rp

Blogging Tips 2017

பள்ளிகளில் ஆண்டு விழா கொண்டாட முறையே 100, 150க்கு அதிகமாக உள்ள மாணவர்கள் எண்ணிக்கை தொடக்கப் பள்ளிகளுக்கு ரூ.5000/-ம், நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.6000/-ம் ஒதுக்கீடு செய்து இயக்குனர் உத்தரவு

2015-16 பள்ளி வேலை நாள் குறித்து சேலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் RTI- பதில்

ஆசிரியர் கல்வி; டிப்ளமோ தேர்வு முடிவு வெளியீடு.


ஆசிரியர் கல்வி டிப்ளமோ மாணவ, மாணவியருக்கான தேர்வு முடிவு இன்று வெளியாகிறது. தமிழகத்தில், 400க்கும் மேற்பட்ட ஆசிரியர் பயிற்சிப்பள்ளிகள் உள்ளன. இதில், பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவியருக்கு, இரண்டுஆண்டுகள் நடத்தப்பட்டு, டிப்ளமோ வழங்கப்படுகிறது. இதில், தேர்ச்சி பெறுபவர்கள், அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியராக பணிபுரிய வாய்ப்புள்ளது. 
இதில், 2015-16 கல்வியாண்டுக்கான தேர்வு, கடந்த மே மாதத்தில் நடந்தது. இதில், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வெழுதினர். இவர்களுக்கான தேர்வு முடிவு, இன்று வெளியாகிறது.

பி.ஏ., - பி.எஸ்சி.,யுடன் இணைந்து பி.எட்., படிப்பு

பி.ஏ., மற்றும் பி.எஸ்சி.,யுடன் இணைந்த, பி.எட்., படிப்பை, வரும்கல்வியாண்டு முதல் அறிமுகம் செய்ய, திறந்தநிலை பல்கலை முடிவு செய்துள்ளது.பல்கலை துணைவேந்தர் சந்திரகாந்தா ஜெயபாலன் அளித்த பேட்டி:எங்கள் பல்கலைக்கு, யு.ஜி.சி., மானிய அந்தஸ்து கிடைத்துள்ளது. 

இனி எங்கள் பல்கலைக்கு, புதிய படிப்புகள், ஆசிரியர் நியமனம், ஆய்வகம்,ஆராய்ச்சி என, பல மேம்பாட்டு திட்டங்களுக்கும்

பாடத்திட்டம் திடீர் மாற்றம்: மாணவர்கள் அதிர்ச்சி

உயர் படிப்புக்கான உதவித்தொகை தரும், தேசிய வருவாய் வழி தேர்விற்கு, 15 நாட்களே உள்ள நிலையில், திடீரென பாடத்திட்டம் மாற்றப்பட்டதால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தில், தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு, ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவ, மாணவியர் பங்கேற்பர்.

எஸ்சி, எஸ்டி பிரிவு அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வு தொடர்பான தீர்ப்பில் பிழை: ஒப்புக்கொண்டது உச்ச நீதிமன்றம்

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின (எஸ்சி, எஸ்டி) பிரிவைச் சேர்ந்த அரசு ஊழியர்களின் பதவி உயர்வு தொடர்பாக ஓராண்டுக்கு முன்னர் அளிக்கப்பட்ட தீர்ப்பில் பிழை உள்ளதை உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது.
 "எஸ்சி, எஸ்டி பிரிவைச் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்விலும் இடஒதுக்கீடு வழங்குவதை அரசியல் சாசனம் அனுமதிக்கிறது. 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டார தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் வட்டாரச் செயலாளர் திரு A.B. ரமேஷ்பாபு அவர்களின் தந்தை இறுதி சடங்கில் பொதுச்செயலாளர் செ.முத்துச்சாமி அவர்கள் தலைமையில் மாநில பொறுப்பாளர்கள் பங்கேற்பு

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் வட்டாரம் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் வட்டாரச் செயலாளர் மற்றும் சூரக்குளம் நடுநிலைப்பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு A.B. ரமேஷ்பாபு அவர்களின் தந்தை திரு பாலசுப்பிரமணி  அவர்கள் உடல்நலக்குறைவால் நேற்று இரவு  இறைவனடி சேர்ந்தார். அன்னாரது இறுதிச்சடங்கில் கலந்து கொண்ட தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுசெயலர் திரு.செ.முத்துசாமி அவர்கள் திரு ரமேஷ் பாபு குடும்பத்தாருக்கு ,இயக்கம் சார்பான வருத்தங்களையும் ,ஆழந்த இரங்கல்களையும் தெரிவித்தனர். மேலும் பொதுசெயலருடன்  மாநில பொருளர் திரு தே..அலெக்சாண்டர்,மாநில துணைப்பொதுசெயலர்கள்,திரு.க.செல்வராஜ்.திரு.அருள்சாமி ,இயக்க இதழ் ஆசிரியர்பேரணியின் ஆசிரியர் திரு வடிவேலு ஆகியோரும் மற்றும் சிவகங்கை, மதுரை மாவட்ட வட்டார பொறுப்பாளர்களும் கலந்துகொண்டனர்.

வருமானவரி செலுத்தும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கான முக்கிய தகவல்கள் - தொகுப்பு

அரையாண்டு தேர்வு: கல்வித்துறை சர்க்குலர்

துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், 11ம் தேதி முதல் அரையாண்டுத் தேர்வுகளை நடத்த,தொடக்கக் கல்வி துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ்,இயங்கும் பள்ளிகளில், 1முதல், 8ம் வகுப்பு மாணவர்களுக்கான இரண்டாம் பருவத் தேர்வுகள் வரும், 11ம் தேதி முதல், 27ம் தேதி வரை,

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் அடுத்த கல்வி ஆண்டு முதல் பட்டப்படிப்புடன் கூடிய 4 வருட பி.எட். படிப்பு

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சந்திரகாந்தா ஜெயபாலன் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு ‘12 பி’ அந்தஸ்து கிடைத்து இருக்கிறது. இந்த சிறப்பு அந்தஸ்து கிடைத்ததற்காக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த அந்தஸ்து இதுவரை 4 திறந்தநிலை பல்கலைக்கழகங்களுக்கு கிடைத்து உள்ளது. 5-வதாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் பெற்றிருக்கிறது.

தேர்தல் பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிக்க நடவடிக்கை:

தேர்தல் மற்றும் மக்கள் கணக்கெடுப்பு பணிகளில் இருந்து ஆசிரியர்களை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசனை நடத்தி வருவதாக, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணை அமைச்சர் ராம் சங்கர் கேத்ரியா தெரிவித்துள்ளார்.

ஜனவரி மாத SSA பயிற்சி தேதிகள் - கிருஷ்ணகிரி மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் செயல்முறைகள்

ஜுன் மாதத்திற்கு பின்னர் 7-வது ஊதிய குழு சம்பளம்- மத்திய அரசு தகவல்

தமிழில் 'இனிஷியல்!' ஆசிரியர்களுக்கு உத்தரவு

அரசாணைகள், உத்தரவுகள் அனைத்தும், தமிழிலேயே வெளியிட வேண்டும்' என, ஐந்தாண்டுகளுக்கு முன், தமிழக அரசு உத்தரவிட்டது. அதேபோல், 'கல்வி அதிகாரிகள் முதல், ஊழியர்கள் வரை, தமிழில் கையெழுத்து போட வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.
'பள்ளி கல்வித் துறையில் ஆசிரியர்கள், அதிகாரிகள் மற்றும்

வங்கி ஊழியர் இன்று 'ஸ்டிரைக்'மூன்று நாட்கள் பாதிப்பு அபாயம்

சென்னை:வங்கி ஊழியர்கள், இன்று, ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், மூன்று நாட்களுக்கு வங்கி பணிகள் முடங்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், இன்று, ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. நாடு முழுவதும், ஐந்து லட்சம் வங்கி ஊழியர்கள், வேலை நிறுத்தத்தில் பங்கேற்பர் என, எதிர்பார்க்கப்படுகிறது.பாரத ஸ்டேட் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளில், அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்திற்கு பிரதிநிதித்துவம் இல்லாததால்,

IGNOU B. Ed. Entrance Test - September, 2015 Results Published

  • CLICK HERE - IGNOU B.ED ENTRANCE 2015 - RESULTS

NMMS தேர்விற்கான வினாக்கள் 7-ம் வகுப்பு மூன்று பருவ புத்தகத்திலிருந்தும் இருந்தும், 8 வகுப்பு முதல் இரண்டு பருவ புத்தகத்திலிருந்தும் கேட்கப்படும் - இயக்குனர் செயல்முறைகள்

சான்றிதழ்கள் சரிபார்க்கும் பணி தீவிரம் 100க்கும் மேற்பட்ட போலி ஆசிரியர்கள் ஓட்டம்

தமிழகத்தில் பல மாவட்டங்களில் போலி சான்றிதழ்களை கொடுத்து அரசு பள்ளிகளில் பலர் ஆசிரியர் பணியில் பல ஆண்டுகளாக பணியாற்றி வருவது தெரியவந்துள்ளது. கடந்த 1991க்கு பின்னர் பணியில் சேர்ந்த பலரது சான்றிதழ்களை சரிவர ஆய்வு செய்யாததே இதற்கு காரணம். கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், வேலூர் மாவட்டங்களில் மேலும் பல போலி ஆசிரியர்கள் இருப்பது தெரியவந்தது.

01.01.2016ன் படி தேர்ந்தோர் பட்டியல் தயாரித்தல் சார்ந்த அறிவுரை வழங்கி இயக்குனர் உத்தரவு01.01.2016 அன்றுள்ளபடி AEEO -க்கள் பணி விவரம் கோரி இயக்குனர் கடிதம்


10ம் வகுப்பு தேர்வு தேதி மாறுகிறதா? : தேர்தலுக்கு தயாராகிறது தமிழகம்

தமிழக சட்டசபை தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என்ற நிலையில், 10ம் வகுப்பு தேர்வுகள் நடக்கும் சமயத்தில் தேர்தல் தேதியும் வர வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இதனால் தேர்வு தேதிகள் மாற்றி அமைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. தேர்வு தேதி மாற்றம் குறித்து மத்திய தலைமை தேர்தல் கமிஷனர் முடிவு செய்வார் என இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி தெரிவித்துள்ளார்.

தமிழக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு-முதல்வர் அறிவிப்பு


நாடு முழுவதும் ஒரே விதமான பாட திட்டம்?

 நாடு முழுவதும், ஆறு முதல், 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு, பள்ளிகளில் ஒரே விதமான பாடத்திட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் எனக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.
ஏற்றத் தாழ்வுகள்:
சுப்ரீம் கோர்ட்டில், வழக்கறிஞர் அஸ்வின் உபாத்யாயா என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல மனு விவரம்: நம் நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள, பள்ளி

பெற்றோரே உஷார்,கடத்தல் நாடகமாடிய 5ம் வகுப்பு மாணவன்!!! போலீஸ் கிறுகிறுப்பு

வீட்டு பாடங்களை செய்யாத, 5ம் வகுப்பு மாணவன், ஆசிரியருக்கு பயந்து, தன்னை மர்ம நபர்கள் கடத்திவிட்டதாக கூறி, போலீசையே கிறுகிறுக்க வைத்து உள்ளான். வேலுார் மாவட்டம், திருப்பத்துார் அடுத்த மடவாளம் அகரம் பகுதியில், 5-ம் வகுப்பு மாணவன் ஒருவன், நேற்று முன்தினம் காலை, 8:30 மணிக்கு, பள்ளிக்கு சைக்கிளில் புறப்பட்டுச் சென்றான். 9:45 மணியளவில், யாரோ ஒருவருடைய, மொபைல் போனில் இருந்து, தன் தந்தைக்கு தொடர்பு கொண்டு பேசினான்.'யாரோ இருவர், என்னை பைக்கில் கடத்திச் சென்றுவிட்டனர்; காப்பாற்றுங்கள்...' என்று சொல்லி, இணைப்பை துண்டித்து விட்டான். இதனால், அதிர்ச்சியடைந்த மாணவனின் தந்தை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

மழை வெள்ளத்தில் தங்களது ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ்களை இழந்தவர்கள், தங்களது ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ்களை பதவிறக்கம் செய்து கொள்ளலாம்

Teachers Recruitment Board 
 College Road, Chennai-600006

Re-uploading of TNTET Certificates
TEACHERS RECRUITMENT BOARD, CHENNAI -6.

In continuation of Teachers Recruitment Board Website Notice on 07.12.2015, the Tamil Nadu Teacher Eligibility Test Certificates are now re-uploaded in TRB website for the sake of candidates those who have lost their TNTET certificates in the recent heavy rainfall and flood. 
Now, the TRB website is optimized for Internet Explorer and Mozilla Firebox browsers only.  The Certificates will be open for printing only upto 05.02.2016 and the date will not be extended further.
           

Dated: 05-01-2016

Member Secretary

Click Here - TET Certificate

மின் பொறியாளர் பணிக்கு 31-ம் தேதி தேர்வு

தமிழ்நாடு மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 375 உதவிப் பொறியாளர்கள் காலி பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான எழுத்துத் தேர்வு வரும் 31-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.அண்ணா பல்கலைக் கழக நுழைவுத் தேர்வு

பிளஸ் 2 தேர்வில் இயற்பியலுக்கு கடைசி இடம்: 'கருத்து கேட்கவில்லை' என ஆசிரியர்கள் புகார்

கடந்தாண்டு மார்ச் 5ல், பிளஸ் 2 தேர்வும், மார்ச் 19ல், பத்தாம் வகுப்பு தேர்வும் துவங்கிய நிலையில், இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு மார்ச் 4ம், பத்தாம்வகுப்பிற்கு மார்ச் 15 என முன்கூட்டியே துவங்கவுள்ளன. சென்னை, கடலுார்உட்பட 6 மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பால் பொதுத் தேர்வுகள் தள்ளிப்போகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முன்கூட்டியே இத்தேர்வுகள் துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை நேற்று வெளியானது. பிளஸ் 2 தேர்வு, மார்ச், 4ம் தேதியும், 10ம் வகுப்பு தேர்வு, மார்ச், 15ம் தேதியும் துவங்குகிறது

போலி சான்றிதழ் விவகாரம்: 40 ஆசிரியர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு

ர்மபுரி: போலி சான்றிதழ் கொடுத்து பணியில் சேர்ந்த விவகாரத்தில், 40 ஆசிரியர்களின் ஜாதி, கல்வி சான்றிதழ்களை, போலீசார் சரிபார்த்து வருகின்றனர்.
போலி ஜாதி மற்றும் கல்வி சான்றிதழ் கொடுத்து ஆசிரியர் பணியில் சேர்ந்த, தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு பாராதியார் நகரைச் சேர்ந்த முனியப்பன், 37, கிருஷ்ணகிரி மாவட்டம் கூச்சானுாரைச் சேர்ந்த செந்தில்குமார், 38, இவர்களுக்கு, போலி சான்றிதழ் தயார் செய்து கொடுத்த, கிருஷ்ணகிரி திருவள்ளூவர் நகரைச் சேர்ந்த ராஜேந்திரன்,

பள்ளி செல்லப் பயந்து கடத்தல் நாடகமாடிய சிறுவன்

திருப்பத்தூர் அருகே வீட்டுப்பாடம் செய்யாததால் பள்ளிக்குச் செல்ல பயந்து கடத்தல் நாடகமாடிய சிறுவனால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம், திருப்பத்தூரை அடுத்த மடவாளம் அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம். இவரது மகன் சஞ்சய் (10). இவர் அகரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் திங்கள்கிழமை சஞ்சய் வழக்கம் போல் பள்ளிக்கு மிதிவண்டியில் சென்றார். சிறிது நேரத்தில் சஞ்சய்,

சிறுபான்மை மாணவர்கள் தமிழ் மொழி தேர்வு எழுதுவதிலிருந்து விலக்கு அளிக்க முடியாது: பள்ளிக் கல்வித்துறை விளக்கம்

சிறுபான்மை மாணவர்களுக்கு, தமிழ் மொழி தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்க முடியாது என மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை விளக்க கடிதம் அனுப்பி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் கல்வி மாவட்டத்தில் ஓசூர், சூளகிரி, தளி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி, கெலமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் தெலுங்கு, கன்னடம், உருது உள்ளிட்ட அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் என 68 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதில் 6873 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.

தொடக்கப/நடுநிலைப் பள்ளிகள்-இரண்டாம் பருவத் தேர்வு 11.01.2016 முதல் நடைபெறும் -இயக்குனர் அறிவிப்பு


பிளஸ் 2 பொதுத் தேர்வுகள் மார்ச் 4 ஆம் தேதியும் மற்றும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 15 ஆம் தேதியும் தொடங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

12TH PUBLIC TIME TABLE - MARCH 2016
04.03.2016 FRI TAMIL I
07.03.2016 MON TAMIL II
09.03.2016 WED ENGLISH I
10.03.2016 THU ENGLISH II
14.03.2016 MON Che/Acc
17.03.2016 THU Commerce/Home Sci/Geo.
18.03.2016 FRI Maths/Zoo/Micro bio/Nutri.Diet
21.03.2016 MON C.Eng/In.Cul/Com Sci/Bio-che/Ad.Lan
23.03.2016 WED Pol Sci/Nursing/Stat/Theo of Voc Sub
28.03.2016 MON BIO/HIS/BOT/B.MAT
01.04.2016 FRI Phy/Eco


10TH PUBLIC TIME TABLE - MARCH 2016
15.03.2016 TUE TAMIL I
16.03.2016 WED TAMIL II
22.03.2016 TUE ENGLISH I
29.03.2016 TUE ENGLISH II
04.04.2016 MON MATHEMATICS
07.04.2016 THU SCIENCE
11.04.2016 MON SOCIAL SCIENCE
13.04.2016 WED OPTIONAL SUBJECT

ஓய்வூதியர்களுக்கான மிகை ஊதியம் அரசானை வெளியீடு

ஓய்வூதியர்களுக்கான அரசாணை வெளியீடு--தமிழ் CLICK HERE
BONUS G.O FOR PENTIONERS-ENGLISH VERTION-CLICK HERE

பொங்கல் போனஸ் அரசானை வெளியீடு

பொங்கல் போனஸ் அரசாணை எண்-1-தமிழ் வடிவம்-CLICK HERE
PONGAL BONUS G.O- ENGLISH VERSTION-CLICK HERE

10 ஆம் வகுப்பு,12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகள் அறிவிப்பு

சென்னை: பிளஸ் டூ பொதுத்தேர்வு மார்ச் 4-ம் தேதி தொடங்குகிறது. மார்ச் 4ம் தேதி தொடங்கி ஏப்ரல் 1-ம் தேதி வரை வரை தேர்வு நடைபெறுகிறது. பிளஸ் டூ தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி பகல் 1.15 மணிக்கு முடிகிறது. அதேபோல் மார்ச் 15-ம் தேதி எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு தொடங்குகிறது. மார்ச் 15-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 13-ம் தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெறுகிறது. 10-ம் வகுப்பு தேர்வு காலை 9.15 மணிக்கு தொடங்கி நண்பகல் 12 மணிக்கு முடிகிறது. 

பிளஸ் டூ தேர்வுகள் விவரம்:

மார்ச் 4-ம் தேதி மொழித் தாள்-1
மார்ச் 7-ம் தேதி மொழித் தாள்-2
மார்ச் 9-ம் தேதி ஆங்கிலத் தாள்-1
மார்ச் 10-ம் தேதி ஆங்கிலத் தாள்-2
மார்ச் 14-ம் தேதி வேதியியல், கணக்குவியல் 
மார்ச் 17-ம் தேதி வணிகம், மனையியல், புவியியல்
மார்ச் 18-ம் தேதி கணக்கு, விலங்கியல், சத்துணவு
மார்ச் 21-ம் தேதி தொடர்பு வழி ஆங்கிலம், இந்தியக் கலாச்சாரம், கணினி அறிவியல், உயிர் வேதியியல், சிறப்பு பாடம்(தமிழ்)
மார்ச் 23-ம் தேதி அரசியல், புள்ளியல், நர்சிங்
மார்ச் 28-ம் தேதி உயிரியியல், தாவரவியல் பௌதீக அறிவியல், வரலாறு, வணிக கணக்கு
ஏப்ரல் 1-ம் தேதி இயற்பியல், பொருளாதாரம்

10-ம் வகுப்பு தேர்வு விவரம்:

மார்ச் 15-ம்  தேதி தமிழ் முதல்தாள்
மார்ச் 16-ம்  தேதி தமிழ் இரண்டாம் தாள்
மார்ச் 22-ம்  தேதி ஆங்கிலம் முதல்தாள்
மார்ச் 29-ம்  தேதி ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 4-ம் தேதி  கணிதம் 
ஏப்ரல் 7-ம் தேதி  அறிவியல்
ஏப்ரல் 11-ம் தேதி  சமூகஅறிவியல்
ஏப்ரல் 13-ம் தேதி  விருப்பப்பாடத் தேர்வு

போலிச் சான்றிதழ்கள் தயாரித்து மோசடி: தொடக்கப் பள்ளி ஆசிரியர் உள்பட இருவர் கைது

போலிச் சான்றிதழ்கள் தயாரித்து ஆசிரியர் பணியைப் பெற்ற நபரும், அவருக்கு போலிச் சான்றிதழ்களைத் தயாரித்து வழங்கியவரும் தருமபுரி மாவட்டக் குற்றப் பிரிவு போலீஸாரால் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
தருமபுரி மாவட்டம், பாலக்கோட்டைச் சேர்ந்தவர் வி. முனியப்பன் (37). பிளஸ் 2 மட்டுமே முடித்த இவர், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த துரைராஜ் என்ற பெயரில், ஆசிரியர் தகுதித் தேர்வு உள்ளிட்ட சான்றுகளுடன் நாமக்கல் குமாரபாளையத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியராகப் பணியில் சேர்ந்திருக்கிறார்.

பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களில் யார் யார் புகைப்படங்களை வைக்கலாம்


3ம் பருவ பாடப்புத்தகம் வழங்கினாலும் மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர்களுக்கு தடை-DINAKARAN

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையில் மூன்றாம் பருவத்துக்கான பாடப்புத்தகங்கள் மாணவ, மாணவியர்களுக்கு நேற்றுமுன்தினம் வழங்கப்பட்டது. ஆனால், அதை வைத்து உடனடியாக மாணவர்களுக்கு பாடம் நடத்தக்கூடாது என ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரை முப்பருவக்கல்வி முறை அமலில் உள்ளது. கனமழை காரணமாக இரண்டாம் பருவத்தேர்வு, ஜனவரி 17ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஆனால், இரண்டாம் பருவத்தேர்வு விடுமுறை முடிந்து அனைத்து பள்ளிகளும் நேற்றுமுன்தினம் திறக்கப்பட்டன.

இரண்டாம் பருவத் தேர்வுக்கு முன், மூன்றாம் பருவத்திற்கான பாடங்களை நடத்தலாமா?

வங்கி கணக்கு, ஏ.டி.எம்., எண் கொடுக்காதீங்க...ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்தை இழந்தார் இன்ஜினியர்

அலைபேசி வழியாக வங்கி கணக்கு மற்றும் ஏ.டி.எம்.,எண் பெற்ற மர்ம நபர், அருப்புக்கோட்டை இன்ஜினியரிடமிருந்து ரூ.1 லட்சத்து 3 ஆயிரத்தை மோசடி செய்துள்ளார்.அருப்புக்கோட்டை அருகே பனையூரை சேர்ந்தவர் பிரபு. அதானி குரூப் சோலார் கம்பெனியில் இன்ஜினியராக உள்ளார். ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் கணக்கு வைத்துள்ளார். 2 நாட்களுக்கு முன்பு இவரது அலைபேசிக்கு அழைப்பு வந்தது. பேசிய நபர், ஐ.சி.ஐ.சி.ஐ., வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ,

முக்கிய கேள்விகள் புத்தகத்தில் ஜெ., படம் பெற்றோர் அதிருப்தி - DINAMALAR

பிளஸ் 2 கற்றல் கையேடு புத்தகத்தில், முதல்வர் ஜெயலலிதா படம் அச்சிடப்பட்டுள்ளதால், மாணவர்கள் மற்றும் பெற்றோர் அதிருப்தி அடைந்துள்ளனர்.பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்கள் தேர்ச்சி பெறும் வகையில், முக்கிய கேள்விகள் அடங்கிய, குறைந்தபட்ச கற்றல் கையேடு புத்தகத்தை, தமிழக கல்வித்துறையின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் உள்ள கேள்விகளை படித்தால், கண்டிப்பாக தேர்ச்சி பெற முடியும் என, தமிழக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

எல்லா மாணவர்களுக்கும் தொழில் பாடங்கள்-வரும் கல்வி ஆண்டிலேயே தமிழகத்தில் அமல்படுத்த வாய்ப்பு


சம்பளத்தில் பிடித்தம் செய்த CPS-பணம் எங்கே போச்சு ? தினகரன் நாளிதழ்

Statement of the Honble Chief Minister on the Bonus payable to Government Staff- Press Note No : 004

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையையொட்டி, சி மற்றும் டி பிரிவு அலுவலர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட மாநில அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா, போனஸ் அறிவி்ததுள்ளார்.

"ஏ" மற்றும் "பி" பிரிவு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு சிறப்பு மிகை ஊதியம் - ரூ.1000/-

"சி" மற்றும் "டி" பிரிவு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிகை ஊதியம் - ரூ.3000/-
ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500/- வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

கருவூல சேவையைப் பெற ஓய்வூதியர்கள் ஆதார் எண் வழங்க வேண்டும்: ஆட்சியர் தகவல்

இணையதளம் மூலமாக கருவூல சேவையைப் பெற விரும்பும் ஓய்வூதியதாரர்கள் தங்களதுஆதார் எண்ணை கருவூல அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் எஸ்.பிரபாகர் தெரிவித்துள்ளார். இது குறித்து, அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:தமிழ்நாடு அரசு ஓய்வூதியர்கள், குடும்ப ஓய்வூதியர்கள் ஒவ்வோர் ஆண்டும் மாவட்டக் கருவூலம், சார்நிலைக் கருவூலங்களில் நேர்காணலுக்கு வர வேண்டும்.

சி.பி.எஸ்.இ., தேர்வு தேதிகள் அறிவிப்பு

புதுடில்லி : 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்புக்கான சி.பி.எஸ்.இ., தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு தேர்வு மார்ச்1ம் தேதி துவங்கி மார்ச் 28ம் தேதி முடிவடைகிறது. சி.பி.எஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வு மார்ச் 1ம் தேதி துவங்கி ஏப்ரல் 22ம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் ஏ.பி.பரதன் காலமானார்

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளரும், மூத்த தலைவருமான ஏ.பி.பரதன் இன்று காலமானார். உடல்நலக்குறைவு காரணமாக மத்திய டெல்லியில் உள்ள ஜி.பி.பந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பரதன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழகம் - 2015-16 ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை தேதி நீடிப்பு.

முன்அனுமதி பெறாத ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதிய உயர்வு வழங்க முடிவு

  முன்அனுமதி பெறாமல் உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கும் ஊக்க ஊதிய உயர்வு வழங்க தொடக்கக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கு தகுந்தாற்போல் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படுகின்றன. இடைநிலை ஆசிரியர்கள், இளநிலை (பி.ஏ.,- பி.எஸ்சி.,) பட்டத்துடன் பி.எட்., முடித்தால் முதல் ஊக்க ஊதிய உயர்வு வழங்கப்படும். முதுநிலை பட்டம் (எம்.ஏ.,- எம்.எஸ்.சி.,) முடித்தால் 2 வது ஊக்க உயர்வு வழங்கப்படும். 

வெள்ளத்தால் பாதித்த மாணவர்களுக்கு சிறப்பு ‘கற்றல் கையேடு’

 எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுக்கு தயாராகும் வகையில் வெள்ளத்தால் பாதித்த மாணவர்களுக்கு சிறப்பு ‘கற்றல் கையேடு’ 3-ம் பருவ பாடப்புத்தகங்களும் வினியோகம்
        எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுக்கு தயாராகும் வகையில் வெள்ள பாதிப்பு மாணவர்களுக்கு சிறப்பு கற்றல் கையேடு வழங்கப்பட்டது. இதேபோன்று 3-ம் பருவ பாடப்புத்தகங்களும் வினியோகிக்கப்பட்டது.
விலையில்லா பொருட்கள்
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், புத்தகப்பை உள்பட 14 வகையான விலையில்லா பொருட்கள் பள்ளி கல்வித்துறை சார்பில் வழங்கப்பட்டு வருகின்றன.

தனியார் வசம் செல்கிறது பள்ளி கழிப்பறை சுத்தம்

 உள்ளாட்சி அமைப்புகள் பராமரிப்பில் உள்ள, 35 ஆயிரம் அரசு பள்ளிகளின், கழிப்பறை பராமரிப்பை தனியாரிடம் ஒப்படைக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதற்காக, ஆண்டுக்கு, 57 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
          தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்பின் பராமரிப்பில், 27 ஆயிரத்து, 700 ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகள்; கல்வித் துறையின் கீழ், 7,247 பள்ளிகள் என மொத்தம், 34 ஆயிரத்து, 947 பள்ளிகள் உள்ளன.  
         பற்றாக்குறைஉள்ளாட்சி அமைப்புக்களில் உள்ள துப்புரவு பணியாளர்களே இப்பள்ளிகளின், கழிப்பறைகளை சுத்தம் செய்கின்றனர்.'உள்ளாட்சி அமைப்பில் உள்ள, 24 ஆயிரத்து, 928 முழுநேர துப்புரவு பணியாளர்கள், பிற துப்புரவு பணிகளுக்கு மத்தியில்,

சத்துணவு ஊழியர் பிரச்னை தீரவில்லை உணவு வழங்குவதை நிறுத்த முடிவு

 ராமநாதபுரம் மாவட்டத்தில் 23 சத்துணவு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையை திரும்ப பெறாததால், தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு உணவு வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளனர்.ராமநாதபுரம் மாவட்டத்தில் 8 மாதங்களில் 23 சத்துணவு ஊழியர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். அதன்பின் சிலரது 'சஸ்பெண்ட்' உத்தரவு ரத்து செய்யப்பட்டு இடமாறுதல் செய்யப்பட்டனர்.
             இதையடுத்து கலெக்டரின் நேர்முக உதவியாளரை (சத்துணவு) இடமாற்றம் செய்ய வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் ராமநாதபுரம், சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை ஆகிய 4 மாவட்ட ஊழியர்கள் டிச., 14 ல் ராமநாதபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர்.பின் நிர்வாகிகளுடன்

புத்தாண்டு விடுப்பு: ஊதியக் குழு பரிந்துரைத்த பலன் கிடைக்குமா?

புத்தாண்டு அன்று விடுப்பு எடுத்த மத்திய அரசு ஊழியர்களுக்கு 7-ஆவது ஊதியக் குழு பரிந்துரைத்த பலன்கள் கிடைக்குமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 2016-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தப்படும் என்றும் அன்று பணிக்கு வருபவர்களுக்கு மட்டுமே அக்குழு அளித்த ஊதிய உயர்வின் பலன்கள் கிடைக்கப்பெறும் என்றும் மத்திய அரசு வெளியிட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

SLAS Test: அரசுப் பள்ளிகளில் அடைவு சோதனை: ஜனவரி 5-இல் தொடக்கம்

தமிழகம் முழுவதுமுள்ள அனைத்து அரசுப் பள்ளிகளில் 3,5 மற்றும் 8-ஆம் வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான கல்வித்தர அடைவு சோதனை வரும் ஜனவரி 5 முதல் 8-ஆம் தேதி வரை நடத்த அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.

web stats

web stats