rp

Blogging Tips 2017

தமிழகத்தில் 26 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் 26 ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மாநில தேர்தல் ஆணையராக டி.எஸ்.ராஜேசேகர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக தலைமைச் செயலர் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

பெயர் புதிய பதவி (கூடுதல் பொறுப்பு)

DGE- HSE March 2016- Original Mark Sheet will be issued on 20.06.16 for school students & private candidates in concern schools-Reg


ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் மின் இணைப்பை துண்டிக்க நோட்டீஸ்: ஆசிரியர்கள் அதிர்ச்சி.

நெல்லை மாவட்டத்தில் பல ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் மின் கட்டணம் செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளதால் மின் இணைப்பை துண்டிக்க மின்வாரியம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதனால் ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களின் கீழ் செயல்படும் பள்ளிகளுக்கான மின் கட்டணம் கடந்த 9 மாதங்களாக செலுத்தப்படாமல் உள்ளது. இதனால் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகத்தில் இருந்து 24 மணி நேரத்திற்குள் மின் கட்டணத்தை

தனியார் பள்ளிகளுக்கு இணையான அரசு பள்ளிகள்:புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி உறுதி.

புதுச்சேரியில் தனியார் பள்ளி களுடன் போட்டி போடும் வகையில் அரசு பள்ளிகளின் கல்வித்தரம் மேம்படுத்தப்படும் என ஆளுநர் கிரண்பேடி உறுதி அளித்திருக்கிறார்.அரசு பள்ளி மாணவர்களின் படிப்புத் திறனை மேம்படுத்தும் வகையில் மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் ‘வித்யாஞ்சலி யோஜனா’ என்ற திட்டத்தை வரும்16-ம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது.

ஆளுநர் உரையின் சிறப்பு அம்சம்

ஆளுநர் ரோசய்யா உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூட்டம்இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது. ஆளுநர் உரையின் பிறப்பு அம்சங்கள் வருமாறு..!

* கச்சத்தீவை மீட்டு பாக் நீரிணைப் பகுதியில் தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமை நிலைநாட்டப்படும்.

  * மீனவர்களின் நலனுக்காக வழங்கப்படும் உயர்த்தப்பட்ட உதவித் தொகை தொடர்ந்து வழங்கப்படும்.

ஜிப்மர் மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகளை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு.

ஜிப்மர் மருத்துவக்கல்லூரி நுழைவுத் தேர்வுமுடிவுகளை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக தட்டாஞ்சாவடி தொகுதி என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. அசோக் ஆனந்து கூறியுள்ளார்.புதுச்சேரியில் அவர் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஜிப்மர் மருத்துவக் கல்லூரியில் எம்பிபிஎஸ் இடங்களுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆனால் நுழைவுத் தேர்வு முறை வெளிப்படையாக இல்லை.

உயர் கல்வித்துறையில் குவிந்த புகார்கள்: செயலர் அபூர்வா மாற்றம்

உயர் கல்வித்துறையில் குவிந்த புகார்களை தொடர்ந்து, செயலர் அபூர்வா மாற்றப்பட்டுள்ளார்.உயர் கல்வித்துறை செயலராக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி அபூர்வா, 2014 டிசம்பரில் பொறுப்பேற்றார். இவர் பொறுப்பேற்றது முதல், உயர் கல்வித் துறையில் தொடர்ந்து பல சர்ச்சைகள் எழுந்தன. 

கல்வி துறையில்இணை இயக்குனர்கள் மாற்றம்

பள்ளிக் கல்வித் துறையில், மூன்று இணை இயக்குனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அனைவருக்கும் கல்விஇயக்ககமான, எஸ்.எஸ்.ஏ.,வின் இணை இயக்குனர் சசிகலா, தொடக்ககல்வி இணை இயக்குனராக மாற்றப்பட்டுள்ளார்.

அங்கு பணியாற்றும், இணை இயக்குனர் செல்வராஜ், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனர் வர்மா, எஸ்.எஸ்.ஏ.,வுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

கலந்தாய்வு தாமதம் இடமாற்றம் ஆரம்பம்.

ஆசிரியர்களுக்கு விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு தாமதமாகும் நிலையில், பல இடங்களில் இடமாற்றம் நடப்பதாக புகார் எழுந்தது.ஆசிரியர்களின் இடமாறுதல், பணி உயர்வு உத்தரவுகள், முதன்மைக் கல்வி அலுவலகங்களின் வழியே, 'ஆன்லைனில்' வழங்கப்படும். முதலில், விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு என அறிவிக்கப்பட்டது; 

பள்ளிகளின் அருகே கிணறுகள் தலைமை ஆசிரியர்களுக்கு 'கெடு'

பள்ளிகள் அருகே அமைந்துள்ள கிணறுகளை அகற்ற தலைமை ஆசிரியர்களுக்கு ஒருவார கால கெடு விதித்து, பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் பள்ளிகள் ஜூன் முதல் தேதி துவங்கியது. பள்ளிக்கல்வித் துறை தற்போது மாணவர்களின் நலன் மற்றும் பள்ளிகளின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து வருகிறது.

பள்ளித் திறப்பையொட்டி ஏற்கனவே கழிவறைகளை சுத்தம் - சுகாதாரமாக வைக்க உத்தரவிட்டது. தற்போது அந்தந்த மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களிடம், 'கழிவறைகளை சுகாதாரமாக வைப்பதுடன், பள்ளி அருகே ஆபத்தான நிலையில் உள்ள கிணறுகளை மூடி மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும். இதனை ஒருவார காலத்திற்குள் செயல்படுத்த வேண்டும்' என, அவகாசம் கொடுத்து உத்தரவிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கை அனைத்துப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.மேலும் சுற்றறிக்கையில், 'மாணவர்களிடையே வாசிப்பு பழக்கத்தை அதிகரிக்கவும் திட்டமிட வேண்டும். பள்ளிகளில் தினமும் 45 நிமிடங்கள் வாசிப்பை கட்டாயமாக்க வேண்டும். கழிவறைகளை மாணவர்கள் சுகாதாரமாகபயன்படுத்த அறிவுறுத்த வேண்டும்' எனவும் உத்தரவிட்டுள்ளது.இந்த விஷயங்களை முதன்மை கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்கள் கூட்டத்தில் இவற்றை வலியுறுத்த வேண்டும். இதுபற்றிய விபரத்தை மின்னஞ்சலில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனரகத்திற்கு அனுப்ப வேண்டும் என, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று நடந்த ஆய்வுக்கூட்டத்தில், முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட கல்வி அலுவலர் மாலா மணிமேகலை பங்கேற்றனர். முதன்மை கல்வி அலுவலர் கூறுகையில், “பள்ளிகள் அருகே ஆபத்தான நிலையில் கிணறுகள் இருந்தால் அவற்றை ஒருவார காலத்தில் அகற்றி அதுபற்றிய விபரத்தை அறிக்கையாக தரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார்.

வேலூரில் ஒரு பள்ளி மூடல் அங்கீகார பிரச்னையால் நடிகர் ரஜினி பள்ளிக்கும் சிக்கல்!

சென்னையில் உள்ள நடிகர் ரஜினியின் அறக்கட்டளைக்கு சொந்தமான, 'தி ஆஷ்ரம்' பள்ளிக்கு இன்னும் அங்கீகாரம் கிடைக்காததால், பள்ளியை அதிகாரிகள் மூடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.வேலுாரில், ஆபீசர்ஸ் லேன் பகுதியில் உள்ள செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் பள்ளி, 1972ல் தொடங்கப்பட்டது.

இந்த பள்ளிக்கு, ஒவ்வொரு ஆண்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டு வந்தது. பள்ளி உள்ள இடம், வேறு ஒருவருக்கு சொந்தமானது என, பள்ளிக் கல்வித் துறைக்கு தெரிய வந்தது.அதனால், நடப்பு கல்வி ஆண்டில், அந்த பள்ளியின் அங்கீகாரம் புதுப்பிக்க கோரி விண்ணப்பம் வந்தபோது, பள்ளியின் இடம் குறித்த ஆவணங்களை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். அப்போது தான், அந்த இடம் வாடகை நடைமுறையிலும் இல்லாமல், விதிப்படி, 30 ஆண்டு குத்தகையும் இல்லாமல் இருப்பது தெரிய வந்தது.இதையடுத்து, கல்வித் துறை அதிகாரிகள் பள்ளியில் ஆய்வு செய்தபோது, தேவையான உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாதது தெரிய வந்தது. எனவே, செயின்ட் ஜான்ஸ் பள்ளி அங்கீகாரம், சில தினங்களுக்கு முன் அதிரடியாக ரத்து செய்யப்பட்டு, பள்ளி மூடப்பட்டது. பள்ளியின் முக்கிய ஆவணங்களை, அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.அங்கு படித்த, 370 மாணவர்களில், இதுவரை, 270 பேரை அருகில் உள்ள, பெற்றோர் விரும்பும், தனியார் பள்ளிகளில்எந்த கட்டணமும் இன்றி சேர்த்துள்ளனர்.இதை தொடர்ந்து, இதே பிரச்னையில் சிக்கியுள்ள, சென்னை ஆஷ்ரம் பள்ளி குறித்து, அதிகாரிகள் விசாரணையை துவக்கியுள்ளனர்.நடிகர் ரஜினியின் ராகவேந்திரா அறக்கட்டளை சார்பில், 'தி ஆஷ்ரம்' பள்ளி, சென்னை, கிண்டியில் செயல்பட்டு வருகிறது.இதில் உள்ள, மெட்ரிக் பள்ளிக்கு, நான்கு ஆண்டுகளாக அனுமதியில்லை.பள்ளி உள்ள இடத்தின் உரிமையாளர் வெங்கடேஸ்வரலு, பள்ளிக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவரது மனுவை பெற்று உரிய நடவடிக்கை எடுக்க, நீதிமன்றம் உத்தரவிட்டது.இதையடுத்து, தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகளின் இணை இயக்குனர் ஸ்ரீதேவி, 'இந்த ஆண்டு, ஜனவரி, 27ல் நடக்கும் விசாரணையில், ஸ்ரீ ராகவேந்திரா கல்வி சங்கத்தின் செயலர் லதா ரஜினிகாந்த், நிர்வாக அறங்காவலர் நடிகர் ரஜினிகாந்த் மற்றும் பள்ளி முதல்வர் வந்தனா ஆகியோர் நேரில் ஆஜராக வேண்டும்' என, சம்மன் அனுப்பினார்.இந்த சம்மனை ரத்து செய்ய கோரி, பள்ளி சார்பில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஆனால், தடையை விலக்க நீதிமன்றம் மறுத்து விட்டது. இந்த நிலையில், ஆஷ்ரம் பள்ளி சார்பில், பள்ளிக் கல்வித் துறைக்கு இன்னும் எந்த விளக்கமும் அளிக்கவில்லை என்பதால், பள்ளி அங்கீகாரத்தை அதிகாரிகள் நிறுத்தி வைத்துள்ளனர்.பள்ளி நிர்வாகம், அதிகாரிகளின் சட்ட நடவடிக்கைகளுக்கு உரிய ஒத்துழைப்பு தராவிட்டால், பள்ளியின் மீது எந்த நேரத்திலும் நடவடிக்கை எடுக்கப்படும் ஆபத்து உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வேலுாரில் மூடப்பட்ட செயின்ட் ஜான்ஸ் பள்ளி போன்று, ஆஷ்ரம் பள்ளி இருக்கும் இடமும், வேறு ஒருவருக்கு சொந்தமானது. பள்ளியின் இட உரிமையாளர் வாடகை பாக்கியை கேட்டு பல ஆண்டுகளாக போராடி வருகிறார் என கல்வித்துறைஅதிகாரிகள் தெரிவித்தனர்.

கல்வி கட்டண நிர்ணய குழுதலைவரை நியமிக்க கோரிக்கை

னியார் பள்ளிகளின் கல்வி கட்டணத்தை நிர்ணயம் செய்யும் குழுவின் தலைவரை நியமிக்க வேண்டும்' என, தமிழ்நாடுமாணவர் - பெற்றோர் நலச்சங்கம் சார்பில், பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பெஞ்சமினிடம், மனு கொடுக்கப்பட்டு உள்ளது.மனுவில் கூறியிருப்பதாவது:

தனியார் பள்ளிகளுக்கு, கல்விகட்டணம் நிர்ணயம் செய்யும் குழு தலைவர் பதவி, ஏப்., 1ம் தேதியில் இருந்து காலியாக உள்ளது. எனவே, குழு தலைவரை உடனடியாக நியமிக்க வேண்டும். தலைவர் நியமிக்கப்படும் வரை, பழைய கட்டணத்தை வசூலிக்க, தனியார் பள்ளிகளுக்கு உத்தரவிட வேண்டும்.ஏழை மாணவர்களுக்கு, 25 சதவீதம் ஒதுக்கீடு வழங்காத, பள்ளி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளிகள், செலவுகள் அனைத்தையும், பெற்றோரிடம் இருந்து வசூலிப்பதால், அவற்றைசுயநிதி பள்ளிகள் என அழைக்காமல், பெற்றோர் சார்பு பள்ளிகள் என, அழைக்க வேண்டும்.இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மாணவர் சேர்க்கையின் போது, விண்ணப்பத்தில் ஜாதி குறிப்பிட வேண்டுமா: உயர் நீதிமன்றம் உத்தரவு

:'விண்ணப்பத்தில், ஜாதி பெயரை குறிப்பிட விரும்பவில்லை என்றால், அவர்களை கட்டாயப்படுத்த முடியாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

துவக்கப் பள்ளி முதல், மேல்நிலைப் பள்ளிகள் வரை, எந்த பள்ளி ஆசிரியர்களும், வகுப்பறையில் மொபைல் போன் பயன்படுத்தக் கூடாது என, தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடக்க கல்வி இயக்குனர் அறிக்கை:
* மாணவர்களின் கவனச் சிதறலை தடுக்கும் வகையில், மாணவர்கள், பள்ளிகளுக்கு மொபைல் போன் கொண்டு வர தடை விதித்து, 2007ம் ஆண்டே அரசாணை கொண்டு வரப் பட்டுள்ளது. 

இதன் படி, மாணவ, மாணவியர், பள்ளிகளுக்கு மொபைல் போன் கொண்டு வர தடை விதிக்கப் படுகிறது. இதை, ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும் 
* மீறி யாரும் கொண்டு வந்தால், சம்பந்தப்பட்ட பெற்றோரை அழைத்து, ஆசிரியர்கள் அறிவுரை வழங்க வேண்டும் 

Joint Directors of School Education department transfers

Joint Directors of School Education department transfers

Mrs. K.Sasikala JD transfer from SSA to Directorate of Elementary Education

Mr.Selvaraj JD transfer from DEE to TRB

Mr. Varma transfer from TRB to SSA (K.Sasikala Place)

as on 15/06/2016

TNPSC: 4,931 காலிப் பணியிடங்களை நிரப்ப அக்டோபர் மாதம் குரூப்-4 தேர்வு-ஜூலை மாதம் அறிவிப்பு வெளியாகிறது.

இளநிலை உதவியாளர், தட்டச்சர் உள்ளிட்ட பதவிகளில் 4,931 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப்-4 தேர்வு அக்டோபர் மாதம் நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு ஜூலை மாதம் வெளியாகிறது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இளநிலை உதவி யாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் மற்றும் வரித்தண்டலர், வரைவாளர் உள்ளிட்ட பதவிகளில் ஏற்படும் காலியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வு நடத்தப்படுகிறது.இத்தேர்வை எழுத குறைந்த பட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றால் போதும்.

50-க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடும் நிலை.

போதிய மாணவர்கள் சேர்க்கை இல்லாததால் 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் மூடும் நிலையில் உள்ளன. இந்த வருடம் பயிற்சி பள்ளியில் சேருவதற்கு விண்ணப்பிப்பதற்கு 17-ஆம் தேதி வரை தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.அரசு சார்பில் தமிழ்நாட்டில் 29 3 மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், அரசு உதவி பெறும் ஆசிரியர் பயிற்சி பள்ளிகள் 38, சுயநிதி ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் 320 உள்ளன.

RTI-TRB மூலம் தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிவரன்முறை செய்யத் தேவையில்லை RTI ACT School Edn.jd. Pro.6216./C4/18.2.14

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான முதல் பருவ பாடங்கள் வீடியோ வடிவில்...

தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கான முதல் பருவ பாடங்கள் வீடியோ வடிவில்...

திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இடைநிலை ஆசிரியர் இரா.குருமூர்த்தி அவர்கள் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை அனைத்து பாடங்களுக்கும் ( கணிதம் தவிர ) you tube லிருந்து பதிவிறக்கம் செய்து பாடபகுதிக்குரிய விளக்கங்களுடன் தொகுத்து குறுந்தகடுகளில் பதிவு செய்துள்ளார்.   

தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க பிளஸ் 1 சேர்க்கைக்கு... அரசு பள்ளியில் நுழைவு தேர்வு! அறிவியல் பாடத்தில் சேர முடியாமல் மாணவர்கள் தவிப்பு

திருமுல்லைவாயல்: திருமுல்லைவாயல், அரசு மேல்நிலைப் பள்ளியில், தேர்ச்சி விகிதத்தை
அதிகரிக்க, நுழைவுத் தேர்வு நடத்தி, மாணவர் சேர்க்கை நடத்துவதால், ஏழை, முதல் தலைமுறை மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதாக, குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
திருமுல்லைவாயல், சத்தியமூர்த்தி நகரில் உள்ள, அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 1 வகுப்பில் சேர வரும் மாணவர்களுக்கு, வணிகவியல் பிரிவில் மட்டும் இடம் கொடுக்கப்படுகிறது.

சமூக அங்கீகாரம், நிலையான வேலைவாய்ப்பு: சட்டப்படிப்பில் சேர ஆர்வம் காட்டும் பி.இ., பி.டெக். பட்டதாரிகள்

கோவை தமிழகத்தில் கடந்த இரண்டு ஆண்டு களாக பொறியியல் துறையில் படித்துப் பட்டம் பெற்ற பலரும், நிலையான வேலைவாய்ப்பு உள்ளிட்ட காரணங்களுக்கான சட்டப் படிப்பைத் தேர்வு செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.தமிழகத்தில் ஒரு காலத்தில், சட்டத்துறை மீதான எதிர்மறை எண்ணங்களும், சட்டப் பிரிவுகள் தொடர்பான பாடத் திட்டம், வேலை வாய்ப்புகள் உள்ளிட்ட காரணங் களால் இத்துறையைத் தேர்வு செய் பவர்கள் எண்ணிக்கை குறைந்திருந் தது. 

Know Your Random No for MBBS/BDS 2016-2017 Session

Click here Know Your Random No for MBBS/BDS 2016-2017 Session..

அரசுப் பள்ளியில் குறைந்த மதிப்பெண் பெறும் மாணவர்களை வெளியேற்றக் கூடாது: தி.மலை முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு.

தேர்ச்சி சதவீதத்தை உயர்த்தும் நோக்கத்தில் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களை வெளியேற்றக் கூடாது என்று தி.மலை முதன்மைக் கல்வி அலுவலர் பொன்.குமார் உத்தரவிட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி யில் அரசு நிதியுதவி பெற்ற சுப்ரமணி சாஸ்திரியார் மேல்நிலைப் பள்ளியில் படிக்கும்9-ம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 வகுப்பு மாணவர்கள் 40 பேருக்கு மேற்கொண்டு படிப்பதற்கு பள்ளி நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளது.

சாதி, மதத்தை தெரிவிக்க வற்புறுத்தக் கூடாது: பள்ளிகளுக்கு அறிவுறுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

சென்னை:பள்ளி சான்றிதழ்களில் சாதி, மதத்தை குறிப்பிட விரும்பாதவர்களை கட்டாயப்படுத்தக் கூடாது என்ற அரசாணை குறித்து பள்ளிகளுக்கு மீண்டும் நினைவூட்டுமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

பள்ளி சான்றிதழில் சாதி, மதத்தைத் தெரிவிக்கும்படி மாணவர்களை வற்புறுத்தக் கூடாது என தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

சிறுவர்களுக்கான பயனுள்ள தளங்கள்!

நல்லதும் கெட்டதும் கலந்து இருக்கின்ற இணையத்தில் குழந்தைகளுக்கான, அறிவுபூர்வமாகவும் கல்வி சார்ந்ததாகவும் இயங்குகின்ற தளங்கள் குறித்து கேட்டுப் பல வாசகர்கள் கடிதங்கள் அனுப்புகின்றனர். சிறுவர்களை அவர்கள் எதிர்பார்ப்பிற்கேற்ற வகையில் இழுத்துப் பிடித்து வேடிக்கை காட்டி அதே நேரத்தில் மூளைக்கும் வேலை தரும் பல தளங்கள் இணையத்தில் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

4200 முதல் 5400 தர ஊதியம் பெறுபவர்கள் 7 வது ஊதியக்குழுவில் நிர்ணயம் செய்யப்படும் ஊதியம்...!

அண்ணா பல்கலை தர பட்டியல் வெளியீடு பி. எஸ். ஆர். இன்ஜி., கல்லூரிக்கு 5ம் இடம்.

சென்னை அண்ணா பல்கலை வெளியிட்டுள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கான தர வரிசைப் பட்டியலில், சிவகாசி பி. எஸ். ஆர். இன்ஜினியரிங் கல்லுாரி மாநில அளவில் ஐந்தாவது இடத்தைப் பெற்றுள்ளதாக,” கல்லுாரி தாளாளர் சோலைசாமி கூறினார்.அவர் கூறியதாவது:

கல்வித் துறையில் 50 சதவீதம் அதிகாரிகள் பணியிடம் காலி.

தமிழக கல்வித் துறையில் முதன்மை கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,க்கள்) மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் (டி.இ.ஓ.,க்கள்) பணியிடங்கள் 50 சதவீதம் வரை காலியாக இருப்பதால், கல்வித்தரம் மற்றும் அரசு நலத்திட்டங்கள் வழங்கும் பணிகள் பாதித்துள்ளன.

Chief Ministers Tamil Computer Award- Date Extended upto 15.07.2016

RTE Admission 25% Reservations for Weaker Section Children in Private School-Last date of Admission Extended to 30/06/16-Proceeding Reg

உயர்நிலை ஆசிரியர் பணிக்கு இனி 4 ஆண்டுகள் படித்தால் போதும்

தமிழகத்தில் குறைந்த வருவாய் பிரிவில் இருந்து வரக்கூடிய கிராமப்புற இளம்பெண்கள், இளைஞர்களின் கனவு ஆசிரியர் பணியில் சேர்வதே. அரசு ஊதியம், மரியாதையான வேலை என்பதால் இதை பெரும்பாலும் விரும்புகிறார்கள். ஆனால், ஆசிரியர் பணியில் சேர வேண்டுமென்றால்

முதலாவது இடைநிலை ஆசிரியர் பயிற்சி பெற வேண்டும். பின்பு உயர்நிலை ஆசிரியராகப் பணிபுரிய பட்டப்படிப்பு முடித்து, அடுத்து பிஎட் முடிக்க வேண்டும். அதற்குள் வயது முடிந்துவிடும்.

இப்போது பிளஸ்-2 படித்த மாணவ - மாணவியர் நேரடியாக பிஎட் படிப்பை இனி நான்கு ஆண்டுகளுக்குள் முடித்துவிட முடியும். பிளஸ்-2 முடித்த பிறகு இரண்டு ஆண்டுகள் இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்து, அடுத்து மூன்று ஆண்டுகள் பட்டப்படிப்பு முடித்து, அடுத்து பி.எட் படிப்பை முடித்த பின்னர்தான் உயர்நிலை ஆசிரியர் பணிக்குச் செல்ல முடியும். ஒட்டு மொத்தமாக இதற்கு ஏழு ஆண்டுகள் ஆகும்.

அதுவரை வேலைக்குச் செல்லாமல் பொருளாதார ரீதியாக தங்களை காத்துக்கொள்வதும் சிரமம் என்பதால் பலரும் இந்தக் கல்வியைத் தொடர முடியாத சூழல் உள்ளது. இப்போது இந்த நீண்டகாலப் படிப்பை முதல்வர் ஜெயலிலதா 4 வருடங்களாக மாற்றி உத்தரவிட்டுள்ளார்.

எப்படி பிளஸ்-2 படித்த மாணவர்கள் நேரடியாக சட்டக்கல்லூரிகளில் சேர்ந்து 5 வருடப் படிப்பை படிக்கிறார்களோ… அதாவது 3 வருட பட்டப்படிப்பையும், 3 வருட பி.எல் படிப்பையும் சேர்த்து 6 வருடங்களாக படிக்காமல் ஒன்றிணைந்த படிப்பாக 5 வருட பி.எல் படிப்பு படிக்கிறார்களோ… அதுபோல தான் பட்டப்படிப்பையும், பிஎட் படிப்பையும் ஒன்றிணைந்த படிப்பாக 4 வருட பிஎட் படிப்பை தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஒருங்கிணைந்தப் படிப்புக்குப்பின் அந்த தகுதிக்குரிய சம்பளத்தில் ஆசிரியர் வேலையில் சேரலாம். இந்த படிப்பை தமிழகத்தில் கொண்டு வர 17 பிஎட், கல்லூரிகளுக்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில் அந்த 17 கல்லூரிகள் எவை என்பது அதிகாரபூர்வமாக வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்கள். உயர்கல்வி ஆசிரியர் பணிக்கான கல்வியில் தமிழக அரசு உருவாக்கியுள்ள இந்த மாற்றம் ஏழை, நடுத்தர குடும்பங்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும்.

ஆசிரியைக்கு ஜாமீன் மறுத்த நீதிமன்றம்

விழுப்புரம் மாவட்டம், உளுந்தூர்பேட்டைக்கு அருகே பாலி கிராமத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்துவந்த மாணவர்கள் 13 பேர் பள்ளிக்கூடத்துக்கு ஒழுங்காக வரவில்லை என்றும் படிக்கவில்லை என்றும் அவர்களது காலில் பள்ளி ஆசிரியையான வைஜெயந்திமாலா, கடந்த 9ம் தேதி கற்பூரத்தால் சூடுவைத்தார். இதுகுறித்து மாணவர்களின் பெற்றோர் புகார் தெரிவித்தனர். ஆசிரியையால் சூடு வைக்கப்பட்டுப் பாதிக்கப்பட்ட 8 மாணவர்கள் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இந்த செய்தி ஊடகங்களில் வெளியானதை தொடர்ந்து, மாநிலம் முழுவதும் பெருத்த அதிர்வலைகள் ஏற்பட்டது. இதைக்கண்ட கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி, ஆசிரியை வைஜெயந்திமாலா சஸ்பெண்ட் ஆகி கைது செய்யப்பட்டார். மேலும், அப்பள்ளிக்கூடத்தின் தலைமை ஆசிரியரும் சஸ்பெண்ட் ஆனார். தற்போது ஆசிரியை வைஜெயந்திமாலா கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் ஜாமீன் கோரி, உளுந்தூர்பேட்டை நீதிமன்றத்தில், நேற்று மனுதாக்கல் செய்தார். இந்த மனு, நீதிபதி ரோஸ்லின் முன்பு விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதி, ஜாமீன் மனுவை ஏற்க இயலாது எனக்கூறி தள்ளுபடி செய்தார்.

TANGEDCO HALL TICKET RELEASE (DATE OF EXAM : 19.06.2016)

 Sl. No.  NAME OF THE POST DATE OF EXAM HALL TICKET
1  Typist 19.06.2016 FN
2  Junior Auditor 19.06.2016 AN
3  Assistant Draughtsman 19.06.2016 AN
4  Junior Assistant /Accounts 27.08.2016 FN will be updated
5  Tester Chemical 27.08.2016 FN will be updated
6  Field Assistant (Trainee) 27.08.2016 FN will be updated
7  Steno-Typist 27.08.2016 FN will be updated
8  Junior Assistant / Administration 28.08.2016 FN will be updated
9  Technical Assistant / Electrical 28.08.2016 FN will be updated
10  Technical Assistant / Mechanical 28.08.2016 FN will be updated

கல்பனா சாவ்லா விருதுக்கு விண்ணப்பிக்கலாம் . கடைசி தேதி : 30.06.2016

பி.எட்., கல்லூரிகளில் போலி ஆசிரியர்கள்

தமிழகம் முழுவதும், 300க்கும் மேற்பட்ட, பி.எட்., கல்லுாரிகளில், போலி ஆசிரியர்கள் பணியாற்றுவது தெரியவந்துள்ளது. இந்த கல்லுாரிகளில், போலிகளை களையெடுக்க, ஆசிரியர் கல்வியியல் பல்கலை நடவடிக்கை மேற்கொண்டு உள்ளது.

சித்தா, ஆயுர்வேத படிப்பு: விண்ணப்பம் எப்போது?

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கான கலந்தாய்வு ஜூன், 20ம் தேதி துவங்குகிறது. ஆனால், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவப்படிப்புகளுக்கு இதுவரை விண்ணப்பம் வழங்காதது, மாணவர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகள், 20 சுயநிதி கல்லுாரிகள் உள்ளன.

மாணவர்களுக்கு:ஆர்.எம்.எஸ்.ஏ.,வில் புதிய திட்டம்.

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) மூலம் கல்வித்திறன் குறைந்த குழந்தைகளை மேம்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களுக்கும் தேர்ச்சி அளிக்கப்படுகிறது. 

7ஆவது ஊதியக்குழு - சம்பளம் கணக்கிடும் முறை

தமிழகத்தில்,கல்வியியல் கல்லுாரிகள் மாணவர் சேர்க்கை, விளம்பரம் வெளியிட தடை!

தமிழகத்தில், 690 கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இந்த கல்லுாரிகள் அனைத்தும், தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அங்கீகாரத்துடன், தமிழக ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பில் இயங்குகின்றன.இந்த கல்லுாரிகளுக்கு பல்கலை சார்பில்,ஆண்டு தோறும் இணைப்பு அங்கீகாரம் வழங்கப்படுகிறது.

கல்லுாரியின் உட்கட்டமைப்பு,ஆசிரியர்களின் எண்ணிக்கை மற்றும் கல்வித்தகுதி அடிப்படையில் மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் பாடப்பிரிவுகள் குறித்து இணைப்பு அங்கீகாரம் வழங்கப்படும். மாணவர்களை சேர்த்த பின் அதற்கு தனியாக,பல்கலையில் சான்றிதழ் பெற வேண்டும்.இந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அங்கீகாரம் வழங்கும் பணி தற்போது துவங்கியுள்ளது.

கல்லுாரிகளின் விவரங்களை,ஆசிரியர் கல்வியியல் பல்கலை சேகரித்து வருகிறது. இவற்றில்,புதிதாக விண்ணப்பித்துள்ள பல கல்லுாரிகள்,தற்போதே பி.எட்., -எம்.எட்.,படிப்புகளில் மாணவர் சேர்க்கையை துவங்கியுள்ளன.மேலும் இதுதொடர்பாக விளம்பர அறிவிப்புகளும்,கல்லுாரிகளால் வெளியிடப்படுகின்றன.

ஆசிரியர் கல்விக்கு புதிய பல்கலை; மத்திய அரசு.

புதுடில்லி: வெளிநாடுகளைப் போல் இந்தியாவிலும் ஆசிரியர் கல்விக்கு புதிய பல்கலை.,அமைப்பது குறித்து ஆராய்ந்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளதாவது:

இலவச கல்வி திட்டங்களுக்கு தனி அதிகாரி அதிகாரிகள் சங்கம் கோரிக்கை.

பள்ளி மாணவர்களுக்கான அரசின் இலவச திட்டங்களை நிறைவேற்ற, தனியாக மாவட்ட கல்வி அதிகாரிகளை நியமிக்க, கல்வி அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக மாவட்ட கல்வி அலுவலர்கள் மற்றும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் சங்கத் தலைவர் சிவா.தமிழ்மணி, அமைப்பு செயலர் ஹரிதாஸ், துணைத் தலைவர் கிருபாகரன், தலைமையிடச் செயலர் இஸ்மாயில் உள்ளிட்டோர், பள்ளிக்கல்வி அமைச்சர் பெஞ்சமினை சந்தித்து மனு அளித்தனர்.

மருத்துவ விடுப்பு குறைந்தபட்சம் எத்தனை நாட்கள் அனுமதிக்கலாம்? - RTI


பள்ளிகளில் சத்துணவு திட்டம் சிறப்பாக செயல்படுவதை கண்காணித்தல் சார்பான தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 10. 06. 2016


பள்ளிகளில் மாணவர்கள் செல்போன் பயன்டுத்த தடை விதித்தல் சார்பான தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் நாள் : 10. 06. 2016


தமிழகத்தில் அனுமதியின்றி, 1,800க்கும் மேற்பட்ட நர்சிங் பயிற்சி பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் செயல்படுவது அம்பலமாகி உள்ளது.

தமிழகத்தில் அனுமதியின்றி, 1,800க்கும் மேற்பட்ட நர்சிங் பயிற்சி பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள் செயல்படுவது அம்பலமாகி உள்ளது.

'இந்த பள்ளிகள் மற்றும் கல்லுாரிகள், மாணவர்களை சேர்ப்பதையும், பாடங்கள் நடத்துவதையும் உடனடியாக நிறுத்த வேண்டும்; பயிற்சி மையங்களை இழுத்து மூட வேண்டும். இல்லையெனில், சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழ்நாடு நர்சிங் கவுன்சில் எச்சரித்துள்ளது.

பல்கலை, கல்லூரி ஆசிரியர்களுக்கு சம்பள கமிஷன் பரிந்துரை குழு அமைப்பு:யு.ஜி.சி., நடவடிக்கை

மதுரை:நாடு முழுவதும் பல்கலை மற்றும் கல்லுாரி ஆசிரியர்களுக்கு மத்திய அரசின் 7வது சம்பளக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்காக ஆய்வுக் குழு அமைத்து பல்கலை மானிய குழு (யு.ஜி.சி.,) உத்தரவிட்டுள்ளது.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 7வது சம்பளக் குழு பரிந்துரைகளை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது தீவிரமாக எடுக்கப்பட்டு வருகின்றன. இதேபோல் பல்கலை மற்றும் கல்லுாரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் யு.ஜி.சி., தகுதி, அனுபவம் உட்பட பல்வேறு நிலைகளில் ஆய்வு செய்து சம்பளக் குழு பரிந்துரைகளை அமல்படுத்தும்.

அரசு ஊழியருக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் 2016 (NHIS 2016)க்கான அரசாணை வெளியீடு.

அ.ஆ.எண்.169 நிதித்(ஊதியங்கள்) துறை, நாள் 09.06.2016.
 click here to download the go


  • அரசு ஊழியர்களின் மருத்துவ காப்பீடு திட்டம் 10/09/2016 உடன் முடிவடைந்தது, 
  • இனி புதிய காப்பீடு திட்டம் 01.07.2016 முதல் நான்காண்டுகளுக்கு செயல்படுத்தப்படும். அரசாணை வெளியீடு ...! 
  • 4 ஆண்டுகளுக்கான செலவுத்தொகை 4 லட்சமாகவே தொடரும் 
  • கேன்சர்,கல்லீரல் மாற்று அறுவை போன்ற முக்கிய நோய்களுக்கு தற்போதுள்ள 4 லட்சத்திற்கு பதில் 7 .5 லட்சம் வரை வரம்பு உயர்வு 
  • தற்போதுள்ள மருத்துவமனைகள் திட்டத்தில்தொடரும் 
  • மேலும் புதிய மருத்துவமனைகள் சேர்க்கப்படும் 
  • 10/06/2016 முதல்01/07/2016 வரையிலான காலத்திற்க்ண்டான செலவுத்தொகை திரும்பப்பெறலாம்

இஸ்லாம் மதத்தை சேர்ந்த அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் பிற்பகல் 1 மணி முதல் 2 மணி வரை ஜும்மா வழிபாடு செய்ய அனுமதி உண்டு. மேலும் ரம்ஜான் நோண்பு காலத்தில் அலுவலக பணி நேரத்திலிருந்து தினமும் அரைமணி நேரம் முன்னதாக வீட்டுக்கு சென்று நோண்பு முடிக்க அனுமதி வழங்கப்படுகிறது.

CLICK HERE TO VIEW

தகுதிகாண் பருவத்தில் பணிபுரியும் ஆசிரியருக்கு RL & CL & தொழுகை அனுமதி உண்டு - RTI தகவல்.

CLICK HERE TO VIEW

தஆகூ பொதுச் செயலாளர் செ மு அவர்கள் இராமேசுவரம் -மேநாள்குடியரசுத்தலைவ் அப்துல் கலாம் நினைவடத்தில் அஞ்சலி...

பி.எட்., தேர்வு மாற்றப்பட்டது ஏன்?

ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லுாரிகளில், பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்புஇந்தஆண்டு முதல் ஓர் ஆண்டில் இருந்து, இரண்டு ஆண்டாகமாற்றப்பட்டு உள்ளது.முதலாம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை, பல்கலை வெளியிட்டது. 

அதில், ஜூன், 18ம் தேதி துவங்கும் தேர்வுகள், ஒவ்வொரு வாரமும், சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே நடத்த போவதாக அறிவித்துள்ளது.இதனால், மாணவர்கள் அதிருப்தி அடைந்தனர். இதுகுறித்து, நமது நாளிதழில், விரிவான செய்தி வெளியானது. 

அங்கீகாரம் பெற்ற மெட்ரிக் மேல்நிலைப்பள்ளிகள் மாவட்ட வாரியாக இணையதளத்தில் வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்று செய்திகள் பரவி வருகிறது. இந்நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் தங்கள் பள்ளி அங்கீகாரம் பெற்றதா இல்லையா என்பதை, தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரக இணையதளத்தில் பார்த்து உறுதி செய்து கொள்ளலாம். அங்கீகாரம் பெற்ற மெடரிக் மேல்நிலைப்பள்ளிகளின் பட்டியலை மாவட்ட வாரியமாக இந்த இணைய தளத்தில் பார்க்கலாம். உங்கள் வசதிக்காக தமிழ்நாடு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரக இணையதள முகவரி இதோ:

tnmatricschools.com/

ஆசிரியர்கள் ஜீன்ஸ் அணியத் தடை: ஹரியானா தொடக்க கல்வி இயக்குனர் உத்தரவு

ஹரியானா மாநிலத்தில் பள்ளி ஆசிரியர்கள் ஜீன்ஸ் அணிந்து பள்ளி மற்றும் கல்வி இயக்குனரகம் அலுவலத்திற்கு வரக்கூடாது என்று தொடக்க பள்ளி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள உத்தரவில் ‘‘தொடக்க மற்றும் நடுநிலை பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கூடத்திற்கு ஜீன்ஸ் அணிந்து வருவதாக எங்கள் கவனித்திற்கு வந்தது. அவர்கள் சில வேலைகள் தொடர்பாக கல்வி இயக்குனரகம் அலுவலகத்திற்கு வரும்போது அவர்கள் அணிந்துள்ள ஜீன்ஸ் பொறுத்தமற்ற வகையில் உள்ளது.

ஐ.ஐ.டி., சுரங்கவியல் படிப்பில்மாணவியருக்கான தடை நீக்கம்

அண்ணா பல்கலையைத் தொடர்ந்து, இந்திய உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனமான ஐ.ஐ.டி.,யிலும், சுரங்கவியல் படிப்புக்கு, இந்த ஆண்டு முதல், மாணவியர் சேர்க்கப்படுகின்றனர்.

        இன்ஜி., தொழில்நுட்ப படிப்பில், மாணவியரை பொறுத்தவரை, 'மெக்கானிக்கல், இண்டஸ்டிரியல் இன்ஜி., மற்றும் இன்ஜினியரிங் இன்ஸ்ட்ரூமென்டேஷன்' போன்ற படிப்புகளில் குறைவாகவும்; 'கம்ப்யூட்டர் சயின்ஸ், எலக்ட்ரானிக்ஸ், ஐ.டி., டெக்ஸ்டைல் டெக்னாலஜி, மெடிக்கல் இன்ஜி.,' போன்ற படிப்புகளில் அதிகமாகவும் சேருவர்.

சான்றிதழ் சோதனையால்தேர்வுநிலைஇரட்டை ஊதிய உயர்வுக்கு சிக்கல்.

ஆசிரியர்களுக்கு கல்விச் சான்றிதழ் உண்மைத் தன்மை பிரச்னையால், பல மாவட்டங்களில், ஆசிரியர்களுக்கு இரட்டை ஊதிய உயர்வு தடைபட்டுள்ளது.அரசு பள்ளிகளில், 10 ஆண்டு பணிபுரிந்தவர்களுக்கு தேர்வுநிலையும், 20 ஆண்டுகள் பணிபுரிந்தோருக்கு சிறப்புநிலை அந்தஸ்தும் வழங்கப்படும்.

அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை குறைகிறது! பிளஸ் 1 வகுப்பிற்கு கூட்டம் அலைமோதுகிறது

மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் 6ம் வகுப்பில் மாணவர் சேர்க்கை குறைந்துள்ள நிலையில், பிளஸ் 1 சேர்க்கையில் கூட்டம் அலைமோதுவதால் தலைமை ஆசிரியர்கள் செய்வதறியாமல் தவித்து வருகின்றனர்.
            கடலுார் மாவட்டத்தில் மொத்தம் 2,106 பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில், நர்சரி முதல் பிளஸ் 2 வரையில் கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது. உயர் மற்றும் மேல்நிலைப் பிரிவில் 235 அரசு பள்ளிகளும், 46 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளும், 136 மெட்ரிக் என மொத்தம் 417 பள்ளிகள் இயங்கி வருகின்றன.

அரசுப் பள்ளிகளில் மாதம் ஒரு முறை பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு: இணை இயக்குநர் அறிவுறுத்தல்

அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மாதம் ஒருமுறை பெற்றோர்-ஆசிரியர் கலந்தாய்வு கூட்டத்தை நடத்தவேண்டும்என பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநர் குப்புசாமி அறிவுறுத்தினார்.
நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 மற்றும் 10-ஆம் வகுப்பு தேர்வுகளில் 90 சதவீதத்துக்கும் கீழ் தேர்ச்சி சதவீதம்குறைந்த அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம் நாமக்கல் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

இடைநிலைஆசிரியர் பணியிடத்தில் நியமிக்கப்பட்ட பட்டதாரிஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கான ஊதியம்வழங்க செலவினம்கணக்கிட உத்திரவு

4 ஆண்டு பி.ஏ., - பி.எட்., படிப்புக்கு தடை: ஆசிரியர் கல்வியியல் பல்கலை உத்தரவு

பி.எட்., கல்லுாரிகள், நான்கு ஆண்டுகள் பி.ஏ., - பி.எட்., மற்றும் பி.எஸ்சி., - பி.எட்., படிப்புகளை நடத்த, ஆசிரியர் கல்வியியல் பல்கலை தடை விதித்துள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில், பல கல்லுாரிகளில், இரண்டு வித பட்டப் படிப்புகள் ஒரே முறையில் கற்றுத் தரப்படுகின்றன. உதாரணமாக, சட்டக் கல்லுாரியில், பி.ஏ., - பி.பி.ஏ., - பி.காம்., படிப்புடன் எல்.எல்.பி.,யும் சேர்த்து, ஐந்து ஆண்டு படிப்பாக நடத்தப்படுகிறது.

நோட்டு புத்தகம் இல்லாமல் மாணவர்கள் தவிப்பு

தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, அரசு சார்பில், 14 வகை நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன. இதில், எந்த பள்ளி மாணவர்களுக்கும் இதுவரை நோட்டு புத்தகங்கள் வழங்கப்படவில்லை.

கிராமப்புற பள்ளி கழிப்பறை பராமரிக்க நிதி ஒதுக்கீடு

கிராமப்புற பள்ளி கழிப்பறைகளை தினமும் இருவேளை சுத்தம் செய்ய பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதனால் மாணவர்களின் அவதி நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் சர்வ சிக் ஷா அபியான், ஆர்.எம்.எஸ்.ஏ ., நபார்டு மற்றும் ஊரக வளர்ச்சி துறைகள் மூலம் கழிப்பறைகள் தலா ரூ.1 லட்சம் முதல் ரூ.1.50 லட்சம் மதிப்பில் கட்டப்படுகிறது.

ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அடைவுத் தேர்வு எழுத வேண்டும்.

மாணவர்களின் கல்வித் தரத்தை அறிவதில் குழப்பம் இருப்பதால் அடைவுத் தேர்வு முறையை அனைவருக்கும் கல்வி இயக்கம் மாற்றியமைத்துள்ளது.அரசு மற்றும் உதவிப்பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை அறிய அனைவருக்கும்கல்வி இயக்கம் சார்பில் மாநில அடைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வருகிறது

மத்திய அரசு ஊழியர்களுக்கான 7 வது சம்பள கமிஷன் பரிந்துரைகள் வரும் ஆகஸ்ட் 1 முதல் அமல்படுத்தப்படும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவித்தன. மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய விகிதங்கள் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. சுதந்திரம் அடைந்தது முதல் இதுவரை 6 முறை மத்திய அரசு ஊழியர்களின் சம்பள விகிதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதில் கடைசியாக வழங்கப்பட்ட 6 வது சம்பள கமிஷன் பரிந்துரைகள்

ஆசிரியர்களின் கோரிக்கை மனுக்கள் மீது 5 நாட்களுக்குள் நடவடிக்கை: மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு.

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களின் கோரிக்கை மனுக்கள் மீது 5 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

          இதுதொடர்பாக அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கும் மாநில தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் அனுப்பியுள்ள ஒரு சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கல்வித்தரத்தை அறிவதில் குழப்பம்:அடைவுத் தேர்வு முறையில் மாற்றம்

 மாணவர்களின் கல்வித் தரத்தை அறிவதில் குழப்பம் இருப்பதால் அடைவுத் தேர்வு முறையை அனைவருக்கும் கல்வி இயக்கம் மாற்றியமைத்துள்ளது.

          அரசு மற்றும் உதவிப்பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை அறிய அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாநில அடைவுத் தேர்வு நடத்தப்படுகிறது.

web stats

web stats