rp

Blogging Tips 2017

31/5/2018 நிலவரப்படி தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் ஆசிரியர் காலிப்பணியிட விவரம் , RTE படி உபரி கூடுதல் தேவை EMIS உடன் ஒப்பிட்டு உடன் தெரிவிக்க இயக்குனர் உத்திரவு

அரசு பள்ளி மாணவர்கள் 60,000 பேருக்கு ஆங்கிலம் பேச பயிற்சி: செங்கோட்டையன்

9-ம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்கள் எளிதில் ஆங்கிலம் பேச விரைவில் பயிற்சியளிக்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் இன்று பல்வேறு நலத்திட்ட பணிகளை அமைச்சர் செங்கோட்டையன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், 9-ம் வகுப்பு மாணவர்கள் 60,000 பேருக்கு ஆங்கிலம் பேச பயிற்சி வழங்கப்படும் என்றார். லண்டன், ஜெர்மனி போன்ற வெளிநாடுகளிலிருந்து சிறந்த கல்வியாளர்கள் வரவழைக்கப்பட்டு மாணவர்களுக்கு ஆங்கிலம் பேச பயிற்சி அளிப்பார்கள் என்று தெரிவித்தார். தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளி மாணவர்களும் ஆங்கிலம் பேச 6 மாத காலத்திற்கு இந்த பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

26-05-2018 மற்றும் 27-05-2018 ஆகிய விடுமுறை நாட்களில் அனைத்து கல்வி அலுவலகங்களும் பணியாற்ற வேணடும் - பள்ளிக் கல்வி இணை இயக்குநர் சுற்றறிக்கை.


DEE PROCEEDINGS-கல்வி மானியக்கோரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளதால் 26-05-2018 மற்றும் 27-05-2018 ஆகிய விடுமுறை நாட்களில் அனைத்து கல்வி அலுவலகங்களும் பணியாற்ற வேண்டும் - தொடக்கக்கல்வி இயக்குநர் சுற்றறிக்கை.

வட்டாரக் கல்வி அலுவலர்களாக மாறிய உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள்...!

தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறையின் புதிய உத்தரவின்படி, வட்டாரங்களில் பணிபுரியும் உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்களாக மாற்றப்பட்டுள்ளனர்.

இனி இந்த அலுவலர்கள் தங்கள் வட்டாரங்களில் உள்ள அனைத்து வகை தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை கண்காணிக்கும் பணிகளையும் மேற்கொள்வர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு அண்மையில் வெளியிட்ட உத்தரவின்படி, வட்டாரங்களில் பணிபுரிந்து வந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலர்கள் இனி வட்டார கல்வி அலுவலர்களாக மாற்றப்படுகின்றனர்.

உத்தரவு வெளிவந்த நாளில் இருந்தே இந்த அலுவலர்கள் வட்டாரக் கல்வி அலுவலர்களாக பெயர் மாற்றம் பெறுகின்றனர்.

இவர்கள் அனைத்து வகை, அரசு, அரசு உதவி பெறும், மெட்ரிக். மற்றும் சுயநிதி தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் அனைத்தையும் கண்காணிக்க உள்ளனர்.

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் பணிகளைக் கண்காணித்து அறிவுரை வழங்கும் பணிகளிலும், வட்டாரக் கல்வி அலுவலர்கள் ஈடுபடுவர்.

அரசு நலத்திட்டங்கள் அனைத்தும் முழுமையாக கிடைக்கப் பெறுகிறதா என்பதையும் இந்த அலுவலர்கள் கண்காணிப்பர்.

இதுநாள் வரை மெட்ரிக். பள்ளிகளில் சேர்க்கைகளின்போது, கூடுதல் கட்டணம் பெறுவது, ஒரு பள்ளியில் படித்துவிட்டு வருபவருக்கு, வேறு பள்ளியில் இடம் தர மறுப்பது ஆகிய பிரச்னைகள் குறித்து பெற்றோர், தங்கள் தரப்பு புகார்களை மெட்ரிக். பள்ளிகளின் ஆய்வாளருக்கு மட்டுமே அனுப்பும் நிலை இருந்தது.

தற்போது அனைத்துப் பள்ளிகளிலும் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை பிரச்னை, கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பிரச்னை உள்ளிட்ட அனைத்துப் பிரச்னைகளுக்கும் பெற்றோர், தங்களது வட்டாரங்களில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலரை அணுகி புகார்களைத் தெரிவிக்கலாம்.

மேலும் மெட்ரிக். பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறையால் ஒப்புதல் அளித்து, இணையதளம் மூலம் 25 சதவீத மாணவர் சேர்க்கை அளிக்கப்படும் விவகாரத்தையும் இந்த அலுவலர்கள் கண்காணிக்க உள்ளனர்.

இது 2018-19 கல்வியாண்டிலேயே அமலுக்கு வருவதால் பெற்றோர்கள் தங்கள் தரப்பு புகார்களை, இனி அந்தந்த வட்டாரங்களில் உள்ள வட்டாரக் கல்வி அலுவலர்களிடமே அளிக்கலாம். இது குறித்த நடவடிக்கைகளை வட்டார கல்வி அலுவலர்கள் மேற்கொள்வர்

RTE 25% சதவீத ஒதுக்கீடு அதனால் அரசுப்பள்ளி யில்ஆசிரியர் பணி இழப்பு விவர்ம்

ஆர்.டி.இ
இழந்த பணியிடங்களும்

2013- 14 ஆம் 49,864 மாணவர்களும்
,
1663 ஆசிரியர் பணியிடங்களும்

2014-15 ஆம் 86,729 மாணவர்களும்,

2890ஆசிரியர் பணியிடங்களும்

2015-16 ஆம் 94,811 மாணவர்களும்,

3160ஆசிரியர் பணியிடங்களும்

2016-17 ஆம் 98,474 மாணவர்களும்,

3282ஆசிரியர் பணியிடங்களும்

2017-18 ஆம் 90,607 மாணவர்களும்

3020ஆசிரியர் பணியிடங்களும்

890 அரசுப் பள்ளிகளில் 10க்கும் குறைவான மாணவர்கள்: பொதுமக்களிடம் கருத்துக் கேட்க முடிவு

அரசு பள்ளிகளைப் பொருத்தவரையில் 29 பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லாத தொடக்க பள்ளிகள் உள்ளன. மேலும், பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்ட கணக்கெடுப்பில் தமிழ்நாடு முழுவதும் 890 பள்ளிகளில் 10 மாணவர்களுக்கு குறைவாகவே உள்ளனர்.
இதனைக் கருத்தில் கொண்டு அரசு பள்ளிகளை மூடுகின்ற நிலை அரசுக்கு இல்லை. அந்தப் பள்ளிகள் அமைந்துள்ள பகுதியில் உள்ள பெற்றோர், பொது மக்களின் கருத்தை கேட்ட பின்னர் எந்த மாதிரியான நடவடிக்கை மேற்கொள்ளலாம் என அரசு பரிசீலிக்கும்.

பள்ளிக்கல்வி துறை மானியக்கோரிக்கை 30/05/2018 அன்று நடைபெறும்



தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷ் 'சமஹ்ரா சிக் ஷா அபியான்' திட்ட மாநில இயக்குநராக நியமனம்* TRANSFER ORDER இணைப்பு*


அரசுப் பள்ளிகளை மூடுவது தனியாருக்குச் சாதகம்!' - கொதிக்கும் கல்வியாளர்கள் .ஜூனியர் விகடன் கவர் ஸ்டோரி

தமிழகத்தில் உள்ள 836 அரசுப் பள்ளிகள் மூடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. `தனியார் பள்ளிகளின் நலனுக்காகவே இப்படியொரு நடவடிக்கையை அரசு மேற்கொள்ள உள்ளது' எனக் கொதிக்கின்றனர் கல்வியாளர்கள்

தமிழகத்தில் மொத்தம் 44, 214 பள்ளிகள் உள்ளன. மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்க, தமிழக அரசு சார்பில் மத்திய உணவுத் திட்டம், சீருடைகள், புத்தகங்கள் காலணிகள் உள்ளிட்ட பல இலவச நலத்திட்டங்கள் நடைமுறையில் செயல்பட்டு வருகின்றன. இருந்தபோதிலும், அரசு தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விகிதம் உயர்ந்ததாகத் தெரியவில்லை. இதனால், 10-க்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் அரசு தொடக்கப்பள்ளிகளை மூடிவிடலாம் எனப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தலைமையில் நேற்று கல்வி அலுவலர்கள் கூடி ஆலோசித்தனர் என்ற தகவல் வெளியாகியது. 

இது குறித்து பொதுப்பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபுவிடம் பேசினோம், ``தொடக்கப்பள்ளிகளில் மாணவர்களின் வருகை குறைந்துள்ளதுக்கான காரணம் என்ன? முறையான கட்டமைப்பு வசதி பள்ளிகளில் இருக்கிறதா? சத்துணவுத் திட்டம் சரியாகச் செயல்படுகிறதா ? மாணவர்களுக்குப் போதிய பாதுகாப்பு உள்ளதா? பெற்றோர்கள் மத்தியில் அரசுப் பள்ளிகளின் நிலை என்ன? கழிப்பறை வசதி பள்ளிகளில் உள்ளனவா? இவை, எதையும் பள்ளிக் கல்வித்துறை கவலைப்படவில்லை. அதற்கான ஆய்வு நடவடிக்கைகளைத் தொடரவில்லை. ஆனால், 10-க்கும் குறைவான மாணவர்கள் பயிலும் அரசு தொடக்கப்பள்ளிகளை மூடுவது குறித்து பள்ளிக் கல்வித்துறை பரிசீலனை செய்து வருகிறது. இவ்வாறான நடவடிக்கைகளை அரசு மேற்கொள்கையில் ஒன்றுக்குப் பலமுறை யோசித்து முடிவெடுக்க வேண்டும்'' என்றார். 
இதனையடுத்து, தமிழ்நாடு பெற்றோர் மாணவர் நலச் சங்க மாநிலத் தலைவர் அருமைநாதனிடம் பேசினோம். `தமிழக அரசின் இந்த நடவடிக்கை தனியார் பள்ளிகளுக்குச் சாதகமாக எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையானது 45 சதவிகிதம் குறைந்துள்ளது. மேலும் பல பகுதிகளில் ஒரு அரசுப் பள்ளியைச் சுற்றி ஐந்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. அரசுப் பள்ளிகளின் கல்வித்தரங்களை உயர்த்தும் நடவடிக்கையில் அரசு ஈடுபடவில்லை. ஆர்வமும் காட்டவில்லை. இதனால், பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளை அருகிலிருக்கும் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். அதுமட்டுமல்லாமல், தனியார் பள்ளிகள் வசூலிக்கும் அதிகக் கல்விக் கட்டணத்தால் அவர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். தமிழக அரசு மறைமுகமாகக் கல்வியைத் தனியாரிடம் ஒப்படைத்து வருகிறது. தனியார்ப் பள்ளிகளை ஊக்குவித்தும் வருகிறது'' என்றார். 

``அரசின் இந்த நடவடிக்கை ஆசிரியர்களையும் பாதிக்கும்'' என்கிறார் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத் துணைப்பொதுச் செயலாளர் க.சாந்தகுமார். இது குறித்து அவர் பேசுகையில், ``தனியார்ப் பள்ளிகளில், 25 சதவிகித இட ஒதுக்கீட்டின் கீழ் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் சேர்க்கப்படுகின்றனர். இந்த ஒதுக்கீட்டின் கீழ் பெரும்பாலும் அரசுப் பள்ளி மாணவர்கள்தாம் விண்ணப்பிக்கின்றனர். சுமார் ஒரு லட்சத்து முப்பத்து இரண்டாயிரம் அரசுப் பள்ளி மாணவர்கள் தற்போது தனியார் பள்ளிகளுக்குப் படிக்கச் சென்றுவிட்டனர். இதனால், 4,400-க்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் தமிழகத்தில் காலியாக இருக்கின்றது. எனவே, தமிழக அரசு கல்வியைத் தனியார் மயமாக்கி வருகிறது'' என்றார். 

இது தொடர்பாக பள்ளிக்கல்வி துறை அதிகாரிகளிடம் பேசினோம், ``தமிழக அரசின் இயக்குநரகம் கட்டுப்பாட்டில் அரசுப் பள்ளிகள் - 629 மாநகராட்சிப் பள்ளிகள் - 436, நகராட்சிப் பள்ளிகள் - 839 மற்றும் நர்ஸரி மற்றும் பிரைமரிப் பள்ளிகள் - 6308, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் அரசு நலத்துறைப் பள்ளிகள் எனத் தமிழகத்தில் மொத்தம் 44, 214 பள்ளிகள் உள்ளன. இதில், பத்துக்கும் குறைவான மாணவர்கள் படிக்கும் தொடக்கப்பள்ளிகளில் இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இங்கு வேலை பார்க்கும் ஆசிரியர்களுக்குச் சம்பளமாக லட்சக்கணக்கில் பணம் செலவழிக்கப்படுகிறது. இதனால்தான் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளை அருகில் உள்ள பள்ளிகளோடு இணைப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினோம். தற்போதைய சூழலில் ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு ஒரு அரசுப் பள்ளி செயல்படுகிறது. இதனால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. மேலும், கடந்த கல்வி ஆண்டிலும் அரசுப் பள்ளிகள் தரம் உயர்த்தப்படுகின்றன. இதனால் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு கல்வி ஆண்டும் அதிகரித்துத்தான் வருகின்றன. இதனை இன்னும் அதிகரிக்கவே கணக்கெடுப்பு நடத்தப்பட்டது'' என்றார். பள்ளிகள் மூடப்படுவதாக வெளியான தகவலை பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் மறுத்துள்ளார். தனியார் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த அவர், `அரசு தொடக்கப் பள்ளிகளை மூடும் எண்ணமில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

அரசுப்பள்ளிகளில் மாணவர் குறைய யார் காரணம்???* *ஆட்சியாளர்களா?* *ஆசிரியர்களா

கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் பள்ளியில் சேர 1.32 லட்சம் விண்ணப்பங்கள் வந்துள்ளதாக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் சென்னை கோட்டூர்புரத்தில் பேட்டி அளித்தார்.*

*அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்தால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்*



*தனியார் பள்ளிகளில் 25%இடங்களை ஏழை மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என அரசு உத்தரவு போட்டது.*

*இதன் காரணமாக 1,32,000 ஏழை மாணவர்கள் இலவசமாக தனியார் பள்ளியில் கல்வி பெறப்போகிறார்கள்...*

*இவ்வளவு மாணவர்களை தனியார் பள்ளிகளுக்கு அனுப்பியதன் மூலம் கஷ்டப்பட்டு படித்து டெட் தேர்ச்சி பெற்று பணிக்கு வந்த ஆசிரியர்களுக்கு அரசு பட்டை நாமம் போட்டுள்ளது..*

*30மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் 4,400 ஆசிரியர் பணியிடங்கள் போட்டிருக்க வேண்டும்..*

*அனைத்தும் தனியார் மயமாக்கி விட்டு அப்புறம் அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை குறைந்தால் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறுவது வருத்தம் அளிக்கிறது.*

*கேரளாவில் தனியார் பள்ளிகள் அரசுடமையாக்கப்பட்டு வருகிறது, ஆனால் தமிழ்நாட்டில் அரசுப்பள்ளிகள் கொஞ்சம் கொஞ்சமாக மூடப்பட்டு தனியார் வசம் சென்றடைகிறது.*



*பள்ளிகளை மூடினால் தனியார் பள்ளிகளுக்கு மகிழ்ச்சி. இதுதான் அரசின் போக்கு என்பது நியாயம் இல்லை.*

*பிள்ளைகள் இல்லாத பள்ளிகளை உயர் அதிகாரிகள் வரை தனி கவனம் செலுத்தி அந்த பள்ளிக்கு திறமையான ஆசிரியர்களை நியமித்து தனி சலுகைகள் கொடுத்து வாழ வைக்க தெரியாமல் மூட நினைப்பது நொண்டி குதிரைக்கு சறுக்கினது சாக்கு என்பதே பொருந்தும்.*

*பிள்ளைகள் இல்லாத பள்ளி உள்ள ஊர் மக்களை திரட்டி பள்ளிகளை செம்மைபடுத்த எந்த உயர் அதிகாரியாவது நினைத்ததுண்டா அதுபோல் கூட்டம் போட்டு மக்களுக்கு விழிப்புணர்வு தந்த்துண்டா. இல்லையே. ஆசிரியர்களை மட்டுமே குறை கூறுவார்கள்.*

*அரசுப் பள்ளி ஆசிரியர்கள் பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்தால் மகிழ்ச்சி என்று கூறும் மாண்புமிகு கல்வி அமைச்சர் ஏன் MLA கள் மற்றும் அமைச்சர்களின் குடும்பத்தில் உள்ள பிள்ளைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்தால் மகிழ்ச்சி என்று கூறவில்லை.*

🔴🔴 *#BREAKINGNEWS* *தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷை அனைவருக்கும் கல்வி திட்ட கூடுதல் இயக்குனராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு*

🔴🔴 *#BREAKINGNEWS*

*தூத்துக்குடி ஆட்சியர் வெங்கடேஷை அனைவருக்கும் கல்வி திட்ட கூடுதல் இயக்குனராக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு*

அனைத்து ஆசிரியர்களும் பள்ளி திறக்கும் நாளன்று ஸ்மார்ட் போன் கொண்டு வர வேண்டும்! - CEO செயல்முறைகள்

ஜாக்டோ ஜியோ சார்பில் மாவட்ட தலை நகர் ஆர்பாட்டம் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில்


Jacto Geo சார்பில் மாவட்ட தலைநகரில் தூத்துக்குடி துப்பாக்கி சூட்டுக்கு கண்டன ஆர்பாட்டம்

ஜாக்டோ-ஜியோ_ சென்னை மாவட்டம் _24.05.18 கண்டன ஆர்ப்பாட்டம். பிராட்வே பேருந்து நிலையம் அருகில் (குறளகம்) _ . வாழும் மண்ணையும் மனிதர்களையும் அழிவை நோக்கி கொண்டு சென்றுக் கொண்டிருக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை மூட வலியுறுத்தி

தொடர்ந்து நூறு நாட்களாக அமைதியான முறையில் உண்ணாவிரதம், காத்திருப்பு போராட்டம் என

பல்வேறு வகையான அஹிம்சை வழி போராட்டங்களை நடத்தி வந்த நிலையில்

100 நாட்கள் ஆன பின்பும் தமிழக அரசு கண்டு கொள்ளாததால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி அமைதி பேரணி சென்ற
சுமார் 5000 க்கும் மேற்பட்ட மக்கள் மீது எந்தவித அறிவிப்பும் இன்றி

எந்தவித எச்சரிக்கையும் இன்றி வன்முறை வெறியாட்டத்தை கட்டவிழ்த்து விட்டு

காட்டுமிராண்டிதனமாக துப்பாக்கி சூடு நடத்தி மண்ணைக் காத்திட போராட்டம் நடத்தியவர்களில் 12 பேரை தீவிரவாதிகளை போல் கொரில்லா தாக்குல் மூலம் படுகொலை செய்த காவல் துறையினரையும்

படுகொலைக்கு காரணமான தமிழக அரசையும் அரசு ஊழியர் ஆசிரியர் பேரமைப்பான ஜாக்டோ-ஜியோ சார்பில்

மிக வன்மையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது.

1.தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு இறந்தவர்கள், காயமடைந்தவர்கள்,பாதிக்கப்பட்ட அனைவருக்கும்,சொத்துக்களை இழந்தவர்களுக்கும் உரிய

நிவாரணத்தை தமிழக அரசு வழங்கிட வேண்டும்

2.துப்பாக்கி சூட்டின்போது விதிமுறைகளை கடைப்பிடிக்காமல் 12 பேரின் படுகொலைக்கு காரணமான காவல் துறை அதிகாரிகளை பணிநீக்கம் செய்திட வேண்டும்.
3.ஸ்டெரலைட் ஆலையை உடனடியாக மூட வேண்டும். 4.உரிய நீதி விசாரணை நடத்தவும். 5.இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு வேலை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோவின் சார்பில் முதற்கட்டமாக 24.5.18 அன்று மாலை 5 மணியளவில் பிராட்வே பேருந்து நிலையம் அருகில் (குறளகம்) மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவண். ஒருங்கிணைப்பாளர்கள். ஜாக்டோ-ஜியோ. CHENNAI

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டி ஜனநாயக முறையில் போராடிய அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு— *தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி-தமிழக அரசுக்கு தனது வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறது

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வேண்டி ஜனநாயக முறையில் போராடிய அப்பாவி மக்கள் மீது துப்பாக்கி சூடு— தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி-தமிழக அரசுக்கு தனது வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறது

மக்களின் சுகாதாரத்திற்கும்,மக்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தி விஷப்புகையை கக்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக நிரந்தரமாக மூட வேண்டும் என்று 100 நாட்களாக மக்கள் போராடிவந்த நிலையில்,
                                   இதுவரை மத்திய மாநில அரசுகளிடமிருந்து எந்த நடவடிக்கையும் இல்லை என்ற கோபம்,பாதிப்பு மக்களுக்கு இருந்து வருகிறது.இந்த நியாமான கோபத்தை,பாதிப்பை தெரிவிப்பதற்காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை நோக்கி  பல்லாயிரம் தூத்துக்குடி மக்கள் ஊர்வலமாக சென்றனர் .இந்த ஜனநாயகமான,நியாயமான போரட்டத்தில் கலந்து கொண்ட அப்பாவி மக்கள் மீது அடக்குமுறையை ஏவி,தடியடி,கண்ணீர்புகை,வீச்சு,தண்ணீர் பீச்சியடிப்பு என ,அதோடு நில்லாமல் பறவைகள் போல் சுட்டெரித்த இந்த தமிழக அரசின் ஈவு இரக்கமற்ற  கொடூர நடவடிக்கையை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது.
  தமிழக அரசு உடனடியாக அமைச்சரவையைக்கூட்டி தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை உடனடியாக நிரந்தரமாக மூடுவதற்கான ஆணையை வெளியிட்டு தமிழ்நாட்டில் அமைதியை ஏற்படுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் திரு செ.முத்துசாமி Ex MLC,அவர்கள் தமிழக அரசினை கேட்டுக்கொள்கிரார்.

New Books குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி தர உள்ளதால் கோடை விடுமுறையை நீட்டிக்க முடியாது: அமைச்சர்

திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் வெப்பம் நிலவி வருகிறது. பிற மாவட்டங்களில் மழை பெய்து வெப்பத்தை தணித்து வருகிறது. புதிய பாடத்திட்டத்தின்படி பாடங்களை மாணவர்கள் கற்க வேண்டும் என்பதால், கோடை விடுமுறையை நீட்டிக்க முடியாது. திட்டமிட்டபடி ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ஆசிரியர்கள் போராட வேண்டாம்: அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள்

ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதை விட்டு பள்ளி மாணவர்களின் முன்னேற்றத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.சென்னை அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகத்தில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகள், உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கான ஆய்வுக் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டிய நிலை உள்ளது. ஆசிரியர்கள் பணியிடங்களை குறைக்கக் கூடாது என்ற கோரிக்கை தொடர்ந்து வைக்கப்படுகிறது.  ஆசிரியர்கள் ஸ்டிரைக் என்று சொன்னால் மக்கள் ஏன் இவர்கள் இப்படி செய்கிறார்கள் என்று கேட்கிறார்–்கள். 365 நாட்கள் பணி நாட்கள் உள்ள நிலையில் 210 நாட்கள் தான் பள்ளி நடக்கிறது.
அதிலே தேர்வுக்காக குறிப்பிட்ட நாட்கள் ஒதுக்கப்படுகிறது. அதன்படி பார்த்தால் 170 முதல் 175 நாட்கள் தான் பள்ளி நடக்கிறது. புதிய பாடங்களை நடத்துவதற்காக ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பள்ளிகளை உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் நேரில் சென்று ஆய்வு செய்ய வசதியாக தொடக்கப் பள்ளிகள்  30 பள்ளிகளாக பிரிக்கப்பட்டு  அவர்கள் ஆண்டுக்கு 2 முறையாவது நேரில் சென்று ஆய்வு செய்ய வேண்டும்.

10 -க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட 890 அரசு பள்ளிகள் மூடப்படும் தமிழக அரசு தீவிர பரிசீலனை!!!

பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகிக்கும்போது, வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்ளும் வகையில், ஆவணங்களை தயார் நிலையில் வைக்குமாறு தலைமையாசிரியர்களுக்கு உத்தரவு

பள்ளிகளில் அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகிக்கும்போது, வேலைவாய்ப்பு பதிவு மேற்கொள்ளும் வகையில், ஆவணங்களை தயார் நிலையில் வைக்குமாறு தலைமையாசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது .

தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 16ம் தேதி வெளியானது.


வரும் 23, 30 ஆகிய தேதிகளில் முறையே, 10ம் வகுப்பு, பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. வேலைவாய்ப்பு அலுவலக பதிவில், மாணவர்களின் கல்வித்தகுதி, அந்தந்த பள்ளிகளிலேயே பதிவு செய்யப்படுகிறது.

அசல் மதிப்பெண் சான்றிதழ் வினியோகிக்கும் போது  இப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

அரசு பள்ளிகளில் தொடக்க கல்வியில் கூடுதல் சேர்க்கை இருக்க வேண்டும் : அமைச்சர் செங்கோட்டையன்

புதிய பாடத்திட்டங்கள் குறித்து பயில விரும்பும் ஆர்வமுள்ள  ஆசிரியர்களின் பட்டியலை வழங்க வேண்டும் என்று சென்னை  கோட்டூர்புரத்தில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். 
இது குறித்து  சென்னையில் மாவட்ட தலைமை கல்வி அதிகாரிகளுடன் அமைச்சர்  ஆலோசனை செய்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். புதிய பாடத்திட்டம்  குறித்து பயிற்சி வழங்கப்பட்டு, 7 நாள் பயிற்சிக்காக 4 மையங்கள்  அமைக்கப்படும். 

தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் குறைந்த அளவில் மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன

தமிழக அரசு தொடக்கப் பள்ளிகளில் குறைந்த அளவில் மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பள்ளிகளை மூட அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

வரும் கல்வி ஆண்டு முதல் 800 அரசு தொடக்க பள்ளிகளை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிகிறது. 10 மாணவர்களுக்கும் குறைவாக
படிக்கும் அரசு தொடக்க பள்ளிகள் மூடப்பட உள்ளன. மூடப்படும் தொடக்கப் பள்ளி மாணவர்கள், அருகில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் என்றும் செய்தி வெளியாகி உள்ளது. அதேபோல், மூடப்படும் பள்ளி ஆசிரியர்கள் மற்ற பள்ளிகளுக்கு மாற்றப்பட உள்ளதாகவும் தெரிகிறது.

🅱REAKING NEWS* *அரசுப்பள்ளிகளை மூட முடிவு..!*

*10,10 க்கும் குறைவான மாணவர் உள்ள பள்ளிகள் மூட முடிவு

*800 அரசுப்பள்ளிகளை மூட தமிழக அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 10க்கும் குறைவான மாணவர்கள் இருக்கும் பள்ளிகளை மூட பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாகவும், மூடப்படும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் சேர்க்கவும் பரிந்துரை செய்துள்ளது. மேலும், இதுகுறித்த அரசாணை விரைவில் வெளியாகும் என தகவல் தெரிவித்துள்ளனர்.*

கற்கும் பாரதம்' திட்டம் தற்காலிகமாக நிறுத்தம்

கற்கும் பாரதம் திட்டப்பணியை, மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தியுள்ளது.
தமிழகத்தில், பெண்கள், 50 சதவீதத்துக்கும் குறைவாக கல்வியறிவு பெற்றுள்ளதாக கருதப்படும், ஈரோடு, அரியலுார், பெரம்பலுார், திருவண்ணாமலை உட்பட, எட்டு மாவட்டங்களில், மத்திய அரசின் நிதியுதவியில், கற்கும் பாரதம் திட்டம் செயல்பட்டது.

இதில், 15 வயதுக்கு மேற்பட்டோருக்கு, பஞ்., அளவில், கற்கும் பாரதம் மையம் அமைக்கப்பட்டு, ௨,௦௦௦ ரூபாய் சம்பளத்தில், இரண்டு பயிற்சியாளர்கள் செயல்பட்டனர்.

TNPSC-DEPARTMENT EXAM MAY-2018 HALL TICKETS RELEASED

CLICK HERE TO DOWNLOAD 

கல்வித்துறை நிர்வாக மாற்றத்தால் அதிகார போட்டி

தொடக்கப் பள்ளியில் ஏற்பட்டுள்ள நிர்வாக மாற்றத்தால், அதிகார மையங்களுக்குள் போட்டி ஏற்பட்டுள்ளது. யாருடைய பேச்சை கேட்பது என, அதிகாரிகள் குழப்பத்தில் உள்ளனர்.

தமிழக அரசு, கற்றல், கற்பித்தல் மற்றும் பாடத் திட்டத்திலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. அதேபோல், ஆசிரியர்கள் இடமாறுதல், பணி நியமனம், பயிற்சி மற்றும் கல்வித் துறையின் இடமாறுதல்களிலும், மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்த வகையில், தமிழக பள்ளிக்கல்வித் துறை சார்பில், இரண்டு நாட்களுக்கு முன், புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மே-23ல் 10ம் வகுப்பு, 'ரிசல்ட்' பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்

மே-23ல் 10ம் வகுப்பு, 'ரிசல்ட்' வெளியாகின்றன. முடிவுகள், மாணவர்கள் அளித்த, மொபைல் போன் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., ஆக வரும். தமிழக பள்ளிக்கல்வித் துறையின், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச்சில் துவங்கி, ஏப்., 20 வரை நடந்தது. 10.20 லட்சம் மாணவ - மாணவியர் மற்றும் தனித்தேர்வர்கள் பங்கேற்றனர்.
விடைத்தாள் திருத்தம், மே, 6ல் முடிந்தது.இதையடுத்து, மாவட்ட வாரியாக மதிப்பெண் பெற்று, இறுதி மதிப்பெண் பட்டியல் மற்றும் தேர்வு முடிவுகள் தயாரிக்கப்பட்டன. இந்தப் பணிகள், நேற்று நிறைவடைந்தன.

*JACTO-GEO தீர்மானங்கள்..*.

*JACTO-GEO தீர்மானங்கள்..*.

🔴 1). 8.5.18 ல் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர் ஆசிரியர்களுக்கு நன்றி,

🔴 2.)8.5.18 அரசு ஊழியர் ஆசிரியர்கள் போராட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு அளித்த பத்திரிக்கை & ஊடகங்களுக்கு நன்றி,

🔴 3) 8.5.18 ல் முற்றுகை போராட்டத்தில் கைது, வழக்கு மற்றும் முள்வேலி அமைத்த அரசுக்கு கண்டனம்,

🔴 4). 8.5.18 ல் முற்றுகை போராட்டத்தில் பங்கேற்ற அரசு ஊழியர் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை கைவிடவேண்டும்,

🔴 5). JACTO-GEOவை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும்,

🔴 6). 11.06.18 அன்று சென்னையில் JACTO-GEO‌ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் பங்கேற்கும் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்,

🔴 7). 11.06.18 மாவட்டங்களில் தொடர் ஆர்பாட்டங்கள்,

🔴 8).JACTO-GEO விலிருந்து பிரிந்து சென்ற அமைப்புக்களை வரவேற்றல்...

*சிபிஎஸ் ஒழிப்பே முதல் கோரிக்கைதமிழ்நாட்டில் உள்ள சிபிஎஸில் உள்ள 5 லட்சம் அரசு ஊழியர்களும் ஆசிரியர்களும் பங்கேற்று வெற்றி பெறச்செய்யுங்கள்*

*ஜாக்டோ ஜியோ*

காவிரி நீர் மேலாண்மை ஆணையம்-

காவிரி வழக்கின் இறுதி தீர்ப்பில், மத்திய அரசு தாக்கல் செய்த வரைவு செயல்திட்டத்தை உச்ச நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதுடன் உடனடியாக அரசிதழில் வெளியிட உத்தரவிட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம்,  ‘காவிரி நீர் மேலாண்மை ஆணையம்’ (Cauvery Water Management Authority) என்ற பெயரில் அமைக்கப்படும் என்றும், வாரியத்தைவிட ஆணையம் கூடுதல் அதிகாரம் மிக்கதாக இருக்கும் என்பதால் இந்தப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆணையத்திடம் சம்மந்தப்பட்ட மாநிலங்கள், தங்கள் அணைகளில் எவ்வளவு நீர் இருப்பு உள்ளது என்பதையும், தங்களின் நீர்த் தேவை எவ்வளவு என்பதையும் மாதாந்திர அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும்.அந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபின் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தால் காவிரி நடுவர்மன்றத்தின் பரிந்துரை அடிப்படையில் நீர் திறந்துவிடப்படும்.

தமிழகத்திற்கு சாதகமாக அமைக்கப்பட்டுள்ள வரைவறிக்கையின் விவரங்கள்:

குழுவின் தலைவர், செயலாளர், முழுநேர, பகுதிநேர உறுப்பினர்கள் என்று ஆறு பேரை மத்திய அரசு தேர்வு செய்யும்.

ஜாக்டோ ஜியோ கூட்ட தீர்மானங்கள்

JACTO GEO ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலதலைவர் செ.மு அவர்கள்


JACTO GEO உயர்மட்டக்குழு கூட்டத்தில் நமது பொதுச்செயலாளர் செல்வராஜ் அவர்கள் உரை.உடன் மாநில பொருளாளர் ரக்‌ஷித்,இளைஞரணி செயலர் நாகராஜன்,திருச்சி செபாஸ்தியன்

ஜாக் டோ _ ஜியோ கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் செல்வராஜ் அவர்கள். தனது உரையில் இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய குறைப்பை சரி செய்யும் கோரிக்கை தனிக்கவனம் பெறும் வகையில் இடம் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டார்

பள்ளிகளில் 15 நாள் கூடுதல் பாட வகுப்பு நடத்த - அமைச்சர் செங்கோட்டையன் உத்தரவு

புதிய  பாடத்திட்டத்தின்படி, கூடுதலாக 15 நாட்கள் பாடம் நடத்த வேண்டி இருப்பதால்  ஜூன் 1ம் தேதியே பள்ளிகள் திறக்கப்படுகிறது. இந்த கல்வியாண்டில் 170 நாட்களுக்கு பதில் 185 நாள் பாடம் நடத்தப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

தமிழக பள்ளிகளில் பழைய பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும் எனப் பல்வேறு கல்வி அமைப்புகள் நீண்ட காலமாகக் கோரிக்கை விடுத்து வந்தன. அந்தக் கோரிக்கைக்கு செவி சாய்க்கும் வகையில், அனைத்து வகுப்புகளுக்கும் அடுத்த மூன்று ஆண்டுகளில் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் 1, 6, 9 மற்றும் 11-ம் வகுப்புகளுக்கு இந்த கல்வியாண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்படும் என்றும் கடந்த ஆண்டு மே மாதம் தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.

web stats

web stats