rp

Blogging Tips 2017

வாக்காளர் சிறப்பு முகாம் 📓பிப்ரவரி 23 மற்றும் 24 ஆகிய நாட்களில் அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் நடைபெறுகிறது. 📓இதுவரை வாக்காளராக இல்லாதோர் இவ்வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளவும்.


நேற்றைய ஜாக்டோ ஜியோ ஒருங்கினைப்பாளர்கள் கூட்ட முடிவுகள்


INCOME TAX 2019 - U/s 80 DDB சில குறிப்பிட்ட நோய்களுக்கு மட்டும் இந்த 40 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரை தங்களுடைய மருத்துவ செலவு கணக்கை காண்பிக்கலாம்.

*80DDB SELECTED DISEASES ONLY*

Neurological Diseases where the disability level has been certified to be of 40% and above —

(a) Dementia

(b) Dystonia Musculorum Deformans

(c) Motor Neuron Disease

(d) Ataxia

(e) Chorea

(f) Hemiballismus

(g) Aphasia

(h)Parkinsons Disease

Income Tax - RECEIPT OF HOUSE RENT Under Section 1 (13 – A) of Income Tax Act

50 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் காலியாக இருந்த 50 கல்வி மாவட்டங்களுக்கு தற்போது பதவி உயர்வு மூலம் மாவட்டக் கல்வி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறையில் மொத்தம் 128 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் 50 பணியிடங்கள் நிரப்பப்படாமல் கடந்த சில மாதங்களாக காலியாக இருந்தன. அந்தப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என  தலைமை ஆசிரியர்கள்,  கல்வியாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.  இந்நிலையில்,  பதிவு மூப்பு அடிப்படையில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 50 தலைமை ஆசிரியர்களுக்கு மாவட்டக் கல்வி அலுவலர்களாகப் பதவி உயர்வு வியாழக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.  இதற்கான நடவடிக்கையை பள்ளிக் கல்வித்துறை இயக்ககம் மேற்கொண்டுள்ளது. கடந்த 7 மாதங்களாக காலியாக இருந்த மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் முழுவதுமாக நிரப்பப்பட்டுள்ளதால் பொதுத்தேர்வுகளுக்கான முன்னேற்பாடுகளும்,  பள்ளி ஆண்டுத் தேர்வுகளுக்கான பணிகளும் தடையின்றி நடைபெறும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

DEE PROCEEDINGS-தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைகள் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீளப் பணி அமர்த்த தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்

_Flash News : JACTTO GEO - Suspension Cancel DSE Proc - பள்ளிக்கல்வி - உயர்/மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களின் சஸ்பெண்ட் உத்தரவு மட்டுமே ரத்து - இயக்குனர் செயல்முறைகள்_*


ஆசிரியர் கோரிக்கை நிறைவேற்ற பரிந்துரை : பள்ளி கல்வி அதிகாரிகள் அறிக்கை

பள்ளி கல்வித் துறை சீராக செயல்பட, 'ஜாக்டோ - ஜியோ'வின் நிதிச்சுமை இல்லாத கோரிக்கைகளை நிறைவேற்றும்படி, அரசுக்கு பள்ளி கல்வி அதிகாரிகள் பரிந்துரை அனுப்பியுள்ளனர்.தமிழகத்தில், அரசு ஊழியர்கள் மற்றும்ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், கோரிக்கைகளை வலியுறுத்தி, பலகட்ட போராட்டங்கள் நடந்தன.இதில், ஜன., 22 முதல், 30 வரை நடந்த, காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டம், அரசு பணிகளை ஸ்தம்பிக்க வைத்தது. தொடக்க பள்ளிகள் முற்றிலும் முடங்கின.ஊதிய முரண்பாடுகளை சரி செய்வது, ஆறாவது சம்பள கமிஷன் பரிந்துரைப்படி, 21 மாதங்களுக்கான, ஊதிய உயர்வு நிலுவை தொகை வழங்குவது, பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வது உட்பட, ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த போராட்டம் நடந்தது. ஆனால், அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகளால், போராட்டம் முடிவுக்கு வந்தது.இருப்பினும், அரசு தரப்பில் எந்த பேச்சும் நடத்தாமல், வேலை நிறுத்தத்தை முடிக்க வைத்ததால், ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் அதிருப்தியில் உள்ளனர்.

Pension - Contributory Pension Scheme - Rate of Interest for the financial year 2018-2019 With effect from 1-1-2019 to 31-3-2019 -orders issuced

சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு பட்டியலை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து.

 சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு பட்டியலை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து.632 உடற்கல்வி சிறப்பாசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு பட்டியலை ரத்து செய்த தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்தது உயர்நீதிமன்ற கிளை. தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு நான்கு வாரத்தில் பணி நியமன ஆணை வழங்கவும் மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 'ஆண்ட்ராய்டு செயலி' வாயிலாக, வருகை பதிவை மேற்கொள்ள வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித் துறை உத்தரவு

 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 'ஆண்ட்ராய்டு செயலி' வாயிலாக, வருகை பதிவை மேற்கொள்ள வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித் துறை உத்தரவு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், 'ஆண்ட்ராய்டு செயலி' வாயிலாக, வருகை பதிவை மேற்கொள்ள வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

SPD PROCEEDINGS-பள்ளிகளில் இந்த கல்வியாண்டு ( 2018-19) ஆண்டு விழா கொண்டாடுதல் - நெறிமுறைகள் வெளியிட்டு நிதி ஒதுக்கி உத்தரவு - செயல்முறைகள்!

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் அவசர பொதுக்குழு கூட்டம் வரும் 16ஆம் தேதி நாமக்கல்லில் நடைபெறும்


தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் அவசர பொதுக்குழு கூட்டம் வரும் 16ஆம் தேதி நாமக்கல்லில் நடைபெறும்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் அவசர பொதுக்குழு கூட்டம் வரும் 16ஆம் தேதி நாமக்கல்லில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட உடன் அதுகுறித்து வாட்ஸப்பில் பல கருத்துக்களை தெரிவித்தனர். இதுகுறித்து குறித்து தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தலைவர் என்ற முறையில் முத்துசாமி ஆகிய நான் மிகவும் பெருமகிழ்ச்சி அடைகின்றேன் .

அன்புத் தம்பிகள் பலர் பொதுக்குழுவை எங்கள் பகுதியில் நடத்துங்கள் என தனது விருப்பங்களை தெரிவித்தனர். சுற்றுலாத்தலமாகவும் நடத்த வேண்டும் என்றுசிலர் கேட்டுக் கொண்டனர்.

 சங்கத்தின் பால் மாறாத பற்றும் நன்மதிப்பும் கொண்டவர் மட்டுமல்லாது சங்க வளர்ச்சியில் அக்கறை கொண்டோர் பலர் இதுகாரும் ஓரிரு பொது குழுக்களில் மட்டும் கலந்து கொண்டவர்களும் கருத்து தெரிவித்தது மகிழ்ச்சியோடு வரவேற்கத்தக்கது
.
 இக் கருத்து கூறிய அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களும் நாமக்கல் பொதுக்குழுவிற்கு தவறாது கலந்துகொண்டு தனது கருத்துக்களை எடுத்து உரைக்க வேண்டுகிறோம்.

 மேலும் எப்பொழுது எந்தெந்த காலகட்டத்தில் தாங்கள் குறிப்பிட்ட பகுதியில் நடத்தலாம் என்பதை தெரிவிக்க வேண்டுகிறோம் . 

அதன் அடிப்படையில் வரும் காலங்களில் மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு பொதுச் செயலாளர் அவர்கள் தலைவர் மற்றும் பொருளாளர் உடன் கலந்து பேசி எங்கு எப்போது கூட்டங்களை நடத்தலம் என  பட்டியலிட்டு அறிவிக்கலாம் .

எனவே கருத்து கூறிய அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என்று அன்போடு அழைக்கின்றேன். இயக்கத்தின் பால் பேரன்பு கொண்டு தங்கள் பணியினையும்,சங்கப்பணியினையும் சிறப்புடன் செய்யும் உறுப்பினர்களை தன்னகத்தே கொண்டது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி என்பதில் அகமகிழ்வோம்.

 பெருமையுடன் 
உங்கள்

 செ முத்துசாமி,ExMLC 
மாநிலத் தலைவர் 
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

CM CELL Reply - மாற்றுப் பணியில் வேறு பள்ளிகளுக்கு பணியமர்த்தப்படும் ஆசிரியர்களுக்கு பேருந்து கட்டணம், தினப்படி மற்றும் இதர படிகள் உண்டு !!

CM CELL Reply - மாற்றுப் பணியில் வேறு பள்ளிகளுக்கு பணியமர்த்தப்படும் ஆசிரியர்களுக்கு பேருந்து கட்டணம், தினப்படி மற்றும் இதர படிகள் உண்டு !!

2019 - பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாடுதல் - நெறிமுறைகள் வெளியிட்டு நிதி ஒதுக்கி உத்தரவு - செயல்முறைகள்


கிராமப்புறங்களில் அதிவேக இணையதள சேவை கிடைப்பதில் சிரமம்: செல்போன் செயலி வருகைப்பதிவு செய்ய முடியாமல் ஆசிரியர்கள் அவதி

கிராமப்புறங்களில் அதிவேக இணையதள சேவை கிடைப்பதில் சிரமம் இருப்பதால், மாணவர் வருகைப்பதிவை குறித்த நேரத்தில் மேற்கொள்ள முடியாமல் ஆசிரியர்கள் அவதிப்படுகிறார்கள். 

தமிழக பள்ளிக்கல்வி துறையில் தேர்வுமுறை, பாடத்திட்டம் மற்றும் நிர்வாக ரீதியாக பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. 

 அந்த வகையில் மாணவர், ஆசிரியர்கள் வருகைப்பதிவை கண்காணிக்க ‘டிஎன் ஸ்கூல்ஸ்’ என்ற செல்போன் செயலியை கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழக அரசு அறிமுகம் செய்தது. 

வருவாய் மாவட்டத்தில் பணிபுரியும் வட்டாரக் கல்வி அலுவலர்களில் சார்ந்த சிறுபான்மை மொழி தெரிந்த வட்டாரக் கல்வி அலுவலர்களுக்கு வருவாய் மாவட்டத்தில் உள்ள சார்ந்த மொழி வழி சிறுபான்மை பள்ளிகளை ஆண்டாய்வு மற்றும் பள்ளி பார்வை மேற்கொள்ள சிறப்பு அதிகாரம் வழங்கி ஆணையிடுமாறு சார்ந்த மாவட்ட முதன்மை அலுவலர்களுக்கு தொடக்ககல்வி இயக்குனர் உத்தரவு.

தமிழகம் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மாணவர் பெயர் திருத்தம் செய்ய பிப்ரவரி 16 வரை இறுதி அவகாசம்: மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு

தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தங்கள் பெயர்களை திருத்தம் செய்ய வரும் 16ம் தேதி வரை இறுதி அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள பள்ளி மாணவர்களின் பெயர் பட்டியலில் திருத்தங்கள் மேற்கொள்ளவும், கூடுதலாக மாணவர்களின் பெயரை சேர்க்கவும் அவசியம் ஏற்படின்  நீக்கம் செய்யவும் ஜனவரி மாதம் 27ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்தநிலையில் 10ம் வகுப்பு தேர்வு எழுத உள்ள மாணவர்களின் பெயர் பட்டியல் இறுதி செய்யப்பட்டு பள்ளி  தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 11 மற்றும் 12ம் தேதிகளில் பெயர் பட்டியலை இஎம்ஐஎஸ் இணையதளத்தில் இருந்து தலைமை ஆசிரியர்கள்  பதிவிறக்கம் செய்துகொள்ள அரசு தேர்வுகள் இணை இயக்குநர் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அவ்வாறு பதிவிறக்கம் செய்யப்பட்ட பெயர் பட்டியலில் பள்ளியின் பெயர், மாணவர்களின் பெயர், முகப்பெழுத்து, பிறந்த தேதி மற்றும் பயிற்று மொழி ஆகியவற்றில் திருத்தம் ஏதுமிருப்பின்  அவற்றையும், மாணவர்களின் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல் ஆகிய விபரங்களையும் மேற்கொள்ள பிப்ரவரி 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெறாத பள்ளிகளுக்கு எச்சரிக்கை அங்கீகாரம் பெறப்படாத புதிய பள்ளிகளின் பெயரில் மாணவர்களின் விபரம் பதிவேற்றம் செய்யக்கூடாது. அப்பள்ளிகள் மற்றொரு பள்ளியில் தங்கள் அறிவுரைப்படி மாணவர்களின் பெயரை  கூடுதலாக பதிவு செய்ய வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

web stats

web stats