rp

Blogging Tips 2017

ஆசிரியர் தகுதித் தேர்வு பயிற்சி !

ஆசிரியர் தகுதித் தேர்வு பயிற்சி  வகுப்புகளை நடத்த முன் அனுபவமுள்ள பயிற்றுனர்கள் தேவை




அணுகவும்...
தொலைபேசி : 044 4863 7811/2432 7811 & 81444 47811

மின்னஞ்சல் : [email protected] 


கல்வித்துறை நிர்வாகத்தில் பெரிய அளவில் மாற்றம்?

ஏப்ரல் மாத ஆண்டு ஊதிய உயர்வு Pay Matrix and HRA Slab




திருச்சி மாவட்டத்தில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கான தேர்வு கால அட்டவணை திருச்சி மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் வெளியிட்டுள்ள செயல்முறை கடிதம்

ஒரு லட்சம் ஆசிரியர் களுக்கு புதிய பாடதிட்டத்தில் பயிற்சி

பகுதி நேரஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இந்தாண்டு நடத்தப்படும் - செங்கோட்டையன்

பகுதி நேர ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் இந்தாண்டு நடத்தப்படும் என்று கோவையில் அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

கோவை குனியமுத்தூர் கிருஷ்ணா கல்லூரி மற்றும் அமெரிக்காவில் உள்ள ஸ்டெம் அகாடமி இணைந்து ஆசிரியர்களுக்கான பயிற்சி கருத்தரங்கை இன்று நடத்தியது.இதில் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கலந்து கொண்டனர். 

கல்வித்துறையில் உருவானது எஸ்.எஸ்.ஏ.எஸ்.,(சப்கோ சிக்ஷா - அச்சி கிச்ஷா) திட்டம் ரூ.75 ஆயிரம் கோடி ஒதுக்கீடு

மத்திய அரசின் அனைவருக்கும் கல்வி திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,), ஆர்.எம்.எஸ்.ஏ., (அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம்) மற்றும் மாநில திட்டமான மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனம் (டயட்) ஆகியவற்றை ஒன்றாக இணைக்க அறிவிப்பு வெளியாகியுள்ளது. இவை ஒருங்கிணைக்கப்பட்டு, 'எஸ்.எஸ்.ஏ.எஸ்., (சப்கோ சிக்ஷா - அச்சி கிச்ஷா) திட்டம்' என புதிதாக உருவாக்கப்பட்டுள்ளது.

இதற்காக 75 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.தமிழக கல்வித்துறையில் 1- 8ம் வகுப்பு வரை எஸ்.எஸ்.ஏ., 9-10ம் வகுப்பில் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டம் செயல்படுகின்றன. இதன் மூலம் கற்றல் கற்பித்தல், உபகரணம், ஆசிரியருக்கான பயிற்சி, புதிய வகுப்பறை, பள்ளி பராமரிப்பிற்காக மத்திய, மாநில அரசுகள் 60:40 விகிதத்தில் நிதி ஒதுக்கீடு செய்கின்றன. இதில் 1-12 வகுப்புகள் புதிய திட்டத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்திட்டம் 2020 வரை இருக்கும். கல்வி அதிகாரிகள் கூறியதாவது: முழு விவரம் கிடைத்ததும் மத்திய அரசுக்கு கருத்துரு அனுப்பப்படும்.

இதன்மூலம் பள்ளிகளுக்கு 100 சதவீதம் அடிப்படை வசதி கிடைக்கும். கற்றலுக்கான டிஜிட்டல் திட்டம், கணினி தொழில் நுட்பம், மின்னணு பாடத்திட்டம், மெய்நிகர் வகுப்பறை உட்பட கூடுதல் வசதிகளுடன் அடுத்த நிலைக்கான நவீன திட்டங்கள் செயல்படுத்த வாய்ப்புள்ளது, என்றார்.

அரசுப் பள்ளி தரம் குறைவு, உண்மையா? -தி இந்து தமிழ் நாளிதழ்

மாணவர்களை உலுக்கியெடுக்கும் நீட் தேர்வு, ஊழல் விவகாரத்தில் பிடிபடும் துணைவேந்தர்கள், பேராசிரியர்கள், ஆசிரியரால் தண்டிக்கப்படும் மாணவர்கள், மாணவர்களால் தாக்கப்படும் ஆசிரியர்கள், சி.பி.எஸ்.இ. கேள்வித் தாள் கசிவு இப்படிக் கல்வி தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளில் பெரும்பாலானவை பதற்றத்தையே அளிக்கின்றன.

எங்க இருந்தாலும் படிச்சிடும்!

அதிலும் கல்வி ஆண்டின் இறுதிக் கட்டத்துக்கு வந்துவிட்ட இந்நேரத்தில் அடுத்து எங்கு, என்ன படிப்பது என்ற தலைப்பு விவாதத்துக்கு வரும். பிளஸ் டூவரை தனியார் பள்ளியில் கணித-கணினி அறிவியல் பிரிவில் மிகச் சிறப்பாகப் படித்த மாணவர் ஒருவர் தன்னுடைய மேற்படிப்பை கிண்டி பொறியியல் கல்லூரி, சென்னை ஐ.ஐ.டி. போன்ற அரசு கல்வி நிறுவனங்களில் மேற்கொள்ளக் கனவு காணக்கூடும். ஆனால், இடைநிலைவரை தனியார் பள்ளி ஒன்றில் படித்த மாணவர் ஒருவர் மேல்நிலைப் படிப்பைத் தமிழக அரசுப் பள்ளி ஒன்றில் படிக்க விரும்புவாரா?

கரூர் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவரின் மூன்றாம் பருவ தேர்வு கால அட்டவனையும் தேர்வு சார்பான அறிவுரைகளும்


ஏப்ரல் 14-மத்திய அரசு விடுமுறை அறிவிப்பு


சென்னை மாவட்டம் - 2018 மார்ச் ஊதியமும்: இயக்க பொறுப்பாளர்களின் சீரிய பணியும்* தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

*சென்னை மாவட்டம் - 2018 மார்ச் ஊதியமும்: இயக்க பொறுப்பாளர்களின் சீரிய பணியும்* தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சென்னை மாவட்ட பொறுப்பாளர்களின் வேண்டுகோளுக்கினங்க நமது மாநில அமைப்பு 27.03.2017 அன்றைய தினத்தில் தொடக்க கல்வி இயக்குனரிடம் நிதி ஒதுக்கீடு அளிக்காததால் மாவட்டத்தில் உள்ள அரசு நிதி உதவி பள்ளி ஆசிரியர்களின் மார்ச் 2018 ஊதிய பட்டியல் Salary Bill கருவூலத்தில் பெற மறுக்கின்றனர்.. உடன் நடவடிக்கை வேண்டி மாநில தலைவர் செயல்வீரர் செ.முத்துசாமி Ex MLC அவர்கள் மூலம் கடிதம் அளிக்கப்பட்டது..
இதன் விளைவாய் துரித நடவடிக்கை எடுக்கக் கூறி இயக்குனரால் சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.*தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்ட கிளையின் சார்ப்பில் நிதி ஒதுக்கீடு சார்பு நம் மாவட்ட செயலாளர் *திரு.க.சாந்தகுமார்* 02.04.2018 மற்றும் 03.04.2018 ஆகிய இரு தினங்கள் தொடர்ந்து இயக்குனர் அலுவலகம் சென்று செய்த முயற்சியின் பயனாய் இன்று 03.04.2018 நமது மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்கு 2018-2019 ஆண்டுக்குறிய நிதி ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டுள்ளது, இன்று மாலை அனைத்து உதவி தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்திற்கும் மின் அஞ்சல் மூலம் நிதி ஒதுக்கீடு ஆணை அனுப்பப்படவுள்ளது... நாளை BILL SUBMIT செய்து விடலாம். என்றும் இயக்கப் பணியில் *தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி*. சென்னை மாவட்ட கிளை. தகவல் பகிர்வு: *ஆ.மோகன்குமார்-* பொருளாளர், *தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி*

சென்னை நிதி உதவி பள்ளிகள் மார்ச் ஊதியம் நிதி ஒதுக்கீடு வேண்டி மனு

Spouse முன்னுரிமயில் மாற்றம் வேண்டி முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு.பரீசீலனை செய்ய இயக்குனருக்கு உத்திரவு

திருவண்ணாமலை மாவட்ட தொடக்க நடுநிலைப்பள்ளி களுக்கான மூன்றாம் பருவ தேர்வு அட்டவணை

List of *412 NEET training centers* in all districts of Tamilnadu, set up by Govt.of Tamilnadu. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தமிழக அரசால் அமைக்கப்பட்ட *நீட் தேர்வுக்கான 412 பயிற்சி மையங்களின்* பட்டியல்.

Click here to download

பெற்றோர் ஒத்துழைப்பு இல்லை.அரசுப்பள்ளி மாணவர் நிலை குறித்தான இந்து கட்டுரை

பள்ளிகளில் நடைபெறும் சிறப்பு வகுப்புகளுக்குக் கற்றல் திறன் குறைவான மாணவர்கள் அதிகம் பங்கேற்பதில்லை. தொலைபேசியில் அழைத்தால் சுவிட்ச்ஆப். நேரில் சென்றால் பெற்றோரின் பொறுப்பற்ற பதில். இவற்றையெல்லாம் கடந்து எப்படி ஓர் ஆசிரியரால் முழுமையான தேர்ச்சியைத் தர இயலும்?
அரசு - ஆசிரியர் - மாணவர் - பெற்றோர் ஆகியோரின் கூட்டுச் செயல்பாடே கல்வியும் தேர்ச்சியும். அரசு ஒரு திட்டத்தைச் சொல்கிறது. ஆசிரியர்கள் அதைச் செயல்படுத்துகின்றனர். மாணவர்கள் சிலர் அதில் பங்கேற்கின்றனர். பெற்றோர்? அதுதான் கேள்விக்குறி. இத்தனை வருட ஆசிரியர் பணியில், கற்றல் குறைவான மாணவர்களின் பெற்றோர் வந்து ஆசிரியரைச் சந்தித்துத் தன் பிள்ளையின் நிலையைக் குறித்துக் கேட்பது என்பது 205 பள்ளி நாட்களில் ஒன்றிரண்டு முறை மட்டுமே. இது எவ்வளவு பெரிய அவலம்?

அதிகாலையில் தன் பிள்ளையை எழுப்பவும், இரவில் தன் பிள்ளையை விசாரிக்கவும் ஆசிரியர் இருக்கிறார் என்றால் பெற்றோர் எதற்கு? ஒரு பெற்றோர் செய்யவேண்டிய கடமையை, ஏன் ஆசிரியர்கள் தம் பணியாக, சுமையாகக் கருதவேண்டும்? சனி, ஞாயிறு சிறப்பு வகுப்பிற்கு உங்கள் பிள்ளை ஏன் வரவில்லை என்று கேட்டால், நான் போகத்தான் சொன்னேன். அவன் போகவில்லை என்கிற அலட்சியமான பதில்தான் பெற்றோரிடமிருந்து வருகிறது. பிள்ளையைப் பெறவது மட்டும்தான் பெற்றோரின் கடமையா? ஓர் ஆசிரியருக்கென்று குடும்பம், பிள்ளைகள் இல்லையா? அவர்களை யார் கவனிப்பார்கள்?

ஒரு பள்ளியில் சமீபத்தில் நடந்த விஷயம். ஒவ்வொரு பள்ளிக்கும் ஒரு நாட்டாமை வாத்தியார் இருப்பார். அவர்தான் எல்லாமே. அவரிடம் பத்தாம் வகுப்பு மாணவர்கள் போய், ஐயா! வாத்திமார்கள் சிறப்பு வகுப்பு, இரவு வகுப்பு வைத்து டார்ச்சர் செய்கிறார்கள்! என்று சொல்லியிருக்கிறார்கள். அதைக் கேட்ட அவர், உடனடியாக ஆசிரியர்களை அழைத்து மாணவர்களைத் தொந்திரவு செய்யாதீர்கள். சனி, ஞாயிறு பள்ளி வைத்தால் பிரச்னை வரும் என்றாராம். அதற்கு அந்த ஆசிரியர்கள், அவன் ஒழுங்கா ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் படித்தாலே பாஸ். அவன் படிக்காமல் போனால்தானே இத்தனை சிறப்பு வகுப்புகள். அவன் ஒழுங்காக படித்தால் நாங்கள் ஏன் சிறப்பு வகுப்புகள் வைக்கிறோம்? என்றார்களாம். நாட்டாமை முகத்தில் ஈ ஆடவி்ல்லை. உண்மை அதுதான்.

தேர்ச்சிக்கான 35 மதிப்பெண்களைப் பெற ஒரு மதிப்பெண், 2 மதிப்பெண் வினா பகுதிகள் போதுமானது. இதை வாசிக்க முடியாத மாணவர்களுக்காக அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படுகிறார்கள். பெற்றோர்கள் வழக்கம்போல் பள்ளியில் பிள்ளைகளுக்கு வரும் உதவித்தொகைக்குக் கையெழுத்து இடுவதற்காகக் காத்திருக்கிறார்கள்.

ஒரு மாணவனின் அலட்சியமான உழைப்பும், பெற்றோரின் பொறுப்பற்ற குணமும்தான் ஆசிரியர்களையும் அரசையும் பாடாய்ப்படுத்துகிறது. அரசுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே சிக்கிக்கொண்டு திண்டாடுபவர்கள் கல்வி அதிகாரிகள். பாவம் அவர்கள். இதற்கு எல்லாம் யார் காரணம்? கற்க விரும்பாத மாணவனும், அவர்களின் அலட்சிய பெற்றோரும்தான்.

ஒன்றை மட்டும் நினைவுகொள்ளுங்கள். தமிழகத்தில் உள்ள அத்தனை பத்தாம் வகுப்பு ஆசிரியர்களும் உடல்நலத்தில் 100 சதவீதம் சரியானவர்கள் இல்லை. தமிழகத்தில் உள்ள முக்கியமான நோய்கள் அனைத்தும் அவர்களுக்கு உண்டு. சராசரியாக ஒவ்வொரு ஆசிரியருக்கும் ஒவ்வொரு நோயாவது கட்டாயமாக இருக்கிறது. அதைக் கடந்து, மறந்துதான் பாடம் கற்பிக்க வருகிறார்கள்.

பெற்றோர்களுக்கு சில கேள்விகள்:

* அரசும் ஆசிரியர்களும் படாதபாடு படும்போது பெற்றோர்கள் ஏன் சும்மாக இருக்கிறார்கள்?

* மாணவர்கள் வழியாக ஆசிரியர்களுக்கு வரும் மன அழுத்தத்திற்கும், இரத்தக் கொதிப்பிற்கும் அவர்களின் பெற்றோர் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?

* கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் ஏன் தன் பிள்ளைகளைக் குறித்து அவ்வப்போது ஆசிரியர்களிடம் கேட்க வருவதில்லை?

* பள்ளியில் அறிவை வளர்த்துக்கொள்ள வராமல், கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் பிள்ளைகளை ஏன் ஒழுங்குபடுத்துவதில்லை?

* பள்ளியில் தீயப் பழக்கத்துடன் வலம் வரும் கற்றல் திறன் குறைவான மாணவர்களின் பெற்றோர்கள் என்ன அறிவுரை கூறி வளர்க்கிறார்கள்?

* தினமும் பிள்ளையை அருகில் அமரவைத்து. அன்றன்று நடந்த பாடத்தில் உள்ள வினாக்களைப் படிக்கச் சொல்லிக் கேட்டிருக்கிறீர்களா? ஒப்பிக்க வைத்துப் பார்த்திருக்கிறீர்களா?

* பள்ளியில் பாடத்தைக் கற்பிப்பதும் புரியவைப்பதும் பயிற்சி தருவதும் ஆசிரியர் வேலை. வீட்டில் அவனை இரவில் படிக்கவைப்பதும். அதிகாலையில் கோழி கூவுவதற்கு முன்பு எழப்பிவிட்டு வாசிக்கவைப்பதும் பெற்றோரின் வேலை. அதை ஆசிரியர்கள் ஏன் செய்யவேண்டும்? உங்களின் பொறுப்பற்ற செயல்தான் ஆசிரியர்களுக்குத் தேவையற்ற சுமையாகிறது… பொறுப்பாகிறது.

அரசு தன் கடமையைச் சரியாகச் செய்கிறது. பள்ளிக்கும் ஆசிரியருக்கும் மாணவர்களுக்கும் கோடிக்கணக்காகச் செலவழிக்கிறது. ஒரு பள்ளி தன் பணியைச் சரியாகச் செய்கிறது. ஆசிரியர்கள் நன்றாகத்தான் கற்பிக்கிறார்கள்... பயிற்சி தருகிறார்கள். நீங்களும் உங்கள் பிள்ளைகளும் அரசுக்கும் கல்வித்துறைக்கும் என்ன கைம்மாறு செய்யப்போகிறீர்கள்?

நன்றி
தி ஹிந்து

நாடு முழுவதும் 30 மாணவர்களுக்கு குறைவான 2.55 லட்சம் பள்ளிகள் இணைப்பு: மாநில அரசுகளிடம் கருத்து கேட்கிறது மத்திய அரசு

நாடு முழுவதும் 30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 2.55 லட்சம் அரசு தொடக்கப்பள்ளிகளை அருகில் உள்ள  பள்ளிகளுடன் இணைப்பதற்காக அனைத்து மாநிலங்களின் கருத்துக்களையும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை  கேட்டுள்ளது.

நாட்டில் தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி வரை கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக, அனைவருக்கும் கல்வி திட்டம்,  அனைவருக்கும் இடைநிலைக் கல்வித்திட்டம், ஆசிரியர் கல்வித்திட்டம் என்று பல்வேறு திட்டங்களை மத்திய அரசு  நடைமுறைப்படுத்துகிறது. இதற்காக ஆண்டுக்கு ₹75 ஆயிரம் கோடி வரை செலவிடவும் திட்டமிட்டுள்ளது. இந்த மூன்று திட்டங்களையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்கான நடைமுறைகள் தொடங்கியுள்ளன. இந்நிலையில் அரசு  மற்றும் அரசு நிதியுதவி பெறும் பல பள்ளிகள், மாணவர்கள் எண்ணிக்கை குறைவு காரணமாக ஆண்டுதோறும் மூடப்பட்டு  வருவதாகவும், இதற்கு போதிய ஆசிரியர்கள் இல்லாததும், தரமான கல்வி இல்லாததும் காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.

E pay roll இல் இந்த மாதம் APRIL 2018 முதல் வருமானவரி செஸ் தொகை 4 %( IT CESS ) ஆக மாற்றம் செய்யப் பட்டுள்ளது

E pay roll இல் இந்த மாதம் APRIL 2018 முதல் வருமானவரி செஸ் தொகை 4 %( IT CESS ) ஆக மாற்றம் செய்யப் பட்டுள்ளது

வருமானவரி பிடித்தம் (Advance Tax) செய்பவர்கள் வருமான வரி தொகைக்கு 4% செஸ்  ஏப்ரல் 2018 முதல் பிடித்தம் செய்ய வேண்டும்

ஆங்கிலம் அறிவோம் Farm animals

38c2f6763a17eab048589cefb2fbfea5.jpg (485×650)Farm Animals 2

ஆங்கிலம் அறிவோம் -Baby animals and their Parents

ஆங்கிலம் அறிவோம்

How to distinguish between a poisonous and non poisonous snake.This knowledge can be life saving.

No automatic alt text available.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெறும் போராட்டங்களுக்குத் தமிழகத்தில் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி நடைபெறும் போராட்டங்களுக்குத் தமிழகத்தில் தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. 

காவிரி வழக்கில் கடந்த பிப்ரவரி 16ஆம் தேதி, 6 வாரத்திற்குள் மத்திய அரசு காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை செயல்படுத்தாமல் மத்திய அரசு அலட்சியப் போக்காக இருந்து வந்த நிலையில், மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. 

APRIL | 2018 SCHOOL CALENDAR


வரி செலுத்தலையா? வருகிறது, 'கிடுக்கிப்பிடி'

வருமான வரி செலுத்தாதவர்களை கண்டறிய, பல்வேறு உத்திகள் கையாளப்படஉள்ளதாக, வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
  வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. 2015 - 16; 2016 - 17ம் ஆண்டுகளுக்கான, வருமான வரி தாக்கல் செய்வதற்கான அவகாசம், மார்ச், 31ல் முடிந்தது. இந்த அவகாசத்தில், முன்பை விட, இரண்டு மடங்கு அதிகமான நபர்கள் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர்.அத்துடன், 2017 - 18ம் ஆண்டுக்கான, வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், நேற்று முதல் துவங்கியுள்ளது. ஜூலை, 31 வரை அபராதம் இன்றி, வரி கணக்கு தாக்கல் செய்யலாம்.

Additional Pension and Additional family pension instruction

CLICK HERE Additional Pension and Additional family pension instruction

RMSA,SSA &DIET இணைப்பு .அதிகாரவபூர்வ அறிவிப்பு மற்றும் புதிய திட்டம் பற்றிய விளக்கம்

Click Here to Download


web stats

web stats