Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

அரசு சம்பளத்தை வாங்கி ஆன்லைன் வியாபாரத்துல ஆசிரியருங்க இறங்குறாங்க...’ - பீட்டர் மாமா Dinakaran

பிளஸ்2வுல சாதனை புரிஞ்ச பள்ளிங்க பத்தி தான் பெருசா போட்டாங்க, ஒருத்தரு கூட பாஸ் ஆகாத பள்ளிங்க இருக்கே. அது பத்தி பெரிசா வரலியே. நான் சொல்றது என்னான்னா, இதுக்கு காரணம் ஆசிரியருங்க
தான்...’
‘கரெக்டா சொன்னே...மதுரை மாவட்டத்துல சுத்து வட்டார பகுதிகள்ல ஆசிரியருங்க என்ன பண்றாங்க தெரியுமா? ஆன்லைன் பொருட்களை எல்லாம் வீடு வீடா டெலிவரி பண்ணி பணம் சம்பாதிக்கறாங்களாம். இதுனால, ஸ்கூலுக்கு தலை காட்டிட்டு பசங்கள வீட்டுக்கு அனுப்பிடறது தான் நடந்துச்சாம். தேர்ச்சி விகிதம் இந்த பகுதிகள்ல குறைவானதுக்கு ஆசிரியருங்க தான் காரணமாம். அரசு சம்பளத்தை வாங்கி ஆன்லைன் வியாபாரத்துல இறங்குறாங்களே, இவங்க மீது ஆக்ஷன் எடுத்தால் இனியாவது பெயில் எண்ணிக்கை குறையும்; பசங்க தப்பிச்சிடுவாங்க... செய்வாங்களா அதிகாரிங்க...‘மதுரைல அழகர் ஆத்துல இறங்கறாரே...’‘ஆங்...இப்ப மதுரை பத்தி இன்னொரு விஷயம் இருக்கு. மாநகராட்சில மொட்டை பெட்டிஷனுக்கு குறைச்சல் இல்லையாம். யாரை பத்தி வேணுமின்னாலும் எழுதிடறாங்களாம். கார்ப்பரேஷன் உதவி ஆணையரு மீது இப்படித்தான் ஏகப்பட்ட கம்ப்ளெயின்டுங்க. இதுல தமாசு என்ன தெரியுமா...நடவடிக்கை எடுக்கவும்ன்னு நோட் போட்டு அவருக்கே சில அதிகாரிங்க ரீ டைரக்ட் பண்றது தான். ஊழியருங்க சில பேரு இத சொல்லி விழுந்து விழுந்து சிரிக்கறாங்க...‘நீ அழகர் பத்தியா சொன்னே...ஆபிஸ்ல ஏகப்பட்ட வேலை இருக்கு லீவெல்லாம் போட முடியாது’ன்னு சொல்லி கிளம்பினார் பீட்டர் மாமா.

No comments:

Post a Comment


web stats

web stats