rp

Blogging Tips 2017

ஆலங்குடியில் தலைமை ஆசிரியை மாயம்

ஆலங்குடியில் தொடக்கப்பள்ளி தலைமையாசிரியயை காணவில்லையென வியாழக்கிழமை போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.
ஆலங்குடி காந்திசாலையைச் சேர்ந்தவர் மலர்செல்வம். இவரது மனைவி விவாகேஸ்வரி(45). கறம்பக்குடி அருகேயுள்ள பல்லவராயன்பத்தை தொடக்கப்

இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம்:மாணவர் சேர்க்கை தேதி நீட்டிப்பு



பெரம்பலூர் மாவட்டத்தில் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர் சேர்க்கைக்கான சேர்க்கை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ. மகாலிங்கம். இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், 6 முதல் 14 வயதுக்குள்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் தரமான இலவச தொடக்கக் கல்வி வழங்க வேண்டும். அனைத்து தனியார் சுயநிதி (மெட்ரிக் பள்ளிகள் உள்பட) சிறுபான்மையற்ற பள்ளிகளில் சேர விரும்பும் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்கள் பிரிவின் கீழ் உள்ள ஆதிதிராவிடர், மலைவாழ் பிரிவினர், மிகவும் பிற்பட்ட பிரிவினர், பிற்படுத்தப்பட்டட பிரிவினர், பெற்றோர் இல்லாத குழந்தைகள், எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டோர், திருநங்கைகள், துப்புரவு தொழிலாளர் குழந்தைகள் மற்றும் நலிவடைந்த பிரிவினர் (ஆண்டு வருமானம் ரூ. 2 லட்சத்துக்குள் பெறுவோர்) ஆகியோர் தகுதியானவர்கள். தொடக்க நுழைவு நிலை வகுப்பில் (எல்.கே.ஜி, முதல் வகுப்பு, 6-ம் வகுப்பு) 25 சதவீதத்தில் சேர அனுமதி கோருபவர்கள் எல்.கே.ஜி மற்றும் முதல் வகுப்பில் சேர விரும்பும் பள்ளியிலிருந்து 1 கி.மீட்டர் தொலைவுக்குள்ளும், 6-ம் வகுப்பில் சேர அனுமதி கோருபவர்கள் 3 கி.மீட்டர் தொலைவுக்குள்ளும் வசிப்பவராக இருக்க வேண்டும்.

சாமானிய குடும்பத்தில் பிறந்து டீ விற்றவர் நாட்டின் பிரதமர் ஆகிறார்



குஜராத்தில் சாமானிய குடும்பத்தில் பிறந்து, டீ விற்ற நரேந்திர மோடி

.3நாட்டின் பிரதமர் ஆகிறார். நரேந்திர மோடி, குஜராத் மாநிலம் மேசானா மாவட்டம், வாத்நகர் என்ற இடத்தில் 1950 ம் ஆண்டு, செப்டம்பர் மாதம் 17 ந்தேதி தாமோதரதாஸ் முல்சந்த் மோடி-ஹீரா பென் தம்பதியின் மூன்றாவது மகனாக பிறந்தார். சாமானிய குடும்பத்தை சேர்ந்தவர். ஆரம்ப காலத்தில் ரெயில் நிலையத்தில் டீக்கடை வைத்திருந்த தனது தந்தைக்கு குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., அரசியல் அறிவியல் பட்டம் பெற்றார். பின்னர் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி ஆகியோரின் ரத யாத்திரைகளில் பங்கேற்று தீவிரமாக கட்சிப்பணி ஆற்றினார்.

பிளஸ் 2 தோல்வி - பதிவுமூப்பு விபரம் பதிவுசெய்ய தேவையில்லை


பிளஸ் 2 தேர்வில் தோல்வி அடைந்திருந்தால், வேலை வாய்ப்பக பதிவுமூப்பு விபரம் பதிவு செய்ய தேவையில்லை,&'&' என முதன்மை கல்வி அலுவலர் சுகுமார் தேவதாஸ் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் ஆன்லைனில் வேலைவாய்ப்பக பதிவுமூப்பு விபரம் பதிவு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் அவர் கூறியதாவது: மாணவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு அலைவதை தடுப்பதற்காக, பள்ளிகளிலே ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்பக பதிவுமூப்பு விபரங்களை பதிவுசெய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

Advances to Government Employees for the Celebration of Marriages – TN Government New Order

CLICK HERE-G.O.Ms.No.118, Dated 09th May 2014 LOANS AND ADVANCES Celebration of Marriages - Allotment of Funds for the year 2014-2015 – Order–Issued.

அரசுப் பள்ளிகளில் தொடரும் அவலநிலை - தேர்ச்சியை மட்டுமே எதிர்பார்க்கும் அரசு


விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதி அரசு பள்ளி கட்டடங்கள் இடிந்து சேதமடைந்த நிலையில் உள்ளன. முறையான குடிநீர், கழிப்பறை வசதியில்லை. சில இடங்களில் பள்ளிகள் முட்புதர் சூழ்ந்தும் காணப்படுகின்றன. இதனால் மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை மேம்படுத்த அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாவட்டத்தில் அரசு துவக்க நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அடிப்படை வசதி மிகக்குறைவு. போதிய வகுப்பறை கிடையாது. பல்வேறு இடங்களில் கட்டடங்கள் இடிந்து காணப்படுகின்றன. இதனால் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் மாணவ, மாணவியர் படிக்கவேண்டிய சூழ்நிலை உள்ளது. மரத்தடி நிழலில் பாடங்களை நடத்தும் நிலைக்கு ஆசிரியர்கள் தள்ளப்பட்டுள்ளனர். முக்கிய பாடங்களுக்கு போதிய ஆசிரியர்கள் இல்லாததால், பள்ளியின் தேர்ச்சி விகிதமும் குறைகிறது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு வரும் 21ம் தேதி காலை 9:00 மணி முதல் மதிப்பெண் பட்டியல் வழங்க ஏற்பாடு

பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு பிழை இல்லாத மதிப்பெண் பட்டியல் வழங்க கல்வித் துறை ஏற்பாடுகளை செய்து வருகிறது. பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ள மாணவர்களுக்கு தேர்வுத்துறை மூலம் வழங்கப்படும் மதிப்பெண்கள் பட்டியல்களில் சில பிழைகள் ஏற்படும் போது, அவற்றை சரி செய்ய விண்ணப்பித்து திருத்திய மதிப்பெண் பட்டியல் பெற காலதாமதம் ஏற்படுகிறது

பிளஸ் 2 சான்றிதழ் வழங்கும் நாளில் இருந்து வேலைவாய்ப்பக அலுவலகத்தில் 15 நாட்களுக்கு ஒரே சீனியாரிட்டி


பிளஸ் 2 தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நாளில் இருந்து 15 நாட்களுக்கு வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பில் ஒரே சீனியாரிட்டி வழங்கப்பட உள்ளது.தமிழகம் முழுவதும் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 9ம் தேதி வெளியிடப்பட்டது. தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு 21ம் தேதி முதல் மதிப்பெண் சான்றிதழ் மற்றும் மாற்றுச்சான்றிதழ் வழங்கப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழ் வழங்கும்போது வேலைவாய்ப்பு அலுவலக பதிவுக்கும் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது. இதனடிப்படையில் தேர்வு முடிவுகள் வேலைவாய்ப்பு அலுவலக இணையதளத்தில் இணைக்கப்பட்டு ஒவ்வொரு பள்ளிக்கும் தனித்தனியே யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு வழங்கப்பட்டுள்ளது.பதிவு எண்ணை இணையதளத்தில் பதிவு செய்யும் போது மாணவர் பற்றிய முழுவிபரமும் தெரிந்துகொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. தேர்ச்சி பெற்ற மாணவரின் ரேஷன் கார்டு எண், ஜாதி, மதிப்பெண் சான்று ஆகியவற்றை பரிசோதித்து பள்ளி நிர்வாகம் வேலைவாய்ப்பக பதிவேட்டில் பதிவு செய்து பதிவு அட்டையை மாணவர்களுக்கு வழங்கவேண்டும்.

இந்திய அளவில் மாநிலக் கட்சிகளில் அதிமுகவே தனிப் பெரும் கட்சி!

மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளிவரும் நிலையில், இந்திய அளவில் மாநிலக் கட்சிகளை எடுத்துக் கொண்டால், முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக தனிப் பெரும் கட்சியாகத் திகழ்கிறது.
தேசிய அளவில் எடுத்துக்கொண்டால், பாஜக மற்றும் காங்கிரஸைத் தொடர்ந்து மூன்றாவது இடத்தை வகிக்கிறது அதிமுக.
முற்பகல் பிற்பகல் 12.20 மணி நிலவரப்படி, தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில் அதிமுக 37 தொகுதிகளில் பெருவாரியான வாக்குகளில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் ஓர் இடத்திலும், பாமக ஓர் இடத்திலும் முன்னிலையில் உள்ளது.

21-ம் தேதி நாட்டின் பதினான்காவது பிரதமராக பதவியேற்கிறார் மோடி

மக்களவைத் தேர்தலில் பாஜக கூட்ட்ணி பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்று வெற்றி பெறுவது உறுதியாகிவிட்ட நிலையில், வரும் 21-ம் தேதி நாட்டின் 14-வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்க உள்ளார். பாரதிய ஜனதா சார்பில் வாஜ்பாய்க்குப் பின் மோடி பிரதமர் பதவியை ஏற்க உள்ளார். குஜராத் மாநிலத்தில் இருந்து 2-வதாக பிரதமர் பொறுப்பை மோடி ஏற்க உள்ளார்.

ஆட்சியை பிடிக்கிறது பாரதீய ஜனதா; 1984க்கு பின்னர் தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெறுகிறது

பாராளுமன்றத் தேர்தலில் 1984ம் ஆண்டுக்கு பின்னர் பாரதீய ஜனதா கட்சி தனிபெரும்பான்மையுடன் வெற்றி பெற உள்ளது.
16–வது பாராளுமன்றத்தை அமைப்பதற்கான தேர்தல் 9 கட்டங்களாக நடந்தது. ஏப்ரல் மாதம் 7–ந் தேதி தொடங்கி கடந்த 12–ந் தேதி வரை அமைதியாக நடந்து முடிந்தது. இதுவரை இல்லாத அளவில் இந்த தேர்தலில் சாதனை அளவாக 66.38 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. 81 கோடியே 40 லட்சம் பேர் ஓட்டுப்பதிவு செய்து தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றினர்.

சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள்: விரைவில் வெளியாகும் என தகவல்

சி.பி.எஸ்.இ பாடத்திட்டதின் +2 மற்றும் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இம்மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது.

சி.பி.எஸ்.இ 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் இம்மாதம் 25ம் தேதியும் வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. மணவர்கள் தங்கள் தேர்வு முடிவுகளை www.cbse.nic.in., www.cbseresults.nic.in ஆகிய இணையதளங்களில் சென்று பார்த்துக்கொள்ளலாம்

மேலும் எஸ்.எம்.எஸ் மூலமாகவும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

மாற்றத்திறனாளிகள் பள்ளியில், 2 பேர் மட்டுமே தேர்ச்சி : மாவட்ட சங்கத்தினர் அதிருப்தி


தர்மபுரி மாவட்டத்தில், மாற்றத்திறனாளிகள் பள்ளியில், தேர்வு எழுதிய, 24 மாணவ, மாணவிகளில், இருவர் மட்டுமே தேர்ச்சி பெற, அதிகாரிகளின் மெத்தனப்போக்கே காரணம்,' என, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் மாவட்ட தலைவர் சரவணன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:

400 ஆண்டுகள் பழமையான பத்மநாபபுரம் அரண்மனைக்கு யுனெஸ்கோ விருது

நாகர்கோவில்: பத்மநாபபுரம் அரண்மனைக்கு உலக பாரம்பரிய சின்னமாக யுனெஸ்கோ விருது வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேலும் இந்த அரண்மனையை பார்க்க உலக நாடுகளில் இருந்து வரும் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
400 ஆண்டுகள் பழமையானது பத்மநாபபுரம் அரண்மனை. குமரி மாவட்டம் 1956 நவம்பர் மாதம் 1 ம்தேதி தமிழகத்துடன் இணைந்தது. மாவட்டம் பிரிக்கப்பட்ட போது பத்மநாபபுரம் கேரள அரசின் கட்டுப்பாட்டுக்குள்

வங்கி வீட்டுக்கடன் பெறுவதில் உள்ள பிரச்னைகளை களைவது எப்படி.?

வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் செய்து பார்' என்பது அனைவரும்ஒருமுறையாவது உச்சரிக்கும் கிராமத்து பழமொழி. வீடுகட்டுவதற்கு அனைவருக்கும் வசதி இருப்பதில்லை. இதற்காககடன்களை பெற நினைக்கும் போது முதலில் மனதில் தோன்றுபவை வங்கியின் வீட்டுக்கடன்களே. அவற்றைப் பெறுவதில் வரும் சிக்கல்களைப் பற்றி இந்தகட்டுரையில் பார்ப்போம்.
வீட்டுக் கடன்களைப் பெறுவது விளம்பரங்களில் காண்பது போல்மிகவும் எளிதானதாக இருந்தாலும், அது மிகவும் கடினமான மற்றும் நீளமான செயல்பாடாகவே உள்ளது. வட்டி விகிதங்கள் நிலையற்றதாக இருப்பதால் இந்தியாவில்

குடும்ப ஓய்வூதியத்தில் 2-வது மனைவிக்கும் பங்கு உண்டு: உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல், 2-வது திருமணம் செய்த பெண்ணுக்கு கணவரின் குடும்ப ஓய்வூதியத்தில் பாதியைப் பெறுவதற்கு உரிமை உண்டு என உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.
கன்னியாகுமரி-கீழகல்குறிச் சியைச் சேர்ந்த விசாலாட்சியம்மாள், உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
என் கணவர் ஸ்தானுத்தான் தம்பிக்கும் எனக்கும் 1958-ல் திருமணம் நடைபெற்றது. 2 மகள்கள் உள்ளனர். முதன்மைக் கல்வி அதிகாரியான எனது கணவர் என்னை விவாகரத்து செய்யாமலேயே 1965-ம் ஆண்டு வசந்தகுமாரி தங்கச்சி என்பவரை 2-வது திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர்

தலைமை ஆசிரியர்கள் வாரம் இருமுறை ஆசிரியர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டும்

தொடக்கக் கல்வித் துறையின் கீழ் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் தங்களது பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்களின் செயல்பாடுகளை வாரம் இருமுறையாவது பார்வையிட்டு கண்காணிப்புப் பதிவேட்டில் பதிவுகள் செய்து அலுவலர்கள் பார்வையின் போது சமர்ப்பிக்க வேண்டும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் லூ. ஜான் சேவியர்ராஜ் கூறினார். ஸ்ரீவில்லிபுத்தூரில் புதன்கிழமை அனைத்து வகுப்புகளிலும் 100 சதவீதம் வாசிப்புத் திறனை உருவாக்குதல், மாணவர்களை தொடர் மதிப்பீடு செய்தல் மற்றும் பள்ளி நடைமுறைகளை மதிப்பீடு செய்தல் தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு வழிகாட்டு

இணையத்தில் தேர்தல் எண்ணிக்கை நேரடி ஓளிபரப்பு-

 கீழே உள்ள இணைப்பின் மீது கிளிக்செய்து,தங்கள் மொபைல் எண் கொடுத்து ரிஜஸ்தர் செய்து பாஸ்வேர்டு பெற்று இணையத்தில் நேரடியாக வாக்கு எண்ணிக்கையை க்காணலாம்


http://180.179.164.28:8081/TNP/

ஆசிரியர் பணி: மன நிறைவா? மன உளைச்சலா?ஆ. பழனியப்பன்

மாறிவரும் கல்விச்சூழலில் தங்களது பணியில் எதிர்கொள்கிற சவால்கள், பிரச்சினைகள் குறித்து மனம் திறந்து பேசுகின்றனர் ஆசிரியர்கள் செப்டம்பர் 5: ஆசிரியர் தினம்
கற்றல் மற்றும் கற்பித்தல் முறைகள் தொடர்ச்சியாக மாறிவருகின்றன. கால மாற்றங்களுக்கு ஏற்ப மாணவர்களின் சிந்தனைப் போக்கிலும்
பெரும் மாற்றம் காணப்படுகிறது. இப்படியான கல்விச்சூழலில், கல்வித்தேரை இழுத்துச் செல்லும் ஆசிரியர்களின் மனநிலை எப்படி இருக்கிறது? அவர்கள் சந்திக்கிற சவால்கள், பிரச்சினைகள் என்ன? ஆசான் என்கிற மகத்துவம் மிகுந்த பணியை அவர்கள் எப்படிப் பார்க்கிறார்கள்? இதுகுறித்து சில ஆசிரியர்களிடம் பேசினோம்...

மதுராந்தகத்தைச் சேர்ந்த மா.ச.முனுசாமி, ஆசிரியர் பணி மீதான பேரார்வம் காரணமாக, சுகாதாரத்துறை அதிகாரி பதவியை உதறிவிட்டு ஆசிரியர் பணிக்கு வந்தவர். முன்னுதாரண ஆசிரியர் என்ற பெருமையைப் பெற்ற முனுசாமி, தனது அனுபவங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்:

புதிதாக சேர்ந்த அரசு ஊழியர்கள் சம்பளம் பெறுவதில் சிக்கல்

தமிழக அரசு ஊழியர்களுக்கு,பங்களிப்பு ஓய்வூதிய திட்டம், கடந்த 2003 ஏப்ரல் மாதம் முதல் அமலில் உள்ளது. இந்த ஆண்டிற்கு பிறகு, பணியில் சேர்ந்துள்ள அரசு ஊழியர்கள், மற்றும் பணி வரன் முறை பெறாத அரசு

அரசு சம்பளத்தை வாங்கி ஆன்லைன் வியாபாரத்துல ஆசிரியருங்க இறங்குறாங்க...’ - பீட்டர் மாமா Dinakaran

பிளஸ்2வுல சாதனை புரிஞ்ச பள்ளிங்க பத்தி தான் பெருசா போட்டாங்க, ஒருத்தரு கூட பாஸ் ஆகாத பள்ளிங்க இருக்கே. அது பத்தி பெரிசா வரலியே. நான் சொல்றது என்னான்னா, இதுக்கு காரணம் ஆசிரியருங்க
தான்...’
‘கரெக்டா சொன்னே...மதுரை மாவட்டத்துல

பொதுச்செயலரின் மே 10 பயணம்-புகைப்படங்கள்

ஊத்தங்கரையில்  வித்யாமந்திர் பள்ளிதாளாளரும்,முன்னாள் கிருஷ்ணகிரி மாவட்டச்செயலருமான திரு.சந்திரசேகரன் அவர்களை  சந்தித்து மாநிலத்தில்+2 தேர்வில் முதலிடம் பெற்றமைக்காக வாழ்த்திய போது

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாரக்கிளை சிரப்பு பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்று கலந்துரையாடிய போது

ஆசிரியர்கள்/ஆசிரியர் அல்லாதோர் நீண்ட நாள் விடுப்பிலுள்ளவர்கள் விவரம் கோருதல் சார்ந்து-தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறை

CLICK HERE-DEE SEEKS LONG LEAVE & LONG ABSENT TRS LIST

பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் -விண்ணப்ப படிவம்

பள்ளி மாணவர்களுக்கான இலவச பஸ் பாஸ் -விண்ணப்ப படிவம்

      SCHOOL FREE BUS PASS DOWNLOADS
S.NO FILE NAME DOWNLOAD
1 Application Form Click Here
2 Instruction Click Here
3 Soft Copy Format Click Here
4 Delivery Challan Click Here

முன்னுரிமைப்பட்டியல் தயாரிப்பது சார்ந்து அறிவிக்கப்பட்டமிக முக்கிய அடிப்படை செயல் முறைக்கடிதங்கள்

இச்செயல் முறைகளே பல சிக்கல்களுக்கும் சந்தேகங்களுக்கும் அடிப்படை  வழிகாட்டியாக அமைகிறது.

1.தொடக்கக்கல்வி இயக்குனர் செயல் முறைக்கடிதம்-
    ந.க.எண்-அ 5939/ஈடி1/2001,நாள்-15.11.2001,

2.தொடக்கக்கல்வி இயக்குனர் செயல் முறைக்கடிதம்-
   ந.க.எண்-  9683/டி1/2004.நாள்-03.05.2004
                            click here to download                  
3.தொடக்கக்கல்வி இயக்குனர் செயல் முறைக்கடிதம்-
  ந.க.எண்-  36379/டி3/2008.நாள்-18.11.2008
                          click here to download    

ஆசிரியர் பேரணி-மே-5 இதழ் ( தமிழ்நாடுஆசிரியர் கூட்டணியின் அதிகாரபூர்வ இதழ்)

படிக்க இங்கே கிளிக் செய்யவும்

கண் தானம் செய்வது எதற்கு? எப்படி?... யாரெல்லாம் செய்யலாம்... மேலும் சில ...


மண்ணுக்குள் புதைக்கும் கண்களை
மனிதருக்குள் விதைப்போம்...

கண் வங்கி என்றால் என்ன?

விழி வெண்படல மாற்று அறுவை சிகிச்சை, ஆராய்ச்சி மற்றும் கல்வி ஆகிய பயன்பாடுகளுக்கு கண் தானம் அளிப்பவர்களின் கண்களை மதிப்பிட்டு பார்வையில்லாதோருக்கு தானம் செய்வதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பே கண் வங்கி. மாற்றுக் கண் பொறுத்தப்படுவோரின் பாதுகாப்பை உறுதி செய்ய தீவிரமான மருத்துவ அளவுகோல்களின் பரிசோதனைகளின்படி தானம் செய்யப்பட்ட கண்கள் மதிப்பீடு செய்யப்படுகிறது.

தனியார் பள்ளிகளில் கட்டண விவரம் வெளியிட சேலம் கோர்ட் உத்தரவு

சேலம் மாவட்டத்தில் உள்ள, தனியார் பள்ளிகள் அனைத்திலும், அரசு நிர்ணயித்த கட்டணப் பட்டியல் வைக்க வேண்டும்' என, சேலம் மக்கள் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டார். கடந்த, 2001ம் ஆண்டு, தனியார் பள்ளிகள் அதிகப்படியான கட்டணத்தை நிர்ணயம் செய்து வசூலிப்பதாக, பொதுமக்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து, நீதிபதி சிங்காரவேலு தலைமையிலான குழுவை, தமிழக அரசு அமைத்தது. அந்த குழுவினர், ஒவ்வொரு பள்ளி வாரியாக சென்று ஆய்வு நடத்தினர். பள்ளிகளின் தரம், தன்மைக்கு ஏற்ப, புதிய கட்டணத்தை நிர்ணயம் செய்து அந்த குழுவினர் வெளியிட்டனர்.

அண்ணாமலை பல்கலைக்கழகம் மே மாத தேர்வு நுழைவு சீட்டு இணைய தளம் மூலம் வெளியிடப்பட்டது.



Hall Ticket for Directorate of Distance Education - May 2014 Examinations

Enter Roll Number / Register Number 

Instructions to Candidates writing exams at Annamalainagar, Chennai, Chengalpattu and other States in India. (Except Pudhuchery & Karaikal)

கண்டித்த ஆசிரியையை கன்னத்தில் அறைந்த +1 மாணவன் Dinamalar Tea Kadai Bench



''மாணவ சமுதாயம் இப்படியே ரசுவு காட்டினா, எதிர்காலத்துல, பள்ளிக்கூடங்கள்ல கூட, இவங்களைச் சேர்க்க மாட்டாங்க போலிருக்கேங்க...'' என, அடுத்த தகவலைத் துவக்கினார் அந்தோணிசாமி.
''என்ன ஓய் சொல்ல வர்றீர்... என்ன பிரச்னை...'' எனக் கேட்டார் குப்பண்ணா.

''கடலுார் மாவட்டம், விருத்தாசலத்திலுள்ள, தனியார் கிறிஸ்துவ மேல்நிலைப் பள்ளியில, தேர்வு நேரத்துல, பிளஸ் 1 மாணவன் ஒருத்தன், வகுப்புல தவறு செஞ்சான்... அந்த அறையில இருந்த ஆசிரியை, அவனைக் கண்டித்தார்... உடனே அவன், அந்த ஆசிரியையை, 'பளார்'ன்னு கன்னத்துல அறைஞ்சுட்டான்...

அரசுப் பள்ளிகளையும் ஆசிரியர்களையும் இன்னமும் குறை கூறும் புண்ணியவான்களுக்கு.... சில கேள்விகள்

அரசு மருத்துவரின் குழந்தைகள் அரசு மருத்துவமனையில் தானே சிகிச்சை எடுக்கவேண்டும்!
 
அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுநர் நடத்துநரின் குழந்தைகள் அரசு பேருந்தில் தானே பயணிக்க வேண்டும்!
 
அரசு கல்லூரி விரிவுரையாளர்களின் குழந்தைகள் அரசு கல்லூரியில் தானே படிக்க வேண்டும்!
 
கோஆப்டெக்ஸ்-ல் பணி புரிபவர்களின் குழந்தைகள் கோஆப்டெக்ஸ்-ல் தானே துணி எடுக்கவேண்டும்!
 
அரசு வங்கிகளில் பணி புரிபவர்களின் குழந்தைகள் அரசு வங்கிகளில் தானே வங்கிக்கணக்கு வைத்திருக்கவேண்டும்!
 
அரசு தபால்துறையில் பணி புரிபவர்களின் குழந்தைகள் அரசு தபால்துறை மூலமாகத்தானே கடிதங்கள் அனுப்ப வேண்டும்!
 
BSNL-ல் பணி புரிபவர்களின் குழந்தைகள் BSNL SIMCARD தானே வைத்திருக்கவேண்டும்!
 
 
லஞ்சம் கொடுக்காமல் அனைத்து வேலைகளையும் முடிப்பேன் என்று கூறும் சமானியன் யாராவது இருக்கிரார்களா?
 
இவையெல்லாம் நடக்க இயலாதபோது...

மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் -தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி


மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என செங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

செங்கத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி செங்கம் வட்ட கிளையின் பொதுக்குழு கூட்டம் துக்காப்பேட்டை அரசு தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு வட்டாரத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். முன்னாள் மாநில பொருளாளர் அப்துல் காதர், ஆசிரியர் ராஜவேலு, மாவட்ட செயலாளர் ரஷீத், பொருளாளர் அர்ஜுனன்

ஆசிரியர் பொது மாறுதல் குறித்த அறிவிப்பு மே-28 க்கு பின்னரே வெளியிடப்படும்

ஆசிரியர் பொது மாறுதல் குறித்த அறிவிப்பு மே-28 க்கு பின்னரே வெளியிடப்படும் என்றும் மாறுதல் ,பதவி உயர்வு மற்றும் கடைபிடிக்கப்படும் பேனல் குறித்து தெளிவாக அறிவிப்பில் குறிப்புகள் இடம் பெறும் என தொடக்கக்கல்விஇயக்குனர் நேற்றைய தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொறுப்பாளர்கள் செ முத்துசாமி தலைமையில் சந்திப்பின் போது தெரிவித்தார்
தகவல்
ரக்‌ஷித்,
மாநிலதுணைத்தலைவர்

பௌர்ணமி நாட்களில் திருவண்ணாமலை நகரத்தில் இயங்கும் நகராட்சி தொடக்க/நடுநிலைப்பள்ளிகளுக்கு காலை 8.30 முதல் மதியம்12.30மணி வரை மட்டுமே இயங்க ஏதுவாக கால அட்டவனை மாற்றம் செய்ய தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

பௌர்ணமி என்றால் திருவண்னாமலைஎன்னும் அளவிற்கு இன்று திருவண்ணாமலை கிரிவலம் புகழ் பெற்றுள்ளது.
                 அன்றையதினம் பல லட்சம் மக்கள் கிரிவலம் வர  திருவண்ணாமலையில் கூடுகிறார்கள், கிரிவலப்பாதையிலேயே 8 நகராட்சி தொடக்க நடுநிலைப்பள்ளிகள் இயங்குகின்றன
            பிற பள்ளிகள் திருவண்ணாமலைக்கு வரும் முக்கிய சாலைகளில் இயங்குகிறது.
திருவண்ணாமலையில்  பௌர்ணமி கிரிவல நாட்களில் கட்டுக்கடங்காத கூட்டம், வாகனங்களின் தொடர் அணிவகுப்பு, போக்குவரத்து நெரிசல், வியாபாரத்திற்காக தற்காலிக க்கடைகள் திடீர் தோற்றம் இதன் காரணமாக தொடக்க /நடுநிலைப்பள்ளிகளுக்கு மாணவர்கள் வருவதில் தடப்பிரச்சினையில் பெறும் சிக்கல் உள்ளது

நிதி உதவி பெறும் தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கல வழிக்கல்வி இணைவகுப்புகள் தொடங்க அனுமதிக்க வேண்டும்-தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

தமிழகத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கிலவழி இணை வகுப்புகள் தொடங்கி நடத்துவதைப்போன்று நிதி உதவி பெறும்பள்ளிகளிலும் இந்த ஆண்டுமுதல் ஆங்கிலவழி இணை வகுப்புகள் தொடங்கி நடத்த அனுமதிக்க வேண்டும் என தொடக்கக்கல்வி இயக்குனருக்கு நேற்றைய சந்திப்பின் போது மனு அளிக்கப்பட்டது. இதனால் தனியார் நிதி உதவி பெறும் பள்ளிகளில் பணியிடக்குரைப்பு என்ற பாதிப்பில் இருந்து  நீங்கி தற்போது பணியாற்றும் ஆசிரியர்கள் பணியிடம் பாதுகாக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டது.

வீடுகட்டும் கடன்பெற துறைஅனுமதி அளிக்கும் அதிகாரம் நியமன அதிகாரிகளுக்கு வழங்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் வீடுகட்ட கடன் கோரி விண்னப்பிக்கும் போது துறை அனுமதி பெற சென்னை இயக்குனரகத்திற்கு விண்ணப்பிக்க வேண்டியுள்ளது.
கன்னியாகுமரி முதல் சென்னை வரை பணியாற்ரும் அனைத்து ஆசிரியர்களும் இதன் பொருட்டு சென்னை வந்து அலைய வேண்டி உள்ளது.
தமிழக அரசு கடவுச்சீட்டு பெற தடையில்லா சான்று வழங்கும் அதிகாரத்தை அதிகாரப்பரவல் மூலம் நியமன் அலுவலருக்கே வழங்கியது போன்று வீடுகட்ட கடன் அனுமதிக்கும் அதிகாரத்தை யும்

வங்கி கல்விக் கடன் வட்டி விகிதம் திடீர் உயர்வு: அதிகரிக்கிறது பெற்றோரின் சுமை

கோப்பு படம்
வங்கிகளில் கல்விக் கடனுக்கான வட்டிவிகிதம் உயர்த்தப்பட்டுள் ளதால் பெற்றோரின் சுமை அதிகரித் துள்ளது.
மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளும், தனியார் வங்கிகளும் கல்விக் கடன் வழங்கி வருகின்றன. கல்விக் கடனுக்கான வட்டியை பெற்றோர் மாதந்தோறும் செலுத்த வேண்டும். இக்கடனுக்கான அசல் தொகையை மாணவர் படித்து முடித்து வேலைக்குப் போன பிறகு செலுத்தினால் போதும்.
கல்விக் கடனைப் பொருத்தவரை மகனாக இருந்தால் படித்து முடித்து வேலைக்குப் போய் கடனை அடைத்துவிடுவான் என்று நினைக்கும் பெற்றோர், மகளாக இருந்தால் படித்து முடித்து வேலைக்குப் போனாலும் திருமணத்துக்குப் பிறகு கல்விக் கடனை அடைக்காமல் போய்விடக் கூடும் என்பதால் மகளை கடன் வாங்கி படிக்க வைக்க அவர்கள் விரும்புவதில்லை. இதுபோன்ற காரணத்தால் மாணவிகள் படிக்கா மல் இருந்துவிடக்கூடாது என்பதால், மாணவிகளுக்கு அரை சதவீதம் குறைவான வட்டியில் வங்கிகள் கல்விக் கடன் அளிக்கின்றன. “ஆண்டுதோறும் சத்தமில்லாமல் கல்விக் கடனுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் அதிகரித்து விடுகின்றன” என்று பெற்றோர் புகார் கூறுகின்றனர்.
இந்தியன் வங்கியில் கல்விக் கடன் வட்டி மாணவனுக்கு 12.05 சதவீதமாகவும், மாணவிக்கு 12 சதவீதமாகவும் இருந்தது. இது, தற்போது மாணவனுக்கு 0.50 சதவீதமும், மாணவிகளுக்கு 0.05 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று அந்த வங்கியின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ஆண்டுக்கு சராசரியாக ரூ.1 லட்சம் வரை கல்விக் கடன் வழங்கப்படுகிறது. இதுவரை வாங்கிய கடன் ரூ.3 லட்சம் என்று வைத்துக் கொண் டால் மேற்கண்ட புதிய வட்டி விகிதத்தின்படி மாணவனாக இருந்தால் ஆண்டுக்கு ரூ.1500-ம், மாணவியாக இருந்தால் ரூ.150-ம் அதிகமாக செலுத்த வேண்டும்.
இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் மாணவனுக்கான கல்விக் கடன் வட்டி 12.25 சதவீதம், மாணவிக்கு 11.75 சதவீதம், கனரா வங்கியில் மாணவனுக்கு 11.75 சதவீதம், மாணவிக்கு 11.25 சதவீதம், தனியார் வங்கியான தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கியில் மாணவ, மாணவி என இருபாலருக்கும் ஒரேமாதிரியாக 14.25 சதவீதம் கல்விக் கடன் வட்டி வசூலிக்கப்படுகிறது. இந்த வங்கிகளில் கடந்த ஆண்டு வட்டி விகிதமே நீடிக்கிறது என்றும் இந்தாண்டு இதுவரை வட்டி விகிதம் உயர்த்தப்படவில்லை என்றும் அந்த வங்கிகளின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாரத ஸ்டேட் வங்கியைப் பொருத்தவரை ரூ.4 லட்சம் வரையிலான கல்விக் கடனுக்கு மாணவனிடம் 13.50 சதவீத வட்டியும், மாணவியிடம் 13 சதவீத வட்டியும் தற்போது வசூலிக்கப்படுகிறது. கடந்த ஆண்டு நவம்பர் 7-ம் தேதி 0.20 சதவீதம் கல்விக் கடன் வட்டி உயர்த்தப்பட்டது என்று அவ்வங்கி அதிகாரி ஒருவர் கூறினார்.

பிறந்த தேதி திருத்தம் செய்வது எப்படி?


பிறந்த தேதி திருத்தம் செய்வது எப்படி?

பள்ளி / கல்லூரி சான்றிதழ்களில் பிறந்த தேதியோ, வருடமோ, மாதமோ தவறாகக் குறிப்பிடப்பட்டிருந்தால் அந்தந்த எல்லைக்குட்பட்ட சிவில்(முன்சீஃப்) நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து மாற்றிக்கொள்ள வேண்டும்.

இன்று தமிழக அரசு செய்யத் தகுந்தது எதுவோ, அதைக் கர்நாடக அரசும், கேரள அரசும் உறுதியாகச் செய்ய முற்பட்டுள்ளன. Dinaman

தாய்மொழிக்கு எதிரான உச்சபட்ச அநீதி
அண்மையில் கர்நாடக மாநில அரசின் தொடக்கப் பள்ளிகளில் கன்னடம் ஐந்தாம் வகுப்பு வரை பாடமொழி என்ற நடைமுறைக்கு எதிராக உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு பனையேறி விழுந்தவனைக் கிடாய் ஏறி மிதித்ததுபோல் விபரீதமானது. இந்தியாவின் மாநில மொழிகள் அனைத்தின் எதிர்கால நிரந்தர அழிவுக்கு வாய்ப்பும் வசதியும் செய்து கொடுக்கிற வன்கொடுமைக்கு வரவேற்புத் தருவது.
தாய்மொழியை எப்பாடு பட்டேனும் காக்க உறுதி பூண்டிருக்கும் மக்கள் இந்தத் தீர்ப்பை அடியோடு மாற்ற என்ன செய்ய வேண்டும் என்று சிந்தித்து விரைந்து முடிவெடுக்க வேண்டிய தருணம் இது.

+2- மே 21ல், புகைப்படத்துடன் கூடிய மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும்


பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களுக்கு, எவ்வித பிழையும் இன்றி மதிப்பெண் சான்றிதழ் வழங்க, தேர்வுத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பிளஸ் 2 தேர்வு முடிகள், மே 9ல் வெளியாகின. அன்றே, அனைத்துப்பள்ளிகளுக்கும், மாணவர்களின் தேர்வு எண் படி, மதிப்பெண் பட்டியல் தொகுப்பு வழங்கப்பட்டது.

டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் 'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கு வாய்ப்பு

ஆசிரியர் தகுதித்தேர்வில் (டி.இ.டி) தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில், 'ஆப்சென்ட்' ஆனவர்களுக்கும், சான்றிதழை சமர்ப்பிக்க முடியாதவர்களுக்கும், இன்று, அந்தந்த மாவட்டங்களில்,
சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடக்கிறது.

உடனடியாக மதிப்பெண் சான்றிதழ் பெறுவது எப்படி?


மதிப்பெண் சான்றிதழையோ அல்லது பள்ளி இறுதி வகுப்பு மாற்றுச் சான்றிதழையோ தொலைத்த மாணவர், டூப்ளிகேட் சான்றிதழுக்கு விண்ணப்பித்து அது கிடைக்கும்வரை, சி.சி.எம். எனப்படும் சான்றிட்ட மதிப்பெண் நகலை (சர்ட்டிபைடு காப்பி ஆஃப் மார்க்‌ஷீட்) அரசுத் தேர்வுகள் இயக்ககத்திலிருந்து பெற்று உபயோகிக்கலாம்.

என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூன் 3–வது வாரம் தொடங்கும் அண்ணா பல்கலைக்கழக அதிகாரி தகவல்


என்ஜினீயரிங் படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு சென்னையில் மட்டுமே நடத்தப்படும் என்றும், ஜூன் 3வது வாரம் கலந்தாய்வு தொடங்கும் என்றும் அண்ணாபல்கலைக்கழக அதிகாரி தெரிவித்தார்.
என்ஜினீயரிங் சேர்க்கை

தமிழ்நாட்டில் 570 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக். படிப்பில் சேர அரசு ஒதுக்கீட்டில் இடங்கள் 2 லட்சம் உள்ளன. இது போக 85 ஆயிரம் இடங்கள் நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ளன.
அரசு ஒதுக்கீட்டு இடங்களான 2 லட்சம் இடங்களில் சேர்வதற்காக அண்ணாபல்கலைக்கழகம் உள்பட தமிழ்நாடு முழுவதும் 60 இடங்களில் விண்ணப்ப படிவம் கொடுக்கப்பட்டு வருகிறது. விண்ணப்பங்கள் 20–ந்தேதி வரை வழங்கப்பட உள்ளன. அந்த தேதிதான் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை சமர்ப்பிக்கவும் கடைசி நாள். இப்போதே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அண்ணா பல்கலைக்கழகத்திற்கு மாணவர்கள் அனுப்பி வருகிறார்கள்.
சென்னையில் மட்டும் கலந்தாய்வு

விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க நாளை (மே 14) கடைசி நாள்


பனிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான விடைத்தாள் நகல் பெறுவதற்கும், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க நாளை (புதன்கிழமை) கடைசி நாளாகும். இது குறித்து மேல்நிலைப் பள்ளிகளுக்கு அரசுத் தேர்வுகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம்.

விடைத்தாள் நகல், மறுகூட்டல் செய்வதற்கான கால அவகாசம் மே 14ஆம் தேதி வரை வழங்கப்பட்டுள்ளது. இவற்றை மேற்கொள்ள விரும்புவோர் தாங்கள் பயிலும் பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வு எழதிய தேர்வு மையங்கள் மூலம் ஆன் லைன் முறையில் விண்ணப்பங்ளை பதிவேற்றம் செய்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு பள்ளிக்கும் இதற்கென தனியாக யூசர் ஐடி மற்றும் பாஸ்வேர்டு வழங்கப்பட்டுள்ளது.

ஓய்வூதியம் அவசியமாவது ஏன்?

அரசாங்க உத் தியோகத்தில் சேர விரும்பு வதற்கான முக்கியக் காரணமே ஓய்வூதியம் (பென்ஷன்) என்ற கவர்ச்சிகரமான விஷயமே. நாளுக்கு நாள் கூட்டுக் குடும் பங்கள் சிதைந்து தனி மரமாக மாறிக் கொண்டிருக்கும் சூழ் நிலையில், ஓய்வூதியம் தனி மனி தனுக்கு மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.

பள்ளியில் பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இலவச சீருடை வேறுபாடின்றி வழங்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோரிக்கை

தொடக்க நடுநிலைப்பள்ளிகளில் தற்போது இலவச சீருடை சத்துணவு உண்ணும் மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது
                               அரசு ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில்,தாழ்த்தப்பட்ட,பிற்படுத்தப்பட்ட மற்றும் பொருளாதாரத்தில் பிந்தங்கிய சமூகத்தைச்சார்ந்த மக்களின் பிள்ளைகளே பயில்கின்றனர் ,                      சத்துணவு உண்பவர்களுக்கு மட்டுமே சீருடை அளிப்பது என்ற முடிவானது ,அரசே   மாணவர்களிடையே பாகுபாடு உணர்வோடு செயல்படுகிறது என்ற தவறான கருத்து மக்கள் மத்தியில் எழ வாய்ப்புள்ளது.மேலும்  சீருடை  என்பது மாணவர்களிடையே உயர்வு தழ்வினை போக்கி சரி நிகர் சமானம் என்ற கொள்கைக்கு  முரண்பாடாக அரசின் இம்முடிவுஉள்ளது என்பதால்

டபுள் டிகிரி ரத்து விவகாரம்; தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்


நடுநிலைப்பள்ளி உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தும் போது பட்டதாரி அசிரியர் பணியிடங்கள் பணி ஈர்ப்பு முறையில் மாற்றம் செய்ய கோரிக்கை- இந்த ஆண்டு மாற்றப்படும் என இயக்குனர் உறுதி

                 12.05.2014 பள்ளிக்கல்வி இயக்குநருடன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு. செ.முத்துசாமி தலைமையில் மாஅநிலப்பொறுப்பாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. அப்பொழுது தொடக்கக் கல்வித்துறையின் கீழ் உள்ள நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தும் பொழுது தற்பொழுது நடைமுறையில் உள்ள விதிகளை மாற்றி அதாவது அதே பள்ளியில் பணிப்புரியும் பட்டதாரி ஆசிரியர்கள் மட்டுமே பணியிடத்துடன் பனி ஈர்ப்புக்கு  அனுமதித்தல் என்பதை அதே பள்ளியில் பணிப்புரியும் பட்டதாரி ஆசிரியர்கள் விருப்பின்மை தெரிவித்தால், அப்பணியிடத்திற்கு அவ் ஒன்றியத்தில் உள்ள மற்ற  விருப்பமுள்ள (அதே பாடத்தின்) பட்டதாரிஆசிரியர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பணி ஈர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை மனு அளிக்கப்பட்டது .

தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு வாரத்தின் முதல் சனிக்கிழமை அன்று விடுமுறை அளிக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு

இன்று தொடக்கக்கல்வி இயக்குநருடன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலபொறுப்பாளர்கள் பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி Ex.M.L.C தலைமையில் சந்திப்பு நடைபெற்றது.
        அப்பொழுது தொடக்கக் கல்வித்துறையின் கீழ் உள்ள தொடக்க / நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் குறைகளைப்போக்கும் வண்ணம் உதவித்தொடக்கக்கல்வி அலுவலகங்களில் குறைகேட்பு முகாம் மாதத்தின் முதல் சனிக்கிழமைகளில்  நடத்தப்படுகிறது.

தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இவ்வாண்டு துறை மாறுதல் வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்-பள்ளிக்கல்வி இயக்குனர்

                                                   12.05.2014 அன்று மதியம் 1.30 மணியளவில்தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலபொறுப்பாளர்கள் பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி Ex.M.L.C தலைமையில் பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களை சந்தித்து தொடக்கக்கல்வி துறையில் உள்ள நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு 2008 ஆம் ஆண்டு வழங்கப்பட்டதைப்போன்று துறை மாறுதல் மூலம் விருப்பமுள்ளவர்கள் உயர்நிலை/ மேல் நிலைப்பள்ளிகளுக்கு மாறுதல் வாய்ப்பு வழங்க வேண்டி மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொறுப்பாளர்கள் தொடக்கக்கல்வி இயக்குனருடன் சந்திப்பு

                                    12.05.2014 அன்று மதியம் 11.30 மணியளவில்தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலபொறுப்பாளர்கள் பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி Ex.M.L.C தலைமையில்,மாநிலத்தலைவர்  கு.சி.மணி,மற்றும் மாநில துணைத்தலைவர்கள் கே.பி.ரக்‌ஷித்,முருகேசன்,மாநில துணைப்பொதுச்செயலர் விஜயகுமார் மற்றும் தலைமை நிலையச்செயலர் க.சாந்தகுமார்,பொதுச்செயலரின் நேர்முக உதவியாளர் வடிவேலு ஆகியோர் கொண்ட குழு சந்தித்து மாநிலத்தில் உள்ல ஆசிரியர்கள் பிரச்சிணைகள் குறித்து விரிவாக  எடுத்துரைக்கப்பட்டது.

குறிப்பாக 7 மாவட்டங்கள் சார்ந்த ஆசிரியர்கள் மாவட்ட வாரியாக இயக்குனருடன் தங்கள் வட்டரம் மறறும்,தனிநபர் பிரச்சினைகள் குறித்து, மாவட்ட வாரியாக   அழைக்கப்பட்டு  இடர்பாடுகள் உதவித்தொடக்கக்கல்வி அலுவலகச்செயல்பாடுகளின் மெத்தனப்போக்கு மற்றும் ஆசிரியர் விரோதப்போக்குகள் இயக்குனர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.



web stats

web stats