக் கல்வி - தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி / ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 144 சிறுபான்மை மொழி இடைநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு பணி நியமன கலந்தாய்வு 08.11.2014 அன்று இணையதள வாயிலாக நடைபெறவுள்ளது.

DEE - TET - MINORITY SUBJECTS APPOINTMENT COUNSELING WILL BE HELD ON 08.11.2014 REG PROC CLICK HERE...

DEE - TET - MINORITY SUBJECTS SELECTION LIST CLICK HERE...

SCHOOL EDUCATION - PAY CONTINUATION ORDER FOR 1591 ADDL POST GRADUATE TEACHERS FOR 3 MONTHS FROM 29.10.2014

DSE.079715 / L / E3 / 2014 - PAY ORDER - SCHOOL EDUCATION - PAY CONTINUATION ORDER FOR 1591 ADDL POST GRADUATE TEACHERS FOR 3 MONTHS FROM 29.10.2014 REG ORDER CLICK HERE...

1988 - 1995 காலகட்டத்தில் ஓய்வு: 60 ஆயிரம் அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் திருத்தி அமைப்பு

1988-ஆம் ஆண்டு ஜூன் 6-ஆம் தேதிக்கும், 1995 -ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலத்தில் ஓய்வு பெற்ற சுமார் 60,000 தமிழக அரசு ஊழியர்களின் ஓய்வூதியம் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்த அரசாணையை தமிழக அரசு அண்மையில் வெளியிட்டுள்ளது.

இந்த அரசாணையின்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட ஓய்வூதியர்களின் ஓய்வூதிய கருத்துருக்கள் இந்திய தணிக்கை, கணக்குத் துறை மாநில முதன்மை கணக்காயர் (கணக்கு, பணிவரவு) அலுவலகத்தில் பெறப்பட்டுள்ளன

தொடக்க கல்வித்துறை : 8ம் தேதி சிறுபான்மை ஆசிரியர் நியமன கவுன்சலிங்

தொடக்க கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஊராட்சி ஒன்றிய, நகராட்சி, அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சிறுபான்மை மொழிப் பாட ஆசிரியர் கள் நியமிக்கப்பட உள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் சிறுபான்மை மொழிப்பாடங்களான தெலுங்கு, மலையாளம், கன்னடம், உருது ஆகிய பாடங்களில் தேர்ச்சி பெற்றவர்களை நியமிக்க தொடக்க கல்வித்துறை முடிவு செய்துள்ளது.

பள்ளி கல்வித்துறை தகவல், அரசு பள்ளிகளில் விரைவில் கண்காணிப்பு கேமரா

வேலூர் மாவட்டத்தில் கொணவட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கடந்த மாதம் 15ம் தேதி பயிற்சிக்காக வந்த ஆசிரியர் பயிற்சி பள்ளி மாணவர், மாணவிகளிடம்  சில்மிஷம் செய்ததால் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். போலீசார் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.  பெரும்பாலான மாவட்டத்தில் இதுபோன்று சம்பவங்கள் அதிகரித்து வருகின்றது. இந்த தவறுகளை தடுப்பதற்கும், மாணவ, மாணவிகளின் பாதுகாப்பை கருதியும் அரசு பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா விரைவில் பொருத்தப்பட உள்ளது. 

அடுத்த அம்மா!

BHARTHIAR UNIVERSITY List of Candidates Provisionally selected for M.Ed. Admission (2014-16)

List of Candidates Provisionally selected for M.Ed. Admission (2014-16)
More Details -> Click here

http://www.b-u.ac.in/notification/nov2014/med_selection.pdf

Provisional Waiting List for M.Ed. Admissions (2014-16)
More Details -> Click here

http://www.b-u.ac.in/notification/nov2014/med_waiting.pdf

குருநானக் ஜெயந்தி: இன்று அஞ்சல் நிலையங்கள் இயங்காது


குருநானக் ஜெயந்தி தினமான வியாழக்கிழமை (நவ. 6) அஞ்சல் நிலையங்கள் இயங்காது என சென்னை நகர மண்டல அஞ்சல் துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை நகர மண்டல அஞ்சல் துறை அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வாசிப்புத் திறனை மேம்படுத்தி வசமாக்குவோம் மதிப்பெண்களை...

படிக்க வேண்டும் என்று நினைத்த உடன், முதலில் விட வேண்டியது உங்கள் கூச்சத்தை. எழுத்தைக் கூட்டிப் படிக்க வெட்கப்படத் தேவை இல்லை. உங்கள் பாடப் புத்தகத்தைத் தவிர, வண்ண வண்ணப் படங்கள் கொண்ட புத்தகங்களைப் பாருங்கள். பார்க்கப் பார்க்கப் புத்தகங்கள் உங்களை ஈர்க்கும். சிறுவர் புத்தகங்களில் வரும் 'ஜோக்ஸ்' பகுதியைப் படியுங்கள். சிரித்து மகிழும்போது, புத்தகத்தின் மீது ஆர்வம் வரும். ஆசிரியர்களிடம் உதவி கேட்கத் தயங்கவே வேண்டாம். ஆங்கிலம் படிக்க, இரு எழுத்துச் சொற்கள், மூன்று எழுத்துச் சொற்கள் என்று படிப்பதுடன், பார்த்த உடன் படிக்கக்கூடிய sight words படியுங்கள்.

கர்நாடக மாநில அரசு பள்ளிகளில் புத்தகத்துக்கு குட்பை - கணினி மூலம் மாணவர்களுக்கு கல்வி புதிய திட்டம் துவக்கம்

கர்நாடக மாநில அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு புத்தகம் இல்லாமல் கணினி மூலம் பாடம் நடத்தும் புதிய திட்டத்தை கல்வி இயக்குனரகம் மேற்கொண்டுள்ளது. பொதுவாக அரசு பள்ளிகளில் தரமான கல்வி கிடைப்பதில்லை என்பதால், வசதிப்படைத்தவர்கள் தொடங்கி கூலி வேலை செய்வோர் வரை தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளியில் படிக்க வைக்கிறார்கள்.

நகரபுறங்களில் மட்டுமே இருந்த இக்கலாச்சாரம், தற்போது ஊரக பகுதியிலும் வேரூன்றி உள்ளது. அரசு பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கை குறைவாக இருப்பதால், நடப்பு கல்வியாண்டில் 3 ஆயிரத்து 173 கன்னட பள்ளிகளை மூடிவிட அரசு முடிவு செய்தது. இதற்கு பல தரப்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியதை தொடர்ந்து, பள்ளிகளை மூடும் முடிவு தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

''ஆசிரியர் டிரான்ஸ்பர் விவகார பிரச்னையில, நாலு பேரை, அதிரடியா வெவ்வேற இடங்களுக்கு துாக்கி அடிச்சிட்டாங்க பா...''--தினமலர் டீகடை பெஞ்ச்

''ஆசிரியர் டிரான்ஸ்பர் விவகார பிரச்னையில, நாலு பேரை, அதிரடியா வெவ்வேற இடங்களுக்கு துாக்கி அடிச்சிட்டாங்க பா...'' என்றபடி, பெஞ்ச் விவாதத்தைத் துவக்கினார் அன்வர்பாய்.
''விளக்கமா சொல்லுங்க...'' எனக் கேட்டார் அந்தோணிசாமி.

''பள்ளி கல்வித் துறையில, அமைச்சர் ஆசிர்வாதத்தோட சில பேர், ஆசிரியர் டிரான்ஸ்பர் விவகாரங்களை பார்த்துட்டு இருந்தாங்க பா... ஒரு கட்டத்துல, ஒரு கும்பலோட ஆதிக்கம் அதிகமானதுல, அதிகாரிகளுக்கே, கோபம், தலைக்கு ஏறிடுச்சு... ஆனாலும், மேலிடத்து விவகாரம்ங்கறதால, அமைதியா இருந்துட்டாங்க..

இணையவழி முறையால் உரிய காலத்தில் ஊதியம் பெற முடியாமல் அரசு ஊழியர்கள் அவதி

அரசுத் துறைகளைச் சேர்ந்த பல லட்சம் ஊழியர்கள், தங்களின் மாத ஊதியத்தை உரிய காலத்தில் பெற முடியாமல் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். இதற்கு கருவூலக் கணக்கு துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இணைவழி (ஆன்லைன்) முறையே காரணம் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்த முறை, சோதனை அடிப்படையிலோ அல்லது அதை அறிமுகப்படுத்துவதற்கான உரிய உத்தரவுகளோ இதுவரை பிறப்பிடப்படவில்லை எனவும் அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், இந்த மாதத்தில் பல அரசு ஊழியர்களின் வங்கிக் கணக்கில் இதுவரை (நவ.4) ஊதியம் வரவு வைக்கப்படவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் 1,800 முதுநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம்!

தமிழகத்தில் விரைவில் 1,800 முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, இன்று (4ஆம் தேதி) மதுரை வந்த தமிழக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் மற்றும் இயக்குநர் அறிவொளியிடம் நேரில் கேட்டபோது, ''அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களில் கடந்த ஆண்டு 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

350 டன் பாட புத்தகங்கள் பழைய பேப்பர் கடையில் விற்பனை: கல்வி அலுவலக ஊழியர் கைது

கோவை போலீஸ் கமிஷனர் விஸ்வநாதனிடம் கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி ஒரு புகார் மனு அளித்தார்.
அதில் கோவை மாவட்டத்துக்கு வழங்கப்பட்ட பாடப் புத்தகங்களை கோவை புலியகுளத்தில் உள்ள ஒரு பள்ளியிலும், ஒண்டிப்புதூரில் உள்ள ஒரு பள்ளியிலும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.
அந்த புத்தகங்களில் சுமார் 350 டன் புத்தகங்கள் மாயமானது விசாரணையில் தெரிய வந்தது. இது தொடர்பாக முன்னாள் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ராஜேந்திரன் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார்.
இதில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த புகார் மீது உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் மரியமுத்துவுக்கு போலீஸ் கமிஷனர் விஸ்வநாதன் உத்தரவிட்டார்.
இதன்பேரில் வழக்குப்பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மரியமுத்து விசாரணை நடத்தினார். விசாரணையில் புத்தகங்கள் மாயமான வழக்கில் முன்னாள் கல்வி அதிகாரி ராஜேந்திரன், இணை ஆய்வாளர் பிரின்ஸ் சாலமன், புலியகுளம் பள்ளி தலைமை ஆசிரியர் லூர்து சேது, இணை பள்ளி ஆய்வாளர் அருள் ஜோதி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலக உதவியாளர் சரவணக்குமார், சிறப்பு அதிகாரி கார்த்திகேயன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்தது.
அவர்கள் குறித்து போலீசார் விசாரணையை துரிதப்படுத்தினர். தகவலறிந்ததும் வழக்கில் தொடர்புடையவர்கள் தலைமறைவானார்கள். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

மின் கட்டண உயர்வு விரைவில் அறிவிப்பு: உத்தேச பட்டியல் வெளியீடு

மின் கட்டணத்தை மேலும் உயர்த்துவது பற்றி பொதுமக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் சென்னை, திருநெல்வேலி, ஈரோடு ஆகிய இடங்களில் நடத்தி முடிக்கப்பட்டு விட்டது. இதில் பங்கேற்ற பொதுமக்கள் மின் கட்டணத்தை உயர்த்துவதுற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கட்டணத்தை உயர்த்த ஏற்கனவே முடிவு செய்து விட்டு கடமைக்காக மக்களிடம் கருத்து கேட்கிறீர்கள். நாங்கள் சொல்வதை நீங்கள் செயல்படுத்த போவதில்லை என்று கூட்டத்தில் பொதுமக்கள் ஆவேசமாக கூறினார்கள்.
அங்கு பொதுமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதமும் ஏற்பட்டது.

ஒவ்வொரு பள்ளிகளிலும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் பணிக்கு ஒரு ஆசிரியரை பொறுப்பாளராக நியமிக்க வேண்டும் : கலெக்டர் உத்தரவு

டெங்கு காய்ச்சலால் ஒருவர்கூட பாதிக்காத வண்ணம் நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் ஞானசேகரன் உத்தரவிட்டுள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொசுக்களின் மூலம் பரவக்கூடிய டெங்கு மற்றும் இதர விஷக்காய்ச்சல் நோய் தடுப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் ஞானசேகரன் தலைமையில் நடைபெற்றது.

10-ம் வகுப்பு இடைநிலைத் தேர்வு: விண்ணப்பங்கள் இணையம் மூலம் பதிவேற்றம்

திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள 10-ஆம் வகுப்பு இடைநிலைத் தேர்வுக்கான விண்ணப்பங்களைத் தேர்வர்கள் வரும் 7-ஆம் தேதி வரை (ஞாயிற்றுக்கிழமை தவிர) திருவள்ளூர் மாவட்டத்தில் கீழ்காணும் பள்ளிகளில் உள்ள அரசுத் தேர்வுகள் சேவை மையங்களில் இணையம் முலம் பதிவேற்றம் செய்து கொள்ளலாம்.
இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சந்திரசேகர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பணி: 2 ஆண்டுகளாக நேரடி நியமனம் இல்லை: பி.எட். பட்டதாரிகள் ஏமாற்றம்

கடந்த 2 ஆண்டுகளாக நேரடி உதவி தொடக்கக் கல்வி அதிகாரி பணி நியமனம் நடைபெறாததால் பி.எட். பட்டதாரிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
தொடக்கக் கல்வித்துறையின் கீழ் பணியாற்றும் உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள் (ஏ.இ.இ.ஓ.) ஒன்றிய வாரியாக தொடக்கப் பள்ளிகள் மற்றும் நடுநிலைப் பள்ளிகளை நிர்வகிக்கின்றனர்.

முதல்முறையாக புகைப்படத்துடன் கூடிய விடைத்தாள் அறிமுகம்

தமிழகத்தில் முதல்முறையாக சேலம் பெரியார் பல்கலைக் கழகத்தில் புகைப்படத்துடன் கூடிய விடைத்தாளை துணை வேந்தர் அறிமுகம் செய்துள்ளார்.
சேலம் பெரியார் பல்கலைக் கழகத்துக்கு உட்பட்ட சேலம், தருமபுரி, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் கலைக் கல்லூரிகள் இயங்குகின்றன. 13 அரசு கல்லூரி கள், நான்கு அரசு உதவிபெறும் கல்லூரிகள், 5 உறுப்புக் கல்லூரி கள், 65 தனியார் கல்லூரிகள் மற்றும் தருமபுரியில் முதுநிலை விரிவாக்க மையம் என ஒரு லட்சத்து 50 ஆயிரம் மாணவ - மாணவிகள் பெரியார் பல்கலைக் கழகத்தில் படிக்கின்றனர்.

கணினி பயிற்றுநர் பணி: ஆசிரியர் தேர்வு வாரியம் வேண்டுகோள்

ஆசிரியர் தேர்வு வாரியத்தின் உறுப்பினர்-செயலர் தண்.வசுந்தரா தேவி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
ஆசிரியர் தேர்வு வாரியம் மேற்கொள்ளும் 652 கணினி பயிற்றுநர் காலிப் பணியிடங்களுக்கான தெரிவுப் பணிகள் வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு (சீனியாரிட்டி) அடிப்படையில் நடைபெற உள்ளது.

அரசு பள்ளி மாணவியருக்கு கழிப்பிட வசதி.. ஆய்வுக்குழுவுக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவு

திருப்பூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளின் வளாகத்திலேயே, மாணவியர் கழிப்பிடங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை என, மொத்தம் 1,460 அரசு பள்ளிகள் உள்ளன. இவற்றில், பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பிட வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளன.
சில பள்ளிகளில் கழிப்பிட வசதி இல்லை. போதுமான கழிப்பிட வசதி இல்லாமல், மாணவிகள் பல்வேறு இன்னல்களை சந்திக்கின்றனர். சுப்ரீம் கோர்ட் உத்தரவையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகளில், கழிப்பிட வசதியை மேம்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, ஒன்றியம் வாரியாக குழு அமைத்து, பள்ளிகளில் கள ஆய்வு நடத்தி, அறிக்கை தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. வட்டார வளர்ச்சி அலுவலர் தலைமையில், ஒவ்வொரு ஒன்றியத்திலும் குழு அமைக்கப்பட்டு, ஆய்வு துவங்கியுள்ளது.

குறுகிய நாட்களில் பாடத்திட்டங்களை முடிக்க வேண்டிய கட்டாயத்தில் ஆசிரியர்கள்

இரண்டாம் பருவத்தேர்வு மற்றும் அரையாண்டு தேர்வுக்கு மாணவர்களை தயார்செய்ய குறுகிய காலமே உள்ள நிலையில், பாடத்திட்டத்தை துரிதமாக முடிக்க வேண்டிய கட்டாயம் ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ளது.
பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்புகளுக்கு, அரையாண்டு தேர்வில் அனைத்து பாடங்களில் இருந்தும் கேள்விகள் கேட்கப்படும் என்பதால், பாடங்கள் முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டிருக்க வேண்டும். காலாண்டு தேர்வுகள் நிறைவடைந்து, அரையாண்டு தேர்வுகள் வரும் டிச., மாதம் துவங்குகிறது.

அரசு பள்ளி பணிக்கு கலப்புத் திருமணம் தம்பதியருக்கு முன்னுரிமை வழங்க கோரி வழக்கு: ஐகோர்ட்டு நோட்டீசு

சென்னை ஐகோர்ட்டில், சேலத்தை சேர்ந்த கே.அழகேசன் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: இந்திய கலப்புத் திருமணம் தம்பதியரின் சங்கத்தின், தலைவராக உள்ளேன். வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டிய பிரிவினர் குறித்த பட்டியலில், போரில் ஊனமடைந்த ராணுவ வீரர்கள், மரண மடைந்த வீரர்களின் வாரிசுகள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட பிரிவினர்களின் பெயர்கள் உள்ளது.

பள்ளிக்கல்வித்துறை பணியாளர் விபரம்; ஆன்-லைனில் பதிய உத்தரவு!!!

தனி நபர் தகவல் தொகுப்பில், பதிவு செய்ய வழங்கப்பட்டுள்ள குறியீட்டு எண்ணை பயன்படுத்தி, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் மற்றும் நடப்பு கல்வியாண்டில் பணியில் சேர உள்ளவர்களின் விபரங்கள் உட்பட அனைத்து விபரங்களையும் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு பதிவு செய்யப்பட்டுள்ளதை, கல்வித்துறை அதிகாரிகள் சரிபார்க்க வேண்டும்.

தமிழகத்தில் 1,800 முதுநிலை ஆசிரியர்கள் விரைவில் நியமனம்!

தமிழகத்தில் விரைவில் 1,800 முதுநிலை ஆசிரியர்கள் நியமனம் செய்யப்படவுள்ளதாகவும், இதற்கான அறிவிப்பு அடுத்த வாரம் வெளியாகும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குநர் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, இன்று (4ஆம் தேதி) மதுரை வந்த தமிழக ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் மற்றும் இயக்குநர் அறிவொளியிடம் நேரில் கேட்டபோது, ''அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களில் கடந்த ஆண்டு 2 ஆயிரம் பேர் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர்

10th & 12th Exam: பாடத் திட்டத்திற்கு வெளியே இருந்து, கேள்வி கேட்க வேண்டும் - தமிழக அரசுக்கு பரிந்துரை


மாணவர்களின் படிப்பறிவு விரிவடைய பிறக்கிறது வழி : பாடப்பொருள் சார்ந்த கேள்விகள் தயாரிக்க அரசுக்கு பரிந்துரை

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில், பாடப் புத்தகங்களில் உள்ள கேள்விகளை, அப்படியே கேட்கக் கூடாது. பாடப் பொருள் சார்ந்து, அதே நேரத்தில், பாடத் திட்டத்திற்கு வெளியே இருந்து, கேள்வி கேட்க வேண்டும்' என, தேர்வு சீர்திருத்தக் குழு, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

TRB: கல்லூரி உதவி பேராசிரியர்கள் நியமன பட்டியல் வெளியீடு

PROVISIONAL SELECTION LIST OF CANDIDATES AFTER ORAL INTERVIEW

                           ENGLISH
                          BOTANY
                        ZOOLOGY
                       AQUACULTURE

தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாகக்கிடக்கும் உதவி கல்லூரி பேராசிரியர்கள் பணியிடங்களுக்கு ஆசிரியர்களை தேர்ந்து எடுக்க அரசு முடிவு செய்தது. இதையொட்டி ஆசிரியர்களை தேர்வு செய்யும் பணியை ஆசிரியர்தேர்வு வாரியத்திடம் உயர்கல்வித்துறை ஒப்படைத்தது.

அரசு பொதுத்தேர்வுகளில் புதிய முறையில் கேள்வித்தாள்: தமிழக அரசுக்குப் பரிந்துரை

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், பாடப் புத்தகங்களில் உள்ள கேள்விகளை, அப்படியே கேட்கக்கூடாது. பாடப் பொருள் சார்ந்து, அதேநேரத்தில் பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து கேள்வி கேட்க வேண்டும் என, தேர்வு சீர்திருத்தக் குழு, தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

சீர்திருத்தம் குறித்து ஆய்வு: பொதுத்தேர்வு விதிமுறைகள் மற்றும் கேள்வித்தாளில் மேற்கொள்ள வேண்டிய சீர்திருத்தம் குறித்து ஆய்வுசெய்து, தமிழக அரசுக்கு பரிந்துரை அறிக்கை சமர்ப்பிக்க, சி.பி.எஸ்.இ., (மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்) முன்னாள் தலைவர், பாலசுப்ரமணியன் தலைமையில், குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில், கல்வித்துறை இயக்குனர்கள் உட்பட பலர் இடம்பெற்று உள்ளனர்.

பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு: கர்நாடகா அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்

போலீஸ் துறை பரிந்துரைத்த, பாதுகாப்பு விதிமுறைகளை, அரசு பள்ளிகளில், இன்னும் நடைமுறைபடுத்தாதது குறித்து, அரசுக்கு, கர்நாடகா உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

வன்கொடுமை:பெங்களூரு, மாரத்தஹள்ளி விப்கியார் பள்ளியில், 6 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவத்துக்கு பின், படிக்கும் குழந்தைகளின் பாதுகாப்புக்காக, சில விதிமுறைகளை பள்ளிகள் அமல்படுத்த வேண்டும் என, போலீஸ் துறை உத்தரவிட்டது.அனைத்து பள்ளிகளுக்கும் விதிக்கப்பட்ட, இந்த விதிமுறைகளை, அரசு பள்ளிகளில் கடைபிடிக்காதது குறித்து, தனியார் பள்ளிகள், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்தன.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்கல்வி ஊக்கத்தொகைக்கு விரைவில் புதிய முறை: பள்ளிக்கல்வித்துறை முடிவு

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கான ஊக்கத்தொகை வழங்க விரைவில் புதிய முறையைக் கொண்டுவர பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச கல்வித்தகுதியைக் காட்டிலும் கூடுதல் கல்வித்தகுதி பெற்றால் அவர்களுக்கு ஊக்க ஊதியம் (இன்சென்டிவ்) வழங்கப்படுகிறது.

அங்கீகாரமற்ற படிப்புகளை நம்பி ஏமாற வேண்டாம்: யு.ஜி.சி. அறிவுறுத்தல்

அரசு, தனியார், நிகர்நிலை பல்கலைகளின் கல்வி மையங்கள் என்ற பெயரில், செயல்படும் நிறுவனங்கள், அங்கீகாரமில்லாத படிப்புகளை நடத்துவதால், அவற்றை நம்ப வேண்டாம் என, பல்கலைக்கழக மானியக் குழுவான யு.ஜி.சி., மீண்டும் அறிவுறுத்தி உள்ளது.
அரசு, தனியார், நிகர்நிலை பல்கலைகள், கல்லூரிகள் என, எந்த கல்வி நிறுவனமாக இருந்தாலும், அதற்கான அங்கீகாரம், பாடங்களுக்கான அனுமதி என அனைத்தும் யு.ஜி.சி.,யின் கட்டுப்பாட்டிற்குள் வருகின்றன.

ஆசிரியர்களுக்கு பயிற்சி இல்லை; வீணாகும் 'லேப்டாப்'; மாணவர்களின் தொழில்நுட்ப அறிவு கேள்விக்குறி

தொடக்க கல்வித்துறையின்கீழ், மாநிலம் முழுவதும் கற்பித்தல் பணிக்காக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட லேப்டாப், கம்ப்யூட்டர் சார்ந்த நவீன பயிற்சிகள் ஆசிரியர்களுக்கு இல்லாத காரணத்தால், பயனற்று பள்ளிகளில் வீணாகி வருகிறது.
தொடக்கல்வித்துறைக்கு உட்பட்ட, 8026 நடுநிலைப்பள்ளிகளுக்கு நான்கு கட்டங்களாக, லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டன. 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' சார்பிலும், பள்ளிகளுக்கு கம்ப்யூட்டர்கள் வழங்கப்பட்டன.இன்றைய உலகில் அனைத்து செயல்பாடுகளும் தொழில்நுட்பத்தை சார்ந்தே உள்ளது என்பதை உணர்ந்த பள்ளிக்கல்வித்துறை, 'கனெக்டிவ் கிளாஸ் ரூம்',

ஓராண்டாக நிரப்பாமல் இருக்கும் 6 லட்சம் காலிப் பணியிடங்களை ரத்து செய்ய மத்திய அரசு முடிவு

நாடு முழுவதும் காலியாக உள்ள 6 லட்சம் பணியிடங்களை நிரப்புவதற்கு பதிலாக, அதனை முழுவதுமாக ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டிருக்கிறது. இதனை வன்மையாக கண்டிக்கிறோம் என மத்திய அரசு ஊழியர்கள் சங்கம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

நரேந்திர மோடி தலைமையிலான பாஜ அரசு மத்தியில் பொறுப்பேற்றவுடன், அதிரடியாக பல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு சிக்கன நடவடிக்கை என்ற புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியது. அதன்படி மத்திய அரசு அதிகாரிகள் வெளிநாடுகளுக்கு செல்லும் போது விமானங்களில் எக்சிக்யூட்டிவ் வகுப்பில் பயணம் செய்யக் கூடாது. அதிக பொருட்செலவில் விருந்து வைப்பதை தவிர்க்க வேண்டும் உள்ளிட்ட நடைமுறைகளை வகுத்துள்ளது. தவிர, மத்திய

அரசுப் பள்ளிகளில் உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த அரசு திட்டம்

மாநிலம் முழுவதும் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, புதிய வகுப்பறைகள், ஆய்வகம், கழிப்பறைகள் மற்றும் தடுப்புசுவர் உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, நபார்டு வங்கியின் கடனுதவியை பெற ஓராண்டாக முயற்சித்தது.

தற்போது, இத்திட்டத்திற்கு 247 கோடி ரூபாய் கடனுதவி வழங்க, நபார்டு வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. இந்த நிதியை பயன்படுத்தி, நீலகிரி மற்றும் சென்னையை தவிர்த்து, பிற மாவட்டங்களில் உள்ள 210 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மேம்பாட்டு பணி நடக்க உள்ளது.

தமிழகத்தில் இன்று பரவலாக மழை :7 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழ்நாட்டுக்கு இது வடகிழக்கு பருவமழை காலம். கன்னியாகுமரி அருகே உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தற்போது மழை பெய்துவருகிறது.இந்நிலையில்
 நாகை,
திருவாரூர்,
தஞ்சாவூர்,
விழுப்புரம்,
கடலூர், 
திருவண்ணாமலை
மற்றும் காரைக்கால்
மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

எப்போது எல்லாம் பான் கார்டு தேவை?

வருமான வரி செலுத்தும் ஒவ்வொரு இந்தியரும் நிரந்தரக் கணக்கு எண் (PAN-Permanent Account Number) பெற்றிருப்பது அவசியம். இந்த பான் கார்டு எண் சில செயல்பாடுகளின்போது அவசியம் தேவைப்படுகின்றது.இந்த இடங்களில் பான் கார்டு எண் இருந்தால் மட்டுமே நம் வேலைகள் அங்கே பூர்த்தியாகும். எந்தெந்த செயல்பாடுகளுக்கு அவசியம் பான் கார்டு தேவை என்பதை இங்கே பார்க்கலாம்.
அவசியம் தேவை
* ஐந்து லட்சம் ரூபாய்க்குமேல் மதிப்புள்ள அசையாச் சொத்துக்களை வாங்கும்போதோ, விற்கும்போதோ பான் எண் தேவைப்படும்.

* ரூ.50,000 மதிப்பில் வங்கியில் சேமிப்புக் கணக்கு அல்லது வைப்பு நிதி ஆரம்பிக்கும்போது தேவைப்படும்.

* தங்கும் விடுதிகள் மற்றும் உணவகங்களில் கட்டணமாக 25,000 ரூபாய்க்குமேல் செலுத்தும்போது தேவைப்படும்.

தரத்தை பரிசோதிக்கும் புதிய நடைமுறை: விலையில்லா பொருட்கள் கிடைக்காமல் மாணவர்கள் தவிப்பு

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருட்களின் தரத்தை சோதிக்க புதிய நடைமுறை பின்பற்றப்படுவதால், பள்ளி திறந்து, ஐந்து மாதங்களாகியும் பாடநூல் மற்றும் சீருடை தவிர, மற்ற பொருட்கள் வழங்க முடியவில்லை. இதனால், மாணவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, இலவச பாடநூல், சத்துணவு, காலனி, சீருடை, பஸ் பாஸ், லேப்--டாப், சைக்கிள், புத்தகப்பை, கணித உபகரணம், வண்ண பென்சில், கம்பளி சட்டை, புவியியல் வரைபடம் உள்ளிட்ட 14 வகையான பொருட்களை வழங்கியது.

தனியார் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் ..... தினமும் 16மணிநேரங்கள் பணியாற்றும் அவலநிலை

தமிழகத்தில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளிகளில் விடுதியில் தங்கி வேலைப்பார்க்கும் இளங்கலை ,முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் காலை 4 மணிமுதலே தங்களுக்கான வகுப்புகளை கவனிக்க பாடம் நடத்த தேர்வை கண்காணிக்க சிறப்பு வகுப்பு என இரவு 10மணிவரை மற்றும் அதற்கு மேலும் தொடர்ந்து பணியாற்றிவருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன..

பள்ளி நிர்வாகங்களுக்கு கர்நாடக முதல்வர் எச்சரிக்கை


குழந்தைகள் மீதான பாலியல்: தனியார் பெங்களூரு; குழந்தைகள் மீதான பாலியல் பலாத்கார சம்பவங்கள் அதிகரித்து வருவதை தொடர்ந்து தனியார் பள்ளிகளுக்கு முதலமைச்சர் சித்தராமையா கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். மேலும் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அவர் எச்சரித்து உள்ளார்.குழந்தைகள் பள்ளிக்குள் சென்று விட்டால் பள்ளி நிர்வாகம் தான் அனைத்து பாதுகாப்பு வசதிகள் மேற்கொள்ள வேண்டும் என்றார்.6 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை தந்த ஆசிரியரை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்துவிட்டனர்.

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு, இன்று நடக்கிறது: 1.47 லட்சம் பேர் பங்கேற்பு

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கான தேசிய திறனாய்வு தேர்வு, இன்று, மாநிலம் முழுவதும், 350 மையங்களில் நடக்கிறது. 1.47 லட்சம் மாணவ, மாணவியர், தேர்வை எழுதுகின்றனர்.
மத்திய அரசு, நாடு முழுவதும், 10ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கு, போட்டித் தேர்வை நடத்தி, தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு,

கல்வித்துறைக்கு எதிராக 2000 வழக்குகள் நிலுவையில் உள்ளன.


பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வி துறைக்கு எதிராக, வழக்குகள் அதிகரித்து வருகின்றன. ஓய்வு பெற்ற ஆசிரியர் மற்றும் பணியில் உள்ள ஆசிரியர்களால், 2,000த்திற்கும் மேற்பட்ட வழக்குகள், நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.

அரசு ஊழியர், 12 லட்சம் பேரில், 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர், கல்வித்துறையில் பணி புரிகின்றனர். பெரிய துறையாக, பள்ளி கல்வித்துறை இருப்பதாலோ என்னவோ, வழக்குகளுக்கும் பஞ்சம் கிடையாது.

பள்ளி திறந்து 5 மாதமாகியும் இலவச பொருள் சப்ளை இல்லை: மாணவர்கள் கடும் அதிருப்தி

பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் விலையில்லா பொருட்களின் தரத்தை சோதிக்க புதிய நடைமுறை பின்பற்றப்படுவதால், பள்ளி திறந்து, ஐந்து மாதங்களாகியும் பாடநூல் மற்றும் சீருடை தவிர மற்ற பொருட்கள் வழங்க முடியவில்லை. இதனால், மாணவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவ, மாணவியருக்கு, இலவச பாடநூல், சத்துணவு, காலனி, சீருடை, பஸ் பாஸ், லேப்--டாப், சைக்கிள், புத்தகப்பை, கணித உபகரணம், வண்ண பென்சில், கம்பளி சட்டை, புவியியல் வரைபடம் உள்ளிட்ட, 14 வகையான பொருட்களை வழங்கியது

Computer Instructor District Wise Seniority List

State Level Computer Instructor Tentative Seniority List
State Level Computer Instructor Tentative Seniority List - Click Here
District wise Seniority List (Real Copy):
Dindigul District Seniority List - Click Here
Thiruvannamalai District Seniority List - Click Here
Coimbatore District Seniority List - Click Here
Dharmapuri District Seniority List - Click Here
Salem District Seniority List - Click Here
District wise Seniority List (Typed Copy):
Chennai District Seniority List - Click Here
Dindigul District Seniority List - Click Here

web stats

web stats