rp

Blogging Tips 2017

SSA - HOW TO UTILIZE SG / MG GRANTS REGARDING PROCEEDING....


ஓய்வூதியருக்கு தனி அடையாள அட்டை: ஓ.பன்னீர்செல்வம்

ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோருக்கு தனி அடையாள அட்டை அளிக்கப்படும் என்று நிதி, பணியாளர்-நிர்வாகச் சீர்திருத்தத் துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.

சட்டப் பேரவையில் நிதித் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து வெள்ளிக்கிழமை அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:-

தமிழ்நாடு ஓய்வூதிய விதிகளின் கீழ், ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் பெறுவோர் பயன்பெறும் வகையில், ஓய்வூதியர் அடையாள அட்டைகள் வழங்கப்படும். கூட்டுறவுத் தணிக்கைத் துறையிலுள்ள அனைத்து நிலையிலான தணிக்கையாளர்களுக்கும், அவர்களின் தரம்-திறமையை மேம்படுத்த புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்படும்

DSE:புத்தாக்க அறிவியல் ஆய்வு விருது மின்னணு மேலாண்மை மூலம் விவரங்கள் பதிவேற்றம் செய்தல் தொடர்பாக...


TNPSC - DEPARTMENTAL EXAMINATIONS DECEMBER -2016 TIME TABLE


G.O.Ms.No.241 Dt: August 24, 2016 MEDICAL AID -New Health Insurance Scheme 2016 for employees – New Health Insurance Scheme 2014 for Pensioners / Family Pensioners – Grievances Redressal Mechanism– Orders - Issued.


TNPSC - DEPARTMENTAL EXAMINATIONS DECEMBER-2016 - NOTIFICATION

CPS Account Slip for 2015-16 is now available

CPS Account Slip for 2015-16 is now available in the following link. Please download your A/c Slip by login with your CPS No as Id and Your Date of Birth as password.

http://cps.tn.gov.in/public/index.php

Cps பிடித்த தொகையில் missing credit வருகிறது எனில் விடுபட்ட தொகையை சரி செய்ய வேண்டும் எனில் கீழ்கண்ட Missing credit form - ஐ பூர்த்தி செய்து Aeeo அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

CPS MISSING CREDITS

நண்பர்களே Cps பிடித்த தொகையில் missing credit வருகிறது எனில் விடுபட்ட தொகையை சரி செய்ய வேண்டும் எனில் கீழ்கண்ட Missing credit form-ல்

விடுபட்டமாதங்களின் தொகையை பதிவு செய்து தங்களது DDO/AEEO சமர்ப்பிக்க வேண்டும் அவர்கள் பதிவு செய்து;FORWARD செய்து  MISSING CREDIT சரிசெய்யப்படும்

மேல்நிலைப்பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்புவரை நடைபெறும் பள்ளி தேர்வுகளை நடத்தும் பொறுப்பு மேல்நிலை உதவி தலைமையாசிரே - தகவல் அறியும் உரிமைச் சட்ட தகவல்

அரசு பெண் ஊழியர்களுக்கு 9 மாதம் மக்ப்பேறு விடுப்புக்கான அறிவிப்பு

அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுமுறை 9 மாதமாக உயர்வு: முதல்வர் அறிவிப்பு

தமிழக அரசு பெண் ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பை 6 மாதத்தில் இருந்து 9 மாதமாக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

சட்டப்பேரவை விதி 110-ன்கீழ் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு ஒன்றை இன்று வெளியிட்டார். அதில், "அரசுக்கும் மக்களுக்கும் இடையே பாலமாக விளங்குபவர்கள் அரசு ஊழியர்கள். அரசின் அனைத்து நலத் திட்டங்களையும் மக்களிடம் எடுத்துச் செல்பவர்களும் அரசு ஊழியர்கள் தான். அரசு ஊழியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

பெண் ஊழியர்களைப் பொறுத்தவரையில், அவர்கள் நலனைக் கருத்தில் கொண்டு, நான் 2011ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றவுடன், அரசுப் பணியில் உள்ள தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தைகளைப் பேணிப் பாதுகாக்க, 1980ஆம் ஆண்டு முதல் 90 நாட்கள் என இருந்த மகப்பேறு விடுப்பு காலத்தினை 16.5.2011 முதல் 6 மாதங்களாக உயர்த்தி உத்தரவிட்டேன்.

எங்களது தேர்தல் அறிக்கையில் ‘மகளிருக்கு வழங்கப்படும் மகப்பேறு விடுப்பு காலம் 9 மாதங்களாக உயர்த்தப்படும்’ என்ற வாக்குறுதியை நாங்கள் அளித்திருந்தோம். அதனை செயலாக்கும் விதத்தில், அரசு பணிபுரியும் தாய்மார்கள் தங்களது பச்சிளம் குழந்தையை பேணி பாதுகாக்கும் வகையில்  பேறு கால சலுகையாக வழங்கப்படும் 6 மாத கால மகப்பேறு விடுப்பு 9 மாத காலமாக உயர்த்தப்படும்" என்று முதல்வர் அறிவித்தார்.

தகவல் பெறும் உரிமைச்சட்டத்தின் கீழ் தகவல்கள் அளிக்க மறுத்த முதன்மை கல்வி அலுவலர் (CEO) மீது ஒழுங்கு நடவடிக்கை தமிழ்நாடு தகவல் ஆணையம் அதிரடி உத்தரவு!!!


இந்த மாதம் தொழில் வரி !

ஆறுமாத வருமான அடிப்படையில் இந்த தொழில் வரி ஏப்ரல் முதல்  செப்டம்பர் வரை மற்றும் அக்டோபர் முதல்  மார்ச் வரை மாநில அரசுக்கு செலுத்தப்படுகிறது.

 இது மத்திய அரசுக்கு செலுத்தும் வருமான வரியில் கழித்தம் செய்யப்படும். இவ்வரியினை மாற்றுத்திறனாளி ஆசிரியர்கள் செலுத்த வேண்டியதில்லை ( அரசாணை 2726/(நிதி) நாள் 01.11.1994: தமிழ்நாடு அரசிதழ் சிறப்பு வெளியிடு நாள் :25.06.1992.).

அரசு பள்ளிகளில் ரூ. 1.60 கோடியில் இரு உள் விளையாட்டரங்கம் !

தமிழகத்தில், முதன் முதலாக, 'ராஜிவ் கேல் அபியான்' திட்டத்தின் கீழ், தேனி மாவட்டத்தில், இரு இடங்களில், 1.60 கோடி ரூபாயில் உள்விளையாட்டரங்கம் அமைக்க விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய சுற்றறிக்கை:

மத்திய அரசின், 'ராஜிவ் கேல் அபியான்' திட்டத்தின் கீழ், தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியம், சில்வார்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஆண்டிபட்டி ஒன்றியம்,

ரோசய்யா பதவிக் காலம் நிறைவு: தமிழக ஆளுநராக வித்யாசாகர் ராவுக்கு கூடுதல் பொறுப்பு

தமிழக ஆளுநராக சென்னமனேனி வித்யாசாகர் ராவை நியமித்து குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி உத்தரவிட்டுள்ளார்.
மகாராஷ்டிர ஆளுநராகப் பொறுப்பு வகிக்கும் வித்யாசாகர் ராவுக்கு இந்தப் பொறுப்பு கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது. தமிழக ஆளுநராக இருந்த கே.ரோசய்யாவின் பதவிக் காலம், கடந்த செவ்வாய்க்கிழமையுடன் (ஆக.30) நிறைவடைந்த நிலையில், இந்த புதிய அறிவிப்பு வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.
ஆந்திர முன்னாள் முதல்வரான ரோசய்யாவை தமிழகத்தின் ஆளுநராக கடந்த 2011-ஆம் ஆண்டில் முந்தைய மத்திய காங்கிரஸ் அரசு நியமித்தது. கடந்த 5 ஆண்டுகளாக தமிழக அரசுடன் சுமுகமான உறவுடன் செயல்பட்டு வந்ததால், ரோசய்யாவின் பதவிக் காலம் மேலும் இரு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க ஆசிரியர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சதுரங்க விளையாட்டின் விதிமுறைகள்

சதுரங்க விதிமுறைகள் 

ஏ.டி.எம். மெஷின்களில் மொபைல் எண் பதிவிடும் வசதி !

ஏ.டி.எம். மெஷின்களிலேயே வாடிக்கையாளர்கள் தங்களது மொபைல் எண்களைப் பதிவுசெய்யும் வசதி விரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.

         வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் தங்களிடமுள்ள மொபைல் எண்ணை வங்கிக் கணக்கில் இணைப்பது அவசியமாகிறது.

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்தியாளர்களை சந்திக்கவோ, அவர்களுக்கு பேட்டி அளிக்கவோ கூடாது - பள்ளிக் கல்வித் துறை உத்தரவு.

செய்தியாளர்களிடம் பேசக் கூடாது: ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடு

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் செய்தியாளர்களை சந்திக்கவோ, அவர்களுக்கு பேட்டி அளிக்கவோ கூடாது என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.பள்ளி வேலை நேரத்தில் வெளி நபர்கள் உள்ளே வர அனுமதிக்கக் கூடாது.

தலைமை ஆசிரியர், உதவி ஆசிரியர்கள் யாரும் வேலை நேரத்தில் செய்தியாளர்களைச் சந்திக்கவோ, பேசவோ, துறையின் அனுமதி இல்லாமல் பேட்டி கொடுக்கவோ கூடாது என்று திருப்பூர் மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் (பொறுப்பு) கோ.லலிதா செவ்வாய்க்கிழமை உத்தரவு பிறப்பித்துள்ளார்.

துறையின் அனுமதியைப் பெறாமல் பள்ளி தொடர்பாகவோ, துறை தொடர்பாகவோ யாரேனும் பேட்டி அளித்தால் சம்பந்தப்பட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இந்த உத்தரவு மாவட்டம் முழுவதிலும் உள்ள அனைத்து தொடக்க, நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பொருந்தும் எனவும், இந்த உத்தரவைப் பின்பற்றும்படி சம்பந்தப்பட்ட உதவி, கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

NTSE - தேசிய திறனாய்வுத் தேர்வு 06.11.2016 ஞாயிற்றுக்கிழமை பதிலாக 05.11.2016 சனிக்கிழமை நடைபெறும்

மெல்ல மலரும் மாணவர்களுக்கான கணக்கு பயிற்சி கையேடு(2,3,4,5,6,7 &8 வகுப்புகள்)

Click Here 2 nd std and 3d std

Click Here 4th and 5th std 

Click Here 6,7th and 8th std

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலபொறுப்பாளர்கள்-தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களை பாராட்டி வாழ்த்துகிறோம்


தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் தாரக மந்திரமும், நமது அய்யா திரு செ.முத்துசாமி அவர்களின் வாய்மையின் வாக்கியமாகிய....."கடமையை செய்...  உரிமையைக் கேள்..."

என்பதற்கிணங்க   தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் போர்ப்படைத்தளபதிகளான  தமிழ்நாடு ஆசிரியர் கூட்டனியின் மாநில தலைவர்  உடுமலைப்பேட்டை,திரு கு.சி. மணி அவர்களும் , மாநில துணை பொது செயலாளர் கிருஷ்ணகிரி-ஒசூர்- திரு எஸ்,பொன்நாகேஷா அவர்களும்,இந்த ஆண்டுக்கான மத்திய அரசின் தேசிய நல்லாசியர் விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன்   தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களின் இச்சிறப்பு மிகு  சாதனையை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மனதார பாராட்டி வாழ்த்துகிறது

தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை:புதிய விதிகள் உருவாக்க 2ம் தேதி கூட்டம்

தனியார் மருத்துவ கல்லுாரிகளில், மருத்துவ படிப்புகளில் மாணவர்களை சேர்க்க, புதிய விதிகள் உருவாக்குவதற்கான கூட்டத்தை, வரும், 2ம் தேதி, உயர் கல்வித்துறை நடத்துகிறது.
'நீட்' தேர்வு:தனியார் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, இந்த ஆண்டு, 'நீட்' தேர்வு கட்டாயமாகியுள்ளது. நீட் தேர்வு முடிவு, கடந்த வாரம் வெளியான நிலையில், மாணவர் சேர்க்கை எப்படி, கட்டணம் எவ்வளவு என்ற குழப்பம் நீடித்து வருகிறது. தனியார் நிகர்நிலை பல்கலைகள், மருத்துவ கல்லுாரிகள் மாணவர் சேர்க்கை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.

புதுதில்லியில் ஆசிரியர் தினத்தன்று தேசிய நல்லாசிரியர் விருது பெறவுள்ள ஆசிரியர்களுக்கான முன் ஏற்பாடுகள்/ செயல் திட்டம்/ நேர வரைமுறைகள் வெளியீடு.

Click Here

பணி நிரவல் செய்யப்பட்ட ஆசிரியை - தொடக்க கல்வி அலுவலகத்தில் தற்கொலை முயற்சி

சேலம் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்தில், ஆசிரியை, துாக்க மாத்திரை சாப்பிட்டு, மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் டவுனை சேர்ந்தவர் தனலட்சுமி, 42; சேலம், தேர்வீதி அரசு நடுநிலைப் பள்ளியில், இடைநிலை ஆசிரியையாக பணிபுரிந்தார். 

ஆக., 13ம் தேதி, பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை அடிப்படையில், உபரி ஆசிரியர் பணியிடங்கள் கணக்கெடுக்கப்பட்டு, பணி நிரவல் நடந்தது. இதில், காடையாம்பட்டி ஒன்றியத்தில் உள்ள பள்ளிக்கு, தனலட்சுமி பணி மாறுதல் செய்யப்பட்டார். அங்கு செல்ல விருப்பம் இல்லாததால், தன் பணி மாறுதல் உத்தரவை ரத்து செய்ய கோரி வந்தார்.

தமிழக அரசு நல்லாசிரியர் விருதுக்கு 534 பேர் தேர்வு

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் 534 ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுக்க தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு 1960ம் ஆண்டு முதல் நல்லாசிரியர் விருதுகள் வழங்கப்பட்டு வந்தன.
பின்னர், இந்த விருது 1997ம் ஆண்டு முதல் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு ஆண்டுதோறும் செப்டம்பர் 5ம் தேதி வழங்கப்படுகிறது. ஆசிரியர்களின் பணியை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் இந்த விருதுடன் முன்னதாக ரூ.5 ஆயிரம் மற்றும் வெள்ளிப் பதக்கம், பாராட்டுப் பத்திரம் வழங்கப்பட்டது.

மாஃபா. பாண்டியராஜன் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக நியமனம்.

பால்வளத்துறை அமைச்சர் பதவியில் இருந்து எஸ்.பி.சண்முகநாதன் விடுவிக்கப்பட்டார். சண்முகநாதன் வகித்து வந்த இலாக்கா கே.டி.ராஜேந்திர பாலாஜியிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் புதிய அமைச்சராக மாஃபா கே.பாண்டியராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மாஃபா கே. பாண்டியராஜனுக்கு பள்ளிக்கல்வித்துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை ஒதுக்கப்பட்டுள்ளது.  பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த பென்ஜமினிடம், ராஜேந்திர பாலாஜி வகித்து வந்த ஊரகத் தொழில் துறை ஒப்படைக்கப்பட்டுள்ளது. அமைச்சர் பதவியேற்பு நிகழ்ச்சிநாளை மாலை 04.35 மணிக்கு ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மை இன கல்வி உதவி தொகை பெற படிவங்கள் ஸ்கேன் செய்து upload செய்ய தேவையில்லை. பள்ளியில் உரிய படிவங்கள் இருப்பின் போதுமானது….ஆனால் online ல் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்…


தமிழக அமைச்சரவை திங்கட்கிழமை திடீரென மாற்றி அமைக்கப்பட்டது.

தமிழக அமைச்சரவை திங்கட்கிழமை திடீரென மாற்றி அமைக்கப்பட்டது.

பால்வளத் துறை அமைச்சர் பதவியிலிருந்து எஸ்.பி.சண்முகநாதன் விடுவிக்கப்பட்டார். சண்முகநாதன் கவனித்து வந்த பால்வளத் துறையை கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

மாஃபா கே.பாண்டியராஜன் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த பெஞ்சமின் ஊரக தொழில் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஆளுநர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை பதவியேற்பு விழா நடைபெற உள்ளது.

தேசிய நல்லாசியர் விருது பெரும் ஆசிரியர்களின் பெயர் பட்டியல்


பள்ளி, கல்லூரிகளுக்கு 'டெங்கு' எச்சரிக்கை

பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகளில், டெங்கு நோய் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை இறுதி கட்டத்தை எட்டியுள்ளது; வடக்கு, கிழக்கு மாவட்டங்களில், பரவலாக மழை பெய்து வருகிறது. மழை பெய்து, தண்ணீர் ஆங்காங்கே தேங்குவதால், டெங்கு காய்ச்சலும் பரவ துவங்கியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், அடுத்தடுத்த நடந்த இறப்புகள் மாணவ, மாணவியரை அச்சமடைய வைத்துள்ளது. சென்னையில், நிலவேம்பு குடிநீர் வழங்க, சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. அத்துடன், அனைத்து பள்ளி, கல்லுாரி மற்றும் பல்கலைகளில், டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், உத்தரவிடப்பட்டுள்ளது.

தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான கணிதம் கற்பித்தல் கற்றல் உபகரணப் பெட்டி பயிற்சி கையேடு பவர் பாய்ண்ட் வடிவில்...

SABL MATHS KIT ENG MEDIUM CLICK HERE TO DOWNLOAD

கல்வி உதவி பெறகாலக்கெடு நீட்டிப்பு

சிறுபான்மையின மாணவ, மாணவியர், கல்வி உதவி வேண்டி, ஆன்-லைன்&' மூலம் விண்ணப்பம் செய்வதற்கான காலக்கெடு, செப்., 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள, அரசு பள்ளி, அரசு உதவி பெறும் பள்ளி, அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில, 1ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை படிக்கும் சிறுபான்மையின மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

புதிய கல்விக்கொள்கை பற்றிய அறிக்கையை தமிழில் அறியலாம்.அனைவரும் தங்கள் கருத்தை செப்டம்பர் 30-ந் தேதிக்குள் அளியுங்கள். மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தகவல்

புதிய கல்விக்கொள்கை பற்றிய மத்திய அரசின் அறிக்கையை இணையதளத்தில் தமிழில் படிக்கலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறினார். இதுகுறித்து  மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் கூறியதாவது:-
கல்வியில் பல்வேறு சீர்திருத்தத்தைக் கொண்டுவருவதற்கு ஒவ்வொரு நாடும் கடுமையாக பாடுபடுகின்றன. அதோடு, குறிப்பிட்ட கால இடைவெளியில் கல்வியை மறுஆய்வும் செய்து வருகின்றன. சுதந்திரத்துக்குப்பிறகு நாமும் பெரிய முயற்சிகளை மேற்கொண்டோம். இதற்காக முதலில் முதலியார் கமிஷனும்,

பொது மாறுதல் மூலம் மாறுதல் மற்றும் பதவி உயர்வு பெற்ற ஆசிரியர்களுக்கு முன் ஊதியச்சான்று வழங்குதல் சார்ந்து தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

CPS - தன் பங்கேற்பு ஓய்வூதியத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கும் பணிக்கொடை வழங்குதல் சார்பான மத்திய அரசின் அலுவலகக் குறிப்பாணை


தொடக்கக்கல்வி -பள்ளி ஆசிரியர்கள் வருகைப் பதிவேட்டில் எவ்வாறு எழுத வேண்டும் என-காஞ்சிபுர மாவட்ட தொடக்கக் அலுவலரின் செயல்முறைகள்


web stats

web stats