rp

Blogging Tips 2017

DSE PROCEEDINGS-Director of School Education instructions regarding Momo Challenge Game


அரசாணை (நிலை) எண். 214 Dt: October 15, 2018 -பள்ளிக் கல்வித் துறை - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு புதிய அம்சங்களை உள்ளடக்கிய மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள் (Smart Cards) வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

அரசாணை (நிலை) எண். 214 Dt: October 15, 2018 
பள்ளிக் கல்வித் துறை - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பு - அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு புதிய அம்சங்களை உள்ளடக்கிய மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள் (Smart Cards) வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

இரண்டு முதன்மை கல்வி அலுவலர்கள் இணை இயக்குனர்களாக பதவி உயர்வு


ஜாக்டோ ஜியோ வுடன் இணைய பிரிந்து சென்ற அமைப்பு சார்பில் பேச்சுவார்த்தைக்கு குழு அமைப்பு


மழை விடுமுறையில் ஆசிரியர்களுக்கும் விடுமுறை தான் என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை அதிரடி தீர்ப்பு

கடந்த அக்டோபர் (04/10/2018) அன்று ஜாக்டோ ஜியோ அழைப்பின் பேரில் போராடும் ஆசிரிய சங்க உறுப்பினர்கள் அனைவரும் ஒரு நாள் சிறு விடுப்பு எடுத்து கலந்து கொண்டனர்.
இதில் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என்ற தலைமைச் செயலரின் சுற்றறிக்கைக்குப் பிறகு
இன்னும் தீவிரமாக நடந்தது
இது இப்படி இருக்க .....

மழை விடுப்பு அறிவிப்பு செய்யப்பட்ட புதுகை திரூவாரூர் மாவட்டங்களில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் என்ற ஒரு விசித்திரமான உத்தரவை நிர்வாகம் போட்டதாக கூறி  போராடாத ஆசிரிய சங்க முன்னோடிகள் பள்ளிக்கு வந்து கையெழுத்து போட்டனர்.

இதை இப்படியே விட்டால் பின்னாளில் விடுமுறை மாணவர்களுக்கு மட்டுந்தான் என்ற நிலை வந்துவிடும்


 இந்த வழக்கில் பதிலுரைத்த அரசு வழக்கறிஞர் , அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு விட்டது , அது வேலை நாள் இல்லை
 என  பதிலுரைக்க
அதனை ஏற்று  நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
இந்த வழக்கின் மூலம் மழை விடுமுறை உள்ளிட்ட விடுமுறை நாட்களை (ஆசிரியர் பள்ளிக்கு வரவழைக்கப்பட்டு கையெழுத்து போட்டாலும் ) பள்ளி வேலை நாளாக கருத முடியாது ......
 என்ற *ஆசிரியரின் அடிப்படை உரிமை நிலைநாட்டப்பட்டுள்ளது 

November & December Month School working day Calendar (Revised)

SPD Proceedings - SCHOOL MASS CLEANING CAMPAIGN - வியாழன் தோறும் பள்ளிகளை தூய்மையப்படுத்த வேண்டும் - CEO கண்காணிக்க உத்தரவு

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும்போது மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும்:தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு

தீபாவளி அன்று பட்டாசு வெடிக்கும்போது மாணவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.  விபத்துகள் அற்றதாக இருக்க வேண்டும் என்றும் பள்ளி மாணவ, மாணவியருக்கு அறிவுறுத்தும் வகையில்   மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வி இயக்குநர் ராமேஸ்வர முருகன், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை: 


* பட்டாசு வெடிக்கும்போது தளர்வான ஆடைகள் உடுத்துவதை தவிர்க வேண்டும். டெரிகாட்டன், டெரின் ஆகிய எளிதில் தீ பற்றக்கூடிய ஆடைகளை அணியக்கூடாது.* பட்டாசுகளை கொளுத்தி கையில் வைத்துக்கொண்டு வெடிக்கக் கூடாது.

* குடிசைகள் உள்ள பகுதிகளில் ராக்கெட்டுகளை வெடிக்காமல் வெட்டவெளிப் பகுதியில் வெடிக்க வேண்டும். * கூட்டமான பகுதி, தெருக்களில் வெடிக்காதீர். பட்டாசு விற்பனை செய்யும் கடையின் முன்பும், அருகிலும் வெடிக்கக் கூடாது.

* பெற்றோர் பாதுகாப்பு அல்லது அவர்கள் முன்னிலையில் தான் குழந்தைகள் பட்டாசு வெடிக்க வேண்டும். 

* மருத்துவமனை அருகில், பெட்ரோல் சேமிப்பு இடங்கள் அருகில் வெடிக்க கூடாது.

* அதிக ஓசையுள்ள பட்டாசுகளை வெடிக்க வேண்டாம். அது காதுக்கு பாதிப்பு ஏற்படுத்தலாம்.

பயோ கெமிஸ்டிரி மாணவர்களை பிஎட் படிப்பில் சேர்க்கக்கூடாது: கல்லூரிகளுக்கு ஆசிரியர் பல்கலை உத்தரவு

பிஎஸ்சி பயோ கெமிஸ்டிரி மாணவர்களை பிஎட் படிப்பில் சேர்க்ககூடாது என்று ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் பிஎட் கல்லூரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் பிஎட் படிப்புக்கு 7 அரசுக் கல்லூரிகள், 14 அரசு உதவி கல்லூரிகள், 721 தனியார் கல்லூரிகளும் உள்ளன. இளங்கலை பட்டப்படிப்பு முடித்த ஏராளமான மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் இந்த இடங்களுக்கு விண்ணப்பித்து பிஎட் படிப்பில் சேர்கின்றனர்.
இந்நிலையில் பிஎஸ்சி உயிர் வேதியியல்( பயோ கெமிஸ்டிரி) படித்த மாணவர்களை பிஎட் படிப்பில் சேர்க்க வேண்டாம் என்று தமிழ்நாடு ஆசிரியர் பல்கலைக்கழக பதிவாளர் பிஎட் கல்லூரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியுள்ளதாவது:

உலகின் மிக உயரமான.. பிரம்மாண்ட இந்தியாவின் இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேல் சிலை படத் தொகுப்பு

Image may contain: mountain, sky, bridge, outdoor and nature
Image may contain: one or more people, people standing, cloud, sky and outdoorImage may contain: 1 person, standing, sky and outdoor

DEE PROCEEDINGS-தொடக்க , நடுநிலைப் பள்ளிகள் , உதவி தொடக்கக்கல்வி மற்றும் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் செயல்படும் இடம் -அரசாங்க நிலங்களை ":Tamil Nilam" தரவு தளத்தில் பதிவு செய்ய -இயக்குநர் உத்தரவு

80 வயதை கடந்தவர்களுக்கு இனி முதியோர் ஓய்வூதியம் வீடு தேடி வரும்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் 80 வயதை கடந்த 1,83,308 பேருக்கு ஓய்வூதியம் வீட்டிற்கு பண அஞ்சல் மூலம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசாணையில் கூறி இருப்பதாவது: வங்கிகளில் பயனாளிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும்போது கூட்ட நெரிசல் ஏற்படுதல் மற்றும் வயது முதிர்ந்த பயனாளிகளின் கைரேகை தேய்ந்ததன் காரணத்தினால், அவர்கள் ஓய்வூதியம் பெறுதலில் சிரமங்களை தவிர்க்க, வயது முதிர்ந்த பயனாளிகளுக்கு அவரவர்களது வீட்டிற்கே சென்று ஓய்வூதிய தொகையினை வழங்க சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளுக்கு பல்வேறு ஆய்வு கூட்டங்களில் தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டது.

எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில், பள்ளி கல்வி துறைக்கு, தனி, 'டிவி' சேனல் துவங்கப்பட உள்ளது.

எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், தமிழகத்தில், பள்ளி கல்வி துறைக்கு, தனி, 'டிவி' சேனல் துவங்கப்பட உள்ளது.தமிழக பள்ளி கல்வி அமைச்சராக, செங்கோட்டையன் பதவியேற்ற பின், இத்துறையில், அடுக்கடுக்கான மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக, பள்ளி கல்வித் துறைக்கு என, பிரத்யேகமாக, 'டிவி' சேனல் துவங்கப்பட உள்ளது.

இதற்கான பணிகளை மேற்கொள்ள, பள்ளி கல்வி இயக்குனர் ராமேஸ்வர முருகன், மாநில கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் அறிவொளி, ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் சுடலைகண்ணன் மற்றும் இணை இயக்குனர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுஉள்ளது.தொழில்நுட்ப பணி மற்றும் தொலைக்காட்சிக்கான முன்தயாரிப்பு காட்சிகளை பதிவு செய்யவும், தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளது. கேமரா, தொழில்நுட்ப கருவிகள் வாங்கும் பணிகளும் துவங்கியுள்ளன.  

தங்கம் வென்ற கோ.இராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி செல்வங்கள்

கோ. இராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் திண்டுக்கல் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற மண்டல போட்டிகளில் பங்கேற்று இரண்டு தங்கம், இரண்டு வெள்ளிப் பதக்கங்கள் என நான்கு பரிசுகளை வென்று சாதனை படைத்தனர். மாணவி அனிதா 5 ஆயிரம் மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மாணவி பிரமிளா பத்து கிலோமீட்டர் ரோடு சைக்கிளிங் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். மாணவிகள் சவுந்தர்யா, கனிமொழி ஆகியோர் பத்து கிலோமீட்டர் ரோடு சைக்கிளிங் போட்டியில் தங்கம் வென்றார்கள். இவர்கள் அடுத்த மாதம் கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் மாநிலப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.
இம்மாணவிகளை பள்ளியின் தலைமையாசிரியர் ராஜசேகரன், உதவித் தலைமை ஆசிரியர்கள் நாராயணசாமி, அய்யாக்கண்ணு மற்றும் கணேசன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் தீனதயாளன் மற்றும் விளையாட்டு ஆசிரியர்கள் முனியப்பன், செந்தில் வடிவு, சத்திய ஜோதி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் பாராட்டினர்.

சென்ற ஆண்டு 22.08.2017ல் ஜேக்டோ ஜியோ நடத்திய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டமைக்கு நீதிமன்ற உத்தரவுப்படி ஊதியப் பிடித்தம் செய்யப்படவில்லை என பள்ளிக் கல்வி இயக்குநர் 11.09.2018ல் வழங்கியுள்ள தெளிவுரை மேலே பதிவிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சென்ற வருடம் ஊதியம் பிடித்தம் செய்திட்ட DDOs அதனை மீள பெற்று வழங்குமாறு நமது பொறுப்பாளர்கள் அவரவர் BEO ஐ அனுகிட வேண்டுகிறோம்.

சென்ற ஆண்டு 22.08.2017ல் ஜேக்டோ ஜியோ நடத்திய ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மேற்கொண்டமைக்கு நீதிமன்ற உத்தரவுப்படி ஊதியப் பிடித்தம் செய்யப்படவில்லை என பள்ளிக் கல்வி இயக்குநர் 11.09.2018ல் வழங்கியுள்ள தெளிவுரை மேலே பதிவிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சென்ற வருடம் ஊதியம் பிடித்தம் செய்திட்ட DDOs அதனை மீள பெற்று வழங்குமாறு நமது பொறுப்பாளர்கள் அவரவர் HM sஐ அனுகிட வேண்டுகிறோம்.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி. மாநில செயற்குழு 3/11/2018 அன்று நாமக்கல்லில் நடைபெறும்

தமிழக கல்வித்துறை...இணை இயக்குனர்கள் மாறுதல் விவரம்*

திரு நரேஷ்* ஆசிரியர் தேர்வு வாரியம்

*திரு நாகராஜ முருகன்*-- பணியாளர் தொகுதி JD(P)

*திருமதி ஆனந்தி*
தொடக்க கல்வித்துறை இணை இயக்குனர் நிர்வாகம் JD Admin

*திருமதி ஸ்ரீ தேவி*- மெட்ரிகுலேஷன் பள்ளிகள்

2019 - அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு - பொங்கலுக்கு ஒன்பது நாள் விடுமுறை????

தமிழக அரசு, 2019ல், நடப்பு ஆண்டை போல, 23 நாட்களை, பொது விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது.
தமிழக அரசு, 2015ல், 24 நாட்கள்; 2016ல், 23; 2017ல், 22; 2018ல், 23 நாட்களை பொது விடுமுறை நாட்களாக அறிவித்திருந்தது. அடுத்த, 2019ம் ஆண்டிற்கும், நடப்பு ஆண்டை போல, 23 நாட்களை, பொது விடுமுறை நாட்களாக அறிவித்துள்ளது.பொது விடுமுறை நாட்களில், தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள, அனைத்து அலுவலகங்களும் மூடப்பட வேண்டும். அனைத்து சனி, ஞாயிற்று கிழமைகளும், விடுமுறை நாட்கள். மூன்று ஞாயிறு, இரண்டு சனிக்கிழமைகளிலும், பொது விடுமுறை வருகிறது.ஜனவரியில், மூன்று நாட்கள்; அக்டோபரில், இரண்டு நாட்கள் தொடர் விடுமுறை வருகிறது. அரசு அறிவித்துள்ள, பொது விடுமுறை நாட்களில், சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளை கழித்தால், 18 நாட்கள், பொது விடுமுறை நாட்களாக உள்ளன.

அரசு ஊழியர்கள் மகிழ்ச்சி : ஆயுத பூஜை திங்கள் கிழமை, விஜயதசமி செவ்வாய் கிழமை வருவதால், சனி, ஞாயிறு சேர்த்து, நான்கு நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது. இது, அரசு ஊழியர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆனால், தீபாவளி ஞாயிறன்று வருவது, ஏமாற்றத்தை அளித்துள்ளது.

பொங்கலுக்கு ஒன்பது நாள் விடுமுறை? :

அடுத்தாண்டு, பொங்கல் பண்டிகை, ஜன., 15 முதல், 17 வரை கொண்டாடப்படுகிறது. இதற்கு, செவ்வாய் முதல் வியாழன் வரை, மூன்று நாட்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.ஜன., 12ல், தேசிய இளைஞர் தின விடுமுறை. நடுவில், ஜன., 14 திங்கள் மற்றும் ஜன., 18 வெள்ளி என, இரு நாட்கள் வேலைநாட்களாக உள்ளது.எனவே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை குளிர்விக்கும் வகையில், தமிழக அரசு ஜன., 14, 18 என, இரு நாட்களும் உள்ளூர் விடுமுறை அறிவித்தால், அரசு ஊழியர்களுக்கு, தொடர்ந்து, ஒன்பது நாட்கள் விடுமுறை கிடைக்கும். இதை அரசு பரிசீலிக்குமா என, ஊழியர்கள் இப்போதே கோரிக்கை விடுத்துள்ளனர்

2019-ஆம் ஆண்டில் 23 நாட்களை அரசு பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. விடுமுறை நாட்கள்:_*

*_2019-ஆம் ஆண்டில் 23 நாட்களை அரசு பொது விடுமுறை நாட்களாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. விடுமுறை நாட்கள்:_

*1. ஆங்கில புத்தாண்டு -* *01.01.2019- செவ்வாய்*

*2. பொங்கல் -* *15.01.2019- செவ்வாய்*

*3. திருவள்ளுவர் தினம் - 16.01.2019 - புதன்*

*4. உழவர் திருநாள் - 17.01.2019- வியாழன்*

*5. குடியரசு தினம் - 26.01.2019 -சனி*

*6. வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு (வணிக/ கூட்டுறவு*
*வங்கிகள் ) 01.04.2019- திங்கள்*

*7. தெலுங்கு வருடப் பிறப்பு -06.04.2019-சனி*

*8. தமிழ்ப் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கார் பிறந்த நாள் - 14.04.2019- ஞாயிறு*

*9. மகாவீர் ஜெயந்தி - 17.04.2019- புதன்*

*10 புனித வெள்ளி - 19.04.2019- வெள்ளி*

*11. மே தினம் - 01.05.2019 - புதன்*

*12. ரம்ஜான் - 05.06.2019- புதன்*

*13. பக்ரீத் -12.08.2019- திங்கள்*

*14.சுதந்திர தினம் - 15.08.2019- வியாழன்*

*15. கிருஷ்ண ஜெயந்தி -23.08.2019 வெள்ளி*

*16. விநாயகர் சதுர்த்தி - 02.09.2019 - திங்கள்*

*17.மொகரம் 10.09.2019- செவ்வாய்*

*18. காந்தி ஜெயந்தி - 02.10.2019 - புதன்*

*19. ஆயுத பூஜை - 07.10.2019- திங்கள்*

*20. விஜயதசமி - 08.10.2019- செவ்வாய்*

*21. தீபாவளி- 27.10.2019- ஞாயிறு*

*22. மீலாதுன் நபி -10.11.2019- ஞாயிறு*

*23. கிறிஸ்துமஸ் -25.12.2019- புதன்*

web stats

web stats