முன்னாள் பிரதமர் இந்திராவின் நினைவு நாளையொட்டி, இன்று தேசிய உறுதி ஏற்பு கடைபிடிக்க, பள்ளி, கல்லுாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்திரா மறைந்த தினமான, அக்., 31ஐ,
'ராஷ்ட்ரீய சங்கல்ப் திவாஸ்' என்ற தேசிய உறுதி ஏற்பு நாளாக, மத்திய அரசு கடைபிடித்து வருகிறது. இந்நாளில், பயங்கரவாதம், மத, இன வேற்றுமைக்கு எதிராக, உறுதி மொழி எடுக்கப்படுகிறது.இதையொட்டி, இன்று அனைத்து பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகளில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், தேசிய ஒற்றுமை உறுதிமொழி எடுத்து கொள்ள அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
No comments:
Post a Comment