rp

Blogging Tips 2017

டி.ஆர்.பி. சார்பில் தேர்வர்கள் வசதிக்காக நிரந்தர தகவல் மையம்!

ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி., சார்பில், தேர்வர்கள் வசதிக்காக, நிரந்தர தகவல் மையம் திறக்கப்பட்டுள்ளது. டி.ஆர்.பி., சார்பில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், கல்லூரி உதவி பேராசிரியர்கள், கணினி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆசிரியர் தகுதித் தேர்வு - டி.இ.டி., அறிமுகப்படுத்தப்பட்ட பின், பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்களுக்கான டி.இ.டி., தேர்வையும் டி.ஆர்.பி. நடத்தி, ஆசிரியர்களை தேர்வு செய்து வருகிறது.

ஆறாம் வகுப்பில் சான்றிதழ் இன்றி நேரடி சேர்க்கை நடத்தக்கூடாது -கிருஷ்ணகிரி மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர் சுற்றறிக்கை


முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வு முடிவு வெளியீடு

கடந்த ஜனவரி மாதம் நடத்தப்பட்ட முதுகலை பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கான தேர்வுகள் முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:
தமி்ழ்நாடு முழுவதும் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள ஆயிரத்து 868 முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு கடந்த மாதம் 10-ம் தேதி நடைபெற்றது. இத்தேர்வை ஒரு லட்சத்து 90 ஆயிரத்து 922 பேர் எழுதினர். விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட்டு www.trb.tn.nic.in என்ற இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. மேலும் சான்றிதழ் சரிபார்ப்பதற்கு தேர்வர்கள் 1:1 என்ற கணக்கில் அழைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் குறித்த பட்டியலும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சான்றிதழ் சரிபார்த்தல் நடைபெறும் தேதி மற்றும் இடம் பினனர் வெளியிடப்பட உள்ளதாக ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு ஓய்வு: 50 சதவீத காலியிடம் நேரடியாக நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வாய்ப்பு

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களில் 24 ஆயிரம் பேர் இந்த ஆண்டு பணியிலிருந்து ஓய்வுபெறுகிறார்கள். இக்காலியிடங்களில் 50 சதவீதம் நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படுவதால் இளைஞர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு ஏற்படும்.
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 12 லட்சத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள், அலுவலர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்னரே அவர்களைப் பற்றிய முழு விவரங்கள் அடங்கிய பட்டியல் துறை வாரியாக தமிழக அரசின் நிதித்துறைக்கு அனுப்பப்படும். ஓய்வுபெறும் ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை (கிராஜுவிட்டி) உள்ளிட்ட பணப்பயன்கள் குறித்து முன்கூட்டியே திட்டமிட்டு பட்ஜெட்டில் நிதி ஒதுக்க வேண்டியதிருப்பதால் இந்த ஏற்பாடு செய்யப்படுகிறது

பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் - அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 01.04.2003 முதல் புதியதாக பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் புதிய கணக்கு எண் பெற்று வழங்கப்பட்ட விவரம் கோரி உத்தரவு

DSE - CPS DETAILS REG PROC CLICK HERE...

PG TRB Result Published Now!


PGTRB Result Published on 06.02.2014 - Click Here & Check Your Score
PGTRB Final Key Answers - Click Here
Provisional List of Candidates Called for Certificate Verificaton - Click Here
Direct Recruitment of Post Graduate Assistants for the year 2013 - 14 and 2014 - 15 - Click here Exam Result and Provisional List of Candidates called for Certificate Verification
Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012-2013 - Click here for Provisional Merit Sponsor List (Other Department)


Provisional List of Certificate Verification Called - Subject wise Details:


TAMIL
ENGLISH
MATHEMATICS
PHYSICS
CHEMISTRY
BOTANY
ZOOLOGY
HISTORY
ECONOMICS
COMMERCE

04.02.2015 ஜாக்டோ கூட்டத்தில் நமது பொதுச்செயலரின் கோரிக்கை

நேற்று நடைபெற்ற ”ஜாக்டோ”எனபெயரிடப்பட்டுள்ள தொடக்கப்பள்ளி முதலான மேல்நிலைப்பள்ளிவரையில் பணியாற்றும் ஆசிரியர்கள் சார்ந்த ஆசிரியர்சங்க  கூட்டமைப்பின் கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பொதுச்செயலர் செ.முத்துசாமி ExMLC, கலந்து கொண்டார்
அவ்வமைப்பின் தீர்மானங்கள் வடித்தெடுக்கும் போது குறிப்பாக தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு,அவர்களின் ஊதியம் தமிழக அரசு 6வது ஊதியக்குழு அமுல்படுத்திய போது ஊதியக்கட்டு 2க்குபதில் 1ல் வைத்து அதாவது Payband-2(9300-34800) என்பதற்குப்பதில் Payband-1(5200-20200) என்று குறைத்து வைத்ததுடன் மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான தரஊதியமான 4200க்கு மாற்றாக 2800 என அமுலாக்கப்பட்டதால் பெருத்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மேலும் இதனால் ஒவ்வொரு இடைநிலை ஆசிரியர்களும் மாதந்தோறும் ரூ11000/-வரை குறைவான ஊதியத்தை பெறுகிறார்கள்

காப்பி அடித்ததை கண்டித்ததால் ஆத்திரம்: ஆசிரியர் சட்டையை இழுத்து 10ம் வகுப்பு மாணவர் தகராறு

விருதுநகர் மாவட்டம், திருத்தங்கல்லில் உள்ள எஸ்.ஆர்.அரசு ஆண்கள் பள்ளியில் கடந்த 30ம் தேதி, பத்தாம் வகுப்பு மாணவர்களுககு சமூக அறிவியல் 'பாட திருப்புதல் தேர்வு' நடைபெற்றது. தேர்வின்போது 10ம் வகுப்பு 'ஏ' பிரிவைச் சேர்ந்த மாணவர் கண்ணன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனக்கருகே அமர்ந்து இருந்த மற்றொரு மாணவரின் தேர்வுத்தாளை வாங்கி 'காப்பி' அடித்துள்ளார். அப்போது கண்காணிப்பு பணியில் இருந்த ஆசிரியர் ஜெயராஜ், இதுகுறித்து உடற்கல்வி ஆசிரியர்

Direct Recruitment of Post Graduate Assistants for the year 2012 - 2013 PROVISIONAL MERIT SPONSOR LIST in TRB WEBSITE

CLICK HERE-TRB-PROVISIONAL MERIT SPONSOR LIST

மத்திய அரசு ஊழியர்களுக்கு 6 சதவீத அகவிலைப்படி அடுத்த மாதம் மத்திய அமைச்சரவை கூட்டத்தில் அறிவிக்கப்பட உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 6 சதவீதம் உயர்த்தப்படும் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதம் அகவிலைப்படி உயர்த்தப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 7 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. இதற்கிடையில் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப் படியை 6 சதவீதம் உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அகஇ - 2014-15ஆம் கல்வியாண்டிற்கு உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான குறுவள மைய அளவில் ஒரு நாள் பயிற்சியாக "சுற்றுச் சூழல் விழிப்புணர்வு" என்ற தலைப்பில் 14.02.2015 அன்று நடைபெறவுள்ளது

ஜேக்டோ ஆசிரியர் கூட்டமைப்புக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

பிளஸ் 2 செய்முறை தேர்வு இன்று தொடக்கம்

பிளஸ் 2 மாணவர்களுக்கான செய்முறை தேர்வு இன்று தொடங்குகிறது. மார்ச் 5ம் தேதி பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுதேர்வுகள் தொடங்குகிறது. அறிவியல் பாடப் பிரிவை எடுத்து படிக்கும் மாணவர்களுக்கு வேதியியல், இயற்பியல், விலங்கியல், தாவரவியல் உள்ளிட்ட பாடங்களில் செய்முறை தேர்வு இன்று தொடங்குகிறது. இந்த தேர்வில் தமிழகம் முழுவதும் சுமார் 6 லட்சம் மாணவ, மாணவியர் பங்கேற்பார்கள்.

”ஜாக்டோ “அமைப்பில் பொதுசெயலர் பங்கேற்று கோரிக்கைகள் வலியுறுத்தி கூறிய காட்சி


நேற்றைய டிட்டோஜாக் கூட்டத்தில் பொதுசெயலர் உரை


பள்ளிகளில் ஒழுக்கத்தை போதிக்க புத்தகம்

மாணவர்களிடையே அறநெறி, ஒழுக்கத்தை போதிக்க தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் இலக்கியங்களில் இருந்து தொகுக்கப்பட்ட பொன்மொழிகள் வடிவிலான 'அறநெறிக் கருவூலம்' என்ற புத்தகம் பள்ளிகளுக்கு வழங்கப்பட உள்ளது.

கல்வித்துறையில் மாற்றம் எளிதான பணி அல்ல!

அதிகம் படித்த அறிஞர்கள் உள்ள நகரங்களிலும், அதேசமயம் அவ்வளவு முன்னேற்றம் இல்லாத பஞ்சாயத்துக்களிலும், கல்வியில் ஒரே மாதிரி மாற்றம் காண மத்திய அரசு விரும்புகிறது.
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ஸ்மிருதி இரானி, இந்தியக் கல்வியானது, சர்வதேச அளவிற்கு மேம்படும் வகையில் அமைக்க முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். 10ம் வகுப்பு, அதற்கு பின் பிளஸ் 2 வரை இரு ஆண்டுகள், அதற்குப் பின் பட்டப் படிப்பு, மூன்று ஆண்டுகள் என்ற நடைமுறை, 1968ல் துவங்கப்பட்டது. அப்போது இந்திரா பிரதமர். அதற்குப் பின், 1986ல், ராஜிவ் சில மாற்றங்களை கல்வித் துறையில்

இடைத்தேர்தலை முன்னிட்டு ஸ்ரீரங்கம் தொகுதிக்கு 13-ந் தேதி பொது விடுமுறை: தமிழக அரசு அறிவிப்பு

ஸ்ரீரங்கம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள், திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களுக்குள் வருகின்றன. அந்த தொகுதிக்கு 13-ந் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் கமிஷன் அறிவித்துள்ளது.

ஆசிரியர்கள் என்றால் அடிமைகளா?


நகரின் மையத்தில் பிரமாண்டமாக எழுப்பப்பட்ட பெரிய தனியார் பள்ளியொன்றில் பயிலும் உங்கள் குழந்தைகளுக்கு பாடம் சொல்லித்தரும் ஆசிரியர்கள், உங்களுக்கோ, உங்களது பிள்ளைகளுக்கோ அல்லது இந்த சமுதாயத்துக்கோ மட்டுமே ஆசிரியர்களாக பார்க்கப்படுகிறார்கள்.

வெளியில் இருந்து பார்த்தால் அப்படித்தான் தெரியும்..உண்மையில் அந்தப் பள்ளி நிறுவனருக்கோ அல்லது அப்பள்ளியின் தாளாளருக்கோ அவர்கள் அடிமைகள் அல்லது, சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளைகள்.
ஒரு சராசரி தொழிலாளிக்கு, ஒரு முதலாளியிடம் கிடைக்கும் நியாயமான மரியாதைகூட பெரும்பாலான தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு கிடைப்பதில்லை.

ஆதாருடன் இணைந்த வருகை பதிவேடு அறிமுகம்: மத்திய அரசு ஊழியர்கள் எதிர்ப்பு

ஆதார் எண்ணுடன் இணைந்த, விரல் ரேகை வருகைப் பதிவேடான பயோ மெட்ரிக் முறை, தமிழகம் மற்றும் புதுச்சேரி, வருமான வரித் துறை அலுவலகங்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம், வருமான வரித்துறை ஊழியர் மற்றும் அதிகாரிகளின் வருகைப் பதிவேடு, அவர்களின் ஆதார் விவரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது.

மழலையர் பள்ளிகள் மீது நடவடிக்கை எப்போது? அரசாணை வெளியிடாததால் சிக்கல் நீடிப்பு

முறையான அனுமதி இல்லாத மழலையர் பள்ளிகள் விவகாரத்தில், உயர் நீதிமன்ற காலக்கெடு முடிந்துள்ளது. அவற்றின் மீதான நடவடிக்கை குறித்து, அரசு விரைவில் முடிவு எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது.
பொதுநல மனு:
கடந்த ஆண்டு, சென்னை, வில்லிவாக்கத்தைச் சேர்ந்த பாலசுப்ரமணியம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், 'தமிழகத்தில் அனுமதியின்றி செயல்பட்டு வரும், 2,000க்கும் மேற்பட்ட மழலையர் பள்ளிகளை மூட, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' எனக் கூறியிருந்தார். இந்த வழக்கு, கடந்த ஆண்டு ஆக.,

பள்ளிக்கல்வி - மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நிலுவையில் உள்ள துறை சார்ந்த வழக்குகளை கவனிக்க தனி சட்ட அலுவலர் பதவியை தோற்றுவித்து இயக்குனர் உத்தரவு - இனி மதுரை உயர்நீதிமன்ற வழக்குகளுக்கு அவரையே அணுகும்படி அனைத்து அலுவலர்களுக்கும் ஆணை.


அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் இடைநிலை ஆசிரியர்களுக்கும் சிறப்பு தர ஊதியம் வழங்க உத்தரவு

தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் சிறப்பு தர ஊதியம் உள்ளிட்ட பயன்களை 10 முதல் 20 ஆண்டுகள் நிறைவு செய்த அரசு மேல்நிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர்கள் மார்ச் 8-இல் ஆர்ப்பாட்டம்

ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 8-ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனைத்து ஆசிரியர் சங்கங்களும் முடிவு செய்துள்ளன.
அனைத்து ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழுவின் (ஜேக்டோ) கூட்டம் சென்னையில் புதன்கிழமை நடைபெற்றது

டிட்டோஜாக் மற்றும் ஜாக்டோ இணைந்து செயல்பட முடிவு; இனி தனித்த போராட்டம் இல்லை


டிட்டோஜாக் மற்றும் ஜாக்டோ இணைந்து செயல்பட முடிவு; இனி தனித்த போராட்டம் இல்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளது. டிட்டோஜாக்கின் பிரதான கோரிக்கையான இடைநிலை ஆசிரியர் உட்பட ஏனைய கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இதையடுத்து 22.02.2015ல் மாவட்ட அளவில் ஆயுத்தக்கூட்டம் நடத்தவும், 08.03.2015ல் மாவட்ட அளவில் கண்டன பேரணி நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அகஇ - 2014-15ஆம் கல்வியாண்டிற்கு உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான குறுவள மைய அளவில் ஒரு நாள் பயிற்சியாக "சுற்றுச் சூழல் விழிப்புணர்வு" என்ற தலைப்பில் 14.02.2015 அன்று நடைபெறவுள்ளது

SPD - 2014-15 - UPPER PRIMARY CRC ON 14.02.2015 "ENVIRONMENTAL AWARENESS" @ CRC LEVEL REG PROC CLICK HERE...

பள்ளி முடிந்ததும் பெற்றோருக்கு தெரியாமல் எங்கும் செல்லக்கூடாது: பள்ளிக்கல்வி இயக்குனரகம்

மாணவ, மாணவியர் பள்ளி முடிந்ததும், பெற்றோருக்கு தெரியாமல் எங்கும் செல்லக்கூடாது; விலை உயர்ந்த ஆபரணங்கள் அணிந்து வரக்கூடாது; மொபைல் போன் எடுத்து வருதல் கூடாது என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் அறிவுறுத்தி உள்ளது.


விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அருகே, மொளசூர் கிராமத்தை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி ஒருவர், சில தினங்களுக்கு முன் மாயமாகி, விவசாய நிலத்தில் இருந்த கிணற்றில், பிணமாக மீட்கப்பட்டார். அவர் அணிந்திருந்த நகைகள் மாயமாகி இருந்தன.

உங்கள் தனித்தன்மையை காட்டும் அடையாளங்கள்


ஆளுமை தரும் அடையாளம்! ஆளுமை... நாம் நம்மிடையே காண்பது சுயதோற்றம். பிறர் நம்மிடையே பார்ப்பதுதான் ஆளுமை. பெர்சனாலிட்டி (personality) என்ற ஆங்கிலச் சொல்லை அடிக்கடி இன்று கேட்கின்றோம். எந்தக் கருவியை எப்படி எப்படிக் கையாளுவது என்பதில் தான் ஆளுமை அடங்கியிருக்கின்றது.
உங்களிடம் வெளிப்படும் சிந்தனை, செயல், எண்ணம், மொழி, மனம், ஒழுக்கம், சமூக உறவு போன்றவைதான் உங்களுடைய ஆளுமைப் பண்புகளையும் வெளிப்படுத்தும். பிறருக்கு உங்களை அடையாளப்படுத்தும்!
1. மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டும்.

வருமான வரியை சேமிப்பது எப்படி?

வருமான வரிப்பிரிவில் 80C பிரிவை தெரியாதவர்கள் இருக்க முடியாது. இந்த பிரிவில், நாம் ஒரு லட்சம் ரூபாய்வரை சேமிக்க முடியும். நாம் சேமிக்க எடுத்துக்கொள்ளும் கால அவகாசம் ஒரு நிதியாண்டில் ஏப்ரல் 1 முதல் அடுத்த வருடம் 31 மார்ச் வரை. ஆனால் நம்மில் பலர் 10 அல்லது 11 மாதம் எந்தவித முயற்சியும் எடுக்காமல், கடைசி இரண்டு மாதங்களில்
அந்த சமயம் கண்ணில் யார் படுகிறாரோ அவரிடம் எதையாவது வாங்கி அலுவலகத்தில் ரசீது கொடுப்பதையே பெரிய விஷயமாக நினைக்கிறார்கள்.
பின்பு அதைச் சொன்னார், இதைச் சொன்னார் என்று முகவரைக் குறை கூறுவதுண்டு.

ஆண்டு வருமானம், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்களுக்கு, சமையல் எரிவாயுவுக்கு வழங்கும் மானியத்தை, 'கட்' செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

ஆண்டு வருமானம், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் உள்ளவர்களுக்கு, சமையல் எரிவாயுவுக்கு வழங்கும் மானியத்தை, 'கட்' செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
இதுகுறித்த அதிரடி அறிவிப்பு, இம்மாத இறுதியில் தாக்கல் செய்யப்பட உள்ள, மத்திய பட்ஜெட்டில் வெளியாகிறது.
மத்திய அரசானது, சமையல் எரிவாயு வினியோகம் உட்பட, பல திட்டங்களுக்கு மானியம் வழங்கி வருகிறது. இந்த மானியத்தை படிப்படியாகக் குறைத்து, அதற்காக ஒதுக்கப்படும் நிதியை, வளர்ச்சித் திட்டங்களுக்கு செலவிட வேண்டும் என, விரும்புகிறது; அதற்கான நடவடிக்கைகளை படிப்படியாக துவக்கி உள்ளது.

பணியாளர்கள் நியமனத்தில் காலதாமதம்: அரசு பள்ளிகளில் கணினிகள் வீணடிப்பு

அரசு உயர்நிலை பள்ளிகளில் கணினி இருந்தும், அதற்கான பணியாளர்கள் நியமிக்கப்படாததால் பணிகள் பாதிப்படைந்து உள்ளன.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை இணைக்கும், திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில், 300க்கும் அதிகமான அரசு உயர்நிலை பள்ளிகள் இயங்கி வருகின்றன. அவற்றில், 150 பள்ளி களில் மட்டும்தான், தகவல் தொடர்பு வசதிக்காக கணினிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

பள்ளியில் புதையல்: கட்டுக்கட்டாக 1 கோடி ரூபாய் 59 லட்சம் மதிப்புள்ள 21 தங்க கட்டி

பள்ளி லாக்கரில் ஒரு கோடி ரூபாய் ரொக்கம், 59 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 21 தங்கக் கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆசிரியர்களுக்கு இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம் ஆமதபாத் நகரில் ஓஎன்ஜிசி வளாகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளி உள்ளது. பிரதமர் மோடியின் தூய்மை திட்டத்தின்படி, பள்ளியை சுத்தம் செய்ய தலைமை ஆசிரியர் உத்தரவிட்டார். விடுமுறை தினம் என்பதால் ஞாயிற்றுக்கிழமை பள்ளியின்அனைத்து அறைகளும் சுத்தம் செய்யப்பட்டன. பொருட்கள் சேமித்து வைக்கப்படும் அறையில் லாக்கர் வசதி உள்ளது. மொத்தம் 20 லாக்கர் பெட்டிகள் இருந்தன. அந்த இரும்பு லாக்கர் பெட்டிகளை திறந்து பார்த்தபோது 18 இரும்பு பெட்டிகளில் வெறும் குப்பைகள் இருந்தன. இரண்டு லாக்கர்களில் மட்டும் தலா ஒரு துணிப்பை இருந்தது.

6 முதல் 10ம் வகுப்பு வரை வீடியோவில் அறிவியல் பாடம்

பள்ளிக் கல்வி இணைய தளத்தில் இருந்தே பாடங்களை பார்த்தும், படித்தும் தெரிந்துகொள்ள வசதியாக வீடியோ முறைப்பாடங்களை பதிவு செய்ய பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை அறிவியல் பாடங்களை வீடியோவாக தயாரிக்க பள்ளிக் கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தொடக்க கல்வித்துறை, பள்ளிக் கல்வித்துறை ஆகியவற்றின் கீழ் இயங்கும் தொடக்க மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 6 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் எளிதாக பாடங்களை புரிந்து கொண்டு படிக்கவும், தேர்வுகளில் அதிக அளவில் மதிப்பெண் பெறவும் வசதியாக கடந்த

காஸ் சிலிண்டர் நேரடி மானியம் ஏ.டி.எம்., மூலம் 'ஆதார்' பதிவு


சமையல் காஸ் சிலிண்டர் நேரடி மானியத்திற்கு, 'ஆதார்' எண்ணை, ஏ.டி.எம்., மூலம் வங்கி கணக்குடன் இணைக்கும் திட்டத்தை, பாரத ஸ்டேட் வங்கி துவக்கியுள்ளது.

தமிழகம் உட்பட நாடு முழுவதும், காஸ் சிலிண்டர் மானியத்தை, வாடிக்கையாளர் வங்கி கணக்கில், நேரடியாக செலுத்தும் திட்டத்தை, ஜன., 1 முதல், மத்திய அரசு துவக்கியுள்ளது. இத்திட்டத்தில் இணைய, 'ஆதார்' அடையாள அட்டை உள்ள வாடிக்கையாளர்கள், வங்கிகளில் விண்ணப்பத்தை வழங்கி வருகின்றனர்

மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள்-பதவி உயர்விற்கு விருப்பின்மை பணிப்பதிவேட்டில் பதிவுகள் மேற்கொள்ள இயக்குனர் உத்தரவு

DSE - RELINQUISHMENT PARTICULARS REG DEO PANEL 2014 REG PROC CLICK HERE... 

தொடக்கக் கல்வி - நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்களுக்கான தலைமைப் பண்பு பயிற்சி 09.02.2015 முதல் 12.03.2015 வரை ஐந்து சுற்றுகளாக சென்னையில் நடைபெறவுள்ளது

Ele.dir pro.no 001975/k2/2015 Dt.30.01.15
Leadership Quality Development Training for Middle School HMs @ SIEMAT conference hall ,DPI Chennai.
*First round Salem & Cuddalore Feb 9-12.
*Second round Feb 16-19 Namakkal,Nagapattinam,Tiruvannamalai.
*Third round Feb 23-26 Kanchipuram,Tiruppur.
*Fourth round March 2-5 Dindigul & vellore.
*Fifth round March 9-12 Villupuram.

மாணவர்களை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கைகளை எடுத்தது தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம்!

மாணவர்களின் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் விதமாக, குற்றம் புரியும் மாணவர்கள் அதிரடி நீக்கம், பஸ் படிக்கட்டில் பயணித்தால் இலவச பஸ் பாஸ் கட், ஹெல்ப் லைன் சேவை உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகளை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் பிறப்பித்துள்ளது.

சமீபகாலமாக கல்லூரி வளாகம் மற்றும் வெளிப்புறங்களில் கோஷ்டி மோதல் உள்ளிட்ட பல்வேறு சமூக விரோத செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவதாக, புகார்கள் வருகின்றன. தவறான வழியில் செல்லும் மாணவர்களுக்கு கிடுக்கிப்பிடி போடும் வகையில் கல்வித்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

INCOME TAX -2015 கணக்கிடும் போது நினைவில் கொள்ள வேண்டிய முக்கிய குறிப்புகள் -மறுபதிவு

Income Slabs Tax Rates

i. Where the total income does not exceed Rs. 2,50,000/-. NIL

ii. Where the total income exceeds Rs. 2,50,000/- but does not exceed Rs. 5,00,000/-. 10% of amount by which the total income exceeds Rs. 2,50,000/-.Less ( in case of Resident Individuals only ) : Tax Credit u/s 87A - 10% of taxable income upto a maximum of Rs. 2000/-.
 
 iii. Where the total income exceeds Rs. 5,00,000/- but does not exceed Rs. 10,00,000/-. Rs. 25,000/- + 20% of the amount by which the total income exceeds Rs. 5,00,000/-.

iv. Where the total income exceeds Rs. 10,00,000/-. Rs. 125,000/- + 30% of the amount by which the total income exceeds Rs. 10,00,000
  • தனிநபர் வருமான வரி விலக்கு உச்சவரம்பு ரூ.2 லட்சத்தில் இருந்து 2.5 லட்சமாக (ரூ.50,000) உயர்த்தப்பட்டது.

இலவச சமையல் எரிவாயு இணைப்புக்கும் இனி ஆண்டுக்கு 12 உருளைகள்

இலவச சமையல் எரிவாயு இணைப்பு பெற்ற பயனாளிகளுக்கும் இனி ஆண்டுக்கு 12 எரிவாயு உருளைகள் வழங்கப்படும். இதற்கான உத்தரவை உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
தமிழகத்தில், முந்தைய திமுக ஆட்சியில் 28 லட்சம் பயனாளிகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு, அடுப்பு
வழங்கப்பட்டது. அவர்களுக்கு ஆண்டுக்கு 6 சமையல் எரிவாயு உருளைகள் மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.
நடைமுறையால் அவதி: இணைப்புக்கான முன்வைப்புத்தொகை, தமிழ்நாடு அரசு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பெயரில் உள்ளதால், பிற மாவட்டம், நகரங்களுக்கு இடம் பெயர்ந்து செல்லும் பயனாளிகள், முகவரி மாற்றம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர்

கைப்பேசியை நாம் முறையாக பயன்படுத்துகிறோமா...?

நாம் வெளியே கிளம்பும் போது வீட்டைப் பூட்டி சாவியை எடுக்கிறோமோ இல்லையோ, கேஸ் சிலிண்டரின் இணைப்பை நிறுத்துகிறோமோ இல்லையோ, குடிநீர் குழாய்களை நிறுத்துகிறோமோ இல்லையோ. மொபைல் போனும் சார்ஜரும் எடுக்க மட்டும் மறப்பதில்லை. இந்த மொபைலை எப்படி பயன்படுத்த வேண்டும்...? தெரிந்து கொள்வோமே!
1. அலைபேசியை இடதுபுற காதில் வைத்து பேசுவது தான் நல்லது.
2. சார்ஜ் ஆகிக் கொண்டிருக்கும் போது அழைப்பு வந்தால் அப்படியே எடுத்து பேசுதல் கூடாது. அதுவே சைனா மொபைல் என்றால் ஆபத்து அருகில்.
3. மொபைலில் கடைசி ஒரு புள்ளி சார்ஜ் இருக்கும் போது பேசுவது கூடாது. ஏனென்றால் அப்போதுதான் ரேடியேசன் அதிகம் இருக்கும். கதிர்வீச்சு பாதிப்பு மிகுதியாக இருக்கும். 4. ஸ்பீக்கரை ஆன் செய்து வைத்து விட்டு மொபைலில் பேசுவது செவிப்பறையை சேதம் ஏற்படுத்திவிடும்.

பள்ளிகளில் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில் தினமும் நாளிதழ்!


தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்தும் நோக்கில், தினமும் நாளிதழ் வாங்குவதன் அவசியம் குறித்து தலைமை ஆசிரியர்களிடம் வலியுறுத்தப்படும் என, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒவ்வொரு பள்ளியிலும் காலையில் அன்றாட தமிழ் நாளிதழ்களின் தலைப்புச் செய்திகள் வாசிப்பு பின்பற்றப்படுகிறது. நூலகத்தில் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திட ஒவ்வொரு பள்ளிக்கும் உத்தரவு உள்ளது. பத்திரிகை வாங்குவதற்கென பள்ளி மானிய நிதியில் இருந்து ரூ.10 ஆயிரம் வரை செலவிடவும் அனுமதி உண்டு.

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தெரிய வேண்டிய உதவித் தொகை வலைதளங்கள்.

கல்வி செலவை சமாளிப்பதற்கான ஒரு முக்கிய வடிகாலாக மாணவர்களுக்கு இருப்பது உபகார சம்பளம் எனப்படும் கல்வி உதவித்தொகை. ஆனால் இன்றைய பொருளாதார தேக்கநிலை சூழலில் இந்த உதவி கிடைப்பதிலும் சிக்கல் நிலவுகிறது.

எனவே அதற்கான ஒரு மாற்று ஏற்பாடு, கல்வி செலவை சமாளிக்க திணறும் மாணவர்களுக்கு முக்கியமான ஒன்றாகும். ஆகவே கல்வி உதவித்தொகைகள் பற்றிய பல தகவல்களைக் கொண்டிருக்கும் சில இணையதளங்களின் முகவரிகளை இங்கே உங்களுக்காக வழங்கியுள்ளோம். இத்தளங்களை ஆராய்வதன் மூலம் கல்வி உதவித்தொகை சம்பந்தமான பல அரிய, உபயோகமான தகவல்களைப் பெறலாம்.

அரசு ஊழியர்களுக்கு இடைக்கால நிவாரணம் மற்றும் அடிப்படை ஊதியத்துடன் அகவிலைப்படி இணைத்து வழங்க மத்திய அரசு மறுப்பு


அடுத்த அகவிலைப்படி உயர்வு 6% உயர்ந்து 113% ஆக இருக்கும்?


அரசு ஊழியர் /ஆசிரியர்களுக்கு அடுத்த அகவிலைப்படி உயர்வு 6% உயர்ந்து 113% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது; மார்ச் மாதம் அறிவிப்பு வெளியாகும்?

பிளஸ் 2, 10-ஆம் வகுப்பு தேர்வு: புதிய முறையில் விடைத்தாள் வடிவமைப்பு: தேர்வுத்துறை உத்தரவு

மார்ச் மாதம் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத் தேர்வில் விடைத்தாள்களில் பல்வேறு மாற்றங்களைச் செய்து அரசுத் தேர்வுகள் இயக்ககம் உத்தரவிட்டுள்ளது. தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிப்பாடத் தேர்வுகளுக்கு முதன்மை விடைத்தாள் 30 பக்கங்களைக் கொண்ட கோடிட்ட தாளாக இருக்கும். இதில், HSC-LANGUAGE எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். கூடுதல் விடைத்தாள்களும் கோடிட்ட விடைத்தாள்களாகவே வழங்கப்படும்.

கணக்கியல் தேர்வுக்கு 46 பக்கங்கள் கொண்ட விடைத்தாள் வழங்கப்படும். இதில் 1 முதல் 14 பக்கங்கள் கோடிடப்படாமலும், 15 முதல் 46 பக்கங்கள் கோடிடப்பட்டும் இருக்கும். இதில், HSC- ACCOUNTANCY எனக் குறிப்பிடப்பட்டிருக்கும்

செல்வ மகள்' சேமிப்பு திட்டம்: தமிழகத்தில் துவக்கம்.


சென்னை: பெண் குழந்தைகளுக்காக பிரத்யேகமாக அறிவிக்கப்பட்ட, 'செல்வ மகள் சேமிப்பு கணக்கு' திட்ட துவக்க விழா, சென்னை, மயிலாப்பூர் தலைமை அஞ்சலகத்தில் நேற்று நடந்தது.

பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில், 'சுகன்யா சம்ரிதி' என்ற, 10வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளுக்கான சிறுசேமிப்பு திட்டத்தைஅறிமுகப்படுத்தினார். இத்திட்டம், தமிழகத்தில் முதலாவதாக,சென்னை, மயிலாப்பூர் தலைமை அஞ்சலகத்தில், 'செல்வ மகள்சேமிப்பு திட்டம்' என்ற பெயரில், நேற்று துவக்கப்பட்டது. சென்னைவட்ட, தலைமை போஸ்ட் மாஸ்டர்

MEDICAL AID – New Health Insurance Scheme, 2014 for Pensioners (including spouse) /Family Pensioners – List of Additional Hospitals covered under this Scheme – Approved – Orders – Issued.

GO.NO.5 FINANCE (PENSION) DEPT DATED.05.01.2014 - List of Additional Hospitalscovered under this Scheme – Approved – Orders Click here...


web stats

web stats