rp

Blogging Tips 2017

DSE - முன்னேற்பு வாங்காமல் உயர்க்கல்வி பயின்றமைக்கு கண்டனத்துடன் பின்னேற்பு வழங்கல் ஆணை!



முறைசாரா கல்வி இயக்குனராக நியமனம்

கல்வித்துறை இணை இயக்குனர் லதா, இயக்குனராக பதவி உயர்வு....


முறைசாரா கல்வி இயக்குனராக நியமனம்

Duties and Responsibility of DEO s





BEO -Block level officer அவர்களின் Duties and Responsibilities



அரசாணை 101 சாராம்சம் சில

🔥 *பள்ளிக் கல்வித்துறையில் அனைத்து பள்ளிகளும் ஒன்றினைந்து அரசாணை 101  இன்று வெளியிடப்பட்டுள்ளது*

🔥 **கல்வித்துறையில் நிர்வாக மாற்றம்-புதிய அரசாணை*.

🔥 **இனி...*
*C. E. O.*
*D. E. O.*
*B. E. O.*

*A. E. E.O.வுக்குப் பதில் இனி...*
*B. E. O. Block Educational Officer

💐AEEO க்கள் இனி  BEO என அழைக்கப்படுவர்
💐உயர்கல்வி படிக்க அனுமதி இனி DEO தான் வழங்க முடியும்.
💐Selection Grade,Spl grade அனுமதிக்கும் அதிகாரம் இனி DEO க்குதான்
💐BEO க்கள் இனி தொடக்கப்பள்ளி, தலைமை ஆசிரியர் ம்ற்றும் இடைநிலை ஆசிரியர் PET,PVI ஆகியோர்களுக்கு 17a,17b வழங்கலாம்

💐DEO க்கள் இனி நடுநிலைப்பள்ளி, தலைமை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர்  ஆகியோர்களுக்கு 17a,17b வழங்கலாம்

*கல்வித்துறையில் நிர்வாக மாற்றம்-புதிய அரசாணை*.

Click Here to down Load

*கல்வித்துறையில் நிர்வாக மாற்றம்-புதிய அரசாணை*.

உதவி தொடக்கக்கல்வி அதிகாரி இனி வட்டார கல்வி அதிகாரி என அழைக்கப்படுவார் என்றும், அவர் தனது வட்டாரத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்ய அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது என்றும், அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் ஒரு அரசாணையை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது.

உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகள் இனிமேல் வட்டார கல்வி அதிகாரிகள் என்று அழைக்கப்படுவார்கள். அவர்கள் இனிமேல் தொடக்க கல்வி துறையில் உள்ள பள்ளிகளை மட்டும் அல்லாமல், பள்ளி கல்வித்துறையில் உள்ள பள்ளிகள், மெட்ரிகுலேசன் இயக்குனரக பள்ளிகள் அனைத்தையும் அவர்களது எல்லைக்குட்பட்ட இடங்களில் ஆய்வு செய்வார்கள்.

அதுபோல மெட்ரிகுலேசன் பள்ளி ஆய்வாளர்கள், மாவட்ட கல்வி அதிகாரிகளாக மாற்றப்படுகிறார்கள். அவர்களும் தங்களின் எல்லைக்குட்பட்ட அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்வார்கள். முதன்மை கல்வி அதிகாரிகளின் பணிகளும், அவர்களுக்குள்ள பொறுப்புகளும் வருமாறு.

மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நேரில் சென்று ஆய்வு செய்யவேண்டும். சி.பி.எஸ்.இ., ஐ.சி.எஸ்.இ. உள்ளிட்ட அனைத்து வகை மத்திய அரசு பள்ளிகளையும் ஆய்வு செய்யவேண்டும். பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் இலவச கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் 25 சதவீத இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்யவேண்டும். இந்த இட ஒதுக்கீட்டு விதிமுறைகளை பின்பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.

நிர்ணயிக்கப்பட்ட கல்வி கட்டணத்தை விட அதிகமாக வசூலிக்கப்படுகிறதா? என அனைத்து பள்ளிகளிலும் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். வருடம் ஒருமுறை அனைத்து அரசு மேல்நிலை பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை ஆய்வு செய்யவேண்டும். அதுபோல மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகங்களிலும் ஆய்வு செய்யவேண்டும்.

மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். தொடக்கப்பள்ளிகள் மற்றும் தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகள் நிலவரத்தை அதற்குரிய இயக்குனருக்கு, மாவட்ட கல்வி அதிகாரி பரிந்துரையை அனுப்பி வைக்கவேண்டும். அரசு உதவி பெறும் மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகளின் அங்கீகாரம் முறையாக புதுப்பிக்கப்பட்டு வருகிறதா? என்று ஆராயவேண்டும்.

சுயநிதி பள்ளிகள் தொடங்கவும், மூடவும் அதற்குரிய இயக்குனருக்கு பரிந்துரைக்க வேண்டும். பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியர் மீதான ஒழுங்குமுறை நடவடிக்கைகள் முறையாக பின்பற்றப்பட்டுள்ளதா? என்று பார்க்கவேண்டும். இவ்வாறு அந்த அரசாணையில் கூறப்பட்டு உள்ளது.

பிளஸ் 2வில், 1,200க்கு, 'குட்பை'; வரும் ஆண்டில் 600, 'மார்க்'தான்*

பிளஸ் 2வில், 1,200 மதிப்பெண் முறை, இந்த ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது. வரும் கல்வி ஆண்டு முதல், 600 மதிப்பெண் திட்டம் அமலுக்கு வருகிறது.

பிளஸ் 2 தேர்வு முடிவுகள், நேற்று முன்தினம் வெளியாகின. இதில், 8.60 லட்சம் மாணவ - மாணவியர் பங்கேற்று, 91.1 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுஉள்ளனர். வரும், 21ம் தேதி முதல், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன.

இந்நிலையில், பிளஸ் 2 தேர்வு அறிமுகமாகி, 40 ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த, ஆறு பாடங்களுக்கு, தலா, 200 மதிப்பெண் என, மொத்தம், 1,200 மதிப்பெண் முறை, இந்த ஆண்டுடன் முடிவுக்கு வருகிறது.தற்போது, நுழைவு தேர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் ஏற்பட்டு உள்ளதால், பிளஸ் 1 வகுப்புக்கும் பொது தேர்வுஅறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து, ஒவ்வொரு பாடத்துக்கும், 200 மதிப்பெண் வழங்கப் படும் முறை, 100 மதிப்பெண்ணாக மாற்றப்பட்டுள்ளது.

இந்த நடைமுறை, நடப்பு கல்வி ஆண்டில் அறிமுகமாகி உள்ளது.இதன்படி, பிளஸ் 1ல், ஒவ்வொரு பாடத்துக்கும், தலா, 100 மதிப்பெண் வீதம், 600 மதிப்பெண்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட உள்ளது. இந்த, 600 மதிப்பெண் முறை, வரும் கல்வி ஆண்டு முதல், பிளஸ் 2க்கும் அறிமுகம் ஆகிறது. எனவே, இந்த ஆண்டுடன், 1,200 மதிப்பெண் முறை முடிவுக்கு வந்துள்ளது.

மேலும், பிளஸ் 2க்கு மட்டும், தனியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கும் முறையும் முடிவுக்கு வருகிறது. வரும் கல்வி ஆண்டில், பிளஸ் 1க்கு ஒரு சான்றிதழ், பிளஸ் 2க்கு ஒரு சான்றிதழ் வழங்கப்படும். இறுதியாக, இரண்டு வகுப்புகளுக்கும் ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

*நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒன்றியம் விட்டு ஒன்றியமோ அல்லது மாவட்டம் விட்டு மாவட்டம் பணி நிரவல் இல்லை

6-8 வகுப்புகளில் 3+1 க்கு அதிகமாக ஆசிரியர் பணியிடங்கள் இருக்கும் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைவாக இருந்தால் மட்டுமே ஒன்றியத்திற்குள் பணி நிரவல் (வழக்கம் போல்).*.

அரசுப்பள்ளி பெற்றோர் ஒத்துழைப்பு இல்லை ஹிந்து நாளிதழ் தலையங்கம்

பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளுக்குக் கற்றல் திறன் குறைவான மாணவர்கள் அதிகம் பங்கேற்பதில்லை.

தொலைபேசியில் அழைத்தால் சுவிட்ச்ஆப். நேரில் சென்றால் பெற்றோரின் பொறுப்பற்ற பதில். இவற்றையெல்லாம் கடந்து எப்படி ஓர் ஆசிரியரால் முழுமையான தேர்ச்சியைத் தர இயலும்?

அரசு - ஆசிரியர் - மாணவர் - பெற்றோர் ஆகியோரின் கூட்டுச் செயல்பாடே கல்வியும் தேர்ச்சியும். அரசு ஒரு திட்டத்தைச் சொல்கிறது. ஆசிரியர்கள் அதைச் செயல்படுத்துகின்றனர். மாணவர்கள் சிலர் அதில் பங்கேற்கின்றனர். பெற்றோர்? அதுதான் கேள்விக்குறி.

இத்தனை வருட ஆசிரியர் பணியில், கற்றல் குறைவான மாணவர்களின் பெற்றோர் வந்து ஆசிரியரைச் சந்தித்துத் தன் பிள்ளையின் நிலையைக் குறித்துக் கேட்பது என்பது 205 பள்ளி நாட்களில் ஒன்றிரண்டு முறை மட்டுமே. இது எவ்வளவு பெரிய அவலம்?

அதிகாலையில் தன் பிள்ளையை எழுப்பவும், இரவில் தன் பிள்ளையை விசாரிக்கவும் ஆசிரியர் இருக்கிறார் என்றால் பெற்றோர் எதற்கு? ஒரு பெற்றோர் செய்யவேண்டிய கடமையை, ஏன் ஆசிரியர்கள் தம் பணியாக, சுமையாகக் கருதவேண்டும்?

சனி, ஞாயிறு சிறப்பு வகுப்பிற்கு உங்கள் பிள்ளை ஏன் வரவில்லை என்று கேட்டால், நான் போகத்தான் சொன்னேன். அவன் போகவில்லை என்கிற அலட்சியமான பதில்தான் பெற்றோரிடமிருந்து வருகிறது. பிள்ளையைப் பெறவது மட்டும்தான் பெற்றோரின் கடமையா? ஓர் ஆசிரியருக்கென்று குடும்பம், பிள்ளைகள் இல்லையா? அவர்களை யார் கவனிப்பார்கள்?

ஒரு பள்ளியில் சமீபத்தில் நடந்த விஷயம். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு நாட்டாமை வாத்தியார் இருப்பார். அவர்தான் எல்லாமே. அவரிடம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் போய், ஐயா! வாத்திமார்கள் சிறப்பு வகுப்பு, இரவு வகுப்பு வைத்து டார்ச்சர் செய்கிறார்கள்! என்று சொல்லியிருக்கிறார்கள். அதைக் கேட்ட அவர், உடனடியாக ஆசிரியர்களை அழைத்து மாணவர்களைத் தொந்திரவு செய்யாதீர்கள்.

சனி, ஞாயிறு பள்ளி வைத்தால் பிரச்னை வரும் என்றாராம். அதற்கு அந்த ஆசிரியர்கள், அவன் ஒழுங்கா ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் படித்தாலே பாஸ். அவன் படிக்காமல் போனால்தானே இத்தனை சிறப்பு வகுப்புகள். அவன் ஒழுங்காக படித்தால் நாங்கள் ஏன் சிறப்பு வகுப்புகள் வைக்கிறோம்? என்றார்களாம். நாட்டாமை முகத்தில் ஈ ஆடவி்ல்லை. உண்மை அதுதான்.

தேர்ச்சிக்கான 35 மதிப்பெண்களைப் பெற ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் வினா பகுதிகள் போதுமானது. இதை வாசிக்க முடியாத மாணவர்களுக்காக அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படுகிறார்கள். பெற்றோர்கள் வழக்கம்போல் பள்ளியில் பிள்ளைகளுக்கு வரும் உதவித்தொகைக்குக் கையெழுத்து இடுவதற்காகக் காத்திருக்கிறார்கள்.

ஒரு மாணவனின் அலட்சியமான உழைப்பும், பெற்றோரின் பொறுப்பற்ற குணமும்தான் ஆசிரியர்களையும் அரசையும் பாடாய்ப்படுத்துகிறது. அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே சிக்கிக்கொண்டு திண்டாடுபவர்கள் கல்வி அதிகாரிகள். பாவம் அவர்கள். இதற்கு எல்லாம் யார் காரணம்? கற்க விரும்பாத மாணவனும், அவர்களின் அலட்சிய பெற்றோரும்தான்.

ஒன்றை மட்டும் நினைவுகொள்ளுங்கள். தமிழகத்தில் உள்ள அத்தனை பத்தாம் வகுப்பு ஆசிரியர்களும் உடல்நலத்தில் 100 சதவீதம் சரியானவர்கள் இல்லை. தமிழகத்தில் உள்ள முக்கியமான நோய்கள் அனைத்தும் அவர்களுக்கு உண்டு. சராசரியாக ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒவ்வொரு நோயாவது கட்டாயமாக இருக்கிறது. அதைக் கடந்து, மறந்துதான் பாடம் கற்பிக்க வருகிறார்கள்.

பெற்றோர்களுக்கு சில கேள்விகள்:

* அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படும்போது பெற்றோர்கள் ஏன் சும்மாக இருக்கிறார்கள்?

* மாணவர்கள் வழியாக ஆசிரியர்களுக்கு வரும் மன அழுத்தத்திற்கும், இரத்தக் கொதிப்பிற்கும் அவர்களின் பெற்றோர் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?


* கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் ஏன் தன் பிள்ளைகளைக் குறித்து அவ்வப்போது ஆசிரியர்களிடம் கேட்க வருவதில்லை?

* பள்ளியில் அறிவை வளர்த்துக்கொள்ள வராமல், கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளை ஏன் ஒழுங்குபடுத்துவதில்லை?

* பள்ளியில் தீயப் பழக்கத்துடன் வலம் வரும் கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் என்ன அறிவுரை கூறி வளர்க்கிறார்கள்?

* தினமும் பிள்ளையை அருகில் அமரவைத்து. அன்றன்று நடந்த பாடத்தில் உள்ள வினாக்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா? ஒப்பிக்க வைத்துப் பார்த்திருக்கிறீர்களா?

* பள்ளியில் பாடத்தைக் கற்பிப்பதும் புரியவைப்பதும் பயிற்சி தருவதும் ஆசிரியர் வேலை. வீட்டில் அவனை இரவில் படிக்கவைப்பதும். அதிகாலையில் கோழி கூவுவதற்கு முன்பு எழப்பிவிட்டு வாசிக்கவைப்பதும் பெற்றோரின் வேலை. அதை ஆசிரியர்கள் ஏன் செய்யவேண்டும்? உங்களின் பொறுப்பற்ற செயல்தான் ஆசிரியர்களுக்குத் தேவையற்ற சுமையாகிறது… பொறுப்பாகிறது.

அரசு தன் கடமையைச் சரியாகச் செய்கிறது. பள்ளிக்கும் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் கோடிக்கணக்காகச் செலவழிக்கிறது. ஒரு பள்ளி தன் பணியைச் சரியாகச் செய்கிறது. ஆசிரியர்கள் நன்றாகத்தான் கற்பிக்கிறார்கள்... பயிற்சி தருகிறார்கள். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் அரசுக்கும் கல்வித்துறைக்கும் என்ன கைம்மாறு செய்யப்போகிறீர்கள்?

நன்றி

தி ஹிந்து

பிளஸ் 2 தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 21 வழங்கப்படும்: அரசு தேர்வுகள் இயக்ககம்

பிளஸ்2 தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மே 21ம் தேதி வழங்கப்படும் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

மே 21ம் தேதி பள்ளிகளில் நேரடியாகவும், பிற்பகலில் இணையதளம் மூலமாகவும் தற்காலிக சான்று பெறலாம் என்வும் தெரிவித்துள்ளது

'ஓய்வூதியம் பெறுவதற்கு ஆதார் அவசியம் இல்லை'

'மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவதற்கு, ஆதார் அடையாள எண் அவசியம் இல்லை,'' என, மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர், ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
தன்னார்வ ஏஜன்சிகளுக்கான நிலைக்குழு கூட்டத்தில், அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான, ஜிதேந்திர சிங் நேற்று பேசியதாவது:மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியம் பெறுவதற்கு, ஆதார் அவசியம் கிடையாது. உயிருடன் இருப்பதற்கான சான்றிதழை, வங்கிகளை அணுகாமல் சமர்ப்பிப்பதற்கான தொழில் நுட்பத்தை செயல்படுத்த, ஆதார், கூடுதல் அம்சமாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.ஆதார் இல்லாததால், சில ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வூதியத்தை பெறுவதில் சிரமம் இருப்பதாக செய்திகள் வெளியாகின. இந்த நிலையில், அமைச்சரின் பதில், முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

DEE PROCEEDINGS-தொடக்கக் கல்வி 2018 -19 ஆம் கல்வி ஆண்டில் ஜீன் 1-ம் தேதி பள்ளி திறப்பு - மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் - இயக்குநரின் அறிவுரைகள்

INCOME TAX RETURN DUE DATES AND LATE FILING FEES FOR ACCOUNT YEAR 2017-2018:

+2 ரிசல்ட் கடந்த 3 ஆண்டுகளின் மாவட்ட அளவிலான தேர்ச்சி விகித ஒப்பீடு

+2 ரிசல்ட்.மாவட்ட வாரியான தரநிலை

HSC RESULT 2018 மாவட்ட வாரியாக
1) விருதுநகர் 97.05%
2) ஈரோடு 96.35%
3)திருப்பூர் 96.18%
4) இராமநாதபுரம் 95.88%
5) நாமக்கல் 95.72%
6) சிவகங்கை 95.60%
7) தூத்துக்குடி 95.52%
8) கோயம்புத்தூர் 95.48%
9) தேனி 95.41%
10)திருநெல்வேலி 95.15%
11)கன்னியா குமரி 95.08%
12) பெரம்பலூர் 94.10%
13)கரூர் 93.85%
14) சென்னை 93.09%
15)திருச்சி 92.90%
16) தரும்புரி 92.79%
17) மதுரை 92.46 %
18)சேலம் 91.52%
19)ஊட்டி 90.66%
20) தஞ்சாவூர் 90.25%
21) திண்டுக்கல் 89.78%
22)புதுக்கோட்டை 88.53%
23) திருவண்ணாமலை 87.97%
24)காஞ்சீபுரம் 87.21%
25)திருவள்ளூர் 87.17%
26) கிருஷ்ணகிரி 87.13%
27)வேலூர் 87.06 %
28) கடலூர் 86.69%
29) நாகப்பட்டினம் 85.97%
30) திருவாரூர் 85.45%
31) அரியலூர் 85.38%
32) விழுப்புரம் 83.35%

+2 தேர்வு முடிவு வெளியீடு.மதிப்பெண் ஒப்பீடு

1180 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்கள் - 231

* 1151 முதல் 1180 வரை மதிப்பெண்கள் பெற்றவர்கள் - 4847

* 1126 முதல் 1150 வரை மதிப்பெண்கள் பெற்றவர்கள் - 8510

* 1101 முதல் 1125 வரை மதிப்பெண்கள் பெற்றவர்கள் - 11739

* 1001 முதல் 1100 வரை மதிப்பெண்கள் பெற்றவர்கள் - 71,368

* 901 முதல் 1000 வரை மதிப்பெண்கள் பெற்றவர்கள் - 1,07,266

* 801 முதல் 900 வரை மதிப்பெண்கள் பெற்றவர்கள் - 1,43,110

* 701 முதல் 800 வரை மதிப்பெண்கள் பெற்றவர்கள் - 1,65,425

* 700-க்கும் குறைவாக மதிப்பெண்கள் பெற்றவர்கள் - 3,47,938

G.O Ms 100 - SSA & RMSA இணைத்து, பதவிகள், பொறுப்புகளை அறிவித்து தமிழக அரசு அரசாணை வெளியீடு (16.05.2018)

CLICK HERE TO Download

ப்ளஸ் 2 ரிசல்ட் : தேர்ச்சி விகிதம் 91.1 சதவீதம்

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளது. இந்நிலையில் இன்று காலை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். 

அப்போது அவர் கூறுகையில், ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் காலை 9.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளன. எஸ்எம்எஸ் மூலம் தேர்வு முடிவுகள் வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஊதிய முரண்பாடு ஒருநபர் குழு - மேலும் கால அவகாசம் நீட்டிப்

ஊதிய முரண்பாடு பற்றி பரிசீலனை செய்ய அரசு செயலர் திரு சித்திக் தலைமையில் ஒரு நபர் குழு சென்ற மாதம் அமைக்கப்பட்டது.இந்நிலையில் அரசு ஊதிய முரண்பாடு களைய அமைக்கப்பட்ட குழுவில் கோரிக்கை மனு அளிக்கும் கால அவகாசம் இன்றோடு முடிகிறது.
இருந்தாலும் தொடர்ந்து மனு அளிக்கலாம் என்று கால அவகாசம் நீடித்து தமிழக அரசு அறிவித்து உள்ளது*

*தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி சேர்க்கை அறிவிப்பு*

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் ஒரு நபர் குழுவிற்கு ஊதியக் குறைபாடு, முரண்பாடுகள் களையப்பட வேண்டி கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.







+2தேர்வு முடிவுகள் வெளியிடுதல்,விடைத்தாள் நகல், மறுகூட்டல் விண்ணப்பித்தல் வழிமுறைகள் குறித்தான தேர்வுத்துறை இயக்குனர் செயல்முறை

சங்கங்களுக்குள் எழுந்த நீயா? நானா? என்ற 'ஈகோ' மோதல் ?- 1200 அரசுப்பள்ளிகளில் H.M பணியிடம் காலி

1200 அரசுப்பள்ளிகளில் ஹெச்.எம். பணியிடம் காலி; கிராமப்புற மாணவர்கள் எதிர்காலம் கேள்விக்குறி!

தமிழ்நாடு முழுவதும் கிராமப்புறங்களில் உள்ள 1200 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால், ஏழை மாணவர்களின் கல்வி நலன் முற்றிலும் பாதிக்கப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
ஆசிரியர் சங்கங்களுக்குள் எழுந்த நீயா? நானா? என்ற 'ஈகோ' யுத்தத்தால், உயர்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள தலைமை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சிக்கல் நீடிக்கிறது.

ள்ளி வயது குழந்தைகள் அனைவரையும் அரசு பள்ளியில் சேர்த்தல் - மாணவர் சேர்க்கையை அதிகரித்தல் குறித்து - தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்: நாள்: 14.05.2018


அரசு பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு தாமதமாக வரக்கூடாது : பள்ளி கல்வித்துறை அறிவிப்பு

மதுரை : அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் பணிக்கு தாமதமாக வரக்கூடாது என பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது

🎯 தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் பள்ளியை எப்படி நிர்வகிக்க வேண்டுமென 24 பக்க கையேட்டை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது

🎯அதில், குறிப்பாக ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை வகுத்துள்ளது. இவற்றில் குறிப்பாக ஆசிரியர்கள் வகுப்பு நேரத்தில் வெளியே செல்லக்கூடாது

🎯 ஆசிரியர்கள் 10 நிமிடம் தாமதமாக பணிக்கு வந்தால், வழங்கப்படும் ‘கிரேஸ் டைம்’ இனிமேல் வழங்கப்பட மாட்டாது

பள்ளிக்கல்வி இணையதளத்தில் பழையபாட புத்தகங்கள் நீக்கம்

பள்ளிக்கல்வி இணையதளத்தில் பழையபாட புத்தகங்கள் நீக்கம் வரும் கல்வி ஆண்டில், நான்கு வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் அமலாவதால், தமிழ்நாடு பாடநுால் கழகத்தின் இணையதளத்தில் இருந்து, பழைய பாட புத்தகங்கள் நீக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரே பாடத் திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, பாடத் திட்டத்தை மாற்ற வேண்டும் என, பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது. பள்ளிக்கல்வி அமைச்சராக செங்கோட்டையன்; செயலராக உதயசந்திரன் பொறுப்பேற்றதும், அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தினர். இதில் முக்கியமாக, ஒன்று முதல், பிளஸ் 2 வரை, பாடத் திட்டத்தை மாற்ற முடிவு எடுக்கப்பட்டது.இந்த பணிகள், பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப்யாதவ் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு, புதிய பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜூன், 1ல் துவங்கும், புதிய கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத் திட்டம் அமலுக்கு வருகிறது. இதையொட்டி,புதிய பாடத் திட்டத்தின் புத்தகங்கள் நவீன தொழில்நுட்பம், பல வண்ணங்கள், பார்கோடுகள், சித்திரங்கள், வீடியோ படங்கள் என, சிறப்பம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகங்கள், ஜூன், 1ல் பள்ளிகள் திறந்ததும், மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன. அதேநேரம்,

9 லட்சத்து 7 ஆயிரம் பேர் எழுதிய பிளஸ்–2 தேர்வு முடிவு நாளை வெளியீடு

பிளஸ்–2 தேர்வு முடிவு நாளை (புதன்கிழமை) வெளியிடப்படுகிறது.
தமிழ்நாட்டில் பிளஸ்–2 தேர்வு மார்ச் 1–ந் தேதி தொடங்கி ஏப்ரல் 6–ந் தேதி முடிவடைந்தது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இருந்து 6 ஆயிரத்து 903 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 66 ஆயிரத்து 934 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.அவர்களில் மாணவிகள் 4 லட்சத்து 63 ஆயிரத்து 758 பேர். மாணவர்கள் 4 லட்சத்து 3 ஆயிரத்து 176 பேர். வழக்கம் போல மாணவிகள் தான் அதிகம். தனி தேர்வர்கள் 40 ஆயிரத்து 686 பேர்.அனைத்து மாணவர்களும் தேர்வு எழுத தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 ஆயிரத்து 942 மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தனி தேர்வர்களுடன் சேர்த்து 9 லட்சத்து 7 ஆயிரத்து 620 பேர் தேர்வு எழுதினார்கள்.

விதிமுறைகளுக்கு அதிகமாக கல்விக்கடன் கோர முடியாது : மாணவி வழக்கில் ஐகோர்ட் உத்தரவு

எந்த உத்தரவாதமும் இல்லாமல் விதிமுறைகளுக்கு அதிகமாக கல்விக் கடன்கோர முடியாது என்று உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை கூடுவாஞ்சேரி அருகேயுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிக்கும் மாணவி ஆர்.சன்ஸ்கிரிட், உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: நான் 2016ல் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் பிரிவில் சேர்ந்தேன்.அப்போது கல்விக் கட்டணமாக 
₹18 லட்சத்து 90 ஆயிரம் செலுத்தினேன். கல்லூரி குறிப்பிட்டுள்ள மீதமுள்ள தொகையை கடனாகப் பெறுவதற்காக பள்ளிக்கரணை இந்தியன் வங்கிக்கு மனு கொடுத்தேன். ஆனால், எனது மனு பரிசீலிக்கப்படவில்லை.

பள்ளிக்கல்வி இணையதளத்தில் பழையபாட புத்தகங்கள் நீக்கம்

பள்ளிக்கல்வி இணையதளத்தில் பழையபாட புத்தகங்கள் நீக்கம் வரும் கல்வி ஆண்டில், நான்கு வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் அமலாவதால், தமிழ்நாடு பாடநுால் கழகத்தின் இணையதளத்தில் இருந்து, பழைய பாட புத்தகங்கள் நீக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, ஒரே பாடத் திட்டம் பின்பற்றப்பட்டு வருகிறது. நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப, பாடத் திட்டத்தை மாற்ற வேண்டும் என, பல்வேறு தரப்பிலும் கோரிக்கை எழுந்தது. பள்ளிக்கல்வி அமைச்சராக செங்கோட்டையன்; செயலராக உதயசந்திரன் பொறுப்பேற்றதும், அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தினர். இதில் முக்கியமாக, ஒன்று முதல், பிளஸ் 2 வரை, பாடத் திட்டத்தை மாற்ற முடிவு எடுக்கப்பட்டது.இந்த பணிகள், பள்ளிக்கல்வி முதன்மை செயலர், பிரதீப்யாதவ் தலைமையில் மேற்கொள்ளப்பட்டு, புதிய பாடத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஜூன், 1ல் துவங்கும், புதிய கல்வி ஆண்டில், ஒன்று, ஆறு, ஒன்பது மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கு, புதிய பாடத் திட்டம் அமலுக்கு வருகிறது. இதையொட்டி,புதிய பாடத் திட்டத்தின் புத்தகங்கள் நவீன தொழில்நுட்பம், பல வண்ணங்கள், பார்கோடுகள், சித்திரங்கள், வீடியோ படங்கள் என, சிறப்பம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகங்கள், ஜூன், 1ல் பள்ளிகள் திறந்ததும், மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.

DEE PROCEEDINGS-கோடை விடுமுறையிலேயே மாணவர் சேர்க்கை நடத்திட வேண்டும் உட்பட சேர்க்கையை அதிகரித்தல் குறித்து பல்வேறு உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்

நடப்பாண்டு கலந்தாய்வு எப்போது? குழப்பத்தில் ஆசிரியர்கள்

பள்ளிக்கல்வி த்துறை மறு சீரமைப்பு.


web stats

web stats