rp

Blogging Tips 2017

நமது இயக்கத்தில் கரூர் மாவட்ட ஆசிரிய பெருமக்கள் இணைந்த போது நடைபெற்ற நிகழ்வுகளின் புகைப்படத்தொகுப்பு


கரூர் மாவட்ட தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி தொடக்கவிழா நிகழ்வுகள்




வரலாற்று நிகழ்வு

தமிழக ஆசிரிய இயக்கங்களில் தோழமை சங்கங்கள் இணைவது என்பது ஒருவர் அல்லது இருவர் இல்லையெனில் ஒரு ஒன்றியத்தில் சில ஆசிரியர்கள் என்ற நிலையை தான் பார்க்கிறோம்.     
                                   கரூர் மாவட்டத்தின் ஒரு தோழமை சங்கவாதிகள்  தன் இயக்கத்தின் மாநில போக்கில் வெறுப்புற்று ஒரு மாற்று இயக்கத்தை கண்டுபிடிக்க அவர்களுக்குள் ஒரு குழு அமைத்து , சில வினாக்கள்  அமைத்து அவர்களின் எதிர்பார்ப்பையையும் , பாதுகாப்பிற்கும் ஏற்ற கூட்டணியை தேடி இருக்கிறார்கள். அதில் ஆக சிறந்த கூட்டணியாக அவர்கள் கண்டு அறிந்தது தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி      

                            ஒருவர் , இருவர் இல்லை ஓராயிரம் பேருடன் ஒரு மாவட்டமே அதன் அத்தனை ஒன்றியங்களுடன் அற்புதமான நிகழ்வோடு கரூர் மாநகரில் ஒரு இனிய பொழுதில் அவர்கள் தங்களை ஆசிரிய இயக்கங்களின் நதிமூலமான திரு. செ.மு. அய்யாவிடம் தங்களை ஓப்படைத்தனர் .       இது தமிழக ஆசிரிய இயக்கங்களின் வரலாற்றில் நடக்காத நிகழ்வு என்பதை பொருமையோடு பதிவு செய்கிறோம்.  

பாரத ரத்னா MGR நூற்றாண்டு பிறந்தநாள் விழா : 1 - 12 ம் வகுப்புவரை மாணவர்களுக்கான பேச்சு, கட்டுரை, கவிதை, ஓவியப் போட்டிகள் - தலைப்புகள் அறிவிப்பு


அரசு பள்ளிகளுக்கு புதிய டைம் டேபிள்

ஓய்வூதியத் திட்ட வல்லுநர் குழு செயல்பாடு -அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவு


இனி பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில் குறை தீர் முறை

" GRIEVANCE DAY IN DSE, DEE DIRECTOR OFFICE,DPI CAMPUS"
பள்ளிக்கல்வி இயக்குனரகத்தில், குறை தீர் முறை அறிமுகமாகி உள்ளதை, ஆசிரியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகிகள் வரவேற்று உள்ளனர். சென்னை,
நுங்கம்பாக்கம், டி.பி.ஐ., வளாகத்தில், பள்ளிக்கல்வி இயக்குனர், தொடக்க கல்வி இயக்குனர், மெட்ரிக் இயக்குனர் என, பல இயக்குனர்களுக்கு தனியாக அலுவலகங்கள் உள்ளன. 

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு புதுப்பிக்க சலுகை: அமைச்சர்

''கடந்த, 2011 முதல், 2015 வரை, வேலைவாய்ப்பு அலுவலக பதிவை தவற விட்டவர்கள், மீண்டும் அதை புதுப்பிக்க சலுகை வழங்கப்படும்,'' என,தொழிலாளர் துறை அமைச்சர் நிலோபர் கபீல் தெரிவித்தார்.
 சட்டசபையில், அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:ராணுவ ஆள் சேர்ப்புக்கான தேர்வுகளில் பங்கேற்பதற்கான பயிற்சி, 2,000 இளைஞர்களுக்கு, இரண்டு கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி புதிய கிளை கரூர் மாவட்டம் குளித்தலை கிளை ஆரம்பம்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி , கரூர் மாவட்டம் குளித்தலை  வட்டாரக்கிளை ஆரம்பம்

TNTF குளித்தலை வட்டார தலைவர் திரு. சுந்தரபாண்டியன்.
செயலாளர் .திரு.முத்துகிருஷ்ணன்
பொருளாளர்  திரு.சுரேஷ்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி புதிய கிளை அரவக்குறிச்சி ஆரம்பம்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி புதிய கிளை அரவக்குறிச்சி ஆரம்பம்
TNPTF ல் இருந்து விலகி தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியில் அனைத்து உறுப்பினர்களும் இணைந்தனர்

GPF/TPF ACCOUNT SLIP 2016-2017

CLICK HERE-TO VIEW-TPF ACCOUNT SLIP 2016-2017

பள்ளிக்கல்வி இணை இயக்குனர்கள் மாற்றம்

பள்ளிக்கல்வியில், இரண்டு இணை இயக்குனர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். பள்ளிக்கல்வி பணியாளர் நலப்பிரிவு இணை இயக்குனர் பாஸ்கர சேதுபதி, தொடக்கக் கல்வித் துறையில், அரசு உதவிபெறும் பள்ளிகளின் நிர்வாக இணை இயக்குனராக மாற்றப்பட்டு உள்ளார்.

பணியாளர் நலப்பிரிவு இணை இயக்குனராக, தொடக்கக் கல்வி இணை இயக்குனர் சசிகலா நியமிக்கப்பட்டு உள்ளார்.

தொடக்கக்கல்வி - பள்ளிக்கல்வி மூலம் நடத்தப்படும் மாவட்ட/மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் இனி நடுநிலைப்பள்ளி மாணவர்களும் பங்கேற்கலாம் - இயக்குனர் செயல்முறைகள்

ஜாக்டோ ஜியோ -போராட்ட முடிவு குறித்தான பத்திரிக்கை செய்தி


காலை வழிபாட்டுக்கூட்டம் குறைத்தான அரசாணை எண் -335 ப.க.து,நாள்02.06.2017

காலை வழிபாட்டுக்கூட்டம் குறித்தான தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்


காமராஜர் பிறந்த நாள் விழா-கொண்டாட்டம்-தொடக்கக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்


காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாட்டம் -அரசாணை

நடுநிலைப்பள்ளிகள் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்றல் -பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறை


ஜாக்டோ ஜியோ கூட்டம்

11.07.2017 தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி: மாநில அமைப்பு - இன்று சென்னையில் நடைபெற்ற Jactto Geo கூட்டத்தில் நமது மாநில அமைப்பின் சார்பாக பொதுச்செயலாளர் திரு.க.செல்வராஜ், பொருளாளர் திரு.ரக்க்ஷித், துணைப் பொதுச்செயலாளர் திரு.க.சாந்தகுமார்- சென்னை, மாநில இளைஞர் அணி செயலாளர் திரு.நாகராஜன் - திருச்சி;  துணைப் பொதுச்செயலாளர்(கிழக்கு) திரு.சு.மா.பாலகிருஷ்ணன் - திருச்சி; தலைமை நிலைய செயலாளர் திரு.இராமானுஜம்- காஞ்சிபுரம் ஆகியோர் கலந்து கொண்டோம்.

ஜாக்டோ ஜியோ கூட்ட முடிவுகள்

அன்பார்ந்த தோழர்களே, வணக்கம் இன்று 11 /7 /17 (செவ்வாய்க்கிழமை) சென்னையில் நடந்த JACTO GEO கூட்டமைப்பு சார்பில் கீழ் கண்ட முடிவுகள் மேற்கொள்ள ப்பட்டது. 

1)13 /7 /17 மாவட்ட அளவில் JACTO GEO அமைப்பு கூட்டம். 

2) 18 /7 /17 மாவட்ட அளவில் பேரணி நடைபெறும். 

3)5/8/17 சனிக் கிழமை சென்னையில் கோட்டை நோக்கி பேரணி. 

4)அடுத்த கட்டமாக ஜாக்டோ  ஜியோ கூடி தேதி அறிவிக்குநாளில் இருந்து காலவறையற்ற வேலை நிறுத்தம் தொடங்கும்
5) ஜாக்டோ சார்பாக ஏற்கனவே உள்ள மாவட்டத்தொடர்பாளர் தொடர்ந்து செயல்படுவார்,
6) ஜியோ சார்பாக புதியவர் தேர்ந்து எடுக்கப்பட்டு  இருவரும் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகசெயல்படுவர்

அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் சம்பள விவகாரம்... வெடிக்கிறது!

 ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை அமல் படுத்த வலியுறுத்தியும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரியும் 10 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டு உள்ளனர்.

         இது தொடர்பாக நாளை நடக்கும் அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் கூட்டமைப்பான 'ஜாக்டோ - ஜியோ' கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட உள்ளது.ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பினர் 2003ல் நடத்திய போராட்டம் தமிழக அரசை ஸ்தம்பிக் கச் செய்தது. பின் 2016ல் இந்த அமைப்பினர் மீண்டும் போராட்ட அறிவிப்பு வெளியிட்டு 2 நாட்கள் போராட்டம் நடத்தினர். அப்போது 'புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யப்படும்; ஏழாவது ஊதியக்குழு பரிந்துரை அமல்படுத்தப் படும்' என முதல்வராக இருந்த ஜெயலலிதா அறிவித்தார். அதைத் தொடர்ந்து அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையிலும் இது தொடர்பாக வாக்குறுதி அளிக்கப்பட்டது.இருப்பினும்

உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடம் - வீணாகும் நிதியால் அரசு பள்ளிகளுக்கு மாற்றப்படுவரா?

காது கேளாத ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கும், 1,000 ரூபாய் பயணப்படி வழங்க, அரசு உத்தரவு

காது கேளாத அரசு ஊழியர்களுக்கும், 1,000 ரூபாய் பயணப்படி வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.அரசு ஊழியர், ஆசிரியர்கள், உள்ளாட்சி பணியாளர்கள், உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரிவோரில், 

பார்வையற்றோர், கை, கால் ஊனமுற்றோருக்கு, 1989ல் இருந்து பயணப்படியாக, 50 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. 2010ல், பயணப்படி, 1,000 ரூபாயாக உயர்த்தப்பட்டது.இந்த படி, தற்போது, காது கேளாத ஊழியர்களுக்கும் வழங்க, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.

ஜூலை 15ல் ஆசிரியர்கள் விடுப்பு எடுக்க தடை

கல்வி வளர்ச்சி நாள் வரும், 15ல் கொண்டாடப்பட உள்ளது. இதை, பள்ளிகளில் சிறப்பாக கொண்டாடவும், அன்று ஆசிரியர்கள் விடுமுறை எடுக்கவும் தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் பிறந்த நாளான, ஜூலை 15ஐ, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்படுகிறது. நடப்பு ஆண்டு, சனிக்கிழமையன்று வந்தாலும், அனைத்து பள்ளிகளிலும், சிறப்பாக கொண்டாட உத்தரவிடப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வி - திருச்சி மாவட்டம் கோ.அபிசேகபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஆசிரியர் இல்ல அறைகளில் ஆசிரியர் / ஆசிரியைகள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் தங்கி பயனடைதல் சார்ந்து பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


web stats

web stats