rp

Blogging Tips 2017

💐 மாநிலப் பொறுப்பாளர்கள் அஞ்சலி..

  இடம்...... பிச்சைகட்டளை
தாணிக்கொட்டகம் ஊராட்சி
வேதாரண்யம் தாலுகா
நாகப்பட்டினம் மாவட்டம்...
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

💐 தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் நாகப்பட்டினம் மாவட்டச் செயலாளர்.

👆இயக்கப் பற்றாளர்
👆இயக்கப் போராளி.
👆அமைதியின் சிகரம்

சகோதரர் அருள் வில்லியம் அவர்களின் திடீர் மறைவை முன்னிட்டு
04/11/2016 அன்று நாமக்கல் அலுவலகத்தில் இருந்து மதியம் 12 மணிக்கு புறப்பட்டோம்....

🌹பொதுச்செயலாளர் திரு க.செல்வராஜ் அவர்களும்
🌹மாநிலத் தலைவர் திரு கு.சி. மணி அவர்களும்
🌹 மாநில துணைப் பொதுச் செயலாளர்
( தனியார் பள்ளி கிளை) திரு.க.சாந்தகுமார் அவர்களும்
🌹மாநில துணைப்பொதுச் செயலாளர் திரு சு.ம.பாலகிருஷ்ணன் அவர்களும்
🌹மாநில இளைஞரணித் தலைவர் திரு.க.ராஜ்குமார் அவர்களும்
🌹 மாநில இளைஞரணிச் செயலாளர்
திரு கோ. நாகராஜன அவர்களும் மற்றும் நாம்க்கல் வட்டாரச் செயலாளர் திரு ரா.பெரியசாமி அவர்களும் மற்றும் திருச்சி மாவட்ட வட்டாரப் பொறுப்பாளர்கள் அனைவரும் சகோதரர் அருள் வில்லியம் அவருக்கு அஞ்சலி செலுத்த நாகப்பட்டினம் நோக்கி இரண்டு கார்களில் பயணம் சென்றபோது
" நாகப்பட்டிணம்" மாவட்டத் தலைவர் திரு. சீதா.பாலசுந்தரம் அவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் தாணிக்கொட்டகத்தில் இருந்து அழைத்துச் சென்றனர்..

🌹 பின் மாநிலப் பொறுப்பாளர் அனைவரும் சகோதரர் அருள் வில்லியம் அவருக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பாக அஞ்சலி செலுத்தினோம் அனனாரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினோம் 💐💐💐💐

🌹 பின் அமெரிக்காவில் உள்ள செ.முத்துசாமி Ex.MLc ஐயாவை தொடர்பு கொண்டு பேசியபோது வில்லியம் சகோதரர் குடும்பத்திற்கு செமு ஐயா தொலைபேசி மூலம் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தார்

🌹அருள் வில்லியம் சகோதரர் உடல் 05/11/2016 இன்று மதியம் 2 மணிக்கு மேல் பிச்சைகட்டளை கிராமத்தில் நல்லடக்கம் செய்யப்படும்... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்கள்....

💐💐💐💐💐💐💐💐💐💐

கிராம மாணவர்கள் எண்ணிக்கை 13 லட்சம்

 அரசு பள்ளிகளில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில், தேர்ச்சி விகிதம் அதிகரிப்பது தொடர்பாக, அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கருத்தாய்வு கூட்டம்,  நேற்று நடந்தது. இதில், பள்ளிக் கல்வித் துறை இயக்குனர் கண்ணப்பன் பேசியதாவது: 

RTI -NPR தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான ஊதியம் எப்போது கிடைக்கும்?

RTI -NPR தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிக்கான ஊதியம் எப்போது கிடைக்கும்?

கட்டண சேனல்களுக்கு அரசு கேபிள் 'டிவி' கடிதம்

 'டிஜிட்டல் ஒளிபரப்பிற்கு மாறுவதாக கூறி, தமிழக அரசு கேபிள், 'டிவி' சேனல்கள் வழங்குவதை நிறுத்தக் கூடாது' என, கட்டண சேனல் ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு, மாநில அரசு தெரிவித்து உள்ளது. 

         தமிழக அரசு கேபிள், 'டிவி' நிறுவன மேலாண் இயக்குனர் குமரகுருபரன், அனைத்து கட்டண சேனல் ஒளிபரப்பு நிறுவனங்களுக்கும் எழுதிஉள்ள கடிதம்:
டிச., 31க்குள், 'செட்டாப் பாக்ஸ்' அடிப்படையிலான, டிஜிட்டல் ஒளிபரப்பிற்கு மாறாத கேபிள் ஆப்பரேட்டர்களுக்கு,

தேசிய கல்வி நாள் கொண்டாட உத்தரவு

  'அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில், நவ., 11ல், தேசிய கல்வி நாள் கொண்டாட வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

         மத்திய முன்னாள் கல்வி அமைச்சரும், சுதந்திர போராட்ட வீரருமான, மவுலானா அபுல்கலாம்

Street Light Gopinath - Making of SHOCKS PUPPET (காலுறை பொம்மை)


Street Light Gopinath - Making of STRING PUPPET (நூல் பொம்மை)


Street Light Gopinath - Making of PAPER BAG PUPPET (காகிதப்பை பொம்மை)


Street Light Gopinath - Making of FINGER PUPPET 01 (விரல் பொம்மை)


Street Light Gopinath - Making of ANIME STICK PUPPET (அசையும்குச்சிபொம்மை)


Street Light Gopinath - Making of SPEAKING PUPPET (பேசும் பொம்மை)


Street Light Gopinath - Making of ROD PUPPET


Street Light Gopinath - Making of SHADOW PUPPET


தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்ட தொகை, இறந்த, பணி ஓய்வு பெற்ற, பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர்களுக்கு கணக்கு முடிக்க, இணைக்க வேண்டிய ஆவணங்கள் சார்பான கடிதம்


6,7,8ம் வகுப்பு தமிழ் ஆசிரியர்களுக்கு இன்று செக் CEO அதிரடி.

யு.ஜி.சி., தடைக்கு ’ஸ்டே’ வாங்கியது பெரியார் பல்கலை...

சேலம், பெரியார் பல்கலையில், 2001ல்,தொலைதூர கல்வி மையமான பிரைடு துவங்கப்பட்டது.அதில், இளங்கலை, முதுகலை, டிப்ளமோ,சான்றிதழ் உள்ளிட்ட,150 படிப்புகள் வழங்கப்படுகின்றன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 188, அண்டை மாநிலங்களில், 105,அண்டைநாடுகளில், மூன்று என, 295 படிப்பு மையங்கள் செயல்படுகின்றன.

Street Light Gopinath - Making of MASK PUPPET


ஆசிரியர்களை வேறு பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது: சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு உத்தரவு.

ஆசிரியர் பணிக்கான வழிகாட்டி நெறிமுறைகள் தொடர்பாக சிபிஎஸ்இ செயலாளர் ஜோசப் இம்மானுவேல் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளின் முதல்வர் களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பொம்மலாட்ட வீடியோ Street Light Gopinath - Making of FINGER PUPPET


மத்திய அரசு ஊழியர்களுக்கான 2% அகவிலைப்படி உயர்வு ஆணை

வருந்துகிறோம்- நாகப்பட்டிணம் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்டச்செயலாளர்திரு வி அருள்வில்லியம் அவர்கள் இயற்கை எய்தினார்

    வருந்துகிறோம்- நாகப்பட்டிணம் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்டச்செயலாளர்தி ரு வி அருள்வில்லியம் அவர்கள் இன்று அதிகாலை மாரடைப்பின் காரணமாக  இயற்கை எய்தினார்.
அவரது இழப்பு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணிக்கு பேரிழப்பாகும்,அன்னாரை இழந்து வாடும்குடும்பத்தார் மற்றும் உறவினர்கள்,நண்பர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலினை தமிழ்நாடுஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு தெரிவித்துக்கொள்கிறது

தத்தளிக்கும் அரசு ஊழியர்கள்

அனைத்துச் சான்றிதழ்களிலும் கல்வி முறையை குறிப்பிட வேண்டும்: யுஜிசி புதிய வழிகாட்டுதல்.

 பல்கலைக்கழகங்கள் சார்பில் மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து விதமானச் சான்றிதழ்களிலும், அவர் எந்த முறையில்.பட்டப்படிப்பை மேற்கொள்கிறார் என்பதைக் குறிப்பிட வேண்டும் என புதிய வழிகாட்டுதலை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டுள்ளது.
             அதாவது, திறந்தநிலைப் பல்கலைக்கழகம் அல்லது தொலைநிலைக் கல்வி முறையில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்துச் சான்றிதழ்களிலும் திறந்தநிலைக் கல்வி முறை அல்லது தொலைநிலைக் கல்வி முறை என்பதைக் குறிப்பிட வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

SR - Online Entry by Treasury - கருவூல அதிகாரி தகவல் கடிதம்


SSA - அனைத்து தொடக்க/நடு/உயர்/மேல்நிலைப் பள்ளி மாணர்வர்களுக்கு CRC அளவில் அறிவியல் காண்காட்சி - சிறந்த படைப்புக்கு ரூ.400/- ம், சிறந்த பள்ளிக்கு கேடயமும் பரிசு - CRC க்கு ரூ.10000/- நிதி அனுமதித்து 25.11.2016 குள் நடத்தி முடிக்க இயக்குனர் உத்தரவு

CLICK HERE - CRC LEVEL SCIENCE EXHIBITION FOR ALL PRI/UPP.PRIM/HS/HSS - DIR PROC & DETAILS

பள்ளி மாணவரை ஆதார் மூலம் பின்தொடர மத்திய அரசு முடிவு.

நாடு முழுவதிலும் பள்ளி மாணவர் களை ஆதார் எண் மூலம் தீவிர மாகப் பின்தொடர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம், மாணவர்கள் படிப்பை பாதியில் விடுவதைத் தடுக்கவும் திட்டமிடப் பட்டுள்ளது. நாடு முழுவதிலும் அரசு மற்றும் தனியார் நிர்வாகத்தின் கீழ் சுமார் 15 லட்சம் பள்ளிகள் உள்ளன. 
இவற்றில் சுமார் 26 கோடி மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.

நவ.,5ல் தேசிய திறனாய்வுத் தேர்வு!

அகில இந்திய அளவில் நடைபெறும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு வரும் நவ.,5ம் தேதி நடைபெற உள்ளது.

இத்தேர்வுக்கு  6,580  பள்ளிகளிலிருந்து சுமார்  1,55,657 மாணவ, மாணவியர்கள் 449 தேர்வு மையங்களில் தேர்வு எழுத உள்ளனர். தேர்வுக்கான நுழைவுச்சீட்டு 01.11.2016 முதல் www.tngdc.gov.in என்ற இணையதளம் மூலம் பள்ளியின் தலைமையாசிரியர் அல்லது முதல்வர் பதிவிறக்கம் செய்து தேர்விற்கு விண்ணப்பித்த மாணவ, மாணவியர்களுக்கு வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சி, தஞ்சை, திருப்பரங்குன்றம் தொகுதிகளில் நவ. 19 பொது விடுமுறை அறிவிப்பு

இடைத்தேர்தல் நடைபெறும் இம்மூன்று தொகுதிகளிலும் நவ.19 வாக்குப்பதிவு நடைபெறுவதால் விடுமுறை

அரசு விடுமுறை அரசாணை தாமதம் : காலண்டர் தயாரிப்போர் அதிருப்தி

அடுத்த ஆண்டுக்கான, அரசு பொது விடுமுறை நாட்கள் குறித்த அரசாணை வெளியிடப்படாததால், காலண்டர் அச்சிடுவோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
           ஆண்டுதோறும், தமிழக அரசு விடுமுறை நாட்கள் குறித்த விபரம், அரசாணையாக வெளியிடப்படும். அதன் அடிப்படையில், காலண்டர் தயாரிப்போர், காலண்டரில் அரசு விடுமுறை நாட்களை குறிப்பர்.

CRC NEWS*: *தூத்துக்குடி மாவட்ட PRIMARY CRC* *5 ம் தேதிக்கு பதிலாக 12 தேதிக்கு மாற்றம்* 5 ந்தேதி திருச்செந்தூர் கந்தசஷ்டி விழா தூத்துக்குடி மாவட்ட உள்ளூர் விடுமுறை காரணமாக அறிவிக்கப்பட்டுள்ளது

தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 39 பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளது.அரசு பள்ளிகளின் நிலை குறித்து உயர்நீதிமன்ற நீதிபதி வேதனை..

TNPSC:Instructions to Candidates for Departmental Examinations - newly updated | துறைத்தேர்வு எழுதுவோர் கவனத்திற்கு ...


CLICK HERE TO DOWNLOAD - TNPSC:Instructions to Candidates for Departmental Examinations - newly updated

RTI Letter - அரசு நிதி உதவி பெரும் பள்ளிகளில் - பள்ளி சார்ந்த செயல்பாடுகளுக்காக ஆசிரியர்களுக்கு Memo வழங்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது-


ரேஷன் கார்டில் குடும்ப தலைவராக பெண்களை நியமிக்க... திட்டம்!: அரிசி வாங்குவோரை இரண்டாக பிரிக்கவும் தமிழக அரசு முடிவு

  ரேஷன் கார்டில், குடும்ப தலைவராக, ஆண் களுக்கு பதில் பெண்களை நியமிக்க திட்டமிடப் பட்டு உள்ளது. 
            அத்துடன், அரிசி வாங்குவோரை இரண்டாகப் பிரிக்கவும்,தமிழக அரசின் உணவுத் துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் மொத்தம், 2.05 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. கடந்த, 1ம் தேதியில் இருந்து, உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, ரேஷன் கார்டுகளை, 'முன்னுரிமை மற்றும் முன்னுரிமை அல்லா தது' என்று பிரிக்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.

பள்ளி மாணவர்களில் 60 சதவீதம் பேருக்கு சொத்தைப் பல் பிரச்னை

தனியார் பள்ளி மாணவர்களை ஒப்பிடும்போது, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் 60 சதவீதம் பேருக்குசொத்தைப் பல் பிரச்னை உள்ளதென தாகூர் பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் சித்ரா ஆர்.சந்திரன் கூறினார்.

கல்வி உதவித்தொகை: அவகாசம் நீட்டிப்பு

சிறுபான்மையின மாணவ, மாணவியர், கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க, நவ., 30 வரை, அவகாசம் தரப்பட்டு உள்ளது. தமிழகத்தில், அரசு பள்ளிகள், அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில், முதல் வகுப்பு முதல், பிஎச்.டி., படிப்பு வரை படிக்கும், சிறுபான்மையின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.

SSA:35 ஆயிரம் ஆசிரியர்களுக்கு  ஆங்கிலத் திறனை மேம்படுத்த பயிற்சி.

ஆங்கில மொழித்திறனை மேம்படுத்த பிரிட்டிஷ் கவுன்சில் பயிற்சியாளர்கள் மூலம் 35 ஆயிரம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று அனைவருக்கும் கல்வி திட்ட (எஸ்எஸ்ஏ) மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி தெரிவித்தார். 
பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் யுனிசெஃப் உதவியுடன் அரசு பள்ளி ஆங்கில ஆசிரியர்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்தும் சிறப்புப் பயிற்சி திட்டத்தை எஸ்எஸ்ஏ மாநில திட்ட இயக்குநரகம் மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக வட்டார வள மைய (பிஆர்டி) ஆங்கில ஆசிரியர் பயிற்றுநர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்கள் மூலமாக இதர ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிப்பதுதான் இந்த திட்டம்.

அனுமதியின்றி போராட்டம் : ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்'

முன்னறிவிப்பின்றி போராட்டம் நடத்தியதாக, இரண்டு ஆசிரியர்களை, தொடக்க கல்வித் துறை, 'சஸ்பெண்ட்' செய்துள்ளது. 

 கோவை மாவட்டம், சூலுார் தொடக்க கல்வி அலுவலகத்தில், அக்., 28ல், 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் கேட்டு, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள உதவி தொடக்க கல்வி அதிகாரி, பள்ளிகளில் நேரடி ஆய்வில் ஈடுபட்டிருந்த போது, இந்த போராட்டம் நடந்ததால், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

CPS காலாவதியானது வல்லுனர் குழு : பென்ஷன் திட்டம் என்னாச்சு?

  புதிய பென்ஷன் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுனர் குழு காலாவதியானதால் அரசு ஊழியர்கள் கலக்கமடைந்துள்ளனர்.
         தமிழகத்தில் 2003 ஏப்.,1 முதல் புதிய பென்ஷன் திட்டம் அமுலில் உள்ளது. இதுவரை 4.23லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தனர். அவர்களிடம் வசூலித்த பென்ஷன் சந்தா, அரசு பங்கு தொகை என, 8,543 கோடி ரூபாயை ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையத்திடம் தமிழக அரசு செலுத்தவில்லை.

இதனால் பணியில் இறந்தோரின் குடும்பத்தினர், ஓய்வு பெற்ற ஊழியர்கள் பணம் பலன் பெற முடியாமல் தவிக்கின்றனர்.புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பிப்ரவரியில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் தொடர் போராட்டம் செய்தனர்.பென்ஷன் திட்டத்தை ஆய்வு செய்ய ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலாநாயர் தலைமையில் 5 பேர் கொண்ட வல்லுனர் குழுவை பிப்., 26ல் அரசு அமைத்தது. அந்த குழு ஒருமுறையே கூடியது. அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களைச் சந்திக்காமலேயே, அந்த குழுவிற்கான இயங்கும் காலம் ஜூன் 25 ல் முடிந்தது.இப்பிரச்னை சட்டசபையில் எழுப்பப்பட்டதால், குழுவின் இயங்கும் காலம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.

உறுப்பினர்களாக இருந்த பார்த்தசாரதி, லலிதா சுப்ரமணியம் நீக்கப்பட்டு, சென்னை 'மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ்' நிறுவன பேராசிரியர் பிரிஜேஸ் சி. புரோகித் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்த குழு செப்., 15, 16 மற்றும் செப்., 22 ல் அரசு ஊழியர், ஆசிரியர் அமைப்புகளை சந்தித்தது. அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில் அக்., 27 வுடன் அக்குழுவின் இயங்கும் காலம் முடிந்தது. இதனால் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்து 4.23 லட்சம் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் கூறியதாவது: வல்லுனர் குழு அமைத்தது கண்துடைப்பு போல் உள்ளது. அக்., 27 ல் குழு இயங்கும் காலம் முடிந்தது. அக்குழு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ததா (அ) குழு மீண்டும் நீடிக்கப்பட்டதா என்பது குறித்த அறிவிப்பு இல்லை. குழு மீது நம்பக தன்மை இல்லாததால் அரசு ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர், என்றனர்.

நாகை மாவட்டத்திற்கு 04.11.16 வெள்ளி அன்று உள்ளூர் விடுமுறை

நாகை மாவட்டத்திற்கு 04.11.16 வெள்ளி அன்று உள்ளூர் விடுமுறை...அதை ஈடு செய்யும் விதமாக 12.11.16 அன்று முழு வேலை நாளாகும்.- மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு....காரணம் சிக்கல் சிங்காரவேலர் கோவில் திருத்தேரோட்டம்

எந்த வசதியும் இன்றி எப்படி தரமான கல்வி தரமுடியும்? பள்ளிகளில் கழிப்பறை கூட இல்லை கற்காலத்தில் இருக்கிறீர்களா?

அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி கூட இல்லை. கற்காலத்தில் இருக்கிறீர்களா என தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை சரமாரி கேள்வி எழுப்பியுள்ளது. மதுரையைச் சேர்ந்த ஆனந்தராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் 2014ல் தாக்கல் செய்த மனு: தமிழகத்திலுள்ள 5,720 அரசு பள்ளிகளில் போதிய கழிப்பறை வசதி இல்லையென மத்திய அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதள தகவல்படி 1,442 பெண்கள் பள்ளிகளிலும், 4,278 ஆண்கள் பள்ளிகளிலும் கழிப்பறை வசதி இல்லை. 15.45 சதவீத அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி இல்லை. 2,080 பள்ளிகளில் கழிப்பறை இருந்தும் பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. கிராமப்புற பகுதிகளில் படிக்கும் மாணவர்கள் பாதுகாப்பற்ற நிலையில் திறந்தவெளியில் செல்லும் நிலையே உள்ளது. எனவே, தமிழகத்திலுள்ள பள்ளிகளில் கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகளை செய்து தர உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.நாகமுத்து, எம்.வி.முரளிதரன் ஆகியோர் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வக்கீல் கமிஷனர்கள் குழுவின் ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், தஞ்சை, திண்டுக்கல் மற்றும் மதுரை மாவட்ட கிராமப்பகுதிகளிலுள்ள 34 பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. பெரும்பாலான பள்ளிகளில் கழிப்பறை பராமரிப்பின்றி, பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. தண்ணீர் வசதி இல்லை. துப்புரவு பணிகளை மேற்கொள்ள ஆட்கள் இல்லை. பள்ளிகளுக்கான மின் கட்டணத்தை ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரும் செலுத்தும் நிலை உள்ளது. பெரும்பாலான பள்ளிகளில் மாணவிகளுக்கு நாப்கின் கிடைப்பதில்லை. தரமான நாப்கின்கள் வழங்கப்படுவதில்லை. பெரும்பாலான பள்ளிகளில் சுற்றுச்சுவர் மற்றும் கேட் வசதி இல்லை. இதனால் இரவு நேரங்களில் மது அருந்துவதற்கு பலர் பயன்படுத்துகின்றனர். பள்ளி பொருட்கள் திருடு போகும் நிலை உள்ளது என கூறப்பட்டிருந்தது.

இதை படித்துப் பார்த்த நீதிபதிகள், ‘பொதுவாக குறைந்தபட்ச கூலியாக நாளொன்றுக்கு ரூ.600 வழங்கப்படுகிறது. ஆனால் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்ளும் துப்புரவு பணியாளருக்கு மாதம் ரூ.1,200 கொடுத்தால் எப்படி வேலைக்கு வருவார்கள். இன்னும் கற்காலத்திலேயே உள்ளீர்கள். நாடு சுதந்திரம் அடைந்து 70வது ஆண்டில் இருக்கிறோம். ஆனால் இன்னும் கழிப்பறை வசதி கூட கிடைக்கவில்லை. 3 மாவட்டங்களிலேயே இந்த நிலை என்றால், தமிழகம் முழுவதும் இப்படித்தானே இருக்கும்? கட்டிடத்தை கட்டினால் மட்டும் போதுமா, யார் பராமரிப்பது? இதற்கென ஆட்கள் வேண்டாமா? தண்ணீர் வசதி செய்து தரக்கூடாதா? உள்ளாட்சி அமைப்பிலிருந்து தண்ணீர் வசதி பெறலாமே. அரசு பள்ளிகளில் மின்சார பயன்பாடு மிகவும் குறைவுதான். மின்விசிறி, ஏசி போன்ற வசதிகள் இல்லை. ஆய்வகம் மற்றும் மின் மோட்டார் உள்ள பள்ளிகளில் மட்டுமே குறைந்தளவு மின்சாரம் பயன்படுகிறது. ஏன் அரசு பள்ளிகளுக்கு அரசின் சார்பில் இலவச மின்சாரம் வழங்கக்கூடாது. எந்த வசதியும் இல்லாமல் எப்படி தரமான கல்வி வழங்க முடியும். அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டு பாருங்கள். ஏன் பள்ளி கல்வித்துறை செயலர் ஆஜராகி விளக்கமளிக்க கூடாது என சரமாரி கேள்வி எழுப்பினர்.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, ‘தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அரசிடமிருந்து விளக்கம் கேட்டு தெரிவிக்கப்படும்’ என்றார். இதையடுத்து, தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் கழிப்பறை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற என்ன நடவடிக்கை எடுக்கப்படும். எவ்வளவு காலத்தில் பணிகள் நிறைவேற்றப்படும். உதவியாளர், வாட்ச்மேன், துப்புரவு பணியாளர் உள்ளிட்ட காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்து பள்ளிகல்வித்துறை செயலரின் சார்பில் திட்டவட்டமான அறிக்கையை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை நவ. 8க்கு தள்ளி வைத்தனர்.

ஆதார் அட்டை இல்லாததால் உதவித்தொகைக்கு சிக்கல்

ஆதார் அட்டை இல்லாததால் உதவித்தொகை பெற முடியாத நிலை மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. மத்திய அரசின் திட்டங்கள், உதவித்தொகை பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

10ம் வகுப்பு, பிளஸ் 2 துணை தேர்வு; இன்று 'ரிசல்ட்'

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள், இன்று(நவ.,3) வெளியாகின்றன. http://www.dge.tn.nic.in 
துணைத் தேர்வு:
பிளஸ் 2 பொதுத் தேர்வு, மார்ச்சில் நடக்கும். பின், ஜூன் - ஜூலையில் சிறப்பு உடனடி துணைத் தேர்வும்; செப்., - அக்., மாதங்களில், தனித் தேர்வர்களுக்கான துணைத் தேர்வும் நடக்கும். செப்டம்பரில் நடந்த, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான துணைத் தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்படுகின்றன.

அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி : அறிக்கை தர அரசுக்கு உத்தரவு

அரசு பள்ளிகளில் கழிப்பறை உட்பட அடிப்படை வசதிகளை மேம்படுத்த எத்தகைய உறுதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்பது குறித்து, அரசு திட்ட அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்' என, உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. 

Tamilnadu Government Holidays 2017 - List & 2017 - Calendar

https://lh3.googleusercontent.com/-oTk5BYnu6F0/WBnaZ6zmAaI/AAAAAAAALDw/DB5LCifReXY/s640/IMG_20161102_175142.jpg

Directorate of Minorities Welfare - Last date extended upto 30th November 2016 for

தமிழ்நாட்டில் 12485 தொடக்கப்பள்ளிகளில் தலைமைஆசிரியர்கள் கிடையாது தகவல்அறியும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல்!!!!

பள்ளிகளில் 'ஆதார்' பதிவு: 15ல் மீண்டும் துவக்கம்

அரசு பள்ளி மாணவ, மாணவியருக்கு, 'ஆதார்' அட்டை வழங்கும் பணி, நவ., 15ல் மீண்டும் துவங்குகிறது. இதுகுறித்து, அரசு கேபிள், 'டிவி' நிறுவன அதிகாரிகள் கூறியதாவது:

குழந்தைக்கு தினமும் சொல்லவேண்டிய 8 மந்திரங்கள்!

குழந்தைகளைத் தட்டிக் கொடுத்து; `ஷொட்டு' கொடுத்து வளர்க்க வேண்டும். பாராட்டி, ஊக்குவித்து வளர்க்கப்படும் குழந்தை தன்னம்பிக்கையோடு வளர்கிறது; தனித்துவம் பெறுகிறது. எதிர்காலத்தில் சாதனை படைக்கிறது. மாறாக, எப்போதும் குறை சொல்லி, தலையில் கொட்டி வளர்ப்பது, குழந்தைகளைக் குறுகவைத்துவிடுகிறது. 

இதைப் படிக்கலைனா படிச்சிருங்க

``அந்த பையனை பாரு... எப்பவும் ஃபர்ஸ்ட் ரேங்க். நீயும் இருக்கியே!”, ``எப்பப் பாரு விளையாட்டு... நீயெல்லாம் எங்கே முன்னுக்கு வரப்போறே?” இப்படி எப்போதும் அடுத்த குழந்தைகளோடு ஒப்பிட்டு, மட்டம் தட்டி, குறைகூறி, குற்றம் சொல்லிச் சொல்லி குழந்தைகளின் தனித்திறமையை மங்கிப்போகச் செய்துவிடுகிறார்கள் பலர். குழந்தைகளின் இயல்பான ஈடுபாட்டில் இருந்து வேறெங்கோ திசைதிருப்பிவிடுகிறார்கள். அதனாலேயே குழந்தைகள் பிடிவாதக்காரர்களாக, தனித்திறமையோ, தன்னம்பிக்கையோ இல்லாதவர்களாக வளர்கிறார்கள். நம்மைப்போலத்தான் குழந்தைகளும். நம் எல்லோருக்குமே ஏதோ ஓர் அங்கீகாரம் தேவையாக இருக்கிறது. ஒரு சின்ன பாராட்டு, மலையளவு தெம்பைத் தந்துவிடும்; அதுவேதான் குழந்தைகளுக்கும். 
குழந்தைகளிடம் நாம் பேசவேண்டியவை, பேசக் கூடாதவை, அவர்கள் பயன்படுத்தும் பொருட்களில் கவனமாக இருத்தல் எனச் சில விஷயங்கள் இருக்கின்றன. அதை முறையாகக் கடைப்பிடித்தாலே போதும்... குழந்தைகள் உங்களை மட்டுமல்ல, தங்களையும் உணர்ந்துகொள்வார்கள்.

குழந்தைகளுக்கு அன்றாடம் சொல்லவேண்டிய எட்டு விஷயங்கள் இங்கே... 

1. இப்படித்தான் நடந்துக்கணும் செல்லம்!

விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை பெரியவர்களுக்கே இருப்பதில்லை. குழந்தைகளுக்கு இருந்தால் அது அபூர்வம், பாராட்டப்படவேண்டிய விஷயம் அல்லவா! அம்மா தன் எட்டு வயது மகளோடு நகரப் பேருந்தில் செல்கிறார். இருவருக்கும் உட்கார இருக்கை கிடைத்துவிடுகிறது. அடுத்த நிறுத்தத்தில், ஒரு தந்தை தன் நான்கு வயது மகனோடு பேருந்தில் ஏறுகிறார். கூட்ட நெரிசல். நிற்பதற்கே தள்ளாடுகிறான் அந்தச் சிறுவன். அப்போது, அந்தச் சிறுமி, “இங்கே வந்து உட்காருப்பா” என்று நகர்ந்து, தன் இருக்கையில் கொஞ்சம் இடம் கொடுக்கிறாள். பேருந்தில் இருந்து இறங்கியதும் அந்தத் தாய், மகளின் தலையை வருடி, “இப்படித்தான் நடந்துக்கணும் செல்லம்!” என்கிறார். குழந்தைகளின் நடத்தையில் நல்ல விஷயங்கள் தென்படும்போது சொல்கிற இந்த வார்த்தைகள் அவர்களை உற்சாகம் கொள்ளவைப்பவை; நன்னடத்தைப் பக்கம் அவர்களைத் திசை திருப்புபவை.  
2. ரொம்ப சந்தோஷமா இருக்குடா பட்டு! 

குழந்தை மாதாந்திரத் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கியதாக இருக்கட்டும்; பள்ளி ஃபுட்பால் போட்டியில் கலந்துகொள்ள பெயரைக் கொடுத்துவிட்டு வந்ததாக இருக்கட்டும்; அவ்வளவு ஏன்... பிரேயரில் அன்றையச் செய்திகளை வாசித்ததாகவே இருக்கட்டும்... “ரொம்ப சந்தோஷமா இருக்குடா பட்டு!” என மனமாரச் சொல்லுங்களேன். இது வெறும் வாசகம் அல்ல; அவர்களுக்குத் தங்கள் மேலான மதிப்பைக் கூட்டும் மாமந்திரம். தொடர்ந்து, இதுபோலப் பல செயல்களில் ஈடுபட வேண்டும் என்கிற உத்வேகம் அவர்களுக்கு எழும்.  

3. உன்னை நினைச்சு ரொம்பப் பெருமைப்படுறேன்!

“அப்பா, டிராயிங் போட்டியில எனக்கு இரண்டாவது பரிசு” என்று வந்து நிற்கிறது குழந்தை. பள்ளி, டியூஷன், ஹோம்வொர்க்... என அன்றாட வேலை பளுக்களைத் தாண்டி குழந்தையின் தனித் திறமைக்குக் கிடைத்த அங்கீகாரம் அது. அப்போது மறக்காமல், “உன்னை நினைச்சு ரொம்பப் பெருமைப்படுறேன் கண்ணா!” என்று நல்ல வார்த்தைகளைச் சொல்லிப் பாராட்ட வேண்டும். ஒரு நல்ல செயலைச் செய்து முடிக்கும்போது அவர்களுக்கு இது தேவையாக இருக்கிறது. 

4. உன்னால மட்டும்தான்டா இது முடியும்! 

எல்லா வேலைகளையும் எல்லோராலும் சிறப்பாகச் செய்ய முடியாது. ஆளுமைப் பண்போ, விளையாட்டில் சூரத்தனமோ, ஞாபகத்திறனில் அபாரத் தன்மையோ... ஏதோ ஒரு ஸ்பெஷல் அம்சம் குழந்தையிடம் இருக்கலாம். அப்படி ஒரு காரியத்தை அவர்கள் செய்து முடிக்கும்போது, ``உன்னால மட்டும்தான்டா இது முடியும்” எனச் சொல்லிப் பாராட்டுவது, தங்கள் தனித்தன்மையே பலம் என்பதை அவர்கள் உணர்ந்துகொள்ள உதவும். 

5. நான் உன்னை முழுமனசோட நம்புறேன்!

நம்பிக்கை ஏற்படுத்தும் தாக்கம் அபாரமானது. குழந்தையை மனதார நம்புங்கள். அதை அவர்களிடம் தெரிவிக்கவும் செய்யுங்கள். நம்மைப் பெற்றோர் நம்புகிறார்கள் என்கிற எண்ணத்திலேயே தவறு செய்யத் துணிய மாட்டார்கள். நம்பிக்கை என்ற அடித்தளத்தை இடுவது குழந்தைகளை நேர்மையான மனிதனாக வளர்க்கும். 

6. இதை நீ செய்வேங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு! 

தயக்கம் பல நேரங்களில் பெரிய தடை; ஒரு நல்ல தொடக்கத்தையே முடக்கிப்போட்டுவிடும் ஆற்றல் அதற்கு உண்டு. புதிதாக ஒன்றைக் கற்றுக்கொள்ளத் தொடங்கும்போது... அது மியூஸிக் கிளாஸோ, கராத்தே பயிற்சியோ, நீச்சலோ... குழந்தை தயங்கினால், அதை உடைக்க வேண்டும். ``இதை நீ செய்வேங்கிற நம்பிக்கை எனக்கு இருக்கு!” போன்ற வாசகம், அவர்களுக்குத் தாங்கள் எவ்வளவு மதிப்புக்குரியவர்கள், தன் மேல் பெற்றோர் எவ்வளவு மதிப்பு வைத்திருக்கிறார்கள் என்பதை உணர்த்தும். 

7. இதை செஞ்சு முடிச்சிடுவேன்னு எனக்குத் தெரியும்! 

`குருவி தலையில் பனங்காயை வைப்பதுபோல...’ என ஒரு பழைய பழமொழி உண்டு. இன்றைய பிள்ளைகளின் பாடச்சுமை என்பது அப்படித்தான். இந்தச் சூழலில் குழந்தைகள் செய்கிற ஒவ்வொரு செயலையும் பாராட்டி, அவர்களை ஊக்குவிப்பது மிக அவசியம். இரவு 9 மணி வரை படித்துவிட்டு, குழந்தை “அம்மா... நாளை டெஸ்ட்டுக்கு ரெடியாயிட்டேம்மா!” என்று சொல்கிறது. அப்போது, “வெரிகுட்! நீ படிச்சு முடிச்சிடுவேன்னு எனக்கு நல்லாத் தெரியும்!” என்று அவர்கள் ஒருபோதும் நம்பிக்கை இழக்க முடியாதபடிக்கு சொல்லி உற்சாகப்படுத்தவேண்டியது மிக அவசியம். 
8. இதை மறக்கவே மாட்டேன். ரொம்ப நன்றிடா செல்லம்! 

பிறந்த நாள், திருமண நாள் போல குழந்தைகளுக்கும் சில தினங்கள் மறக்க முடியாதவையாக இருக்கும். ஓட்டப் பந்தயத்தில் முதலாவதாக வந்த தினம், செஸ் போட்டியில் சாதனை படைத்த நாள், பரீட்சையில் நல்ல மதிப்பெண் பெற்ற ரிசல்ட் வந்த தினம்... எதுவாகவும் இருக்கட்டுமே! அதைக் குறித்து வைத்திருந்து, குழந்தைகளிடம் அதைப் பகிர்ந்துகொள்வதை வழக்கமாக வைத்துக்கொள்வது நல்லது. “இதை மறக்கவே மாட்டேன். ரொம்ப நன்றிடா செல்லம்!” என்கிற வாசகம், அந்த நாளை அவர்களுக்குத் தனிச்சிறப்புள்ளதாக மாற்றிவிடும்

TRB - 38 ஏ.இ.இ.ஓ. விரைவில் நேரடி நியமனம்

தொடக்கக் கல்வித்துறையில் உதவி தொடக்கக் கல்விஅலு வலர் (ஏ.இ.இ.ஓ.) பணியிடங்கள் 60 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும், 40 சதவீதம் நேரடித் தேர்வு மூலமாகவும் நிரப்பப்படு கின்றன.

அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வுமூலமாக உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ஆகின்றனர். சம்பளப்பட்டியல் தயாரிப் பது, பள்ளிகளில் வருடாந்திர ஆய்வு மேற்கொள்வது, ஆசிரியர் களுக்கு விடுமுறை, ஈட்டுவிடுப்பு சரண்டர், வங்கிக் கடன்,பொது வருங்கால வைப்புநிதி கணக்கில் (ஜிபிஎஃப்) முன்பணம்போன்றவற்றுக்கு ஒப்புதல் அளிப்பது முதலான பணிகளை அவர்கள்மேற்கொள்கிறார்கள்.

நேரடி உதவி தொடக்கக் கல்வி அலுவலர் நியமனமுறை முதல்முறையாக 2009-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தஆண்டு 67 பேரும் தொடர்ந்து 2011-ல் 34 பேரும் நேரடியாக உதவிதொடக்கக் கல்வி அலுவலர்களாக தேர்வு செய்யப்பட்டனர். கடந்த 5ஆண்டுகளாக நேரடி நியமனம் எதுவும் இல்லை.

இந்த நிலையில், 38உதவி தொடக்கக் கல்வி அலுவலர் களை நேரடியாக தேர்வு செய்ய,ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் பட்டியல் கொடுக்கப்பட்டிருப்பதாகதொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் தெரிவித்தார். நேரடிஉதவி தொடக்கக் கல்வி அலுவலர் பணியைப் பொருத்த வரையில்சம்பந்தப்பட்ட பாடத்தில் இளங்கலை பட்டமும், பிஎட் பட்டம் பெற்றவர்கள்இதற்கான போட்டித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 35ஆகும். எஸ்சி, எஸ்டி வகுப்பினருக்கு வயது வரம்பு 40 ஆகநிர்ணயிக்கப்பட்டுள்ளது.


web stats

web stats