Labels
- .
- 17 வது மாநில மாநாடு-
- 7 th TN pay comm
- AADHAR
- ANDROID APP
- BED
- CCE SYLLABUS
- CEO PROCEDINGS
- CM CELL REPLY
- COURT NEWS &JUDGEMENT COPY
- CPS
- DEE
- Departmental test
- DSE
- election commision
- EMIS
- EMPLOYMENT NEWS
- ENGENEERING
- EXAM BOARD
- FORMS
- G.O
- go
- GPF
- I.T
- IGNOU
- JACTTO GEO
- jeya
- mbbs
- NEWS PAPER POSTS
- nmms
- PAARAATU
- PAY COMMISSION
- PAY DETAIL
- Pay Detail download
- pedagogy
- PENTION
- RESULTS
- RTE
- RTI
- SCERT
- scholarship
- SLAS
- SSA
- TAMIL FONTS
- TEACHING TIPS
- TET
- TETOJAC
- TNPSC
- TPF Closure
- TPF/CPS ஆசிரியர் அரசு ஊழியருக்கு இலட்சக் கணக்கில் வட்டி இழப்பு. ஒரு கணக்கீடு.
- TRANSFER-2015
- TRANSFER-2016
- TRANSFER-2018
- TRB
- UGC
- university news
- ஆங்கிலம் அறிவோம்
- ஆசிரியர் பேரணி
- இளைஞரணி மாநாடு-2017
- கட்டுரை
- கணிதப்புதிர்
- கூட்டணிச்செய்திகள்
- தமிழ்நாட்டு இயக்க வரலாறு-புத்தகம்
- பொது அறிவு செய்திகள்
- பொதுச்செயலரின் புகைப்படங்கள்
- மருத்துவக்குறிப்பு
- விடுப்பு விதிகள்
- வீடியோ பாடங்கள்
- ஜாக்டோ
WHAT IS NEW? DOWNLOAD LINKS
- அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் NHIS :-2017 CARD Download
- How to know Annual income statement pay slip, pay drawn particulars?
- TPF/CPS /GPF சந்தாதாரர்கள் ஆண்டு முழுச் சம்பள விவரங்கள் அறிய
- Income Tax -2018 calculator-(A4-2page with form16)
டான்சி நிறுவனத்தில்: இளநிலை உதவியாளர், கணக்காளர் காலியிடத்திற்கு மாநில அளவில் பரிந்துரை
26ம் தேதி குரூப் 2 முதல் நிலை தேர்வு-ஹால்டிக்கெட் இண்டர் நெட்டில் வெளியீடு
திருக்குறளை தனி பாடமாக்க கோரிய வழக்கில் பள்ளி கல்வித் துறை இயக்குநரை ஐகோர்ட் தாமாக முன் வந்து எதிர் மனுதாரராக சேர்த்து நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31 கடைசி நாள்
"சம்பளம், வீடு மூலம் வருமானம் பெறுவோர், தனியாக தொழில் செய்வோர்
என தணிக்கைக்கு உட்படாத வகையில் வருவாய் பெறுவோர் வரும் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
தணிக்கைக்கு உட்பட்டு வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்வோர் வரும் செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் கணக்கைத் தாக்கல் செய்ய வேண்டும்.
எளிய படிவம்: மாத ஊதியம், ஒன்றுக்கும் மேற்பட்ட வீடு மூலம் வருவாய் பெறுவோர் பயன்படுத்த இந்த ஆண்டு "ஐடிஆர்-2ஏ' என்ற எளிய படிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் 80 வயதுக்குக் கீழே உள்ளோர், கீழ்க்கண்ட பிரிவைச் சேர்ந்தவர்கள் கட்டாயம் மின்னணு முறையில் மட்டுமே வருமானவரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும்:-
1. ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்கும் அதிகமாக உள்ளோர்;
2. வருமான வரிப் பிடித்தத் தொகையைத் திரும்பப் பெறக் கோருவோர்;
3. ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவோர் அல்லது தொழில் மூலம் வருமானம் ஈட்டுவோர்.
அலுவலக எல்லையை தெரிந்துகொள்ள...
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வோர், தங்களது வருமான வரி அலுவலக எல்லையை "www.tnincometax.gov.in" என்ற இணையதளம் மூலம் தெரிந்து கொள்ளலாம்.
பி.எட்., மாணவர் சேர்க்கை - வெயிட்டேஜ்விதிமுறைகள் அறிவிப்பு
பலாத்காரத்திற்கு உள்ளான பெண்களுக்கு சம்பளத்துடன் கூடிய 3 மாத விடுமுறை: மத்திய அரசு அறிவிப்பு-
மாணவர்களை வேலை வாங்கிய தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட்
பள்ளிக்கல்வி - குறுவள மைய பயிற்சி - 25.07.2015 அன்று நடைபெறவுள்ள குறுவள மைய பயிற்சியில் உயர்நிலை / மேல்நிலையில் பணிபுரியும் ஆசிரியர்கள் 100% கலந்து கொள்ள இயக்குனர் உத்தரவு
ஆகஸ்டு 1ஆம் தேதி நடைபெறவிருந்த ஜாக்டோவின் மாபெரும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம், உண்ணாவிரத போராட்டமாக மாற்றம்
ஆகஸ்டு 1ஆம் தேதி நடைபெறவிருந்த ஜாக்டோவின் மாபெரும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம், உண்ணாவிரத போராட்டமாக மாற்றம்
ஆகஸ்டு 1ஆம் தேதி நடைபெறவிருந்த ஜாக்டோவின் மாபெரும் தொடர் முழக்க ஆர்ப்பாட்டம், உண்ணாவிரத போராட்டமாக மாற்றம்
சென்னை விருந்தினர் மாளிகை முன்பு காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 4 மணிவரை நடைபெறவுள்ளது.
UPPER PRIMARY CRC : 25/07/2015 அன்று உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு " Enriching Training on CCE in ALM "என்ற தலைப்பில் குருவள மைய அளவில் பயிற்சி - இயக்குனர் செயல்முறைகள்
FLASH NEWS - பள்ளிகல்வி : 2015 - 2016 கல்வி ஆண்டிற்கான உத்தேச கலந்தாய்வு அட்டவணை வெளியீடு : 29/07/2015 அன்று கலந்தாய்வு துவக்கம்
பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: இன்று முதல் தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
NMMS 2014 EXAM results
download link : NMMS 2014 EXAM results .Pdf ( size 5.MB)
number of 8th standard students from various districts in Tamilnadu have participated in the NMMS exam in different block level exam centres. Only the selected students can avail the Scholarship for continuing their studies. So, all the students are eagerly
பி.இ. சேர்க்கை: வழக்கம்போல் முன்னிலையில் மெக்கானிக்கல் பிரிவு!
ஆசிரியர்கள் நியமனத்தில் பள்ளிகளுக்கு கட்டுப்பாடு
இணைய சமநிலை அறிக்கை வெளியானது!
2015-16 க்கான 'இன்ஸ்பயர்' விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
பி.எட். கலந்தாய்வு: மீண்டும் லேடி விலிங்டன் கல்லூரியே நடத்துகிறது
பி.எட். சேர்க்கை நடைமுறைகள் வெளியீடு: பயன்பாட்டு வேதியியல் பட்டமும் சேர்ப்பு
தமிழ்நாட்டுப் பாடநூல், கல்வியியல் பணிகள் கழக செயலாளராக கார்மேகம் பொறுப்பேற்பு
RTI -2005 - பி.எஸ்.சி., பி.எட்., முடித்த பின் பி.ஏ., (ஆங்கிலம்) மூன்றாண்டுகள் படித்தவர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றபின் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியமர்த்தலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் பதில்
கோவை மாவட்ட ஆசிரியர்களுக்கு மற்றும் மாணவர்களுக்காக புதிய இணையதளம்
விருது வழங்காததால் ஆசிரியர்கள் ஏமாற்றம்
தமிழகத்தில், காமராஜர் பிறந்த நாளான ஜூலை, 15ம் நாள், கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. இதை அனைத்து அரசு பள்ளிகளிலும் விமரிசையாக கொண்டாட, கடந்த சில ஆண்டுகளாக, தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.
பள்ளிக்கல்வி - கல்வித்துறைக்கு மாணவர்களின் ஒழுக்கமற்ற செயல்களால் களங்கம் - தடுக்க மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அறிவுரைகளை வழங்க இயக்குனர் வலியுறுத்தல் - செயல்முறைகள்
மென்ஸஸ்- ஆண்களுக்கான பெண்களின் திரைப்படம்!
112 பேராசிரியர்களை நியமிக்க அண்ணா பல்கலை அறிவிப்பு
அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 13 அரசு இன்ஜி., கல்லூரிகளில், உதவிப் பேராசிரியர் உட்பட, 138 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.
இதுகுறித்து, அண்ணா பல்கலை வெளியிட்டுள்ள அறிவிப்பு: அண்ணா பல்கலையின் கட்டுப்பாட்டிலுள்ள, அரசு இன்ஜி., கல்லூரிகளில், பல பாடப்பிரிவுகளில், உதவிப் பேராசிரியர் இடங்கள் காலியாக உள்ளன.
இதில், விழுப்புரம், திருச்சி, திண்டிவனம், தூத்துக்குடி, திருக்குவளை, ராமநாதபுரம், பட்டுக்கோட்டை, பண்ருட்டி, நாகர்கோவில், காஞ்சிபுரம், திண்டுக்கல், ஆரணி, அரியலூர் ஆகிய, 13 கல்லூரிகள் மற்றும் கோவை, மதுரை மற்றும் திருநெல்வேலியிலுள்ள அண்ணா பல்கலை மண்டல கல்லூரிகளில், 112 இன்ஜி.,
உதவிப் பேராசிரியர்; 15 கல்லூரி நூலகர் பதவி; 11 உடற்கல்வி இயக்குனர் பதவிக்கு என, மொத்தம், 138 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.இதற்கான கல்வித்தகுதி உடையவர்கள், வரும் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பதிவிறக்கம் மற்றும் கல்வித்தகுதி போன்ற விரிவான விவரங்கள்,https://www.annauniv.edu/pdf/advt_faculty.pdf என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.
அண்ணா பல்கலை 'ஆன்லைன்' படிப்பு ரத்து
பல்கலைக்கழக மானியக் குழுவான - யு.ஜி.சி.,யின் எச்சரிக்கையை தொடர்ந்து, அங்கீகாரமின்றி அறிவிக்கப்பட்ட, ஆன்லைன் கம்ப்யூட்டர் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை, அண்ணா பல்கலை ரத்து செய்துள்ளது.
அண்ணா பல்கலையின் தொலைதுார கல்வி மூலம், எம்.பி.ஏ., - எம்.எஸ்சி., - எம்.சி.ஏ., படிப்புகளுக்கு, ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
இத்துடன், எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் திறந்தவெளி சாப்ட்வேர் படிப்பும், ஆன்லைனில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது.
ஆனால், 'இந்தியாவில் ஆன்லைனில் எந்த ஒரு பாடத்தையும் நடத்த, அனுமதி வழங்கவில்லை' என, யு.ஜி.சி., எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்து, அண்ணா பல்கலையின், ஆன்லைன் கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர் சேர்க்கை, திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலை 'ஆன்லைன்' படிப்பு ரத்து
பல்கலைக்கழக மானியக் குழுவான - யு.ஜி.சி.,யின் எச்சரிக்கையை தொடர்ந்து, அங்கீகாரமின்றி அறிவிக்கப்பட்ட, ஆன்லைன் கம்ப்யூட்டர் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை, அண்ணா பல்கலை ரத்து செய்துள்ளது.
அண்ணா பல்கலையின் தொலைதுார கல்வி மூலம், எம்.பி.ஏ., - எம்.எஸ்சி., - எம்.சி.ஏ., படிப்புகளுக்கு, ஆன்லைன் மூலம் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது.
இத்துடன், எம்.எஸ்சி., கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் திறந்தவெளி சாப்ட்வேர் படிப்பும், ஆன்லைனில் நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டது.
ஆனால், 'இந்தியாவில் ஆன்லைனில் எந்த ஒரு பாடத்தையும் நடத்த, அனுமதி வழங்கவில்லை' என, யு.ஜி.சி., எச்சரிக்கை விடுத்தது.
இதையடுத்து, அண்ணா பல்கலையின், ஆன்லைன் கம்ப்யூட்டர் சயின்ஸ் மாணவர் சேர்க்கை, திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
கல்லூரியில் ( Regular B.Ed) பி.எட் 2 வருடம் -உத்தரவு வெளியீடு.
அரசுப் பள்ளிகளில் ஆங்கிலம் கற்பித்தலை மேம்படுத்த பயிற்சி ஏடுகள்
அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கிலம் கற்பித்தலை மேம்படுத்தும் வகையில் சிறப்புப் பயிற்சி ஏடுகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
நிகழாண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஆங்கில வழிக் கல்வியை கட்டாயமாக்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் மாணவர்களின் சேர்க்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் முதலாம் வகுப்பில் 13,573 பேர் தமிழ் வழிக் கல்வியிலும், 8,067 பேர் ஆங்கில வழிக் கல்வியிலும் சேர்ந்துள்ளனர்.
இது கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதலாகும். ஆகஸ்ட் மாதம் வரை மாணவர் சேர்க்கை இருக்கும் என்று கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கற்பித்தலை மேம்படுத்த பயிற்சி ஏடுகள்: அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி அறிமுகம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்களின் ஆங்கிலப் புலமையில் பெரும்பாலான பெற்றோர்கள் மத்தியில் அதிருப்தி நிலவுகிறது. குறிப்பாக, பெரும்பாலான தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலத்தில் பேசும் திறமை (ஸ்போக்கன் இங்கிலீஷ்) இல்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து, ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேசும் திறனை வளர்த்துக் கொள்ளும் வகையில், அவர்களுக்கு பயிற்சியுடன் கூடிய குறுந்தகடு வழங்கப்பட்டது. இது ஆசிரியர்களுக்கு ஓரளவுக்கு பயனுள்ளதாக அமைந்தது.
இந்த நிலையில், தனியார் பள்ளிகளுக்கு இணையாக ஆங்கில வழியில் கற்பிக்கும் திறனை மேம்படுத்தும் வகையில், ஆங்கில எழுத்தின் சரியான உச்சரிப்பு, ஆங்கில வார்த்தைக்கு சரியான தமிழ் அர்த்தம் ஆகியவை அடங்கிய படத்துடன் கூடிய சிறப்புப் பயிற்சி ஏடுகள் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
இதன் மூலம், ஆசிரியர்களின் ஆங்கிலப் புலமை மேம்படுவதுடன், மாணவர்களுக்கும் ஆங்கிலத்தில் பேசும் திறன் வளரும். இதனால், தனியார் பள்ளிக்கு இணையாக அரசுப் பள்ளி மாணவர்களும் விளங்குவார்கள்.
இதன் காரணமாக, வரும் ஆண்டுகளில் தனியார் பள்ளி மோகம் தணிந்து, அரசுப் பள்ளிகளின் மீது பெற்றோர்களின் பார்வை திரும்பும் என்பது கல்வித் துறையின் நம்பிக்கை.
மாணவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்பதே அனைவரது விரும்பமும்; அரசுப் பள்ளி மூலம் இது நிறைவேறினால், தனியார் பள்ளிகளின் கட்டணக் கொள்ளைக்கு முடிவு கட்ட முடியும் என்கின்றனர் கல்வியாளர்கள்.
ஊழலுக்கு வழிவகுக்கும் 'நிர்வாக மாறுதல்' பொது மாறுதல் கலந்தாய்வு உத்தரவில் நிபந்தனை
கலந்தாய்வுக்கு முன், நிர்வாக அடிப்படையில், துறை, பள்ளிகள் மற்றும் மாணவர் நலன் கருதி, முதலில், நிர்வாக மாறுதல் மேற்கொள்ளலாம். (இந்த அறிவிப்பும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது. இதனால், அரசியல்வாதிகள், அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் சிபாரிசு அல்லது அதிகாரத்தின் படி, விருப்பமான இடங்களை முன்கூட்டியே நிரப்பி விட முடியும்)
ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு உத்தரவில் இந்தாண்டு விதிக்கப்பட்டுள்ள இப்புதிய நிபந்தனையால் ஆசிரியர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஒரே பள்ளியில் 3 ஆண்டுகள் பணி புரிந்திருந்தால் மட்டுமே கலந்தாய்வில் ஆசிரியர்கள் பங்கேற்கலாம்: பள்ளிக் கல்வித் துறை புதிய நிபந்தனை.
ஒரே பள்ளியில் மூன்று கல்வியாண்டுகள் பணிபுரிந்திருந்தால் மட்டுமே இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை புதிய நிபந்தனை விதித்துள்ளது.
பார்வையற்றவர்கள், 40 சதவீதத்துக்கும் மேல் உடல் ஊனமுள்ள மாற்றுத்திறனாளிகள், ராணுவத்தில் பணிபுரிபவரின் மனைவி, இதயம், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர்கள், புற்றுநோயாளிகள் உள்ளிட்டோருக்கு இந்த நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா வெளியிட்டுள்ளார். இதில், பணியிட மாறுதல் கோருவதற்காக குறைந்தபட்சம் ஓராண்டு பணியாற்றியிருக்க வேண்டும் என்பதை, மூன்று ஆண்டுகள் அல்லது அதற்குமேல் பணியாற்றியிருக்க வேண்டும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, தற்போது பணிபுரியும் பள்ளியில் 01.06.2012-க்கு முன்னதாக பணியில் சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பணியிடங்கள் உபரியாக உள்ளன. எனவே, பணி நிரவலுக்குப் பிறகே பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்படும். அதுவரை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாறுதல் வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நெறிமுறைகளில் உள்ள முக்கிய அம்சங்களின் விவரம்:- பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் கடந்த ஆண்டுகளில் பள்ளிகளுக்கு தொடர்ந்து ஆசிரியர்கள் நேரடி நியமனம் செய்யப்பட்டனர். இப்போது ஆசிரியர் பணியிடங்களை பணி நிரவல் செய்ய வேண்டும் என நிதித் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்தக் காரணங்களுக்காக, 2015-16-ஆம் கல்வியாண்டில் தொடக்கக் கல்வித் துறையிலிருந்து, பள்ளிக் கல்வித் துறைக்கு இந்த ஆண்டு அலகுவிட்டு அலகு மாறுதல், ஆசிரியர் மாறுதல் தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது. இதேபோன்று, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகளிலிருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு மாறுதல் வழங்குவதும் தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது. தொடக்கக் கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாநகராட்சிப் பள்ளிகளுக்கு மாறுதல் பெற அனுமதிக்கப்பட வேண்டும். விதிகளில் மாற்றம்:- அரசு மகளிர் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களில் பெண் ஆசிரியர், பெண் தலைமையாசிரியர்களை நியமிக்க வேண்டும். ஆண்கள் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண் ஆசிரியர், ஆண் தலைமையாசிரியர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இப்போது, ஆசிரியர்கள் தேவைக்கேற்ப இல்லையென்றால், அரசு மகளிர் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண் ஆசிரியர்களை நியமிக்கலாம் எனத் திருத்தப்பட்டுள்ளது. அதேபோல், ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் தேவைக்கேற்ப ஆசிரியர்கள் இல்லையென்றால் பெண் ஆசிரியர்களை நியமிக்கலாம் என திருத்தப்பட்டுள்ளது. இருபாலர் பயிலும் பள்ளிகளில் பொதுமாறுதல் விதிகளின்படி, ஆண், பெண் தலைமையாசிரியர்களை நியமிக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.  கலந்தாய்வு எப்போது? இந்த ஆண்டுக்கான பணியிட மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு இந்த மாத இறுதியில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வழிகாட்டி நெறிமுறைகளின் படி, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வை முதலில் நடத்த வேண்டும். பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவலுக்குப் பிறகே கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இந்தப் பணிகள் நிறைவடைய ஆகஸ்ட் மாதம் வரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கலந்தாய்வு அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் வெளியிடுவர்.
நிபந்தனைகளுடன் கலந்தாய்வு அறிவிப்பு!ஆசிரியர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்?
ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு உத்தரவில் இந்தாண்டு விதிக்கப்பட்டுள்ள புதிய நிபந்தனையால் ஆசிரியர்களிடம் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர்கள் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை கல்வித்துறை நடத்துகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளும் தாமதமாக நடந்தது. இந்த ஆண்டும் ஜூலை இரண்டாவது வாரம் கடந்தும் எவ்வித அறிவிப்பும் இல்லாததால் ஆசிரியர்கள் அதிருப்தியில் இருந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் கலந்தாய்வுக்கான அரசு உத்தரவை (எண்: 232) கல்வித்துறை வெளியிட்டது. அதில் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டிய ஆசிரியர்களுக்கு விதிமுறைகள் குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று 'தற்போது பணியாற்றும் பள்ளியில் மூன்று கல்வியாண்டுகள் ஆசிரியர் பணியாற்றியிருக்க வேண்டும்' என்ற புதிய நிபந்தனைக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் சுரேஷ், பொதுச் செயலாளர் வள்ளிவேலு கூறுகையில், "இப்புதிய நிபந்தனை ஆசிரியர்களை கடுமையாக பாதிக்கும். உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஒவ்வொரு ஆண்டும் பதவி உயர்வு மூலமாகவும், பணி ஓய்வு மூலமாகவும் நுாற்றுக்கும் மேற்பட்ட காலிப் பணியிடங்கள் நகர்ப் பகுதியில் ஏற்படுகின்றன. இந்நிபந்தனையால் நகர்ப் பகுதி காலிப் பணியிடங்களுக்கு ஆசிரியர்கள் செல்ல பெரும்பாலும் வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது. மேலும் ஊழலுக்கு வழிவகுக்கும் 'நிர்வாக மாறுதல்' என்ற வழக்கமான நடைமுறையையும் இக்கலந்தாய்வில் ரத்து செய்ய வேண்டும்" என்றனர்.
தலைமை ஆசிரியர்களுக்குப் பயிற்சி
ஆசிரியர்கள், மாணவர்களைக் கையாள்வது தொடர்பாக 2 ஆயிரம் தலைமையாசிரியர்களுக்கு தலைமைப் பண்பு பயிற்சி வழங்கப்படுகிறது.
மாநிலம் முழுவதும் உள்ள உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு ஜூலை 13 முதல் 17 வரையும், ஜூலை 21 முதல் 25 வரையிலும் இரண்டு கட்டங்களாக இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.
பிரிட்டன்-இந்தியா கல்வி மற்றும் ஆராய்ச்சித் திட்டம், தேசிய கல்வி திட்டமிடல், நிர்வாகப் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் சார்பில் தலைமைப் பண்பு பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்தப் பயிற்சியின் போது, பள்ளி மேலாண்மை, ஆசிரியர்களின் திறன்களை எவ்வாறு மேம்படுத்துவது, ஒழுங்கீனமாக நடக்கும் மாணவர்களை எவ்வாறு திருத்துவது உள்பட பல்வேறு பயிற்சிகள் தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மூலம் இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது.
ஆசிரியர்கள் கலந்தாய்வு - நிபந்தனைகள்
ஒரே பள்ளியில் மூன்று கல்வியாண்டுகள் பணிபுரிந்திருந்தால் மட்டுமே இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை புதிய நிபந்தனை விதித்துள்ளது.
பார்வையற்றவர்கள், 40 சதவீதத்துக்கும் மேல் உடல் ஊனமுள்ள மாற்றுத்திறனாளிகள், ராணுவத்தில் பணிபுரிபவரின் மனைவி, இதயம், சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை செய்துகொண்டவர்கள், புற்றுநோயாளிகள் உள்ளிட்டோருக்கு இந்த நிபந்தனையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வி, தொடக்கக் கல்வித் துறையின் கீழ் பணியாற்றும் ஆசிரியர்கள், தலைமையாசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு தொடர்பாக வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா வெளியிட்டுள்ளார்.
இதில், பணியிட மாறுதல் கோருவதற்காக குறைந்தபட்சம் ஓராண்டு பணியாற்றியிருக்க வேண்டும் என்பதை, மூன்று ஆண்டுகள் அல்லது அதற்குமேல் பணியாற்றியிருக்க வேண்டும் என மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, தற்போது பணிபுரியும் பள்ளியில் 01.06.2012-க்கு முன்னதாக பணியில் சேர்ந்தவர்கள் மட்டுமே கலந்தாய்வில் பங்கேற்க முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 3 ஆயிரத்துக்கும் அதிகமான பணியிடங்கள் உபரியாக உள்ளன. எனவே, பணி நிரவலுக்குப் பிறகே பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்படும்.
அதுவரை பட்டதாரி ஆசிரியர்களுக்கு மாறுதல் வழங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நெறிமுறைகளில் உள்ள முக்கிய அம்சங்களின் விவரம்:- பள்ளிக் கல்வி இயக்ககத்தின் கீழ் கடந்த ஆண்டுகளில் பள்ளிகளுக்கு தொடர்ந்து ஆசிரியர்கள் நேரடி நியமனம் செய்யப்பட்டனர். இப்போது ஆசிரியர் பணியிடங்களை பணி நிரவல் செய்ய வேண்டும் என நிதித் துறை அறிவுறுத்தியுள்ளது. இந்தக் காரணங்களுக்காக, 2015-16-ஆம் கல்வியாண்டில் தொடக்கக் கல்வித் துறையிலிருந்து, பள்ளிக் கல்வித் துறைக்கு இந்த ஆண்டு அலகுவிட்டு அலகு மாறுதல், ஆசிரியர் மாறுதல் தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது.
இதேபோன்று, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை, கள்ளர் சீரமைப்புப் பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகளிலிருந்து பள்ளிக் கல்வித் துறைக்கு மாறுதல் வழங்குவதும் தாற்காலிகமாக நிறுத்திவைக்கப்படுகிறது. தொடக்கக் கல்வித் துறை, பள்ளிக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் மாநகராட்சிப் பள்ளிகளுக்கு மாறுதல் பெற அனுமதிக்கப்பட வேண்டும். விதிகளில் மாற்றம்:- அரசு மகளிர் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஏற்படும் காலிப்பணியிடங்களில் பெண் ஆசிரியர், பெண் தலைமையாசிரியர்களை நியமிக்க வேண்டும். ஆண்கள் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண் ஆசிரியர், ஆண் தலைமையாசிரியர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது.
இப்போது, ஆசிரியர்கள் தேவைக்கேற்ப இல்லையென்றால், அரசு மகளிர் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண் ஆசிரியர்களை நியமிக்கலாம் எனத் திருத்தப்பட்டுள்ளது. அதேபோல், ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் தேவைக்கேற்ப ஆசிரியர்கள் இல்லையென்றால் பெண் ஆசிரியர்களை நியமிக்கலாம் என திருத்தப்பட்டுள்ளது. இருபாலர் பயிலும் பள்ளிகளில் பொதுமாறுதல் விதிகளின்படி, ஆண், பெண் தலைமையாசிரியர்களை நியமிக்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.
கலந்தாய்வு எப்போது?
இந்த ஆண்டுக்கான பணியிட மாறுதல், பதவி உயர்வு கலந்தாய்வு இந்த மாத இறுதியில் நடைபெற வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. வழிகாட்டி நெறிமுறைகளின் படி, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொது மாறுதல் கலந்தாய்வை முதலில் நடத்த வேண்டும்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நிரவலுக்குப் பிறகே கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. இந்தப் பணிகள் நிறைவடைய ஆகஸ்ட் மாதம் வரை ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கலந்தாய்வு அட்டவணையை பள்ளிக் கல்வி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆகியோர் வெளியிடுவர்.