rp

Blogging Tips 2017

கல்லூரிகளில் ஆடைகளுக்குக் கட்டுப்பாடு!

தமிழகத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவ&மாணவிகளுக்கு ஆடை கட்டுப்பாடு உடனடியாக அமலுக்கு வருகிறது என்று அறிவித்திருக்கிறது தமிழக அரசு.

'ஏற்கெனவே அண்ணா பல்கலைக்கழகம் தன்னுடைய மாணவர்களுக்கு ஆடை கட்டுப்பாடுகளை வைத்திருக்கிறது. இந்நிலையில், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளின் கோரிக்கை அடிப்படையில் இது கொண்டு வரப்படுகிறது' என்று கூறியிருக்கும் தமிழக அரசு, 'மாணவர்கள் பேன்ட் மற்றும் சட்டையும்... மாணவிகள் சேலை அல்லது சுடிதாரும் அணிந்து வரலாம். இதைத் தவிர்த்து ஜீன்ஸ் பேன்ட், பனியன் உள்ளிட்ட எந்த ஆடைகளையும் அணிந்து கல்லூரிக்குள் வருவதற்கு அனுமதியில்லை' என்றும் தெளிவு படுத்தியிருக்கிறது.

தொடக்கக் கல்வி - ஆசிரியர்களின் பணி மற்றும் பணப் -பலன் சார்பான குறைத்தீர் முகாம் ஒவ்வொரு மாதமும் முதல் சனிக்கிழமையன்று AEEO அலுவலகத்திலும், 2வது சனிக்கிழமையன்று DEEO அலுவலகத்திலும் நடத்தி ஆசிரியர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய இயக்குநர் உத்தரவு

DEE - TEACHERS GRIEVANCE CAMP SHOULD BE CONDUCTED WITHIN BLOCK LEVEL, 1ST SATURDAY AEEO OFFICE & DIST LEVEL 2ND SATURDAY DEEO OFFICE REG CLICK HERE... 

கணித பாடம் கற்க இலவச மென்பொருள்

கணிதம் என்றாலே மாணவர்களுக்கு கொஞ்சம் அலேர்ஜி தான் 
மற்றைய பாடங்களை குறிப்புக்களை கொண்டு சப்பித்துப்பியாவது 
பரீட்சையை எதிர்கொள்ள முடியும். ஆனால் கணிதபாடம் அவ்வாறு 
இல்லை ஆசிரியர் வகுப்பறையில் கற்பிக்கும் போது முழுமையாக 
விளங்கி கொண்டாலே அந்த பாடம் இனிக்கும் இல்லாவிட்டால் 
கசக்கும்; 
                இன்று கணித பாடத்தினை மாணவர்கள் சுயமாக கற்க பல 
இணைய தளங்களும் கணினி மென்பொருட்களும் வழிசெய்கின்றன.


 அந்த வகையில் மென்பொருள் உருவாக்கத்தில் கொடிகட்டி பறக்கும் 
MICRO SOFT மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பயனுள்ள 
வகையில் இலவசமாக MICRO SOFT MATHEMATICS மென்பொருளை 
வெளியிட்டுள்ளது.

ECS 9.0 & 9.1 E-payroll Version Software & Manual

அரசு கருவூலம் தற்போது 9.0 வெர்சன் சாப்ட்வேரை வெளியிட்டுள்ளது. அதற்கான சாப்ட்வேரை நாம் இங்கு வழங்கியுள்ளோம்.
Click Here TO Download All ECS Softwares & Manuals.
              மேலும் விரைவில் 9.1 சாப்ட்வேரை இணையம் வழியாக பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டு சோதனை முயற்சி நடைபெற்று வருகிறது. அதற்கான பயன்படுத்தும் முறையையும் நாம் இங்கு வழங்கியுள்ளோம்..
குறிப்பு - புதியதாக தங்கள் பள்ளியில் அனைத்து சாப்ட்வேர்களையும் பயன்படுத்தி சம்பள பில் தயாரிக்க நினைக்கும் பள்ளிகளுக்கான ஒருங்கிணைந்த  சாப்ட்வேர் மற்றும் மேனுவல்களையும் நாம் இங்கு வழங்கியுள்ளோம்.

ஆசிரியர் தகுதி தேர்வில் கேள்வித்தாள் குழப்பம்: போனஸ் மார்க் வழங்க தேர்வு வாரியம் முடிவு!

ஆசிரியர் தகுதி தேர்வில் 3 கேள்விகள் குழப்பமாக இருப்பதால், அந்த கேள்விகளுக்கு போனஸ் மார்க் வழங்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.

அடிப்படை சம்பளத்துடன் அகவிலைப்படி இணைக்கப்படாது என மத்திய அரசு உறுதி


"மத்திய அரசு ஊழியர்களின், 50 சதவீத அகவிலைப்படியை, அடிப்படை சம்பளத்துடன் இணைக்கும் திட்டமில்லை' என, மத்திய அரசு தெரிவித்து உள்ளது. மத்திய நிதித் துறை இணை அமைச்சர், நமோ நாராயண் மீனா, லோக்சபாவில் நேற்று கூறியதாவது:

DGE - 2013-14 SSLC &HSC QUARTERLY EXAMINATION TIME TABLE

DGE - 2013-14 SSLC QUARTERLY EXAM TIME TABLE CLICK HERE...

DGE - 2013-14 - HIGHER SECONDARY QUARTERLY EXAM TIME TABLE CLICK HERE...


சர்க்கரை நோயாளிகளுக்கான மிகச் சிறந்த பழங்கள்


நீரிழிவு நோய் வருவதற்கு காரணம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பது தான்.மேலும் இந்த நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எதை சாப்பிடுவதாக இருந்தாலும் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.இல்லாவிட்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்து, உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
ஆனால் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒருசில பழங்களை சாப்பிடுவதன் மூலம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளலாம்.
கிவி
கிவி பழம் நீரிழிவு நோயாளிகளுக்கான ஒரு சிறந்த பழம். ஏனெனில் இது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும்.

மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள் !


பள்ளிப் பேருந்தின் சக்கரத்தில்
வண்ணத்துப் பூச்சிகளின் நிறங்கள்.
துளிர்களின் பிராண வாயுவில்
தனியார் பள்ளியின் துருக்கள்.
பள்ளியின் கட்டளைகள்,
பிள்ளையின் ஒப்பனைகள்,
எல்லா புத்தகங்களும் கவனம் வரும்..
பிள்ளையின் இதயம் மறந்து போகும்.

நெல்லிக்காய் பற்றிய தகவல்..!!


அன்றாடம் உட்கொள்ளும் நெல்லிக்காயனது அருமருந்தாகும். இது வாதம், பித்தம், கபம், என்னும் திரிகரண தோஷங்களையும் போக்கவல்லது. இதனாலேயே ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இதன் பெருமை பற்றி ஆயுர்வேத சாஸ்திரத்தில் கூறப்பட்டிருக்கிறது.

நமது முன்னோர்கள் இதனை ரசாயனம் என்றே அழைத்துள்ளனர். தினசரி உணவில் நெல்லிக்காயை சேர்த்துக்கொண்டால் நூறு ஆண்டுகள் வரை இளமையுடன் வாழலாம் என்று சித்தர்கள் தங்களின் குறிப்பிகளில் எழுதி வைத்துள்ளனர். உடல் நலத்திற்கு ஏற்ற நெல்லிக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது.

பொதுப் பணிகள் - 01.01.2006 அன்றைய நிலவரப்படி முழுநேர தினக்கூலி அடிப்படையில் 10 ஆண்டுகள் பணிப்புரிந்தவர்களை முறைப்படுத்த ஆணை வெளியிட்டதற்கு, திருத்திய ஆணை வெளியிட்டு தமிழக அரசு உத்தரவு

GO.74 P&R DEPT DATED.27.06.2013 - DAILY WAGES BRINGING INTO REGULAR SERVICE OF 10 YEARS AS ON 01.01.2006 CLICK HERE...

தொடக்கக் கல்வி - அரசுப் பள்ளிகளில் குக்கிராமங்களில் பணிபுரியும் ஆசிரியர்களில் சிலர் பள்ளிக்கு வருகைப் புரியாமல் இருப்பவர்களை கண்டறிந்து தடுப்பதற்காக, வட்டார அளவில் குழுக்களை ஏற்படுத்தி மேற்பார்வையிட உத்தரவு

DEE - TO FORM A UNION LEVEL SUPERVISING COMMITTEE REG TO PREVENT UNAUTHORIZED LEAVE TAKEN BY TEACHERS THOSE WHO R WORKING IN REMOTE AREAS REG PROC CLICK HERE...

பி.எட்., கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து

அடிப்படை கட்டமைப்பு வசதிகள் இன்றி செயல்படுதல், அதிக கட்டணம் வசூலித்தல் உள்ளிட்ட காரணங்களால், மூன்று பி.எட்., கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது; மேலும் மூன்று கல்லூரிகளின் அங்கீகாரம், ரத்து செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பொதுத்தேர்வு விடைத்தாள் கையாள புதிய திட்டம்: கல்வித்துறை ஆலோசனை

பொதுத்தேர்வு, விடைத்தாள் கட்டுகளை கையாள்வதில், ரயில்வே மற்றும் தபால் துறைக்கு மாற்றாக, புதிய திட்டத்தை செயல்படுத்துவது குறித்து, கல்வித்துறை இயக்குனர்கள் குழு, தீவிர ஆலோசனையில் இறங்கி உள்ளது.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் எண்ணிக்கை, ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. கடந்த பொதுத்தேர்வை பொறுத்தவரை, பத்தாம் வகுப்பு தேர்வை, 11 லட்சம் மாணவர்களும், பிளஸ் 2 தேர்வை, ஏழு லட்சம் மாணவர்களும் எழுதினர். தனித்தேர்வு மாணவர்களையும் சேர்த்தால், 20 லட்சத்தை தாண்டுகிறது. இத்தனை லட்சம் மாணவர்களுக்கும், தேர்வை நடத்தி, குளறுபடி இல்லாமல், தேர்வு முடிவை வெளியிடுவதற்குள், தேர்வுத்துறை, திக்கி, திணறி விடுகிறது. அதிலும், தேர்வுகளின்போது நடக்கும் பல்வேறு குளறுபடிகள், தேர்வுத்துறைக்கு, பெரும் தலைவலியாக இருந்து வருகிறது.

தொடக்கக் கல்வி - 2013-14 ஆம் கல்வியாண்டிற்கான ஊ.ஒ.நடுநிலைப் பள்ளி /தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவிஉயர்வு கலந்தாய்வு 31.08.2013 அன்று காலை 10.00மணிக்கு நடத்தவும், பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் மேற்கொள்ளகூடாது என உத்தரவு

DEE - 2013-14 MIDDLE SCL HM / ELE HM PROMOTION COUNSELING TO BE HELD ON 31.08.2013 AT CONCERN DISTRICTS REG PROC CLICK HERE...

மின்சார வாரியத்தில் 4,000 ஹெல்பர் பணி அனைத்து பிரிவினருக்கும் வயது வரம்பு இல்லை என முதன் முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது (தினகரன் செய்தி)

ஐ.டி.ஐ முடித்தவர்களுக்கு வாய்ப்பு மின்சார வாரியத்தில் 4,000 ஹெல்பர் பணியிடங்கள் 

தமிழ்நாடுமின்சார வாரியத்தில் 4,000 ஹெல்பர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படுகிறது. அதையொட்டி, மாநில அளவிலான வேலைவாய்ப்பு பதிவு மூப்பு முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மின் வாரியத்தில் வயர்மேன்,எலக்ட்ரீசியன்4000 பேர் நியமனம் பழகுனர் பயிற்சி ( Apprendice ) பதிவு செய்வது தொடர்பாண விபரம்

ITI வயர்மேன் அல்லது எலக்ட்ரீசியன் பிரிவில் தேர்ச்சி பெற்று மற்றும் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஒரு வருடம் தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்கள் 18 வயது முதல் 57 வயது வரை உள்ளவர்கள் தலைமை அலுவலகம், தமிழ்நாடு மின்சார வாரிய வளாகம், 144, அண்ணாசாலை, சென்னை 600 002 அலுவலகத்தில் 02.09.2013 முதல் 13.09.2013 வரையிலான காலத்திற்குள் தங்களுடைய விவரங்களை தொழிற்பழகுநர் அசல் சான்றிதலுடன் வந்து பதிவு செய்து கொள்ள வேண்டும்.செய்து கொள்ள வேண்டும்.

தொடக்கக்கல்வி - TNPTFன் 30.08.2013 மறியல் போராட்டத்தை முன்னிட்டு அன்று அனைத்து பள்ளிகளும் இயங்குவதையும், பள்ளி காலை 09.00 மணிக்கு திறக்கப்படுவதையும் உறுதிப்படுத்த மாற்றுப்பணி மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்களை மாற்றுப்பணியில் நியமிப்பது உள்ளிட்டஅறிவுரைகளை வழங்கி தொடக்கக்கல்வி இயக்குனர் உத்தரவு.

click here to download the DEE proceeding

வெளிநாட்டு பல்கலையில் பயில 17 பேர் பயிற்சிக்கு தேர்வு

அரசுக் கல்லூரி மாணவ மாணவியர்கள் வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் சிறப்பு பயிற்சி பெறுவதற்கு பிரிட்டிஷ் கவுன்சிலுடன் தமிழ்நாடு உயர்கல்வி மன்றம் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் முதலமைச்சர் ஜெயலலிதா முன்னிலையில் கையெழுத்திட்டது

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்–2 தேர்வுகள் வழக்கம்போல நடைபெறும் பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

IGNOU B.Ed ENTRANCE TEST (8/9/13) Hall ticket 2013

CLICK HERE TO DOWN LOAD THE HALL TICKET

ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு, ஓய்வூதியத்துக்கான பரிந்துரை கடிதம் கொடுக்காமல், அலைக்கழித்த திருவெறும்பூர் உதவி தொடக்கக்கல்வி அலுவலரை, திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ, "சஸ்பெண்ட்' செய்ய உத்தரவு

திருச்சி மாவட்ட ஓய்வூதியர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம், திருச்சி கலெக்டர் மக்கள் குறைதீர்க்கும் மன்றத்தில் நேற்று நடந்தது. ஓய்வூதிய நலத்துறை சென்னை இணை இயக்குனர் தேவராஜன் தலைமை வகித்தார். கலெக்டர் ஜெயஸ்ரீ முன்னிலை வகித்தார்.

அகஇ - வட்டார மற்றும் குறுவளமைய அளவில் பயிற்சிகள் நடைபெறும் பொழுது TLM (BRC/CRC ஒன்றுக்கு)ரூ.200 வீதம், கருத்தாளர் மதிப்பூதியமாக ரூ.50 வீதம்,ஒரு ஆசிரியருக்கு தேநீருக்காக ரூ.20 வீதம் செலவினங்கள் மேற்கொள்ள இயக்குநர் உத்தரவு.

SPD - SPD ORDERED TO MAKE NECEESARY ARRANGEMENTS FOR TLM / RP / TEA EXPENTIDURE FOR TEACHERS FROM BRC / CRC CONTIGENCY REG PROC CLICK HERE...

பட்டப்படிப்பில் குறுங்கதை, நாவல்: அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்.

பட்டப் படிப்பில், தமிழ் மொழி பாடத்தில் இடம் பெற்றுள்ள, குறுங்கதை மற்றும் நாவலை அகற்றக் கோரி, சென்னை ஐகோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவுக்குப் பதிலளிக்கும்படி, தமிழக அரசு, சென்னைப் பல்கலைகழகத்துக்கு, நோட்டீஸ் அனுப்ப, ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.தமிழ் விரிவுரையாளர், ஜெய் சம்யக் என்பவர், ஐகோர்ட்டில் தாக்கல்செய்த மனு: பி.ஏ., - பி.எஸ்.சி., - பி.காம்., பட்டப் படிப்புகளுக்கு, தமிழ் மொழி பாடத்தில்,

EMIS DATA ENTRY விரைந்து முடிக்க உத்தரவு.

தமழ்நாட்டில் 1.35 கோடி மாணவா்கள் இருப்பதாக தகவல்.. ஒவ்வொரு மாணவனுடை விபரங்களையும் இணையதளத்தில் உள்ளீடு செய்ய Data Enty நிறுவனங்களிடம் ஒப்படைத்திருந்தால் குறைந்தபட்சம் ஒரு மாணவருக்கு ரூ.15 இல்லாமல் செய்யமாட்டார்கள்.அவா்களை வேண்டுமானால் ஒரு வாரத்தில், ஒருநாளில் முடிக்க வேண்டும் என கட்டாயபடுத்தலாம்...ஆனால் தொடக்கப்பள்ளிகளில் கணினி வசதி கூட இல்லாத பள்ளிகளும்

தொடக்கக் கல்வி - ஊதிய நிர்ணயம் - பதவிஉயர்வு பெற்று உயர் பதவியில் பணிபுரிபவர், தொடர்ந்து கீழ் நிலை உள்ள பதவியில் பணிபுரிந்திருந்தால் அதிக ஊதியம் பெற்றிருப்பார் - தலைமை ஆசிரியருக்கு அரசு விதி 4(3)ன் படி ஊதியம் நிர்ணயம் செய்ததை மாநில கணக்காயர் ஏற்பு.

click here to download the AGAE - PAY FIXATION UNDERRULE 4(3) - ELEMENTARY HMHAS BEEN BENEFITED THAN MIDDLE SCHOOL HM - ELE HM SELECTION GRADE HAS BEEN FIXED FOR MIDDLE HM AS PER 4(3) RULE REG - ORDER

"தற்போதுள்ள, பொதுத்தேர்வு நடைமுறையில், எந்த மாற்றமும் செய்யப்பட மாட்டாது,'' என, பள்ளி கல்வித் துறை முதன்மை செயலர், சபிதா,

தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச், முதல் வாரத்தில்துவங்கி, கடைசி வாரத்தில் முடியும். 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, மார்ச், கடைசி வாரத்தில் துவங்கி, ஏப்ரல், முதல் வாரத்தில் முடியும். இதன்படி தான், பல ஆண்டுகளாக, தேர்வுகள் நடந்து வருகின்றன. இரு தேர்வுகளுமே, தனித்தனியாகத்தான் நடக்கின்றன. அப்படியிருக்கும் போதே, பல குளறுபடிகள் நடந்து வருகின்றன. கடந்த பொதுத்தேர்வில் கூட, 10ம் வகுப்புதேர்வில், பல குளறுபடிகள் நடந்தன.இது போன்ற நிலையில், "பிளஸ் 2 தேர்வுகளுக்கு இடையே வரும்

IGNOU B.Ed examination Schedule December 2013

click here download to time table

Es 331-9.12.13,332_ 10/12,333 _11/12.341 _12/12,342 _13/12,343 _14/12,

344 _16/12,   345 _18/12, 334- 19/12, 046_ 20/12, 335 _21/12
065 _23/12, 361 _24/12, 066_26/12, 362_27/12, 363 _28/12
364_30/12


பிற மாவட்டங்களில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் வழக்கில் விரைவில் தீர்ப்பு

தமிழக இடைநிலை ஆசிரியர்கள் இட மாறுதல் சம்பந்தப்பட்ட வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
கடந்த, 2007ம் ஆண்டு, தமிழக அரசின் ஊராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிட காலியிடங்களை நிரப்புவதற்கான, ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதில், வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்த, வேலையில்லா இடைநிலை ஆசிரியர்கள் பதிவில், மாநிலங்கள் அளவில், பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யாமல், மாவட்ட பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்ய, மாநில ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு, தமிழக அரசின் கல்வித் துறை, 2007ம் ஆண்டு, அரசாணை ஒன்றை பிறப்பித்தது.

தொடக்கக் கல்வி - ஊதிய நிர்ணயம் - பதவிஉயர்வு பெற்று உயர் பதவியில் பணிபுரிபவர், தொடர்ந்து கீழ் நிலை உள்ள பதவியில் பணிபுரிந்திருந்தால் அதிக ஊதியம் பெற்றிருப்பார் - தலைமை ஆசிரியருக்கு அரசு விதி 4(3)ன் படி ஊதியம் நிர்ணயம் செய்ததை மாநில கணக்காயர் ஏற்பு.

AGAE - PAY FIXATION UNDER RULE 4(3) - ELEMENTARY HM HAS BEEN BENEFITED THAN MIDDLE SCHOOL HM - ELE HM SELECTION GRADE HAS BEEN FIXED FOR MIDDLE HM AS PER 4(3) RULE REG - ORDER CLICK HERE...

80 வயதை கடந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு கூடுதல் பென்சன்

நாடு முழுவதிலும் உள்ள 80 வயதை கடந்த ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு கூடுதல் ஓய்வூதிய தொகை வழங்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.

அனைத்திந்திய சேவை விதிகளின் இறப்பு மற்றம் ஓய்வு பலன்கள் தொடர்பான பிரிவில் திருத்தங்களை கொண்டு வர அரசு பணியாளர் நலவாரியத்துறை முடிவு செய்துள்ளது. இதன்படி அனைத்திந்திய சேவை

நடப்பு பாராளமன்ற கூட்டத்தொடரிலேயே PFRDA மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு கடுமையான முயற்சி மேற்கொண்டுள்ளது. இதை எதிர்த்து சாகும் வரை உண்ணா விரதம். மத்திய தொழிற்சங்கங்கள்.

நடப்பு பாராளமன்ற கூட்டத்தொடரிலேயே PFRDA மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு கடுமையான முயற்சி மேற்கொண்டுள்ளது. அவ்வாறு PFRDA சட்டமாக்கினால் அதற்கு அடுத்த நாளிலிருந்து மத்திய தொழிற்சங்கங்கள் காலவரையற்ற சாகும் வரை உண்ணா விரதம் மேற்கொள்ள ஆயத்தமாகி வருகின்றன.

பள்ளி மூடப்பட்டாலும் ஆசிரியருக்கு சம்பளம் கொடுக்க வேண்டும் : ஐகோர்ட்

கன்னியாகுமரி மாவட்டம் கீழ் ஆசாரிப்பள்ளத்தை சேர்ந்தவர் சூசைமகேஷ். இவர் அங்கிருந்த செயிண்ட் மேரீஸ்தொடக்கப்பள்ளியில் (அரசு உதவி பெறும் பள்ளி) ஆசிரியராக 2005–ம் ஆண்டில் வேலையில் சேர்ந்தார். இந்த நிலையில் 2012–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அந்தப் பள்ளி மூடப்பட்டது.  எனவே சூசைமகேஷை செண்பகராமன்பட்டத்துறையில் உள்ள பள்ளியில் சேர்க்கும்படி மாவட்ட தொடக்கக் கல்வித்துறை அதிகாரி உத்தரவிட்டார். ஆனால் அந்தப்பள்ளியில் காலியிடம் இல்லை என்பதால், அங்கு அவரை அந்தப்பள்ளி நிர்வாகம் சேர்க்க மறுத்துவிட்டது.

எனவே அவரை காலியிடம் உள்ள பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரிக்கு,கன்னியாகுமரி மாவட்ட தொடக்கக் கல்வித்துறை அதிகாரி கடிதம் எழுதினார்.இந்த நிலையில் ஐகோர்ட்டில் சூசைமகேஷ் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், பள்ளிக்கூடம் மூடப்பட் டதில் இருந்து இதுவரை எனக்கு சம்பளம் மற்றும் சலுகைகள் தரப்படவில்லை. அவற்றை தருவதற்கு பள்ளிக்கல்வித்துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.

டி.இ.டி., தற்காலிக விடை வெளியீடு: செப்., 2 வரை கருத்து தெரிவிக்கலாம்

டி.இ.டி., தேர்வு தற்காலிக விடைகளை, டி.ஆர்.பி., வெளியிட்டு உள்ளது. "தேர்வர்கள், விடைகள் குறித்த ஆட்சேபனைகளை, செப்., 2ம் தேதிக்குள், கடிதம் வழியாக தெரிவிக்க வேண்டும்" என டி.ஆர்.பி., கேட்டுக் கொண்டுள்ளது.

கடந்த, 17, 18 தேதிகளில், டி.இ.டி., தேர்வுகள் நடந்தன. இதை, ஏழு லட்சம் பேர் எழுதினர். விடைத்தாள்கள் அனைத்தும், "ஸ்கேன்" செய்யும் பணி முடிந்ததை அடுத்து, டி.இ.டி., முதல் தாள் மற்றும் இரண்டாம் தாள் ஆகிய, இரு தேர்வுகளுக்குரிய தற்காலிக விடைகளை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில், டி.ஆர்.பி., நேற்று வெளியிட்டது.

"தேர்வர்கள், விடைகள் குறித்த ஆட்சேபனைகளை, செப்., 2ம் தேதி, மாலை, 5:00 மணிக்குள், கடிதம் வழியாக தெரிவிக்கலாம். ஆட்சேபனைக்குரிய விடை குறித்து தெரிவிப்பதுடன், சரியான விடைக்கான சான்றுகளை இணைத்து, டி.ஆர்.பி.,க்கு தபால் அனுப்பலாம். டி.ஆர்.பி., அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பெட்டியிலும், கடிதங்களை சமர்ப்பிக்கலாம்" என, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது.

தேர்வர்கள் தெரிவிக்கும் ஆட்சேபனைகள் குறித்து, பாட வாரியான நிபுணர் குழு, விரிவாக ஆய்வு செய்து, இறுதி முடிவை அறிவிக்கும். இதன் அடிப்படையில், இறுதி விடைகள், மீண்டும், டி.ஆர்.பி., இணையதளத்தில் வெளியிடப்படும்.

TO KNOW YOUR TNTET PAPER - I & II CUTOFF

TO KNOW YOUR TNTET PAPER - I & II CUT-OFF CLICK HERE...

8 இந்திய ஆட்சி பணி அதிகாரிகள் மாற்றம், புதிய அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாநில திட்ட இயக்குனராக பூஜா குல்கர்னி நியமனம்

TIME TABLE FOR IGNOU TERM END EXAM -2013

CLICK HERE FOR IGNOU- Tentative Date Sheet For End Examination December 2013

விடுமுறை நாட்களில் தொடர் பயிற்சி தேர்வுகளில் சீனியாரிட்டி புறக்கணிப்பு முதுகலை ஆசிரியர்கள் கண்டனம்.

விடுமுறை நாட்களில் பயிற்சிகள் நடத்தப்படுவதற்கு முதுகலை ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.தமிழகத்தில் வரும் 31ம் தேதி சனிக் கிழமை பள்ளி வேலை நாளாகும். வரும் செப்டம்பர் மாதம் 6 மற்றும் 7ம் தேதிகளில் முதுகலை ஆசிரியர்களுக்கு வேதியியல் பாடம் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது. 14ம் தேதி சனிக்கிழமை காலாண்டு தேர்வுகளைமுன்னிட்டு வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.எனவே, தொடர்ந்து விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு வேலை நாட்களாக செயல்படுவதால் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளது. விடுமுறை நாட்களில்

டைப்ரைட்டிங் தேர்வு 31ம் தேதி ஆரம்பம் தமிழகத்தில் 54 ஆயிரம் பேர் பங்கேற்பு கம்ப்யூட்டர் தேர்வில் சாதனை.

தமிழகத்தில் டைப்ரைட்டிங் தேர்வுகள் வரும் 31ம் தேதி ஆரம்பமாகிறது. இதில் சுமார் 54 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.தமிழகத்தில் தமிழ், ஆங்கிலம் டைப்ரைட்டிங் தேர்வுகள் கடந்த 24 மற்றும் 25ம் தேதிகளில் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் டி.என்.பி.எஸ்.சி தேர்வை முன்னிட்டு இத்தேர்வு வரும் 31ம் தேதி மற்றும் 1ம் தேதிக்கு மாற்றி

கவலை தரும் ஆய்வு: கரும்பலகை கூட இல்லாத பள்ளிகள்.

ஒரு பக்கம், டேப்ளட், ஸ்மார்ட்ஸ் ஸ்கிரீன் என்று சில பள்ளிகள் செயல்பட, இன்னும் இந்தியாவில் நான்கில் ஒரு பங்கு பள்ளிகள், கரும்பலகை கூட இல்லாமல் செயல்படுகின்றன."சைல்டு ரிலிப் அண்டு யு" என்ற அரசு சாரா அமைப்பு, "லேர்னிங் பிளாக்ஸ்" என்ற தலைப்பில் ஆய்வு செய்து, இன்னும் இந்தியாவில் உள்ள ஆரம்ப, உயர்நிலைப் பள்ளிகளில், அடிப்படை வசதிகள்

டி.இ.டி., சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்காதவர்களுக்கு வாய்ப்பு.

கடந்த ஆண்டு நடந்த, 2 டி.இ.டி., தேர்வுகளுக்குப் பின் நடந்த சான்றிதழ் சரிபார்ப்புகளில் பங்கேற்காதவர்கள், உரிய சான்றிதழ்களை சமர்ப்பிக்கத் தவறிய தேர்வர்கள் ஆகியோருக்கு, இறுதியாக, மீண்டும் ஒரு முறை வாய்ப்பு அளித்து, டி.ஆர்.பி., அறிவித்துள்ளது. அதன்படி, செப்., 6, 7 ஆகிய தேதிகளில், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும் என, டி.ஆர்.பி., தெரிவித்துள்ளது.இதுதொடர்பாக டி.ஆர்.பி., தலைவர், விபு நய்யார் வெளியிட்ட அறிவிப்பு: கடந்த ஆண்டு,

ஆறாம் வகுப்பிலேயே "லேப்' அறிவு: இயக்குனர் வலியுறுத்தல்.

ஆறாம் வகுப்பில் இருந்தே, மாணவ, மாணவியரை, "லேப்'களுக்கு, அழைத்துச்சென்று, அறிவியல் அறிவை வளர்க்க வேண்டும்,'' என, மத்திய இடைநிலைக்கல்வி திட்ட (ஆர்.எம்.எஸ்.ஏ.,) மாநில இயக்குனர், சங்கர் வலியுறுத்தி உள்ளார். கல்வியில் பின்தங்கிய, 44 ஒன்றியங்களில், 44 மாதிரிப்

தீக்காயம் ஏற்பட்டு விட்டதா......??? மருந்தை தேடி அலைய வேண்டாம்...!

 
தீக்காயம் ஏற்பட்டு விட்டதா......???

மருந்தை தேடி அலைய வேண்டாம்...!


தீக்காயம் பட்ட உடன், உடனடியாக குளிர்ந்த நீரை சூடு குறையும் வரை காயத்தில் விடுங்கள்...


பின்னர் ஒரு முட்டையை எடுத்து அதன் வெள்ளைக்கருவை பிரித்து காயத்தின் மீது முழுவதும் படரும் படி தடவுங்கள்...


சிறிது நேரத்தில் வெள்ளைக்கருவானது காய்ந்து ஒரு பாதுகாப்பு அடுக்கை உருவாக்குகிறது...


சிறிது நேரத்தில் வலி முற்றிலும் குறைந்து விடும்...


தொடர்ந்து செய்து வந்தால்.....


அடுத்த 10 நாட்களில் காயத்தின் தடயம் மறைந்து விடும்....{தீயணைப்பு படையினர் மற்றும் மீட்பு படையினர் பயன்படுத்தும் யுக்தியும் இதுவே.}

8 இந்திய ஆட்சி பணி அதிகாரிகள் மாற்றம், புதிய அனைவருக்கும் கல்வி இயக்ககத்தின் மாநில திட்ட இயக்குனராக பூஜா குல்கர்னி நியமனம்

தமிழகத்தில் 8 இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதில் ஏற்கனவே அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குனராக பணிபுரிந்த மதிப்புமிகு. மகேஸ்வரன் தமிழ் நாடு பாடநூல் கழக இயக்குனராக மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
 புதிய அனைவருக்கும் கல்வி இயக்கக மாநில திட்ட இயக்குனராக மதிப்புமிகு. பூஜா குல்கர்னி அவர்களை நியமனம் செய்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

முதல் முதல் பெண்கள்-பார்ப்போமா!


முதல் பெண் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டீல்

முதல் பெண் பிரதமர் இந்திரா காந்தி

முதல் பெண் கவர்னர் சரோஜினி நாயுடு

முதல் பெண் முதல்வர் சுசேதா கிருபலானி

முதல் பெண் அமைச்சர் விஜயலெட்சுமி பண்டிட்

முதல் பெண் மத்திய அமைச்சர் ராஜ்குமாரி அம்ரித் கெளர்

10ம் வகுப்பு பொதுத்தேர்வு: 14 வயது நிரம்பாத மாணவர்களுக்கு சிக்கல்

பள்ளிகளில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களில், 14 வயது நிறைவு பெறதாவர்களுக்கு, தேர்வு எழுதுவோர் பட்டியலில் இடம் பெற முடியவில்லை. சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்பதால், மாணவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST -TENTATIVE KEY TRB RELEASED

TET 2013=TENTATIVE KEYS FROM TRB


 PLEASE CLICK FOR PAPER I   
PLEASE CLICK FOR PAPER II

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்டத்தலைநகர் 5/9/13 அன்றைய ஆர்பாட்ட சுவரொட்டி

ஆசிரிய நண்பர்களே!
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை வென்றெடுக்க இப்போராட்டத்தில் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். க.செல்வராஜு, பொதுச் செயலாளர்(பொ)
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

இரட்டைப் பட்ட வழக்கு அடுத்த வாரம் செவ்வாய் (03.09.2013) அல்லது புதன் அன்று விராசணைக்கு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

இன்று (27.08.2013) விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்ட இரட்டைப்பட்ட வழக்கு தலைமை நீதி மதுரை உயர்நீதிமன்றத்திற்கு சென்றுள்ளதால் அடுத்த வாரம் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இம்மாதம் 28 மற்றும் 29ஆம் தேதிகளிலும் விசாரணைக்கு வருவதற்கும் வாய்ப்பில்லை எனவும் வழக்கு தொடுத்துள்ளோர் தெரிவித்தனர்.
எனவே அடுத்த வாரம் செவ்வாய் (03.09.2013) அல்லது புதன் விராசணைக்கு நிச்சயம் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது

அகஇ - படைப்பாற்றல் கல்வி - பள்ளிகளின் தரத்தை ஒவ்வொரு மாதமும் 10ம் தேதிக்கு பதிலாக 3ம் தேதிக்குள் மாநில திட்ட இயக்ககத்திற்கு அனுப்ப உத்தரவு.

SPD - ALM GRADE - SCHOOL GRADE TO BE SUBMIT WITHIN 3RD OF EVERY MONTH REG PROC CLICK HERE...

தேவையற்ற மின்னஞ்சல் முகவரிகளை block செய்வது எப்படி?

பொதுவாக நாம் மின்னஞ்சலை open செய்யும் போது பல கடுப்பூட்டும் செய்திகள் வந்துகொண்டே இருக்கும். எப்போதாவது நாம் ஏதாவது ஒரு தளத்தில் எமது மின்னஞ்சலைப் பதிவு செய்திருப்போம். அது நம் காலைச் சுற்றிய பாம்பாக எப்போதும் இன்பாக்ஸ்ல் வந்து தொந்தரவு கொடுக்கும். அப்படிப்பட்ட mail களை எப்படி நிறுத்துவது என்பது பற்றிப் பாப்போம்...

Gmail ல் செயற்படுத்த
1. உங்கள் account உள் செல்லவும்
2. உங்கள் வலது பக்க மேல் மூலையிலுள்ள setting ஐ select செய்யவும்
3. Settings க்கு கீழே, Filters என்பதை click செய்யவும்

பள்ளி வகுப்பறையில் ஆசிரியர்– தலைமை ஆசிரியர் கட்டிப் புரண்டு சண்டை: மாணவர்கள் அதிர்ச்சி - நாளிதழ் செய்தி

கம்பம் அருகே வகுப்பறையில் ஆசிரியரும், தலைமை ஆசிரியரும் கட்டிப்புரண்டு சண்டையிட்டதால் மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

தேனி மாவட்டம் கம்பம் அருகே உள்ள கோட்டை மைதானத்திற்குள் ஒரு தனியார் நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் சுமார் 2 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். 59 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா ? ஆன்லைனிலேயே சரிபார்த்துக்கொள்ளுங்கள் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா ?

******************************************
www.elections.tn.gov.in/eroll/
பெரும்பாலும் அலுவலகம் சென்று வேலை செய்பவர்களுக்கு, மேலதிகாரியிடம் விடுப்பு எடுக்க அனுமதி வாங்குவத்ற்க்குள் தலை வலி வந்துவிடும். இம்மாதிரியான சூழ்நிலையில் உங்கள் பெயர் வாக்காளர் பெயர் பட்டியலில் உள்ளதா என்று சரி பார்க்க வேண்டுமெனில் ஒரு நாள் விடுப்பு கண்டிப்பாக எடுக்க வேண்டும்.

TNPSC GROUP IV EXAM TENTATIVE ANSWER KEYS RELEASED

 Sl.No.
Subject Name 
 (Date of Examination:28.08.2013 FN)
POSTS INCLUDED IN GROUP-IV SERVICES
   1
GENERAL TAMIL
         2
GENERAL ENGLISH
         3
GENERAL STUDIES
Note: Right Answer has been tick marked in the respective choices for each question. Representations if any shall be sent so as to reach the Commission's Office within 7 days. Representations received

தமிழ் நாடு பள்ளிகல்வி சார்நிலைப்பணி 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின் +2 பயிலாமல் பட்டம் /பட்டயம் பெற்று பட்டதாரி ஆசிரியர்களாக செய்யப்பட்டவர்களுக்கு தகுதிகாண் பருவம் முடித்து ஆணை வழங்குதல் -தெளிவுரை

click here to download -Govt letter & DSE Proccedings

தமிழ் நாடு பள்ளிகல்வி சார்நிலைப்பணி 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பின் +2 பயிலாமல் பட்டம் /பட்டயம் பெற்று பட்டதாரி ஆசிரியர்களாக செய்யப்பட்டவர்களுக்கு தகுதிகாண் பருவம் முடித்து ஆணை வழங்குதல் -தெளிவுரை

CLICK HERE -PROCCEDINGS OF DSE

TNPSC - GROUP - IV - பொதுத் தமிழ் மற்றும் பொதுத் தேர்வு உத்தேசமான வினா - விடைகள் மற்றும் விளக்கங்கள்

TO DOWNLOAD TNPSC GROUP - IV GK PAPER CLICK HERE...

TO DOWNLOAD TNPSC GROUP - IV - TAMIL PAPER CLICK HERE...

TO DOWNLOAD TNPSC GROUP - IV TAMIL PAPER CLICK HERE...

ஒரு நபர்க் குழுவின் பரிந்துரை அடிப்படையில் டிப்ளமோ பட்டம் கல்வி தகுதியாக நிர்ணயிக்கப்பட்ட பணியிடங்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.9300, தர ஊதியம் ரூ.4200 வழங்கப்பட்டுள்ளது என அரசு அறிவிப்பு


தொப்பையை கரைத்து இளமையை மீட்க உதவும் யோக முத்திரா

ஆசனங்கள், தியானம், உடற்பயிற்சி என்று எதுவாக இருந்தாலும் வயிற்றில் கழிவுகள் இல்லாமல் சுத்தமாக இருப்பது அவசியம். அதற்கு யோக முத்திரா உதவுகிறது. யோக முத்திராவை தொடர்ந்து செய்து வருபவர்களுக்கு முதுகுதண்டில் உள்ள இறுக்கம் நீங்குகிறது. இளமை ஏற்படுகின்றது.

வாசிப்புத்திறன் பதிவேடு படிவங்கள்

வாசிப்புத்திறன் பதிவேடு
தமிழ் ஆங்கிலம் பாடங்கட்கு
மாதம்/பருவ வாரியான படிவங்கள்
கணித செயல்கள் திறன் பதிவு படிவம்
இங்கே கிளிக் செய்து எக்செல் கோப்பை பதிவிறக்கம் செய்யலாம்
 EXCEL FILE-ல் ஒவ்வொரு sheet மீது கிளிக் செய்து A4தாளில் அச்செடுக்கவும்

அரசாணை எண்.242 நிதித்துறை நாள்.22.07.2013ல் கூறப்பட்ட சம்பளக் குறைப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கின் காரணமாக ஏற்கெனவே பெற்று வந்த ஊதியத்தில் எவ்வித குறைவும் ஏற்படாமல் அதை அப்படியே அனுமதித்து சம்பளம் வழங்க அரசு உத்தரவு

Writ Petitions filed - Challenging the orders issued in G.O.Ms.No.242, Finance (Pay Cell) department, dated 22—7-2013 based on the recommendations of the Pay Grievance Redressal Cell - Instructions issued – Regarding Click Here...

பேஸ்புக்கிலிருந்து வீடியோ, ஆடியோக்களை தரவிறக்கம் செய்ய

மிகப் பிரபலமான சமூக வலைத்தளமான  பேஸ்புக் தளத்தில் எண்ணற்ற வீடியோக்கள், ஆடியோக்கள் நாள்தோறும் பகிரப்படுகின்றன. நாள்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் Upload செய்யப்பட்டு, அவற்றை நண்பர்களுக்கு பகிர்கிறார்கள். அதுபோன்று பகிரப்படும் வீடியோக்கள் மற்றும் ஆடியோக்கள் நமக்குத் தேவையெனில் அவற்றை டவுன்லோட் செய்ய வேண்டும். ஆனால் அவ்வாறு தரவிறக்கம் செய்துகொள்வதற்கான வசதிகள் பேஸ்புக் தளத்தில் இல்லை. எனினும் மென்பொருளைப் பயன்படுத்தி நீங்கள் விரும்பும் வீடியோ மற்றும் ஆடியோக்களை தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்

M.Ed. Regular Degree Examination, May/June 2013 - Results

M.Ed. Degree Examination, May/June 2013 - Results

ஒரு வேண்டுகோள்

இனிய வணக்கம்
               AEEO நண்பர்களே...!! கல்வி சார் வலைபூ நண்பர்களே...!! கல்வி சார் முகநூல் நண்பர்களே..!! மீண்டும் வணக்கங்கள்.....!!
                    
                     ஒரு வேண்டுகோள்

1.பள்ளிகளை பார்வை செய்யும்போது எந்த மாதிரியாக பார்வையிட வேண்டும் என்ன பதிவேடுகளை பார்க்கலாம் கற்றல் கற்பித்தல் சார்பாக வகுப்பறை பார்வை பற்றிய உங்கள் கருத்துகளை வரவேற்கிறோம்

2.பள்ளி ஆண்டாய்வு செய்யும்போது எந்த மாதரியாக ஆண்டாய்வு செய்ய வேண்டும் என்ன என்ன பதிவேடுகள் பார்வையிட வேண்டும் ஆண்டாய்வுபடிவம்  மாதிரி , AEEO பூர்த்தி செய்து DEEO விடம் சமர்ப்பிக்க எதுவாக படிவம், முதலிய வற்றையும் உங்கள் கருத்துக்களையும் முன்னால் இயக்குனர்கள் வழிகாட்டுதல் அரசு ஆணைகள் முதலியவற்றை எங்களுக்கு அனுப்புங்கள்
          

சில உண்மைகள் GENERAL KNOWLEDGE

  GENERAL KNOWLEDGE

1.உலகப்புகழ் பெற்ற மோனாலீசா ஓவியம் இடது கையால் வரையப்பட்டது.

2. எப்போதும் காற்று வீசும் திசையிலேயே தலை வைத்துப் படுக்கும் மிருகம் நாய்.

3. தேசியக் கொடியை முதல் முதலில் உருவாக்கிய நாடு டென்மார்க் 1219ல் உருவாக்கியது.

4. எறும்புகள் உணவு இல்லாமல் 100 நாட்கள் வாழும்.

5. ஒரு பென்சிலைக் கொண்டு 58 கி.மீ நீளமான கோடு போடலாம்.

6.பாம்புகளுக்கு கேட்கும் சக்தி கிடையாது.

7. நண்டிற்கு தலை கிடையாது அதன் பற்கள் வயிற்றில் இருக்கும்.

8.வெள்ளை என்பது ஒரு நிறம் இல்லை அது ஏழு வர்ணங்களின் கலவை.

9.முற்றிப் பழுத்து காய்ந்த தேங்காய் மரத்திலிருந்து பகலில் விழாது இரவில்தான் விழும்.

10. நமக்கு உடல் முழுவதும் வியர்க்கும் ஆனால் நாய்க்கு நாக்கில் மட்டுமே வியர்க்கும்.

11. சிலந்திப் பூச்சிக்கு எட்டுக் கண்கள் உண்டு.

12. இறாலுக்கு இதயம் தலையில் இருக்கிறது

13.ஆப்கானிஸ்தானில் ரயில் கிடையாது.

14இந்தியாவில் தமிழில் தான்"பைபிள்"முதலில் மொழிபெயர்க்கப்பட்டது.

15.ஆண் சிங்கம் சாப்பிட்ட பின்னரே பெண் சிங்கம் சாப்பிடும்.

16. வாத்து அதிகாலையில் மட்டுமே முட்டையிடும் .

17.கத்தரிக்காயின் தாயகம் இந்தியா தான்.

18.பிரேசில் நாட்டு தேன் கசக்கும்.

19.முன்னாள் இந்திய ஜனாதிபதியாகிய அப்துல் கலாம் சிறந்த வீணை கலைஞரும் ஆவார்.

20.உலகில் கடற்கரை இல்லாத நாடுகள் 26 ஆகும்.

21.அமெரிக்காவை விட சகாரா பாலைவனம் பெரியது

செப்டம்பர் 5 - கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம்- சில பயனுள்ள யோசனைகள்1) மாவட்டத் தலைநகர்களில் உரிய காவல்துறை முன் அனுமதி பெறவேண்டும்.
2) மாவட்டத்தொடக்கககல்வி அலுவலர்களுக்கும் உரிய கடிதம் அனுப்பப்படல் வேண்டும்.
3) ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள இடத்தில் சரியான நேரத்தில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் தொடங்கப்படவேண்டும்.
4) ஆசிரியர்களை வட்டார அளவில் திட்டமிட்டு இரு குழுக்களாக் பிரித்து ஒருகுழுவினரை பிற்பகல் தற்செயல் விடுப்பு எடுத்து சரியான நேரத்தில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் தொடங்கச் சென்றுசேருமாறு வட்டார பொறுப்பாளர்கள் திட்டமிடல் நலம்.
5) அடுத்த குழுவினர் பள்ளி முடிந்தவுடன் உடனடியாக பயணித்து ஆர்ப்பாட்டம் நடைபெறும் போது கலந்துகொள்ள திட்டமிடல் நலம்.
6) ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் வந்து சேர்ந்து நிகழ்ச்சி நிரல் முடியும் வரை அனைத்து ஆசிரியர்களும் இருக்குமாறு செய்ய வட்டார பொறுப்பாளர்கள் திட்டமிடல் வேண்டும்.
7) போரட்டத்தின் பலன் சென்றடைய உள்ள இடைநிலை ஆசிரியர் ஒருவர் கூட தவறாது மூத்த ஆசிரியர்களுடன் கலந்து கொள்ளவதை பொறுப்பாளர்கள் உறுதிசெய்ய வேண்டும்.
கடந்த 50 ஆண்டுகாலமாக பல்வேறு போரட்டக் களங்களை அமைத்து அனுபம்மிக்க நமது பொதுச்செயலாளர் திருமிகு.செ.முத்துசாமி ஐயா அவர்களின் வழிகாட்டுதலினால் அமைக்கப்பட்டுள்ள இந்த தொடர்போரட்டங்களில் கலந்து கொள்ளும் எவருக்கும் எந்த ஒரு பாதிப்பும் வாராது என்பதினை விளக்கி அனைத்து சங்க உறுப்பினர்களையும் இந்த கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்த்தில் கலந்து கொள்ளச் செய்து போராட்டத்தினை வெற்றி பெறச்செயவது நமது கடமை.

TNPSC GROUP -IV தேர்வு (25.08.2013)உத்தேச (GENERAL TAMIL ) விடைகள் வெளியீடு( N.R.IAS ACCADEMY-TRICHY)

click here -Group 4 tentative key Answers

கல்வி வலைபூ நண்பர்கள் முதல் கூட்ட அழைப்பு

இனிய   வணக்கம் ,

                      வலை  பூ   நண்பர்களே ,  நீங்கள்  செய்யும்   பணி என்பது    வியக்கத்தக்கப்   பணி  .  இப்போது  யாரும்  பொது  வேலைக்கு   வருவதில்லை   எனக்   குறைபட்டு   கூறுபவர்களுக்கு   நான் கூறும் பதில் இதோ எந்த பணப் பலனும் இல்லாமல் இரவு பகல் பாராமல் விழிப்புணர்வு ஏற்படும் நம் கல்வி வலைபூ நண்பர்களைச்  சுட்டிக்காட்டுகிறேன் .

                    "பல மணி நேர உழைப்பு , இளைஞர் பட்டாளம் , அனைவரும் ஆசிரியர் பணி , இயக்கப் பணி , இரவில் BLOG,என வாழ்க்கைச் சக்கரம்"...

                      நீங்கள் தான் உண்மையான நாட்டுப் பற்றுடைய மனிதர் . வலைபூ  நண்பர்களே!கல்வி  என்பது மாணவர்களுக்குக் கற்றுக்  கொடுப்பது மட்டும் அல்ல ஆசிரியர் சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் கற்றுக்கொடுப்பது. மேலும் அரசு ஆணைகளைக் கற்றுத் தருவது , இயக்குனர் ஆணைகளை தமிழகம் முழுவதும் எடுத்துச் செல்வது , அன்றைய கல்விச் செய்திகளை உடனுக்குடன் கூறுவது என நாமும் கற்று பிறருக்கும் கற்றுக்கொடுக்கும் மகத்தான பணியைச் செய்கின்ற நாம் அனைவரும்  செப்டம்பர் 5 ஆம் நாள் ஆசிரியர் தினத்தன்று சென்னையில் கூடுவோம். மேலும் மேலும் வலைபூ தரத்தை மேம்படுத்தி தமிழகத்தை முதல் மாநிலமாக்குவோம்.

                  முதல் முறையாக அனைத்து கல்வி   சார்ந்த வலைபூ நண்பர்கள்                                          
                                                 "செப்டம்பர் 5" 

                  டாக்டர்.இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் இடத்தில்  முதல் கூட்டத்தை நடத்துவோம் , முகம் பார்த்து பேசுவோம் , நெருங்கிய நண்பர்களாக மாறுவோம் , சமுதாயத்தை மாற்றுவோம் .

                                                                                                                            இவண்
                                                                                                                 இரா.கணேசன் ,AEEO,
                                                                                                                 எழும்பூர் சரகம் ,
                                                                                                                   சென்னை .

பெறுநர்
 கல்வி சார்ந்த வலை தளங்கள் ....
1. www.kalvisolai.com
2.www.tnkalvi.com
3.www,teachertn.com
4.www.tamilnaduasiriyar.com
5.www.padasali.nat.
6.www.mptnptf.blogspot.com
7.www.tnptfvirndhunagar.blogspot.in
8.www.chennaitnptf.blogspot.in
9.www.sstaweb,blogspot.in
10.www.asiriyarkudumbam.blogspot.in
11.www.tntam.blogspot.com.
12.www.tnasiriyararangam.blogspot..com
13.www.tamilagaasiriyar.com
14.www.taakkootani.blogspot.in
15.www.testfnagai.blogspot.in
16.www.voiceoftata.blogspot.in
17.www.testfinkilvelur.blogspot.in
18.www.tnstfcuddalore.blogspot.in.
19.www.teachersalem.blogspot.in
20.www.arivomarasanaigal.blogspot.com.
21.www.aeeoassociation.blogspot.in
22.www.testfnagai.blogspot.com
23.www.tnschools.co.in
24 http://kalvinilayam.blogspot.in/


facebook
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி
tnkalvl
sstateachers
asiriyarkural
tamilagaasiriyar
teacherskottanikrishnagiri
murugaselvarajan
ramasamy
தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி ஸ்ரீவில்லிப்புத்தூர் 
ஜனநாயகம் ஜனநாயகம்   
tnptfmani
aasiriyar voice 
நடேசன் 
கிரிஜா AEEO 
முகநூளில் உள்ள ஆசிரியர் அனைவரும் 


நான் தொகுத்ததில் விடுபட்ட BLOG இருந்தால்  உடனே என்னுடைய E.Mail க்கு தெரிவிக்கவும் [email protected]
                                                        phone:   9750982287

Source : http://aeeoassociation.blogspot.in/

ஓய்வூதியர்களுக்கான பஞ்சப்படி உயர்வு

click here G.O 363,DT 23.08.2013 D.A Hike to those retired between 1.6.1988 and 31.12.1995 – Orders - Issued.
ஓய்வூதியர்களுக்கான பஞ்சப் படியை உயர்த்தி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, 1988, ஜூன் 1ம்தேதியில் இருந்து, 1995, டிசம்பர், 31ம் தேதி வரை ஓய்வு பெற்றவர்களுக்கு, பஞ்சப் படியை உயர்த்தி, தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி, குறிப்பிட்ட ஆண்டில் ஓய்வு பெற்றவர்களுக்கு,மாதம், 870 ரூபாய், கூடுதலாகக் கிடைக்கும்.

TNPSC - குரூப் 4 தேர்வு : 14 லட்சம் பேர் எழுதினர்

தமிழகம் முழுவதும் 244 மையங்களில் 5,566 பணியிடங்களை நிரப்ப இன்று குரூப் 4 தேர்வு நடந்தது. 14 லட்சம் பேர் தேர்வு எழுதினர். தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் குரூப் 4 தேர்வு இன்று நடந்தது. இத்தேர்வு மூலம் இளநிலை உதவியாளர் (பிணையமற்றது) 3,469, இளநிலை உதவியாளர் (பிணையம்) 62, வரி தண்டலர் (கிரேடு1) 19, தட்டச்சர் 1,738, சுருக்கெழுத்து தட்டச்சர் (கிரேடு 2) 242, நில அளவர் 6, வரைவாளர் 30 என 5,566 காலி பணியிடங்களை நிரப்பப்பட உள்ளன. 

டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 விடைகள் நகல் நாளை வெளியீடு: நவநீதகிருஷ்ணன்

தமிழகத்தில் இன்று குரூப்-4 தேர்வு நடைபெற்றது.இது குறித்து டி.‌என்.பி.எஸ்.சி, தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறியபோது, 5,566 பணியிடங்களுக்கு இன்று நடந்த டி.என்.பி.எஸ்.சி.குரூப்-4 தேர்வை தமிழகம் முழுவதும், 12 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர். இதற்கான விடைகள் நாளை (ஆக.26) அல்லது செவ்வாய்க்கிழமை வெளியிடப்படும் என்று கூறினார்.

இன்றைய ஆசிரியர் படும் பாடு-நன்றி திரு.கண்ணன் ஸ்ரீ

அடிக்கக் கூடாது.
திட்டக் கூடாது.
மனம் நோகக் கூடாது.
மன உலைச்சல் வந்துவிடக் கூடாது.
வெளியில் நிக்க வைக்கக் கூடாது.
நாம போடுற மார்க்க அவனே திருத்தி மார்க் போட்டுக்குவான் கண்டுக்ககூடாது.
வீட்டுப்பாடம் படிச்சானா,
தெரிஞ்சுக்கக் கூடாது.
வகுப்புக்கு வராமல் சுத்துறானா ,கண்டிக்கக் கூடாது.
ஒழுங்கீனமா நடந்துக்கிறானா
கேட்டுறக் கூடாது.
நினைச்சா பள்ளிக்கு வருவான்
ஒன்னும் சொல்லக்கூடாது .
பேப்பர்ல அப்பா கையெழுத்த அவனே போட்டுக்குவான்
தப்புன்னு சொல்லிறக்கூடாது.
இத்தனைக்கும் மேல
மதிக்கக்கூட மாட்டான்
கேர் பண்ணக்கூடாது.
பேரண்ட்ஸ கூப்பிட்டு வரச்சொன்னா
பேரண்ட்ஸ் வரமாட்டாங்க
பொறுமை இழக்க கூடாது.

காலந்தள்ளுறதே கஷ்டம் சாமி.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் கோவை மாவட்டப் பொதுக்குழு

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் கோவை மாவட்டப் பொதுக்குழு 25-8-13 அன்று மாலை 4 மணிக்கு பொள்ளாச்சி விஆர்ஐ பள்ளியில் நடை பெற்றது.மாவட்டத் தலைவர் திரு மயில்சாமி, திரு.ஏ.நாச்சிமுத்து .நாராயணசாமி,மாநிலத் தலைவர் திரு.கு.சி.மணி,மாநில துணைச்செயலாளர் திரு.காளியப்பன் மற்றும் இயக்க செம்மல்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
தகவல்-ஆனைமலை குமார்

கிரீன் டீ---இந்த டீ குடிப்பதால் என்ன பலன்?


கிரீன் டீ பைகள் அல்லது இலை வடிவத்திலும் கிடைக்கும். மற்ற டீ போல கொதிக்க வைக்கவோ.... பால் சேர்க்காவோ தேவையில்லை. தேவைக்கு தேன் அல்லது பனங்கற்கண்டு சேர்த்து அருந்தலாம் ...
கொதிக்க வைக்கப்பட்ட நீரில் கிரீன் டீ பை (அ) இலையை சில நிமிடங்கள்(மூன்று நிமிடங்கள்) வைத்து வடிகட்டி அருந்தலாம்.

முதல்வர் துவக்கி வைப்பதற்காக காத்திருக்கும் 12 புதிய கல்லூரிகள்.

முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைப்பதற்காக, தமிழகத்தில் புதியதாக துவக்கப்பட்ட, 12 அரசு கல்லூரிகள் காத்திருக்கின்றன.அவற்றில் சேர்ந்த மாணவர்கள், 37 நாட்களாக வகுப்புகளுக்கு செல்ல முடியாமல் காத்திருக்கின்றனர்.முதல்வர் ஜெயலலிதா, கடந்த சட்டசபை தொடரில், விதி எண் 110 ன் கீழ், "தமிழகத்தில், சிவகாசி, கோவில்பட்டி, முதுகுளத்தூர்,

மதிப்பெண் சான்றுகளில் திருத்தம்: தலைமை ஆசிரியர்களுக்கு புது உத்தரவு.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண்சான்றுகளில், திருத்தம் செய்யும் கோரிக்கை வராத வண்ணம்நடந்து கொள்ள, புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்களில், பெயர் திருத்தம், இன்ஷியல் திருத்தம் மற்றும் ஜாதி திருத்தம் உள்ளிட்ட திருத்தம் கோரும் மனுக்கள், பள்ளிக்கல்வித் துறை

652 கணினி ஆசிரியர் பணியிடங்களை 2 மாதங்களில் நிரப்ப உத்தரவு.

தமிழகத்தில், பள்ளிகளில் உள்ள, கணினி ஆசிரியர் பணியிடங்களில், 2 மாதங்களில், 652 பேரை தேர்ந்தெடுக்கும் நடவடிக்கையை துவங்கி, கணிசமான பகுதியை முடிக்க, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது.தமிழ்நாடு கணினி அறிவியல் பி.எட்., பட்டதாரி ஆசிரியர் நலச் சங்கம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட, கோர்ட் அவமதிப்பு மனுவை, நீதிபதிகள் பானுமதி, சசிதரன் அடங்கிய, டிவிஷன் பெஞ்ச் விசாரித்தது. மனுதாரர்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் 11 வகையான விவரங்கள் சேகரிக்க முடிவு.

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வெழுதும் மாணவ, மாணவியரின் பலர், படிப்பிற்குப் பின், மதிப்பெண் சான்றிதழில் இடம் பெற்றுள்ள விவரங்களில், பிழை இருப்பதாகக் கூறி, திரும்ப, திரும்ப தேர்வுத்துறைக்கு படை எடுக்கின்றனர். இந்த பிரச்னையை, முற்றிலும் தடுக்கும் வகையில், மாணவர்களின் புகைப்படத்துடன், 11 வகையான விவரங்கள் மற்றும் மாணவர், பெற்றோர், வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியர் ஆகிய, நான்கு பேரிடமும் கையெழுத்து பெற, தேர்வுத்துறை, ஏற்பாடு

எஸ்.எம்.எஸ்., மூலம் பள்ளி பொதுத் தேர்வு முடிவுகள்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகளை, மாணவர்களுக்கு, மொபைல் போனில், எஸ்.எம்.எஸ்., மூலம் வழங்க, தேர்வுத்துறை ஏற்பாடு செய்து வருகிறது.இந்த கல்வி ஆண்டில், தமிழகத்தில், 10 ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் விவரத்தை, ஆன்- லைனில் பதிவு செய்ய

முதுகலை ஆசிரியர்களுக்கு "திறன் வளர் பயிற்சி"

தமிழகத்தில், மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, நாளை முதல், செப்., 11ம் தேதி வரை, "திறன் வளர் பயிற்சி" வழங்க மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவன இயக்குனர் உத்தரவிட்டு உள்ளார்.அவரது உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது:

எம் எட் தேர்வு முடிவுகள் நாளை வெளியீடு


அதிர்ச்சி செய்தி திருப்பூரில் 465 குறைபாடுள்ள குழந்தைகள் பிறப்பு


ஆசிரியர்தினம் ஆசிரியர்களுக்கான கட்டுரைப்போட்டி- தினமலர் அறிவிப்பு


50ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மாணவர் சேர்க்கை இல்லாததால் மூடல்

தியானம் செய்யும் முறை.

உடல் தூய்மைஉடல், கை, கால், முகம் அலம்பி தியானத்தை துவங்க வேண்டும்

வயிறு காலியாக இருக்க வேண்டும்

உகந்த நேரம்சந்தியா வேளை – காலை, மாலை

உகந்த இடம்காற்றோட்டமான அமைதியான சூழல்

ஆசனம்சுகாசனம் அல்லது பத்மாசனம், அர்த்த பத்மாசனம், சித்தாசனம் அல்லது வஜ்ராசனம்


முத்

புதிய தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம் தமிழக அரசு ஏன் நிராகரிக்கவேண்டும்?

ஓய்வூதியம் என்றால் என்ன? நோபல் பரிசும்,இந்தியாவின் மிகஉயர்ந்த பாரதரத்னா விருதும் பெற்ற பொருளாதாரமேதை அமார்த்தியசென் ‘ஓய்வூதியம் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் உற்பத்தி செய்யப்பட்ட செல்வத்தின் சமமான மறுபங்கீடே’ என்று விளக்கமளித்துள்ளார். செல்வத்தை உற்பத்தி செய்வதே தொழிலாளிதான்.அதில் அவனுக்குப் பங்கு உண்டு. இந்த அடிப்படையில்தான் 1871ல் ‘ஓய்வூதியச் சட்டம் 1871’ நிறைவேற்றப்பட்டது.

2 மாதங்களுக்குள் 652 கணினி ஆசிரியர்களுக்கு பணி நியமனம்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள 652 கணினி ஆசிரியர் பணியிடங்களை 2 மாதங்களுக்குள் நிரப்ப வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு கணினி அறிவியல் பி.எட். பட்டதாரி ஆசிரியர்கள் நலச் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜி.முத்துராமன் நீதிமன்ற அவமதிப்புக்கான நடவடிக்கை கோரும் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

பி.எட்., சேர்க்கைக்கான கவுன்சிலிங் - தேதி வாரியான விபரங்கள்:

பி.எட்., படிப்பிற்கான கவுன்சிலிங், ஆகஸ்ட் 30ம் தேதி தொடங்கி, செப்டம்பர் 5ம் தேதி வரை பல்வேறு பாடங்களுக்கு நடைபெறவுள்ளது. இந்த கவுன்சிலிங் நிகழ்ச்சி, சென்னையிலுள்ள விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில், ஒற்றை சாளர முறையில் நடைபெறுகிறது.

விரிவான தேதி விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஆகஸ்ட் 30 - மாற்றுத் திறனாளிகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர் வாரிசுகள் மற்றும் எஸ்.டி., பிரிவினருக்கான கவுன்சிலிங்.

ஆகஸ்ட் 31 - இயற்பியல், ஹோம் சயின்ஸ் மற்றும் கணிதம் ஆகிய பாடங்களுக்கான கவுன்சிலிங்.

செப்டம்பர் 1 - கணிதம் மற்றும் புவியியல் ஆகிய பாடங்களுக்கான கவுன்சிலிங்.

செப்டம்பர் 2 - விலங்கியல் மற்றும் தமிழ் ஆகிய பாடங்களுக்கான கவுன்சிலிங்.

செப்டம்பர் 3 - ஆங்கிலம் மற்றும் வரலாறு ஆகிய பாடங்களுக்கான கவுன்சிலிங்.

செப்டம்பர் 4 - வேதியியல், கணிப்பொறி அறிவியல், பொருளியல் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களுக்கான கவுன்சிலிங்.

செப்டம்பர் 5 - தாவரவியல் பாடத்திற்கான கவுன்சிலிங்.

கட்-ஆப் மதிப்பெண்கள் பற்றி அறிய http://www.ladywillingdoniase.com/ என்ற வலைத்தளம் செல்க.

web stats

web stats