வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் செய்து பார்' என்பது அனைவரும்ஒருமுறையாவது உச்சரிக்கும் கிராமத்து பழமொழி. வீடுகட்டுவதற்கு அனைவருக்கும் வசதி இருப்பதில்லை. இதற்காககடன்களை பெற நினைக்கும் போது முதலில் மனதில் தோன்றுபவை வங்கியின் வீட்டுக்கடன்களே. அவற்றைப் பெறுவதில் வரும் சிக்கல்களைப் பற்றி இந்தகட்டுரையில் பார்ப்போம்.
வீட்டுக் கடன்களைப் பெறுவது விளம்பரங்களில் காண்பது போல்மிகவும் எளிதானதாக இருந்தாலும், அது மிகவும் கடினமான மற்றும் நீளமான செயல்பாடாகவே உள்ளது. வட்டி விகிதங்கள் நிலையற்றதாக இருப்பதால் இந்தியாவில் வீட்டுக் கடன்பெற்றவர்கள் பெரும்பாலோர் பாதிக்கப்படுகிறார்கள். பணத்தின் மதிப்பை பொறுத்த வரை மிகவும் பெரிய கடன்களாக இருக்கும் வீட்டுக் கடன்களால், கடன் பெறுபவர்கள் அடையும் பாதிப்புகள் எண்ணிலடங்காது. அது போன்று வீட்டுக் கடன் பெற்றவர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளைப் பற்றி உங்களுக்கு கொடுத்துள்ளோம். இவற்றைப் படித்து பயன் பெறுவீர்கள் என்றுநம்புகிறோம்..
ஆரம்ப கட்டத்தில் நிராகரிக்கப்படுதல்
இது சோகமான செய்தி தான் ஆனாலும் உண்மை.பெரும்பாலானவர்களின் கடன்களை பெற முன்நிற்கும் ஆரம்பகட்டங்களிலேயே நிராகரிக்கப் படுகிறார்கள். இதற்கு பலகாரணங்கள் இருந்தாலும், கடன் தரும் நிறுவனத்தின் தேவைகளுக்கும், கடன் பெறுபவரின் தகுதிக்கும் உள்ள முரண்பாடுகள் தான் காரணமாக உள்ளன. வயது, கள ஆய்வுகளில் தேர்ச்சியடையாமல் இருத்தல், முறையான ஆவணங்கள் தராமல் இருத்தல், வங்கிகள் முறையாக ஆவணங்களை பார்வையிடாமல் இருத்தல், வருமான வரம்பு மற்றும் பல்வேறு காரணங்களும் இந்தநிராகரிப்புகளின் பின் உள்ளன.
தீர்வு:
ஆரம்ப கட்டத்தில் நிராகரிக்கப்படாமல் இருக்க விரும்பினால்,வங்கிகளைப் பொறுத்து அவர்கள் விரும்பும் தகுதிகளைபரிசோதித்துப் பார்க்கவும். உங்களுடைய தகுதிக்கேற்ற வங்கிகளைதேர்ந்தெடுத்து விண்ணப்பம் கொடுங்கள். முறையானஆவணங்களையும், பரிசோதிக்கத்தக்க விபரங்களையும் கொடுப்பதுதான் ஆரம்ப கட்டத்தில உங்களுடைய வீட்டுக் கடன் விண்ணப்பம்நிராகரிக்கப்படாமல் இருக்க உதவும் வழிமுறைகளாகும்.
திரும்ப பெற இயலாத செயல்பாட்டு கட்டணம்
திரும்ப பெற இயலாத செயல்பாட்டு கட்டணம் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும் என்று நம்புகிறோம். நீங்கள் வீட்டுக் கடனுக்கு விண்ணப்பிக்கும் போது உங்களுடைய வங்கி, 0.25 சதவிகிதம் முதல்1 சதவிகிதம் வரையில் இந்த திரும்ப பெற இயலாத செயல்பாட்டு கட்டணம் கட்டணத்தை செலுத்தும் படி வங்கி உத்தரவிடம். வழக்கமாகவே இந்த செயல்பாட்டுக் கட்டணத்தை திரும்பப் பெறஇயலாது. உங்களுடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டால் கூடுஇந்த செயல்பாட்டுக் கட்டணத்தை திரும்பப் பெற இயலாது. நீங்கள்தரக் கூடிய கட்டணங்கள், வீட்டுக் கடனுக்காக விண்ணப்பம் செலுத்துவதற்கான கட்டணமாக கருதப்படும்.
விரும்பிய அளவு கடன் அனுமதிக்கப்படுவதில்லை
வீட்டுக் கடன் பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன.வங்கிகளைப் பொறுத்த வரையில், கடன் வாங்குபவர் அதை திரும்பசெலுத்தும் வல்லமை உள்ளவராக இருக்க வேண்டும் என்பது ஒருமுக்கியமான தகுதியாகும். மேலும், வங்கிகள் கடனுக்கானஅதிகபட்ச தொகையை நிர்ணயிக்கும் வேளகைளில், வேறு சிலதகுதிகளும் இடம் பெறுகின்றன.
செலுத்தப்படாமல் இருக்கும் கடன்கள், நிதி வரலாறு, விண்ணப்பதாரரின் மாதாந்திர வருமானம், பழைய கடனை திரும்பசெலுத்திய விதம், கிரெடிட் கார்டின் பயன்பாடு, பவுன்ஸ் ஆனகாசோலைகள், வங்கிகளில் அவரின் சராசரி இருப்பு, தற்போதைய வேலையில் இருக்கும் கால அள, மொத்தமாக வேலை செய்த காலஅளவு மற்றும் செய்யும் வேலையின் தன்மை ஆகிய விஷயங்களும்இந்த தொகையின் அளவை நிர்ணயம் செய்வதில் பங்குபெறுகின்றன.
இந்த தகவல்களை எல்லாம் ஒன்றாக திரட்டி, தன்னால் பணத்தைதிரும்ப பெற முடியும் தொகை எவ்வளவு என்று வங்கி தீர்மானித்து அதனையே கடனாக வழங்கும்.
வட்டி விகிதங்கள் தொடர்பான பிரச்னைகள்
வீட்டுக் கடன்களைப் பொறுத்த வரையில் நிலையான வட்டி விகிதம்(Fixed Rate) சிறந்ததா அல்லது காலத்திற்கேற்ப மாறும் ப்ளோட்டிங்வட்டி விகிதம் (Floating Rate) சிறந்ததா? வீட்டுக் கடன் பெறும்ஒவ்வொரு நபரும் எதிர்கொள்ளும் குழப்பம் இதுவாகும்.
குறிப்பிட்ட வகை கடன் பெறுவது என்று பெருமளவு முடிவு செய்துவிட்டாலும், சில நேரங்களில் வீட்டுக் கடன்களின் விதிமுறைகளும், கட்டுப்பாடுகளும் உங்களுடைய வட்டி விகிதங்களில் விளையாடி விடுகின்றன. எடுத்துக்காட்டாக, நீங்கள் நிலையான வட்டி விகிதம்வேண்டும் என்று குறிப்பிட்டு இருந்தாலும், உங்களுக்கு தரப்படும்அச்சு ஆவணங்களில் 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த நிலையானவட்டி விகிதம் மாறும் என்று குறிப்பிடப்பட்டிருப்பதால்,உங்களுடைய நிலைமை மிகவும் மோசமாகி விடும். அதேபோல,ஃப்ளோட்டிங் வட்டி விகிதங்களின் போது, வட்டி குறையும் நேரங்களுக்கான பலன்களை வங்கிகள் நிராகரித்தாலும், உங்களுக்கு சிறிதளவே பலன் கிடைக்கும். இது போன்ற சூழல்களை தவிர்க்க, வீட்டுக் கடன்களுக்கான விதிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை மிகவும் கவனமாக நீங்கள் படித்துப பார்த்து,உங்களுடைய சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.
சொத்து மதிப்பில் மாறுபாடுகள்
நீங்கள் ஒரு சொத்தை வாங்க திட்டமிடுகிறீர்களா? ஆமாம் என்றால்,இந்த கருத்தை படிப்பது மிகவும் அவசியம். நீங்கள் ஒரு சொத்தைவாங்கும் போது அதன் மதிப்பாக குறிப்பிடும் அளவையே,உங்களுடைய வங்கியும் எடுத்துக் கொள்ளும் என்று கருதவேண்டாம். வங்கிகள் அவற்றிற்கான வழிமுறைகளில்சொத்துக்களை மதிப்பீடு செய்கின்றன. இதற்காக சட்டப்படியான,தொழில்நுட்பம் தெரிந்த மற்றும் நிதி மதிப்பீடு செய்பவர்கள்பயன்படுத்தப்படுவார்கள்.
டவுன் பேமண்ட் (Down Payment)
நீங்கள் டவுண் பேமண்ட் கட்டாமல், உங்களுக்கான வீட்டுக் கடன் விநியோகிக்கப்பட மாட்டாது. டவுன் பேமண்ட் என்பது, உங்களுடைய வீட்டுக் கடனில் 10 முதல் 20 சதவிகிதத்தில் ஒரு சிறுதொகையை செலுத்துவது தான். இது ஒவ்வொரு வங்கிக்கும் மாறுபடும்.
இந்த பணத்தை செலுத்துவது வீட்டுக் கடனை பெறுவதற்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, நீங்கள் 10 லட்சம்ரூபாய் வீட்டுக் கடன் பெறும் போது, அதில் 1 அல்லது 2 இலட்சம்ரூபாய் டவுன் பேமண்ட் ஆக இருக்கும். இந்த பணத்தை கடன்பெறுபவர் கடன் பெறும் போது வைத்திருக்க வேண்டும்.
மேலும், சந்தை விலையை விட குறைவாக வங்கி உங்களுடைய சொத்தை மதிப்பீடு செய்தால், கடன் பெறுபவர் மீதத் தொகையை செலுத்த வேண்டும். இதன் மூலம் உங்களுடைய டவுன் பேமண்ட் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து விடும். இந்த சிக்கலான சூழலைதிறனுடன் எதிர்கொள்ள நினைத்தால், சொத்தை முன்னதாகவே மதிப்பிட்டு விடுங்கள் மற்றும் டவுன் பேமண்டை உங்களிடம் தயாராக வைத்திருங்கள்
பத்திரம் மற்றும் தடையில்லா சான்றுதல்
நீங்கள் மிகவும் எதிர்பார்க்கும் வீட்டுக் கடன் நிராகரிக்கப்பட காரணமாக இருப்பவை டைட்டில் டீட் மற்றும் தடையில்லா சான்றுகள் ஆகியவையாகும். இவற்றை வங்கி கேட்கும்வடிவங்களில் கொடுக்க வேண்டியது அவசியமாகும். இது போன்ற ஆவணங்களை, சரியான வடிவங்களில் கொடுக்காமல் இருந்தால் நீங்கள் வீட்டுக் கடன் பெறுவது கனவு தான்.
இது போன்ற சிக்கலான சூழல்களை எதிர்கொள்வதை தவிர்க்க,வங்கிகள் எதிர்பார்க்கும் எல்லாவிதமான ஆவணங்களைப் பற்றியும்விசாரியுங்கள் மற்றும் அவற்றை குறிப்பிட்ட நேரத்தில் தயாராகவைத்திருக்க தேவையான நடவடிக்கைகளை எடுத்திடுங்கள்.
முடிவுரை
ஒரு வீட்டையோ அல்லது சொத்தையோ வாங்குவது அனைவருக்கும் கனவாக இருந்தாலும், அது வாழ்க்கையின் முக்கியமான முடிவுகளில் ஒன்றாகவும் உள்ளது. ஒவ்வொரு தனிமனிதருனும் சொத்துக்களை தங்களுடைய சேமிப்புகள் அல்லதுவருமானத்தை கொண்டே வாங்க முடிவதில்லை.
அவர்களுக்கு வங்கிகளின் வீட்டுக் கடன்கள் தேவைப்படுகின்றன. வீட்டுக் கடன்கள் மக்கள் விரும்பும் வழிமுறைகளில் ஒன்றாக இருந்தாலும், அவற்றைப் பெறுவது அவ்வளவு எளிதும் அல்ல. இந்த செயல்பாட்டில் பெரும்பாலானவர்கள் பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள் ஆனால் மேற்கண்ட தகவல்களை கொண்டு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment