Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

10, பிளஸ் 2 மாணவருக்கு இலவச கையேடு: அனைத்து பள்ளிகளுக்கும் வழங்க உத்தரவு.



10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள், அதிக மதிப்பெண் பெறும் வகையில், பள்ளிக்கல்வித்துறை தயாரித்த இலவச கையேடு, அனைத்துப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட உள்ளது.அனைத்துப் பள்ளிகளிலும்,
கடந்த பருவத்தேர்வில், 10 ம் வகுப்பு மற்றும் பிளஸ்2 மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை, கல்வித்துறை ஆய்வு செய்தது. இதன்படி, குறைந்த மதிப்பெண் பெற்றவர், இறுதித் தேர்வில் அதிக மதிப்பெண் பெறவும்; நன்கு படிப்பவர்கள், கூடுதல் மதிப்பெண் பெறும் வகையிலும், நாகை மாவட்ட முதன்மைக்கல்விஅதிகாரி ராம கிருஷ்ணன் தலைமையிலான ஆசிரியர் குழுவினரால், இலவச கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பில், ஐந்து பாடங்களுக்கு, 150 பக்கங்களும்; பிளஸ் 2 மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், வணிகவியல் மற்றும் கணக்குப்பதிவியல், பொருளியல், வரலாறு பாடங்களுக்கு, 120 பக்கங்களும் கொண்ட கையேடு தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, முதன்மைக்கல்வி அதிகாரி ஜெயக்குமார் கூறுகையில், "இந்த கையேட்டில், அனைத்து பாடங்களிலும், எளிமையான பகுதிகளில் துவங்கி, கடினமான பகுதிகள் வரை, முக்கிய வினாக்கள் தொகுக்கப்பட்டு, விடைகள் தரப்பட்டுள்ளன. அனைத்துப் பள்ளிகளுக்கும், தலா இரண்டு கையேடுகள் வழங்கப்பட்டு, மாணவர்களுக்கு நகல் வழங்கப்பட உள்ளது. இதன்மூலம், பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கும்,” என்றார்.

No comments:

Post a Comment


web stats

web stats