rp

Blogging Tips 2017

பிளஸ்-1 தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டாலும் பிளஸ்-2 செல்லலாம்

பிளஸ்-1 வகுப்புக்கு முதல் முதலாக இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறாவிட்டாலும் அவர்கள் பிளஸ்-2 செல்லலாம் என தேர்வுத்துறை அதிகாரி தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வும், பிளஸ்-2 தேர்வும் அரசு பொதுத்தேர்வுகளாக நடத்தப்படுகின்றன. பிளஸ்-1 தேர்வு சாதாரண தேர்வாகத்தான் கடந்த ஆண்டு வரைநடத்தப்பட்டு வந்தது.இதனால் பிளஸ்-1 வகுப்பு பாடங்களை ஆசிரியர்கள் சரிவர நடத்துவதில்லை என்றும், பல தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 பாடம் அறவே நடத்தப்படுவதில்லை என்றும் புகார்கள் வந்தன. ஆனால் நீட் தேர்வில் பிளஸ்-1 வகுப்பில் உள்ள பாடத்தில் இருந்து நிறைய வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன.

தொடக்க கல்வி டிப்ளமா தேர்வு: 17ல், 'ரிசல்ட்'

தொடக்க கல்வி டிப்ளமா ஆசிரியர் பயிற்சி தேர்வு முடிவு, வரும், 17ம் தேதி வெளியாகிறது.இது குறித்து, அரசு தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி, வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தொடக்க கல்வி டிப்ளமா ஆசிரியர் தேர்வுக்கு, ஆசிரியர் பயிற்சி நிறுவனம் வழியே பயிற்சி பெற்று, முதலாம் ஆண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு தேர்வு எழுதியோர், வரும், 17ம் தேதி, தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். அன்று முதல், தேர்வர்கள், தாங்கள் படித்த நிறுவனத்திலும், தனித்தேர்வர்கள், தாங்கள் விண்ணப்பித்த பயிற்சி நிறுவனங்களிலும், சான்றிதழ்களை பெறலாம்.இந்த தேர்வின் விடைத்தாள் நகல்களை பெறவும், மறுகூட்டல் செய்யவும் விரும்புவோர், www.dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில், விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்யலாம்.

ஆறாவது ஊதியக்குழுவில் பெற்று வந்த SPECIAL ALLOWANCE ரூ 500/- ரூ 30,50,60 ஏழாவது ஊதிய குழுவில் தொடர்ந்து பெற்று கொள்ள அனுமதிக்கலாமா ? - RTI

SPD PROCEEDINGS-BRC ல் ஆதார் மையம் அமைக்க உத்தரவு

CLICK HERE

தமிழ்நாடு பெயர் சூட்டப்பட்டதன் நினைவாக பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் : முதல்வர் அறிவிப்பு

1969-ல் ஜனவரியில் தமிழகத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. இந்நிகழ்வு நடந்து 50 ஆண்டு ஆவதை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு பொன்விழா ஆண்டு என அரசு சார்பில் கொண்டாடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
 ஜனவரி 17-ம் தேதியன்று தமிழ்நாடு பொன்விழா ஆண்டாக கொண்டாடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டதை கொண்டாடும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் இதனை அறிவித்துள்ளார். 1967ம் ஆண்டில் தமிழக முதல்வராக பொறுப்பு வகித்த அறிஞா் அண்ணாவின் ஆட்சி காலத்தில் தமிழகத்தின் பெயா் சூட்டு விழா அமைந்தது. முன்னதாக மெட்ராஸ் மாகாணம் என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மொழியின் அடிப்படையில் தமிழ்நாடு என பெயா் சூட்டப்பட்டது.

G.O.Ms.No.11 Dt: January 10, 2018-Provident Fund – General Provident Fund (Tamil Nadu) – Rate of interest is 7.6% (Seven point six per cent) with effect from 1st January, 2018 to 31st March, 2018. – Orders – Issued.

CLICK HERE

நிதி உதவி பெறும் பள்ளிகளின் EMIS மற்றும் மாணவர் வருகையை ஆய்வு செய்ய சிறப்பு குழு -விதிகள் வெளியிட்டு தேனி மாவட்ட ஆட்சியர் உத்தரவு

*SALM, ALM முறை வகுப்புகளுக்கு மாவட்ட மற்றும் வட்டார அளவில் பயிற்சி வழங்குதல் குறித்த மாநில திட்ட இயக்குநரின் செயல்முறைக் கடிதம்*

 அனைவருக்கும் கல்வி இயக்கம் 2017-18 ம் கல்வி ஆண்டிற்கு தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கான SALM மற்றும் ALM குறித்து மாவட்ட மற்றும் வட்டார அளவில் பயிற்சிகள் வழங்குதல் குறித்து மாநில திட்ட இயக்குநர் செயல்முறைக் கடிதம் வெளியிட்டுள்ளார்.*

🌟 2017-18 ஆம் கல்வி ஆண்டில் தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு படைப்பாற்றல் மற்றும் எளிய படைப்பாற்றல் கல்வி பயிற்சிகளை வழங்கிட அனைவருக்கும் கல்வி இயக்ககத்தால் திட்டமிடப்பட்டு மாநில அளவில் கருத்தாளர் பயிற்சி நடத்தப்பட்டன.

🌟 இப்பயிற்சியானது மேலும் மாவட்ட மற்றும் வட்டார அளவில் நடத்துவதற்கு கால அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது.

INCOME TAX 2018 CALCULATION EXCEL FILE WITH FORM-16

CLICK HERE TO DOWNLOAD

Part Time Teachers ஆக பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு கால முறை ஊதியம் வழங்க ஆணையர் உத்தரவு!

பள்ளிக்கல்வி துறையில் பகுதிநேர ஆசிரியர்களாக பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளை அரசாணை எண் : 151 படி காலமுறை ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கவும் அரசாணை எண் : 151 யை நடைமுறைபடுத்தவும் உத்தரவு பிறபித்துள்ளா
ர். 

ஜனவரி 29-ஆம் தேதி பட்ஜெட் கூட்டத் தொடர்: வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்பட வாய்ப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் ஜனவரி 29-ஆம் தேதி தொடங்க உள்ளது. மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட இருக்கிறது. மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.அப்போது நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் வருமான வரி விலக்கு உச்சவரம்பு அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இது குறித்து நிதியமைச்சக வட்டாரங்கள் கூறுகையில், தற்போது உள்ள உச்சவரம்பானது ரூ.2.5 லட்சத்திலிருந்து ரூ. 3 லட்சமாக உயர்த்தப்பட உள்ளதாகவும், ஐந்து லட்ச ரூபாய் முதல் பத்து லட்ச ரூபாய் வருமானம் உடையவர்களுக்கு 10 சதவீத வரி விதிக்கவும். மேலும், பத்து லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வருமானம் உடையவர்களுக்கு 20 சதவீத வரியும். 20 லட்ச ரூபாய்க்கு மேல் வருமானம் இருந்தால் 30 சதவீத வரியும் விதிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தில்லி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

TNDSE WEBSITE PASSWORD மறந்து விட்டதா நீங்கள் செய்ய வேண்டியது என்ன .....

Headmaster' கவனத்திற்கு 

Tndse website password மறந்து விட்டால் கீழ்கண்ட EMAIL  முகவரி க்கு   request ஐ 
பள்ளி dise  no  உடன் அனுப்பினால் password reset செய்து அனுப்புவார்கள் 
‬: EMAIL. ID                  

*பொங்கலுக்காக ஜனவரி 12ம் தேதி தமிழகத்தின் அனைத்து பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்கு சிறப்பு விடுமுறை - தமிழக அரசு.*

பொங்கல் பண்டிகையையொட்டி அனைத்து பள்ளிகளுக்கும் சிறப்பு நிகழ்வாக 12.01.18 அன்று விடுமுறை. பள்ளிக்கல்வித் துறை அரசு முதன்மைச் செயலாளர் அவர்கள் உத்தரவு.

*2017-18 ஆண்டிற்கு அனைத்து வகை செயல்பாடுகளிலும் சிறந்து விளங்கும் ஆசிரியர்களுக்கு "கனவு ஆசிரியர் விருது" வழங்குவது குறித்து தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்*

யார் எல்லாம் GROUP C & D? யாருக்கெல்லாம் "பொங்கல் போனஸ்" உண்டு?


2009&TET ஆசிரியர்களின் வழக்கில் ஒவ்வொரு ஆசிரியர்களின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா?

ஊதியக்குழு குறைகளை களைய குழு அமைக்கப்படும் -ஆளுநர் உரை அறிவிப்பினை தமிழக அரசு வரவேற்பதுடன் குழு தலைவராக ஓய்வுபெற்றஉயர்நீதிமன்ற நீதியரசரை நியமிக்கவும் கோரிக்கை


ஆசிரியர் பணிப்பதிவேடு வாரிசு புதுப்பிப்பு அவசியம்

 ‘ஆசிரியர்களின் பணிப்பதிவேடுகளில் வாரிசு தொடர்பான முழு விவரங்களை ஐந்து  ஆண்டுகளுக்கு ஒரு முறை தவறாமல் புதுப்பிக்க வேண்டும்,‘ என மாநில கணக்காயர் அலுவலக முதுநிலை கணக்கு அதிகாரி பாலசந்தர் வலியுறுத்தினார். 

மதுரையில் தொடக்க கல்வித்துறை மற்றும் மாநில கணக்காயர் அலுவலகம் சார்பில் ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி (பி.எப்.,) கணக்கீடு, சம்பள பில் தயாரிப்பில் ஏற்படும் சந்தேகங்கள், தவறுகளுக்கு தீர்வு காணும் கருத்தரங்கு நடந்தது.

இதில் பாலசந்தர் பேசியதாவது:

மாறுதலால் பல பள்ளிகளில் பணியாற்றும்போது ஒரு ஆசிரியருக்கு இரண்டு பி.எப்., கணக்குகள் உருவாகின்றன. இதை ஒரே கணக்காக மாற்ற வேண்டும். பி.எப்., சம்பள பில் தயாரிப்பில் ஏற்படும் சிறு தவறு எதிர்காலத்தில் உரிய பணப் பயனை பெறமுடியாத அளவிற்கு பிரச்னை ஏற்படும்.

எனவே சம்பள பில் தயாரிப்பு மற்றும் பிடித்தம் செய்யப்படும் போது உரிய இனங்களுக்கு உரிய கணக்குகள் தலைப்பை குறிப்பிட வேண்டும். ஆசிரியர்கள் பணிப்பதிவேடுகளில் குறிப்பிடப்பட்ட வாரிசுகள் விவரத்தை ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை புதுப்பித்து, இரண்டு சாட்சி கையொப்பம் பெறுவது அவசியம். பலர் இதை புதுப்பிப்பதில்லை.

G.O.(Ms) No. 7 Dt: January 08, 2018 Pongal Festival, 2018 – Grant of Pongal Prize Rs 500 to ‘C’ and ‘D’ Group Pensioners / All Family Pensioners - Orders - Issued.

click here

துணை முதல்வர் மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம் அவர்களுடன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொறுப்பாளர்கள் சந்திப்பு-

 அமெரிக்கா  ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க  நிதி கோரப்பட்டு வருவது அனைவரும் அறிந்ததே.அதற்காக நிதி சேகரிப்பில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி முன் கையெடுத்து பணியாற்றி வருவது அறிந்ததே,அவ்வகையில் இன்னும் குறைவுபடும் தொகை ரூ 5 கோடியை  ஈடுகட்ட தமிழக அமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் தமது ஒரு மாத ஊதியத்தை   அறிவிக்க  வேண்டும் என தமிழக அரசின் துனை முதல்வரும் மற்ரும் நிதி அமைச்சருமான மாண்புமிகு ஓ.பன்னீர்செல்வம் அவர்களை சந்தித்து  கோரிக்கை வைக்கப்பட்டது .உடன் திரைப்பட இயக்குனர் திரு கௌதமன் பங்கேற்பு..முதல்வருடன் ஆலோசனைக்கு பின் அறிவிப்பதாக உறுதி
Image may contain: 7 people, people smiling, people standing

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலப்பொறுப்பாளர்கள் மாநிலத்தலைவர் EX MLC திரு.முத்துசாமி அவர்கள். தலைமையில் தொடக்கக்கல்வி இயக்குநர் உள்ளிட்ட இயக்குநர்கள் மற்றும் இணை இயக்குநர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து புத்தாண்டு மற்றும் தமிழர் திருநாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது


ஊதியக் கோரிக்கைகளை பரிசீலிக்க தனிக்குழு!!!

New pay commission2017 ,classification of Groups under Pay levels,in GO MS no 303, finance dated 11/10/2017,

New pay commission group classification of Groups under Pay levels,in GO MS no 303, finance dated 11/10/2017,

👉 Level 1 is group D,
👉Pay Level from 2 to 12 are in group C
👉pay Level from 13 to 24 ,are in group B
👉pay Level from 25 to 32 ,are in group A.
                                       in another method
    GROUP CLASSIFICATION
     7 TH PAY COMMISSION
      (GRADEPAY)
8 TH PAY COMMISSION    
  (LEVEL OF PAY)
"D"Group

Grade pay rs.1300  

Level....01

"C" Group

Grade pay 
Rs.1400 to rs.4300

Level...02 to12

"B" Group

Grade pay
Rs.4400 to Rs.6000

Level...13 to 24

"A" Group

Grade pay
Rs.6600 to Rs.10000

Level...25 to 32


SABL முறை குழந்தைநேய கற்பித்தல் முறை உள்ளடக்கியதே (Paediology method) - RTI Reply

கடித எண் 29872 Dt: January 08, 2018 ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறையில் தரவரிசைப்பட்டியல் தயாரிப்பது பள்ளிக் கல்வித் துறை கூட்ட அரங்கில் உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது - கூட்ட நடவடிக்கை குறிப்பு - சார்ந்து

CLICK HERE

ஹார்வர்ட் தமிழ் இருக்கை.... (உங்கள் புரிதலுக்காக)

உலகில் சுமார் 7102 மொழிகள் உள்ளன. 

இவற்றுள் 7 மொழிகளை பாரம்பரிய/தொன்மை மொழிகளென வகைப்படுத்தியுள்ளனர், மொழி ஆராய்ச்சியாளர்கள். இவை சமஸ்கிரதம், கிரேக்கம், லத்தீன், ஹீப்ரு, சீனம், பாரசீகம் மற்றும் நமது தமிழ் மொழி. இந்த 7 மொழிகளில் 6 மொழிகள் உலகப் புகழ் பெற்ற ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் கற்றுத் தரப்படுகின்றன. 

EMIS - Trick to add directly admitted students in EMIS (Any standard)


How to enter Teachers' Profile on DSE website Tamil Tutorial (For Govt Schools) ||


EMIS -கைபேசி செயலி (MOBILE APPLICATION) -இணைய தள வசதி -பயன்படுத்த தொடக்க பள்ளிகளுக்கு 200 ரூ , நடுநிலை பள்ளி 400 ரூ , உயர் நிலைப்பள்ளி 600ரூ ,மேல்நிலை பள்ளி 800 ரூ வழங்க SSA -SPD-உத்தரவு

No automatic alt text available.

web stats

web stats