Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

தமிழ்நாடு பெயர் சூட்டப்பட்டதன் நினைவாக பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் : முதல்வர் அறிவிப்பு

1969-ல் ஜனவரியில் தமிழகத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டப்பட்டது. இந்நிகழ்வு நடந்து 50 ஆண்டு ஆவதை கொண்டாடும் வகையில் தமிழ்நாடு பொன்விழா ஆண்டு என அரசு சார்பில் கொண்டாடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
 ஜனவரி 17-ம் தேதியன்று தமிழ்நாடு பொன்விழா ஆண்டாக கொண்டாடப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்டதை கொண்டாடும் வகையில் தமிழக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதல்வர் இதனை அறிவித்துள்ளார். 1967ம் ஆண்டில் தமிழக முதல்வராக பொறுப்பு வகித்த அறிஞா் அண்ணாவின் ஆட்சி காலத்தில் தமிழகத்தின் பெயா் சூட்டு விழா அமைந்தது. முன்னதாக மெட்ராஸ் மாகாணம் என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில் வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மொழியின் அடிப்படையில் தமிழ்நாடு என பெயா் சூட்டப்பட்டது.


1967-ஆம் ஆண்டு அப்போதையசென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்ட பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, 1969-ஆம் ஆண்டு ஜனவரியில் தமிழ்நாடு என்று நமது மாநிலத்திற்கு பெயர் சூட்டப்பட்டது. இதனை தமிழ்நாடு பொன் விழா ஆண்டாக அரசு கொண்டாட முடிவு செய்துள்ளது.

தமிழர்களின் பெருமையை பறை சாற்றும் வகையில், கலை, விளையாட்டு, கட்டுரை, கவிதை, பேச்சுப் போட்டி போன்ற நிகழ்ச்சிகள் சென்னையிலும்,அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பாக நடத்தப்படும். தமிழ் ஆராய்ச்சியில் சிறந்து விளங்கும் இளம் தமிழ் ஆய்வாளர்கள் தெரிவு செய்யப்பட்டு, சென்னையில் நடைபெறும் நிறைவு விழாவில் அனைவரும் சிறப்பிக்கப்படுவார்கள் என அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment


web stats

web stats