rp

Blogging Tips 2017

எஸ்எஸ்எல்சி தேர்வு மாணவர்களுக்கான பதிவு எண்கள் வெளியீடு

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு அட்டவணை 15ம் தேதி வெளியாகிறது. 22ம் தேதி செய்முறை தேர்வுகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முன்தினம் பள்ளிகள் மூலம் விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியருக்கு தேர்வு பதிவு எண்கள்

சட்டசபையில் முதல்வர் நல்ல முடிவு அறிவிப்பார்: சத்துணவு ஊழியர்கள் போராட்டம் ஒத்திவைப்பு

சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் கடந்த 4 நாட்களாக தொடர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி கூட்டமைப்பில் இடம்பெற்ற சங்கங்கள் ஒன்று சேர்ந்து தமிழகம் முழுவதும் போராட்டத்தை நடத்தின.இந்த நிலையில் இந்த கூட்டமைப்பு இரண்டாக உடைந்தது. அதில் இடம் பெற்ற பழனிசாமி, டெய்சி ஒரு அணியாகவும், மு.வரதராஜன், ராஜேந்திரன், ஆறுமுகம், மீனாட்சி, முருகேஸ்வரி ஆகியோர்

2015-2016-ஆம் கல்வியாண்டுக்கான -EMIS-1,2,3 -வகுப்புகளுக்கு பதிவேற்றம் தொடர்பாக இயக்குநர் செயல்முறைகள்

1062 முதுகலை ஆசிரியர்கள் TRB மூலம் நிரப்ப பள்ளிக்கல்வித்துறைக்கு அனுமதி.


வருங்கால வைப்புநிதி 12% ரத்து செய்யப்பட வாய்ப்பு!

டேக்-ஹோம் சம்பளம் இனி உயர வாய்ப்பு: பி.எஃப். முறையை மாற்ற மத்திய அரசு யோசனைஊழியர்கள் வருங்கால வைப்பு நிதிக்காக மாத வருவாயிலிருந்து ஊழியர்கள் பங்களிப்பாக பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்புநிதி
12% ரத்து செய்யப்பட வாய்ப்பு.

எஸ்எஸ்எல்சி தேர்வு மாணவர்களுக்கான பதிவு எண்கள் வெளியீடு!

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு அட்டவணை 15ம்தேதி வெளியாகிறது. 22ம் தேதி செய்முறை தேர்வுகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று முன்தினம் பள்ளிகள் மூலம் விண்ணப்பித்துள்ள மாணவ, மாணவியருக்கு தேர்வு பதிவு எண்கள் ஒதுக்கிய பட்டியலும் பள்ளிகளுக்கு வந்து சேர்ந்துள்ளன

தொடக்க கல்வி பட்டயத் தேர்வர்கள் விடைத்தாள் நகல் பெற 16 முதல் விண்ணப்பிக்கலாம்

2015-ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற தொடக்கக் கல்விப் பட்டயத் தேர்வு எழுதிய பயிற்சி மாணவர்கள், தனித் தேர்வர்கள் விடைத்தாளின் மறுகூட்டல், நகல் கோரி செவ்வாய்கிழமை (பிப்ரவரி 16) முதல் 20 வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வுகள் துறை இயக்குநர் வசுந்தரா தேவி கூறியுள்ளார்.

கும்பகோணத்தில் 10 நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை

கும்பகோணத்தில் மகாமகம் பெருவிழாவையொட்டி10நாட்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறைஅறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் பிப்ரவரி 24ஆம்தேதிவரைவிடுமுறை அளித்துமாவட்ட நிர்வாகம்உத்தரவிட்டுள்ளது.
கும்பகோணத்தில் மீண்டும் பிப்ரவரி25ஆம்தேதிபள்ளிகளில் திறக்கப்படும் என்று மாவட்டஆட்சியர்அறிவித்துள்ளார். மாகமகம் பெருவிழாபாதுகாப்புக்காக வரும்போலீசார், பள்ளிகளில்தங்குவதால்விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

4 முக்கிய கோரிக்கைகள் நிறைவேறும் வரை அரசு ஊழியர்கள் போராட்டம் தொடரும்: மாநில தலைவர் அறிவிப்பு

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 10–ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நேற்று தமிழகம் முழுவதும் மறியலில் ஈடுபட்டனர். கைது செய்யப்பட்ட அரசு ஊழியர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.தொடர்ந்து நடைபெறும் அரசு ஊழியர் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆதரவு அளித்துள்ளது.

பிரதமர் மோடிக்கு டாக்டர் பட்டம்: பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் முடிவு

பிரதமர் நரேந்திர மோடிக்கு டாக்டர் பட்டம் வழங்க உத்தரப்பிரதேசம் மாநிலம், வாரணாசி நகரில் உள்ள பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் போராட்டத்தை திரும்ப பெற வேண்டும்: கருணாநிதி

தமிழ்நாட்டில் அரசு ஊழியர்கள் நடத்தி வரும் போராட்டத்தை திரும்ப பெற வேண்டும் என திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.கருணாநிதி வேண்டுகோள் விடுத்துள்ளார்.இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழகச் சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் இன்னும் இரண்டு மாதங்களில் நடக்கவிருக்கிறது.    தமிழகத்தில் அனைத்துத் தரப்பினரும் இந்த அரசுக்கு எதிராகப் போர்க் கொடி உயர்த்தியிருக்கிறார்கள்.

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர்கள் அனைவரையும் தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும்: பள்ளிக் கல்விஇயக்குநர் உத்தரவு

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 மாணவர் கள் அனைவரையும் அரசு பொதுத்தேர்வு எழுத அனுமதிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் களுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்ற றிக்கையில் கூறியிருப்பதாவது:

தனியார் பள்ளி கட்டணம் 40 சதவீதம் உயர்வு

தனியார் பள்ளிகளின் அடுத்த, மூன்று ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணத்தை, அரசு வெளியிட்டு உள்ளது. இதில், கடந்த ஆண்டை விட, 40 சதவீதம் அதிக கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனியார் சுயநிதி பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்க, நீதிபதி சிங்காரவேலர் தலைமையில், கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.

8ம் வகுப்பு தனித்தேர்வு அறிவிப்பு!

தனித்தேர்வர்களுக்கு 8ம்வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரலில் நடக்கவுள்ளது. இதை எழுத விரும்புவோர் பிப்.18 முதல் 29 வரை www.tndge.in என்ற இணையளத்தில் பதிவு செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.பனிரெண்டரை வயது பூர்த்தியடைந்த தனித்தேர்வர்கள் இத்தேர்வு எழுதலாம்.

விரைவில் ஆன்லைனில் இ. பி.எப்., பணம் பெறும் வசதி

தொழிலாளர்களின் சம்பளத்தில் இருந்து பிடிக்கப்படும் பி.எப்., பணத்தை ஆன்லைனில் திரும்ப பெறும் வசதியை மத்திய அரசு விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது

சியாச்சின் வீரர் ஹனுமந்தப்பா மரணம்

புதுடில்லி,: சியாச்சின் பனிச் சரிவில் சிக்கி, ஆறு நாட்களுக்கு பிறகு, நேற்று முன்தினம் உயிருடன் மீட்கப்பட்ட, ராணுவ வீரர், கர்நாடகாவைச் சேர்ந்த, ஹனுமந்தப்பா உடல் நிலை, நேற்று மோசமடைந்ததை அடுத்து அவர் இறந்தார். 

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், இந்தியா - பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில், கடல் மட்டத்திலிருந்து,

கள்ளக்குறிச்சி எஸ்.வி.எஸ்., கல்லுாரியில் படித்த, 111 மாணவர்களுக்கு, அரசு கல்லுாரியில் இடம் கிடைத்துள்ளது.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே, எஸ்.வி.எஸ்., இயற்கை மருத்துவக் கல்லுாரியில், மூன்று மாணவியர் மர்மமான முறையில், கிணற்றில் பிணமாகக் கிடந்தனர். கல்லுாரி மீது அடுக்கடுக்காக புகார்கள் வந்ததால், மாவட்ட நிர்வாகம், கல்லுாரியை இழுத்து மூடியது.

70 துறைகளைக் கைவிட 30 பொறியியல் கல்லூரிகள் முடிவு

மாணவர்கள் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதைத் தொடர்ந்து, வருகிற 2016-17 கல்வியாண்டில் 70 துறைகளைக் கைவிட 30 பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்திடம் விண்ணப்பித்திருப்பது தெரியவந்துள்ளது.
 இதுபோல, மாணவர் சேர்க்கை இடங்களைக் குறைக்க 20-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் விண்ணப்பித்துள்ளன.

இளநீர்அருமையை புரிந்து கொள்ளுங்கள் !!

வெள்ளைக்காரன் நமக்கு பெப்சியையும், கோக்க கோலாவையும் காட்டிவிட்டு , அவன் இளநீர் குடிக்கிறான் !! இதுக்கு பெயர் தான் பண்டமாற்றம் !
வெளிநாட்டில் ஒரு இளநீரின் விலை £3.20 = 315 ரூபா
இப்பொழுதாவது அதன் அருமையை புரிந்து கொள்ளுங்கள் !!

3 லட்சம் அரசு ஊழியர்கள் 'ஸ்டிரைக்' பணிகள் ஸ்தம்பிப்பு

மூத்த அமைச்சர்கள் இடம்பெற்ற ஐவர் அணி பேச்சு நடத்தியும் சிக்கல் தீராததால், கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர் சங்கத்தினர், நேற்று காலவரையற்ற, 'ஸ்டிரைக்'கை துவக்கினர். மூன்று லட்சம் ஊழியர்கள் ஸ்டிரைக்கில் பங்கேற்றுள்ளதால், அரசுப் பணிகள் ஸ்தம்பித்தன.புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; அங்கன்வாடி, சத்துணவு பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட, பல கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கமும் மற்றும் பல துறை சார்ந்த சங்கங்களும் போராடி வந்தன.

கல்வி வளர்ச்சி நாளில் சிறந்த பள்ளிகளை தேர்ந்தெடுத்து பரிசு வழங்க இயக்குனர் உத்தரவு

அகஇ - தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 20/02/2016 அன்றும், உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு 27/02/2016 அன்றும் CRC வகுப்புகள் நடைபெறும் - மாநிலதிட்ட இயக்குனரின் செயல்முறைகள்

குப்பை வண்டி விதி’ தெரியுமா? - 🚛 The Law of the Garbage Truck

ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் அவசரமாக வெளியூர் செல்ல வேண்டியிருந்தது. ஆகையால் ரயில் நிலையத்துக்கு உடனே செல்ல வேண்டி டாக்ஸி ஒன்றை பிடித்து உடனே  ரயில்வே ஸ்டேஷன் போகுமாறு டிரைவரிடம் சொன்னார்.

இவர்கள் வேகமாக சென்று கொண்டிருக்கும்போது, இவர்களுக்கு முன்னாள் சென்ற கார் ஒன்று திரும்புவதற்கான சிக்னல் எதுவும் கொடுக்காமல் திடீரென்று திரும்பிவிட ஒரு கணம் நிலை தடுமாறிய டாக்ஸி டிரைவர் உடனே பிரேக்கை அப்ளை செய்து சரியாக முன் சென்ற காரை இடிப்பதற்கு ஒரு இன்ச் முன்னதாக நிறுத்தினார்.

பொதுமக்கள் ஆன்லைனில் மருந்துகளை வாங்க வேண்டாம்: தமிழக சுகாதாரத்துறை எச்சரிக்கை

ஆன்லைனில் மருந்துகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். யாரும் ஆன்லைனில் மருந்துகளை வாங்க வேண்டாம் என்று தமிழக மருந்து கட்டுப்பாடு துறை இயக்குநர் அப்துல்காதர் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் ஆன்லைன் வர்த்தகத்தில் மற்ற பொருட்களைப் போலவே மருந்துகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதற்கு மருந்து வணிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் சிறுபான்மையின மாணவர்கள் தமிழ் மொழித்தேர்வுக்கு பதிலாக தாய் மொழியில் எழுதலாம் அரசு தேர்வுத்துறை முடிவு

எஸ்.எஸ்.எல்.சி. தமிழ் மொழித்தேர்வுக்கு பதிலாக சிறுபான்மையின மாணவர்கள் அவர்களின் தாய்மொழியில் தேர்வு எழுத அரசு தேர்வுகள் துறை முடிவு செய்துள்ளது.எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுதமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வருகிற மார்ச் மாதம் 15-ந் தேதி தொடங்கி ஏப்ரல் மாதம் 13-ந் தேதி முடிவடைகிறது. இந்த தேர்வை 11 லட்சம் மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். கடந்த 2006-ம் ஆண்டு

நிதியாண்டு 2015-2016க்கான வருமான வரி கணக்கீட்டு விபரம்

தலைமை ஆசிரியர்களுக்கான பத்து நாள் தலைமைப்பண்பு வளர் பயிற்சி

13 மாவட்ட 'டயட்' பொறுப்பு முதல்வர்களுக்கு பதவி உயர்வு

தமிழகத்தில் 13 மாவட்ட கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவன (டயட்) 'பொறுப்பு' முதல்வர்கள் 13 பேர் முதல்வர்களாக பதவி உயர்வு பெற்றனர். இடைநிலை ஆசிரியர்களுக்கான பயிற்சி பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை அளிக்கும் வகையில் மாநிலம் முழுவதும் 13 இடங்களில், மாவட்ட கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் ஓராண்டாக சீனியர் விரிவுரையாளர்கள் தான் 'பொறுப்பு' முதல்வர்களாக இருந்தனர்.

ஆசிரியர் சங்கத்தினரை சமாதானப்படுத்திய அமைச்சர்கள் குழு

ஓராண்டாக, தொடர் போராட்டம் நடத்திய, 'ஜாக்டோ' ஆசிரியர் சங்கத்துடன், அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சில், சங்கத்தினர் சமாதானப்படுத்தப்பட்டு உள்ளனர். ஆசிரியர்களின், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம், பேரணி, வேலைநிறுத்தம் மற்றும் மறியல் என, ஐந்து கட்ட போராட்டங்களை, ஜாக்டோ சங்கம் நடத்தியது. அடுத்தபோராட்டம் குறித்து முடிவு செய்ய, பிப்., 13-ல் திருச்சியில் உயர்மட்டக் குழுவைக் கூட்ட திட்டமிட்டிருந்தது.

தேசிய மக்கள் தொகை பதிவேட்டில் ஒரே கதவு எண்ணில் பல வீடுகள் ஆசிரியர்கள் தவிப்பு

தேசிய மக்கள் தொகை பதிவேடு சரிபார்ப்பில் ஒரே கதவு எண்ணில் பல வீடுகள் இருப்பதால் பணியை முடிக்க முடியாமல் ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.தேசிய மக்கள் தொகை பதிவேடு சரிபார்க்கும் பணி ஜன., 18 முதல் பிப்., 5 வரை நடந்தது. இதில் ஆசியர்கள் வீடு, வீடாக சென்று ஏற்கனவேதேசிய மக்கள் தொகை பதிவேட்டில் உள்ள தவறுகளை சரிசெய்தனர்.

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வரும் மே 31ஆம் தேதிக்குள் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்படும்: நஜீம் ஜைதி

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் வரும் மே 31ஆம் தேதிக்குள்  சட்டப்பேரவைத் தேர்தல்கள் நடத்தி முடிக்கப்படும் என இந்திய தலைமைத் தேர்தல் அதிகாரி நஜீம் ஜைதி கூறியுள்ளார்.தமிழக சட்டப் பேரவையின் தற்போதைய காலம் மே மாதம் 22 ஆம் தேதி முடிவடைகிறது.

RTI:தமிழக அரசால் CPS ல் பிடித்தம் செய்யப்பட்ட தொகை விபரம்.


தேர்தல் பணி குறித்து திருச்சிராப்பள்ளி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்...

தேர்வுத்தாள் திருத்துவோர் விவரம் தர தடை

தேர்வுத் தாள் திருத்துவோரின் விவரங்களை, தகவல் உரிமைசட்டத்தின் கீழ் பிறருக்கு தெரிவிக்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்குதேர்வுக்கு முன்பு ஜாதி, இருப்பிட சான்று

ஆறாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளிலேயே ஜாதி, இருப்பிடச் சான்றிதழ் வழங்க அரசு உத்தரவிட்டது. இந்த ஆண்டு தேர்வு துவங்க உள்ளநிலையில், இதுவரை சான்றிதழ்கள் வழங்கப்படவில்லை. நடுநிலைப் பள்ளிகளில் பயிலும் 8 ம் வகுப்பு மாணவர்கள் தேர்வு முடிந்ததும், உயர்கல்விக்காக வேறு பள்ளியில் சேர வேண்டியநிலை உள்ளது. 

தேசிய விடுமுறை தினமாக நேதாஜி பிறந்த நாள்: மத்திய அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

இந்திய தேசிய ராணுவத் தலைவர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்த நாளை, தேசிய விடுமுறை தினமாக அறிவிக்குமாறு உத்தரவிடக் கோரிய மனு குறித்து, 8 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

டி.இ.ஓ., காலிப்பணியிடம் கல்வித்துறை நடவடிக்கை

தமிழக பள்ளி கல்வித்துறையிலுள்ள மாவட்ட கல்வி அலுவலர் (டி.இ.ஓ.,) காலியிடங்களை நிரப்ப, 2008க்குள் பதவி உயர்வு பெற்ற தலைமை ஆசிரியர்கள் பட்டியல் கோரப்பட்டுள்ளது. அரசு உயர் நிலை, தொடக்கக் கல்வித்துறையில் 50க்கும் மேற்பட்ட மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் காலியாக இருந்தன. 

ஜாக்டோ பேச்சுவார்த்தை முழு விவரம்-தமிழ்நாடுஆசிரியர் கூட்டணிபொதுசெயலர் செ.முத்துசாமி அவர்களின் அறிக்கை

இன்று மாலை 5.50 மணியளவில் தமிழக அரசின் தலைமைச்செயலாளர் அறையில் ஜாக்டோ குழுவினருடனான பேச்சு வார்த்தை தொடங்கியது.அரசு தரப்பில் நிதித்துறை அமைச்சர் திரு ஓ.பன்னிர் செல்வம்அவர்கள் தலைமையில்,கல்வி அமைச்சர்,உயர்கல்வித்துறை அமைச்சர்,மின்சாரத்துறை அமைச்சர்,மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் ஆகியோர் கலந்துகொண்டனர் மேலும் கல்வித்துறை செயலர்.நிதித்துறை செயலர்,மற்றும்பள்ளிக்கல்வி இயக்குனர்,தொடக்கக்கல்வி இயக்குனர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.ஜாக்டோ தரப்பில் உயர்மடக்குழு உருப்பினர்கள் 21 பேர் கலந்துகொண்டனர்
          ஜாக்டோ தரப்பில் 15 அம்சக்கோரிக்கைகளை,ஓவ்வோரு கோரிக்கையாக ஓவ்வோரு சங்கபிரதிநிதிகள் தெளிவாக எடுத்துக்கூறினர்.அப்போது கல்வித்துறை செயலர் அவற்றை கவனமாக குறிப்பெடுத்துக்கொண்டார்.அதேசமயம் முக்கிய கோரிக்கைகளை நிதியமைச்சர் அவர்களும் தனது குறிப்பேட்டில் குறிப்பெடுத்துக்கொண்டார்.தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலராகிய நான் கோரிக்கையை விளக்கி பேசும் போது தலைமைச்செயலர் ஏன் இப்பேச்சு வார்த்தையில் கலந்துகொள்ளவில்லை என்று கேள்வி எழுப்பி,.ஏன் எனில் அவர் ஏற்கனவே கல்வித்துறை,மற்றும் நிதித்துறை செயலராக இருந்தவர் என்றும் தற்போது அரசின் முதன்மை செயலராக இருப்பதால் பங்கெடுக்காதது குறித்து கவலையாக உள்ளதாகவும் கூறினேன் . 
           அதற்கு அரசு தரப்பில் அவர் முக்கிய வேலையாக சென்றிருப்பதால் கலந்துகொள்ள இயலவில்லை என தெரிவிக்கப்பட்டது. அமைச்சர் பெருமக்கள் அனைத்து கோரிக்கைகளையும் கவனமாக சுமார் 2 மணி நேரம் கேட்டனர். ஜாக்டோ சார்பில் வைக்கப்படும் கோரிக்கைகளுக்கு முடிவு என்ன என்று கேட்ட போது.நிதியமைச்சர் கல்வி அமைச்சரை பதில் கூறுமாறு அழைத்தார். அதற்கு கல்வி அமைச்சர் நிதியமைச்சரே இக்கூட்டத்திற்கு தலைமை ஏற்றுள்ளதால் அவரையே பதிலளிக்குமாறு கேட்டுக்கொண்டார். 
நிதியமைச்சர் அவர்கள் தனது பதிலில் தற்போது சட்டமன்றம் கூட உள்ளது.இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.கோரிக்கைகள் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு 16-ந்தேதி பட்ஜட் அறிக்கையில் நல்ல தகவல் வரும் என நம்பிக்கை வைக்கக்க்கேட்டுக்கொண்டார். பிறகு கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.கூட்டம் சுமுகமாக முடிந்தது. 

               அரசின் பேச்சு வார்த்தைக்குப்பின்பு  ஜாக்டோ உயர்மட்டபொறுப்பாளர்கள் கூடி கலந்தாலோசனை செய்தனர். இறுதியில் நிதியமைச்சர் அவர்கள் அளித்த நம்பிக்கையின்அடிப்படையில்  வரும் தமிழக அரசின் சட்டமன்ற பட்ஜட்  கூட்டத்தொடரில் 16-ந்தேதி பட்ஜட் அறிவிப்பில் கோரிக்கைகள் ஏற்பு குறித்து அறிவிப்புகளை எதிர்பார்ப்பதாகவும்,அவ்வாறு அறிவிப்புகள் இல்லை எனில்  ஜாக்டோ உயர்மட்டக்குழுக்கூட்டம் வரும் 17-ந்தேதி கூடி அடுத்தகட்ட நடவடிக்கையை முடிவுசெய்யும்  என ஜாக்டோ உயர்மட்டக்குழுவினர் ஒருமனதாக முடிவாற்றி பத்திரிக்கையாளர் மற்றும் ஊடகவியலாளர்கள் மத்தியில் தகவல் தெரிவித்தனர் என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்

ஜாக்டோ உடனான அரசின் பேச்சுவார்த்தை முடிவு.-முதல் கட்ட செய்திகள்

ஜாக்டோ உடனான அரசின் பேச்சுவார்த்தை முடிந்தது.பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை.ஜாக்டோவின் கோரிக்கைகள் குறித்து முதல்வருக்கு தெரியப்படுத்துவதாகவும்,பட்ஜெட்டில் பரிசீலிக்க வாய்புள்ளதாகவும் அரசுதரப்பில் தகவல்.இதுகுறித்து ஜாக்டோ கூடி பேசியது. அரசு தரப்பில்கூறப்பட்டுள்ள உறுதிமொழிக்கேற்ப தமிழக அரசின் பட்ஜட் உரையில் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என ஜாக்டோ நம்பிக்கைவைக்கிறது .கோரிக்கை நிறைவேற்றம் குறித்த அறிவிப்புகள் இடம்பெறவில்லைஎனில் அடுத்தகட்ட போராட்டம் குறித்து 16ந்ந்தேதி அறிவிக்கப்படும்  எனவும் போராட்டம் தீவிரமாக இருக்கும் எனவும்ஜாக்டோ உயர்மட்டக்குழு முடிவு

ஆதார் கார்டு இணைப்பு பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்த தடை கோரிய வழக்கில் தீர்ப்பு தள்ளிவைப்பு

தேசிய மக்கள் தொகை பதிவேட் டில் ஆதார் கார்டு எண்களை இணைக்கும் பணியில் ஆசிரியர் களை ஈடுபடுத்த தடை கோரிய வழக்கில் தீர்ப்பு அளிப்பதை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்தது.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்க நிர்வாகி பாலசந்தர் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு விவரம்:

தேசிய மக்கள் தொகை பதிவேட் டில் ஆதார் கார்டு எண்களை இணைக்கும் பணியில் ஆசிரியர் கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அனைவருக்கும் கல்வி திட்டத்தில் ஆசிரியர்களை கல்வி அல்லாத பணிகளில் ஈடுபடுத்தக்கூடாது எனக் கூறப்பட்டுள்ளது

தேசிய மக்கள் தொகை பதிவேடு(NPR) பள்ளி வேலை நேரத்தில் கற்பித்தல் பணி பாதிக்காத வகையில் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ள கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவு..

ஜாக்டோ பிரதிநிதிகள் மற்றும் தமிழக அரசுடனான பேச்சுவார்த்தை மாலை 5.50 மணிக்கு தொடங்கியது

ஜாக்டோ பிரதிநிதிகள் மற்றும் தமிழக அரசுடனான பேச்சுவார்த்தை மாலை 5.50 மணிக்கு தொடங்கியது. ஒவ்வொரு சங்கத்தின் சார்பில் ஒருவர் வீதம்

மொத்தம் 21 பிரதிநிதிகள் பேச்சுவார்த்தையில் பங்கு பெற்றுள்ளனர்.


தகவல் : தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

ஜாக்டோ மாநில பொதுக்குழு கூட்டம் -பொதுசெயலர் உரை

ஜாக்டோ 9/2/16 அவசர கூட்ட முடிவுகள்

இன்று காலை 11 மணியளவில் சென்னையில் கூடிய ஜாக்டோ கூட்டம் கீழ்க்கண்ட முக்கிய முடிவுகள்  எடுக்கப்பட்டன
1.இன்றுமாலை 4 மணிக்கு நடத்தப்படவிருக்கும் பேச்சு வார்த்தையில் ஜாக்டோ சார்பாக 21 பிரதிநிதிகள் அனுமதிக்கப்படவேண்டும்.

விடுமுறை நாள்களில் மட்டுமே ஆசிரியர்களுக்கு கல்விசாரா பணி: உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு உறுதி

மக்கள் தொகை பதிவேட்டில் ஆதார் எண் இணைக்கும் பணி உள்ளிட்ட கல்விசாரா பணிகளில் விடுமுறை நாள்களில் மட்டுமே ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவர் என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.
             ஆதார் எண் இணைக்கும் பணிகளுக்கு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களை பயன்படுத்தத் தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலர் சி.பாலசந்தர் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.

பிப்.16-ல் தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல்

வரும் 16-ம் தேதி (பிப்ரவரி 16) தமிழக இடைக்கால பட்ஜெட்தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவைச் செயலர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.இது தொடர்பாக சட்டப்பேரவைச் செயலர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 

உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பதவிக்கு 31.12.2009 முடிய 5 தேர்வுகளிலும் தேர்ச்சிப்பெற்று முழுதகுதிப்பெற்ற நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பட்டியலை மாவட்ட அளவில் தயாரித்து அனுப்ப கோருதல் சார்பு

இருவிதமான விலையில் இணைய சேவை: டிராய் மறுப்பு

இருவிதமான விலையில் இணைய சேவை வழங்குவதற்கு இந்திய தொலைதொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) மறுப்பு தெரிவித்துள்ளது.இணையச் சேவை அளிக்கும் நிறுவனங்களும், தொலைத் தொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்களும் ஒவ்வொரு இணையதளத்தைப் பயன்படுத்தவும்  வெவ்வேறு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்என வலியுறுத்தி வந்தனர்.

ஜாக்டோ அவசரக்கூட்டம் அழைப்புக்கடிதம்


web stats

web stats