மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும் என செங்கத்தில் நடைபெற்ற தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செங்கத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி செங்கம் வட்ட கிளையின் பொதுக்குழு கூட்டம் துக்காப்பேட்டை அரசு தொடக்கப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு வட்டாரத் தலைவர் பன்னீர்செல்வம் தலைமை வகித்தார். முன்னாள் மாநில பொருளாளர் அப்துல் காதர், ஆசிரியர் ராஜவேலு, மாவட்ட செயலாளர் ரஷீத், பொருளாளர் அர்ஜுனன்
ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரச் செயலாளர் ஜான்வின்சென்ட் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுச்செயலாளர் செ.முத்துசாமி கலந்துகொண்டு சங்க செயல்பாடுகள் குறித்துபேசினார்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையான தர ஊதியம் வழங்க தமிழக அரசை கேட்டுக் கொள்ளப்படுகிறது. வட்டார அளவில் மாதத்தில் முதல் சனிக்கிழமை நடைபெறும் ஆசிரியர் குறைதீர் கூட்டத்தில் ஆசிரியர்கள் கலந்துகொண்டு குறைகளை தெரிவிக்க ஏதுவாக, அன்று பள்ளிகளுக்கு விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும். நடைபெற்ற தேர்தலில் பணியாற்றிய ஆசிரியர்கள் அனைவருக்கும் தபால் ஓட்டுகள் முறையாக வழங்கப்படவில்லை. இதனால் ஆசிரியர்கள் அவர்களின் வாக்குரிமையை செலுத்தவில்லை. இதனை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மூலம் வன்மையாக கண்டிக்கிறது. இதுகுறித்து தேர்தல் ஆணையம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
உடன் தலைமை நிலைய செயலாளர் சாந்தகுமார், நேர்முக உதவியாளர் வடிவேலு, செங்கம் வட்ட கிளை நிர்வாகிகள் நித்யானந்தம், ராஜேஸ், உள்பட ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment