rp

Blogging Tips 2017

தொடக்கக் கல்வி - தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்ககங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (டிட்டோஜாக்) - 7அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 06.03.2014 அன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்தவுள்ளது - மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்த இயக்குனரின் அறிவுரைகள்

D.E.E - PROC CLICK HERE...

TNPSC துறை தேர்வுகள் மே 2014 ஆறிவிக்கை வெளியீடு I விண்ணபிக்க கடைசி தேதி : 31.03.2014 I தேர்வு நடைபெறும் தேதி : 24.05.2014 முதல் 31.05.2014

தமிழ் நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் துறை தேர்வுகள் மே 2014

Departmental Examinations May 2014


Notification :Tamil / English

Apply online :To be opened shortly

ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் அமைக்கப்படும் மூன்று நபர் குழு இடைநிலை ஆசிரியரின் ஊதிய முரன்பாட்டையும் கவனிக்க வழிவகைகளை எடுக்க இன்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநிலப்பொறுப்பாளர்கள் பொதுசெயலர் திருமிகு செ.முத்துசாமி தலைமையில் ஆலோசனை.

நேற்று 6வது ஊதியக் குழு பரிந்துரைகளில் உள்ள குறைகளை ஆராய ஒய்வுபெற்ற நீதிபதி வெங்கடாஜலமூர்த்தி அவர்கள் தலைமையில் 2முதன்மை செயலாளர்கள் அடங்கிய குழுவை நியமிக்க  நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

எனினும்

 இக்குழு20 துறைகளில் உள்ள 52 பிரிவுகளில் உள்ள இந்த ஊதிய முரண்பாடை அரசு அகற்ற வேண்டும். அதற்கு, சத்தீஸ்கர் உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எஸ்.வெங்கடாசலமூர்த்தி தலைமையில் தனிநபர் ஊதியக் குறை தீர்வு குழுவை தமிழக அரசு அமைக்க வேண்டும். இந்தக் குழுவில் தலைமைச் செயலர் அந்தஸ்தில் உள்ள ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை அரசு நியமித்துக் கொள்ளலாம். புதிய ஊதிய விகிதத்தை நிர்ணயிப்பது தொடர்பாக தகுந்த விதிமுறைகளை இந்தக் குழுவுக்கு அரசு வழங்க வேண்டும்.
இந்த உத்தரவின் நகலை பெற்ற நாளிலிருந்து மூன்று வாரங்களுக்குள் இந்தக் குழுவை அரசு நியமிக்க வேண்டும். இந்தக் குழு ஆய்வு செய்து புதிய ஊதிய விகித்தை நியமிக்கும் வரை கடந்த 2011 மற்றும் 2013-ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணையை நடமுறைப்படுத்தக் கூடாது. அரசாணை பிறப்பித்த பிறகு ஊதிய அளவு குறைந்த ஊழியர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொடக்கக்கல்வித்துறையில் முதலில் 1.1.2013ன் படி பதவி உயர்வு கலந்தாய்வு நடத்த இயக்குனரிடம் திரு.செ.முத்துசாமி வலியுறுத்தல்

இன்று மாலை தொடக்கக் கல்வி இயக்குனர் அவர்களை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு.செ.முத்துசாமி அவர்கள் தொடர்பு கொண்டு 2013-14ம் ஆண்டுக்கான பதவி உயர்வு கலந்தாய்வின் நிலை பற்றி கேட்டறிந்தார். அப்பொழுது இயக்குனர் அவர்கள் கலந்தாய்வு நடத்துவதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக தெரிவித்தார். அவற்றில் ஏற்கனவே பட்டதாரி ஆசிரியர்களாக பணிபுரிபவர்கள் முதலில் பட்டதாரி ஆசிரியர் மாறுதல் வழங்கிவிட்டு பின்பு பதவி உயர்வு நடத்துங்கள் என்று வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு-அரசிடம் தொடக்கக்கல்வி இயக்குனர் தெளிவுரை கேட்பு

இன்று  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட தொடக்கக்கல்வித்துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு  கலந்தாய்வு நடைபெறாததற்கான நிலையை தெளிவுபெற நமது பொதுச்செயலர் திரு.செ.முத்துசாமி அவர்கள்,தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை தொடர்பு கொண்டு கேட்டு அறிந்தார்.
                        பட்டதாரி ஆசிரியர் சங்கம் ,முதலில் பணியிட மாறுதல் கலந்தாய்வு ,(ஒன்றியத்துக்குள்,ஒன்றியம் விட்டு ஒன்றியம் ,மாவட்டம் விட்டு மாவட்டம் ஆகிய பணிமாறுதல்)நடத்திய பின்பே பதவி உயர்வு கலந்தாய்வு நடத்தப்படவேண்டும் என கோரிக்கை வைத்து இயக்குனர் மற்றும் கல்வித்துறை செயலர் அவர்களிடம் முறையிட்டுள்ளனர்.எனினும் இது குறித்து காலமின்மையால் அவ்வாறு நடத்த இயலாது என்பதை கூறிய பின்பும் முடிவு எட்டப்படாததால் இயக்குனர் அவர்கள் அரசிடம் நிலைமையை விவரமாக அறிக்கையாக எழுதி அரசிடம் தெளிவுரை கேட்டு கடிதம் எழுதியுள்ளார்.அரசின் தெளிவுரைக்கு பின்பே கலந்தாய்வு குறித்து முடிவெடுக்கப்படும் என  இயக்குனர் தெரிவித்துள்ளார்

Election Commission asked Trs Details for 2014 Loksaba Election Duty.

தமிழக அரசின் 20 துறைகளில் 52 பிரிவுகளில் பணியாற்றும் அரசு ஊழியர் சம்பளத்தை சரியாக நிர்ணயம் செய்யவேண்டும்: ஐகோர்ட் உத்தரவு

அரசு ஊழியர்களின் சம்பள குறைபாடுகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் புதிய கமிட்டி ஒன்றை அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு ஊரூ.யர் தியாகராஜன் என்பவர் உட்பட நூறு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:அரசு ஊரூ.யர்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்யும் போது பல்வேறு குறைபாடுகள் உள்ளது. 6வது ஊதிய கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் சில குறைபாடுகள் உள்ளதால் அதை ஆய்வு செய்ய அரசு கமிட்டியை அமைத்தது. இந்த கமிட்டி சிலருக்கு அதிகமாக சம்பளம் நிர்ணயம் செய்து விட்டது. இதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது.

6வது ஊதியக் குறைகளை நிவர்த்தி செய்ய நீதிபதி தலைமையில் குழு; அரசாணை பிறப்பித்த பிறகு ஊதிய குறைந்த ஊழியர்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என உத்தரவு

தமிழக அரசுப் பணியாளர்களின் ஆறாவது ஊதியக் குழு தொடர்பான குறைகளை நிவர்த்தி செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஏ.எஸ்.வெங்கடாசலமூர்த்தி தலைமையில் குழுவை ஏற்படுத்த தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஊதியக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட ஊதியத்தை மாற்றி அமைத்து, கடந்த 2011-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 20-ஆம் தேதி மற்றும் கடந்த 2013-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22-ஆம் தேதி அரசாணைகள் வெளியிடப்பட்டன. இந்த அரசாணையால் தங்களின் ஊதியம் வெகுவாக குறைந்துள்ளது. தங்களின் கிரேடுகள் மாறியுள்ளன எனக் கூறி அந்த அரசாணைகளை ரத்து செய்யுமாறு குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தனர்.

பி.எஸ்.என்.எல்., பிராட்பேண்ட் சேவைக்கான கட்டண உயர்வு இன்று முதல் அமல்: 24 ரூபாய் முதல், 350 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

நாட்டின் பொதுத் துறை, தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான, பி.எஸ்.என்எல்., லேண்ட்லைன் மற்றும் பிராட்பேண்ட் சேவைகளுக்கான கட்டணத்தை உயர்த்தியுள்ளது.

சி.பி.எஸ்.இ., பொது தேர்வு இன்று துவக்கம்

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, இன்று துவங்குகிறது.
தமிழகம், ஆந்திரா, மகாராஷ்டிரா, புதுச்சேரி, கோவா உள்ளிட்ட மாநிலங்கள் அடங்கிய, சென்னை மண்டலத்தில், 1,256 பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவியர், தேர்வில் பங்கேற்கின்றனர்.

மார்ச் 6ல் ஆசிரியர்கள் 'ஸ்டிரைக்': ஒரு லட்சம் பேர் பங்கேற்கின்றனர்

மார்ச் 6 ல் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஒரு லட்சம் பேர், வகுப்புகளை புறக்கணித்து, போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்துள்ளனர். மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உட்பட ஏழு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியினர், பிப்., 25, 26 ல் போராட்டம் நடத்தினர்.

ஆசிரியர் சங்க நிர்வாகிகள் மீது அதிகாரிகள் திடீர் பாசமழை


லோக்சபா தேர்தல் நெருங்குவதால்,பல்வேறு ஆசிரியர் சங்க நிர்வாகிகளும், கோரிக்கைகளை வலியுறுத்தி, பேரணி, ஆர்ப்பாட்டம் என, தீவிரம் காட்டி வருகின்றனர்.

மத்திய இடைநிலை ஆசிரியருக்கு இணையாக, தமிழக இடைநிலை ஆசிரியருக்கு சம்பளம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தகோருவது உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஆறு ஆசிரியர் சங்கங்கள் இணைந்து, வரும், 6ம் தேதி, ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்யப்போவதாகஅறிவித்துஉள்ளன.

தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு: முதல்வர் அறிவிப்பு.

தொடக்க வேளாண் கூட்டுறவுசங்க ஊழியர்களுக்கு ஊதியஉயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. நிதியுதவிபெறாத 5 ஆண்டுகள் லாபத்தில் இயங்கும் சங்கங்களுக்கு 12 சதவீதம் ஊதிய உயர்வு வழங்கப்படும் என்றும் இந்த ஊதிய உயர்வு
2013 ஏப்ரல் மாதம் முதல் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:விவசாயிகளின் கடன் சுமையையும், வட்டிப் பளுவையும் குறைக்கும் வகையிலும், இடைத்தரகர்களின் பிடியிலிருந்து விவசாயிகளைக் காப்பாற்றவும் ஏற்படுத்தப்பட்டவை கூட்டுறவு இயக்கங்கள். இதன் அடிப்படையில், தமிழ்நாடு தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், விவசாயிகளுக்குத் தேவையான குறுகிய காலப் பயிர்க்கடன்,

50 சதவீத அகவிலைப்படியை அடிப்படை சம்பளத்துடன் இணைப்பதற்கு பரிந்துரை

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 10 சதவிகிதம் உயர்த்துதல் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகள் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளன. மக்களவைத் தேர்தலுக்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ள நிலையில், அதற்கு முன்பாக, பல்வேறு முக்கிய முடிவுகளை எடு்ப்பதற்காக அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்றது.

அரசு ஊழியர் சம்பள நிர்ணய குறைபாடுகள் புதிய ஆய்வு கமிட்டி ஐகோர்ட் உத்தரவு


அரசு ஊழியர்களின் சம்பள குறைபாடுகளை ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் புதிய கமிட்டி ஒன்றை அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரசு ஊரூ.யர் தியாகராஜன் என்பவர் உட்பட நூறு பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில் கூறியிருப்பதாவது:அரசு ஊரூ.யர்களுக்கு சம்பளம் நிர்ணயம் செய்யும் போது பல்வேறு குறைபாடுகள் உள்ளது. 6வது ஊதிய கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில் சில குறைபாடுகள் உள்ளதால் அதை ஆய்வு செய்ய அரசு கமிட்டியை அமைத்தது. இந்த கமிட்டி சிலருக்கு அதிகமாக சம்பளம் நிர்ணயம் செய்து விட்டது. இதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளது.

எனவே கமிட்டியை ரத்து செய்யவேண்டும். இதுதொடர்பாக எடுத்த முடிவுகளை ரத்து செய்ய வேண்டும். உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையில் புதிய கமிட்டியை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் வழக்கில் கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் பால்வசந்தகுமார், தேவதாஸ் ஆகியோர் விசாரித்து நேற்று அளித்த தீர்ப்பு: அரசு ஊழியர்களின் சம்பளம் நிர்ணய குறைபாடுகளை ஆய்வுசெய்ய முன்னாள் நீதிபதி வெங்கடாசல மூர்த்தி தலைமையில் ஒரு கமிட்டியை அரசு 3 வாரத்தில் நியமிக்க வேண்டும். இதில் முதன்மை செயலாளர் அந்தஸ்த்தில் உள்ள 2 ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் பெற வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டம் திருவண்ணாமலை வட்டார தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி க்கிளையினை மேம்படுத்தும் பொருட்டு புதிய அமைப்பாளர் நியமனம்


பிளஸ் டூ தேர்வு: தேர்வு அறையில் நடந்துகொள்வது எப்படி?

பிளஸ் டூ தேர்வு மார்ச் 3-ஆம் தேதி தொடங்குகிறது. எதிர்காலப் படிப்பை நிர்ணயிக்கும் முக்கியத் தேர்வான பிளஸ் டூ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இதுவரை வினா-விடை வழங்கி வழிகாட்டிய ‘புதிய தலைமுறை கல்வி’, தேர்வு எழுதுவதற்கும் வழிகாட்டுகிறது. பிளஸ் டூ தேர்வு எழுதும் மாணவர்களுக்குப் பயனுள்ள யோசனைகள் இதோ...

தேர்வுக்கு முதல் நாளிலேயே தேவையான பேனா, பென்சில், ஸ்கேல், ரப்பர், ஜாமெண்ட்ரி பாக்ஸ் போன்றவற்றை எடுத்து வைத்துக் கொள்ளவும். ஹால் டிக்கெட்டை மறந்து விடாதீர்கள்!

50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்க மத்திய அமைச்சரவை அனுமதி THE NEW INDIAN EXPRESS NEWS


பிரதமர் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 10 சதவீதம் உயர்த்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் சேர்க்கவும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.


The Centre today raised dearness allowance to 100 per cent, from 90 per cent, benefiting its 50 lakh employees and 30 lakh pensioners.
The government also approved the terms of reference of the 7th Pay Commission, a move which would pave the way for merger of 50 per cent DA with the basic pay.
According to an official, now the Commission can suggest the merger in its interim report. The 50 per cent DA merger with basic pay will roughly increase the gross salaries of central government employees by around 30 per cent.

"The Union Cabinet today approved the proposal to release an additional instalment of DA and dearness relief (DR) to pensioners with effect from January 1, 2014, in cash, but not before the disbursement of the salary for the month of March 2014 at the rate of 10 per cent increase over the existing rate of 90 per cent," said an official statement.

6வது ஊதியக் குழு பரிந்துரைகளில் உள்ள குறைகளை நீக்க மீண்டும் ஒரு குழு அமைக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 6வது ஊதியக் குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தியதில் பல துறைகளில் ஊதிய முரண்பாடுகள் ஏற்பட்டது. இதையடுத்து ஊதிய முரண்பாடுகளை சரிசெய்ய ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தி வந்தன.

டிட்டோஜாக் உயர்மட்டக் கூட்டம் மார்ச்-3 க்கு பதிலாக 4ந்தேதி கூடும்-உயர்மட்டக்குழு முடிவு

டிட்டோஜாக்கின் உயர்மட்டக்குழுக்கூட்டம் ஏர்கனவே மார்ச் 3ந்தேதி கூடுவதாக  அறிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னையில் அக்கூட்டம் மார்ச் 4 ந்தேதி கூடும் என  டிட்டோஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் முடிவாற்றி உள்ளதாக

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி -குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ-1000- மத்திய அமைச்சரவை முடிவு

சாற்றுமுன் கூடிய மத்திய அமைச்சரவை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி சந்தாதாரர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதிய வரம்பை ஆயிரம் ரூபாயாக உயர்த்தவும் அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்தது. இதன் மூலம் உடனடியாக 28 லட்சம் சந்தாதாரர்கள் பலன் அடைவார்கள்.இபிஎஸ் - 95 திட்டத்தின் கீழ் வரும் சந்தாதாரர்களுக்கு இப்பலன் கிடைக்கும்.இத்திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசுக்கு வரும் நிதி ஆண்டில் மட்டும் 1,217 கோடி ரூபாய் கூடுதலாக தேவைப்படும்.

மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு

சாற்றுமுன் கூடிய மத்திய அமைச்சரவை மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு க்கு ஒப்புதல் அளித்துள்ளது.மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு இன்று மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. 90 சதவீதத்தில் இருந்து 100 சதமாக உயரும். இதன் மூலம் 50 லட்சம் ஊழியர்கள், 30 லட்சம் ஓய்வூதியர்கள் பயன்பெறுவர். 

இன்று தேசிய அறிவியல் தினம்

அறிவியல் இந்த ஒற்றை வார்த்தையில் தான் உலகமே அடங்கியிருக்கிறது. நமது அன்றாட நடவடிக்கைகள், ஒவ்வொன்றிலும் அறிவியல் மறைந்திருக்கிறது. தமிழகத்தை சேர்ந்த சி.வி.ராமன், "ராமன் விளைவு' என்ற ஒளி சிதறல் நிகழ்வை 1928 பிப்., 28ம் தேதி கண்டுபிடித்தார். "நீர், காற்று போன்ற தடையற்ற ஊடகத்தில் ஒளி ஊடுறுவும் போது, சிதறல் அடைந்து, அலை நீளம் மாறுகிறது.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கு ஒருநாள் சம்பளம் பிடித்தம்

கோரிக்கைகளை வலியுறுத்தி விடுப்பு எடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 1,300 தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்படவுள்ளதாக, கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும், மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான சம்பளம் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சில சங்கங்களைச் சேர்ந்த தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பிப்ரவரி 25-ஆம் தேதி உள்ளிருப்பு போராட்டமும், பிப்ரவரி 26-ம்தேதி ஒருநாள் விடுப்பு போராட்டத்திலும் ஈடுபட்டனர்.

பள்ளியின் முதல்வர் முதல் ஓ.ஏ., வரை தேர்வு மையத்தில் யாருக்கும் அனுமதி கிடையாது : தனியார் பள்ளிகளுக்கு, தேர்வு துறை, "செக்'

கடந்த காலங்களில், தேர்வு மையத்தின், முதன்மை கண்காணிப்பாளராக, பள்ளியின் முதல்வரே இருப்பார். மேலும், தேர்வு அலுவலர்களுக்கு உதவுவதற்காக, பள்ளியின், உதவியாளர் (ஓ.ஏ.,) இருப்பார்.

தற்போது, பள்ளி முதல்வரில் இருந்து, ஓ.ஏ., வரை, எவருக்கும் அனுமதி கிடையாது. வேறு பள்ளியைச் சேர்ந்த ஆசிரியர், முதன்மை கண்காணிப்பாளராக நியமிக்கப்படுவார். தேர்வு துவங்குவதற்கு முன், பள்ளி வளாகத்திற்குள், நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் கூட, நுழைய அனுமதி கிடையாது.

லோக்சபா தேர்தல் பணியில், "வெப் கேமராக்களை' இயக்கும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்த முடிவு

நீலகிரி லோக்சபா தேர்தல் பணியில், "வெப் கேமராக்களை' இயக்கும் பணியில் மாணவர்கள் ஈடுபடுத்தப்படுவர்' என, மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர் கூறியதாவது: நீலகிரி மாவட்டத்தில், லோக்சபா தேர்தல் பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன.

பிளஸ் 2 தேர்வு: விடைத்தாள்களை எடுத்துவர புதிய முறை

பொதுத்தேர்வு விடைத்தாள் கட்டுகள் தொலைவதைத் தடுக்க, தபால் துறைக்குப் பதிலாக பள்ளிக் கல்வித் துறை வாகனங்களிலேயே விடைத்தாள்களைக் கொண்டுவர அரசுத் தேர்வுகள் இயக்ககம் முடிவு செய்துள்ளது.

கடந்த ஆண்டு பிளஸ் 2 விடைத்தாள்கள் மற்றும் பத்தாம் வகுப்புத் தேர்வு விடைத்தாள்களை எடுத்துவரும்போது அவை தொலைந்துபோயின. இதுபோன்ற சம்பவங்களைத் தடுக்க இந்த ஆண்டு தபால்

பள்ளி மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர் அதிரடி கைது

நாமக்கல் அருகே, பள்ளி மாணவியை, பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியரை, போலீஸார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூர் அடுத்த சப்பையாபுரம் அரசு உயர் நிலைப்பள்ளி சமூக அறிவியல் ஆசிரியர் அருண்குமார், 27. அவர், கடந்த டிசம்பர் மாதம், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவர் மற்றும் மாணவியை அழைத்துக் கொண்டு, நாமக்கல் தனியார் கல்லூரியில் நடந்த கருத்தரங்குக்குச் சென்றார்

ஒரு பக்கம் சலுகை; மறுபக்கம் மதிப்பெண் பறிப்பு: டி.இ.டி., தேர்வர்கள் குமுறல்

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), தேர்ச்சிக்குரிய மதிப்பெண்ணில், 5 சதவீத குறைப்பு சலுகையை வழங்கிவிட்டு, மறுபக்கம், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் அளவில், 3 மதிப்பெண்ணை குறைத்திருப்பது, தேர்வர்கள் மத்தியில், குமுறலை ஏற்படுத்தி உள்ளது. டி.இ.டி., தேர்வில், மொத்தம் உள்ள, 150 மதிப்பெண்ணில், தேர்ச்சி பெற, 60 சதவீதமான, 90 மதிப்பெண் எடுக்க வேண்டும் என்ற விதிமுறை முதலில் இருந்தது. சமீபத்தில், இந்த அளவை, இட ஒதுக்கீடு பிரிவினருக்கு, 55 சதவீதமாக குறைத்து, முதல்வர் அறிவித்தார். 5 சதவீத சலுகையினால், 82 மதிப்பெண் பெற்றவரில் இருந்து, அனைவரும், தேர்ச்சி பெற்றனர்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழகம் -உண்மை தன்மை அறிய ரூ 500 செலுத்தவேண்டும் - தேர்வு கட்டுபாட்டு அலுவரின் கடிதம்

CLICK HER   E

Tamil Nadu Teacher Eligibility Test 2013 - Click Here for Provisional List of Candidates called for Certificate Verification due to 5% Relaxation in the qualifying marks

                                   TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013

CLICK HERE FOR PAPER I DISTRICT WISE PROVISIONAL MARK LIST WITH 5% RELAXATION in QUALIFYING MARKS
CLICK HERE FOR PAPER II DISTRICT WISE PROVISIONAL MARK LIST WITH 5% RELAXATION in QUALIFYING MARKS
CLICK HERE FOR PAPER I CALL LETTER, BIO DATA FORM AND IDENTIFICATION CERTIFICATE
CLICK HERE FOR CERTIFICATE VERIFICATION CENTRE LIST FOR PAPER I

டி.இ.டி., சிறப்பு தேர்ச்சி பெயர் பட்டியல் வெளியீடு

ஐந்து சதவீத சலுகை அடிப்படையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற தேர்வர்களின் பெயர் பட்டியலை மாவட்ட வாரியாக, ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. டி.ஆர்.பி.,யின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் டி.இ.டி., முதல் தாள் (இடைநிலை ஆசிரியர்), இரண்டாம் தாள் (பட்டதாரி ஆசிரியர்) ஆகியவற்றில், தேர்ச்சி பெற்றவரின் பெயர் பட்டியல் 32 மாவட்டங்களுக்கும் தனித்தனியே வெளியிடப்பட்டுள்ளது.

நாளைய (28.02.2014) மத்திய மந்திரிசபைக் கூட்டத்தில் என்னென்ன முடிவுகள் மேற்கொள்ளப்படும்? - Cabinet Meet on Friday to Clear Populist Measures

By PTI - NEW DELHI

Published: 27th February 2014 09:04 PM
Last Updated: 27th February 2014 09:04 PM

The Union Cabinet tomorrow will decide on a series of populist measures and some ordinances on anti-graft and protection of rights bills at a meeting possibly the last before the model code of conduct could come into force for coming Lok Sabha polls.
 

A proposal to increase the poll expenditure cap up to Rs 70 lakh per contestant from Rs 40 lakh now is also on the table of the cabinet meeting.

The cabinet will also decide on hiking dearness allowance to 100 per cent from existing 90 per cent, benefiting 50 lakh employees and 30 lakh pensioners.

தேர்வுப்பணி... தேர்தல் பணி... ஆசிரியர்கள் புலம்பல்

ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு 42647 பேர் தேர்ச்சி

ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், தாள் 1 ல் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் மார்ச் 12ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்க்கும்பணி துவங்கவுள்ளது.
தற்போது 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் 42647 பேர் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

10 ஆம் வகுப்புக்கு முப்பருவ முறை கல்வித் திட்டம் இல்லை


வாசிப்புத்திறன்,எழுதுதல் திறன்,கணித செயல்பாடுகள் கணக்கீடு முறை -வழிகாட்டுக்குறிப்புகள்

இங்கே கிளிக் செய்து பதிவிறக்கம் செய்யவும்

டிட்டோஜாக் திருவண்ணாமலை ஆரணி வட்டாரக்கிளை போராட்ட அழைப்பு

யாருக்கு வாக்களிப்பது? குழப்பத்தில் இடைநிலை ஆசிரியர்கள்

யாருக்கு வாக்களிப்பது?பெரும் குழப்பத்தில் 75000 இடைநிலை ஆசிரியர்களும் அவரது குடும்பத்தார்களும் உள்ளனர்.
 
கடந்த தி.மு .க.ஆட்சியில் ஆறாவது ஊதியக்குழுவில் அவர்களுக்கு ஏற்பட்ட இழப்புகளை சுட்டிக்காட்டி போராட்டங்களைச் செய்தார்கள் ஆனால் அவ்வரசு அவர்களை கண்டுகொள்ளவில்லை அதனால் வெறுப்பில் இருந்த இடைநிலை ஆசிரியர்களையும் அரசு ஊழியர்களையும் கவரும் வண்ணம் அப்போதைய எதிர்க்கட்சி இப்போதைய ஆளுங்கட்சியான அ.தி.மு .க தன்னுடைய தேர்தல் அறிக்கையில் ஊதியக் குழு முரண்பாடுகள் நீக்கப்படும் பழைய ஓய்வூதியத் திட்டம் கொண்டு வரப்படும் என்று அறிவித்து அவர்களின் நம்பிக்கையைப் பெற்றது.

பாராளுமன்ற தேர்தல் தேதி மார்ச் 7 க்கு பிறகு அறிவிக்கப்படும்

சுயநிதிக் கல்லூரிகளில் படிக்கும் தலித் கிறிஸ்தவ மாணவர்களுக்கும் கட்டணங்கள் ரத்து

சுயநிதி கல்லூரிகளில் அனைத்துவிதமான படிப்புகளிலும் படிக்கும் கிறிஸ்தவராக மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு 2013-14 கல்வியாண்டு முதல் கல்விக் கட்டணம் உள்ளிட்ட அனைத்துக் கட்டணங்களையும் அரசே வழங்கும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை பிறப்பித்துள்ள அரசாணை விவரம்:

TNTET 2013 - Provisional List of Candidates called for Certificate Verification due to 5% Relaxation in the qualifying marks.

TAMIL NADU TEACHERS ELIGIBILITY TEST - 2013
CLICK HERE FOR PAPER I DISTRICT WISE PROVISIONAL MARK LIST WITH 5% RELAXATION in QUALIFYING MARKS
CLICK HERE FOR PAPER II DISTRICT WISE PROVISIONAL MARK LIST WITH 5% RELAXATION in QUALIFYING MARKS
CLICK HERE FOR PAPER I CALL LETTER, BIO DATA FORM AND IDENTIFICATION CERTIFICATE

Dated: 26-02-2014
Member Secretary

ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் செயல்படுத்தப்படும்: அதிமுக தேர்தல் அறிக்கை

ஒரு திறமையான அரசாங்கத்திற்கு முதுகெலும்பாக இருப்பவர்கள் அரசு ஊழியர்கள். மத்திய அரசு ஊழியர்களுக்கான ஏழாவது மத்திய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும்.
இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில், தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கும் ஊதிய விகிதங்கள் மாற்றி அமைக்கப்படும். இவ்வாறு   அதிமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை 27.02.2014 மத்திய அமைச்சரவைக் கூட்டம்: 50% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைப்பு, 10% அகவிலைப்படி உயர்வு, ஓய்வு பெறும் வயது 62 ஆக அதிகரிப்பு போன்ற அறிவிப்புகள் வெளியாகும் என எதிபார்ப்பு

மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 62ஆக உயர்த்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. மார்ச் 1ந் தேதியிலிருந்து இந்த உயர்வு அமலுக்கு வரும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தற்போது 60ஆக உள்ள ஓய்வு பெறும் வயதில் 2 வருடங்கள் அதிகரிக்கும் இந்த முடிவு வியாழன் அன்று நடக்க உள்ள மத்திய அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஓய்வு பெறும் வயதை உயர்த்துவது பற்றிய முழுமையான விவரங்கள் 7வது ஊதியக் குழு பரிந்துரையில் இடம்பெறும் என்று தெரிவித்துள்ள இந்த வட்டாரங்கள் அது வரை ஊதியம் நிர்ணயம் உள்ளிட்ட விவகாரங்களில் இடைக்கால நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்தனர். இந்த ஆண்டு பிப்ரவரி 28ந் தேதியோடு ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு இந்த வயது உயர்வு பொருந்தாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிளஸ்2 தேர்வு மையத்தில் தரைவழி தொலைபேசியை மட்டுமே பணியாளர்கள் பயன்படுத்த தேர்வு துறை இயக்குநரகம் உத்தரவு

பிளஸ்2 தேர்வில் முறைகேடுகளை தவிர்ப்பதற்காக கைபேசிகளை நிறுத்தம் செய்து பாதுகாப்பாக வைப்பதோடு, அவசர தொடர்புக்கு தரைவழி தொலைபேசியை மட்டுமே பயன்படுத்துவதற்கு அரசு தேர்வுத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் பிளஸ்2 அரசு பொதுத் தேர்வு மார்ச் 3-ம் தேதி தொடங்கி, தொடர்ந்து 25-ம் தேதி வரையில் நடத்தப்பட இருக்கிறது. இத்தேர்வை மாநிலத்தில் மொத்தம் 12 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதுகிறார்கள். இதில், விருதுநகர் மாவட்டத்தில் விருதுநகர்- 8177 பேரும், ஸ்ரீவில்லிபுத்தூர்-7296 பேரும், அருப்புக்கோட்டை-7216 பேரும் என மொத்தம் 22689 மாணவ, மாணவிகள் பங்கேற்க இருக்கிறார்கள்.

பள்ளிகளை தரப்படுத்த தலைமையாசிரியர்களுக்கான பயிற்சி!


பள்ளிக் கல்வியை தரப்படுத்தும் பொருட்டு, மிகப்பெரிய அளவிலானதொரு பள்ளி தலைமைத்துவத்திற்கான பயிற்சியை, மத்திய மனிதவள அமைச்சகம் தொடங்கியுள்ளது. இதன்மூலம், நாடெங்கிலுமுள்ள 12 லட்சம் தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மனிதவளத்துறை வட்டாரங்கள் கூறுவதாவது: இந்த திட்டத்தின் நோக்கம், கல்வித் திட்டமிடுதல் மற்றும் நிர்வாகத்திற்கான தேசிய பல்கலைக்கழகம் தனது தேசிய மையத்தின் மூலமும், கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான மாநில கவுன்சில் போன்ற மாநில அளவிலான நிறுவனங்களின் மூலமாகவும் பயிற்சியளித்து பள்ளிகளை வலுப்படுத்துவதாகும்.

விண்ணப்ப விற்பனை மூலம் ஆசிரியர் தேர்வு வாரியம் ரூ.54 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டியுள்ளது

ஆசிரியர் பணி நியமனத்துக்கான போட்டித் தேர்வுகள், விண்ணப்ப விற்பனை மூலம் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு ரூ.54 கோடிக்கு மேல் வருமானம் கிடைத்துள்ளது.
அரசுப் பள்ளிகளுக்கான இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், உதவி தொடக்கக் கல்வி அதிகாரிகள், அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள், அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள், மூத்த விரிவுரையாளர்கள், அரசு சட்டக் கல்லூரி உதவி பேராசிரியர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர்.

மாணவர்கள் முன் வினாத்தாள் கவர் பிரிக்க உத்தரவு:தேர்வு துறை கிடுக்கிப்பிடியால் பலரும் அதிர்ச்சி.

பிளஸ் 2 வினாத்தாள், ஒவ்வொரு வகுப்பறைக்கும் தேவையான அளவு, 'கவர்' செய்யப்பட்டு உள்ளதால், தேர்வெழுதப்படும் மாணவர்கள் முன்னிலையில் பிரிக்க, உத்தரவிட்டு உள்ளது. இதனால்,
முன்கூட்டியே வினாத்தாள், 'அவுட்' ஆவதற்கு வாய்ப்பில்லை என, கல்வித் துறை அலுவலர்கள் தெரிவிக்கின்றனர். தேர்வுத் துறையின்கிடுக்கிப்பிடியால், சில தனியார் பள்ளிகள் கலக்கம் அடைந்துள்ளன.பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 3ம் தேதி நடக்கவுள்ளது.

தொடக்க கல்வி – பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு: இவ்வார இறுதியில் நடைபெற வாய்ப்பு – பொதுச் செயலாளர் செ.முத்துசாமி தகவல்.



இன்று(26.02.2014) காலை தொடக்க கல்வி இயக்குநர் முனைவர்.இளங்கோவன் அவர்களை நமது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் செ.முத்துசாமி அவர்கள் தொலை பேசியில் தொடர்பு கொண்டு, தொடக்க கல்வி துறையில் பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு குறித்தான தற்போதிய நிலவரம் குறித்து கேட்டறிந்தார்.
  தொடக்க கல்வி இயக்குநர் அவர்கள் அனைத்து உதவி தொடக்க கல்வி அலுவலர்களிடமிருந்தும், பட்டதாரி ஆசிரியர் பாடவாரியான

தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்கள் இன்று வேலை நிறுத்தம் பாதிப்பு இருக்காது: அதிகாரி தகவல்

ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.  இது குறித்து தொடக்க கல்வி இயக்குநர் இளங்கோவன் கூறுகையில், இந்த வேலை நிறுத்தம் அறிவித்துள்ளது ஒரு சங்கத்தை சேர்ந்தவர்கள் தான். அதனால் பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றார்.

கடைசி நேரத்தில் 10ம் வகுப்பு செய்முறை தேர்வு அறிவிப்பு

பத்தாம் வகுப்பு செய்முறை தேர்வு அறிவிப்பை, கடைசி நேரத்தில், தேர்வுத்துறை அறிவித்ததால், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், பதிவு எண்களை, இணையதளத்தில் வெளியிடுவதில், கால தாமதம் ஏற்பட்டதால், செய்முறை தேர்வு மதிப்பெண்ணை, பதிவு செய்வதற்கான படிவங்களை, இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்ய முடியாமல்,

ஆசிரியர் தவித்தனர். இதன்மூலம், பிரதான எழுத்து தேர்வு துவங்குவதற்கு முன்பே, குளறுபடி கணக்கை, தேர்வுத்துறை துவக்கி உள்ளது.
25 மதிப்பெண்:பத்தாம் வகுப்பு மாணவ, மாணவியர் அனைவரும், அறிவியல் பாடத்தில், செய்முறை தேர்வை செய்ய வேண்டும். இதற்கு, 25 மதிப்பெண் ஒதுக்கப்பட்டு உள்ளது. வழக்கமாக, செய்முறை தேர்வு குறித்த அறிவிப்பை, இரண்டு வாரங்களுக்கு முன்பே, தேர்வுத்துறை வெளியிடுவது வழக்கம். அப்போது தான், மனதளவில், மாணவர்கள், தேர்வுக்கு தயாராவர்.
கடைசி நேரத்தில், தேர்வு தேதியை அறிவித்தால், மாணவர் மத்தியில், பதற்றம் தான் ஏற்படும்.
அதிர்ச்சி:இதை அறிந்தும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு அறிவிப்பை, தேர்வுக்கு முதல் நாள், தேர்வுத்துறை அறிவித்துள்ளது. சென்னை, காஞ்சிபுரம் உள்ளட்ட பல மாவட்டங்களில், நேற்று, செய்முறை தேர்வு துவங்கியது. ஆனால், இது குறித்த அறிவிப்பை, நேற்று முன்தினம் தான், மாணவர்களுக்கு, ஆசிரியர் தெரிவித்தனர்.
'நாளைக்கு செய்முறை தேர்வு' என, ஆசிரியர் கூறியதை கேட்டதும், மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
மாணவர்களுக்கான பதிவு எண்களும், நேற்று முன்தினம் தான், தேர்வுத்துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டன.தவிப்பு:இதனால், அவசர அவசரமாக, பதிவு எண்களை, பதிவிறக்கம் செய்து, மாணவர்களுக்கு அறிவித்து உள்ளனர்.இதனால், செய்முறை தேர்வு மதிப்பெண் விவரங்களை பதிவு செய்வதற்கான படிவத்தை, முன்கூட்டியே, இணையதளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்ய முடியாமலும், ஆசிரியர்கள் தவித்தனர்.பிரதான எழுத்து தேர்வு துவங்குவதற்குள், குளறுபடி கணக்கை, தேர்வுத்துறை துவக்கி உள்ளது.

கீ-போர்டில் ஒளிந்திருக்கும் கிருமிகள்

நாம் எப்போதெல்லாம் கை கழுவுகிறோம்? சாப்பிடுவதற்கு முன்னும் பின்னும், கழிவறையைப் பயன்படுத்திய பிறகு, குப்பைகளைச் சுத்தம் செய்த பிறகு எனத் தேர்ந்தெடுத்த சில வேலைகளைச் செய்யும்போது மட்டும் சுத்தமாக இருக்க வேண்டுமென எதிர்பார்த்து இப்படிச் செய்கிறோம்.
அதேநேரம் கம்ப்யூட்டரையோ செல்போனையோ பயன்படுத்திய பிறகு நாம் கைகளைக் கழுவுகிறோமா? அதற்கும் சுத்தத்துக்கும் என்ன சம்பந்தம் என்று நினைக்கலாம். ஆனால், கழிப்பறையைவிட ஆறு மடங்கு அதிகமான கிருமிகள் நாம் தினசரிப் பயன்படுத்தும் கம்ப்யூட்டரிலும் செல்போனிலும் இருப்பதாக ஆராய்ச்சிகள் சொல்கின்றன.
அழுக்குப் படிய வாய்ப்பே இல்லாத, அப்படியே அழுக்கடைந்தாலும் அடிக்கடி சுத்தப்படுத்துவதாக நாம் நினைக்கிற எலெக்ட்ரானிக் பொருட்களில்தான் கிருமிகள் அதிகமாக இருக்கின்றன. கம்ப்யூட்டர் கீ-போர்டில் பாக்டீரியா இருப்பதே தெரியாமல், நாமும் அதன் மீது விரல்களை நடனமாட விடுவோம். பிறகு அதே கையுடன் செல்போனை எடுத்துப் பேசுவோம். கண்ணைக் கசக்குவோம். சில சமயம் கம்ப்யூட்டரில்தானே வேலை பார்க்கிறோம் என்ற அசட்டையாகக் கை கழுவாமல் சாப்பிட்டும் விடுவோம். கீ போர்டில் இருந்த கிருமிகள் அப்போது நம் உடலுக்குள் புகுந்து, தங்கள் வேலையைக் காட்டத் தொடங்கிவிடும்.

பள்ளி முதல் ஆராய்ச்சி படிப்பு வரை மத்திய அரசு உதவித்தொகை கிடைக்காமல் மாணவர்கள் தவிப்பு

 தமிழகத்தில் 2013-14ம் கல்வி ஆண்டில் 10, 11  மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி  மாணவர்கள் 7 லட்சத்து 23ஆயிரம் பேர்  மத்திய அரசின் கல்வி உதவித் தொகை கேட்டு  விண்ணப்பித்துள்ளனர். கல்வியாண்டின் இறுதி கட்டத்துக்கு வந்துவிட்ட நிலையில், தமிழக மாணவர்களுக்கு  வழங்க வேண்டிய ஸீ549 கோடி இன்னும் வழங்கப்படாமல் உள்ளது. ஆராய்ச்சி படிப்பை  (எம்.பிஎல், பி.எச்டி)

10ம் வகுப்பு தேர்வு நேர மாற்றம் கிராமப்புற மாணவர்களைப் பாதிக்கும்: கல்வியாளர்கள் கருத்து

பத்தாம் வகுப்பு தேர்வை வழக்கமான நேரமான காலை 10 மணிக்குப் பதிலாக 9.15 மணிக்குத் தொடங்குவது கிராமப்புற மாணவர்களைப் பெரிதும் பாதிக்கும் என தலைமையாசிரியர்களும் கல்வியாளர்களும் தெரிவித்தனர்.
பத்தாம் வகுப்புத் தேர்வு வரும் மார்ச் 26 முதல் ஏப்ரல் 9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்தத் தேர்வு வழக்கமான நேரத்தை விட 45 நிமிஷங்கள் முன்கூட்டியே 9.15 மணிக்குத் தொடங்கும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

கற்றல் குறைபாடு (DYSLEXIA) சாபமல்ல வரம்

துரு துரு கண்கள் மழழை ததும்பும் சொற்கள், அத்தனை கேள்விகள், அத்தனை குறும்புகள், இப்படித்தான் தொடங்குகிறது ஒவ்வொரு குழந்தையின் வாழ்க்கையும் குழந்தைகளின் மீதான ஆச்சரியங்கள் குறைவதற்குள்ளாகவே அவர்களை பள்ளிக்கு அனுப்புகிறோம். கற்றல் குறைபாடு உள்ள குழந்தைகள் பற்றி பள்ளி சென்ற பின்னர் தான் தெரிந்து கொள்ள முடிகிறது.

வாசித்தல், எழுதுதல், மற்றும் கணிதத்தில் குறைபாடுகள் கண்டறியப்பட்டாலும் இதற்கான காரணத்தை அறிய பெற்றோர் முயற்சிப்பதில்லை. காரணம் இதை பெரும்பாலான பெற்றோர் சாபமாக கருதுகின்றனர். சரியான வயதில் கண்டறிந்து சரி செய்து விட்டால் அந்தகுழந்தைகளின் மற்ற திறன்களை அழகாக மேம்படுத்திக் கொள்ள முடியும் என்கிறார் உளவியல் நிபுணர் தேவிப்பிரியா.

டி.இ.டி., தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு: தேர்ச்சி பெற்ற, 47 ஆயிரம் பேருக்கு, மார்ச், 12 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,), முதல்வர், 5 சதவீத சலுகை அளித்ததால் தேர்ச்சி பெற்ற, 47 ஆயிரம் பேருக்கு, மார்ச், 12 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) அறிவிப்பு:டி.இ.டி., தேர்ச்சி மதிப்பெண்ணில், 5 சதவீத சலுகை தரப்பட்டுள்ளது. இந்த மதிப்பெண் தளர்வுக்குப்பின், தேர்ச்சி பெற்ற அனைத்து தேர்வர்களுக்கும், மாவட்டங்களில், மார்ச், 12 முதல், சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. முதற்கட்டமாக, இடைநிலை ஆசிரியருக்கான முதல் தாளில், தேர்வு பெற்றவர்களுக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கும்.பின், பட்டதாரி ஆசிரியருக்கான இரண்டாம் தாளில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடக்கும்.

பள்ளிக்கல்வி - மேல்நிலைக்கல்வி - கணினி பயிற்றுநர் - 1880 தற்காலிக பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டது - 01.01.2014 முதல் 31.12.2014 வரை தொடர் நீட்டிப்பு - ஆணை வெளியிடப்படுகிறது.

DSE - 1880 COMPUTER INSTRUCTORS - POST CONTINUATION 01.01.2014 TO 31.12.2014 CLICK HERE...

அ.தே.இ - பத்தாம் வகுப்பு / பனிரெண்டாம் வகுப்பு தேர்வுப் பணிகளுக்கான கையேடு - மார்ச், 2014

DGE - HANDBOOK ON EXAMINATION DUTIES & RESPONSIBILITIES - MARCH, 2014 CLICK HERE...

10, 12-ம் வகுப்பு தேர்வுகளை கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள், இயக்குநர்கள் நியமனம்- தமிழக அரசு உத்தரவு

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 பொதுத் தேர்வுகளை மாவட்ட அளவில் கண்காணிக்க ஐஏஎஸ் அதிகாரிகள், பள்ளிக்கல்வித்துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதுதொடர்பாக பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் டி.சபீதா வெளியிட்ட அரசாணை யில் கூறியிருப்பதாவது:
மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடக்கவுள்ள 10-ம், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு பணிகளை கண்காணிக்க கீழ்க்கண்ட அதிகாரி கள் குறிப்பிட்ட மாவட்டங் களுக்கு நியமிக்கப் படுகின்றனர். தமிழ்நாடு பாடநூல் கழக நிர்வாக இயக்குநர் என்.மகேஸ்வரன் ஐஏஎஸ் – சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்கள்,

அதிமுக தேர்தல் அறிக்கை: முக்கிய அம்சங்கள்

மக்களவைத் தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டார்.
அதிமுக தேர்தல் அறிக்கையில் தமிழ் பிரதியை அமைச்சர் ஓ.பன்னீர் செல்வமும், ஆங்கிலப் பிரதியை விசாலாட்சி நெடுஞ்செழியன் பெற்றுக் கொண்டார்.
பின்னர் பேட்டியளித்த முதல்வர், தேர்தல் அறிக்கையில் நிறைய பக்கங்களும், அறிவிப்புகளும் இடம்பெற்றிருப்பதாக கூறினார்.
மேலும், ஒட்டுமொத்த இந்தியாவுக்கான வளர்ச்சித் திட்டங்கள் அதிமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றிருப்பதாக அவர் தெரிவித்தார்.
அதிமுக தேர்தல் அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களின் வளர்ச்சி என்பது இந்தியாவின் பொருளாதாரக் கொள்கைகளையும், வெளியுறவுக் கொள்கையையும், நிதிக் கொள்கையையும் பொருத்தே அமைவதால், தமிழகத்தின் உரிமைகளை மீட்டெடுக்க, தமிழகத்திற்குரிய பங்கினைப் பெற, மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கிட, அதிமுக அங்கம் வகிக்கும் ஓர் அரசு மத்தியில் அமைவது அவசியம்; அத்தியாவசியம்; காலத்தின் கட்டாயம். அப்போது தான் தமிழ்நாட்டின் உரிமைகள் நிலைநாட்டப்படும்.

ரூபாய் நோட்டைப் பற்றி தெரிந்து கொள்வோம்..


ஆசிரியர் தகுதித்தேர்வு: மார்ச் 12ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு துவக்கம்


ஆசிரியர் தகுதித்தேர்வில் 5 சதவீத மதிப்பெண் தளர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் மார்ச் 12ம் தேதி முதல் சான்றிதழ் சரிபார்க்கும் பணி துவங்கவுள்ளது.

ஊராட்சி ஒன்றிய பள்ளி ஆசிரியர் களின் பணி விதிகள்.(அரசாணை எண்-857/க.து.நாள்23.05.1981)

தொடக்கக் கல்வி - 25.2.2014 மற்றும் 26.2.2014 ஆகிய நாட்களில் போராட்டம், வேலை நிறுத்தப் போராட்டங்களில் கலந்து கொள்பவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மற்றும் ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் இயக்குனர் உத்தரவு

ரூ.5 லட்சம் வரை ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு வரிவிலக்கு: அஇஅதிமுக தேர்தல் அறிக்கை


அஇஅதிமுக தேர்தல் அறிக்கை விவரம்:



* நதிகளை தேசிய மயமாக்கி, நதிகள் இணைப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


* சில்லறை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு தடுக்கப்படும் என்றும் அதிமுக உறுதியளித்துள்ளது.


* மேலும் வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டிருக்கும் கருப்பு பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்.

அங்கீகரிகப்பட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெறவில்லை என்பதற்காக அரசு ஊழியர் மருத்துவ நல சிகிச்சை தொகையை மறுக்க கூடாது-ஐகோர்ட் உத்தரவு


தேர்தல் பணியில் பெண் ஊழியர்களுக்கு சலுகை

"டெட்' தேர்வில் மதிப்பெண் சலுகை: கூடுதலாக தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு ‍-- தின மணி


ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகையைத் தொடர்ந்து, கூடுதலாகத் தேர்ச்சி பெற்ற 46 ஆயிரம் பேருக்கு அடுத்த வாரத்தில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படலாம் எனத் தெரிகிறது.


இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு நடத்துவது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியம் தீவிரமாக ஆராய்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலில் ஆசிரியர் தகுதித் தேர்வு முதல் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும், பின்னர் இரண்டாம் தாளில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும் எனத் தெரிகிறது.

அகஇ சார்பில் நடத்தப்படும் பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி ஒத்திவைக்க இயக்குனர் உத்தரவு,

ஒரே பள்ளியில் 28 ஆண்டு பணி: ஆசிரியருக்கு தங்க பேனா, தங்க செயின், பைக், வழங்கி பாராட்டு விழா

ஒரே பள்ளியில், 28 ஆண்டு பணிபுரிந்து, ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு, முன்னாள் மாணவர்கள், பைக், தங்க பேனா, தங்க செயின் வழங்கி கவுரவித்தனர்.
அரியலூர் மாவட்டம், குமிலியம் பகுதியைச் சேர்ந்தவர், உடற்கல்வி ஆசிரியர், திருஞானசம்பந்தம். இவர், 30வது வயதில், சேலம் மாவட்டம், மேட்டூர், மேல்நிலை பள்ளியில், உடற்கல்வி ஆசிரியராக பணியில் சேர்ந்தார். தொடர்ந்து, 28 ஆண்டு, ஒரே பள்ளியில் பணி புரிந்த, ஆசிரியர் திருஞானசம்பந்தம், ஏராளமான மாணவர்களுக்கு சிறப்பாக பயிற்சி அளித்து, மாநில, தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகளில்

"கனெக்டிங் கிளாஸ் ரூம்' திட்டம் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்

"கனெக்டிங் கிளாஸ் ரூம்' திட்டம், தேர்வு பணி காரணமாக, நடைமுறைப்படுத்த முடியாத சூழல் உருவாகியுள்ளது. தமிழக அரசு பள்ளிகளில், வகுப்பு களை ஒருங்கிணைந்து பயிலும், கனெக்டிங் கிளாஸ் ரூம் திட்டம், முதற்கட்டமாக, 160 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், செயல்படுத்த திட்டமிடப்பட்டது. நடப்பு கல்வியாண்டின் துவக்கத்தில், திட்டமிடப்பட்டிருந்தாலும், அதற்கான, நிதி ஒதுக்கீடு, உபகரணங்கள் கொள்முதல் உள்ளிட்ட, பல்வேறு பணிகளால், தாமதம் ஏற்பட்டு வந்தது.

தகுதித்தேர்வில் அனைத்து மாற்றுத்திறனாளிகளும் பங்கேற்கலாம்


மத்திய அரசு ஊழியர்களுக்கான 50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து வழங்குவதற்கான அறிவிப்பு, இந்த வாரத்தில் வெளியாகலாம்?

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஒய்வூதியதாரர்களின் நீண்ட நாள் கோரிக்கையான 50% அகவிலைப்படியை  அடிப்படை ஊதியத்துடன் இணைப்பது சார்பான அறிவிப்பு கடந்த வாரமே எதிர்ப்பார்க்கப்பட்டது, ஆனால் கடந்த வாரத்தில் கூடிய மத்திய அமைச்சரவையில் இதற்கான எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. எனினும் மத்திய நிதியமைச்சர் தற்பொழுது வெளிநாட்டு பயணம் மேற்கொண்டு வருகிற 26ம் தேதி இந்தியா வருகிறார்.

இடைநிலைப் பள்ளி விடுப்புச் சான்றிதழ் பொதுத் தேர்வு மார்ச் 2014 - செய்முறை தேர்வுக்கான அறிவுரைகள்

DGE - SSLC PRACTICAL EXAM INSTRUCTIONS CLICK HERE...

பத்தாம் வகுப்பு செய்முறைத் தேர்வுகள் மார்ச் / ஏப்ரல் 2014 மதிப்பெண் பட்டியல் பத்விறக்கம் (Download) செய்வதற்கான வழிமுறைகள் வழங்கி இயக்குனர் உத்தரவு

DGE - SSLC PRACTICAL MARK SHEET DOWNLOADING INSTRUCTIONS REG PROC CLICK HERE...

அகஇ சார்பில் நடத்தப்படும் பள்ளி மேலாண்மைக் குழு பயிற்சி ஒத்திவைக்க இயக்குனர் உத்தரவு

SPD - SMC TRAINING MAY BE POSTPONED ON 03.03.2014 DUE TO TEACHERS BELONGING TO TESTF FOR STRIKE ON 26.02.2014 REG PROC CLICK HERE...

முதல்வர் ஜெயலலிதா, தனது பிறந்தநாளையொட்டி நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் அ.தி.மு.க வேட்பாளர்கள் பட்டிலை கட்சியின் தலைமை அலுவலகத்தி்ல் இன்று வெளியிட்டார்.


1. திருவள்ளூர் - வேணுகோபால்
2. வட சென்னை - டி.ஜி. வெங்கடேஷ் பாபு
3. தென் சென்னை - ஜெயவர்த்தன்
4. மத்திய சென்னை - விஜயகுமார்
5. ஸ்ரீபெரும்புதூர் - ராமசந்திரன்
6. காஞ்சிபுரம் - குமாரவேல்
7. அரக்கோணம் - திருத்தணி கோ.அரி
8. வேலுர் - பா. செங்குட்டுவன்
9 கிருஷ்ணகிரி - மு. அசோக்குமார்
10. தர்ம்புரி - மோகன்
11. திருவண்ணாமலை - வனரோஜா

தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி 25 மற்றும் 26 ம் தேதி வேலை நிறுத்தத்தின் போது மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் -தொடக்க கல்வி இயக்குனர் செயல்முறைகள்

CLICK HERE 

தாய்மொழியில் கற்றால் சுயசிந்தனை வளரும்-இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

சுயசிந்தனையை வளர்ப்பதில் தாய்மொழி வழிக் கல்வி பெரும் பங்கு வகிப்பதாக இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்தார்.
ஆனந்தம் - இளைஞர்கள் நல அமைப்பு சார்பில் தன்னம்பிக்கைத் திருவிழா சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் அந்த அமைப்பின் மூலம் கல்வி பயின்று வரும் 50-க்கும் மேற்பட்ட ஏழை மாணவர்கள் பங்கேற்றனர்.
இதில் மயில்சாமி அண்ணாதுரை பேசியது:-

எப்படிக் கற்பது ஆங்கிலம்?

ஆங்கிலத்தின் தேவையைப் பற்றியும் அதன் முக்கியத்துவத்தைப் பற்றியும் புதிதாக எழுதத் தேவையில்லை. ஆங்கிலம் இன்று நடுத்தர வர்க்கத்தினரின் பொருளாதார, கலாச்சார அடையாளம். இந்த நிலை இக்கால உலகப் பொருளாதார அமைப்பின் விளைவு. ஆங்கிலம் நமக்கு இரண்டாம் மொழி. அதைக் கற்க வேண்டும் என்பதில் நம்மில் யாருக்கும் எந்தக் குழப்பமும் இல்லை. ஆனால், அதை எப்படிக் கற்க / கற்பிக்க வேண்டும்?
நடக்கப் படி… பின் ஓடப் படி!

இரட்டைப்பட்ட வழக்கு இறுதித் தீர்ப்பு நகல்

DOUBLE DEGREE HIGH COURT -JUDGEMENT COPY CLICK HERE TO DOWNLOAD (GOOGLE DRIVE)

 

DOUBLE DEGREE HIGH COURT -JUDGEMENT COPY  (BOX.NET

 

தமிழகம் முழுவதும் உள்ள 17 ஆயிரம் கிராமங்களில், தொடக்கப் பள்ளிகளே இல்லை: காவல்துறை அதிகாரி ஆர்.நடராஜ்

தமிழகம் முழுவதும் உள்ள 17 ஆயிரம் கிராமங்களில், தொடக்கப் பள்ளிகளே இல்லை என ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி ஆர்.நடராஜ் தெரிவித்துள்ளார். சுவாமி விவேகானந் தர் கிராம அபிவிருத்தி சங்கம் சார்பில், ஓராசிரியர் பள்ளி திட்டத்தின் 7ம் ஆண்டு விழா நேற்று நடைபெற்றது. சங்கத் தலைவர் ஆர்.நடராஜ் மற்றும் சென்னை வருமான வரித்துறை இயக்குனர் ஜிபேந்திர என்.கார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ஆர். நடராஜ் பேசியதாவது: சுவாமி விவேகானந் தர் அபிவிருத்தி சங்கம் சார்பில் 2006ல் ஓராசிரியர் பள்ளி திட்டம் துவங்கப்பட்டது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள 500 கிராமங்களில், ஓராசிரியர் பள்ளி செயல் பட்டு வருகிறது.

பிளஸ்–2, 10–ம் வகுப்புகளுக்கு பொதுதேர்வையொட்டி இரவு நேர மின்தடை வேண்டாம் மின்வாரிய அதிகாரிகளுக்கு அறிவுரை


பிளஸ்–2 மற்றும் 10–ம் வகுப்பு பொது தேர்வுகள் ஆரம்பிக்க உள்ள நிலையில் இரவு நேரங்களில் மின்சாரம் தடை செய்ய வேண்டாம் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரிகள் கூறியதாவது:–
மின்சாரத்தின் தேவை அதிகரிப்பு
  
தமிழகத்தில் கடந்த 2 மாதங்கள் இரவு நேரங்களில் பனிபொழிவு இருந்ததால் மின்சாரத்தின் தேவை குறைந்து சராசரியாக 10 ஆயிரம் மெகாவாட் என்ற அளவுக்கு தேவை இருந்துவந்தது. ஆனால் தற்போது பனிபொழிவு குறைந்து, கோடைக்காலம் தொடங்கவிருப்பதால் வெப்பத்தின் தாக்கம் அதிகரித்து வருகிறது.

அரசுப் பள்ளிகளின் தரத்தில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை: தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர்



கல்வி உரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட்ட பிறகும், அரசு பள்ளிகளின் தரத்தில் எந்த மாறுதலும் ஏற்படவில்லை என தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் குஷால் சிங் கூறினார். அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் அமலாக்கப்படுவதை கண்காணிக்கும் அமைப்பாக இந்த ஆணையம் செயல்பட்டு வருகிறது. சென்னையில் நடைபெற்ற பயிலரங்கில் பங்கேற்க வந்த அவர் தினமணி நிருபரிடம் கூறியது:குழந்தைகள் உரிமைகள் தொடர்பாக சென்னையில் நடைபெற்ற பயிலரங்கில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் நோட்டுப் புத்தகங்களில் இடம்பெற்றுள்ள விழிப்புணர்வு வாசகங்கள் குறித்து தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் குஷால் சிங்குக்கு (வலது ஓரம்) விளக்குகிறார் பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் டி.சபிதா. உடன் அனைவருக்கும் கல்வித் திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உள்ளிட்டோர்.
கல்வித் தரத்தை மேம்படுத்த அரசு பள்ளிகளை வலுப்படுத்துவது இந்தச் சட்டத்தின் முக்கிய நோக்கம். பணக்காரக் குழந்தைகள் தனியார்

முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு: "ஐகோர்ட்டின் இறுதித்தீர்ப்பை பொறுத்தே இருக்கும்" நீதிபதி அறிவிப்பு


முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு ஐகோர்ட்டின் இறுதித் தீர்ப்பை பொறுத்தே இருக்கும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பட்டதாரி ஆசிரியை
கரூர் மாவட்டம் தான்தோன்றிமலை அருகே உள்ள ராயனூரை சேர்ந்தவர் ஸ்ரீசாய்பிரியா. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:–
நான், 1992–ம் ஆண்டு இடைநிலை ஆசிரியை பயிற்சி முடித்தேன். 1995–ம் ஆண்டு பி.காம் பட்டம் பெற்றேன். இந்த நிலையில் 1997–ம் ஆண்டு இடைநிலை ஆசிரியை பணி கிடைத்தது. இதன்பின்பு, தொலைநிலைக்கல்வி மூலம் எம்.காம், எம்.பில்(வணிகவியல்), பி.ஏ(ஆங்கிலம்), பி.எட் ஆகிய படிப்புகளை முடித்தேன். பி.ஏ ஆங்கிலம் பி.எட் படித்து இருந்ததால் பட்டதாரி ஆசிரியையாக 2009–ம் ஆண்டு பதவி உயர்வு பெற்றேன். தற்போது குஜிலியம்பாறை அரசு மேல்நிலைப்பள்ளியில் பணியாற்றி வருகிறேன்.
நியாயமற்றது

தனியார் பள்ளிகள் vs அரசு பள்ளிகள் அலசல்: நா.முத்துநிலவன்

5முதல் 17வயது வரையான பள்ளிப்பருவம் மனித ஆளுமைகளை வளர்த்துக் கொள்வதற்கான ஆரம்பப் பருவம் அல்லவா? மதிப்பெண் எடுக்கும் பயிற்சியை மட்டுமே தருவதுதான் பள்ளிக்கூடத்தின் நோக்கமா? வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கான முயற்சியில் மதிப்பெண் எடுப்பதும் ஒன்றே அன்றி மதிப்பெண் ஒன்றே எல்லாம் என்பதான கருத்தல்லவா மேலோங்கி நிற்கிறது, ஓராண்டே படிக்கவேண்டிய பாடத்தை இரண்டாண்டுகளாக “உருப்போட“வைக்கும் தனியார்,மெட்ரிக்பள்ளிகள் மாணவரின் சமூகஉணர்வு, ஆளுமைவளர்ச்சி, பிறதிறன்வளர்ச்சி, பதின்பருவ உளவியல் பற்றியெல்லாம் கவலைப்படுவதில்லையே? “ஓடி விளையாடு பாப்பா” என்பது ஓரிடத்தில் உட்கார்ந்து மனப்பாடம் செய்வதற்குத்தானா? 10, 12ஆம் வகுப்பு மாணவர்க்கு ஓவியம், இசை, விளையாட்டு வகுப்புகள் எல்லாம் நேர விரயமா? அப்படியானால், 17 வயதுவரையான கல்வித்திட்டத்தை வகுத்தளித்து உலகம் முழுவதும் நடத்திக்கொண்டிருப்பவர்கள் எல்லாம் முட்டாள்களா? மாட்டுக்கு மருந்து திணிப்பதும், மாணவர் மண்டையில் மதிப்பெண்ணைத் திணிப்பதும் ஒன்றுதானா? இந்தக் கடுமையான பயற்சியில் சமூகத்திலிருந்தே நம் பிள்ளைகளை அந்நியப்படுத்தும் அபாயத்தை யார், எப்படி, எங்கே, எப்போது, சரிசெய்யப் போகிறோம்? இன்றைய வகுப்பறை நாளைய சமூகம் என்பது உண்மையானால், நாளைய சமூகத்தைச் சிறைச்சாலை போல மாற்றுவதற்கா பள்ளியில் பயிற்சி தருவது?

SMC-TRAINING SCHEDULE

DOWNLOAD PDF

கடல்சார் பல்கலை பட்டமளிப்பு விழா இந்தியாவின் உயர்கல்வி சதவீதம் குறைவு ஜனாதிபதி பிரணாப் பேச்சு

இந்தியாவின் உயர் கல்வி சதவீதம் குறைவாக உள்ளது என்று ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார். இந்திய கடல்சார் பல்கலைக் கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழா சென்னையில் நேற்று நடந்தது. இந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, தமிழக ஆளுநர் ரோசய்யா, மத்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜி.கே.வாசன், இந்திய கடல்சார் பல்கலைக் கழக வேந்தர் வி.கிருஷ்ணமூர்த்தி, பல்கலைக் கழக துணை வேந்தர் அசோக் வர்தன் ஷெட்டி ஆகியோர் கலந்துகொண்டனர்.
இந்த பட்டமளிப்பு விழாவில் மும்பை, சென்னை, கோல்கத்தா, விசாகப்பட்டினம், கொச்சி ஆகிய இடங்களில் உள்ள கடல்சார் கல்வி மையங்களில் இளம்கலை மற்றும் முதுகலை பட்டம் படித்த ராதாகிருஷ்ணன், ரியாஸ் அகமது உட்பட 1339 பேருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பட்டங்களை வழங்கினார்

மாற்றுத்திறன் குழந்தைகள் கல்விக்கு அரசு பள்ளிகளில் தனி ஆசிரியர்: அரசுக்கு ஐகோர்ட் உத்தரவு

தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க, சிறப்பு பிஎட் முடித்த பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பாக அரசு பரிசீலிக்க வேண்டும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. சிறப்பு பிஎட் பட்டதாரிகள் சங்க மாநில தலைவர் வடிவேல் முருகன், ஐகோர்ட் கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் அனைத்து வகை மாற்றுத்திறன் குழந்தைகள் படிக்கின்றனர். மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு அதிக கவனிப்பு கொடுக்க வேண்டும். மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு கற்பிக்கும் சிறப்பு பிஎட் படித்தவர்கள் அதிகளவில் உள்ளனர்

சூரிய நமஸ்காரம் வீடியோவுடன் ஆடியோ நேர்முக செயல்பாட்டுடன் பார்க்க பயிற்சி செய்க


பள்ளி / கல்லூரிச் சான்றிதழ் தொலைந்தால் புதிய சான்றிதழ் பெறுவது எப்படி?



வீட்டில்  பத்திரமாக இருக்கும் பள்ளிச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் இவற்றை சில சமயங்களில் சரிபார்த்தல் (Verification) அல்லது நேர்காணல் போன்ற காரணங்களுக்காக வெளியில் எடுத்துச் செல்ல நேரலாம். அப்படி செல்லும்போது பயணத்தில் தொலைந்துவிட்டாலோ அல்லது சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் அழிந்துவிட்டாலோ அல்லது எதிர்பாராதவிதமாக தீ விபத்துகளில் சேதமாகியிருந்தாலோ, கரையான்களால் பழுதுபட்டிருந்தாலோ மீண்டும் புதிய சான்றிதழை விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளவேண்டும்.


ஏனெனில் இந்தச் சான்றிதழ்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பயன்படக்கூடிய முக்கிய ஆவணங்களாகும். மேற்படிப்பு பயில, அரசின் கடன் உதவி பெற, வேலைகளில் சேர போன்றவற்றிற்கு மட்டுமல்லாது வயதுச் சான்றாகவும் பயன்படுகிற ஆவணங்கள் இவை. பள்ளி / கல்லூரிச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்துபோனால் எப்படி புதிய சான்றிதழ்கள் பெறுவது எப்படி?


பள்ளி மாற்றுச் சான்றிதழ் தொலைந்து போனால்:

web stats

web stats