rp

Blogging Tips 2017

நாம் பணியாற்றப் போகும் வாக்குச் சாவடி எது என முன் கூட்டியே அறிந்து கொள்ள முடியுமா?

கண்டிப்பாக அறிந்து கொள்ள இயலாது.
15.05.2016 அன்று காலை 7 மணிக்கு, தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள மென்பொருளை (software) பயன்படுத்தி, கணினி மூலம், மாவட்ட தேர்தல் அலுவலரால் (மாவட்ட ஆட்சியர்) எந்த குழுவுக்கு எந்த வாக்குச் சாவடி மற்றும் அவசர தேவைக்காக காத்திருப்பு பட்டியலில் உள்ள குழுக்கள் (reserve) எவை என்பது ஒதுக்கீடு செய்யப்படும்.

Election-2016 17 A பதிவேட்டில் வாக்காளர்கள் பயன்படுத்தும் அடையாள அட்டையின் சுருக்கக் குறியீடுகள்.

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: கால அட்டவணை வெளியீடு

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இரண்டாம் ஆண்டு தேர்வு ஜூன் 30-ஆம் தேதியும், முதலாமாண்டு தேர்வு ஜூலை 1-ஆம் தேதியும் தொடங்கி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுகள் காலை 10.00 மணி முதல் பகல் 1.00 மணி வரை நடைபெறும் என அரசு தேர்வுகள் துறை இயக்குநர் தண். வசுந்தராதேவி செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இத்தேர்வுகளுக்கான கால அட்டவணை பின்வருமாறு.

இரண்டாம் ஆண்டு அட்டவணை:

மே 19ல் பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் !

மே 19ல் பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்

இதுகுறித்து தமிழக அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தினைப் பதிவு செய்து, தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்க்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.

www.tnresults.nic.in

www.dge1.tn.nic.in

www.dge2.tn.nic.in

மொபைல் போன் பயன்படுத்தபூத் ஏஜென்ட்களுக்கு தடை !

ஓட்டுப்பதிவு அன்று, ஓட்டுச்சாவடி உள்ளே, பூத் ஏஜென்ட்கள், மொபைல் போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு அன்று, ஓட்டுச்சாவடி உள்ளே, வேட்பாளர்களின் சார்பில், பூத் ஏஜென்ட்கள் இருப்பர். அவர்கள் ஓட்டுப்போட வரும் வாக்காளர், உண்மையான வாக்காளரா, போலியான வாக்காளரா என சரி பார்ப்பர். தவறில்லாமல் ஓட்டுப்பதிவு நடக்கிறதா என கண்காணிப்பர்.

G.O.Ms.No.138 Dt: May 12, 2016 PENSION – Dearness Allowance to the Ex-gratia beneficiaries - Revised rate admissible from 1st January, 2016 - Orders - Issued.


அண்ணாமலைப் பல்கலை: பொறியியல், வேளாண் படிப்புகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும்முறை தொடக்கம்.

மருத்துவ படிப்புக்கான சேர்க்கை எப்போது ?நுழைவு தேர்வு பீதியில் மாணவர்கள்

மருத்துவப் படிப்பில் சேர்வதற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான, 'நீட்' தேர்வு, தமிழகத்தில் நடத்தப்படுமா என தெரியாததால், மாணவர்கள், பெற்றோர் குழப்பம் அடைந்துள்ளனர். நாடு முழுவதும், அனைத்து அரசு மருத்துவக் கல்லுாரிகளிலும், மத்திய அரசு ஒதுக்கீட்டின் கீழான, 15 சதவீதம் இடங்களுக்கு, அகில இந்திய மருத்துவ பொது நுழைவுத் தேர்வு மதிப்பெண் மூலம், மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது.

85 சதவீத...
தமிழகம் உட்பட சில மாநிலங்களின் மருத்துவக் கல்லுாரிகளில் மீதமுள்ள, 85 சதவீத இடங்கள், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் நிரப்பப்படுகின்றன.
இந்நிலையில், 'அனைத்து மாநிலங்களிலும், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், அகில இந்திய நுழைவுத் தேர்வு மூலம் மட்டுமே மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்' என, உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.ஏற்கனவே, இம்மாதம், 1ம் தேதி மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய பொது நுழைவுத் தேர்வு நடந்த நிலையில், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில், ஜூலை, 24ல் இரண்டாம் கட்டமாக பொது நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. இதை எதிர்த்து பல வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
குழப்பம்எனினும், கிராமப்புற மாணவர்களின் நலன் கருதி, தேர்வு முறையில் சில மாற்றங்களை அமல்படுத்தவும், இத்தேர்வுக்கான வினாத்தாள், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி மொழியில் மட்டுமல்லாது, பிற மொழிகளிலும் இடம் பெற வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்த வழக்கு, விசாரணையில் உள்ளதால், தமிழகத்தில் மருத்துவக் கல்லுாரி மாணவர் சேர்க்கைக்கு, நுழைவுத் தேர்வு உண்டா, இல்லையா; மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் எப்போது என, எந்த அறிவிப்புகளையும் அரசு வெளியிடவில்லை. அதனால் மாணவர்களும், பெற்றோரும் குழப்பம் அடைந்துள்ளனர்.
மே 14ல் உண்ணாவிரதம்
'நீட்' தேர்வால் பாதிக்கப்படும் மாணவர்கள், பெற்றோர் கூட்டமைப்பின் தலைவர், டாக்டர் பாலகிருஷ்ணன் கூறியதாவது:

அரசு பள்ளிகளில் பிறப்பு சான்றிதழ் இல்லாமல் மாணவர்களை சேர்க்க கூடாது-கல்வி அதிகாரிகள் உத்தரவு.

2ம் கட்ட நுழைவுத்தேர்வில் அனைத்து மாணவர்களுக்கும் அனுமதி: சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: மருத்துவ பொது நுழைவு தேர்வு தொடர்பான வழக்கு விசாரணையின் போது கருத்து தெரிவித்த சுப்ரீம் கோர்ட், 2ம் கட்ட நுழைவுத் தேர்வில் அனைத்து மாணவர்களையும் அனுமதிக்கலாம். 2ம் கட்ட தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களை கருத்தில் கொள்ளலாம். மாணவர் சேர்க்கையை அக்டோபர் 30ம் தேதி வரை நடத்தலாம் எனக்கூறியுள்ளது. 

12/5/16 அன்று பள்ளிகள் முதல் ஒத்திகை வாக்குப்பதிவிற்காக பள்ளிகள் திறந்து வைக்க இயக்குனர் அறிவுறை

ஆணையத்துக்காக அல்லல்பட வேண்டுமா? கொந்தளிக்கும் ஆசிரியர்கள்.

தமிழக சட்டப்பேரவை தேர்தல் பணிகளில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு ஊதியம் மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், அவர்களின் அடிப்படை தேவைகளை தேர்தல் ஆணையம் நிறைவேற்றவில்லை என்ற புகார் எழுந்துள்ளது. 

'கோ-எட்' பள்ளி மாணவர்கள் படிப்பில் கெட்டி: தனியார் ஆய்வில் சுவாரசிய தகவல்

சென்னை: தமிழகத்தில், ஆண்களுக்கான பள்ளிகளில் படிக்கும் மாணவர்களைவிட, 'கோ-எட்' எனப்படும் இருபாலர் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், அதிக அளவில் தேர்ச்சி பெறுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

மருத்துவ கல்லூரிகளுக்கான நுழைவு தேர்வில் மாற்றமில்லை: மாநிலங்களின் கோரிக்கை நிராகரிப்பு

நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவ கல்லூரிகளுக்கும் தேசிய அளவிலான பொது நுழைவுத் தேர்வு மூலமே மாணவர் சேர்க்கை நடக்க வேண்டும்; மாநில அளவிலான நுழைவுத் தேர்வுகளை நடத்த அனுமதிக்க முடியாது' என, சுப்ரீம் கோர்ட், திட்டவட்டமாக கூறியுள்ளது.

EMIS பணியை மே 12க்குள் முடிக்காவிட்டால் கல்வித்துறை மிரட்டலால் ஆசிரியர்கள் தவிப்பு

'கல்வி தகவல் மேலாண்மை முறையை, இணையதளத்தில் மேம்படுத்தும் முறையை, மே 12ம் தேதிக்குள் முடிக்காவிட்டால், சென்னை இயக்குனரகம் செல்ல வேண்டியிருக்கும்' என, மாவட்ட முதன்மைகல்வி அலுவலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.தமிழகத்தில் அரசு மற்றும் சுயநிதி பள்ளிகளில் உள்ள மாணவர்களின் விவரங்களை தொகுத்திடும் வகையில், கல்வி தகவல் மேலாண்மை முறை (எமிஸ்) கடந்த, 2012-13ம் ஆண்டில் செயல்படுத்தப்பட்டது.

எங்களுக்கு என்ன சொல்கிறீர்கள்?தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் கேள்வி.

நாங்கள் என்ன செய்ய வேண்டும்? இதுதான் இன்று தமிழகத்தில் மருத்துவப் படிப்புக்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான மாணவர்களின் கேள்வி. சுப்ரீம் கோர்ட், நுழைவுத் தேர்வின் மூலமாகவே, மருத்துவக் கல்லுாரிகளுக்கான மாணவர்கள் சேர்க்கை நடத்தப்பட வேண்டும் என்று தீர்ப்பு வழங்கிய நிமிடத்தில் இருந்து, தமிழக மாணவர்களும், பெற்றோரும் அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றனர்.

பி.எப்.அலுவலகங்களில் கேட்பாரற்று ரூ. 43 ஆயிரம் கோடி : மத்தியஅமைச்சர் தகவல்

: கேட்பாரற்று செயல்படாத கணக்கில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியாக ரூ. 43 ஆயிரம் கோடி உள்ளதாக பார்லி.யில் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பார்லி. பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நடந்துவருகிறது. இதில் தொழிலாளர்கள் வருங்கால வைப்பு (பி.எப்.,) நிதி தொடர்பாக பார்லி. லோக்சபாவில் எழுப்பட்ட கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயா பதில் அளித்து பேசியது, 

2ம் கட்ட நுழைவுத்தேர்வில் அனைத்து மாணவர்களுக்கும் அனுமதி: சுப்ரீம் கோர்ட்

புதுடில்லி: மருத்துவ பொது நுழைவு தேர்வு தொடர்பான வழக்கு விசாரணையின் போது கருத்து தெரிவித்த சுப்ரீம் கோர்ட், 2ம் கட்ட நுழைவுத் தேர்வில் அனைத்து மாணவர்களையும் அனுமதிக்கலாம். 2ம் கட்ட தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களை கருத்தில் கொள்ளலாம். மாணவர் சேர்க்கையை அக்டோபர் 30ம் தேதி வரை நடத்தலாம் எனக்கூறியுள்ளது. 

EMIS new data capture Formate (படிவத்தின் மீது கிளிக்செய்து டவுன்லோடு செய்யலாம்)

 click here to download

வங்கி அதிகாரி ஆகலாம்!ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய வங்கியில் ’புரபேஷனரி’ அதிகாரி ஆக பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு!


இந்தியாவில் முன்னணி பொதுத் துறை வங்கியாக செயல்பட்டு வரும் ஸ்டேட் பேங்க் ஆப் இந்திய வங்கியில் ’புரபேஷனரி’ அதிகாரி ஆக பணிபுரிய ஓர் அரிய வாய்ப்பு!

காலியிடங்கள்: 2,200 
விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in/careers எனும் இணையதளம் மூலம் மட்டுமே ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.


வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் ஏப்ரல் 4, 1986 மற்றும் ஏப்ரல் 1, 1995 ஆகிய இடைப்பட்ட காலத்தில் பிறந்திருக்க வேண்டும்.வயது வரம்பில் சலுகை உண்டு. 

மின் கட்டணம்-திமுக,அதிமுக வாக்குறுதிகள் எது நன்மை?

தமிழக சட்டமன்றத் தேர்தலையொட்டி திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் "மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால் 60 சதவிகிதம் வரை மின் கட்டணம் சேமிக்கப்படும் எனவும் தனது விளம்பரங்களில் திமுக தெரிவித்திருந்தது. தமிழ்நாடு மின்வாரியத்தின் மின்கட்டணப் பட்டியல்படி, 500 யூனிட்கள் வரை பயன்படுத்தினால் ரூ.1,330 மின்கட்டணமாக செலுத்த வேண்டும்.

6-ம் வகுப்பு முதல் +2 வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டிற்கான திருத்தப்பட்ட பாடப்புத்தகங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

6-ம் வகுப்பு முதல் +2 வகுப்பு மாணவர்களுக்கு நடப்பாண்டிற்கான *திருத்தப்பட்ட பாடப்புத்தகங்கள்* இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது

Click Here

பிளஸ் 2 தேர்வு முடிவில் தாமதம்: ஆசிரியர்கள், பெற்றோர் அதிருப்தி

பிளஸ் 2 தேர்வு முடிவை மே, 17ம் தேதி வெளியிடப்போவதாக தேர்வுத்துறை அறிவித்துள்ளது. தேர்ச்சி முடிவில் ஏற்பட்ட தாமதத்தால், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரிடையே அதிருப்தி நிலவுகிறது.தமிழகத்தில், பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் மே முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில்,சட்டசபை தேர்தலுக்கு பின், மே, 17ம் தேதி வெளியாகும் என,அரசு அறிவித்துள்ளது.

B.Sc.(Agri) Online-ல் விண்ணப்பம்

www.tnau.ac.in/admission.html


B.Sc.(Agri) விண்ணப்பம்

only online

ClicK Here

தேதி- 12.05.16 - 11.06.16

கட்டணம்- ₹600 (300- SC,ST) only 
online.

கடைசி தேதி- 11.06.16

07.05.2016 அன்று தேர்தல் பயிற்சியில் கலந்து கொள்ளாதவர்கள் மட்டும் 12.05.2016 கலந்துகொண்டால் போதும் - விழுப்புரம் ஆட்சியர்


ஜூன் 2016 தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வு அறிவிப்பு | 2016 ஜூன் மாதம் நடைபெற உள்ள தொடக்கக்கல்வி பட்டயத்தேர்வுக்கு 09.05.2016 முதல் 14.05.2016 வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் துறை அறிவித்துள்ளது.

மாதிரி வாக்குப்பதிவு விவரம் MOCK POLL STEPS

தபால் ஓட்டுப்பதிவு துவக்கம்:மே 18 வரை கால அவகாசம்

சென்னையில், தேர்தல் பணியில் ஈடுபடும், 36 ஆயிரம் அரசு ஊழியர்களுக்கான, தபால் ஓட்டுப்பதிவு நேற்று துவங்கியது. சென்னையில், 3,770 ஓட்டுச்சாவடிகளில், 20 ஆயிரம் அரசு ஊழியர்கள், 16 ஆயிரம் போலீசார் என, 36 ஆயிரம் பேர் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் தாமதமாக வெளியாவதால் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் தள்ளி போகிறது: மருத்துவக் கல்வி இயக்குநர் அறிவிப்பு

பிளஸ்-2 தேர்வு முடிவுகள் தாமத மாக வெளியாவதாலும், தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக்கோரி தாக்கல் செய் யப்பட்ட மனுக்கள் மீதான தீர்ப்பு வெளியாவதாலும் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான விண்ணப்ப விநியோகம் அறிவிக்கப் பட்டபடி நாளை தொடங்காமல் தள்ளிப் போவதாக மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஆர்.விமலா தெரிவித்துள்ளார்.

10.05.2016 குள் EMIS UPDATION முடிக்க வேண்டும் - இயக்குனர் செயல்முறைகள்

SBI ATM இரசிய எண் அறிய & ATM கார்டினை BLOCK செய்யும் வழிமுறைகள்..

தொடக்கக்கல்வி-தேர்வுநிலைக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப படிவம்-

இங்கே சொடுக்கவும்

மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் ஒத்தி வைப்பு.

சென்னை:மருத்துவ படிப்புக்கான விண்ணப்ப விநியோகம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக மருத்துவ கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது.பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 17-ம் தேதி வெளியிடப்படுவதால், விண்ணப்ப விநியோகம் தாமதமாகி உள்ளதாக தெரிவித்துள்ளது.

வாக்காளர் அடையாள அட்டைக்கு மாற்று ஆவணங்கள் அறிவிப்பு

சட்டசபை தேர்தலில், வாக்காளர்கள் அடையாள அட்டையாக, 11 ஆவணங்களை பயன்படுத்த, தேர்தல் கமிஷன் அனுமதி அளித்துள்ளது.சட்டசபை தேர்தலில், ஓட்டு போட செல்லும் வாக்காளர்கள், தங்களுடைய அடையாளத்தை மெய்ப்பிப்பதற்கு, வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும்.

தேர்தல் பணிகளில் ஈடுபடுவோருக்கு அடிப்படை வசதிகள் தேவை: தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தேர்தல் பணிகளில் ஈடுபடுவோருக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதுதொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு இயக்கத்தின் நிறுவனத் தலைவர் எம்.கலைச்செல்வி தாக்கல் செய்த மனுவில், "தேர்தல் பணிக்காக ஈடுபடுத்தப்படும் பெண் காவலர்களுக்கு நடமாடும் கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தித் தர வேண்டும்' என கூறியிருந்தார்.

அனைவருக்கும் கல்வி இயக்ககம் (SSA) கால திட்டம் முடிவா?


தேர்தல் முந்தததும் Po ஒப்படைக்க வேண்டிய உறைகள் விவரம்.

முக்கிய அறிவிப்பு! -- சேலம் பெரியார் பல்கலை தொலைதூரக் கல்வி படிப்புகளுக்கான அங்கீகாரம் ரத்து! யுஜிசி அதிரடி! MoU எனக் கூறப்படும் Franchise மூலம் மாணவர் சேர்க்கை மற்றும் வகுப்புகள் நடத்தியதால் வந்த வினை!


web stats

web stats