rp

Blogging Tips 2017

TNPSC- DEPARTMENTAL EXAMINATIONS MAY -2016 TIME TABLE

அனைத்து தனியார் பள்ளிகளிலும் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும்: சென்னை உயர் நீதிமன்றம்

தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும், காலை நேர பிரார்த்தனைக் கூட்டத்தின் போது தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமல் தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி அறிவிப்பு

''தமிழகம் முழுவதும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன. வாகன சோதனை துவங்கி உள்ளது,'' என, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்து உள்ளார்.இது குறித்து, நேற்று, ராஜேஷ் லக்கானி கூறியதாவது:

*தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்து விட்டன

வகுப்பறையில் 'மேப்' மாட்டாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை

அரசு பள்ளிகளில், மூன்றாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, வகுப்பறையில் கண்டிப்பாக வரைபடங்கள் மாட்ட வேண்டுமென உத்தரவிடப்பட்டுள்ளது.அரசு மற்றும் உதவிபெறும் தொடக்கப் பள்ளி மாணவர்கள், தங்களின் நாடு, மாநிலம், வசிக்கும் பகுதியை புவியியல் ரீதியாக அறிந்து கொள்ள, ஆசிரியர்கள் பயிற்சி அளிக்க வேண்டுமென, உத்தரவிடப்பட்டிருந்தது.

G.O.(Rt).No.142 Dt: February 26, 2016 New Health Insurance Scheme 2012 for the employees of Government Departments and other Organisations – Empanelment of Accredited Hospitals - Approval of additional hospitals based on the recommendations of the Accreditation Committee – Notified - Orders issued

தொடக்கக்கல்வி - மாணவர்களின கல்வி தரத்தை மேம்படுத்த AEEO/BRTE கொண்ட குழு பள்ளிகளுக்கு முன் அறிவிப்பின்றி "திடீர் பார்வை" SURPRISE VISIT மேற்கொள்ள உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்


தமிழ் நாடு சட்டசபை தேர்தல் தேதி அறிவிப்பு.

PGTRB : 1,063 முதுகலை ஆசிரியர்கள் நியமனம்: விரைவில் டி.ஆர்.பி., தேர்வு.

ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) மூலம் 1,063 முதுகலை ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. 2016--17ம் கல்வியாண்டில் பணி ஓய்வு பெறுவோர் உட்பட 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடம் உருவாகும் நிலை உள்ளது.

சத்துணவு அமைப்பாளராக திருநங்கை நியமனம்

திருவண்ணாமலை அருகே, சத்துணவு அமைப்பாளராக, தமிழகத்திலேயே முதல் முறையாக, திருநங்கை தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்துார் ஒன்றியம், சிறுநாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்து, 56; கட்டட மேஸ்திரி. இவரது மனைவி ஜெயகாந்தி, 52. இவர்களுக்கு, மூன்று குழந்தைகள் உள்ளனர். இதில், ஜெயப்பிரகாஷ், சிறுநாத்துார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில், 8ம் வகுப்பு வரையும், கீழ்பென்னாத்துார் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், பிளஸ் 2 வரையும் படித்தார்.

இன்று தேர்வு எழுதச்செல்லும் உங்களின், உறவினர்களின், நண்பர்களின் குழந்தைகளுக்கு tntf -ன் வாழ்த்துக்கள்!

வளமான எதிர்காலத்தின்
அடிக்கல்லை அழகாக நாட்டப்போகும்!
நிகழ்கால
மாணவச்செல்வங்களே!

உன் உழைப்பையெல்லாம்
விடைத்தாளில் கொட்டு!

விழியைத் திறந்து
வினாத்தாளைப் பார்?

முதல் முறையிலேயே எழுதத் தொடங்காதே!

எச்சரிக்கையோடு
இரண்டாம் முறையாகவும்
வினாத்தாளைப் படி!!

புரிந்த வினாக்களுக்கு
புத்துணர்ச்சியோடு பதிலளி!

வேகம் மட்டுமல்ல!

விவேகமாகவும் விடையளி!

நீ!
எட்டப்போகும் பாதை,
உன் காலடியில்தான் உள்ளது!
உன் சிந்தைக்கு எட்டியதை
சிதறாமல் எழுதி வா!

உங்கள் லட்சியம்போல்
அதிக  மதிப்பெண்களை
அள்ளிக்குவிக்க!
என் அன்பான வாழ்த்துக்கள்!

பிளஸ்-2 தேர்வு இன்று தொடங்குகிறது: காப்பி அடிப்பதை தடுக்க 4 ஆயிரம் பறக்கும் படைகள் நியமனம்

பிளஸ்-2 தேர்வு இன்று முதல் தொடங்குகிறது. தேர்வில் காப்பி அடிப்பதை கண்காணிக்க 4 ஆயிரம் பறக்கும் படைகள் நியமனம் செய்யப்பட்டுள்ளன. ஒழுங்கீன செயல்பாடுகளில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட உள்ளது.

தமிழகம் முழுவதும் பிளஸ்-2 பொதுத்தேர்வு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தொடங்குகிறது. இத்தேர்வு ஏப்ரல் 1-ந்தேதி வரை நடக்கிறது. இதில் தமிழகம்- புதுச்சேரியில் இருந்து மொத்தம் 6 ஆயிரத்து 550 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 39 ஆயிரத்து 697 மாணவ- மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

பள்ளிக்கல்வி - தேசிய நல்லாசிரியர் விருதுகள் 2015/2016 - விருது பெறுவதற்கு ஆசிரியர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய விண்ணப்ப படிவம்

CLICK HERE - NATIONAL BEST TEACHER AWARD PROFORMA APPLICATION

பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் காலியாக இருந்த 125 உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களை பதவிஉயர்வு மூலம் நிரப்பி பள்ளிக்கல்வித்துறை உத்தரவு.

பள்ளிக்கல்வி - தேசிய நல்லாசிரியர் விருதுகள் 2015/2016 - விருது பெறுவதற்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்ப்பு - இயக்குனர் செயல்முறைகள்


தொடக்ககல்வி 3 முதல் 8 வகுப்பு வரைவகுப்பறைகளில் தேசிய, மாநில, மாவட்ட வரைபடங்களை பொருத்துமாறு உத்தரவு - இயக்குனர் செயல்முறைகள்

GO(MS)No.80 Dt: March 02, 2016 கருணை அடிப்படையில் பணி நியமனம் - மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் விதி 110-ன் கீழ் அறிவிக்கப்பட்ட அறிவிப்பு - 1.2.2016 வரை கருணை அடிப்படையில் பணி நியமனம் செய்யப்பட்டவர்களின் பணியை வரன்முறைப்படுத்துதல் - ஆணை மற்றும் வழிமுறைகள் - வெளியிடப்படுகின்றன.

click here-TO DOWNLOAD G.O NO 80 DATE 02.03.2016

போலி ஆவணங்கள் தயாரித்ததாக ஆசிரியர்கள் மீது மோசடி வழக்கு

போலி ஆவணங்கள் தயாரித்து பணியில் சேர்ந்ததாக பணி நீக்கம் செய்யப்பட்ட அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 2 பேர் மீது மோசடி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலூர் மாவட்டம், ஆற்காடு இருகூரை சேர்ந்தவர் பார்த்திபன். கடந்த 2013-14ம் ஆண்டு நடைபெற்ற முதுகலை ஆசிரியர் தகுதி தேர்வில் தோல்வியடைந்த இவர், தேர்வில் வெற்றி பெற்றதாக போலி ஆவணங்கள் தயார் செய்து விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரம் அருகே பிரமகுண்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வரலாற்று ஆசிரி யராக கடந்த டிசம்பர் 16-ம் தேதி பணியில் சேர்ந்தார். இதே போல், ஆசிரியர் தகுதி தேர்வில் தோல்வியடைந்த திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு கொடா நகரைச் சேர்ந்த தமிழ்ச்செல்வன் மனைவி சுமதி என்பவரும் போலி ஆவணங்கள் மூலம் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே இல்லோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் பொருளாதார ஆசிரியராக கடந்த டிசம்பர் 19-ம் தேதி பணியில் சேர்ந்துள்ளார்.

தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் காலியாக உள்ள தமிழாசிரியர் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் வளர்ச்சி இயக்ககத்தில் காலியாக உள்ள 2 தமிழாசிரியர் பணியிடங்கள், 1 ஓட்டுனர் பணியிடம், 2 அலுவலக உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இணைய சேவை மையங்களில் பாட நூல்களுக்கு விண்ணப்பிக்கலாம்

தமிழக அரசின் இணைய சேவை மையங்களில், பாட நூல்களுக்கு விண்ணப்பிக்கலாம். ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரையில் பயிலும் மாணவர்களுக்காக, பாட நூல்கள் இணைய வழியில் விற்பனை செய்யப்படுகின்றன. மேலும், இணைய வழி மூலமாகப் பணம் செலுத்த முடியாத மாணவர்களுக்கும் எளிதில் பாடநூல்கள் கிடைத்திட அரசு பொது சேவை மையம் மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


அவர்கள் இணைய சேவை மையத்திலேயே பாடநூல் நிறுவன இணையதளம் மூலம் முன்பதிவு செய்து அதற்குரிய பணத்தைச் செலுத்தலாம். கூடுதல் கட்டணங்கள் ஏதும் இல்லை. முன்பதிவு செய்வோரின் வீட்டு முகவரிக்கே புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

மெட்ரிக் பள்ளிகள் இயக்குனராக ராமேஸ்வர முருகனுக்கு - கூடுதல் பொறுப்பு

இயக்குனர் பதவிக்கு புதிய அதிகாரி : பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டில் உள்ள, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனராக பிச்சை பணியாற்றினார். 2013ல் இப்பொறுப்புக்கு வந்த பிச்சை, நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார். காலியான பணியிடத்தில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான, எஸ்.சி.இ.ஆர்.டி.,யின் இயக்குனர் ராமேஸ்வர முருகனுக்கு, கூடுதல் பொறுப்பு தரப்பட்டு உள்ளது.

ஏற்கனவே, பாடநுால் கழக செயலராக இருந்த பிச்சைக்கு, கூடுதல் பொறுப்பு அளித்த பின்னரே, முழு பொறுப்பு தரப்பட்டது. அதே போல், ராமேஸ்வர முருகனுக்கும் விரைவில் முழு பொறுப்பு அளிக்கப்படும் என, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

TNPSC Departmental Exam - Text Books

List of Books
Constitution Of India
Fundamendal Rules of Tamilnadu
Tamil Nadu State and Subordinate Rules
Travelling Allowance Rules-2005  (Annexure I)
Tamil Nadu Budget Manual - Volume I (Pages 1-96,  97-218)
Tamil Nadu Pension Rules, 1978 (Pages 1-80,  81-150, 151-270, 271-340 )
Tamil Nadu Treasury Code - Volume I (Pages 1-76,  77-150, 151-220, 221-296, 297-380, 381-423 )
Tamil Nadu Treasury Code - Volume II (Pages 1-102,  103-300, 301-357 )
Tamil Nadu Account Code- Volume I (Pages 1-88,  89-152)
Tamil Nadu Account Code- Volume II (Pages 1-86,  87-175)
Tamil Nadu Account Code- Volume III (Pages 1-88,  89-188, 189-288, 289-388, 389-511)
Tamil Nadu Financial Code - Volume I (Pages 1-100,  101-190, 191-290, 291-400, 401-520, 521-641 )
Tamil Nadu Financial Code - Volume II (Pages 1-180,  181-340, 341-490, 491-600 )

பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்குகிறது: 8 லட்சத்து 82 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள்

பிளஸ்-2 தேர்வு நாளை தொடங்குகிறது. 8 லட்சத்து 82 ஆயிரத்து 44 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

தமிழ்நாட்டில் பிளஸ்-2 தேர்வு நாளை(வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. ஏப்ரல் 1-ந் தேதி வரை நடக்கிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 6,550 பள்ளிகளில் இருந்து 8,39,697 மாணவ-மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள்.

ஆசிரியர்கள் அதிர்ச்சி:மெட்ரிக் அதிகாரிக்கு பொதுத்தேர்வு பொறுப்பா?

தனியார் பள்ளிகளின் ஆதிக்கம் நிறைந்த நாமக்கல் மாவட்டத்திற்கு, பொதுத்தேர்வு பொறுப்பு அதிகாரியாக, மெட்ரிக் பள்ளி இணை இயக்குனரை நியமித்துள்ளது, அரசு பள்ளி ஆசிரியர்களை அதிர்ச்சியடையச் செய்து உள்ளது. பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில், 'மாநில ரேங்க்' 
பெறுவதிலும், தேர்ச்சி சதவீதத்திலும், 10 ஆண்டுகளாக, நாமக்கல் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன.

இந்நிலையில், நாமக்கல் மாவட்ட தேர்வு பொறுப்பு அதிகாரியாக, மெட்ரிக் பள்ளிகளின் இணை இயக்குனர் ஸ்ரீதேவி நியமிக்கப்பட்டு உள்ளார். இது, அரசு பள்ளி ஆசிரியர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இதுகுறித்து, அவர்கள் கூறியதாவது:தனியார் மெட்ரிக் பள்ளி கள் விதிமீறல்கள் மீது, மெட்ரிக் அதிகாரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அங்கீகாரம் இல்லாமல், நுாற்றுக்கணக்கான பள்ளிகள் இயங்குவதை தடுக்க முடியவில்லை. எனவே, தேர்வு பணியில் இருந்து, மெட்ரிக் பள்ளி அதிகாரியை நீக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

ஏப்ரல் முதல் வாகனங்களில் வேக கட்டுபாடு கருவி கட்டாயம்

சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடு கருவி ஏப்ரல் 01 முதல் கட்டாயமாக்கப்பட உள்ளது.

சாலை விபத்துகளில் ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். விபத்துக்கள் அதிகம் நடக்க வாகனங்கள் அதிவேகமாக செல்வதே காரணம். இதை தொடர்ந்து வாகனங்களில் வேக கட்டுப்பாடு கருவி பொருத்த போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

24ல் சி.இ.ஓ.,க்கள் உண்ணாவிரதம்

மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் முதன்மை கல்வி அதிகாரிகள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம், சென்னை எழும்பூரில், சங்க தலைவர் சிவா. தமிழ்மணி தலைமையில் நடந்தது. பின், சிவா.தமிழ்மணி கூறியதாவது: தமிழகத்தில் மிகவும் பழமையான மனப்பாட அடிப்படையிலான கல்வி முறை உள்ளது.

இபிஎஃப் தொகை மீதான புதிய வரியை திரும்பப் பெற மத்திய அரசு பரிசீலனை

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் (இபிஎஃப்) இருந்து 60 சதவீத தொகை திரும்பப் பெறப்படும்போது, அதன்மீது விதிக்கப்படவுள்ள வரியை திரும்பப் பெறுவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி திங்கள்கிழமை தாக்கல் செய்த 2016-17ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில், தொழிலாளர்கள் தாங்கள் பணியில் இருந்து ஓய்வு பெறும்சமயத்தில் இபிஎஃப்-பில் இருந்து 60 சதவீத தொகையை திரும்பப் பெறும்போது வரி விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் புதிய வரி, வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் தேதி முதல்அமலுக்கு வரும் என்றும் பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டிருந்தது. 

பகுதி நேர சிறப்பாசிரியர்கள் 'பணி நிரந்தரத்திற்கு வாய்ப்பு இல்லை'

அரசு பள்ளிகளில், கணினி, கைவினை, கலை, ஓவியம், இசை என, பல்வேறு வகை சிறப்பு பாடப்பிரிவுகளில், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி, கடந்த வாரம் தொடர் போராட்டங்களை நடத்தினர்.இதையடுத்து, சங்க பிரதிநிதிகளை அழைத்து, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் பேச்சு நடத்தினார்.

நரிமணம் ஊ.ஒ.தொ.பள்ளியில் நடைப்பெற்ற "எண்பெரும் விழாவில்" முதன்மைக் கல்வி அலுவலர்(SSA) கலந்துக் கொண்டுசிறப்பித்தார்


தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நாகப்பட்டினம் மாவட்ட செயலாளர் வி.அருள்வில்லியம் தலைமையாசிரியராக பணிபுரியும் நரிமணம் ஊ.ஒ.தொ.பள்ளியில் நடைப்பெற்ற "எண்பெரும் விழாவில்" முதன்மைக் கல்வி அலுவலர்(SSA)  கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு பரிசளிப்பும், புதிய மாணவர்கள் சேர்க்கை நிகழ்ச்சியும்......


தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின் அரசாணை வெளியிட தடை

'தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின், புதிய திட்டங்களை துவக்க, அரசாணை பிறப்பிக்க கூடாது' என, அனைத்து துறை செயலர்களுக்கும், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி கடிதம் எழுதி உள்ளார்.அனைத்து துறை செயலர்களுக்கும், ராஜேஷ் லக்கானி எழுதியுள்ள கடிதம்:இதற்கு முன் நடந்த தேர்தல்களின்போது, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, இரு நாட்களுக்கு பின், முன் தேதியிட்டு அரசாணைகள் பிறப்பிக்கப்பட்டதாக, புகார் எழுந்தது. அதுபோன்ற புகார் இம்முறை வரக்கூடாது. இவ்வகை புகார்களை தவிர்க்க, தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும், துறை அலுவலர்கள், அரசாணை பதிவேடில், கடைசியாக பதிவு செய்யப் பட்டுள்ள அரசாணை பக்கத்தை, நகல் எடுத்து, தமிழக தலைமை தேர்தல் அதிகாரிக்கு, கையெழுத்திட்டு அனுப்பி வைக்க வேண்டும்.

பி.எப்., நிதிக்கு வரியா? மத்திய அரசு விளக்கம்

புதுடில்லி: பி.எப்., நிதியை ஓய்வுக்கு பிறகு திரும்பப் பெறும்போது, வருமான வரி வசூலிக்கப்படும் என தகவல் வெளியாகின. இது தொடர்பாக மத்திய வருவாய் துறை செயலர் ஹஸ்முக் ஆதியா கூறுகையில், தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியை ஓய்வுக்கு

தமிழகத்தில் 16 தாலுகாக்கள் புதிதாக துவக்கம்

தமிழகத்தில் புதிதாக, நான்கு வருவாய் கோட்டங்களையும், 16 தாலுகாக்களையும், முதல்வர் ஜெயலலிதா துவக்கி வைத்தார்.சென்னை - எழும்பூர், மதுரை - மேலுார், கோவை வடக்கு, விருதுநகர் மாவட்டம், சாத்துார் என, புதிதாக நான்கு வருவாய் கோட்டங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.அதே போல்,

ஏப்ரல் முதல் வாகனங்களில் வேக கட்டுபாடு கருவி கட்டாயம்

சாலை விபத்துக்களை தடுக்கும் வகையில் வாகனங்களுக்கான வேக கட்டுப்பாடு கருவி ஏப்ரல் 01 முதல் கட்டாயமாக்கப்பட உள்ளது.

சாலை விபத்துகளில் ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். விபத்துக்கள் அதிகம் நடக்க வாகனங்கள் அதிவேகமாக செல்வதே காரணம். இதை தொடர்ந்து வாகனங்களில் வேக கட்டுப்பாடு கருவி பொருத்த போக்குவரத்து துறை உத்தரவிட்டுள்ளது.

மே.2016 துறை தேர்வுகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது

CRC training (19.3.16) for primary and upper primary teachers

CRC training for primary and upper primary teachers

State level training 15. 3. 16 (16 districts )
16. 3. 16 (14 districts )

District level training
17. 3. 16

CRC TRAINING for primary and upper primary teachers

19. 3. 16

Topic :

  Discussion Children Achievement

IGNOU - Revision of Term End Examination fee from Rs.60 to Rs 120 per course

உதவித்தொடக்கக்கல்வி அலுவலர் பதவியிலிருந்து உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் பதவிக்கு தகுதி வாய்ந்தோர் பட்டியல் கேட்டு உத்தரவு


299 ரூபாயில் 2 ஜிபி-க்கு இணைய சேவை: தமிழக அரசு தொடக்கம்


குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் இணைய சேவை வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடக்கிவைத்தார்.

அரசு கேபிள் ஆபரேட்டர்கள் வாயிலாக மாநிலம் முழுவதும் அதிகவேக அகண்ட அலைவரிசை சேவைகள் (Broadband Services)  மற்றும் இதர இணைய சேவைகள் (Internet Services) குறைந்த கட்டணத்தில் அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என முதல்வர் ஜெயலலிதா

மத்திய பட்ஜெட்: விலை உயரும் பொருட்கள்... விலை குறையும் பொருட்கள்

 மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, மத்திய பட்ஜெட்டில் அறிவித்த வரி காரணமாக, கார்கள், சிகரெட்கள், நிறுவனங்களின் ஆடைகள், விமான பயணம் ஆகியவற்றிற்கு செலவு அதிகம் செய்ய வேண்டியிருக்கும். அதேநேரத்தில், காலணிகள், சோலார் விளக்குகள் மற்றும் ரவுட்டர்கள் மீதான விலை குறையும்

இவற்றின் மீதான கூடுதல் வரி, உள்கட்டமைப்பு தீர்வைஸ் வரி ஆகியவை காரணமாக, வெளியே சென்று சாப்பிடுவது உள்பட சிலவற்றிற்கு கூடுதல் பணம் செலவு செய்ய வேண்டியிருக்கும். முந்தைய நிதியமைச்சர்கள் போலவே, தற்போதைய அமைச்சர் அருண் ஜெட்லி புகையிலை மீதான விலையையும் உயர்த்தியுள்ளார்.

விலை அதிகரிக்கும் பொருட்கள்:

பெட்ரோல் விலை குறைப்பு, டீசல் விலை உயர்வு

பெட்ரோல் விலையை லிட்டருக்கு ரூபாய் 3.02 குறைத்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. டீசல் விலையை லிட்டருக்கு ரூபாய் 1.47 அதிகரித்து எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. இந்த விலைமாற்றங்கள்  29/02/2016 நள்ளிரவு முதல் அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

வீட்டுக்கடன்களுக்கு சிறப்புச் சலுகைகள்: அருண் ஜேட்லி அறிவிப்பு

வீட்டுக்கடன்களுக்கு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளார் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி.நாடாளுமன்ற மக்களவையில் இன்று
மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி 2016 - 17ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.அதில்,

ஆண்டுக்கு ரூ5 லட்சத்துக்கும் குறைவான வருமானம் உள்ளோருக்கு ரூ3,000 வரிசலுகை

பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் 3வது பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, மக்களவையில் இன்று தாக்கல் செய்தார்.பட்ஜெட் தாக்கலின் போதுபெரும்பாலானோர்களால் எதிர்பார்க்கப்பட்ட வருமான வரிச்சலுகை அறிவிக்கப்பட்டது.

ஓய்வூதிய திட்டம்: புதிய மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை அறிவிப்பு

மத்திய அரசின் புதிய ஊழியர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்திற்கான பங்களிப்பில் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய நிதியமைச்சர்

கோரிக்கை ஏற்கப்பட்டதால்ஆசிரியர்(ssta) போராட்டம் 'வாபஸ்'

கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள், தங்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.தமிழக தொடக்க பள்ளிகளில், 2009 ஜூன், 1க்கு பின், இடைநிலை ஆசிரியராக நியமிக்கப்பட்டவர்களுக்கு, அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில் முரண்பாடு ஏற்பட்டது. இதை சரிசெய்ய கோரி, ஆசிரியர்கள் பல முறை மனு அளித்தும் பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை.

மத்திய பட்ஜெட் 2016-17 : முக்கிய அம்சங்கள்

வேளாண் துறைக்கு ரூ.35,984 கோடி ஒதுக்கீடுபிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014 மே 26-ம் தேதி பதவியேற்றது. மத்திய அரசில் நிதியமைச்சராக பொறுப்பு வகிக்கும் ஜேட்லி 3-வது முறையாகதனது பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து உரையாற்றி வருகிறார்.மத்திய பொது பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்:

தேசிய திறனறி தேர்வு ரிசல்ட் வெளியீடு

பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்கள், ஆராய்ச்சி படிப்பு வரை கல்வி உதவித்தொகை பெற வேண்டுமெனில், மத்திய அரசு சார்பில் நடத்தப்படும், தேசிய திறனறித் தேர்வில் வெற்றி பெற வேண்டும். நடப்பு கல்வி ஆண்டுக்கான திறனறித் தேர்வில், மாநில அளவிலான முதல் கட்ட தேர்வு, நவம்பரில் நடந்தது.

மத்திய பட்ஜெட் 2016-17:வருமான வரி விகிதங்களில் மாற்றம் ஏதும் இல்லை.

* வருமான வரி விகிதங்களில் மாற்றம் ஏதும் இல்லை.

*வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் புதிதாக இணையும் ஊழியர்களுக்கான 8.33% பங்களிப்பை முதல் மூன்று ஆண்டுகளுக்கு அரசே ஏற்கும்.

* வாடகை வீட்டில் வசிக்கும் வருமான வரிதாரருக்கு ரூ60,000 வரை வரிச்சலுகை. வாடகை வீட்டில் வசிப்போருக்கு இதுவரை சலுகை ரூ.24,000 ஆக இருந்தது.
* 5 லட்சம் வருமானம் ஈட்டுபவர்களுக்கு 5000 ரூபாய் வரை சலுகை


* வீட்டு வாடகைக்கான சலுகை ஆண்டுக்கு 24,000த்திலிருந்து 60,000த்துக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது.


* 35 லட்சம் ரூபாய்க்கு உட்பட்ட வீட்டுக்கடன் வட்டிக்கு ரூ.50 ஆயிரம் ரூபாய் வரிச் சலுகை. வீட்டின் மதிப்பு ரூ.50 லட்சத்துக்கு உட்பட்டிருந்தால் மட்டுமே இந்தச் சலுகை செல்லுபடியாகும்.

* 60 சதுர மீட்டருக்குள் கட்டப்படும் குறைந்த விலை வீடுகளுக்கு சேவை வரியில் இருந்து விலக்கு

மத்திய பொது பட்ஜெட் :கல்வித் துறை முக்கிய அம்சங்கள்

1. 10 அரசு கல்வி நிறுவனங்களும், 10 தனியார் கல்வி நிறுவனங்கள் உலகத்தரத்துக்கு மேம்படுத்தப்படும்.

2. பள்ளிச் சான்றிதழ் மற்றும் பட்டயப் படிப்புச் சான்றிதழ்கள் டிஜிட்டல் ஆவணங்களாகவும் வழங்கப்படும்.

3. அடுத்த இரண்டு ஆண்டுகளில் புதிதாக 62 நவோதயா பள்ளிகள் தொடங்கப்படும்.

செ.மு அவர்களின் 80 ஆவது பிறந்தநாள் விழா-அழைப்பிதழ்


கே.வி., மாணவர் சேர்க்கை மார்ச் 10 வரை அவகாசம்

தமிழகம் முழுவதும், கே.வி., எனப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க, மார்ச், 10 வரை அவகாசம் தரப்பட்டு உள்ளது.தமிழகத்தில், மத்திய அரசின் கே.வி., பள்ளிகள், 43 இடங்களில் உள்ளன.
இப்பள்ளிகளில், முதல் வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்ப வினியோகம், பிப்., 18ல் துவங்கியது. 'ஆன்லைனில்' பதிவு செய்து, விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.வரும் கல்வியாண்டில், முதல் வகுப்பு சேர, ௨௦௦௯ ஏப்., 1க்கு, பின், ௨௦௧௧ ஏப்., 1க்குள் பிறந்திருக்க வேண்டும். 

சமத்து மாணவர்களுக்கு பரிசு மத்திய அமைச்சர் அறிவிப்பு

மாணவியரிடம், ஒழுக்கத்துடனும், மரியாதையுடனும் நடந்துகொள்ளும் மாணவர்களை, பரிசளித்து கவுரவிக்க உள்ளதாக, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத் துறை அமைச்சர் மேனகா தெரிவித்தார். டில்லிக்கு அருகில் உள்ள ஹரியானா மாநிலம் பரிதாபாத்தில், மானவ் ரச்னா பல்கலையில் நடந்த விழாவில் பங்கேற்ற, அமைச்சர் மேனகா, கூறியதாவது:

பிளஸ் 2 தேர்வில் முறைகேடா? 15 வகை தண்டனை அறிவிப்பு

இந்த ஆண்டு, பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச், 4ம் தேதியும்; 10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச், 15ம் தேதியும் துவங்குகிறது. தேர்வில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவர்களுக்கான தண்டனைகளை, தேர்வுத்துறை பட்டியலிட்டுள்ளது. அதன் விவரம்:
1.துண்டுத்தாள், புத்தகம், விடைக்குறிப்புகள் வைத்திருந்து, அதை கண்காணிப்பாளர் கவனிக்கும் முன், மாணவர் தானாகவே முன் வந்து, கண்காணிப்பாளரிடம் கொடுத்தால், மாணவரைஎச்சரிக்கை செய்து தேர்வு எழுத அனுமதிக்கலாம். அதன் பின் குறிப்புகள் வைத்திருந்தால், விளக்கம் எழுதி வாங்கி விட்டு, தேர்வை எழுத தடை செய்து வெளியேற்றப்படுவர்.

பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி. தேர்வுகளை பயம் இன்றி எழுதுங்கள் மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் வேண்டுகோள்.

பிளஸ்–2, எஸ்.எஸ்.எல்.சி.தேர்வுகளை பயம் இன்றி சிறப்பாக எழுதுங்கள் என்று மாணவர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.தேர்வு தொடங்குகிறதுதமிழ்நாட்டில் பிளஸ்–2 தேர்வும், எஸ்.எஸ்.எல்.சி. தேர்வும் விரைவில் தொடங்க இருப்பதால், அதை சந்திக்க மாணவ–மாணவிகள் மும்முரமாக தயாராகிக் கொண்டு இருக்கிறார்கள்.
அவர்களுக்கு வேண்டுகோள் விடுக்கும் வகையில், பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் அனைத்துமாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அந்தகடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது:–

இன்று வி.ஏ.ஓ., தேர்வு; 10 லட்சம் பேர் எழுதுகின்றனர்

கிராம நிர்வாக அலுவலர் என்ற, வி.ஏ.ஓ., பதவிக்கான எழுத்துத்தேர்வு, இன்று நடக்கிறது. இதில், 10 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றனர்.தமிழக வருவாய் துறையில், காலியாக உள்ள, 813 வி.ஏ.ஓ., பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், எழுத்துத்தேர்வு அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வு, இன்று தமிழகம் முழுவதும், 244 இடங்களில், 3,466 மையங்களில் நடக்கிறது

web stats

web stats