rp

Blogging Tips 2017

தமிழக அரசு பொதுத்துறை ஊழியர்களுக்கு போனஸ் அரசாணை வெளியீடு

தமிழக அரசின் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக நிதித்துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:–

தமிழக அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு, இந்த ஆண்டு 8.33 சதவீதம் போனஸ் மற்றும் 1.67 சதவீதம் கருணைத் தொகை வழங்கப்படும். இந்த போனஸ் மற்றும் கருணைத் தொகை, போனஸ் சட்டத் திருத்தம் 2015–ன்படி, ரூ.21 ஆயிரம் வரை மாத ஊதியம் பெறுவோருக்குக் கிடைக்கும்.

முன்னதாக ரூ.7 ஆயிரம் வரை மட்டுமே மாத ஊதிய உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், மாநில போக்குவரத்துக் கழகங்கள், தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழ்நாடு பால் கூட்டுறவு உற்பத்தியாளர் கூட்டமைப்பு, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், பூம்புகார் கப்பல் கழகம், தமிழ்நாடு தேயிலை உற்பத்திக் கழகம், அரசு ரப்பர் கழகம், தமிழ்நாடு வன பயிர்க் கழகம் உள்ளிட்ட பொதுத் துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கான போனஸ் அறிவிப்பு, தலைமைச் செயலகத்தில் உள்ள சம்பந்தப்பட்ட நிர்வாகத்தால் கடந்தாண்டு வழங்கப்பட்டதுபோல தனியாக வெளியிடப்படும்.

ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு சிறப்பு போனஸ் தொடர்பாக தனியாக ஆணைகள் வெளியிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

🔴லைசென்ஸ் இல்லாமல் வாகனம் ஓட்டுவோரை சிறையில் தள்ளலாம்.. மறந்து வருவோருக்கு அபராதம் போதும்_சென்னை ஹைகோர்ட்*

🔴சென்னை*: அசல் ஓட்டுநர் உரிமம் எடுத்துவர மறந்து வாகனம் ஓட்டுவதை குற்றமாக கருத முடியாது, மறந்துவிட்டு வருபவர்களுக்கு அபராதம் மட்டும் போதுமானது என்று ஹைகோர்ட் தலைமை நீதிபதி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தெரிவித்துள்ளார். அசல் வாகன ஓட்டுநர் உரிமத்தை எடுத்து வராதவர்களுக்கு அதிகபட்சம் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பான வழக்கில், இன்று சென்னை ஹைகோர்ட் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கருத்து கூறுகையில், பாஸ்போர்ட் நகலைக் கொண்டு வெளிநாடுகளுக்குச் செல்ல முடியுமா? அதேபோல் அசல் ஓட்டுநர் உரிமமும் அவசியம். நகல் பாஸ்ப்போர்ட்டை வைத்துக்கொண்டு வெளிநாடு செல்ல முடியாது. அதேநேரம், அசல் ஓட்டுநர் உரிமம் கொண்டுவர மறந்து வாகனம் ஓட்டுபவர்களை தவறாகக் கருத முடியாது. அசல் ஓட்டுநர் உரிமம் கொண்டுவர மறந்த ஓட்டுநர்களுக்கு 3 மாத சிறை தண்டனை அவசியமில்லை. மறந்துவிட்டு வருபவர்களுக்கு அபராதம் மட்டும் போதுமானது. அதேநேரம், ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவோருக்கு சிறை தண்டனை வழங்கலாம். ஓட்டுநர் உரிமம் இல்லாததற்கும், ஓட்டுநர் உரிமத்தை மறந்துவிட்டு வாகனம் ஓட்டுவோருக்கும் வித்தியாசம் உள்ளது. இவ்வாறு நீதிபதி தெரிவித்தார்.

CPS அரசு செய்தி வெளியீடு

துறைத்தேர்வு விண்ணப்பங்கள் இணைய வழியில் வரவேற்கப்படுகிறது.

இன்றைய ஜேக்டோ ஜியோ மதுரை கூட்ட முடிவுகள்*


*07.10.2017 அன்று அனைத்து மாவட்டங்களிலும் காலை நீதிமன்ற நடவடிக்கைகள் விளக்க கூட்டம்.*
23.10.2017 வரை போராட்ட நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தி வைப்பு.*
24.10.2017 அன்று அடுத்த ஜேக்டோ ஜியோ கூட்டம் நடைபெறும்.*

சம்பளம் பிடித்தம் செய்யவும், வேலைதிறுத்தத்தில் ஈடுபட்டவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் உயர்நீதிமன்றம் தடை

Image may contain: one or more people and textNo automatic alt text available.

Central Govt 1% DA Hike order From 01.07.2017


கிராமக்கல்விக் குழுவை பள்ளிமேலாண்மைக் குழுவாக மாற்றித் தலைவர்களை நியமிக்க அனைவருக்கும் கல்வி இயக்க மாநிலத் திட்ட இயக்குநர் அறிவுரை!!


ஜாக்டோ ஜியோ -இன்றைய நீதிமன்ற வழக்கு நிகழ்வுகள்

*இன்று ஜேக்டோ ஜியோ போராட்டம்,அது சார்ந்த கோரிக்கைகள் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவின்படி தமிழ்நாடு அரசின் தலைமைச்செயலாளர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்*

*ஜேக்டோ ஜியோ சார்பில் மூத்த வழக்கறிஞர் திரு.N.G.R.பிரசாத் ஆஜரானார்.*

*முற்பகல் 1 மணி 20 நிமிட நேரமும்,பிற்பகல் 40 நிமிடங்களும் வழக்கு விசாரணை நடைபெற்றது.*

*வழக்கு விசாரணையில் தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வது,பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான விவாதம் அதிக நேரம் நடைபெற்றது.*

*புதிய ஓய்வூதியத் திட்டத்தின் பாதிப்புகள்,அத்திட்டத்தில் உள்ள ஊழியர்களின் எதிர்காலம்,இத்திட்டத்தில் தமிழக அரசின் செயல்பாடு ஆகியவை தொடர்பாக நமது வழக்கறிஞர் மிக ஆழமாக,விரிவாக,புள்ளி விவரங்களுடன் எடுத்துரைத்தார்*

*தன்பங்கேற்பு ஓய்வூதியத்திட்டம் தொடர்பான வல்லுநர் குழுவின் அறிக்கை 30.11.2017க்குள் பெறப்படும் என்று தலைமைச்செயலாளர் நீதிமன்றத்தில் உறுதியளித்தார்*

*மேலும்,ஓய்வூதியம் தொடர்பாக தமிழக அரசின் விளக்க அறிக்கை மற்றும் நிலைபாடு 23.10.2017ல் நடைபெறும் அடுத்த நீதிமன்ற விசாரணையின்போது தெரிவிக்கப்படும் என்றும் தலைமைச்செயலாளர் தெரிவித்துள்ளார்*

*ஊதியக்குழு அறிக்கை 30.09.2017க்குள் பெறப்பட்டு,அதை அமல்படுத்தும் தேதி 13.10.2017க்குள் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட வேண்டும்*

*அதில் காலதாமதம் ஏற்பட்டால் இடைக்கால நிவாரணம் தர அரசு முடிவெடுக்க வேண்டும்.இல்லையேல் நீதிமன்றமே முடிவெடுக்கும்*

*வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட அனைத்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகிறது*

*போராட்ட நாட்கள் சனிக்கிழமைகளில் வேலை செய்து ஈடு செய்யப்பட வேண்டும்.*

*வேலைநிறுத்த நாட்களுக்கு ஊதியப்பிடித்தம் செய்யக்கூடாதுஎன்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

ஆசிரியர்கள் கவனத்திற்கு.... NIOS தேர்வு ஆசிரியர்கள் எழுத வேண்டுமா?

✅இடைநிலை ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வில் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும் என்ற தகவல் தமிழக ஆசிரியர் களுக்கு பொருந்தாது.

✅கல்வி உரிமை சட்டப்படி தனியார் மெட்ரிகுலேசன் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கல்வித்தகுதி குறித்து வெளியிடப்பட்ட உத்தரவு தவறுதலாக அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கும் பொருந்தும் என கூறப்பட்டுவிட்டது
✅ ஆசிரியர் பயிற்சி பெறுவதற்கு அந்தந்த காலக்கட்டத்தில் என்னென்ன அடிப்படை கல்வித் தகுதிகள் வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்ததோ அந்த தகுதிகள் இருந்தாலே போதுமானது என்பதற்கான அரசாணைகள் உள்ளது. அதனடிப்படையில் தான் நாம் சேர்ந்து தேர்வெழுதி வெற்றிபெற்று உள்ளோம்
✅ உரிய விதிகளைப்பின்பற்றியே நாம் நியமனம் பெற்றுள்ளோம்.
✅நியமனத்தின் போது அளிக்கப்பட்ட நிபந்தனைகளே நமக்கு பொருந்தும்.
✅மேலும் தமிழகத்தில் DTEd என்பது HSC எனப்படும் +2 க்கு சமமானது.
✅DTEd தேர்வில் 50% மதிப்பெண் எடுத்தால் தான் தேர்ச்சி
எனவே 50% மார்க் எடுத்து தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்துள்ள நாம் மீண்டும் NIOS தேர்வு எழுத தேவையில்லை.
தகவல்
கே.பி.ரக்‌ஷித்
மாநில பொரு்ளாளர்
த.நா.ஆ.கூ
_

30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள 2.50 லட்சம் பள்ளிகள் இணைப்பு: மாநிலங்களின் ஆலோசனை கேட்கிறது மத்திய அரசு

நாடு முழுவதும் 30 மாணவர்களுக்கு குறைவாக உள்ள இரண்டரை லட்சம் பள்ளிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்க மாநில அரசுகளின் ஆலோசனையை மத்திய அரசு கேட்டுள்ளது. மத்திய அரசு மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்த அனைவருக்கும் கல்வி திட்டம், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்துகிறது. இவை தவிர இடைநின்ற மாணவர்களை கண்டறிய ஒவ்வொரு ஆண்டும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பும் நடத்தப்படுகிறது.

இருப்பினும் அரசு பள்ளிகளில் மாணவ மாணவியர் எண்ணிக்கை கணிசமாக குறைந்து வருகிறது. பல்வேறு பள்ளிகள் இதன் காரணமாக மூடப்பட்டுள்ளன. மாணவர் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் இல்லை, தரமான கல்வி கிடைப்பது இல்லை என்ற புகார்களும் எழுந்துள்ளன. மத்திய, மாநில அரசுகள் கல்விக்காக பெருமளவு தொகை செலவிடும் போது அவை அரசு பள்ளி மாணவ மாணவியரை முழுமையாக சென்றடையவில்லை என்பது ஆய்வுகளின் மூலம் தெரியவந்துள்ளது. மேலும் தேசிய அளவில் மாணவர்களிடையே அடைவு திறன் தேர்வுகள் நடத்தப்படும் வேளையில் மாணவர்களின் கல்வி தரம் மெச்சப்படும் நிலையில் இல்லை என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

இந்தநிலையில் தொடக்க நிலையில் கல்வி தரத்தை மேம்படுத்த அரசு பள்ளிகளில் கூடுதல் கவனம் செலுத்த மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை முடிவு செய்து மாணவர்கள் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் முடிவுக்கு வந்துள்ளது. ஒரு வருவாய் கிராமத்தில் உள்ள எல்லா அரசு பள்ளிகளையும் ஒன்றோடு ஒன்று இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் தயார் செய்த மசோதாவிற்கு மாநில அரசுகளின் கருத்துகளை கேட்டு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. புதியதாக குழந்தைகளை சேர்க்க முடியாத நிலை உள்ள பள்ளிகள், 30 குழந்தைகளுக்கு கீழ் மாணவர்கள் எண்ணிக்கையை கொண்ட பள்ளிகள், ஆசிரியர்கள் எண்ணிக்கையில் குறைபாடுகள் உள்ள பள்ளிகள் இந்த இணைப்பு பட்டியலில் இடம் பிடிக்கிறது. மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் பள்ளிகள் இந்த வகையில் இணைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

NIOS என்றால் என்ன ❓ பனிரெண்டாம் வகுப்பில் 50 சதவீதம் மதிப்பெண் பெறாமல் பணியாற்றிவரும் ஆசிரியர்கள் ,31.3.2019 குள் NIOS exam passசெய்ய வேண்டும்

*தேசிய திறந்தநிலை பள்ளி நிறுவனம் ( National Institute of Open Schooling (NIOS)) முன்பு தேசிய திறந்தநிலை பள்ளி என்றழைக்கப்பட்டது. இது இந்திய அரசின் கீழ் செயல்படும் தொலைதூர கல்வி வாரியம் ஆகும்.

1989ல் இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சகம் (இந்தியா), இந்தியாவின் கல்வியறிவு சதவீதத்தை ஊரகப் பகுதிகளில் அதிகரிக்கவும், மேலும் கல்வியறிவை நெகிழ்வான வழியில் பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலும் இந்நிறுவனத்தினை ஏற்படுத்தியது.*

23.09.2017-சனிக்கிழமை பள்ளி வேலை நாள்



JACTTO- GEO 07.09.2017 - 15.09.2017 போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் ஊதியத்தை செப்டம்பர் மாத ஊதியத்தில் பிடித்தம் செய்ய திருநெல்வேலி மாவட்ட கருவூல ஆதிகாரி உத்தரவு - செயல்முறைகள்

காலாண்டு விடுமுறை நாட்களில் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் - VELLORE CEO ORDER

COURT ORDER COPY:BRTE convertion - 8 வாரங்களுக்குள் செயல்படுத்தவும் :உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

☀குறுப்பிட்ட அளவு ஆசிரியப் பயிற்றுநர்களை ஆண்டுதோறும் பள்ளிகளுக்கு
ஆசிரியர்களாக அனுப்பிட வேண்டும்.

☀இதனைச் செயல்படுத்த பள்ளிக் கல்வித்துறை, அனைவருக்கும் கல்வி இயக்ககம் & தலைமைச் செயலருக்கு முன்னரே நீதிமன்றம் வழிகாட்டியிருந்தது.

☀நீதிமன்ற உத்தரவை மதிக்காத மேற்காண் நபர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.

☀இந்நிலையில், 15.9.2017-லிருந்து 8 வாரங்களுக்குள் ஆசிரியப் பயிற்றுநர்களைப் பள்ளிக்கு அனுப்பும் பணியை நிறைவேற்றி தலைமைச் செயலாளர் உத்தரவிட,


☀உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அறிவுறுத்தி, நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்தது.

பேனாவால் எழுதப்பட்ட புதிய 500 / 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகள் வாங்க மறுக்க கூடாது - இந்திய ரிசர்வ் வங்கி

EMIS சில குறிப்புகள்

வேறு பள்ளியில் இருந்து தங்கள் பள்ளிக்கு வந்த மாணவரை admit செய்யும் முறை
Emis site ல் student - student search என்ற வழிமுறையில் மாணவரின்
1. Emis no
2. Adhar no
3.mobile no
4. Last studied school dise code, class
5. Last studied school postal pincode, D.O.B இவற்றில் ஏதேனும் ஒன்று தெரிந்து இருந்தால் போதும் admit செய்து விடலாம்.
குறிப்பு : தற்போது transfer செய்யும்​ பணி மட்டுமே. Admit செய்யும் பணி அறிவித்த பின்பு மேற்கொள்ளலாம்.
Emis தளத்தில் நீல வண்ணத்தில் வரும் எழுத்துகள் மீது கிளிக் செய்யும் போது அடுத்த பக்கத்திற்கு செல்லும் என்பதை நினைவில் கொள்ளவும்
EMIS New registration ஒரே பக்கத்தில் முடிந்து விடும்

Steps for New student entry:

EMIS site ல் dashboardற்க்கு அடுத்து உள்ள student என்பதை கிளிக் செய்யவும். பின்பு create student யை கிளிக் செய்யவும்.
Student registration form தோன்றும். இப்படிவம் கடந்த ஆண்டுகளை போல் இல்லாமல் எளிமை படுத்தப்பட்டுள்ளது. முக்கியமாக student photo தேவையில்லை.
கோரப்பட்டுள்ள தகவல்களும் குறைவு (எளிமை).
1.student name
2.adhaar no
3.D.O.B
4.Gender
5.religion, community, sub caste
6.Mother tongue
7. Father/ mother name, occupation, income
8. Mobile no & address
9. Class, section, previous class, admission no, D.O.J, Medium ஆகிய தகவல்கள் மட்டும் போதுமானது
Submit யை கிளிக் செய்யவும்.

தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு EMIS தற்போது புதிய வடிவில் திறக்கப்பட்டுள்ளது.

நாம் செய்ய வேண்டிய பணிகள்
User name: dise code
Password: ssa officeல் பெறப்பட்டது
Google - emis - tnschool education department -
Enter your school username & password பின்பு SIGN IN யை கிளிக் செய்க.
Step 1:
Dashboardல்
School email: உபயோகத்தில்​ உள்ளதாக இருக்கனும்
School mobile: HM mobile no கொடுத்தவுடன் save மை கிளிக் செய்யவும்.
Step 2 :
Save மை கிளிக் செய்தவுடன் அடுத்ததாக
Reset password பக்கத்திற்கு செல்லும். அதில் change passwordற்க்கு கீழ்
Old password: ssa given
New password: தற்போது புதியதாக உருவாக்குக. அது capital letter, small letter, special character, numerical உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் (அ) கடந்த ஆண்டு password யை கொடுக்கவும்
Conform password: new password கலத்தில் உள்ளதை type செய்க
Submitயை கிளிக் செய்யவும்.
Step 3:
Student list - student profile (கிளிக் செய்யவும்) - student list class wise & over all strength display ஆகும். அதில் வகுப்பின் மீது கிளிக் செய்யவும் student list section wise தோன்றும். அதில் section A என்பதன் மீது கிளிக் செய்யவும். All student list (in particular class) தோன்றும். இந்த பக்கத்தில் வலது புறம் print , PDF, CSV என்று இருக்கும் icon யை பயன்படுத்தி print எடுத்தோ (அ) மாணவர்கள் வருகை பதிவேட்டினை கையில் வைத்துக் கொண்டோ
EMIS SITE ல் உள்ள மாணவர்கள் - பதிவேட்டில் உள்ளனரா? என சரி பார்க்கவும்.
அவ்வாறு பார்க்கும் போது தற்போது தங்கள் பள்ளியிலிருந்து left ஆன மாணவர் EMIS site ல் இருப்பின் அம்மாணவரின் பெயர் மீது கிளிக் செய்யவும். தற்போது profile (particular student's) தோன்றும்.
வலதுபுறம் edit / transfer என்று இருக்கும். அதில் TRANSFER யை கிளிக் செய்யவும். பின்பு are you sure? என்பதற்கு yes transfer என்பதை கிளிக் செய்யவும். தவறுதலாக transfer செய்து விட்டால் அப்பக்கத்தை விட்டு வெளியேறும் முன் திரும்ப admit செய்யவும் முடியும். (Transfer செய்து விட்டு திரும்ப class wise student list யை பார்த்தால் மாணவர் எண்ணிக்கை குறைந்து விடும்)
தற்போது TRANSFER பணி மட்டுமே செய்ய வேண்டி உள்ளது. நன்றி

உபரி ஆசிரியர்கள் இடமாற்றம் : 22ம் தேதி ஆலோசனை

மாணவர் விகிதத்தை விட, அதிகமாக உள்ள ஆசிரியர்களை இடமாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்காக, ௨௨ம் தேதி, தொடக்கக் கல்வி அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. 
தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் அரசு உதவிபெறும், தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், அரசு சம்பளத்தில், 1.50 லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.


ஊதிய உதவிகள் : ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் இவர்களுக்கு, மத்திய அரசின், அனைவருக்கும் கல்வி திட்டம் சார்பில், ஊதிய உதவிகள் வழங்கப்படுகின்றன.இந்த நிதியை பயன்படுத்தி, ஆசிரியர்களுக்கு, தமிழக அரசு சம்பளம் வழங்குகிறது. மத்திய அரசு உத்தரவுப்படி, பள்ளிகளில், 35 மாணவர்களுக்கு, ஒரு ஆசிரியர் நியமிக்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. 


ஆனால், பல பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. 10 மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில், மூன்று ஆசிரியர்கள்; 50 மாணவர்கள் இருக்கும் பள்ளிகளில், ஐந்து ஆசிரியர்கள் உள்ளனர். இப்படி, மாணவர் விகிதத்தைவிட, ஆசிரியர் விகிதம் அதிகமாக இருப்பதால், அரசு நிதி விரயமாகிறது. இதை தடுக்க, பள்ளிகளில் உபரியாக உள்ள ஆசிரியர்களை பணி நிரவல் என்ற விதியின் கீழ், இடமாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இதற்கான பட்டியல் தயாரிக்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.


உத்தரவு : இது குறித்து, 22ம் தேதி, சென்னையில், மாவட்ட தொடக்கக் கல்வி இயக்குனர், கார்மேகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. மாணவர் சேர்க்கை விபரம், மூடப்பட்ட, செயல்படாத பள்ளிகள், ஆசிரியர்களின் எண்ணிக்கை, மின் வசதியில்லாத பள்ளிகள், ஓய்வு பெறுவோர் எண்ணிக்கை, 'ஸ்மார்ட்' பள்ளிதேர்வு பட்டியல் என, ௩௬ வகை அம்சங்களுடன் கூட்டத்தில்பங்கேற்க, மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

*புதுச்சேரி நகரப்பகுதியில் அரசுப் பள்ளிகள் நேரத்தை அரசு மாற்றியமைத்தது.*

நண்பகல் 12.25 முதல் 1.30 மணி வரை உணவு இடைவேளை நேரமாகும்.*

*வழக்கமாக 12.25 மணி முதல் 2 மணி வரை இருந்த உணவு இடைவேளை அரைமணி நேரம் குறைந்தது.*

*மாலை 4.30 மணிக்கு பதிலாக 3.45 மணிக்கே பள்ளிகள் முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.*

*புதுச்சேரியில் கிராமங்களில் உள்ள பள்ளிகள் இயங்கும் நேரத்தில் எந்த மாற்றமும் இல்லை.*

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் 16-09-2017 செயற்குழு தீர்மானங்கள்

நீதியரசர் மாண்பமைதிரு.என்.கிருபாகரன் -biography


கூட்டுப்போராட்டம் நடந்தது-நடப்பது என்ன ? செ.மு அறிக்கை

அரசு பள்ளிகளுக்கு 'நீட்' பயிற்சி புத்தகம்

'நீட்' நுழைவுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த, மத்திய அரசின் நிதி உதவியில், 3,000 அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு, சிறப்பு பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.

அரசு பள்ளிகளில், உட்கட்டமைப்பை மேம்படுத்தவும், மாணவர்களுக்கான வசதிகளை செய்து தரவும், மத்திய அரசு சார்பில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இதன்படி, ஆண்டுதோறும், பல ஆயிரம் கோடி ரூபாய் வரை, மாநில அரசுகளுக்கு நிதியுதவி வழங்கப்படுகிறது. இதில், அனைத்து உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில், நுாலகங்கள் மேம்பாடு மற்றும் புத்தகங்கள் வாங்க, ஒவ்வொரு பள்ளிக்கும், ஆண்டுதோறும், 25 ஆயிரம் ரூபாய் நிதி தரப்படுகிறது. 

BRC LEVEL TRAINING SCHEDULE -அக்டோபர் மாதம் பயிற்சி மாதம்


தூய்மையே சேவை உறுதிமொழி எடுக்க பள்ளிக்கல்வி முதன்மை துறைச்செயலாளர் உத்தரவு

EMIS DATA CAPTURE FORMAT FOR NEW ENTRY 2017-18

DSE PROCEEDINGS-ஆசிரியர் நல தேசிய நிதி நிறுவனம், புதுடெல்லி - தொழிற்கல்வி பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு பயிலும் ஆசிரியர்களின் பிள்ளைகளுக்கு 2015-16ஆம் ஆண்டிற்கு கல்வி உதவித்தொகை வழங்க ஏதுவாக விண்ணப்பங்களை அனுப்பி வைக்க கோரி உத்தரவு

அரசுப்பணியாளர்கள் அனைவரும் அலுவலக நேரத்தில் கட்டாயம் அடையாள அட்டை அணிய வேண்டும் - தமிழக அரசு

PGTRB -காலியாக உள்ள 1060 காலியிடங்களை நிரப்ப விரைவில் அடுத்த தேர்வா?ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் விளக்கம்.

அரசு பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர்நேரடி நியமனத்துக்கு எழுத்துத்தேர்வு முடிந்து இரண்டே மாதத்தில் இறுதி தேர்வு பட்டியலை வெளியிட்டு தேர்வர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது ஆசிரியர் தேர்வு
வாரியம்.


 தமிழகத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாகவுள்ள காலியாகவுள்ள 1,663 முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் (கிரேடு-1) பணியிடங்களை நிரப்புவதற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த 9.5.2017 அன்று அறிவிப்பு வெளியிட்டது. பின்னர் புதிதாக 1712 காலியிடங்கள் சேர்க்கப்பட்டதால் மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 3,375 ஆக அதிகரித்து. இத்தேர்வுக்கு 2 லட்சத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர். எழுத்துத்தேர்வு ஜூலை 1-ம் தேதி நடத்தப்பட்டது

 JACTTO-GEO : ஆசிரியர்களுக்கு,;மெமோ; அனுப்பும் பணி நிறுத்தம்

ஜாக்டோ - ஜியோ' போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால், வேலை நிறுத்தம் செய்த ஆசிரியர்களுக்கு, 'மெமோ' அனுப்பும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோவினர், செப்., 7 முதல், ஏழு நாட்கள், தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அரசு பேச்சு நடத்தியும், சுமுக முடிவு கிடைக்கவில்லை. பின், நீதிமன்ற தலையீட்டால், செப்., 15ல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.


இந்நிலையில், போராட்டம் நடந்த போது, அரசு விதிகளை மீறி, போராட்டத்தில் ஈடுபடுவதாகவும், ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்றும், விளக்கம் கேட்டு, ஆசிரியர்களுக்கு, 'மெமோ' வழங்கபட்டு வந்தது. போராட்டம் வாபஸ் பெறப்பட்டதால், உயர் அதிகாரிகள் உத்தரவுப்படி, 'மெமோ' அனுப்பும் பணியை, பள்ளி தலைமை ஆசிரியர்கள் நிறுத்தி உள்ளனர். பதிவு தபாலில் அனுப்பப்பட்ட மெமோக்களையும், ஆசிரியர்கள் வாங்காமல் திருப்பி அனுப்பி வருகின்றனர்.

DEEO க்களுக்கான மாதாந்திர ஆய்வுக்கூட்டம் கூட்டப்பொருள்கள்


சென்னையில் மாவட்டதொடக்ககல்வி அலுவலர்களுக்காண ஆய்வுக்கூட்டம்

19.09.2017(செவ்வாய்) மஹாளாயா அமாவாசை (R/L) வரையறுக்கப்பட்ட விடுமுறை அரசு ஆணை வெளியீடு*


web stats

web stats