rp

Blogging Tips 2017

u/s 87 A.வரித்தொகையில் ரூ-2000/- தள்ளுபடி ஓர் விளக்கம். 5 லட்சம் என்பது.மொத்த வருமானம் அல்ல,வரிக்குட்பட்ட வருமானமே

அரசு வருமானவரி இனையதளத்தில் உள்ள வருமானவரி கணிப்பான் கொண்டு செய்யப்பட்ட கணக்கு
http://law.incometaxindia.gov.in/DIT/Xtras/income_taxcalc.aspx

u/s 87 A.வரித்தொகையில் ரூ-2000/- தள்ளுபடி ஓர் விளக்கம். 5 லட்சம் என்பது.மொத்த வருமானம் அல்ல,வரிக்குட்பட்ட வருமானமே

http://law.incometaxindia.gov.in/DIT/Xtras/income_taxcalc.aspx
இது அரசின் அதிகார்பூர்வ வருமானவரித்துறை வலைதளம் .
இதில் income tax calculator வெளியிடப்பட்டுள்ளது.அதில்
மொத்த வருமானம்
550000  என உள்ளீடு செய்து
u/c 80cன்படி அதிகபட்ச சேமிப்புத்தொகை 100000 (ஒருலட்சம்)கழித்தபின்பு
வரும் தொகை-450000
அதற்கு வருமான வரி கணக்கிட்டுள்ளது பாருங்கள்:
சாதாரணமாக செலுத்த வேண்டியவரி ரூ-25000/-
ஆனால் செலுத்தவேண்டிய வரி-ரூ-23000/-
அதாவது தள்ளுபடி-ரூ-2000 போக
செலுத்தவேண்டிய வரி-23000 என தெளிவாக கணக்கிடுகிற்து
எனவே net taxable income-5,00,000 என்பதே சரியானது.மொத்த வருமானம் 5 லட்சம் என்பது தவறானது.


u/s 87 A.வரித்தொகையில் ரூ-2000/- தள்ளுபடி
சரியான தெளிவுரையாக இதை எடுத்துக்கொள்ளலாம்
.கருவூல அதிகாரிகள் மறுத்தால்
2000 தள்ளுபடி பெறுவோர் சற்றே
பொறுத்து பின்னர்
சம்பள பில் அணுப்பவும்.


அவசரம் வேண்டாம்
சரியான தெளிவுரை
அவர்களுக்கு புரியும் வரை
பொறுப்போம்
மேலும் விவரங்களுக்கு
http://www.incometaxindia.gov.in/home.asp#

மின் கட்டணம் செலுத்த புதிய வசதி.

30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட 110 நகரங்களில் வசிப்பவர்கள், மின் கட்டணத்தை எந்த ஊரிலும் செலுத்தும் புதிய வசதியை தமிழ்நாடு மின் வாரியம் அமல்படுத்த உள்ளது.

பொதுமக்களின் வரவேற்பை பொறுத்து இந்த புதிய திட்டம் மாநிலம் முழுவதும் வரிவுப்படுத்தப்படும் என்று மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தற்போது மின் கட்டணம் செலுத்துவதற்கு பயன்பாட்டில் உள்ள வழிமுறைகளும் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Do you have an android phone then you Must read this !!

Android Phone Battery life is one of the biggest troubles that we are facing in Android world. In the past will look on the number days of battery life now we are looking the number of hours of battery life. So are there any realistic things you can do to improve your phone’s battery life, other than just switching it off, putting it a sock drawer and hoping no one ever wants to call you?

Reduce the brightness of the screen: Mostly everyone will increase the brightness will watching videos which will reduce the battery life. If needed you can increase the brightness otherwise kept it low. We can set Auto brightness coupled with power saving mode (found on most Samsung, LG, Sony, and some Motorola devices) will conservatively adjust the display to the surroundings to only the brightness necessary.

15,800 எம்பிபிஎஸ் கூடுதல் சேர்க்கை இடங்கள் உருவாக்கம் : குலாம் நபி ஆசாத்

இந்தியாவில் மக்கள் தொகைக்கு ஏற்ப மருத்துவர்களின் எண்ணிக்கையையும் அதிகரிக்க வேண்டும் என்பதன் அடிப்படையில் கூடுதலாக 15,800 எம்பிபிஎஸ் சேர்க்கை இடங்கள் உருவாக்கப்படும் என்று மக்களவையில் வெள்ளிக்கிழமை பேசிய மத்திய அமைச்சர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார்.
நாட்டில் தற்போது 1700 பேருக்கு 1 மருத்துவர் என்ற விகிதத்திலேயே நிலைமை உள்ளது. இது சரியானது அல்ல. மேலும், உயர்மட்ட நிபுணர் குழு திட்டக் குழுவிடம் அளித்துள்ள அறிக்கையில், நாட்டில் புதிதாக 187 மருத்துவக் கல்லூரிகள் துவக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது என்றார்.

வாசிப்பு திறன் பதிவேடு -அளவுகோல்

ஓய்வு பெறும் வயதை 65 ஆக உயர்த்த நாடாளுமன்றக் குழு பரிந்துரை

அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை 60ல் இருந்து 65 ஆக உயர்த்த நாடாளுமன்றக் குழு பரிந்துரை செய்துள்ளது.  இந்த பரிந்துரை அறிக்கை வெள்ளிக்கிழமை அன்று மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்துக்கு ஏற்ப, ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க நாடாளுமன்ற குழு இந்த பரிந்துரையை செய்திருப்பதாகக் கூறப்படுகிறது.

10ம் வகுப்பில் முப்பருவ முறை வரும் : பொதுத் தேர்வு ரத்தாகுமா?

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் அடுத்த ஆண்டு முதல் முப்பருவ முறை(ட்ரைமஸ்டர்) வருகிறது. அதற்காக 2 பிரிவுகளாக புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் பத்தாம் வகுப்புக்கு பொதுத் தேர்வு உண்டா இல்லையா என்பது குறித்து குழப்பம் நீடித்து வருவதால் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் நடைமுறையில் இருந்த, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், மாநில கல்வி திட்டம், ஓஎஸ்எல்சி ஆகிய 4 கல்வி வாரியங்கள் கலைக்கப்பட்டு பொதுக் கல்வி வாரியம் கடந்த 2008ம் ஆண்டு அமைக்கப்பட்டது.


இதையடுத்து, அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்திலும் சமச்சீர் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் முப்பருவ முறையை அரசு கொண்டு வந்தது. கடந்த 2009ம் ஆண்டு முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளிலும் முப்பருவ முறை நடைமுறைக்கு வந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் முப்பருவ முறை அனைத்து வகுப்புகளுக்கும் படிப்படியாக கொண்டு வரப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி இந்த ஆண்டு 9ம் வகுப்புக்கு முப்பருவ முறை நடைமுறைக்கு வந்துள்ளது. அடுத்த ஆண்டு 10ம் வகுப்புக்கு முப்பருவ முறை உண்டா இல்லையா என்ற குழப்பம் நிலவி வந்தது.


இதற்கிடையே, 10ம் வகுப்புக்கான புத்தகங்கள் முப்பருவ முறைக்கு ஏற்ப பிரித்து அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கேற்ப முதல் பருவத்துக்கான புத்தகங்கள் எழுதப்பட்டு அரசு அனுமதிக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகங்கள் தமிழ், ஆங்கிலம் சேர்த்து ஒரு புத்தகமாகவும், அறிவியல், கணக்கு, சமூக அறிவியல் சேர்த்து ஒரு புத்தகமாகவும் அச்சிட அரசு திட்டமிட்டுள்ளது. அரசு விரைவில் இதற்கு அனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசு பள்ளி கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்தது போல, மாநில அரசு பாடத் திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு பொதுத் தேர்வு நடத்துவதா வேண்டாமா என்பது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது. இதற்கு ஆசிரியர்கள் இடையே பெருத்த எதிர்ப்பு உள்ளது.

தகுதி தேர்வில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் தேர்ச்சி: பணியில் சேர மே மாத இறுதியில் நியமன ஆணை வழங்க வேண்டும் முதல்-அமைச்சருக்கு கோரிக்கை


ஆசிரியர் தகுதி தேர்வில் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்று உள்ளதால், பணியில் சேருவதற்கான நியமன ஆணை மற்றும் பணியில் சேரும் காலத்தை மே மாத இறுதியில் இருக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல் -அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப் பட்டு உள்ளது.

கோரிக்கை மனு
தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சட்ட பாதுகாப்பு பேரவை தலைவர் அபூபக்கர் சித்திக், தமிழக முதல்-அமைச்சருக்கு அனுப்பியுள்ள ஒரு கோரிக்கை மனுவில் கூறி இருப்பதாவது:-

ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்களில் தளர்வு செய்திருப்பதை தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சட்ட பாதுகாப்பு பேரவை வரவேற்கிறது. தனியார் பள்ளிகளில் பணியாற்றி வரும் பெரும்பான்மையான ஆசிரியர்கள் தான் இந்த தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்கள் தான் அரசு பள்ளி ஆசிரியர்களாக பணி நியமனம் செய்யப்பட உள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு - வெயிட்டேஜ் முறையால் பாதிப்பு - எஸ். சீனிவாசன்

TET - TET WEIGHTAGE - ARTICLE - ONLY CONSIDERING THE MARKS SCORED IN THE TET REG ARTICLE CLICK HERE...

எஸ். சீனிவாசன், அருப்புக்கோட்டை

அடுத்த கல்வியாண்டு முதல் 10ம் வகுப்புக்கு முப்பருவமுறை: பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும்?

பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் அடுத்த ஆண்டு முதல் முப்பருவமுறை வருகிறது. அதற்காக 2 பிரிவுகளாக புத்தகங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
பொதுத் தேர்வு உண்டா இல்லையா என்பது குறித்து குழப்பம் நீடித்து வருவதால் பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில் நடைமுறையில் இருந்த, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், மாநில கல்வி திட்டம் உள்ளிட்ட 4 கல்வி வாரியங்கள் கலைக்கப்பட்டு பொதுக் கல்வி வாரியம் கடந்த 2008ம் ஆண்டு அமைக்கப்பட்டது.

இதையடுத்து, அரசு பள்ளிகள், தனியார் பள்ளிகள் அனைத்திலும் சமச்சீர் கல்வி முறை அறிமுகம் செய்யப்பட்டது. பின்னர் முப்பருவ முறையை அரசு கொண்டு வந்தது. கடந்த 2009ம் ஆண்டு முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை அனைத்து பள்ளிகளிலும் முப்பருவ முறை நடைமுறைக்கு வந்தது. அடுத்தடுத்த ஆண்டுகளில் முப்பருவ முறை அனைத்து வகுப்புகளுக்கும் படிப்படியாக கொண்டு வரப்படும் என்று அரசு அறிவித்தது. அதன்படி இந்த ஆண்டு 9ம் வகுப்புக்குமுப்பருவ முறை நடைமுறைக்கு வந்துள்ளது. அடுத்த ஆண்டு 10ம் வகுப்புக்கு முப்பருவ முறை உண்டா இல்லையா என்ற குழப்பம் நிலவி வந்தது. இதற்கிடையே, 10ம் வகுப்புக்கான புத்தகங்கள் முப்பருவ முறைக்கு ஏற்ப பிரித்து அச்சிட முடிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கேற்ப முதல் பருவத்துக்கான புத்தகங்கள் எழுதப்பட்டு அரசு அனுமதிக்காக வைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகங்கள் தமிழ், ஆங்கிலம் சேர்ந்து ஒரு புத்தகமாகவும், அறிவியல், கணக்கு, சமூக அறிவியல் சேர்த்து ஒரு புத்தகமாகவும் அச்சிட அரசு திட்டமிட்டுள்ளது. அரசு விரைவில் இதற்குஅனுமதி வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய அரசு பள்ளி கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்தது போல, மாநில அரசு பாடத்திட்டத்தின் கீழ் நடத்தப்படும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த ஆண்டு பொதுத் தேர்வு நடத்துவதா வேண்டாமா என்பது குறித்தும் அரசு ஆலோசித்து வருகிறது.

ஆசிரியர்கள் ஆன்-லைன் பதிவை பள்ளிகளிடம் ஒப்படைக்கக்கூடாது: தொடக்க கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை.

ஒன்றிய அளவிலான, தொடக்க, நடுநிலைப்பள்ளி, ஆசிரியர்களின் விபரங்களை, ஆன்-லைனில் பதிவேற்றம் செய்வதை, அந்தந்த பள்ளிகளிடம் ஒப்படைக்கக்கூடாது, என தொடக்க கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.
"ஒன்றிய அளவில் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின், 25 வகையான விபரம், உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் செயல்படும் கல்வி தகவல் மேலாண்மை முறை (இ.எம்.ஐ.எஸ்.,) மூலம் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது. இதை உள்ளீடு செய்யும் அதிகாரம், அந்தந்த உதவி தொடக்க கல்வி அலுவலகத்துக்கு, மட்டுமே உள்ளது. ஆசிரியர்களால் அளிக்கப்படும் விபரங்கள், உதவி கல்வி அலுவலகத்தில் பராமரிக்கப்படும், ஆசிரியர்களின் பணிப் பதிவேட்டுடன், சரிபார்த்த பின்னரே, இணையதளத்தில் உள்ளீடு செய்ய வேண்டும். ஆனால், சில ஒன்றியங்களில், துவக்க மற்றும் நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, நேரடியாக உதவி கல்வி அலுவலகங்களுக்கு வழங்கப்பட்டுள்ள, 'யூசர் ஐ.டி., பாஸ்வேர்டு' வழங்கப்பட்டு, அப்பள்ளியில் பணிபுரியும், ஆசிரியர்களின் விபரங்கள், இணையதளத்தில் உள்ளீடு செய்யப்படுகிறது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி மதிப்பெண்ணை 82 என நிர்ணயித்துள்ளதால் கூடுதலாக 10 ஆயிரம் பேர் வரை தேர்ச்சி பெற வாய்ப்பு

ஆசிரியர் தகுதித் தேர்வில் 5 சதவீத மதிப்பெண் சலுகைக்குப் பிறகு தேர்ச்சி மதிப்பெண் 82 ஆக நிர்ணயிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இதையடுத்து, ஆசிரியர் தகுதித் தேர்வில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் 150-க்கு 82 மதிப்பெண் பெற்றாலே தேர்ச்சி பெறலாம்.

2,269 இடங்களை நிரப்ப மே 18ல் குரூப் - 2 தேர்வு

"உதவியாளர், குமாஸ்தா உள்ளிட்ட பணிகளில், காலியாக உள்ள, 2,269 இடங்களை நிரப்ப, மே, 18ல், போட்டி தேர்வு நடக்கும்' என, அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.,) அறிவித்து உள்ளது. தமிழக அரசின் பல்வேறு துறைகளில், உதவியாளர், "கிளர்க்' என்ற குமாஸ்தா நிலையில், 2,269 பணியிடங்கள், காலியாக உள்ளன. 2012 - 13ல் ஏற்பட்ட இந்த காலி இடங்களை நிரப்ப, மே, 18ல், போட்டி தேர்வு நடக்கும் என, டி.என்.பி.எஸ்.சி., நேற்று அறிவித்தது. பட்டதாரிகள், www.tnpsc.gov.in என்ற இணையதளம் வழியாக, மார்ச், 5 வரை விண்ணப்பிக்கலாம். வங்கி அல்லது அஞ்சலகங்களில், கட்டணம் செலுத்த, மார்ச், 7 கடைசி நாள். கூடுதல் விவரங்களுக்கு, தேர்வாணைய இணையதளத்தை பார்வை இடலாம்.

பிளஸ் 2 செய்முறை தேர்வு மதிப்பெண் பிப்.28க்குள் ஆன்-லைனில் பதிய உத்தரவு



பிளஸ் 2 செய்முறை தேர்வு மதிப்பெண்களை, பிப்.,28க்குள் ஆன்-லைனில் பதிய, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு, மார்ச் 3ல் துவங்குகிறது. இதற்கிடையில் அறிவியல், தொழிற்பிரிவு பாட மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகளை நடத்த, மேல்நிலைக்கல்வி தேர்வு வாரியம், முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியது.

மாணவரை போல், ஆசிரியர்களை நிற்க வைத்து தண்டனை : தேர்வுத் துறை தடாலடி நடவடிக்கை

பொதுத்தேர்வு எழுதும் மாணவ, மாணவியர் விபரங்களை சரிவர பூர்த்தி செய்யாத ஆசிரியர் மற்றும் தலைமை ஆசிரியர்களை, நேற்று, இயக்குனரகத்திற்கு வரவழைத்து, நீண்ட நேரம் நிற்க வைத்து, தேர்வுத் துறை, தண்டனை அளித்தது.
"பொதுத் தேர்வு எழுதும் மாணவ, மாணவியரின் முழுமையான விபரங்களை, ஒரு படிவத்தில் பூர்த்தி செய்து, அந்த விபரங்கள் சரியானவை; உண்மையானவை என, சம்பந்தபட்ட மாணவர், வகுப்பு ஆசிரியர், தலைமை ஆசிரியர் மற்றும் மாணவரின் பெற்றோர் ஆகிய, நான்கு பேரும் கையெழுத்திட வேண்டும்' என, தேர்வுத்துறை உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, பூர்த்தி செய்த படிவங்கள் பெறப்பட்டன. இதில், திருவாரூர், தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில், பிளஸ் 2 படிவங்கள், சரியாக பூர்த்தி செய்யப்படவில்லை. மாணவர்களின் புகைப்படத்தை மாற்றி ஒட்டியது, பிறந்த தேதியை தவறாக பதிவு செய்தது உள்ளிட்ட பல தவறுகளை செய்ததாக கூறப்படுகிறது. இதனால், சம்பந்தபட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர் ஆகிய இருவரையும், நேற்று, தேர்வுத்துறை இயக்குனர், சென்னைக்கு

லேப்டாப்' திருடுபோன, பள்ளிகளின் தலைமைஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால் தலைமை ஆசிரியர்கள் கலக்கம்



"லேப்டாப்' திருடுபோன, பள்ளிகளின் தலைமைஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளதால், அவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களுக்கு, இலவச "லேப்டாப்' வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு வழங்கும் வரை, "லோப்டாப்'களை தலைமைஆசிரியர்கள் தங்கள் பொறுப்பில் பாதுகாக்க வேண்டும். பள்ளிகளில் வைக்கப்பட்டிருந்த "லேப்டாப்'கள் பல இடங்களில் திருடுபோனது

பிளஸ் 2 செய்முறை தேர்வு மதிப்பெண் பதியும் நடைமுறையில் மாற்றம்

திருப்பூர் மாவட்டத்தில் 114 மையங்களில், பிளஸ் 2 மாணவ, மாணவியருக்கான செய்முறை தேர்வு, நேற்று துவங்கியது. இத்தேர்வு மதிப்பெண் பதியும் நடைமுறையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. நடப்பு (2013-14) கல்வியாண்டில், பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு, மார்ச் 3ல் துவங்கி, 25ம் தேதி முடிவடைகிறது. இம்மாணவர்களுக்கான செய்முறை தேர்வு, திருப்பூர் மாவட்டத்தில் நேற்று துவங்கியது.
காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரை, மதியம் 1.30 முதல்,4.30 மணி வரை என இரு பிரிவுகளாக நடத்தப்பட்டது. மாவட்டம் முழுவதும் 114 மையங்களில், 15,050 மாணவ, மாணவியர் எழுதுகின்றனர். மாணவர்களின் வருகைப்பதிவு, நடத்தை மற்றும் அறிவியல் செய்முறை பயிற்சிகளில் அவர்கள் காட்டிய ஈடுபாடு, ரெக்கார்டு நோட் டில் படம் வரைதல் ஆகியவற்றின் அடிப்படையில் 20 மதிப்பெண், செய்முறை தேர்வில், அவர்கள் செய்து முடிக்கும் பரிசோதனைக்கு 30 மதிப்பெண் என மொத்தம் 50 மதிப்பெண் வழங்கப்படுகிறது.
20ம் தேதிக்குள், செய்முறை தேர்வை நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. திருப்பூர் பிஷப் உபகாரசாமி மேல்நிலைப்பள்ளி, மண்ணரை சசூரி மெட்ரிக் பள்ளி, ஊத்துக்குளி கொங்குமெட்ரிக் பள்ளிகளில் முதன்மை கல்வி அலுவலர் ஆனந்தி ஆய்வு செய்தார்.
நடைமுறையில் மாற்றம் செய்முறை தேர்வு மதிப்பெண் விவரத்தை, "ஆன்-லைனில்' டவுன்லோடு செய்த தாளில் பதிவு செய்யும் புதிய நடைமுறையை, பள்ளி கல்வித்துறை அமல்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டுகளில், பள்ளி கல்வித்துறையிடம் இருந்து முதன்மை கல்வி அலுவலகத்துக்கு, மதிப்பெண் தாள் மொத்தமாக அனுப்பப்படும். அவை, பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பப் படும். அதில், மாவட்டம், பள்ளி, குரூப், பாடம், பிரிவு, மீடியம்ஆகியவற்றுக்கு சங்கேத (கோடு) எண் குறிப்பிட்டு, மாணவர்களின் தேர்வு எண்கள், மதிப்பெண்
விவரங்களை ஆசிரியர்கள் எழுதித்தர வேண்டும்.அதன்பின், மதிப்பெண் தாள்களை முதன்மை கல்வி அலுவலகத்தில் ஒப்படைப்பது, நடைமுறையாக இருந்தது. நடப்பாண்டு, இந்நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறை இணைய தளத்தில், குறிப்பிட்ட முகவரிக்கு சென்றால், செய்முறை தேர்வு மதிப்பெண் தாள் இருக்கும். அதை,"டவுன்லோடு' செய்து, பள்ளியின் தேவைக்கு ஏற்ப, "பிரின்ட்'எடுத்துக் கொள்ள வேண்டும். அதில், கோடு எண் இருக்கும்.

சுவிட்ச் ஆப் செய்தாலும் சிம்கார்ட்டை தூக்கி எறிந்தாலும், திருடப்பட்ட செல்போனை கண்டுபிடித்து விடலாம்

அகஇ - 2013-14ஆம் ஆண்டிற்கு 40% தொடக்க / உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான BRC பயிற்சி, குழந்தை உரிமைகளும் பாதுகாப்பும் என்ற தலைப்பில் 22.02.2014 அன்று நடைபெற உள்ளது

SPD - 2013-14 BRC TRAINING FOR 40% PRIMARY / UPPER PRIMARY TEACHERS ON 22.02.2014 @ CONCERN BRC LEVEL REG PROC CLICK HERE... 

உண்மை தன்மை அறியும் சான்று கிடைப்பதில் கால தாமதம் : அரசு பணியாளர்கள் தவிப்பு

அரசு பணியில்சேர்பவர்களின், கல்விச் சான்றிதழ்கள், உண்மை தன்மை அறிதலுக்காக, சம்பந்தப்பட்ட பல்கலைகளுக்கு, அனுப்பப்படும் போது, ஆட்கள்
பற்றாக்குறை காரணமாக காலதாமதம் ஏற்படுவதாக கூறப் படுகிறது. தமிழக அரசு பணியில்சேருவோர், இரண்டு ஆண்டுகளுக்குள், அதாவது தங்கள், தகுதிகாண் பருவத்திற்குள், தங்களின் கல்விச் சான்றுகள் உண்மையானவை என்பதை நிரூபிக்க வேண்டும். இதற்காக, அவர்கள் தங்கள் கல்விச் சான்றிதழ் களை, பள்ளி என்றால், அரசு தேர்வுகள் துறைக்கும், கல்லூரி எனில், சம்பந்தப்பட்ட, பல்கலைக் கழகத்திற்கும், உரிய கட்டணத்துடன், உண்மை தன்மை அறிதலுக்காக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக்

வருமான வரி கணக்கிடுவதில் பெரும் குழப்பம்.

முதலில் 87a வின்படி  தனி நபரின் மொத்த வருமானத்தில் வீட்டு வாடகைப்படி, தொழில்வரி மற்றும் சேமிப்பு அதிகபட்சமாக 1லட்சம் இவற்றை  மொத்த வருமானத்தில் இருந்து கழித்த பின்பே வரும் தொகை யானது 5 லட்சத்துக்குள் இருந்தால் வரியில் ரூ-2000 கழிவு என பட்ஜெட் உரையின் போது அறிவிக்கப்பட்டதாக அரசு குறிப்பு(படம்-1) சொன்னது,


ஆனால் தற்போது  வெளியிடப்பட்டுள்ள வருமானவரி குறித்த  அரசானையில் பக்கம் 39-ல் மொத்த வருமானம் கணக்கில் கொள்லப்பட்டு அது 500000வரை இருந்தால் மட்டுமேரூ-2000 கழிவு எனக்கூறுவதாக உள்ளது (படம் -2)

பெரும்பாலான மாவட்டங்களில் கருவூல அதிகாரிகள் மொத்த வருமானம் 5 லட்சம்தாண்டினால் ரூ-2000/- கழிக்கக்கூடாது என கூறியுள்ளதாக அறிகிறோம்.தங்கள் பகுதியில் எவ்வாறு?

கணக்காளர்கள்,தணிக்கையாளர்கள்( charted accountant and auditors)முதலில் கூறப்பட்டதே சரி எனக்கூறுகிறார்கள்

.
ஆனால் கருவூல அதிகாரிகள் மறுக்கிறார்கள்?என்ன செய்வது ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் குழப்பமோ குழப்பம்-
வருமான வரித்துறை விளக்கம் அளிக்குமா?


 

ஆசிரியர் நியமனத்தில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே கட்ஆப் மதிப்பெண் பெற்றிருந்தால் வயதில் மூத்தவர்களுக்கு முன்னுரிமை வழங்க அரசு முடிவு

தகுதித்தேர்வு மதிப்பெண் உள்ளிட்ட வெயிட்டேஜ் மார்க் முறையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரி யர்களை தேர்வு செய்யும்போது ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் ஒரே கட்ஆப் மதிப்பெண்பெற்றிருந்தால் வயதில் மூத்தவர்களுக்கு முன்னு ரிமை வழங்க அரசு முடிவுசெய் துள்ளது.

மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை ஆசிரியர் பணியில் சேர, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நடத்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் 12,596 பேர், பட்ட தாரி ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் 14,496 பேர் தேர்ச்சி பெற்றனர்.

குறைந்தபட்சம் 500 முதல் 770 நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக உயர்த்த முடிவு

ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 மதிப்பெண் பெற்றால் போதுமானது அரசாணை வெளியீடு

GO.25 SCHOOL EDUCATION (TRB) DEPT DATED.06.02.2014 - RELAXATION OF 5% MARKS TO THE CANDIDATES BELONGING TO SC/ST/MBC/BC/BCM & DE NOTIFIED COMMUNITIES ORDER CLICK HERE...

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு அண்மையில் 5% மதிப்பெண் தளர்த்தி முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டார். அந்த கணக்கீடின்படி 82.5 மதிப்பெண் பெற்றால் தான் தேர்ச்சி என்ற நிலை இருந்தது. இதையடுத்து 82 மதிப்பெண் பெற்றால் போதுமானது என்று இன்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த மதிப்பெண் தளர்வு SC/ST/MBC/BC/BCM ஆகிய பிரிவினருக்கு பொருந்தும். மேலும் 2013ல் தேர்வு எழுதியவர்களுக்கு இந்த மதிப்பெண் தளர்வு பொருந்தும் என்றும் உத்தர்விடப்பட்டுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தின் பள்ளிப் பண்ணைகள்! வதைபடும் மாணவர்கள்

இந்தப் பக்கம் கோழிப் பண்ணைகள்... அந்தப் பக்கம் தனியார் பள்ளிகள்... இவை இரண்டும்தான் நாமக்கல் மாவட்டத்தின் இரு பெரும் வர்த்தக மையங்கள்! இங்கு மழைக் கால ஈசல்களைப் போல முளைத்து இருக்கும் தனியார் பள்ளிகளில்,  மாநிலம்  முழுவதும்  இருந்தும்  பிள்ளைகளைக்  கொண்டுவந்து

கொட்டுகின்றனர் பெற்றோர்கள். ப்ளஸ் ஒன்-னுக்கு ஒரு லட்சம், ப்ளஸ் டூ-வுக்கு இரண்டு லட்சம் என்று தொடங்கி, சில பள்ளிக்கூடங்கள் 10 லட்சம், 20 லட்சம் வரையிலும் கட்டணம் வசூலிக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு ஒரு தனியார் பள்ளியில் வருமான வரித் துறை நடத்திய சோதனையில் ஒரே சமயத்தில் 40 கோடி ரூபாய் பிடிபட்டது என்பதைவைத்தே, இந்த வசூல் வேட்டையின் பிரமாண்டத்தைப் புரிந்துகொள்ளலாம்.
இப்படி பணக்காரர்களும் நடுத்தர வர்க்கத்தினரும், லட்சம் லட்சமாகப் பணத்தைக் கொண்டுவந்து கொட்ட... மறுபுறம் அதை வாங்கிக் கல்லாவில் கொட்டிக்கொண்டு, அந்தப் பிள்ளைகளைப் பிணமாகத் திருப்பி அனுப்புகின்றன சில பள்ளிக்கூடங்கள்.

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம் ஒப்புதல் கையெழுத்து பெற உத்தரவு

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களிடம், ஆசிரியர்கள், ஒப்புதல் கையெழுத்து பெற வேண்டும் என்ற நடைமுறை, இந்த ஆண்டில் அமலாகிறது.தமிழகத்தில், மார்ச் 3ம் தேதி, பிளஸ் 2 பொதுத்தேர்வு துவங்குகிறது; 25ம் தேதி தேர்வு முடிகிறது. மார்ச் 26ம் தேதி, 10ம் வகுப்பு தேர்வு துவங்குகிறது.
தேர்வில் முறைகேடுகளை தவிர்க்க, கல்வித் துறை, புதிய அறிவிப்பை வெளிட்டுள்ளளது.இது பற்றி கல்வித் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:தேர்வு துவங்கும் நாளில், தலைமை ஆசிரியர் அறைக்கு, வினாத்தாள் வந்து சேரும். தேர்வு எழுதும் அறையில் பணியாற்ற உள்ள, ஆசிரியர்கள் கையொப்பமிட்டு, அதை எடுத்துச் செல்வர்.தலைமை ஆசிரியர் அறையில் இருந்து, உத்தரவு அல்லது பெல் அடித்தபின், வினாத்தாளை காலை, 10:00 மணிக்கு பிரிக்க வேண்டும். தாமதமின்றி, உடனே மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.
சில ஆசிரியர்கள், தங்களுக்கு நெருங்கிய பள்ளிகளுக்கு செல்லும்போது, வினாத்தாள் கிடைத்ததும், 10:00 மணிக்கு முன்பே பிரித்து விடுகின்றனர். கேள்விகளை, முன்கூட்டியே தெரிந்து கொள்கின்றனர்.

பிளஸ் 2 தேர்வில் பிட் அடித்தால் மாணவர்கள் 2 ஆண்டு பரீட்சை எழுத முடியாது: தேர்வுத் துறை முடிவு

பிளஸ் 2 பொதுத் தேர்வு மார்ச் 3 முதல் 25ம் தேதி வரை நடக்கிறது. சென்னை மாவட்டத்தில் இந்த தேர்வை சிறப்பாக நடத்துவது குறித்து மாவட்ட அளவிலான ஆய்வு அலுவலர்கள் கூட்டம் நடந்தது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. மாவட்ட  முதன்மை கல்வி அலுவலர் தலைமையில் 10 பறக்கும் படையும், தென்சென்னை, மத்திய சென்னை, கிழக்கு சென்னை, வடசென்னை மாவட்ட கல்வி அலுவலர் தலைமையில் 4 பறக்கும் படைகளும் அமைக்கப்படும். தேர்வு மைய முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், வினாத்தாள் கட்டுப்பாளர்கள், பறக்கும்படை உறுப்பினர்கள் மற்றும் அறை கண்காணிப்பாளர்கள் என 2800 தலைமை ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் இதர ஆசிரியர்கள் தேர்வுப்பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.

ஆசிரியர்கள் நான்காண்டில் பெறும் ‘டபுள் டிகிரி’ டெட் தேர்வு, பதவி உயர்வுக்கு பொருந்தாது: அரசு உத்தரவை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு

ஆசிரியர் தகுதி தேர்வுக்கு (டெட்) ‘டபுள் டிகிரி’ தகுதியானது அல்ல என்ற அரசின் கொள்கை முடிவு சரியானதே என்று உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. ‘‘ஆசிரியர்கள் 4 ஆண்டுகளில் ‘டபுள் டிகிரி’ படித்ததை ஏற்க முடியாது. அந்த பட்டப்படிப்பானது ஆசிரியர் பணி, பதவி உயர்வு பெற தகுதியானது இல்லை. அதேபோல, ஆசிரியர் தகுதி தேர்வுக்கும் தகுதியானது இல்லை’’ என்று தமிழக அரசு கொள்கை முடிவு அறிவித்தது. இதை ரத்து செய்யக்கோரி சுமார் 200 ஆசிரியர்கள், உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

தொடக்கக் கல்வி - 2014-15ஆம் கல்வியாண்டில் அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் புதிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகள் துவக்க கருத்துருக்கள் அனுப்ப உத்தரவு

DEE - 2014-15 - NEW PRIMARY / MIDDLE SCHOOL PROPOSALS REG PROC CLICK HERE...

மார்ச் 6ல் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்

ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 6ல் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) அறிவித்துள்ளது. இது குறித்து டிட்டோஜாக் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும். தன் பங்கேற்பு ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். தொடக்க கல்வித் துறையில் தமிழ் வழி கல்வி முறையை தொடர வேண்டும்.

பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஓராண்டு பட்டப்படிப்பு செல்லாது என்ற தமிழக அரசின் முடிவு சரியே ஐகோர்ட்டு தீர்ப்பு


பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வுக்கு ஓராண்டு கால பட்டப்படிப்பு தகுதி செல்லாது என்று தமிழக அரசு எடுத்துள்ள முடிவு சரியானது என்று ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.

ஓராண்டு பட்டப்படிப்பு

ஒரு பாடத்தில் மூன்று ஆண்டு காலம் படித்து பட்டம் பெற்ற இடைநிலை ஆசிரியர்கள், பணி வாய்ப்பு மற்றும் பதவி உயர்வு போன்ற காரணங்களுக்காக இன்னொரு பாடத்தில் ஓராண்டு படித்து பட்டம் பெறுகின்றனர்.
இதை எதிர்த்து ஆசிரியர்கள் சிலர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள். அதில், இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு வழங்கும்போது மூன்றாண்டு கால பட்டம் பெற்றவர்களுக்கு மட்டுமே பதவி உயர்வு வழங்க வேண்டும். ஓராண்டு காலத்தில் கூடுதலாகப் பெற்ற பட்டப்படிப்பின் அடிப்படையில் ஆசிரியராக பதவி உயர்வு வழங்கக் கூடாது’ என்று கூறியிருந்தனர்.

செல்லாது

தொடக்கக் கல்வி - அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் 07.02.2014 அன்று சென்னையில் நடைபெற உள்ளது

DEE - ALL DEEOs REVIEW MEETING HELD AT DEE, CHENNAI ON 07.02.2014 REG PROC CLICK HERE...

DEE - DEEO FEB 2014 REVIEW FORMAT CLICK HERE...

தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப் பணி - ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனமாக 2010-11ஆம் ஆண்டில் அறிவியல் பாட பட்டதாரி ஆசிர்யர்களின் நியமனத்தை முறையான நியமனமாக முறைப்படுத்தி ஆணை வழங்கி உத்தரவு

DSE - 2010-11 TRB APPOINTED SCIENCE BT - REGULARISATION ORDER ISSUED - ORDER CLICK HERE...

தகவல் அறியும் உரிமை சட்டம்-அரசானை -240-ன்படி மறு ஊதிய நிர்ணயம் ஏற்கனவே நிர்ணயம் செய்தஊதியத்தை விட குறைவான ஊதியத்திற்கு மறு நிர்ணயம் செய்ய அனுமதி இல்லை

 
கேள்விகள்

-தமிழ் நாடு ஆசிரியர்கூட்டணி இவ் விவரத்தினை இயக்குனர் கவனத்திற்கு கொண்டு சென்றதற்கு பயன்-தொடக்கக் கல்வி - EMIS - தனி நபர் தகவல் தொகுப்பு முறை (PERSONNEL INFORMTION SYSTEM - PIS) - தலைமையாசிரியர்கள் / ஆசிரியர்களை கொண்டு விவரங்களை உள்ளீடு கோரவேண்டாம் என இயக்குனர் உத்தரவு.

தொடக்கக் கல்வி - EMIS - தனி நபர் தகவல் தொகுப்பு முறை (PERSONNEL INFORMTION SYSTEM - PIS) - தலைமையாசிரியர்கள் / ஆசிரியர்களை கொண்டு விவரங்களை உள்ளீடு செய்வதற்கு தனது கண்டனத்தையும்,வருத்தத்தையும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி  அதன் பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி Ex.MLC அவர்கள் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களிடம்நேரில் சந்தித்து முறையிட்டது.

அதற்கு கைமேல்பலனாக

தொடக்கக் கல்வி - EMIS - தனி நபர் தகவல் தொகுப்பு முறை (PERSONNEL INFORMTION SYSTEM - PIS) - தலைமையாசிரியர்கள் / ஆசிரியர்களை கொண்டு விவரங்களை உள்ளீடு கோரவேண்டாம் என இயக்குனர் உத்தரவு.

இயக்குனர் அவர்களின் உடனடி நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி நன்றி தெரிவிக்கின்றது

DEE - EMIS - PIS - DEE ORDERED TO AEEOs REG ONLINE ENTRY REG PROC CLICK HERE...

டிட்டோஜாக் கூட்டம் - தீர்மானங்கள்

குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள்: 40 ஆயிரம் ஆசிரியர்களுக்குப் பயிற்சி.



குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் தொடர்பாக தமிழகம் முழுவதும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் எஸ்.கண்ணப்பன் கூறினார். மாநிலம் முழுவதும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்பட உள்ளது. கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் ஒரு பகுதியாக இந்தப் பயிற்சி

இரட்டைப்பட்டம் சார்பான வழக்கு தள்ளுபடியை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல முடிவு.

இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதியரசர் திரு.ராஜேஸ்குமார் அகர்வால் மற்றும் நீதியரசர் திரு.சத்தியநாரயணன் அடங்கிய முதன்மை அமர்வில் முதல் வழக்காக வந்த இரட்டைப்பட்டம் வழக்கு நீதியரசர்களின் தீர்ப்பால் முடிவுக்கு வந்தது. இந்த வழக்கின் ரிட் அப்பீல் தள்ளுபடி செய்யப்படுகிறது என்ற தீர்ப்பால் அதிர்ச்சியடைந்த ஒருங்கிணைப்பாளர்கள்

ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு கோரிய வழக்குகள் தள்ளுபடி: ஐகோர்ட்டு உத்தரவு

சென்னை ஐகோர்ட்டில் வக்கீல்கள் எம்.பழனி முத்து, ஏ.ரமேஷ் உள்பட பலர் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறியிருப்பதாவது:– தேசிய ஆசிரியர் கல்வி வாரியத்தின் அறிவிக்கையின்படி மாநில அரசுகள் ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு நடத்துகிறது. ஆந்திரா உள்ளிட்ட 13 மாநிலங்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு முறையில் தகுதி மதிப்பெண் வழங்குகிறது.
ஆனால் தமிழகத்தில் இட ஒதுக்கீடு முறை பின்பற்றாமல் ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதி தேர்வை நடத்துகிறது. இது அரசியல் சாசனத்துக்கு எதிரானது. எனவே தமிழகத்தில் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வில் இடஒதுக்கீடு முறையை பின்பற்ற உத்தரவிட வேண்டும்

பி.எட்., எம்.எட். தேர்வு முடிவுகள் வெளியீடு.TNTEU


CLICK TO KNOW YOUR B.ED RESULT 

CLICK TO KNOW YOUR M.ED RESULT

இரட்டைப்பட்ட வழக்கு இறுதி தீர்ப்பு: இரட்டைப்பட்டம் செல்லாது என உயர்நீதிமன்றம் உத்தரவு


இரட்டைப்பட்டம் சார்பான வழக்கின் இறுதி தீர்ப்பு இன்று காலை சற்று முன் வெளியாகியுள்ளது. இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதியரசர்கள் மாண்புமிகு தலைமை நீதிபதி மற்றும் சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பு வழங்கியது. அதில் இரட்டைப்பட்டம் செல்லாது எனவும், பணி நியமனம் மற்றும் பதவி உயர்விற்கு இனி மூன்று வருட பட்டப்படிப்பு மட்டுமே தகுதியானது எனவும்  இதை எதிர்த்து தொடரப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என நீதியரசர்கள் தங்களது தீர்ப்பில் தெரிவித்தனர்.

புதிய ஆசிரியர் நியமனம் இப்போதைக்கு இல்லை: தினமலர் செய்தி

TEACHERS PROFILE FORM


CLICK HERE-TO DOWNLOAD TEACHERS PROFILE FORM
CLICK HERE

CLICK HERE -Office Automation System for Directorate of Elementary Education

CLICK HERE-UPLOADING INSTRUCTIONS

10, பிளஸ் 2 மாணவருக்கு இலவச கையேடு: அனைத்து பள்ளிகளுக்கும் வழங்க உத்தரவு.



10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள், அதிக மதிப்பெண் பெறும் வகையில், பள்ளிக்கல்வித்துறை தயாரித்த இலவச கையேடு, அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட உள்ளது.அனைத்துப் பள்ளிகளிலும்,
கடந்த பருவத்தேர்வில், 10 ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை, கல்வித்துறை ஆய்வு செய்தது. இதன்படி, குறைந்த மதிப்பெண் பெற்றவர், இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும்; நன்கு படிப்பவர்கள், கூடுதல் மதிப்பெண் பெறும் வகையிலும், நாகை மாவட்ட முதன்மைக்கல்விஅதிகாரி ராம கிருஷ்ணன் தலைமையிலான ஆசிரியர் குழுவினரால், இலவச கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.

இரட்டைப்பட்டம் தீர்ப்பு இன்று உறுதி.

இரட்டைப்பட்டம் வழக்கின் தீர்ப்பு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் அமர்வில் வரிசை எண் முதலில் வருகிறது. எனவே தீர்ப்பின் முழு விபரம்
காலை 11.00 மணியளவில் தெரியவரும்.
HON'BLE THE CHIEF JUSTICE
HON'BLE MR JUSTICE M. SATHYANARAYANAN
TO BE HEARD ON WEDNESDAY THE 5TH DAY OF FEBRUARY 2014 AT 10.30 AM
(SITTING IN THE CHIEF JUSTICE'S COURT)

நிறுத்தி வைக்கப்பட்ட பதவி உயர்வு: அதிருப்தியில் கல்வி அலுவலர்கள்

தமிழக பள்ளிக் கல்வித் துறையில், இணை இயக்குனர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள் பதவி உயர்வு, பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டதால், கல்வி அலுவலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.


இத்துறையில், நூலகத் துறை இயக்குனர், 3 இணை இயக்குனர், 22 மாவட்ட கல்வி அலுவலர் பணியிடங்கள் பல மாதங்களாக காலியாகவுள்ளன. இதற்கான பணிமூப்பு 'பேனல்' வெளியிடப்பட்டும், பதவி உயர்வு அறிவிக்கப்படவில்லை. பேனலில் உள்ள கல்வி அலுவலர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

தொடரும் ரகசிய அறிவிப்பு:

பி.எட், எம்.எட், துணைத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் அறிவிப்பு


தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழக தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி மணிவண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:–
தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள கல்வியியல் கல்லூரிகளுக்கான கல்வியியல் இளையோர் (பி.எட்.), மற்றும் கல்வியியல் நிறைஞர் (எம்.எட்.) டிசம்பர் 2013–ம் ஆண்டு நடைபெற்ற

2013-14ம் நிதியாண்டுக்கான வருமான வரி பிடித்தம் செய்வதற்கான மத்திய நிதித்துறையின் கையேடு

GOI - FINANCE - IT - CIRCULAR NO.08/2013, F.No.275/192/2013-IT(B) - INCOME TAX DEDUCTION FROM SALARIES DURING THE FINANCIAL YEAR 2013-14 CLICK HERE...

NOTE : REBATE OF RS.2000 FOR INDIVIDUALS HAVING TOTAL INCOME UP TO 5LAKHS (SECTION 87A) REFER PAGE NO.39

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - முன்னுரிமைப் பட்டியல் 01.01.2014 நிலவரப்படி அரசு / நகரிய / நகராட்சி உயர்நிலை தலைமை ஆசிரியர் பதவிக்கு பதவி உயர்வு மூலம் நியமனம் செய்ய தகுதி வாய்ந்தோர் பட்டியல் தயார் செய்ய உத்தரவு

DSE - GOVT HIGH SCHOOL HM PANEL AS ON 01.01.2014 REG DETAILS CALLED UPTO 2000-01 (RANK NO.1020) CLICK HERE...

DSE - MUNICIPAL HIGH SCHOOL HM PANEL AS ON 01.01.2014 REG DETAILS UPTO 31.05.1986 CLICK HERE...

மா.க.ஆ.ப.நி - 6 முதல் 10ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு புவியியல் வரைப்பட திறன் சார்பான நிலவரைப்பட நூல் (ATLAS) பயன்பாடு குறித்து CEO / DEO / DEEO / AEEO பள்ளிக்கு சென்று பார்வையிட்டு மாதந்தோறும் அறிக்கை அனுப்ப இயக்குனர் உத்தரவு

SCERT - MAP SKILL DEVELOPMENT - USAGE OF ATLAS - OFFICIALS SCHOOL VISIT & SEND REPORT TO DIRECTORATE REG PROC CLICK HERE... 

ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் பணி பதிவேடு:பதிவு-ஆசிரியர்களே செய்ய வலியுறுத்துவது இது சரியா?-

ஆசிரியர்களுக்கு ஆன்லைனில் பணி பதிவேடு:

இ-சர்வீஸ் ரெஜிஸ்டர் தொடங்க திட்டம்
ஆசிரியர்களின் ஜாதகமாக விளங்குவது அவர்களின் பணி பதிவேடு ஆசிரியர்களின் விவரங்கள் பொதுவானவையா? ஆசிரியர்கள் பிரவுசிங் செண்டர்களில் கொடுத்து இதை செய்யலாமா? தொடக்க நடுனிலைப் பள்ளி ஆசிரியர்களின் விவரங்கள் இ -ரிஜிஸ்டர் பதிவு அதிகாரிகள் குழு அமைத்து அந்தந்த ஒன்றியங்களில் செய்ய தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி கோருகிறது.

மேலும் அந்தந்தபள்ளி தலைமை ஆசிரியர்களே பிரவுசிங் செண்டரில் சென்று அவர்கள் பள்ளி ஆசிரியர்களின் இ.சர்வீஸ் ரிஜிஸ்டர் பதிவுகளை பதியச்சொல்லி உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்கள் கட்டயப்படுத்துவதை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி வன்மையாக கண்டிக்கிறது.
இது ரகசியக் பாதுகாக்கப்படுவது மறுக்கப்படுவதுடன்,தேவையற்ற மன உளைச்சளையும்,பொருட்செலவையும் ஆசிரியர்பால் நிர்வாகம் திணிக்க வழிவகுப்பதாக அமையும்.இதனால் கற்பித்தல் பணியும் வெகுவாக பாதிக்கும்.
எனவே
இதன் மீது முக்கிய முடிவாற்ற இயக்குனர் அவர்களுக்கு கோரிக்கை வைக்கிறது.

மாதாந்திர அறிக்கை- excel file வடிவில்

CLICK HERE TO DOWNLOAD

INCOME TAX UPDATED AND CORRECTED WITH FORM 16

CLICK HERE TO DOWN LOAD

ஏழாவது ஊதியக்குழு உறுப்பினர் நியமனத்துக்கு பிரதமர் ஒப்புதல்.

ஏழாவது ஊதிய குழு உறுப்பினர்கள் நியமனத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் ஒப்புதல்தந்துள்ளார்.50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் 30 லட்சம் ஓய்வூதியத்தாரர்களின்
ஊதிய உயர்வு குறித்து முடிவெடுக்க உள்ள இந்தக் குழுவுக்கு முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் குமார் மாத்தூர் தலைவராக இருப்பார்.பெட்ரோலியத் துறைச் செயலாளர் விவேக் ரே இதன் முழு நேர உறுப்பினராக இருப்பார்.

டிட்டோஜாக் -4.2.2014 அன்றைய கூட்டமுடிவுகள் செய்தியாளர் அறிக்கை

டிட்டோஜாக் -4.2.2014 அன்றைய கூட்ட புகைப்பட்க்காட்சிகள்-செய்தியாளர் கூட்டம்

50% அகவிலைப்படி அடிப்படை ஊதியத்துடன் இணைக்கப்படுமா? அரசு ஊழியர்கள் எதிர்பார்ப்பு : 50% அகவிலைப்படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்தால் மத்திய அரசுக்கு ரூ.20,000 கோடி கூடுதல் நிதிச்சுமை ஏற்படும் என தகவல்

50 per cent DA in the basic pay is set to merge soon

Govt. exercises to attract 38 lakh workers, 25 lakh pensioners
20 thousand crore additional burden on the exchequer
Govt eyes on approximately 2 and half crore votes of Central government employees and pensioners and their families. Govt is preparing to merge 50 per cent dearness allowance (DA) into the basic pay to attracted approximately 38 lakh employees and 25 lakh pensioners.

That would be in the next fortnight. If it happen, extra burden would cost of Rs 20,000 crore to the exchequer.

 It may be pressure of employees of Trade Union/ threatening of indefinite strike by the central govt. employees with railway employee or it may be trial of attraction of 2.5 carores of voters. Infact D.A. is being merged with basic salary. The Secretary General of the AIRF Mr. Shiva Gopal Mishra who is representing nearly 12 lakh employees says last days, that he had correspondenced with the Prime Minister's Office and the Finance Ministry. He also met with Secretary of expenditure in this connection.

டி.இ.டி., தேர்வில் கூடுதலாக 30 ஆயிரம் பேர் தேர்ச்சி, கூடுதலாக தேர்ச்சி பெறுவர்களுக்கும், விரைவில் சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்படும்


டி.இ.டி., தேர்வில், இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு 5 சதவீத மதிப்பெண் சலுகை அளிக்கப்பட்டுள்ளதால், தோல்வி அடைந்தவர்களில் 30 ஆயிரம் பேர் வரை தேர்ச்சி பெறுவர் என டி.ஆர்.பி., வட்டாரம் நேற்று மாலை தெரிவித்தது. இதனால், தேர்வர்கள், குதூகலம் அடைந்துள்ளனர். டி.இ.டி., தேர்வில், தேர்ச்சி பெற, 55 சதவீதம் பெற வேண்டும் எனில், 82.5 மதிப்பெண் (150க்கு) வருகிறது. இது, 83 மதிப்பெண்ணாக, கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். எனவே 83ல் இருந்து 89 மதிப்பெண் வரை பெற்று தோல்வி அடைந்தவர்கள் தேர்ச்சி பெறுகின்றனர்.கடந்த ஆகஸ்ட்டில் நடந்த தேர்வில், 27 ஆயிரம் பேர் தான், தேர்ச்சி பெற்றனர். தற்போது, அதைவிட, தேர்ச்சி எண்ணிக்கை அதிகரித்திருப்பது குறிப்பிடத்தக்கது. கூடுதலாக தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல், இன்று, டி.ஆர்.பி., இணையதளத்தில் (http://trb.tn.nic.in/) வெளியாகலாம்.ஏற்கனவே, தேர்ச்சி பெற்ற, 27 ஆயிரம் பேருக்கு, சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு விட்டது.

டிட்டோஜாக் கூட்டம் முடிவுகள் – 04.02.2014



டிட்டோஜாக் கூட்டம் முடிவுகள் – 04.02.2014
செ.முத்துசாமி, பொதுச் செயலாளர் அறிக்கை:
1.டிட்டோ ஜாக் அமைப்பு அரசுக்கு வேலை நிறுத்த நோட்டீசு அனுப்ப முடிவு
2.டிட்டோ ஜாக் அமைப்புடன்
பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கைகள் நிறைவேற்ற அரசுக்கு ஒரு மாத கால அவகாசம்.
3.இல்லையேல் மார்ச் 6 அன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்ய முடிவு

TNTET PAPER - I AND PAPER II RESULT AVL மதிப்பெண் மீண்டும் சரிபார்க்க ஏதுவாக

TNTET PAPER - I AND PAPER II RESULT AVL

CLICK HERE TO VIEW TET PAPER - I RESULT - 05-11-2013

CLICK HERE TO VIEW TET PAPER - II RESULTS (11.01.2014 REVISE RESULTS)

டிஇடி சான்று சரிபார்ப்பில் 300 பேர் ஆப்சென்ட்


ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு நடத்தப்பட்ட சான்று சரிபார்ப்பில் 300 பேர் கலந்துகொள்ளவில்லை. அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்குமா என்று பட்டதாரிகள் எதிர்பார்த்துள்ளனர்.அரசு பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான தகுதித் தேர்வு கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி ( தாள்1), 18ம் தேதி(தாள் 2) நடந்தது. இடைநிலை ஆசிரியர்களுக்கான தேர்வில் தாள் 1ல் 2 லட்சத்து 65 ஆயிரத்து 568, தாள் 2ல் 4 லட்சத்து 19 ஆயிரத்து 898 பேர் எழுதினர். இவற்றில் தாள் 1ல் 12 ஆயிரத்து 596 பேரும், தாள் 2ல் 18 ஆயிரம் பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த மாதம் 20ம் தேதி முதல் சான்று சரிபார்ப்பு மாநிலம் முழுவதும் நடத்தப்பட்டது. 27ம் தேதி முடிய வேண்டிய நிலையில், கடந்த முறை சான்று சரிபார்ப்பில் கலந்துகொள்ள முடியாதவர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டது.

ஆசிரியர் தகுதித் தேர்வில், மதிப்பெண்களுக்கு சலுகை :முதல்வரின் அறிவிப்பை செயல்படுத்த ஆசிரியர் தேர்வுவாரியம் தயாராகிவருவதாக தகவல்

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீடு பிரிவினருக்கு 55% ஆக மதிப்பெண்களாககுறைத்து முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆதிதிராவிடர், பழங்குடியினர், மிகவும் பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் இதர பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து இப்பிரிவினர் 82.5 மதிப்பெண்கள் பெற்றால் போதுமானது.2013ம்ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும் எனவும் தெரிவித்தார்

PG Tamil medium 2011-12 provisional selection list released by TRB

Direct Recruitment of Post Graduate Assistant for the Year 2011-12 (12PG)- Provisional Selection list - Subject Home Science, Indian Culture and Tamil Medium Reservation Vacancies - History, Economics and Commerce 

அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் ஆசிரியர் தகுதித் தேர்வின்றி நியமனம் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படாதவர்கள் விவரம் கோரி இயக்குனர் உத்தரவு

அரசு உதவிப் பெறும் பள்ளிகளில் 23.08.2010க்கு முன்பு ஆசிரியர் தகுதித் தேர்வின்றி நியமனம் செய்யப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படாதவர்களின் விவரம் உடனடியாக அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மேற்காணும் விவரம் கோரி அனைத்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் மாதிரி படிவம் அனுப்பப்பட்டுள்ளது.

PG Tamil medium 2011-12 provisional selection list released by TRB

Direct Recruitment of Post Graduate Assistant for the Year 2011-12 (12PG)- Provisional Selection list - Subject Home Science, Indian Culture and Tamil Medium Reservation Vacancies - History, Economics and Commerce

ஆங்கில வழிக் கல்வி ஏன்?- பேரவையில் ஜெயலலிதா விளக்கம்

ஆங்கில வழிக் கல்வியைக் குறை கூறுவோர் தங்கள் பிள்ளைகளை தமிழ் மொழி வழிக் கல்வியில் படிக்க வைத்தார்களா? என்று சட்டப்பேரவையில் முதல்வர் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்துப் பேசும்போது, "எனது தலைமையிலான அரசைப் பொறுத்த வரையில், பயனற்ற இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற எண்ணம் இல்லை.
நான் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது பயனற்ற இலவசங்களை கொடுத்து மக்களை ஏமாற்றுபவர்களை வித்தை காட்டி குழந்தையை ஏமாற்றுபவர்களோடு ஒப்பிட்டு இதே சட்டமன்றத்தில் பேசினேன்.
இதைப் புரிந்து கொண்ட மக்கள், 2011 ஆம் ஆண்டு அவ்வாறு ஏமாற்றியவர்களை தூக்கி எறிந்தார்கள். மக்கள் வாழ்வில் வளம் பெற வேண்டுமென்றால், மாநிலம் செழிக்க வேண்டுமென்றால், மனித வள வளர்ச்சியில் அதிக அக்கறை செலுத்த வேண்டும். இந்த கொள்கையைத்தான் எனது அரசு பின்பற்றி வருகிறது. எனவே தான், எதிர்கால சந்ததியினருக்கு பயன்தரக் கூடிய கல்வி மற்றும் சுகாதாரம் ஆகிய இரண்டுக்கும் நான் முக்கியத்துவம் அளித்து வருகிறேன்.

இட ஒதுக்கீட்டின் அடிப்படையில்தான் ஆசிரியர் பணி நியமனம்: முதல்வர் ஜெயலலிதா

பள்ளி ஆசிரியர் பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு முற்றிலும் பின்பற்றப்பட்டது என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார்.சட்டப்பேரவையில் இன்று ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு முதல்வர் ஜெயலலிதா பதிலளித்துப் பேசும்போது,
"மாணவ, மாணவியர் தரமான கல்வியை பெற வேண்டுமெனில் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள் அவசியம் என்பதைக் கருத்தில் கொண்டு, கடந்த இரண்டே முக்கால் ஆண்டுகளில் 68,481 ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப நான் உத்தரவிட்டுள்ளேன்.இதுநாள் வரை 51,757 ஆசிரியர்கள் பணியமர்த்தப் பட்டு உள்ளனர். இந்த பணி நியமனங்களில் இட ஒதுக்கீடு முற்றிலும் பின்பற்றப்பட்டது என்பதையும் நான் இங்கே பதிவு செய்ய விரும்புகிறேன்.

ஒரே நாளில் 20,920 ஆசிரியர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கி சாதனை புரிந்த அரசு எனது தலைமையிலான அரசு என்பதை இந்த நேரத்தில் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியர் அல்லாத பணியிடங்களை பொறுத்த வரையில் இதுவரை,19,673 பணியிடங் களுக்கு என்னால் ஒப்புதல் அளிக்கப்பட்டு 10,220பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளன.பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்குடன், நடப்பு நிதியாண்டில் மட்டும் கிட்டத்தட்ட 366 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை, 2013ம் ஆண்டு தேர்வு எழுதியவர்களுக்கும் இது பொருந்தும்

ஆசிரியர் தகுதித் தேர்வில் இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு 5% மதிப்பெண் சலுகை அளிக்கப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்தார். சட்டப்பேரவையில் ஆளுநர் உரைக்கு பதில் அளித்து பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

மாநில முழுவதும் டிட்டோஜாக் மாவட்ட எழுச்சி கோரிக்கை பேரணி

குழந்தைகளின் வாழ்வில் புன்னகை சிந்த வேண்டும் என்றால், வீடுகளில் தொலைக்காட்சி நெடுந்தொடர்களை நிறுத்துங்கள்: வெ.இறையன்பு

குழந்தைகளின் வாழ்வில் புன்னகை சிந்த வேண்டும் என்றால், பெற்றோர்கள் தங்களது வீடுகளில் கண்ணீர் சிந்தும் நெடுந்தொடர்களை நிறுத்த வேண்டும் என்று அண்ணா நிர்வாகக் கழக இயக்குநரும், முதன்மைச் செயலருமான வெ.இறையன்பு வலியுறுத்தினார்.

சேலம் அறிஞர் அண்ணா மக்கள் சேவை மன்றத்தின் சார்பில்  5-ஆவது ஆண்டாக மாதிரி பொதுத் தேர்வுகள் கடந்த மாதம் நடத்தப்பட்டன. சுமார் 10,700 மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்த மாதிரித் தேர்வில், முதலிடம் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பரிசளிப்பு விழாவும், என்றும் நமதே என்ற தலைப்பிலான சிறப்புக் கருத்தரங்கமும் சேலம் நேரு கலையரங்கில் சனிக்கிழமை நடைபெற்றன.  விழாவுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் இரா.ஈஸ்வரன் தலைமை வகித்தார். மஹேந்திரா கல்வி நிறுவன முதல்வர் ஜே.சாம்சன் ரவீந்திரன், சேவை மன்றச் செயலர் சரளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்றத்தின் தலைவர் எம்.குணசேகரன் வரவேற்றார்.

மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து ஒரே நேரத்தில் குடும்ப ஓய்வூதியங்களை பெற உரிமை உண்டு - சென்னை ஐகோர்ட்டு

முன்னாள் ராணுவ வீரர்களின் குடும்பத்தினர் மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து ஒரே நேரத்தில் குடும்ப ஓய்வூதியங்களை பெற உரிமை உண்டு
என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பளித்துள்ளது.சென்னை ஐகோர்ட்டில், கே.ஞானசுந்தரி என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:– ராணுவ வீரர் என் கணவர் ஆர்.கேசவன், இந்திய ராணுவத்தில் பணியாற்றி 1989–ம் ஆண்டு கட்டாய ஓய்வுப்பெற்றார். அப்போது,ஓய்வூதிய பண பலன்கள் அனைத்தும் பெற்று விட்டார். இதன்பின்னர், தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறையில் 1992–ம் ஆண்டு சேர்ந்தார்.

தகுதி தேர்வில் சலுகை காட்ட முடியாது: உயர்கல்வித்துறை அமைச்சர் திட்டவட்டம்

"தரமான ஆசிரியர்களை, தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக, ஆசிரியர்களுக்கு, தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் மதிப்பெண்களுக்கு, இட ஒதுக்கீடு கேட்பது நியாயமாகாது,'' என, உயர்கல்வித் துறை அமைச்சர், பழனியப்பன் தெரிவித்தார்.

சட்டசபையில் நேற்று, மனிதநேய மக்கள் கட்சி எம்.எல்.ஏ., ஜவாஹிருல்லா, ''ஆசிரியர் தேர்வில், இட ஒதுக்கீடு பின்பற்றப்படுவதில்லை. தேசிய ஆசிரியர் கல்விக் குழுமம், 'மதிப்பெண் சலுகை வழங்கலாம்' எனக் கூறியுள்ளது. ஆனால், தமிழக அரசு, அதை பின்பற்றவில்லை,'' என்றார்

web stats

web stats