rp

Blogging Tips 2017

விரைவில் PGTRB : முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களில் இந்த ஆண்டு 600 காலிப் பணியிடங்கள்

அரசுப் பள்ளிகளின் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களில் இந்த ஆண்டு சுமார் 600 பணியிடங்கள் காலியாக உள்ளன. இவற்றை நிரப்புவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 2013-14, 2014-15-ஆம் கல்வியாண்டுகளில் காலியான 1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களை நிரப்புவதற்காக, 2014-ஆம் ஆண்டு நவம்பரில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதற்கான போட்டித் தேர்வு இந்த ஆண்டு ஜனவரி 10-ஆம் தேதி நடத்தப்பட்டு,

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாவட்டப் பொதுக்குழு அழைப்புக்கடிதம்


இனி TPF கணக்கு பராமரிப்பு மாநில கணக்காயர் (A G ) அலுவலகத்தில் ....


செப்டம்பர் 2 வேலை நிறுத்தத்தில் பங்கேற்றவர்களுக்கு ஊதியம் பிடித்தம் கூடாது - இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் திரு.நந்தகுமார் அவர்கள் உத்தரவு


நாடு முழுவதும் அவசர அழைப்பு எண் 112: டிராய் பரிந்துரையை ஏற்றது மத்திய அரசு

இந்தியா முழுவதற்குமான அவசர அழைப்பு எண்ணாக டிராய் பரிந்துரை செய்த 112 எண்ணை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது. இதனையடுத்து இந்த எண் விரைவில் நாடு முழுவதும் அறிமுகப் படுத்தப்பட உள்ளது. அமெரிக்காவில் எந்த ஒரு அவசர அழைப்பாக இருந்தாலும் 911, இங்கிலாந்தில் 999 போன்ற எண்களை அவசர உதவிக்காக செயல்படுத்தி வருகின்றன.

தரம் உயர்த்தப்பட்ட 344 பள்ளிகளுக்கு ரூ.555 கோடி ஒதுக்கீடு

உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்ட 344 பள்ளிகளுக்கு கட்டடம் கட்டுவதற்கு ரூ.555 கோடி நிதி ஒதுக்கீடு செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் சார்பில் 2010-11, 2011-12 ஆகிய ஆண்டுகளில் முறையே 344, 710 நடுநிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டன.
இந்தப் பள்ளிகளுக்குக் கட்டடம் கட்ட தனது 75 சதவீதப் பங்கான ரூ.518 கோடியை மத்திய அரசு ஒதுக்கியிருந்தது

ஒட்டு மொத்த விடுப்பில் செல்ல கருவூலத் துறை அலுவலர்கள் முடிவு

கருவூலக் கணக்குத் துறை இயக்குநர் மீது நடவடிக்கைக் கோரி, அனைத்து மாவட்ட கருவூலங்கள் முன் வருகிற 5-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தவும், 6-ஆம் தேதி ஒட்டு மொத்தமாக தற்செயல் விடுப்பில் செல்லவும், தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை அலுவலர் சங்கம் முடிவு செய்துள்ளது.
மதுரை மாவட்டக் கூடுதல் கருவூல அலுவலர் மூர்த்தி, சென்னையில் ஆய்வுக் கூட்டத்தின்போது மரணம் அடைந்தார். அவரது இறப்புக்கு, கருவூலக் கணக்குத் துறை இயக்குநரின் நெருக்கடியே காரணம் எனக் கூறி கருவூலக் கணக்குத் துறையினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம்

புதிய ஓய்வூதியம் திட்டம் எப்போது கைவிடப்படும் -சட்ட பேரவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் திரு.கே.பாலகிருஷ்ணன் கேள்வி

அரசு அலுவலகங்களில் பெறப்படும் மனுக்கள் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை சார்பான அரசாணை :99 நாள் : 21. 09. 2015

துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி: வித்தியாசம்இல்லாததால் பெற்றோரிடம் ஆர்வம் குறைவு

அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் துவக்கப்பட்ட ஆங்கில வழிக்கல்வியில், எவ்வித மாற்றங்களும் இல்லாததால், அதில் சேர்ப்பதற்கான ஆர்வம்பெற்றோரிடம் குறைந்துவிட்டது.அதிக பள்ளிகளில் ஆங்கிலவழிக்கல்வி துவக்கியும், மாணவர் எண்ணிக்கை சரிந்து வருவது, கல்வித்துறைஅலுவலர்களைஅதிருப்திக்குள்ளாக்கியுள்ளது.தமிழகத்தில், 34 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகள் உள்ளன.

மதிய உணவு: புதிய விதிமுறைகள் வெளியீடு

புதுடில்லி : பள்ளிகளில் வழங்கப்படும் மதிய உணவு திட்டத்திற்கா புதிய விதிமுறைகளை மத்திய அரசு இன்று(அக்.,1) வெளியிட்டுள்ளது. இதில், 1 முதல் 8ம் வகுப்பு வரை அனைவருக்கும் சத்தான, சூடான உணவு வழங்கப்பட வேண்டும். தொடர்பள்ளி உணவுகளில் 450 கலோரிகளும், 12 கிராம் புரோட்டீனும் இருக்க வேண்டும். நடுநிலைப்பள்ளி உணவுகளில் 700 கலோரிகளும், 20 கிராம் புரோட்டீன்களும் இருக்க வேண்டும். உணவுகள் அனைத்தும் பள்ளிகளிலேயே சமைக்கப்பட வேண்டும். உணவு சமைக்க சுத்தமான சயைமல் அறைகள் அமைக்கப்பட வேண்டும். சமையல் பொருட்கள் வர தாமதமானால் தலைமை ஆசிரியர் பள்ளி செலவிலேயே பொருட்களை வாங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

நிரந்தரப் பதிவுமுறை கட்டாயமாகிறது: டிஎன்பிஎஸ்சி தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப முறையில் மாற்றம் - சான்றிதழ் சரிபார்ப்புக்கு வருவதை தவிர்க்க புதிய வசதி

டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப முறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மேலும், சான்றிதழ் சரிபார்ப்புக்கு விண் ணப்பதாரர்கள் நேரில் வருவதைத் தவிர்க்க புதிய வசதி ஏற்படுத் தப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித் தேர்வு: இணையம் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகம்

சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தனித் தேர்வுகளுக்கு இணையம் மூலம் விண்ணப்பிக்கும் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
2016 மார்ச்சில் நடைபெற உள்ள தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள், சிபிஎஸ்இ அமைப்பின் இணையதளமான www.cbse.nic.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். 

மாற்று திறனாளிகள் தினம் டிசம்பர் 3 சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்குதல் ஆணை

மாற்று திறனாளிகள் தினம் - அவர்களுக்கு டிசம்பர் 3 சிறப்பு விடுமுறை எடுத்துகொள்ளலாம்

சமூக நலம் - ஊனமுற்றோர் நலம் - அரசு / அரசு உதவி பெறும் நிறுவனங்களில் பணிபுரியும் அனைத்து வகை ஊனமுற்றோருக்கும்

எட்டாம் வகுப்பில் பேரிடர் மேலாண்மைப் பாடம் அறிமுகம்

தமிழகத்தில் எட்டாம் வகுப்பில் மூன்றாம் பருவத்துக்கான சமூக அறிவியல் பாடத்தில் பேரிடர் மேலாண்மைப் பாடம் இந்த ஆண்டு
அறிமுகப்படுத்தப்படும் என, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் தெரிவித்தது. இதுதொடர்பாக அந்த நிறுவனம் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

மாணவர்களுக்கு கல்வியோடு சுகாதாரம், பாதுகாப்பு, முதலுதவி போன்றவற்றில் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. பேரிடர் காலங்களில் உயிர் காப்பதற்கு முக்கியமான

மாநிலத்தை 'உரித்து'க் காட்டிய கணக்கு தணிக்கை அறிக்கை: கல்வித்துறைக்கு இழப்பு ரூ. 3.88 கோடி

'நபார்டு' திட்டத்தில் செயல்படும், 687 அரசு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு பெஞ்ச், மேஜை ஆகியவை வாங்க,
'டான்சி' மற்றும் தமிழ்நாடு கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத்தில், 'டெண்டர்' கோரப்பட்டது. கதர் மற்றும் கிராமத் தொழில் நிறுவனம் குறைந்த தொகையை குறிப்பிட்டிருந்த போதும், 'டான்சி' நிறுவனத்துக்கே, 33.34 கோடி ரூபாய்க்கு, 90 சதவீத கொள்முதல் ஆணை வழங்கப்பட்டது. கதர் வாரியத்துக்கு, 3.75 கோடி ரூபாய்க்கு, 10 சதவீத கொள்முதல் ஆணை மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது

கல்லூரி கல்வி இயக்குனராக மீண்டும் கூடுதல் பொறுப்பு

கல்லுாரி கல்வி இயக்குனராக (பொறுப்பு), ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் சேகர் நியமிக்கப்பட்டு உள்ளார்.தமிழகத்திலுள்ள, 800 கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில், 2.25 லட்சம் பேர் படிக்கின்றனர்; 10 ஆயிரம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். கல்லுாரிகளை கட்டுப்படுத்தும், கல்லுாரி கல்வி இயக்குனர் பதவிக்கான நியமனத்தில், சில ஆண்டுகளாக தொடர்ந்து குளறுபடிகள் நடக்கின்றன.

மத்திய அரசுப்பணிக்கு இனி நேர்முகத்தேர்வு இல்லை

புதுடில்லி : மத்திய அரசு இளநிலைப் பணியிடங்களுக்கு வரும் ஜனவரி 1ம் தேதி முதல் நேர்முகத்தேர்வு கிடையாது என்ற அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் தெரியவருகிறது. இதன்படி இனி திறனறிவு மற்றும் உடல் தகுதித்தேர்வின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படவுள்ளது. நேர்முகத்தேர்வில் சிபாரிசுகளுக்கு முன்னுரிமை அளிப்பதை தவிர்க்க இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பதவி உயர்வை உதறிய ஆசிரியர்கள்காலி இடங்களை நிரப்ப மீண்டும் முயற்சி

கடந்த மாதம், முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்காக நடந்த கலந்தாய்வில், ஏராளமான பட்டதாரி ஆசிரியர்கள், பதவி உயர்வை நிராகரித்ததால், 928 இடங்கள் நிரம்பவில்லை. இதை நிரப்ப, மீண்டும் பதவி உயர்வு கலந்தாய்வை நடத்த, புதிய முன்னுரிமை பட்டியலை, கல்வித்துறை வெளியிட்டுள்ளது.ஆக., 24ம் தேதி, முதுகலை ஆசிரியர் பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நடந்தது. இதில் பங்கேற்ற பட்டதாரி ஆசிரியர்கள் பலரும், எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காததால், பதவி உயர்வை நிராகரித்தனர்.

அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் சிஇஓ பணியிடங்களை நீட்டிக்கக் கோரிக்கை

அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் கூடுதல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பதவிகளை நீட்டிக்க வேண்டும் என தமிழக மாவட்டக் கல்வி அலுவலர்கள், முதன்மைக் கல்வி அலுவலர்கள் சங்கம் கோரியுள்ளது. இந்தச் சங்கத்தின் மாநிலப் பொதுக் குழுக் கூட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கையை உயர்த்த முடிவு

வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கையை 4 கோடியாக உயர்த்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது” என வருமான வரித்துறை துணை ஆணையர் (புலனாய்வு) ஸ்ரீதரன் கூறினார். காரைக்குடி அழகப்பா பல்கலையில் போட்டி தேர்வுமாணவர்களுக்கான ஒரு நாள் கருத்தரங்கில் அவர் பேசியதாவது: விடா முயற்சியே போட்டி தேர்வில் வெற்றி பெற சிறந்த வழி. நான் மூன்று முறை முதல் நிலை தேர்வில் தோல்வியடைந்தேன்.
நான்காம் முறை ஐ.பி.எஸ்., தேர்வானேன். மேற்கு வங்கத்தில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததால் அதில் சேராமல் தொடர்ந்து முயற்சி செய்து 2010-ல் ஐ.ஆர்.எஸ்.,-க்கு தேர்வானேன். ஒரு முறை தோற்றால் சோர்ந்து விடக்கூடாது. தன்னம்பிக்கை வேண்டும்.

சத்துணவு ஊழியர்கள் போராட்டம்: சென்னையில் 3,000 பேர் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் திங்கள்கிழமை போராட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்கள் 3,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து ஊதிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஊதியம் வழங்குதல், ஓய்வூதியம் உயர்த்துதல், பணி நிரந்தரம், பதவி உயர்வு என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் தொடர்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், சத்துணவு ஊழியர்கள் எழும்பூர் ராஜரத்தினம்

விடுமுறையில் வகுப்பு: பள்ளிகளுக்கு எச்சரிக்கை

 தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் மெட்ரிக் பள்ளிகளில், காலாண்டு மற்றும் முதல் பருவத்தேர்வுகள் முடிந்துவிட்டன. கடந்த, 26ம் தேதி முதல், விடுமுறை விடப்பட்டு உள்ளது. வரும் 3ம் தேதி மற்றும், 5ம் தேதி என, இரண்டு கட்டங்களாக பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

           ஆனால், பல இடங்களில் தனியார் பள்ளிகள், சில நாட்களுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துவிட்டு, வகுப்புகளை துவங்கி விட்டன. இதனால், மாணவ, மாணவியர் குழப்பமடைந்து உள்ளனர்.

பாதுகாப்பு இல்லாத பள்ளிக்கும் அங்கீகாரம் விதிமுறை தளர்ந்தது!

அரசு நிர்ணயித்த அளவுக்கு, இடவசதி இல்லாத பள்ளிகளுக்கு, அங்கீகாரம் வழங்கும் பணி துவங்கியுள்ளது. இதனால், போதிய வசதிகள் இல்லாமல், சிறிய இடத்தில் இயங்கும் பள்ளிகளுக்கு விமோசனம் கிடைத்துள்ளது.தமிழகத்தில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகள் எவ்வளவு பரப்பளவில் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும் என, தமிழக அரசு, ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது.
பரப்பளவு             மாநகராட்சி - ஆறு கிரவுண்ட்; மாவட்ட தலைநகர் - எட்டு கிரவுண்ட்; நகராட்சி - 10 கிரவுண்ட்; பேரூராட்சி - ஒரு ஏக்கர்; ஊராட்சி - மூன்று ஏக்கர் என, பரப்பளவு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.கும்பகோணம் பள்ளியில் தீ விபத்து ஏற்பட்ட பின், நீதிபதி சம்பத் கமிட்டி அளித்த பரிந்துரைப்படி, குறைந்த பரப்பளவில் செயல்படும் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவது நிறுத்தப்பட்டது. இதனால், 746 மெட்ரிக் பள்ளிகள், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, அங்கீகாரமின்றி இயங்கி வருகின்றன.இந்நிலையில், சட்டசபையில் பள்ளிக் கல்வி அமைச்சர் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், 'குறைந்த பரப்பளவில் இயங்கும் பள்ளிகளுக்கும், அங்கீகாரம் வழங்க வேண்டும்' என, தமிழக அரசுக்கு, மெட்ரிக் இயக்குனர் கடிதம் எழுதியிருந்தார்.

தனியார் கல்லூரிகளுக்கு பல ஆண்டுகளாகவழங்கப்படாத சம்பளம் சாரா செலவினம் ;நீதிமன்றத்தை அணுக தனியார் கல்லூரிகள் முடிவு

தனியார் கல்லுாரிகளுக்கு பல ஆண்டுகளாக நிலுவையிலுள்ள சம்பளம் சாரா செலவினங்களை வழங்க கோரி நீதிமன்றத்தை அணுகுவது என மதுரை காமராஜ் பல்கலை தனியார் கல்லுாரி நிர்வாகிகள் சங்கக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.மதுரையில் சங்க ஆண்டு பொதுக் கூட்டம், தலைவர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி தலைமையில் நடந்தது. கல்லுாரிகள் வளர்ச்சிக்காக பல்வேறு விஷயங்கள் விவாதிக்கப்பட்டன.

           முடிவில், கல்லுாரிகளில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்புவதற்கு நீதிமன்றத்தை அணுக வேண்டும். பல ஆண்டுகளாக மாற்றியமைக்கப்படாத மாணவர்கள் சிறப்புக் கட்டணத்தை மாற்றியமைக்க வேண்டும். தனியார் 

மருத்துவக் கலந்தாய்வு விவகாரம்: அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை முதலில் நிரப்ப உத்தரவு

அனைத்து மாநிலங்களிலும் 2015-16 ஆண்டுக்கான மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் முதலில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களை நிரப்ப வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

            2015-16 கல்வியாண்டுக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., ஆகிய மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு தமிழகத்தில் நடைபெற்று வருகிறது. மூன்று கட்டக் கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், இன்னும் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் 55 இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

பொறியியல் கல்லூரிகளுக்கு "ரேங்கிங்' நடைமுறை அறிமுகம்

 நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகள், மேலாண்மைக் கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை தரவரிசைப் படுத்தும் (ரேங்கிங்) புதிய நடைமுறையை மத்திய அரசு செவ்வாய்க்கிழமை அறிமுகம் செய்தது.

        இந்த நடைமுறை மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் www.mhrd.gov.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
 இதன்மூலம் நாடு முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் தரவரிசைப் பட்டியல் ஆண்டுக்கு ஆண்டு வெளியிடப்படும். இது மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் சிறந்த கல்லூரியைத் தேர்வு செய்ய மிகுந்த பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் கல்வியாளர்கள்.

"கேட்' தேர்வு: விண்ணப்பிக்க அக்டோபர் 8 கடைசி நாள்

முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேருவதற்கான "கேட்' 2016- தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் அக்டோபர் 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

முதுநிலை பொறியியல் படிப்புகளில் மத்திய அரசின் உதவித் தொகையுடன் மேற்கொள்ள -கேட்- (பொறியியல் பட்டதாரி நுண்ணறித் தேர்வு) தேர்வில் தகுதி பெறுவது அவசியம். சில கல்லூரிகள் இந்தத் தேர்வில் தகுதி பெற்றவர்களை மட்டுமே, முதுநிலை பொறியியல் படிப்புகளில் சேர்த்துக்கொள்கின்றன.

'நெட்' தேர்வு முடிவுகள் வெளியீடு

கல்லுாரி உதவிப் பேராசிரியர் பணிக்கான, 'நெட்' தகுதித்தேர்வு முடிவுகளை, சி.பி.எஸ்.இ., நேற்று வெளியிட்டது.கல்லுாரி உதவிப் பேராசிரியர் பணியில் சேரவும், இளநிலை ஆராய்ச்சி மாணவர்கள் மாதந்தோறும், 25 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெறவும், தேசிய அளவிலான நெட் தகுதித்தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். 

வட்டி குறைப்பில் ரிசர்வ் வங்கி அதிரடி: வீடு, வாகனக்கடன் சுமை குறையும்

ரிசர்வ் வங்கி நேற்று, குறுகிய காலக்கடனுக்கான வங்கி வட்டி விகிதத்தில், அதிரடியாக, 0.50 சதவீதம் குறைத்துள்ளது. இதனால், வீடு, வாகனங்கள் வாங்குவோருக்கான கடன் சுமை, கணிசமாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. 

சீன பொருளாதாரம் மந்தமடைந்து வருவதால், உலக பொருளாதாரத்தில் தடுமாற்றம் காணப்படுகிறது. ஐரோப்பிய நாடுகளில் பொருளாதார தேக்கநிலை நிலவுகிறது. இதனால், இந்திய பொருளாதாரம் பாதிப்படைந்து, சிக்கலை சந்தித்து வருகிறது.இந்திய பொருளாதாரத்துக்கு புத்துணர்ச்சி அளிக்கும் வகையில், வங்கி வட்டி

சத்துணவு ஊழியர்கள் கோரிக்கைகள் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் - சட்டசபையில் அமைச்சர் பதில்

சத்துணவு ஊழியர்கள் மீது, தடியடி நடத்தவில்லை' என, சமூகநலத் துறை அமைச்சர் வளர்மதி கூறினார். இதுதொடர்பாக, சட்டசபையில் அமைச்சர் வளர்மதி கூறியதாவது: கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரணியாக வந்த சத்துணவு அமைப்பாளர்கள், முதல்வரை சந்திக்க வேண்டும் என்றனர்

பணியின் போது இறக்கும் அரசு ஊழியர் குடும்பங்களுக்கான முன்பணம் ரூ.5 ஆயிரத்திலிருந்து ரூ.25 ஆயிரமாக உயர்வு

பணியின்போது இறக்கும் அரசுப் பணியாளர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் முன்பணம் ரூ.25 ஆயிரமாக உயர்த்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. 

முன்னதாக, இந்தத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு குடும்ப நலப் பாதுகாப்பு நிதியின் கீழ் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டு வந்தது. இந்த முன்பணம் இப்போது உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளுக்கு பாடப்புத்தகம் வழங்கல்; ஏ.இ.இ.ஓ.,க்களின் கட்டாய வசூல்

 இரண்டாம் பருவ பாடப்புத்தகம், நோட்டு, யூனிபார்ம் உள்ளிட்டவைகளை எடுத்துச்செல்ல வரும், தலைமை ஆசிரியர்களிடம், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், கட்டாய வசூலில் இறங்கியுள்ளதால், கடும் அதிருப்தி நிலவுகிறது.

சேலம் மாவட்டத்தில், 1, 111 அரசு மற்றும் நிதியுதவி பெறும் துவக்கப்பள்ளிகளும், 378 நடுநிலைப்பள்ளிகளும் உள்ளன. இவற்றில், படிக்கும் மாணவ, மாணவியருக்கு, முதல்பருவ தேர்வு முடிந்து, விடுமுறை விடப்பட்டுள்ளது. இரண்டாம் பருவ வகுப்பு, அக்., 5ம் தேதி துவங்குகின்றன. பள்ளி திறக்கும் நாளன்று, விலையில்லா பாடப்புத்தகம், நோட்டு, யூனிபார்ம், கிரையான்ஸ் ஆகியவை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் பள்ளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, அந்தந்த உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு, அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த பொருட்களை, பள்ளி தலைமை ஆசிரியர்கள், செப்., 29ம் தேதியன்று வந்து சேகரித்து செல்ல உத்தரவிட்டுள்ளது. பொருட்களை எடுக்க வரும் தலைமை ஆசிரியர்கள், 100 ரூபாய் முதல், 200 ரூபாய் வரை, உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்தில் கொடுத்து செல்ல வேண்டும் என, கட்டாயப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து பெயர் கூற விரும்பாத ஆசிரியர் கூறியதாவது: சேலம் ஜங்சனில் இருந்து, உதவி தொடக்கக்கல்வி அலுவலகத்துக்கு,

How to Install Vanavil Font in Android Phone?

1. Instal ex file explorer.
2. After installing es explorer go to setting in es explorer and find display option then tick show hidden files option.
3.close the ex explorer.
4. Make sure that you already saved the vanavil font in SD card or download its only takes 100 KB.


5.then open ex file explorer
 and navigate to vanavil font and long Press and copy that file.

6. Then go to internal storage or SD card ( most of us install our apps in SD card other just install apps default in internal storage) find android folder then open data folder

7. In data folder all installed apps folders will be there find wps office folder.

8. There u can find .cache folder opening that folder u can find wps office open that u can see fonts folder  open and paste your fonts.

9.that's all, then restart and u can view any fonts in wps office.

தேனி, ஈரோடு, குமரியில் கலை - அறிவியல் கல்லூரிகள்: பேரவையில் முதல்வர் அறிவிப்பு

 தமிழ்நாட்டில் தேனி, ஈரோடு மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.இதன் மூலம், தமிழ்நாட்டில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இல்லாத மாவட்டமே இல்லை எனும் நிலை உருவாகும் என முதல்வர் தெரிவித்தார்.
         இது தொடர்பாக விதி எண் 110-ன் கீழ் அவர் வாசித்த அறிக்கையில், "கடந்தநான்கரை ஆண்டுகளில் 4 அரசு பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட 53 கல்லூரிகள் துவங்கப்பட்டுள்ளன

தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை 3.5 இலட்சம் ஆசிரியர்களும் அக்டோபர் 8-இல் (வியாழக்கிழமை) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 14 நலத்திட்ட உதவிகளை வழங்க தனியாக அலுவலரை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஆசிரியர் இயக்ககங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) சார்பில் பல்வேறு கட்டப் போராட்டங்கள் நடைபெற்றுவருகின்றன.
 இந்த நிலையில், இந்தக் குழுவின் உயர்நிலைக் குழுக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. தமிழ்நாடு பட்டதாரி, இடைநிலை ஆசிரியர் மன்றப் பொதுச் செயலர் இளம்பரிதி, தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலர் செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர்.
 இதில், திட்டமிட்டபடி 3.5 லட்சம் ஆசிரியர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவர் என அவர்கள் தெரிவித்தனர்.

தொடங்கியது பி.எட். கலந்தாய்வு: முதல் நாளில் 78 பேருக்கு சேர்க்கைக் கடிதம்

ஆசிரியர் கல்வியியல் இளநிலை பட்டப் படிப்பான பி.எட். மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 78 பேர் சேர்க்கை கடிதங்களைப் பெற்றனர்.
மாணவர் சேர்க்கையை உயர் கல்வித் துறை அமைச்சர் பி.பழனியப்பன் தொடங்கி வைத்து, மாணவர்களுக்கு சேர்க்கைக் கடிதங்களை வழங்கினார்.
தமிழகம் முழுவதும் 21 அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 1,777 இடங்களில் 2015-16 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் நடத்துகிறது.

போராட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்கள் 3,000 பேர் கைது

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் திங்கள்கிழமை போராட்டம் நடத்திய சத்துணவு ஊழியர்கள் 3,000 பேர் கைது செய்யப்பட்டனர்.
 சத்துணவு ஊழியர்களை முழுநேர அரசு ஊழியர்களாக அறிவித்து ஊதிய குழுவால் அங்கீகரிக்கப்பட்ட ஊதியம் வழங்குதல், ஓய்வூதியம் உயர்த்துதல், பணி நிரந்தரம், பதவி உயர்வு என்பன உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி, சத்துணவு ஊழியர்கள் தொடர்சியாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். 

 இந்த நிலையில், சத்துணவு ஊழியர்கள் எழும்பூர் ராஜரத்தினம் அரங்கத்தில் இருந்து தலைமைச் செயலகத்தை நோக்கி திங்கள்கிழமை ஊர்வலமாகப் புறப்பட்டனர். இவர்களை எழும்பூர் லாங்க்ஸ் கார்டன் சாலை அருகே போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

அக்டோபர் 8-இல் ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் - dinamani

தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை அனைத்து ஆசிரியர்களும் அக்டோபர் 8-இல் (வியாழக்கிழமை) வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
 மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 14 நலத்திட்ட உதவிகளை வழங்க தனியாக அலுவலரை வழங்க வேண்டும்

பள்ளி மாணவர்களுக்கு ஆதார் அட்டை வழங்க 20 நடமாடும் குழுக்கள் அமைப்பு

ஈரோடு மாவட்டத்தில்  பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்குவதற்காக 20 நடமாடும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.


 இதுகுறித்து, மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் சனிக்கிழமை விடுத்த செய்தி:

 ஈரோடு மாவட்டத்தில் 90 சதவீதம் பொதுமக்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்குவதற்கான அங்க அடையாளங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதற்காக 50 குழுக்கள் அமைத்து பல்வேறு இடங்களில் முகாம்கள் நடத்தபட்டு வருகின்றன.

சொன்னது போல 'ஸ்டிரைக்' நடத்த ஆசியரியர்கள் முடிவு!

'தமிழகத்தில், வரும், 8ம் தேதி, 1.25 லட்சம் அரசு பள்ளிகளை பூட்டி, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் போராட்டம் நடத்தப்படும்' என, ஆசிரியர் கூட்டமைப்பான, 'ஜாக்டோ' அறிவித்து உள்ளது.
தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களின், 28 சங்கங்கள் சேர்ந்து, 'ஜாக்டோ' கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைத்துள்ளன. இந்த குழு சார்பில், 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடத்தப்படுகின்றன.
சென்னை, தி.நகரில் உள்ள தமிழ்நாடு பட்டதாரி மற்றும் இடைநிலை ஆசிரியர் சங்க அலுவலகத்தில், 'ஜாக்டோ' உயர்மட்ட குழு கூட்டம், நேற்று நடந்தது. பின், 'ஜாக்டோ' ஒருங்கிணைப்பாளர் இளங்கோவன் மற்றும் தமிழ்நாடு உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் சங்க பொதுச் செயலர் சாமி சத்தியமூர்த்தி கூறியதாவது:

டெங்கு காய்ச்சலாக இருக்க வாய்ப்பு மாணவர்களிடம் காய்ச்சல் இருந்தால் ஆஸ்பத்திரிக்கு தெரியப்படுத்த வேண்டும் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குனரகம் கடிதம்

மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோரிடம் கடுமையான காய்ச்சல் இருந்தால் அது டெங்கு காய்ச்சலாக இருக்கலாம் எனவே உடனே அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்று அனைத்து பள்ளிக் கூட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் கடிதம் அனுப்பி உள்ளது.

Father of the Subjects:

1. Father of Ayurveda: Charaka

2. Father of Biology: Aristotle

3. Father of Physics: Albert Einstein

4. Father of Statistics: Ronald Fisher

5. Father of Zoology: Aristotle

சத்துணவு ஊழியர்களின் கவலைகள்

சத்துணவு ஊழியராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற பெண் ஒருவர், கோவை அருகே நிராதரவாக தெருவில் இறந்து கிடந்ததாக அண்மையில் செய்தி வெளியானது. அப்போதுதான், லட்சக்கணக்கான பள்ளிக் குழந்தைகளுக்கு தினந்தோறும் உணவளிக்கும் இவர்களின் வாழ்க்கை திருப்திகரமாக இல்லை என்பது பலருக்கும் தெரியவந்தது.
 தமிழகத்திலுள்ள சத்துணவு மைய ஊழியர்கள் சுமார் 97,000 பேர் தங்கள் ஊதியத்தை காலமுறைப்படுத்த வலியுறுத்திப் போராடி வருகின்றனர். தங்களுக்கு கெüரவமான ஓய்வூதியத்தை அரசு நிர்ணயிக்க வேண்டும் என்பதும் இவர்களது பல்லாண்டு காலக் கோரிக்கை.

பி.எட். படிப்புக்கு விரைவில் புதிய கல்விக் கட்டணம்: உயர் கல்வித்துறை அமைச்சர் தகவல்

பி.எட். படிப்புக் காலம் 2 ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ள நிலையில், புதிய கல்விக் கட்டணத்தை நிர்ணயிப்பதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் தெரிவித்தார்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 1,777 பிஎட் இடங்களுக்கு 7,425 பேர் விண்ணப்பித்தனர். இவர்களில் 1,113 பேர் பொறியியல் பட்டதாரிகள். பிஎட் படிப்புக்கான கட் ஆப் மதிப்பெண் மற்றும் தர வரிசைப் பட்டியல் 2 வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது

திட்டமிட்டபடி அக்டோபர் 8 ஒருநாள் வேலைநிறுத்தபோராட்டம் நடைபெறும் -ஜாக்டோ முடிவு

தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவ்டிக்கைக் குழு சார்பில் கோரப்பட்ட கோரிக்கைகள் அரசின் கொள்கைக்குட்பட்டது என கோரிக்கை நிராகரித்து முதலமைச்சரின் தனிப்பிரிவு பதில்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம், இராதாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியரும் , தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தண்டராம்பட்டு வட்டார மகளிர் அணி செயளாலருமான திருமதி பரிதாரெகானா அவர்கள் 2014-2015 ஆம் ஆண்டிற்கான மாநில அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்றார்.

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியம், இராதாபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியரும் , தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தண்டராம்பட்டு வட்டார மகளிர் அணி செயளாலருமான 
திருமதி பரிதாரெகானா அவர்கள் 2014-2015 ஆம் ஆண்டிற்கான மாநில அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்றார்.

ஓய்வூதியம் குறித்து, தமிழக அரசு, 12 வாரங்களுக்குள் பரிசீலித்து, உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு!

ஓய்வு பெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கம்
வெளியிட்ட அறிக்கை:சத்துணவு மற்றும் அங்கான்வாடி பணியாளர்கள் ஓய்வூதியர் சங்க பொதுச்செயலர் மாயமலை, 'சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு, குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார்.

வருங்கால வைப்பு நிதி பராமரிப்பு!-நடப்புக் கல்வி ஆண்டு முதல் மாநிலக் கணக்காயர் அவர்களின் பராமரிப்பில் கொண்டு வரப்படும்

1.6.1981 முதல் ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் செயல்பட்டு வந்த தொடக்க, நடுநிலைப் பள்ளிகள் அரசுப் பள்ளிகளாக ஈர்த்துக் கொள்ளப்பட்டன. இதனைத் தொடர்ந்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் அரசுப் பணியில் இணைக்கப்பட்டனர்.ஏற்கனவே அரசுப் பணியில் இருந்து வரும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி மாநில கணக்காயர் அலுவலகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அரசுப் பணியில் இணைக்கப்பட்ட தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் வருங்கால வைப்பு நிதி மட்டும் அரசுத் தகவல் மையத்தின்

நிதித்துறை - திருத்திய ஊதிய விகிதங்கள், 2009 -"SUPERANNUATION "இல் பணி ஓய்வுபெறும் அரசு ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு குறித்து திருத்தம் மற்றும் தெளிவுரை - செயல்முறைகள் ( நாள் : 21/09/2015)

Pay Commission Clarification For SuperAnnuation Period Salary Letter 52367, Date: 21.9.2015 - Click Here

சிவகங்கை மாவட்ட பொதுக்குழுகூட்ட முடிவுகள்

திட்டமிட்டபடி அக்டோபர் 8ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுததம் நடைபெறும்; இன்றைய ஜாக்டோ உயர்மட்டக் குழு கூட்டத்தில் முடிவு

இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கழக கட்டடத்தில் சுழற்சிமுறை தலைமையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் சார்பில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொது செயலாளர்(பொறுப்பு) திரு. செல்வராஜ் மற்றும் உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி சங்கங்களின் சார்பில் திரு.இளம்பருதி ஆகியோர் தலைமையேற்று நடத்தினர்.
அக்டோபர் 8ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்துவது சார்பாக விவாதிக்கப்பட்டு இறுதியாக திட்டமிட்டப்படி அக்டோபர் 8ஆம் தேதி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்த ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது.
தகவல் : திரு.க.சாந்தகுமார், தலைமை நிலைய செயலாளர்,
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி

பி.எட்., மாணவர் சேர்க்கைகவுன்சிலிங் இன்று துவக்கம்

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில் உள்ள, ஏழு அரசு கல்வியியல் கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவிக் கல்வியியல் கல்லுாரிகளில், பி.எட்., மாணவர் சேர்க்கையை, லேடி வெலிங்டன் கல்லுாரி நடத்துகிறது.இந்த ஆண்டு, 1,750 இடங்களுக்கு, 7,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்துள்ளனர்

பிளஸ் 2, 10ம் வகுப்பு தனித்தேர்வு இன்று துவக்கம்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான தனித்தேர்வு இன்று துவங்குகிறது. பள்ளிகளில் பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு படித்து தேர்ச்சி பெறாதவர்கள் மற்றும் பள்ளி களில் படிக்காமல் தனியாகப் படித்து தேர்வு எழுதுவோருக்கு, செப்., - அக்., மாதங்களில், அரசு தேர்வுத் துறையானது, தனித்தேர்வை நடத்துகிறது.
இந்த ஆண்டுக்கான தனித்தேர்வு இன்று துவங்கி, வரும், 6ம் தேதி முடிகிறது. தமிழகம் முழுவதும், 75 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வுக்கு விண்ணப்பித்துஉள்ளனர்.

அக்.15-இல் பள்ளிகளில் இளைஞர் எழுச்சி நாள்

குடியரசு முன்னாள் தலைவர் அப்துல் கலாம் பிறந்த தினமான அக்டோபர் 15ஆம் தேதி, பள்ளிகளில் இளைஞர் எழுச்சி நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: குடியரசு முன்னாள் தலைவர் ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் ஆசிரியராக இருப்பதையே பெரிதும் விரும்பினார்.

தேசிய திறனாய்வு தேர்வு (NTSE) - இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீடிப்பு

தருமபுரி மாவட்டம் அரூர் வட்டாரக்கிளைசார்பாக நடத்தப்பட்ட பணி நிறைவுபெற்றோர் பாராட்டு விழா




தருமபுரி மாவட்டம் அரூர் வட்டாரக்கிளைசார்பாக நடத்தப்பட்ட பணி நிறைவுபெற்றோர் பாராட்டு விழாவில் பொதுசெயலர் திரு.செ.மு அவர்களின் பேச்சில் ஒர் துளி


வாக்காளர் பெயர் நீக்கம் செய்ய புதிய முறை அறிமுகம் ஓட்டுச்சாவடி அலுவலர் சான்று வழங்கினால் மட்டுமே அமல்

வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்குதல் போன்ற பரிவர்த்தனையில், உரிய அலுவலர் சான்று வழங்கும் முறை அறிமுகமாகி உள்ளது.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, விண்ணப்பத்துடன் முகவரி, வயது போன்றவைகளுக்கான ஆவணங்கள், ஆதார் அடையாள அட்டை போன்றவைகளின் நகல்களும் இணைக்கப்பட வேண்டும்.
உத்தரவுஅந்த படிவத்தை, உரிய அலுவலர்கள் விசாரித்து பெயர் சேர்க்கப்படும். ஆனால், எவ்வித அறிவிப்பும் இன்றி, பெயர் நீக்கம் செய்யப்படுவதாக, ஆயிரக்கணக்கான புகார்கள் வருகிறது.

மகிழ்ச்சியில் கம்ப்யூட்டர் ஆசிரியர்கள்! 8 ஆண்டுகளுக்கு பின் கலந்தாய்வு

பணி நியமனம் செய்யப்பட்டு, எட்டு ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணியாற்றி வந்த, கம்ப்யூட்டர் மற்றும் வேளாண்மை ஆசிரியர்களுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தஅரசு உத்தரவிட்டுள்ளது.ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம், 2007-8ம் கல்வியாண்டில் பணியமர்த்தப்பட்ட, 1,880 கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் இதுவரை பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படவில்லை.

G.O Ms - 242 - உதவி தொடக்கக்கல்வி அலுவலரின் தரஊதியம் ரூ4900/- ஆக உயர்த்தி வழங்கப்பட்டுள்ள அரசாணை, நாள் 23. 09. 2015.


துறை தேர்வுக்கான விளம்பரம் வெளியிடு


web stats

web stats