rp

Blogging Tips 2017

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு மறுமதிப்பீடு முடிவுகள் இன்று வெளியீடு -தினமணி

பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு மறுமதிப்பீடு, மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) வெளியிடப்படும் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இந்தத் தேர்வில் விடைத்தாள் மறுமதிப்பீடு, மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களில் மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் விவரம் student.hse14rtrv.in என்ற இணையதளத்தில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.

பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு: மறுகூட்டல் முடிவுகள் இன்று வெளியீடு


பத்தாம் வகுப்பு சிறப்பு துணைத் தேர்வு மறுகூட்டல் முடிவுகள் இணையதளத்தில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 9) வெளியிடப்பட உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

இந்தத் தேர்வில் மறுகூட்டல் கோரி விண்ணப்பித்தவர்களில், மதிப்பெண் மாற்றம் உள்ளவர்களின் விவரங்கள் student.sslc14rt.in என்ற இணையதளத்தில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு வெளியிடப்படும்.

இந்தப் பட்டியலில் இல்லாத விடைத்தாள்களின் மதிப்பெண்ணில் எந்தவித மாறுதலும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அங்கீகாரம் இல்லாமல் 1,000 தனியார் பள்ளிகள்...தவிப்பு:நில பற்றாக்குறை பிரச்னைக்கு அரசு தீர்வு எப்போது?



தமிழகத்தில், நில பற்றாக்குறை பிரச்னையால், கடந்த 2011ல் இருந்து, அங்கீகாரம் இல்லாமல், 1,000 தனியார் பள்ளிகள் தவித்து வருகின்றன. இந்த பள்ளிகள் மீது, எவ்வித முடிவும் எடுக்காமல், தமிழக அரசு காலம் தாழ்த்தி வருகிறது.
பல ஆண்டுகளுக்கு முன், தனியார் பள்ளிகளுக்கான, குறைந்தபட்ச நில பரப்பளவு குறித்து, தமிழக அரசு, ஒரு அரசாணையை வெளியிட்டது.அதில், 'மாநகராட்சி பகுதியாக இருந்தால், 6 கிரவுண்டு, மாவட்ட தலைநகர் பகுதியாக இருந்தால், 6 கிரவுண்டு, நகராட்சி பகுதி எனில், 10 கிரவுண்டு, பேரூராட்சி பகுதியாக இருந்தால், ஒரு ஏக்கர் மற்றும் ஊராட்சி பகுதியாக இருந்தால், மூன்று ஏக்கர் நிலமும், பள்ளிக்கு இருக்க வேண்டும்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுப்பு:இந்த குறைந்தபட்ச நில பரப்பளவு இல்லாததால், 1,000 தனியார் பள்ளிகளுக்கு, தொடர் அங்கீகாரம் அளிக்க, தொடக்கக் கல்வித் துறை மற்றும் மெட்ரிக் பள்ளி இயக்குனரகம் மறுத்து விட்டன.
'நில பற்றாக்குறை உள்ள பள்ளிகள், 2011க்குள், கூடுதல் நில வசதியை ஏற்படுத்த வேண்டும்' என, தமிழக அரசு தெரிவித்தது.ஆனால், நிலம் கிடைக்காதது, நிலத்தின் விலை உயர்வு காரணமாக, கூடுதல் இட வசதியை, பள்ளி நிர்வாகங்கள் ஏற்படுத்தவில்லை. இதனால், நான்கு
ஆண்டுகளாக, அங்கீகாரம் இல்லாமல், 1,000 பள்ளிகளும் இயங்கி வருகின்றன.
நிபுணர் குழு:இதற்கிடையே, இந்த விவகாரம் தொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குனர் தலைமையிலான நிபுணர் குழு, மாநிலம் முழுவதும் கருத்து கேட்புக் கூட்டங் களை நடத்தி, அங்கீகாரம் இல்லாத பள்ளிகள் மீதான பிரச்னையை, எந்த வகையில் தீர்க்கலாம் என்பது குறித்து, தமிழக அரசுக்கு, பரிந்துரை செய்துள்ளது.
இந்த அறிக்கை, பள்ளிக்கல்வி அமைச்சகத்தில், ஒரு ஆண்டாக கிடப்பில் உள்ளது. இதன்மீது, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால், மாணவர் மற்றும் பெற்றோர் மத்தியில், நம்பகத்தன்மை இல்லாத நிலையில், 1,000 பள்ளிகளும் இயங்கி வருகின்றன.
இதுகுறித்து, தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக் பள்ளிகள் சங்க பொதுச் செயலர், நந்தகுமார் கூறியதாவது:

திருச்சி மாவட்டத்தில் மாணவர்களின் கல்வி ஊக்க தொகை கையாடல்: திருவெறும்பூர் உதவி தொடக்கக் கல்வி அலுவலர் சஸ்பெண்ட்

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் கல்வி ஒன்றியத்தில் பிளாக்-1ல் முத்துக்கிருஷ்ணன், பிளாக்-2ல் பர்வீன் ஆகிய இருவரும் கூடுதல் தொடக்க கல்வி அதிகாரிகளாக பணியாற்றி வந்தனர். மத்திய அரசு சார்பில், எஸ்சி, எஸ்டி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகையாக ரூ.500 வழங்கப்படும். இந்த பணம் அந்தந்த கூடுதல் தொடக்க கல்வி அதிகாரிகள் வங்கி கணக்கில் மத்திய அரசு செலுத்தும். அதன்படி, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கான கல்வி ஊக்கத்தொகை ரூ.5 லட்சம் கூடுதல் தொடக்க கல்வி அதிகாரி முத்துக்கிருஷ்ணன் வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டது. இப்பணத்தை மாணவர்களுக்கு வழங்காமல் அவர் கையாடல் செய்துவிட்டதாக புகார் எழுந்தது.

5,720 தமிழக அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி கிடையாது! : மத்திய அரசு அறிக்கையில் அதிர்ச்சி தகவல்

தமிழகத்தில், 15 சதவீத அரசு பள்ளிகளில், அதாவது, 5,720 அரசு பள்ளிகளில், கழிப்பறை வசதிகள் இல்லை' என, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த, 5,720ல், 1,442 பள்ளிகள், பெண்கள் பள்ளி என்பது குறிப்பிடத்தக்கது.


இணையதளத்தில்... : நாடு முழுவதும், மாநில வாரியாக, அதில், ஒவ்வொரு மாவட்ட வாரியாக உள்ள அரசு பள்ளிகள் எண்ணிக்கை, அதில், எத்தனை ஆண்கள் அரசு பள்ளிகளில், கழிப்பறை வசதி இல்லை; எத்தனை அரசு பெண்கள் பள்ளிகளில், கழிப்பறை வசதி இல்லை என்ற புள்ளி விவரங்கள், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் இணையதளத்தில், வெளியிடப்பட்டு உள்ளன. அதில், தமிழகத்தில், மொத்தம் உள்ள, 37,002 அரசு பள்ளிகளில், 1,442 பெண்கள் பள்ளிகளிலும், 4,278 ஆண்கள் பள்ளிகளிலும், கழிப்பறை வசதி இல்லை என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

DEO post - புதியதாக தெரிவு செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு பயிற்சி


தமிழகத்தில் காலியாக உள்ள மாவட்டக் கல்வி அலுவலர் அதனையொத்த பணியிடங்களுக்கு பதவி உயர்வு மூலம் நிரப்ப புதியதாக தெரிவு செய்யப்பட்ட தலைமை ஆசிரியர்களுக்கு வருகிற 11ம் தேதி முதல் 22ம் தேதி வரை பயிற்சி நடைபெறவுள்ளது

பி.எட். படிப்புக்காக காலத்தை இரண்டு ஆண்டுகளாக அதிகரிக்கும் விஷயத்தில் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை



பி.எட். படிப்புக்காக காலத்தை இரண்டு ஆண்டுகளாக அதிகரிக்கும் விஷயத்தில் முடிவு ஏதும் எடுக்கப்படவில்லை எனவும், அது ஆய்வில் இருப்பதாகவும் உயர்கல்வித் துறை அமைச்சர் பழனியப்பன் தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின் போது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரவை குழு துணைத் தலைவர் பாலபாரதி துணைக் கேள்வி எழுப்பினார். அப்போது, பேசிய அவர், தனியார் பி.எட்., கல்லூரிகளில் நியாயமற்ற வகையில்

செப்., மற்றும் அக்., மாத மேல்நிலை துணைத்தேர்வுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

"வரும் செப்., மற்றும் அக்., மாதங்களில் நடக்கும் மேல்நிலை துணைத்தேர்வுக்கு, தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்" என, அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தகுதியான தேர்வர்கள், மாவட்டம் வாரியாக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு மையங்களுக்கு உரிய ஆவணங்களுடன் நேரில் சென்று, தேர்வெழுத ஆன்-லைனில் விண்ணப்பிக்கலாம். ஏற்கனவே தேர்வு எழுதி, குறிப்பிட்ட பாடங்களில் தேர்ச்சி பெறாதவர்கள், அதே பாடங்களை மீண்டும் எழுதலாம். அவர்கள் "மறுமுறை தேர்வர்" எனப்படுகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ள 19 உத்தரவு


  • சிறந்த நிர்வாகத்துக்காக அரசு அதிகாரிகளுக்கு உரிய அதிகாரங்கள் தரப்படுகிறது. எனவே அகில இந்திய பணியில் இருக்கும் உயர் அதிகாரிகள் ஒவ்வொருவரும் அதிகபட்ச நன்னடத்தை, ஒழுங்கு நெறியுடன் நடந்து கொள்ள வேண்டும்.

  • முக்கிய முடிவுகள், திட்ட அமலாக்கங்களில் பெருந்தன்மையுடனும், அரசியல் பாரபட்சமின்றியும் நடந்து கொள்ள வேணடும்.
  • உயர் பதவிகளில் உள்ளவர்கள் எப்போதும் நேர்மையாக இருக்க வேண்டும்.
  •  நல்ல கொள்கைகளை மேம்படுத்த வேண்டும். கடமைகளை செய்வதில் தவறக்கூடாது.

பள்ளிக்கல்வி - மத்திய எரிசக்தித்துறை அமைச்சகத்தின் 2014ம் ஆண்டுக்கான தேசிய அளவில் மாற்று எரிசக்தி விழிப்புணர்வு முகாம் - 4,5,6 மற்றும் 7,8,9 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடத்துவது சார்பான இயக்குனரின் அறிவுரைகள்

DSE - DRAWING COMPETITION FOR 4,5,6 & 7,8,9 STD STUDENTS REG ENERGY AWARENESS 2014 REG PROC CLICK HERE...

உறுப்பினர் கேள்விக்கு தமிழில் பதிலளித்த மத்திய அமைச்சர், மக்களவையில் முதல் நிகழ்வு : தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பாராட்டு

உறுப்பினர் கேள்விக்கு தமிழில் பதிலளித்த மத்திய அமைச்சர், மக்களவையில் முதல் நிகழ்வு : தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பாராட்டுதல்களையும்,வாழ்த்துக்களையும் மத்திய வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு தெரிவித்துக்கொள்வதாக பொதுச்செயலர் திருமிகு .செ.முத்துசாமி Ex M.L.C அவர்கள் இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார். மேலும் இந்திய பாராளுமன்ற வரலாற்றில் தமிழில் பதிலளித்து தனி முத்திரை பதித்த வர்த்தக இணை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு தமிழக ஆசிரியர்கள் சார்பில் சிறப்பான வாழ்த்துக்களையும் அவர் தெரிவித்துள்ளார்.

திருவண்ணாமலை பொதுக்குழுவில் மத்திய அமைச்சராக வர்த்தக துறை அமைச்சருக்கு பாரராட்டு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடதக்கது.

கூட்டுறவு சங்கத்தில் பெற்ற கடன் தொகைக்காக ஆசிரியையின் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும் கல்வி அதிகாரிக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

கூட்டுறவு சங்கத்தில் பெற்ற கடன் தொகைக்காக ஆசிரியையின் சம்பளத்தில் இருந்து பணத்தை பிடித்தம் செய்து கடன் தொகையை திரும்ப செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கல்வி அதிகாரிக்கு, மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
கூட்டுறவு கடன் சங்கம்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி ஆசிரியர்கள், பஞ்சாயத்து யூனியன் அலுவலர்கள் கூட்டுறவு சிக்கன மற்றும் கடன் சங்கத்தின் தனி அதிகாரி ரவீந்திரன், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:–
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பஞ்சாயத்து யூனியன் நடுநிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வரும் லூர்து, விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றிய போது கூட்டுறவு சங்கத்தில் கடன் பெற்று இருந்தார். இந்த கடன் தொகையை வட்டியுடன் சேர்த்து 1 லட்சத்து 78 ஆயிரத்து 360 ரூபாயாக திருப்பி செலுத்த வேண்டும். ஆனால், ஆசிரியை லூர்து இந்த தொகையை திருப்பி செலுத்தவில்லை.
இதுகுறித்து திண்டுக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிக்கு மனு அனுப்பினேன். ஆசிரியை லூர்து சம்பளத்தில் இருந்து கடன் தொகையை பிடித்தம் செய்து செலுத்த சாணார்பட்டி உதவி தொடக்கக்கல்வி அதிகாரிக்கு மாவட்ட தொடக்கக்கல்வி அதிகாரி 20.2.2012 அன்று உத்தரவிட்டார்.
நடவடிக்கை எடுக்கவில்லை
அதன்பின்பும், ஆசிரியை லூர்துவின் சம்பளத்தில் இருந்து பணத்தை பிடித்தம் செய்து கடன் தொகையை திரும்ப செலுத்த உதவி தொடக்கக்கல்வி அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, ஆசிரியை லூர்துவின் சம்பளத்தில் இருந்து கடன் தொகையை பிடித்தம் செய்து கூட்டுறவு சங்கத்தில் செலுத்த கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.

உச்ச நீதிமன்றம் உத்திரவிட்ட பிறகும்,பணி நியமனம் வழங்காமல் 8 மாத இழுத்தடிப்புக்குபின் ,அவமதிப்பு வழக்கில் 3 வார காலத்தில் நியமன உத்திரவு வழங்குவதாக உறுதி

கரூர் மாவட்டத்தை சார்ந்த் திரு சுபாஷ் சந்திர போஸ் என்பவர் 2008 ஆம் ஆண்டு இடைநிலை ஆசிரியராக  நியமிக்கப்பட்டார்.ஆயினும் அவரது நியமனத்தில் தவறு இருப்பதாகக்கூறி அரசு கடந்த பிப்ரவரி -2010 ஆம் ஆண்டு அவரை பணிநீக்கம் செய்தது.(DISMISSED FROM SERVICE)

               ஆயினும் அரசின் பணிநீக்க உத்திரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குதொடுத்து வழக்கில் அரசு அவரை 3 வாரக்காலத்திற்குள் பணியில் நியமிக்க வேண்டும் என் தீர்ப்பு பெற்றார்

                    . ஆனால் தமிழக அரசு    அத்தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்தது.
                 அவ்வழக்கில் ஆசிரியர் திரு சுபாஷ் சந்திர போசுக்காக மூத்த வழக்கறிஞ்சர் திருமதி .நளினி சிதம்பரம் அவர்கள் வாதாடி அவ்வழக்கிலும் வெற்றி பெறப்பட்டது

அண்ணாமலை பல்கலைக்கழகம் மே 2014 நடத்திய தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது

CLICK HERE FOR MAY - 2014 REGULAR RESULTS

IGNOU -Hall Ticket for B.Ed & M.Ed Entrance Exam Published

CLICK HERE FOR IGNOU B.Ed/M.Ed ENTRANCE EXAM HALL-TICKET

சுதந்திர தின விழா-அனைத்து கல்வி அலுவலகம் மற்றும் பள்ளிகளில் சிறப்பாகக் கொண்டாடுதல்-அறிவுரைகள்

CLICK HERE-DSE-55478/M/E2/2014-DT -05.08.2014- CELEBRATION OF INDEPENDENCE DAY INSTRUCTION REG

தொடக்கக் கல்வி - கடனும் - முன்பணமும் - மா நில அரசு ஊழியர்களுக்கு வாகன மற்றும் கணினி முன்பணம் வழங்குதல் சார்ந்த இயக்குனரின் அறிவுரைகள்

தொடக்கக் கல்வி - கடனும் - முன்பணமும் - மாநில அரசு ஊழியர்களுக்கு வாகனமற்றும் கணினி முன்பணம் வழங்குதல் சார்ந்த இயக்குனரின் அறிவுரைகள்

ஆசிரியர் பட்டயப் படிப்பு: இன்று முதல் விண்ணப்பம் - தினமணி

பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆசிரியர் பட்டயப் படிப்பில் சேருவதற்கான விண்ணப்பங்களை வியாழக்கிழமை (ஆக.7) முதல் பெற்றுக் கொள்ளலாம் என மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆபத்தான நிலையில் அரசுப் பள்ளிகள் - எஸ். சந்திரசேகர்

அரசு கோடிக்கணக்கான ரூபாய்களை கொடுத்தும் கூட அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுக்கு ஆண்டு குறைந்து வருவதைப் புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. அதே நேரத்தில், தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை சதவீதம் உயர்ந்து வருகிறது.

கடந்த 2008-09 கல்வியாண்டில் 43.6 சதவீதமாக இருந்த அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை, 2012-13 கல்வியாண்டில் 36.5 சதவீதமாக சரிந்துள்ளது. அரசுப் பள்ளிகளை விட அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் பல இடங்களில் சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன.

ஆனால், அவற்றிலும் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. அங்கும் 2008-09-இல் 21.8 ஆக இருந்த மாணவர் சேர்க்கை 2012-13}இல் 17.9 சதவீதமாக சரிந்துள்ளது.

தனி ஊதியம் மற்றும் சிறப்பு ஊதியம் சார்பான பள்ளிக்கல்வி நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் விளக்க கடிதம் நாள்:08.07.2014.

CLICK HERE-DSE-SPECIAL PAY &PERSONAL PAY CALRIFICATION LETTER...................

PG TRB Revised Result Published Now (6.8.14)

PG TRB Revised Result Published for Physics, Commerce, Economics Subjecs - Click Here

தொடக்கக்கல்வி - நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் பி.எட்., தேர்ச்சி பெற்ற பிறகு ஊக்க ஊதிய உயர்வு பெறலாம் சார்பான உத்தரவு

click here RTE letters

முதுகலை ஆசிரியர் தேர்வு பொருளியல், இயற்பியல், வணிகவியல் பாடத்திற்கான மறுமதிப்பீடு செய்யபட்ட மதிமதிப்பெண் பட்டியல் உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவுப்படி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு

Changes made in Final Key Answers as per Court Direction

CLICK HERE FOR EXAMINATION RESULTSCLICK HERE FOR PROVISIONAL CERTIFICATE VERIFICATION LIST

முன் அனுமதி பெற்ற பின்னர் படிக்கும் படிப்புகளுக்கு மட்டுமே ஊக்க ஊதியம் அனுமதிக்கப்பட வேண்டும் - இயக்குனர் உத்திரவு

CLICK HERE TO DOWN LOAD  DEE PRECEDING

ஆசிரியர் தேர்வு வாரியம் காலிப்பணியிடங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப பட்டியலை ஏன் வெளியிட வேண்டும்

முதலில் 10726 இடங்களுக்குப் பட்டியலைத் தயாரிக்க, இப்போது கூடுதலான 508 பணியிடங்களுக்கானதையும் சேர்த்து பட்டியல் தயாரிப்பதை விட ஒட்டு மொத்தமாக 15000 அல்லது 20000 நபர்கள் வரையிலான பட்டியலை தயார் செய்துவிட்டால் போதுமே.

ஆசிரியர்களின் பதவி உயர்வு & மாறுதல் எதிர்காலம்?

ஒரு ஒன்றியத்தில் காலியிடம் எனில் முதலில் பதவிஉயர்வு... பின்னர் ஒன்றியத்திற்குள் மாறுதல், ஒன்றியம் விட்டு ஒன்றியம் மாறுதல், இறுதியாக மாவட்ட மாறுதல்.
ஆனால் இன்று...

தனி ஊதியம் மற்றும் சிறப்பு ஊதியம் சார்பான பள்ளிக்கல்வி நிதிக்கட்டுப்பாட்டு அலுவலரின் விளக்க கடிதம் நாள்:08.07.2014.

CLICK HERE-DSE-SPECIAL PAY &PERSONAL PAY CALRIFICATION LETTER

DIRECT RECRUITMENT OF SECONDARY GRADE TEACHERS -2012-2013 notification and weightage list relesed by TRB

Direct Recruitment of Secondary Grade Teachers 2012 - 2013 - Click here for Notification

TRB PAPER 1 weightage list released

தாள் 1 weightage list யில் எதாவது தவறு இருப்பின் 11.08.2014 முதல் 14.08.2014 வரை அவர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள மாவட்டத்திற்கு சென்று சரி செய்து கொள்ளலாம்
CLICK HERE FOR PAPER I NOTIFICATION

CLICK HERE FOR PAPER I -NEW WEIGHTAGE &CANDIDATE DETAILS

இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வு பட்டியலை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்

CLICK HERE FOR PAPER I NOTIFICATION

CLICK HERE FOR PAPER I -NEW WEIGHTAGE &CANDIDATE DETAILS 


அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்களை தேர்வு செய்வதற்காக கடந்த 2012 மற்றும் 2013ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு புதிய வெயிட்டேஜ் மதிப்பெண்கள் அடிப்படையிலான தேர்வு பட்டியல்

வன்முறையில் இருந்து குழந்தைகளைக் காப்போம்

பெங்களூரில் ஆறு வயதுக் குழந்தை மீதான பாலியல் வன்முறைச் சம்பவம் அனைவரது நெஞ்சங்களையும் துடிதுடிக்க வைத்துள்ளது. ஆனால் அந்த வன்முறை நடைபெற்றுக் கிட்டதட்ட, ஒரு வாரம் கழித்தே அந்தச் சிறுமியின் பெற்றோருக்குத் தெரிய வந்திருக்கிறது என்பது வேதனையின் உச்சம். அந்தக் குழந்தை படிக்கும் பள்ளியின் ஆசிரியரும்கூட இதைப் பற்றிப் பெற்றோருக்குத் தெரியப்படுத்தாதது மிக அதிர்ச்சியானது

இந்தியக் குழந்தைகளை காப்பாற்றுங்கள்!: துரித உணவுகளை தடை செய்ய பரிந்துரைக்கிறது சி.எஸ்.இ.



இந்தியாவில் முன் எப்போதும் இல்லாத வகையில் குழந்தை கள் மரணமும் நீரிழிவு நோய், புற்று நோய், இதய நோய்களும் அதிகரித்திருப்பது தெரியுமா?

சமீபத்தில் அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் (Centre for Science and Environment) வெளியிட்டுள்ள 48 பக்க ஆய்வு முடிவுகள் அத்தனையும் மிக, மிக அதிர்ச்சி ரகம். எல்லாவற்றுக்கு காரணமாக விஞ்ஞானிகள் சுட்டிக்காட்டுவது துரித வகை உணவுகளைத்தான். தொடர்ந்து நாடு முழுவதும் குறைந்தபட்சம் கல்வி நிறுவனங்களிலாவது துரித வகை உணவுகளை (Junk foods)தடை செய்து குழந்தைகளை காப்பாற்ற வேண்டும் என்று அந்த மையம் மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.

அறிவியல் பாடங்களால் மாணவர்களுக்கு சலிப்பு : விஞ்ஞானி ராவ் வருத்தம்

பள்ளி மற்றும் கல்லூரிகளில் பயிற்றுவிக்கப்படும் அறிவியல் பாடங்களால், மாணவர்களுக்கு சலிப்பு தான் ஏற்படுகிறதே தவிர, அறிவியல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுவதில்லை என்று பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி சி.என்.ஆர். ராவ் கூறியுள்ளார்.
டில்லியில், அசோசெம் சார்பில், நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக, பாரத ரத்னா விருது பெற்ற விஞ்ஞானி சிந்தாமணி நாகேச ராமச்சந்திர ராவ் பங்கேற்றார். இந்நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது, பள்ளி மற்றும் கல்லூரிகளில் கற்பிக்கப்படும் அறிவியல் பாடங்கள், தற்போது எந்த இடத்திலும் பயன்படுத்துவதில்லை. பள்ளி

2016-2017 ஆம் கல்வி ஆண்டில் +1,+2 வகுப்புகளுக்கு புதிய பாடதிட்டங்கள்


பள்ளிகளில் சுதந்திர தின விழா - பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை


அனை த்து வகை பள்ளிகளில் 15ம் தேதி சுதந்திர தின விழாவை கொண்டாடுவது குறித்து பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இந்திய சுதந்திர போராட்ட வரலாறு, சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள் ஆகியவற்றை மாணவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும். பள்ளி வளாகங்களை கலர் காகிதங்கள், பூக்கள் ஆகியவற்றால் அலங்கரிக்க வேண்டும். சுதந்திர தினமான 15ம் தேதி காலை, அனை த்து வகை பள்ளிகளிலும் தேசியக் கொடியை ஏற்றி, கலை நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும்.
சுதந்திர போராட்ட வரலாற்றை விளக்கும் வகை யில் கண்காட்சி, நாடகம் நடத்த வேண்டும். பேச்சுப் போட்டி, கட்டுரைப்போட்டி, விளையாட்டுப் போட்டிகள் நடத்தி வெற்றி பெறும் மாணவர்களுக்கு சுதந்திர தின விழாவில் பரிசுகள் வழங்க வேண்டும்.

சிபிஎஸ்இ.க்கு மாறும் மெட்ரிக் பள்ளிகள் - ஒரே ஆண்டில் 80 பள்ளிகள் மாற்றம்


தமிழகத்தில் கடந்த ஆண்டு 80 தனியார் பள்ளிகள் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் இணைந்துள்ளன. சிபிஎஸ்இ பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

ஒரே வகையான கல்வி என்ற அடிப்படையில் கடந்த 2010ம் ஆண்டு ஒன்று மற்றும் ஆறாம் வகுப்புகளுக்கு சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அமல்படுத்தப்பட்டது. பின்னர் 2011 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் சமச்சீர் கல்வி அமல்படுத்தப்பட்டது. இதனால் மெட்ரிக் கல்விமுறை முழுமையாக ஒழிக்கப்பட்டது. அரசு பள்ளிகளில் இருந்து தனியார் பள்ளிகள் தங்களை வேறுபடுத்தி காட்ட மெட்ரிக் என்ற வார்த்தையை பள்ளிகளின் பெயரில் பயன்படுத்தி வந்தன.

பாடநூல் கழகத்தின் பெயர் மாற்றம்: மசோதா தாக்கல்



பாடப் புத்தகங்கள் மட்டுமல்லாது, பள்ளிக் கல்வித் துறைக்கான அனைத்துப் பொருள்களையும் மொத்தமாக கொள்முதல் செய்யும் அமைப்பாகச் செயல்படும் வகையில், தமிழ்நாடு பாட நூல் கழகத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி, "தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பாட நூல் கழகமானது, தமிழகத்தில் கடந்த 44 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இந்தக் கழகம், அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளுக்குத் தேவையான பாட நூல்களை இலவசமாக அச்சிட்டு வழங்குவதுடன், தனியார் பள்ளிகளுக்கு குறைந்த விலையிலும் புத்தகங்களை அளித்து வருகிறது.

கட்-ஆப் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமான ஆசிரியர் தேர்வு நியாயமானதா?

இப்போது வருமோ, எப்போது வருமோ என்று பல்லாயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது அரசு பணிக்கான ஆசிரியர் தேர்வுப் பட்டியல்.

இந்த தேர்வுப் பட்டியல், முற்றிலும் மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப்பட்டு வெளியிடப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், முற்றிலும் மதிப்பெண் அடிப்படையிலேயே வெளியிடப்படும் இந்தப் பட்டியலுக்கு எதிர்ப்பு உள்ளதையும் மறுக்க முடியாது. வேறு எந்த தகுதியையும் கருத்தில் கொள்ளாமல், வேறுமனே மதிப்பெண்களை மட்டுமே கருத்தில் கொள்வது நியாயமானதா என்ற குமுறல்கள், பட்டதாரிகள் மத்தியில் பரவலாக உள்ளது.

இன்ஜினியரிங் படிப்பு ஆர்வம் குறைந்தது: பொறியியல் கல்லூரிகளில் 1.2 லட்சம் இடங்கள் காலி.

இன்ஜினியரிங் படிப்புக்கான முதல்கட்ட கவுன்சலிங் முடிந்த நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சுமார் 1 லட்சத்து 2 ஆயிரம் சீட்டுகள் காலியாக உள்ளன. இந்நிலையில் துணை கவுன்சலிங் இன்று தொடங்குகிறது.

தமிழகம் முழுவதும் உள்ள 538 பொறியியல் கல்லூரிகளில், இந்த ஆண்டு அரசு ஒதுக்கீட்டின் கீழ் 2 லட்சத்து 11 ஆயிரத்து 589 இடங்கள் இருந்தன. இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கு 1 லட்சத்து 73,687 பேர் விண்ணப்பித்தனர். அண்ணா பல்கலைக்கழகத்தில் ஜூலை 7ம் தேதி பொதுப் பிரிவு மாணவர்களுக்கு கவுன்சலிங் துவங்கியது. நாள்தோறும் சராசரியாக 4 ஆயிரத்து 400 மாணவ,

தொடக்கக் கல்வி - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலர் அவர்களின் தலைமையில் ஆய்வு கூட்டத்தில் சிறந்த பள்ளிகளுக்கான கேடயம் வழங்கப்படும்-


தொடக்கக் கல்வி - மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் செயலர் அவர்களின் தலைமையில் ஆய்வு கூட்டம்-அட்டவணை

தினக்கூலிக்கு போலி ஆசிரியர் நியமித்த எச்.எம் சஸ்பெண்ட்


அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த செப்., 30 வரை அவகாசம்

அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகப்படுத்த, வரும் செப்., 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 16 விதமான இலவச திட்டங்கள் செயல் படுத்தினாலும் கூட, அரசு பள்ளிகள் மீதான நம்பிக்கை பெற்றோருக்கு இல்லாத காரணத்தால், மாணவர் சேர்க்கை அதிகரிக்கவில்லை.
எனவே, அரசு பள்ளிகளில் பின்பற்றப்படும் நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டு வர வேண்டுமென ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

பள்ளிக்கல்வி - த.அ.உ.ச 2005 - தனியார் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் முன்னுரிமை (Seniority) கடைபிடித்தல் சார்பான உத்தரவு

பள்ளிகளில் தமிழ் பாடத்தை முறையாக கற்பிக்க வேண்டும்

பள்ளிகளில் அனைத்து வகுப்புகளிலும் தமிழப் பாடத்தை கற்பிக்கச் செய்வதுடன், முறையாக கற்பிக்கப்படுகின்றதா என கண்காணிக்க வேண்டும் என முதன்மைக் கல்வி அலுவலர்களை மேல்நிலைக் கல்வி இணை இயக்குநர் பாலமுருகன் கேட்டுக் கொண்டார்.
மதுரை மண்டலத்திலுள்ள மதுரை, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்துக்கு தலைமை வகித்து மேல்நிலைக் கல்வி இணை இயக்குநர் பாலமுருகன் பேசியது:

இறுதி தேர்வுப்பட்டியல் இந்த வாரத்திற்குள் எப்படியும் வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் செயலர் வசுந்தராதேவி தெரிவித்தார்.

ஏற்கனவே அறிவிக்கப்பட்ட 10,726 பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களுடன் புதிதாக 508 காலி இடங்கள் சேர்க்கப்படுகிறது. காலி இடங்கள் அதிகரித்து உள்ள நிலையில் கல்வி அதிகாரிகள் ஒப்புதலுடன் இந்த பட்டியலில் மேலும் 508 பேரை தேர்வு செய்கிறோம். இந்த பட்டியல் ஓரிரு நாட்களில் வெளியாகும்.

மதுரையில் எட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது

இணை இயக்குனர் (மேல்நிலை பள்ளி) பாலமுருகன்தலைமை வகித்தார். மதுரை முதன்மை கல்வி அலுவலர்ஆஞ்சலோ இருதயசாமி முன்னிலை வகித்தார். சி.இ.ஓ.,க்கள் வாசு (தேனி),ஜெயகண்ணு (ராமநாதபுரம்), செந்திவேல்முருகன் (சிவகங்கை), ஜெயக்குமார் (விருதுநகர்),கஸ்தூரிபாய் (நெல்லை), முனுசாமி (தூத்துக்குடி), ராதா கிருஷ்ணன் (கன்னியாகுமரி) பங்கேற்றனர். வரும் கல்வியாண்டு முதல் தமிழ் பாடம் கட்டாயம் என்பதால் சிறுபான்மையினர் பிரிவு உள்ளிட்டஅனைத்து வகை பள்ளிகளிலும் தமிழ் பாடம் கற்பிக்கப்படுகிறதா, மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள்ஏற்படுத்தப்பட்டுள்ளதா என சி.இ.ஓ.,க்கள் கண்காணிக்க வேண்டும்.

பாடவாரியாக paper 2 கூடுதல் பணியிடங்கள் விவரம் சேர்த்து TRB அறிவிப்பு.



ஆசிரியர் தகுதித்தேர்வு தாள் 2 கூடுதலாக 508 பணியிடங்கள் சேர்த்து TRB அறிவிப்பு.

TRB ANNOUNCED THE FOLLOWING ADDITIONAL POSTS AS PER IT'S NEW NOTIFICATION

School Edn DEPT ADDITIONAL POSTS

  • ENGLISH. 43
  • Maths. 82
  • Physics. 55
  • Chemistry. 55
  • Botany. 24
  • Zoo. 24
  • History. 67
  • Geography 17

தலைமை ஆசிரியர்களின்றி தவிக்கும் அரசுப்பள்ளிகள்...

தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளிகளில் மேல்நிலைப்பள்ளிகளை நிர்வகிக்கும்முக்கியப் பதவியான தலைமை ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதால் பள்ளி நிர்வாகம் தடுமாறு நிலை ஏற்பட்டுள்ளது.
இப்பிரச்சினையில் தமிழக அரசு தீவிர கவனம் செலுத்த வேண்டுமென ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.தமிழகத்தில் பெருவாரியான கிராமப்புற மாணவர்கள் கல்வி பெறும் வாய்ப்பை உருவாக்கும் வகையில் மேல்நிலை மற்றும் உயர்நிலைப்பள்ளிகள் தொடங்கப்பட்டன. இதில்அரசு உயர்நிலைப்பள்ளியின் எண்ணிக்கை தற்போது 3 ஆயிரமாகவும், மேல்நிலைப்பள்ளிகளின் எண்ணிக்கை சுமார் 2500 ஆகவும் உள்ளன. இவற்றில் ஒரு பள்ளிக்கு சுமார் 10 முதல் 80 ஆசிரியர்கள் என்ற விகிதத்தில் ஏறத்தாழ 2.50 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.இந்நிலையில், மேல்நிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளிகளை மேற்பார்வையிட்டு நிர்வகிக்க தலைமை

சேலம் பள்ளிகளில் கட்டண கொள்ளை முதன்மை கல்வி அலுவலர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு


தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்பாக வரும் 13ம் தேதி சேலம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் நேரில் ஆஜராக வேண்டும் என சேலம் வட்ட சட்டப்பணிகள் குழு உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம் ஆத்தூரில் வட்ட சட்டப்பணிகள் குழு இயங்கி வருகிறது. இந்த சட்டப்பணிகள் குழுவில் ஆத்தூர் வழக்கறிஞர்கள் இருவர் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். இந்த மனுவில் கூறியிருப்பதாவது: ஆத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் ஏராளமான தனியார் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இப்பள்ளிகளில் தமிழக அரசால் அமைக்கப்பட்ட கமிட்டியின் பரிந்துரையின் அடிப்படையில் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டண விபரங்களை பொதுமக்களின் பார்வைக்கு படும்படி பலகையில் ஒட்டப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், பெற்றோர்கள் அறியும் வகையில் ஒட்டப்படவில்லை.

பிளஸ் 2 தனித்தேர்வு அறிவிப்பு : 7ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்


செப்டம்பர் - அக்டோபரில் நடக்கும் பிளஸ் 2 தனித்தேர்வு குறித்த அறிவிப்பை, தேர்வுத் துறை, நேற்று வெளியிட்டது. 'மாணவர்கள், வரும் 7ம் தேதியில் இருந்து, 14ம் தேதி வரை, சிறப்பு மையங்களுக்கு சென்று, பெயரை பதிவு செய்யலாம்' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

தேர்வுத் துறை அறிவிப்பு:

சிசாட்-2 தேர்வுத் தகுதிக்கு ஆங்கில மதிப்பெண்கள் சேர்க்கப்பட மாட்டாது: மத்திய அரசு


யு.பி.எஸ்.சி தேர்வு விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வரும் விதமாக சிசாட் இரண்டாம் நிலைத் தேர்வில் ஆங்கில மதிப்பெண்கள் தகுதிக்கு எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது குறித்து மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறும்போது, “சிவில் சர்விசஸ் முதற்கட்ட தேர்வு- பேப்பர் 2-ல் 'ஆங்கில மொழி புரிதல் திறன்கள்' என்ற கேள்விப் பகுதியில் எடுக்கப்படும் மதிப்பெண்கள் தகுதிக்கு எடுத்துக்கொள்ளப்படக் கூடாது என்று மத்திய அரசு கருதுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

பாடம் நடத்த விடுங்கள்-ஆசிரியர்களின் மன சாட்சி


தொடக்கக் கல்வி - திட மற்றும் திரவ கழிவு பொருட்களின் மேலாண்மை சார்பாக பள்ளி அளவிலான போட்டிகள் நடத்த இயக்குநர் உத்தரவு


ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2க்கான கூடுதல் 508 பணியிடங்களுக்கான அறிவிக்கை வெளியீடு

Direct Recruitment of B.T. Assistant 2012 - 2013 - Click here for Addendum Notification

2 வருடமாக போராடிய ஆசிரியருக்கு திடீர் மாறுதல் உத்தரவு.

நெல்லை கேடிசி நகரைச் சேர்ந்தவர் வையணன், இவர் ராமநாதபுரம் டிஎம் கோட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் உயிரியல் ஆசிரியராக பணியாற்றி வந்தார். கடந்த 2012ம் ஆண்டு முதல் இவர் தனக்கு நெல்லை அல்லது தூத்துக்குடி மாவட்டங்களில் ஏற்படும் காலி இடங்களில் கலந்தாய்வின் போது இடமாறுதல் கோரி விண்ணப்பித்து வந்தார்.
ஆனால் காலிஇடங்கள் மறைக்கப்பட்டதால் தனக்கு மாறுதல் கிடைக்கவில்லை என கூறி ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
அடுத்து ஏற்படும் காலிஇடத்தில் ஆசிரியர் வையணணுக்கு இடமாறுதல் வழங்க ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால் கடந்த ஆண்டு ஜூலையில் நடந்த கலந்தாய்விலும் இவருக்கு தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்பட்ட காலி இடத்தில் இடமாறுதல் வழங்கவில்லை. இதை அடுத்து ஐகோர்ட்டில் மீண்டும் முறையிட்டார்.
கடந்த மாதம் ஜூன் 24ம் தேதி நடந்த கலந்தாய்விலும் உயர் நீதிமன்ற உத்தரவுப்படி இடமாறுதல் வழங்கவில்லை. அன்றைய கலந்தாய்வில் நெல்லை மாவட்டத்தில் 2 இடங்களும்

அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை


சிவகங்கையில் குறைவான மாணவர்கள் பயிலும் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது.

தொடக்கக்கல்வித் துறையின்கீழ் செயல்படும் சில அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இருந்தும், 10 அல்லது அதற்கு குறைவான மாணவ, மாணவிகளே பயிலும் நிலை உள்ளது. இதுபோன்ற பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, தொடக்கக் கல்வித்துறை சார்ந்த டி.இ.ஓ.,க்கள் மற்றும் அனைவருக்கும் கல்வி திட்ட அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித் துறை சமீபத்தில் உத்தரவிட்டுள்ளது.

;மாணவனை தாக்கிய பள்ளி தலைமை ஆசிரியர் கைது - தறகாலிக பணியிடை நீக்கம்

பெரம்பலூர் அருகே, 3ம் வகுப்பு மாணவனை தாக்கிய ஊராட்சி ஒனஅறிய தொடக்கப் பள்ளி ஆசிரியரை பெரம்பலூர் போலீஸôர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். மேலும், அவரை தறகாலிக பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் ஞாயிற்றுக்கிழமை இரவு உத்தரவிட்டார்.
பெரம்பலூர் அருகே உள்ள வெள்ளனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், பெரம்பலூர் மதனகோபாலபுரத்தை சேர்ந்த செல்வராஜ்

அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆங்கில வழி கல்வி எப்போது?



அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், 14 லட்சத்திற்கு மேற்பட்ட குழந்தைகள், தங்களுக்கு ஆங்கில வழிக்கல்வி வகுப்பு துவங்கப்படுமா?என்ற ஏக்கத்தில் உள்ளனர். இவர்களைப் போலவே, பள்ளிகளின் நிர்வாகிகளும், அரசின் அனுமதியை எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர்.

நடப்பு கல்வியாண்டில்:

தமிழகத்தில், கடந்த, 2011ம் ஆண்டு முதல், ஒவ்வொரு யூனியன் எல்லையிலும், தலா, ஐந்து தொடக்கப் பள்ளிகளில், ஆங்கில வழி வகுப்பு துவங்கப்பட்டது. இத்திட்டம் படிப்படியாக, கடந்த கல்வியாண்டு முதல், உயர்நிலைப் பள்ளிகளிலும் அமல்படுத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டில், சில அரசு பள்ளிகளில்,ஆறு, ஒன்பது, பிளஸ் 1 (உயிரியல்) வகுப்பு, ஆங்கில வழிக் கல்வியில் துவங்கப்பட்டுள்ளது.இதற்காக, அரசு பள்ளிகளுக்கு, அரசின் சார்பில் கட்டடம், ஆசிரியருக்கு சம்பளம்,

IGNOU Grade Card: Check Your Status

CLICK HERE-IGNOU -Grade Card Status

இக்னோ பல்கலைகழகம் இளங்கலை கல்வியியல் (B.Ed) பட்டப்படிப்புக்கான (கிரேடு) தரநிலை வெளியிட்டுள்ளது

இடைநிலை ஆசிரியர் கல்வித்தகுதி குறித்து திருநெல்வேலி மா.ஆ.க.ப.நிறுவனம் பதில்

மாணவர்களிடம் தவறாக நடந்துகொண்டால், உடனடியாக, 'டிஸ்மிஸ்' கல்வித்துறை எச்சரிக்கை

மாணவர்களுக்கு முன்னுதாரணமாக, வழிகாட்டியாக ஆசிரியர்கள் நடந்து கொள்ள வேண்டும். இதை மீறி, மாணவர்களிடம் தவறாக நடந்துகொண்டால், உடனடியாக, 'டிஸ்மிஸ்' செய்யப்படுவர்' என, கல்வித்துறை, எச்சரிக்கை விடுத்துள்ளது.
கடந்த சில மாதங்களாக, கர்நாடகா, மகாராஷ்டிரா, டில்லி, உ.பி., உள்ளிட்ட, சில மாநிலங்களில், சிறுவர்களுக்கு எதிராக, குறிப்பாக, மாணவியருக்கு எதிரான குற்றங்கள், அதிகளவில் நடந்து வருகின்றன.சமீபத்தில், பெங்களூரில் உள்ள ஒரு தனியார் பள்ளி சிறுமி, பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக, இரண்டு உடற்கல்வி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில், தமிழகத்தில், மாணவர்களுக்கு எதிரான குற்றங்கள் நடக்காமல் இருக்க, மாணவர்கள்,

இந்தியா முழுவதும் 52 சதவீத மாணவர்கள் தங்களது பள்ளிப் படிப்பை இடையிலேயே நிறுத்தம்

இந்தியா முழுவதும் 52 சதவீத மாணவர்கள் தங்களது பள்ளிப் படிப்பை இடையிலேயே நிறுத்திவிடுவதாக தேசிய கல்வி திட்டமிடல் மற்றும் நிர்வாக பல்கலைக்கழகத்தின் பேராசிரியை விமலா ராமச்சந்திரன் கூறினார்.

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குருவில்லா ஜேக்கப் நினைவுச் சொற்பொழிவில் பள்ளிகளில் உள்ள கற்றல் பிரச்னைகள் தொடர்பாக அவர் நிகழ்த்திய உரை:

நமது நாட்டில் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலான குழந்தைகளே எழுதுதல், படித்தல், பேசுதல், புரிந்துகொள்ளுதல் உள்ளிட்ட அனைத்துவகைத் திறன்களைப் பெற்றுள்ளனர். 90 சதவீதத்துக்கும் அதிகமான குழந்தைகளுக்கு இத்திறன்கள் இல்லை. இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஆசிரியர் மாணவர் விகிதம் 1:30 என இருக்க வேண்டும்.

web stats

web stats