'அடுத்த கல்வியாண்டு முதல், மாணவர்களுக்கு, 'டிஜிட்டல்' எனப்படும், மின்னணு முறையில் சான்றிதழ்கள் வழங்கப்படும்,'' என, மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறினார். டில்லியில் நடந்த, தேசிய கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்றில், அவர் பேசியதாவது: நாடு முழுவதும், டிஜிட்டல் மயமாக வேண்டும் என்பதற்காக, 'டிஜிட்டல்
இந்தியா' திட்டத்தை, பிரதமர் மோடி துவக்கினார். அடுத்த கல்வி ஆண்டு முதல், மாணவர்களுக்கு, 'டிகிரி' சான்றிதழ்கள் உட்பட, அனைத்து சான்றிதழ்களும், டிஜிட்டல் முறையில் வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது.
போலி கல்வி சான்றிதழ்கள், போலி மதிப்பெண் பட்டியல்கள் ஆகிய பிரச்னைகளுக்கு தீர்வு காண, அனைத்து கல்வி ஆவணங்களையும், டிஜிட்டல் முறையில் பெற தனி, 'டேட்டாபேஸ்' அமைக்க, மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் நடவடிக்கை எடுத்துள்ளது. உலகில், மாற்றங்கள் வேகமாக நடக்கின்றன. இதற்கேற்ப, நம் மனநிலை மாற வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறினார்.