rp

Blogging Tips 2017

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் குறைப்பு: அரசுத் தேர்வுகள் துறை இயக்குநர் தகவல்

12ம் வகுப்பு பொதுத்தேர்வில் சில முக்கிய பாடங்களுக்கான தேர்வு நேரங்கள் குறைக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் துறை இயக்குநர் இன்று தெரிவித்துள்ளார்.

வருகிற மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் 12ம் பொதுத்தேர்வு நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி,
வேதியியல்,
கணக்குப் பதிவியல்,
புவியியல்,
உயிரியல்,
வரலாறு,
இயற்பியல்.
வணிகக்கணிதம்,
அலுவலக மேலாண்மை, கணக்குப்பதிவியல்
உள்ளிட்ட பாடங்களுக்கான நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு10 முதல் 1.15 மணி வரை நடைபெற்ற தேர்வு, தற்போது 10 மணி முதல் 12.45 மணி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு மொத்தம் 1200 மதிப்பெண்களாக இருந்தது தற்போது 600 மதிப்பெண்களாக (6 பாடத்திற்கு தலா 100 மதிப்பெண்கள்)
குறைக்கப்பட்டது குறிப்பித்தக்கது

சத்துணவு ஊழியர்கள் பணி நிரவல் சம்பந்தமான சமூகநலத்துறை ஆணையரின் சுற்றறிக்கை

புதிய ATM கார்டுகளை எப்படி நடைமுறைக்கு ( ACTIVATE ) கொண்டு வருவது

இப்போது அனைத்து வங்கிகளும் சிப் பொருத்தப்பட்ட ATM கார்டுகளை வழங்கி வருகின்றன புதிய ATM கார்டுகளை எப்படி நடைமுறைக்கு கொண்டு வருவது எனப்பார்ப்போம்
1.முதலில் ATM இயந்திரத்தில் உங்கள் புதிய ATM கார்டை எப்போதும் போல insert செய்யவும்.
**. PINGENERATE  என வரும் அதை தெறிவு செய்க
  
2.ACCOUNT NUMBER கேட்கும் அதை பதிவு செய்க

3. PHONE NUMBER கேட்கும்(ஏற்கனவே நீங்கள் வங்கிக்கணக்கில் பதிவு செய்த PHONE NUMBER) அதை பதிவு செய்யவும் CONFIRM கொடுக்கவும்.
  
4. உங்கள் போனுக்கு ஒருOTP NUMBER நான்கு இலக்கத்தில் எ ண்களாக இல்லாமல் எழுத்துகளாக வரும் அதை எழுதி வைத்துக் கொள்ளவும்

5. மீன்டும் ATM CARD ஐ மெஷினில் insert செய்க வழக்கம் போல் ENGLISH அல்லது தமிழ் மொழி தேர்வு பிறகு ஏதேனும் இரண்டு இலக்க எண் பதிவு செய்த பின்PIN CHANGE ெதறிவு செய்த பின் உங்களுக்கு வந்த 4 digit OTP எண்ணை ஒரு முறை மட்டும் பதிவு செய்க.

6. மீண்டும்PIN NUMBER கேட்கும் அப்போது நீங்கள் உங்களுக்கு தேவையான நீங்கள் மட்டும் ரகசியமாக வைத்திருக்கக் கூடியPIN NUMBER ஐ பதிவு செய்க.
  
7.RE ENTER PIN NUMBER கேட்டும் மீண்டும் பதிவு செய்க.
8. இப்போது உங்கள் புதிய ATM CARD உபயோகத்திற்கு READY.
குறிப்பு: உங்கள் புதிய கார்டை ATM ல் insert செய்தவுடன் அதன் full process முடியாத போதும் பழைய கார்டு செயலிழந்து விடும். அதன் பிறகு புதிய கார்டை மட்டுமே நீங்கள் பயன்படுத்த முடியும்.
மறக்காமல் A/C NUMBER மற்றும் பதிவு செய்த MOBILEPHONE ஐ உடன் கொண்டு செல்லவும்

2018 -2019 ஆம் ஆண்டுக்கான வருமான வரி விளக்கங்கள் தமிழில்

Click here to download pdf file 

SPD PROCEEDINGS-தொடக்க/நடுநிலை /உயர்/மேல்நிலைப் பள்ளிகளுக்கும் பேச்சு/கட்டுரை/ஓவிய போட்டி நடுத்துதல் - தலைப்பு மற்றும் நிதி ஒதுக்கி உத்தரவு - செயல்முறைகள்

CLICK HERE TO DOWNLOAD G.O 261 DATE-20.12.2018- SUPER ANNUATION 

கல்வியாண்டின் இடையில் ஓய்வுபெறும் ஆசிரியர் மறு நியமனத்துக்கு கட்டுப்பாடுகள்


இது தொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் பிரதீப்யாதவ் வெளியிட்டுள்ள அரசாணை: 
மதுரை உயர்நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், 2019-2020-ஆம் கல்வி ஆண்டில் இருந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் கல்வியாண்டின் இடையில் ஓய்வுபெறும் ஆசிரியர்களுக்கு மறு நியமனம் வழங்குவதற்கு நெறிமுறைகள் வெளியிடப்படுகிறது. 
கல்வியாண்டின் இடையில் ஆசிரியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும் போது ஆசிரியரின்றி மாணவர்களின் கல்வி நலன் பாதிக்கப்படக் கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு அந்த ஆசிரியரின் பண்பு, நடத்தை திருப்தியாக இருந்தாலும், தொடர்ந்து பணிபுரியும் வகையில் உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். 
உபரி ஆசிரியர் பணியிடங்கள்:
 உபரி ஆசிரியர் பணியிடங்கள் இருந்தால் பணி நிறைவு செய்தவர்களை மறு நியமனம் செய்யக்கூடாது. மாணவர்களின் நலன் கருதி உபரி பணியிடம் அல்லாத ஆசிரியர்களை மறுநிர்ணயம் செய்யும் போது, கல்வியாண்டின் இடையில் ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் மறுநியமனம் வழங்கப்படும். உபரி பணியிடம் அல்லாத ஆசிரியர்கள் ஓய்வு பெறுவதற்கு முன்னர் பெற்ற ஊதியத்தையே மறு நியமன ஊதியமாக வழங்க வேண்டும். 
உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் தயார் செய்யப்பட வேண்டும். 
அரசு உதவி பெறும் பள்ளிகளில் கூட்டு மேலாண்மையில் இயங்கினால் அந்த நிர்வாகத்தின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கு கூடுதலாக உள்ள உபரி ஆசிரியர் பணியிடங்களை பணிநிரவல் செய்யவேண்டும். இந்த உபரி பணியிடங்களை மாற்றம் செய்வது குறித்து பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். பணி நிரவல் செய்யப்படும் ஆசிரியர் அடுத்த கல்வியாண்டு தொடங்கும் போதோ அல்லது அதற்கு முன்னரோ பணியில் சேர வேண்டும். 

வேறு பள்ளிக்குச் செல்ல மறுத்தால்...

 அரசு உதவி பெறும் பள்ளிகளில் மானியம் தொடர்ந்து வழங்கி வரும் நிலையில் உபரியாக கண்டறியப்பட்ட ஆசிரியர்களை வேறு பள்ளிக்கு மாற்றம் செய்ய அந்தப் பள்ளி நிர்வாகம் மறுத்தால் அந்தப் பள்ளியின் மானியத்தை நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

 உபரியாகக் கண்டறியப்பட்ட ஆசிரியர் பணியிடத்துடன் பணிநிரவல் செய்து, தேவையுள்ள பள்ளிக்கு மாறுதல் அளித்து, பணியில் இருந்து விடுவிக்கப்பட்டபின், அந்த ஆசிரியர் பணி நிரவல் செய்த பள்ளிக்கு மாறுதலில் செல்ல மறுத்தால், அவ்வாறு பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட நாளில் இருந்து உபரியாகப் பணிபுரிந்த நாள்களுக்கு பணப்பலன் மறுக்கப்பட வேண்டும்.

தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருள் எவை? அதற்க்கு ஈடான மாற்றுப் பொருள் எவை? - அரசு வெளியீடு

CLICK HERE TO DOWNLOAD PLASTIC BANNED THINGS AT SCHOOL

web stats

web stats