Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks

மார்ச் 6ல் ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்

ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 6ல் ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு (டிட்டோஜாக்) அறிவித்துள்ளது. இது குறித்து டிட்டோஜாக் அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும். தன் பங்கேற்பு ஓய்வு ஊதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஆசிரியர் தகுதித் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும். தொடக்க கல்வித் துறையில் தமிழ் வழி கல்வி முறையை தொடர வேண்டும்.


தமிழ், வரலாறு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை உருவாக்கி பதவி உயர்வின் வழியில் நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஆண்டு முதல்வரின் செயலாளர், தலைமைச் செயலாளர், நிதித்துறை முதன்மைச் செயலாளர், கல்வித்துறை முதன்மை செயலாளர், பள்ளிக் கல்வி இயக்குநர் ஆகியோரிடம் கோரிக்கை மனுக்கள் கொடுத்தோம். அதைத் தொடர்ந்து பிப். 2ம் தேதி பேரணியும் நடத்தினோம் ஆனால் இதுவரை முதல்வர், எங்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தவில்லை.


இதையடுத்து, அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் மார்ச் 6ம் தேதி ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம். இவ்வாறு டிட்டோஜாக் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment


web stats

web stats