rp

Blogging Tips 2017

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 'ரிசல்ட்' மே 25ல் வெளியாக வாய்ப்பு: 10ம் வகுப்புக்கு 20ம் தேதி?

சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பிளஸ் 2 தேர்வு முடிவு, மே, 25ம் தேதிக்குள் வெளிவரும் என, தகவல் வெளியாகி உள்ளது. மத்திய அரசின், சி.பி.எஸ்.இ., பாடத்திட்டத்துக்கான, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச், 2ம் தேதி துவங்கியது.
10ம் வகுப்புக்கு, மார்ச், 26ம் தேதி வரையிலும், பிளஸ் 2வுக்கு, ஏப்ரல், 20

பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வை ஜூலை முதல் வாரத்தில்தொடங்க முடிவு

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வை ஜூலை முதல் வாரத்தில் தொடங்க அண்ணா பல்கலைக் கழகம் முடிவு செய்துள்ளது. அதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. தமிழகத்தில் 570-க்கும் மேற் பட்ட பொறியியல் கல்லூரிகள் உள்ளன.
இதில் அண்ணா பல் கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளும் அடங்கும். பிஇ, பிடெக் படிப்பில் சுமார் 2 லட் சம்

தமிழகத்தில் அங்கீகாரமற்ற 4,000 நர்சரி பள்ளிகள்: கமிட்டி அமைத்து விசாரிக்க கல்வித் துறை தீவிரம்

தமிழகத்திலுள்ள, 4,000க்கும் மேற்பட்ட அங்கீகாரம் இல்லாத மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகளை, ஒழுங்குமுறைப்படுத்துவது தொடர்பாக, குழு அமைக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித் துறை கட்டுப்பாட்டில், 9,600 பள்ளிகள் உள்ளன. இதில், 5,900 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள்; 41 ஆங்கிலோ

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் பெறுவது எப்படி?

பிளஸ் 2 தேர்வு முடிவு வரும், 7ம் தேதி வெளியாக உள்ள நிலையில், தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை எப்படி பெறுவது என்பது குறித்து, பள்ளிகளுக்கு கல்வித் துறை புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வை, 8.43 லட்சம் மாணவர்கள் எழுதி உள்ளனர். தேர்வு முடிவு, வரும், 7ம் தேதி தமிழக தேர்வுத் துறை

தொடக்கக் கல்வியில் மாணவர்களின் இடைநிற்றல் 4 சதவீதமாக அதிகரிப்பு

தொடக்கக் கல்வியில் மாணவர்களின் இடைநிற்றல் கடந்த 10 ஆண்டுகளில் 4.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. கடந்த 2005-06-ஆம் ஆண்டில் இருந்து 2013-14-ஆம் ஆண்டு வரை தொடக்கக் கல்வி தொடர்பாக மாவட்ட கல்வித் தகவல் முறையில் சேகரிக்கப்பட்ட புள்ளி விவரங்களை தேசிய கல்வித் திட்டமிடல்,

1½ லட்சம் பேர் விண்ணப்பம்: ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க கடும் போட்டி

அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளியில் காலியாக உள்ள 4500 ஆய்வக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டது.நேரடி நியமனம் மூலம் தேர்வு செய்யப்படும் இந்த வேலைக்கு குறைந்தபட்ச கல்வி தகுதி 10–ம் வகுப்பு தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். கூடுதல் கல்வித்தகுதி உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம்.

TN school lab Assistant Complete Details



2.TNDGE School Lab Assistant 2015 Eligibility


3.TNDGE Lab Assistant Exam 2015 Syllabus and Exam Pattern

4.Book List and Study Plan for TN school lab Assistant

5.Districtwise Vacancies for TN school lab Assistant

6.How To Apply for TN school lab Assistant

7.Selection Procedure for TN school lab Assistant


8.Interview Details for TN school lab Assistant
9.TN school lab Assistant Official Notification for all district 

10.Districtwise Nodal Centres for Registration


11.TN school lab Assistant Nodal Centres for Men Registration

12.TN school lab Assistant Nodal Centres for Women Registration

13.TN school lab Assistant Nodal Centres for Men and Women Registration


14.ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய ஆவணங்கள்

பள்ளியில் ஆசிரியர்கள் மொபைல் பயன்படுத்துவதை முற்றிலும் தடைசெய்ய ஆலோசனை

பள்ளியில், ஆசிரியர்கள் மொபைல்போன் பயன்படுத்துவதை முற்றிலும் தடை செய்வது குறித்து, கல்வித்துறையினர் ஆலோசித்து வருகின்றனர். மொபைல்போன் பயன்பாடு, பள்ளிகளில் பலவிதமான ஒழுக்கக்கேடுகளை ஏற்படுத்தி வருகிறது. வாட்ஸ்-அப் வழியாக கணித வினாத்தாள் அனுப்பிய விவகாரம், கல்வித்துறையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

6 முதல் 18 வயது வரை உள்ள மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க ஏற்பாடு

சென்னையில் 6 முதல் 18 வயது வரை உள்ள மாணவர் களுக்கு ஆதார் அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது. மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை மாவட்டத்தில், இதுவரை 29.72 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது; இது 69 சதவீதம். அதில், மாணவர்களில் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை பள்ளிகள் மூலம் பட்டியல் பெறப்பட்டு சரிபார்க்கப்படும்.

ஜூன் முதல் வாரத்தில், சிறப்பு முகாம் நடத்தி, பள்ளி மாணவர்களுக்கு, ஆதார் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களுக்கு பொது கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளைப்போல் மாநகராட்சி பள்ளிகளிலும் பொது மாறுதல் கலந்தாய்வு நடத்த வேண்டும்" என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.சென்னை, மதுரை, கோவை ஆகிய மாநகராட்சிகளில் 300க்கும் மேற்பட்ட பள்ளிகளில், 4 ஆயிரத்திற்கும் மேல் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

ஆசிரியர்களின் உடை கட்டுப்பாடு குறித்து பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டதா?: பள்ளிக்கல்வி இயக்குனர் விளக்கம்

ஆசிரியர்களின் உடை கட்டுப்பாடு குறித்து பள்ளிகளுக்கு எந்த வித சுற்றறிக்கையும் இதுவரை அனுப்பவில்லை என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.

             பள்ளிகளில் ஆசிரியர்-மாணவர் உறவில் ஏற்படும் முரண்பாடுகளை தவிர்க்க இந்த கல்வியாண்டு முதல் ஆசிரியைகள் தங்களின் சேலைக்கு மேல் ‘கோட்’ அணியவேண்டும் என்றும், இந்த உத்தரவு ஆசிரியர்களின் கருத்துகளின் பேரில் அமல்படுத்தப்பட இருப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியானது. மேலும், இதற்கான முறையான சுற்றறிக்கை பள்ளிக்கல்வி இயக்ககம் மூலம் அனைத்து பள்ளிகளுக்கும் விரைவில் அனுப்பப்படும் என்றும் கூறப்பட்டது.

பேராசிரியர், விரிவுரையாளர் பணிக்கு வயது வரம்பு அதிகரிப்பு: ஆசிரியர் தேர்வு வாரியம்

அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்களும், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்களும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித்தேர்வு மூலமாக நேரடியாக நியமிக்கப்படுகிறார்கள். இதற்கான தேர்வு எழுதுவதற்கு கடந்த 2013-ம் ஆண்டு வரை வயது வரம்பு 57 ஆக இருந்து வந்தது.இந்நிலையில்,
கடந்த 2014-ம் ஆண்டு ஜூலை மாதம் 139 பொறியியல் கல்லூரிகளுக்கு உதவி பேராசிரியர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது.அதில், இடஒதுக்கீட்டுப் பிரிவினர் உட்பட அனைத்து வகுப்பினருக்கும் வயது வரம்பு 35 ஆக நிர்ணயிக்கப்பட்டது.தனியார்

நம் கல்வி... நம் உரிமை!- அஜிதனும் அரசுப் பள்ளியும் -ஜெயமோகன்

 அஜிதனுக்கு எல்கேஜி, யுகேஜி முடிந்ததும் பத்மநாபபுரம் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு சேர்த்தோம். பள்ளியில் சொன்னார்கள், “பையன் சராசரிக்கும் மிகக் கீழே, அவனுக்கு எழுதவே வரவில்லை” என. சோதித்துப் பார்த்தால் அது உண்மை. அஜிதனுக்கு சிறு வயதிலேயே இடது கைப்பழக்கம். அதைப் பொது வாகக் கவனித்திருந்தோம் என்றாலும், பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. மழலையர் பள்ளியில் அவனை முரட்டுத்தனமாக வலது கைக்குப் பழக்கியிருக்கிறார்கள். அவன் அதற்குச் சரிவராதபோது அவனைத் தொடர்ந்து அடித்திருக்கிறார்கள். சின்ன வயதில் மழலையர் பள்ளிக்குப் போக மாட்டேன் என்று அவன் தொடர்ந்து அடம்பிடிப்பான். அது சிறுவயதில் என் வழக்கமும்கூட.நான் ஐந்தாம் வகுப்பு வரை அடம்பிடித்தவன். “நீ இப்படி ராப்பகலா அவன்கிட்டே கொஞ்சிக் குலவினா அவன் எப்படி ஸ்கூலுக்குப் போவான்..?” என்று என் மனைவி கேட்பாள். அதற்காகப் பிள்ளையைக் கொஞ்சாமல் விட முடியுமா? ஆக, அஜிதன் மனதில் பள்ளிக் கல்வி பற்றி மிக ஆழமான ஒரு கசப்பை, எதிர்ப்புணர்வை அந்த மழலையர் பள்ளி உருவாக்கியிருந்தது

விடைத்தாள் திருத்தும் பணியும் இழு... இழு... மன அழுத்தத்தில் ஆசிரியர்கள்

மதுரை : மதுரை மாவட்டத்தில் ஆசிரியர் பற்றாக்குறையால் பத்தாம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில விடைத்தாள் திருத்தும் பணியிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆசிரியர்கள் மன அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.

'மொபைல் ஆப்ஸ்'களில் 'போலி'கள் ஏராளம்! 'சைபர் கிரைம்' போலீசார் எச்சரிக்கை

போலியான 'மொபைல் ஆப்ஸ்' காரணமாக, 'ஆன்லைன்' மூலம் பரிவர்த்தனை செய்பவர்கள், பணம் இழப்பது அதிகரித்துள்ளது. 'எச்சரிக்கையுடன் இல்லாவிட்டால் பணம் பறிபோய்விடும்' என்று 'சைபர் கிரைம்' போலீசார் எச்சரிக்கின்றனர்.
சமீபகாலமாக 'ஸ்மார்ட்' போன்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அவற்றின் மூலம் மேற்கொள்ளப்படும் வர்த்தக நடவடிக்கைகளும் அதிகரித்து வருகின்றன. பொழுதுபோக்கவும், வங்கி கணக்கு நிர்வகிக்கவும், பண பரிவர்த்தனை செய்யவும், இந்த ஸ்மார்ட் போன்கள் பயன்படுகின்றன. 'ஆன்லைன்' வர்த்தக நிறுவனங்களும், 'மொபைல் ஆப்ஸ்'

மாணவர்களுக்கு 'ஆதார்'

சென்னையில், 6 முதல் 18 வயது வரை உள்ள, மாணவர் களுக்கு ஆதார் அட்டை வழங்க ஏற்பாடு செய்யப்படுகிறது.
மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: சென்னை மாவட்டத்தில், இதுவரை 29.72 லட்சம் பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது; இது 69 சதவீதம். அதில், மாணவர்களில் எத்தனை பேருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பதை பள்ளிகள் மூலம் பட்டியல் பெறப்பட்டு சரிபார்க்கப்படும். ஜூன் முதல் வாரத்தில், சிறப்பு முகாம் நடத்தி, பள்ளி மாணவர்களுக்கு, ஆதார் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

கணினி ஆசிரியர் தேர்ச்சிப் பட்டியல் விவகாரம்: பள்ளிக் கல்வித்துறைக்கு நோட்டீஸ்

 கணினி ஆசிரியர் தேர்ச்சிப் பட்டியலை ரத்து செய்யக் கோரிய வழக்கில் பள்ளிக் கல்வித் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வானவர்கள் பட்டியலை ரத்து செய்யக் கோரிய வழக்கில், பள்ளிக் கல்வித்துறை பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

அச்சுப்பிழை வினாக்களுக்கு விடை? முயற்சித்தோருக்கு மதிப்பெண்!

 பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு வினாத்தாள்களில், பிழையாக அச்சாகியிருந்த வினாக்களுக்கு, மாணவர்கள் விடை எழுத முயற்சி செய்திருந்தால், மதிப்பெண் வழங்க, அறிவுறுத்தப்பட்டுவிட்டதாக, அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்து உள்ளது.

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இந்த ஆண்டு பிளஸ் 2 தேர்வு, கடந்த மார்ச் 5ம் தேதி துவங்கி, 31ம் தேதி முடிந்தது. 10ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் 19ம் தேதி துவடங்கி, ஏப்ரல் 10ம் தேதி முடிந்தது. பிளஸ் 2 தேர்வில், சில பாடங்களுக்கான வினாத்தாள்களில், சில கேள்விகள் தவறாக அச்சிடப்பட்டிருந்ததாக, மாணவ, மாணவியர் புகார் தெரிவித்தனர்.

மூடப்படும் நிலையிலிருந்து மீண்ட கிராம பள்ளி: ஆசிரியைகளின் முயற்சியால் நடுநிலை பள்ளியாக தரம் உயர்வு

மதுரை அருகே மூடப்படும் நிலையிலிருந்து மீண்ட அரசு தொடக்கப் பள்ளி, ஆசிரியைகளின் தொடர் முயற்சியால், தற்போது நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லாததாலும், ஆசிரியர்களின் அலட்சியப் போக்காலும், கிராமப் புறங்களில் மாணவர் சேர்க்கை குறைந்து பல பள்ளிகள் மூடப்பட்டு வருவதாக புகார்கள் எழுந்துள்ளன. இந்நிலையில்,

மேல்நிலைப் பள்ளிகளில் இரு பருவமுறை தேர்வுகள்; ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்

மேல்நிலைப் பள்ளிகளில் இரு பருவமுறை தேர்வுகள் அமல்படுத்த வேண்டும்'' என தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் சங்க மாநிலத் தலைவர் மணிவாசகம் வலியுறுத்தினார்.
மதுரையில் மாநில பொதுக்குழு இதில் மணிவாசகம் பேசியதாவது:
கல்வித் துறையில் தற்போது ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவ கல்வி முறை நடைமுறையில் உள்ளது. பத்தாம் வகுப்பிலும் இம்முறை பின்பற்றப்பட உள்ளது. ஆனால், பிளஸ் 1, பிளஸ் 2வில் அனைத்து பாடங்களையும் படித்து மாணவர்கள்

பாடநூல் விற்பனை மையம் மூடல்: புத்தக தட்டுப்பாடு எதிரொலி

 பாட புத்தக தட்டுப்பாடு காரணமாக, சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் செயல்பட்ட புத்தக விற்பனை மையம் திடீரென மூடப்பட்டுள்ளது. இதனால், பல கி.மீ., தூரத்திலிருந்து வரும் பெற்றோர், ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர்.

தமிழக அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அரசு சார்பில், இலவச பாடப் புத்தகங்கள் வழங்கப்படுகின்றன. வரும் கல்வி ஆண்டுக்கு, நடப்பு கோடை விடுமுறையில் புத்தகங்கள் வழங்க, கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான புத்தகங்கள், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில்,

ஆதிதிராவிடர் பள்ளி ஆசிரியர் தேர்வு தாமதம்: டி.ஆர்.பி., அலுவலகம் முன் தேர்வர்கள் முற்றுகை

 ஆதிதிராவிடர் பள்ளிகளின் ஆசிரியர் தேர்வு முடிவை வெளியிடக் கோரி, ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., அலுவலகத்தை, பட்டயப் படிப்பு முடித்தவர்கள் முற்றுகையிட்டனர்.

கட்டுப்பாடு:

தமிழகத்தில், 1,096 ஆதிதிராவிடர்; 299 பழங்குடியினர் நலப்பள்ளிகள் உள்ளன. இவை, ஆதிதிராவிடர் நலத்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகின்றன. இப்பள்ளிகளில், 669 இடை நிலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்தது. 2013ல் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டது. தேர்வு முடிவுகள் இன்னும்

திருவண்ணாமலை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி-மாவட்டக்கிளை தேர்தல் முடிவுகள்-

திருவண்ணாமலை மாவட்டக்கிளைக்கான தேர்தல் நேற்று மாலை 5 மணிக்கு தொடங்கி இரவு9.30 மணிவரை நடைபெற்றது.
பொறுப்பாளர்கள் அனைவரும் ஒருமனதாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்
மாவட்டத்தலைவர்-திரு .என் ரவிச்சந்திரன் -ஜவ்வாதுமலை
மாவட்ட செயலாளர்-திரு.ஸ்ரீ.ஜானகி ராமச்சந்திரன்-தண்டராம்பட்டு
மாவட்ட பொருளாளர்-திரு ஜெ.விஜயராஜ்- திருவண்ணாமலை வட்டாரம்
ஆகியோர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர்
தேர்தலை முன்னாள் பொருளாளர் அ.அப்துல்காதர் அவர்கள் தேர்தல் ஆணையாளராகவும்,வேலூர் மாவட்ட பொருளர் திரு.அழகேசன் அவர்கள் துணை ஆணையாளராகவும் பொறுப்பேற்று சிறப்பாக பணியாற்றினர்

கல்வி காவிமயமாகவில்லை: ஸ்மிருதி இரானி

கல்வித் துறை நியமனங்கள் காவிமயமாக்கப்படவில்லை என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார்.

மனிதவள மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் மக்களவையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்திய வரலாற்று ஆராய்ச்சிக் குழுவில் ஹிந்துத்துவக் கொள்கைகளைக் கொண்டவர்களை மத்திய அரசு நியமித்துள்ளதாக காங்கிரஸைச் சேர்ந்த சுஷ்மிதா தேவ், திரிணமூல் காங்கிரஸைச் சேர்ந்த சுகதா போஸ் உள்ளிட்ட உறுப்பினர்கள் அப்போது குற்றம்சாட்டினர்.

கணினி ஆசிரியர் தேர்ச்சிப் பட்டியல் விவகாரம்: பள்ளிக் கல்வித்துறைக்கு நோட்டீஸ்

கணினி ஆசிரியர் தேர்ச்சிப் பட்டியலை ரத்து செய்யக் கோரிய வழக்கில் பள்ளிக் கல்வித் துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.கணினி ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வானவர்கள் பட்டியலை ரத்து செய்யக் கோரிய வழக்கில், பள்ளிக் கல்வித்துறை பதிலளிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்ப சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த கலைச்செல்வி தாக்கல் செய்த மனுவில், தமிழகம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் 652 கணினி ஆசிரியர் பணியிடங்ளுக்கான சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொண்டதாகவும், ஆனால் தேர்வானவர்கள் பட்டியலில் தமது பெயர் இடம்பெறவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.652 பணியிடங்களில் 130 பணியிடங்கள் இடஒதுக்கீட்டின் கீழ் ஒதுக்கப்படும் என அறிவித்துவிட்டு, 154 பணியிடங்களை இடஒதுக்கீட்டின் அடிப்படையில் நிரப்பியுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு, நீதிபதி வைத்தியநாதன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த விவகாரம் தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை செயலாளர், ஆசிரியர்தேர்வு வாரிய உறுப்பினர் செயலாளர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். மேலும், கணினி ஆசிரியருக்கான பணி நியமனங்கள் இந்த வழக்கின்தீர்ப்பை பொறுத்தே அமையும்
 எனவும் அறிவித்தார்.

ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிப்பது எப்படி? :தேர்வுகள் துறை இணையதளத்தில் தகவல்

 அரசுப் பள்ளிகளில் அறிவியல் ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்கும் முறை, அரசுத் தேர்வுகள் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், அறிவியல் ஆய்வக உதவியாளர் பணிக்கு, மத்திய அரசின், 'ராஷ்டிரிய மத்யமிக் சிக் ஷ அபியான்' திட்டத்தில், 4,362 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

இதற்கான எழுத்துத் தேர்வு மே 31ம் தேதி நடக்கிறது. 10ம் வகுப்பு, அதற்கு இணையான கல்வித் தகுதியுள்ளோர் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு முடிக்காமல், அதை விட அதிகபட்ச கல்வி பெற்றவர்கள், விண்ணப்பிக்க தகுதியில்லை என, அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி நடைமுறைகள் எப்படி?



தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவ மாணவியர் வங்கி நடைமுறைகள் பற்றி முழுவதுமாக அறிந்து கொள்ளும் வாய்ப்பினை பெற்றனர்
.பட விளக்கம : தேவகோட்டை  சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலை பள்ளி மாணவர்கள் வங்கியின் நடைமுறைகளை பார்வையிட்டபோது எடுத்த படம்

பேர்ணாம்பட்டு ஒன்றியத்தில் நடைப்பெற்ற பாராட்டு விழாவில் வேலூர் மாவட்ட்த்தொடக்கக்கல்வி அலுவலர் திரு.வெ.ரங்கநாதன் கலந்து கொண்டு சிறப்பித்தார்

தகவல்-பா.சண்முகம்.,பட்டதாரி ஆசிரியர்.

அழகப்பா பல்கலைக்கழகம் 2015-2016 B.Ed தொலைநிலைக் கல்வி இரண்டு வருடப்படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பு -

உதவி பேராசிரியர் தேர்வில் முறைகேடு:டி.ஆர்.பி., மீது 'நெட்' சங்கம் புகார்

 சென்னை:'அரசு கல்லுாரி உதவிப் பேராசிரியர் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதால், தேர்வு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., ரத்து செய்ய வேண்டும்' என, நெட், ஸ்லெட் அசோசியேஷன் வலியுறுத்தி உள்ளது.

கல்வித்தகுதி:தேசிய கல்விக் கொள்கைப்படி, பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) பரிந்துரைப்படி, கல்லுாரி உதவிப் பேராசிரியர்கள், நுாலகர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் பதவிகளுக்கு, அடிப்படை கல்வித் தகுதியாக, 'நெட்' தேர்வு நிர்ணயிக்கப் பட்டது. அதேநேரம், 2009ல் புதிய விதிமுறையைப் பின்பற்றி, பிஎச்.டி., ஆராய்ச்சிப் படிப்பு முடித்தோர், நெட் தேர்வு எழுத விதிவிலக்கு தரப்பட்டது.

மாணவர்களுக்கு புதிய மருத்துவ திட்டம் அமல்: 770 குழுக்கள் அமைத்து பரிசோதனை துவக்கம்

 பள்ளி மாணவர்கள் மற்றும் அங்கன்வாடி குழந்தைகளின், ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் நோய் பாதிப்புகளை, துவக்க நிலையிலேயே கண்டறிந்து தடுப்பதற்கான, மத்திய அரசின் புதிய மருத்துவத் திட்டம், தமிழகத்தில் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.
முதற்கட்டமாக, 770 மருத்துவக் குழுக்கள் அங்கன்வாடி குழந்தைகளை பரிசோதித்து வருகின்றன.அதனால், அங்கன்வாடி குழந்தைகள் முதல், மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் வரை, அனைவரும் பயன்பெறும் வகையில்,

என்.ஓ.சி., பெறாமல் சி.பி.எஸ்.இ.,க்கு மாற்றம்: வசூலை அதிகரிக்க தடம் மாறும் தனியார் பள்ளிகள்

 கூடுதல் கட்டணம் வசூலிப்பதற்காக, பல மெட்ரிக் பள்ளிகள், அரசின் தடையில்லா சான்று (என்.ஓ.சி.,) பெறாமல், சி.பி.எஸ்.இ.,க்கு மாறி வருகின்றன.

தமிழகத்தில், 9,600 அரசு மற்றும் தனியார் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன; 5,000 தொடக்கப் பள்ளிகளும் செயல்படுகின்றன. இவற்றில், 4,000 தனியார் மெட்ரிக் பள்ளி கள், 40 ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளும் செயல்படுகின்றன.

அனுமதி இல்லாமல்...:

தனியார் தொடக்கப் பள்ளிகள் பட்டியல், அரசிடம் தெளிவாக இல்லை. ஏனெனில், பெரும்பாலான பள்ளிகள் அனுமதியின்றி நடத்தப்படுகின்றன.இந்நிலையில், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளைத் தவிர,

ஆய்வக உதவியாளர் பணி - மதிப்பெண் வழங்கும் முறை

பணம் பறிக்க தூண்டில் போடும் இமெயில்கள் !!!ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்

 இமெயில்கள் வழியாகப் பணம் பறிக்க மொத்தமாக அனுப்பப்படும் மெயில்கள் குறித்துப் பல முறை தகவல்களைத் தந்துள்ளோம். சென்ற வாரம் தகவல் தொடர்பு குற்றங்களைக் கண்காணிக்கும் சென்னை சைபர் கிரைம் செல் அலுவலகத்திலிருந்து வந்த ஒரு கடிதம், இன்னும் இது போல பலர் ஏமாற்றமடைவதை உறுதிப் படுத்தியுள்ளது. ஏமாறும் பலரில், விரல் விட்டு எண்ணக் கூடிய சிலரே காவல் நிலையத்தில் புகார் அளிக்கின்றனர். தாங்கள் ஏமாந்தது தெரிந்தால் தங்களுக்கு அவமானம் என்று கருதி பலர் வெளியே சொல்லாமலே இருந்துவிடுகின்றனர். பணம் பறிக்கத் தூண்டில் போடும் இமெயில்கள் இங்கு வகைப்படுத்தி பட்டியலிடப்பட்டுள்ளன. இன்டர்நெட் மற்றும் இமெயில்களைப் பயன்படுத்துவோர் கவனமாக இவற்றைத் தவிர்க்குமாறு காவல்துறையும் கேட்டுக் கொண்டுள்ளது. இன்னும் புதுவிதமான வழிகளில் யாருக்கேனும் மெயில்கள் வந்தாலோ அல்லது தாங்கள் ஏமாற்றப்பட்டாலோ அவர்கள் கம்ப்யூட்டர் மலர் முகவரிக்குத் தெரிவிக்கலாம். அவர்களின் அடையாளம் தெரிவிக்கப்படாமல் பொதுமக்களின் நன்மை கருதி அவை வெளியிடப்படும்.

ஆசிரியைகள் சேலையுடன், மேலங்கி (வழக்கறிஞர் கோட் போல) அணிந்து வர வேண்டும்.

வரும் கல்வியாண்டு முதல், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு உடை கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. மேலும், பள்ளிக்கு மொபைல் போன் எடுத்து வரவும் தடை விதிக்க, பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.
                     பள்ளி, கல்லூரிகளில், ஆசிரியர் - மாணவர் நட்புறவில், பல முரண்பாடுகள் ஏற்படுகின்றன. இதனால், ஆசிரியர் - மாணவர் உறவு முறை, கேலிக்குரியதாக மாறி வருகிறது. எனவே, பல கட்டுப்பாடுகளை கொண்டு வருவது குறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். சில ஆசிரியர் சங்கங்களும், இது குறித்து, தமிழக அரசுக்கு மனு அளித்துள்ளன. ஆசிரியர் சங்க பிரதிநிதிகளிடம், கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தியுள்ளனர்.

பள்ளிக்கல்வித் துறைக்கு பிடித்த வியாழக்கிழமை!

தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் தொடங்கப்பட்டதும், முடிவுகள் வெளியாகும் தேதிகள் மற்றும் அதற்கான அறிவிப்புகள் அனைத்தும் வியாழக்கிழமையை மையமாக கொண்டுள்ளது.
          பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி 31-ம் தேதி முடிவடைந்தது. அதேபோல், 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 19-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 10-ம் தேதி முடிவடைந்தது. இந்த இரு பொதுத் தேர்வுகளும் வியாழக்கிழமைகளில் தொடங்கியது

பி.எப்., பணம் எடுத்தால் 10 சதவீத வரி கழிக்க திட்டம்

வருங்கால வைப்பு நிதியில் சேர்த்து வரும் தொகையை, ஐந்து ஆண்டுகளுக்குள், தொழிலாளர்கள் திரும்பப் பெற்றால், 10.3 சதவீதம் வருமான வரி பிடித்தம் செய்ய, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான (ஈ.பி.எப்.ஓ.,) முடிவு செய்துள்ளது.

           இருபதுக்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணியாற்றும் நிறுவனத்தில், மாத சம்பளம் 6,500 முதல், 15 ஆயிரம் ரூபாய் வரை பெறும் ஊழியர்களின் சம்பளத்தில், 12 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு, பி.எப்.,

மூத்த விரிவுரையாளர் தேர்வு பட்டியல்

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கும் மூத்த விரிவுரையாளர் தேர்வு பட்டியலை, தமிழக ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., வெளியிட்டுள்ளது.

         அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு, பள்ளி கல்வித் துறையின் மாநில கல்வியியல் மற்றும் பயிற்சி நிறுவனத்தில், மூத்த விரிவுரையாளர் மூலம்

தமிழ்வழியில் படித்திருந்தால் முதுகலை ஆசிரியர் பணி: உயர்நீதிமன்றம் உத்தரவு!!!

'முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு முதுகலை பட்டத்தை தமிழ் வழியில்படித்திருந்தால் மட்டுமே அரசாணைப்படி முன்னுரிமை அளிக்கப்படும்' என மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவிட்டது. 

பங்குச் சந்தையில் 5 சதவீதம் முதலீடு செய்ய அனுமதி பி.எப். நிதியை சூறையாடுகிறது அரசு

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியத்தின் 5 சதவீத நிதியை பங்குச் சந்தைகளில் முதலீடு செய்வதற்கு மத்திய அரசு அனுமதித்துள்ளது. இதன்படி நாடு முழுவதும் உள்ள தொழிலாளர்களின் சேமிப்புப் பணமான பி.எப். நிதியிலிருந்து சுமார் 5 ஆயிரம் கோடி அளவிற்கு உடனடியாக பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யப்பட்டு சூதாட்டம் துவங்கவிருக்கிறது.
 

மாணவர் சேர்க்கைக்கு கல்லூரிகள் இணையதள மதிப்பெண் நகலை பெறலாம்

இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்படும் மதிப்பெண் நகல்களை பயன்படுத்தி, மாணவர்கள் சேர்க்கை நடத்தலாம்' என, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு உயர் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மாணவர் சேர்க்கை யில் கல்லூரிகள் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் தொடர்பாக, கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், உயர்கல்வித் துறை செயலர் அபூர்வா கூறியிருப்பதாவது:

நிதியுதவி பெறும் பள்ளிகள் - ஆசிரியர்களுக்கு ஊதியத்தினை நிறுத்தம் செய்ய கூடாது

 தொடக்கக் கல்வி - நிதியுதவி பெறும் பள்ளிகள் பள்ளிக்குழு புதுப்பித்தல் தொடர்பாக பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஊதியத்தினை நிறுத்தம் செய்ய கூடாது என தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு

அனைத்து அனுமதியும் இணைய வழியில் தான்: 2 மாதத்தில் 2,700 விண்ணப்பம்; 500க்கு அனுமதி

சத்தம் இல்லாமல் அரசு துறையில் புது வசதி அறிமுகம்: அனைத்து அனுமதியும் இணைய வழியில் தான்: 2 மாதத்தில் 2,700 விண்ணப்பம்; 500க்கு அனுமதி
அனைத்து அனுமதிகளையும், இணைய தளம் வழியாக வழங்க, புதிய மென்பொருள், மாசு கட்டுப்பாட்டு வாரியத்தில், சத்தமின்றி செயல்பாட்டுக்கு வந்துள்ளது. இரண்டு மாதங்களில், 2,700 விண்ணப்பங்கள் குவிந்துள்ளன.

50'/, அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைப்பது குறித்து விரைவில் முக்கிய தகவல் வெளியாகலாம்.

 50'/, அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி .விரைவில் இது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகலாம்.
        நீண்ட நாட்களாக  நிலுவையில்  இருந்துவந்த   மத்திய அரசு ஊழியர்களுக்கான 50'/, அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளதாக  மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி  நேற்று தெரிவித்துள்ளார்.

             இந்த  இணைப்பு 1/1/15  முதல் அமுல்படுத்தப்பட்டு1/1/15  முதல் 63'/, அகவிலைப்படி வழங்கப்பட  உள்ளதாகவும்  இதனை செயல்படுத்த  அரசுக்கு 1230 கோடி கூடுதல் செலவு ஏற்படுமென மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது .

Alagappa University -B.Ed Programme - Application Form and Prospectus

  • B.Ed Application Form for the year 2015-16-Download
  • B.Ed Prospectus 2015-16 -Download

பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர் பணிக்கு விண்ணப்பிக்க செல்லும்போது கொண்டு செல்ல வேண்டிய ஆவணங்கள் ( அசல் மற்றும் நகல்கள் )

 (*கட்டாயம் தேவைப்படுவன)
1) *பத்தாம் வகுப்பு சான்றிதழ் / கூடுதல் கல்வித்தகுதி சான்றிதழ்
2) *சாதி சான்றிதழ்
3) *வேலைவாய்ப்பு அட்டை ( employment card)
4) முன்னுரிமை கோரினால் அதற்கானச் சான்றிதழ்

LAB ASSISTANT RECRUITMENT NOTIFICATION & ORDERS

LAB ASSISTANT

  • NOTIFICATION & INSTRUCTION OF LAB ASSISTANT RECRUITMENT
  • LAB ASSISTANT - G.O.(Ms.) No.40.
  • LAB ASSISTANT - G.O.(Ms.) No.44.
  • LAB ASSISTANT - G.O.(Ms.) No.55.

ஜீன்ஸ் அணிய தடை; மொபைல் 'நோ!': பள்ளி ஆசிரியர், ஆசிரியை, மாணவர்களுக்கு வருகிறது புது கட்டுப்பாடு


web stats

web stats