அரசு பள்ளிகளுக்கு ஆய்வக உபகரணங்கள், புத்தகங்கள், பர்னிச்சர் உள்ளிட்ட பொருட்களை வாங்க, ஆண்டுதோறும் ஒதுக்கப்படும்
மத்திய அரசின் நிதியில், பல கோடி ரூபாய், அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் பைக்கு போவதாக, ஊழல் குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது.
தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக்கல்வித்திட்டத்தின்
(ஆர்.எம்.எஸ்.ஏ.,) கீழ், 12 ஆயிரத்து 282 பள்ளிகள் செயல்படுகின்றன. இவற்றின் பராமரிப்பு, கட்டமைப்பு, ஆசிரியர் ஊதியம் உள்ளிட்ட செலவினங்களுக்கான நிதி, இடைநிலை கல்வித் திட்டம் வாயிலாக, மத்திய அரசால் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் மூன்று ஆண்டுகளில், 12,282 பள்ளிகளுக்கு மானியமாக, 184.23 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது; இதில்தான், முறைகேடுகள் நடந்துள்ளன.