rp

Blogging Tips 2017

எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர முடியுமா? சி.பி.எஸ்.இ., மாணவர்கள் குழப்பம்

சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாவதில், தாமதம் ஏற்பட்டுள்ளதால், எம்.பி.பி.எஸ்., படிப்புக்கு மாணவ, மாணவியர், விண்ணப்பிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்ப வினியோகம் நடந்து வருகிறது. விண்ணப்பிக்க, வரும் 29ம் தேதி கடைசி நாள். மாநில பாடத்திட்டத்தின் கீழ் படித்த மாணவர்கள்,

தொடர்ச்சியாக அரசிடம் வேலை பார்ப்பவர் வேறு பணியில் சேர்ந்தாலும் பழைய பென்ஷன் திட்டம் பொருந்தும் - மதுரை ஐகோர்ட் உத்தரவு

புதிய பென்ஷன் திட்ட காலத்தில் வேறு பணியில் சேர்ந்தவருக்கு, பணி தொடர்ச்சி உள்ளதால் பழைய பென்ஷன் திட்டமே பொருந்தும் என ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடியை சேர்ந்த டாக்டர் சுப்ரமணியன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:
மருத்துவத்துறையில் சுகாதார அலுவலராக கடந்த 2000ம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டேன். நோய் தடுப்பு பிரிவில் துணை இயக்குநராக 2012ல் பதவி உயர்வு பெற்றேன். இதன்பின், துறை அதிகாரிகளின் அனுமதியுடன் உதவி அறுவை சிகிச்சை நிபுணர் பணிக்கு விண்ணப்பித்தேன். அந்த பணி எனக்கு கிடைத்தது. ஆனால் என்னை விடுவிக்கவில்லை. இதுதொடர்பாக ஐகோர்ட் கிளையில் நான் தொடர்ந்த வழக்கில் என்னை விடுவிக்க ஐகோர்ட் உத்தரவிட்டது. 21.7.2014ல் தூத்துக்குடி மருத்துவ கல்லூரியில் உதவி அறுவை சிகிச்சை நிபுணராக பணியில் சேர்ந்தேன்.

மே இறுதிக்குள் +2 விடைத்தாள் நகல்

இன்று போலீஸ் எஸ்.ஐ., தேர்வு: 1.66 லட்சம் பேர் எழுதுகின்றனர்

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்தும், போலீஸ் எஸ்.ஐ., தேர்வு இன்றும், நாளையும் நடக்கிறது.தமிழக காவல் துறையில் காலியாக உள்ள, 1,078 எஸ்.ஐ., காலி பணியிடங்களுக்கு, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் வாயிலாக தேர்வு நடக்கிறது.பொது ஒதுக்கீடுதாரர்களுக்கு இன்றும், போலீசார் மற்றும் அமைச்சுப் பணியாளர்களின் வாரிசுதாரர்களுக்கு நாளையும் தேர்வு நடக்கிறது.இந்த

அம்மா உப்பு சார்பான செயல்முறைகள்

ஜெயலலிதா தலைமையிலான புதிய அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர்கள் பெயர் பட்டியல்:வெளியிடப்பட்டுள்ளது.

அமைச்சரவை பட்டியல்..
1. ஜெயலலிதா (முதல்வர்) - இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி, பொது நிர்வாகத்துறை
2. ஓ.பன்னீர்செல்வம் - நிதி, பொதுப்பணித்துறை
3. நத்தம் விஸ்வநாதன் - மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வைத் துறை
4. வைத்திலிங்கம் - வேளாண், நகர்ப்புற மேம்பாடு, ஊரக வீட்டு வசதித் துறை
5. எடப்பாடி பழனிச்சாமி - நெடுஞ்சாலைத்துறை, சிறு துறைமுகம், வனம்
6. மோகன் - தொழிலாளர் நலன், ஊரகத் தொழில் துறை
7. வளர்மதி - சமூக நலத்துறை, சத்துணவுத்துறை

TNPSC Group4 2014 Result Published

            21.12.2014 அன்று நடைபெற்ற TNPSC Group 4 Result Published. (Junior Assistant, Surveyor, Draftsman, Typist,....) ஆகிய பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.
     Direct Link - Click Here
                    4,963 காலிப்பணியிடங்களுக்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி நடந்த குரூப்4 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

2015-16ம் ஆண்டிற்கான தொடக்க நடுநிலைப்பள்ளி மாணவர் சேர்க்கைக்கான அறிவுரைகள்


அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் நண்பர்களுக்கு,

CLICK HERE-NHIS-CARD DOWNLOAD

 நமது மாத சம்பளத்தில் ரூ 150 பிடிக்கும் NHIS 2012 திட்டத்தில் , பழைய கார்டு க்கு பதிலாக , புதிய கார்டுக்கு apply செய்து"NEW HEALTH INSURANCE ID CARD " இன்னும் கார்டு வராதவர்கள்,பழைய கார்டு எண் தெரிந்தால்
"www.tnnhis2012.com" என்ற இணையதள முகவரியில் "e-card" ல் பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம். password : your date of birth.

பிரதமரின் காப்பீட்டு திட்டங்கள் எப்படி?மக்களின் சந்தேகங்களுக்கு விளக்கம் இதோ!

வங்கியில் கணக்கு வைத்திருப்போருக்காக, இரு காப்பீட்டுத் திட்டங்களை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இத்திட்டங்களை பயன்படுத்துவது எப்படி, பலன் பெறுவது எப்படி என்ற, குழப்பம் பொதுமக்களிடம் நிலவுகிறது.

*ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள், அதற்கேற்ப காப்பீடு செய்ய வேண்டுமா?
*இரு காப்பீட்டுத் திட்டங்களிலும் இணைய முடியுமா என, பல சந்தேகங்கள் உள்ளன.

தொடக்கக்கல்வி - மாணவர்களை பள்ளியில் சேர்க்கும்போது பிறப்புச் சான்றிதழில் உள்ள தேதியின் அடிப்படையில் மட்டுமே சேர்க்கவேண்டும் - இயக்குனர் உத்தரவு




தொடக்கக் கல்வி - ஆசிரியர்கள் முன்னுரிமை பட்டியல் தயாரித்தல் சார்பான விளக்கம்

தமிழ் வழியில் படித்த "முதல்வன்'

 பத்தாம் வகுப்புத் தேர்வில் முதலிடம் பிடித்த 41 மாணவர்களில், பாரதிராஜா ஒருவர் மட்டுமே தமிழ் வழியில் பயின்ற மாணவர்.அவர் பயின்ற பள்ளி, அவரது ஊர் பற்றிய விபரம்:

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்டசோழபுரம் அருகே சுமார் 7 கி.மீ. தொலைவில் உள்ள சிறு கிராமம். கங்கைகொண்டசோழபுரம் கோயில் கட்டப்பட்ட நேரத்தில் இங்கு கோயில் பணிக்காக பரண் அமைக்கப்பட்டதால் இந்த கிராமம் பரணம் என்று பெயர்பெற்றது.பரணம் என்று ஓர் ஊர் உள்ளதா என்றுகூட பலரும் அறியாத நிலையில், அந்த ஊரின் அரசு உயர்நிலைப் பள்ளி மாணவர், முதலிடம் பெற்ற 41 மாணவர்களில் ஒருவராக தமிழகத்தைத் திரும்பிப்

எஸ்எஸ்எல்சி தேர்வில் மறுமதிப்பீடு கோரிய மனு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு

 எஸ்எஸ்எல்சி தேர்வில் மறு மதிப்பீடு கோரி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தள்ளுபடி செய்தது.தஞ்சாவூர் அம்மன்பேட்டையைச் சேர்ந்த பி.முத்தழகு தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் இவ்வாறு உத்தரவிட்டார்.மனுவில்,
எனது மகள் காவ்யா, 2014 இல் நடைபெற்ற எஸ்எஸ்எல்சி பொதுத்தேர்வில் 488 மதிப்பெண் பெற்றார். அவருக்கு தமிழ் 2 ஆம் தாளில் 87 மதிப்பெண்கள் அளிக்கப்பட்டிருந்தன. தமிழில் மட்டும்

அரசுப் பள்ளி மாணவர்கள் படிக்க மாட்டார்களா? சொல்லாமல் அடித்த 3 கில்லிகள்!

 அரசுப் பள்ளி மாணவ - மாணவியர் என்றாலே, இளக்காரமாகப் பார்க்கும்கலாச்சாரத்துக்கு ஓங்கி ஒரு அடி கொடுத்திருக்கிறார்கள் பாரதிராஜா, வைஷ்ணவி,ஜெயநந்தனா. அரசுப் பள்ளி மாணவ - மாணவியரான இவர்கள் இந்த ஆண்டு பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வில், 499/500 மதிப்பெண்களுடன் முதலிடம் பெற்றவர்கள்.

தமிழ்வழிக் கல்வி: மாநில அளவில் முதல் 3 இடங்களை பிடித்து 23 மாணவர்கள் சாதனை

 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் முன்னெப்போதும் இல்லாத வகையில், தமிழை முதன்மைப் பாடமாக எடுத்து படித்தவர்களில் 500-க்கு 499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 41 பேர் முதலிடம் பிடித்துள்ளனர்.

அதே சமயத்தில், தமிழை ஒரு மொழிப்பாடமாக மட்டுமில்லாமல், ஆங்கிலம் தவிர்த்த மற்ற அனைத்து பாடங்களையும் தமிழ்வழியிலேயே படித்ததில் 23 மாணவ-மாணவிகள் மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பெற்றுள்ளனர்.

அரியலூர் மாணவர் முதலிடம்

அரியலூர் மாவட்டம் பரனம் அரசு உயர்நிலைப்பள்ளியைச் சார்ந்த எஸ்.பாரதிராஜா 499 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளார்

அரசு பள்ளியில் இரண்டாமிடம் பெற்றவர்கள்

 அரசு பள்ளிகளில் தமிழை முதல்பாடமாக எடுத்து 6 பேர் 498 மதிப்பெண்கள் பெற்று இரண்டாமிடம் பெற்றுள்ளனர்.
 
 மேலூர் அரசு பள்ளியைச் சேர்ந்த மானஷா,
 
 திருப்பூர், பிச்சம்பாளையம்புதூர் அரசு பள்ளியைச் சேர்ந்த ஸ்வாதி,
 
 கோவை, செரிபாளையம் அரசு பள்ளியைச் சேர்ந்த அஸ்விதா காமாட்சி,
 
சேலம், பெத்தநாயக்கன்பாளையம் அரசு பள்ளியைச் சேர்ந்த நறுமுகை, 
 
சேலம், வாழப்பாடி அரசு பள்ளியைச் சேர்ந்த ஹேமப்பிரியா,
 
 தஞ்சாவூர், மதுக்கூர் அரசு பள்ளியைச் சேர்ந்த ஷபா 
 
ஆகியோர் இரண்டாமிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

அரசு பள்ளிகளில் மூன்றாமிடம் பெற்றவர்கள்

அரசு பள்ளிகளில் தமிழை முதல்பாடமாக எடுத்து, 10 பேர் 497 மதிப்பெண்கள் பெற்று, மூன்றாமிடம் பிடித்துள்ளனர்.
 நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அரசு பள்ளியைச் சேர்ந்த பிரீதிலாவண்யா, கோவை, செரிபாளையம் அரசு பள்ளியைச் சேர்ந்த அஞ்சனா பாரதி,
சேலம், ஆத்தூர் அரசு பள்ளியைச் சேர்ந்த வான்மதி, வர்ஷினிதேவி,
நாமக்கல், பாச்சல் அரசு பள்ளியைச் சேர்ந்த தமிழரசு,
 நாமக்கல், திருச்செங்கோடு அரசு பள்ளியைச் சேர்ந்த தினேஷ்ராஜா,
 தர்மபுரி, கிருஷ்ணாபுரம் அரசு பள்ளியின் பாலாஜி,
தஞ்சாவூர், தமரன்கோட்டை அரசு பள்ளியின் மகேஸ்வரி,
வேலூர், சோழிங்கர் அரசு பள்ளியைச் சேர்ந்த பிரியதர்ஷினி,
காஞ்சிபுரம், அனகாபுத்தூர் அரசு பள்ளியைச் சேர்ந்த ஜீவிதா
 ஆகியோர் 497 மதி்ப்பெண்கள் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.

பாட வாரியாக 100/100 பெற்றவர்கள்

10ம் வகுப்பு தேர்வில்
 தமிழில் 586 பேரும்,
ஆங்கிலத்தில் 644 பேரும்,
 கணிதத்தில் 27,134 பேரும்,
 அறிவியலில் 1,15,853 பேரும்,
சமூக அறிவியலில் 51,629 பேரும்
நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்

அரசு பள்ளியில் முதலிடம் பெற்றவர்கள்

அரசு பள்ளிகளில், தமிழை முதல் பாடமாக எடுத்து 3 பேர் 499 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.
 சேலம், வாழப்பாடி அரசு பள்ளியைச் சேர்ந்த ஜெயவந்தனா,
 பெரம்பலூர், பரணம் அரசு பள்ளியைச் சேர்ந்த பாரதிராஜா
மற்றும் தஞ்சாவூர், பட்டுக்கோட்டை அரசு பள்ளியைச் சேர்ந்த வைஷ்ணவி ஆகியோர் முதலிடம் பெற்று, சாதனை படைத்துள்ளனர்.

அரசு பள்ளிகளில் 19பேர் சாதனை


10ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வௌியாகி உள்ள நிலையில், அரசு பள்ளிகளைச் சேர்ந்த 19 மாணவ, மாணவிகள் சாதனை படைத்துள்ளனர்.
499 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தில் 3 பேரும், 498 மதிப்பெண்கள் பெற்று 6 பேர் இரண்டாமிடமும், 497 மதிப்பெண்கள் பெற்று 10 பேர் மூன்றாமிடமும் பெற்றுள்ளனர்.

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு: மாவட்ட வாரியான மதிப்பீடு

 மாவட்டம் - தேர்வு எழுதியோர் - தேர்ச்சி பெற்றோர் - தேர்ச்சி விகிதம் -  பள்ளிகளின் எண்ணிக்கை

1-ஈரோடு  - 30014 - 29425 - 98.04 - 342
2-விருதுநகர் - 30534 - 29918 - 97.98 - 333
3-திருச்சி - 39315 - 38379 - 97.62 - 407
4-கண்ணி்யாகுமரி - 27979 - 27215 - 97.27 - 407
5-பெரம்பலூர் - 9714 - 9447 - 97.25 - 133
6-சிவகங்கை - 20684 - 20011 - 96.75 - 261
7-தூத்துக்குடி - 26248 - 25392 - 96.74 - 290
8-ராமநாதபுரம் - 19542 - 18833 - 96.37 - 232

முதலிடம்: அரசு பள்ளிகள் சாதனை

10ம் வகுப்பு பொதுத்தேர்வில் அரசு பள்ளிகள் முதலிடங்களை பெற்று சாதனை படைத்துள்ளன. வாழப்பாடி அரசு பள்ளியைச் சேர்ந்த ஜெயவந்தனா, பெரம்பலூர், காரணை, அரசு பள்ளியைச் சேர்ந்த பாரதிராஜா, பட்டுக்கோட்டை
அரசு பள்ளியைச் சேர்ந்த வைஷ்ணவி ஆகியோர் முதலிடத்தை பெற்றுள்ளனர்.

மாணவர் விவரம் EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்யாதவர்களுக்கு மற்றுமொரு வாய்ப்பு!!

To access data entry for student profile on EMIS through by Google chrome browser
please do the following
Copy the url and execute for Google chrome
https://emis.tnschools.gov.in/accounts/login/?next=/

You will get , the student data entry screen
2 ) To access data entry for student profile on EMIS through by Mozilla fire-fox browser
please do the following
Copy the url and execute for Google chrome
https://emis.tnschools.gov.in/accounts/login/?next=/

10ம் வகுப்பு தேர்வு முடிவு - DIRECT LINKS

மாணவ-மாணவிகள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்ததேதி, மாதம், வருடத்தினை பதிவு செய்து,  10ம் வகுப்பு தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் கீழ்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். தேர்வு முடிவின்போது மதிப்பெண்களும் தெரிந்துகொள்ளலாம்.

  • CLICK HERE - DIRECT LINK 1

  • CLICK HERE - DIRECT LINK 2

  • CLICK HERE - DIRECT LINK 3

  • CLICK HERE - DIRECT LINK 4

  • CLICK HERE - DIRECT LINK 5

  • CLICK HERE - DIRECT LINK 6

காலதாமதமாகும் இடமாறுதல் கலந்தாய்வு: ஏமாற்றத்தில் அரசு பள்ளி ஆசிரியர்கள்

கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் நாள் நெருங்கிவிட்ட நிலையில், இடமாறுதல் கலந்தாய்வுக்கான அரசாணை இன்னும் வெளியிடப்படாததால் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

         அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் இறுதியில் இடமாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு கோடை விடுமுறை முடிந்துபள்ளி திறந்தவுடன் அவர்கள் புதிய பள்ளியில் சேர்ந்துவிடுவது வழக்கம். இதற்கு வசதியாக, விருப்பமும், தகுதியும் உடைய

'சர்வீஸ் புக்'கில் ஆதார்: மத்திய அரசு உத்தரவு

மத்திய அரசு ஊழியர்களின், 'சர்வீஸ் புக்'கில், 'ஆதார்' எண் விவரத்தை குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு, அனைத்து துறைகளுக்கும் உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்து, எந்த அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது என்பது குறித்து, அறிக்கை அளிக்குமாறு, அனைத்து துறைகளும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளன. மொத்தம், 12 எண்களைக் கொண்ட, ஆதார் அடையாள எண், நாட்டு மக்கள் அனைவருக்கும் வழங்கப்படுகிறது.

அரசு பணியில் மாற்று திறனாளிகள் ஊக்கப்படுத்த மத்திய அரசு உத்தரவு

  'உடல் பாதிப்பு காரணமாக தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலையில் இருந்தாலும், தன் விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்.,) கோரும், மத்திய அரசு பணியாளர்களை, தொடர்ந்து பணியில் தக்க வைத்துக் கொள்ள முயற்சி மேற்கொள்ள வேண்டும்' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

          இதுகுறித்து, மத்திய அரசு பணியாளர் மற்றும் பயிற்சி துறை, அனைத்து மத்திய அரசு துறைகளுக்கும் வழிகாட்டு நெறிமுறைகள் அடங்கிய வரைவறிக்கையை அனுப்பியுள்ளது.

அதில் உள்ள விவரம்:

மாற்றுத் திறனாளிகளுக்கு சம வாய்ப்பு, உரிமை, பாதுகாப்பு ஆகியவற்றை சட்டம் வழங்குகிறது. பணியின் போது ஊனமுற்றால், அவரை எந்த நிறுவனமும் வெளியேற்றக் கூடாது என, சட்டம் கூறுகிறது. அதனால், மருத்துவ ரீதியிலோ அல்லது ஊனம் காரணமாகவோ, அரசு பணியாளர் ஓய்வு பெற விரும்பினால்,

7 ஆண்டுகளாக ஊதிய உயர்வு இல்லை: ஆர்.எம்.எஸ்.ஏ., பணியாளர்கள் விரக்தி

அனைவருக்கும் இடைநிலைக்கல்வி (ஆர்.எம்.எஸ்.ஏ.,) திட்டத்தில் பணிபுரியும் தொகுப்பூதிய பணியாளர்களுக்கு, ஏழு ஆண்டுகளாக எவ்வித ஊதிய உயர்வும் வழங்காததால், கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

               தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக்கல்வி திட்டம், கடந்த, 2007ம் ஆண்டு, துவங்கப்பட்டது. ஒன்பது மற்றும், பத்தாம் வகுப்பு கல்வியினை மேம்படுத்துதல், மாணவர் எண்ணிக்கையை அதிகரித்தல், உள் கட்டமைப்பு

தற்காலிக பணிகளுக்கு நேரடி நியமனம் இல்லை

 பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வித் துறையில், அனைத்து தற்காலிக பணியிடங்களும், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நிரப்ப வேண்டும், என, உத்தரவிடப்பட்டுள்ளது.
          கல்வித் துறையில் ஆசிரியர் தொடர்பான பணி நியமனங்கள், தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமும், அலுவலர் தொடர்பான நியமனங்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., மூலமும் நடக்கின்றன. இந்த, இரண்டு அமைப்புகளிலும் வராத பல பணிகளுக்கு, துறை ரீதியாக, அரசுத் தேர்வுகள் துறை மூலமும், நேரடியாகவும் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

அரசு தோட்டக்கலை அலுவலர் பணிக்கு ஜூன் 1 முதல் நேர்முகத் தேர்வு டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு

தோட்டக்கலை அலுவலர் பணிக்கான நேர்முகத்தேர்வு ஜூன் 1 முதல் 4-ம்  தேதி வரை நடைபெறும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
          இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

2ஜி, 3ஜி நெட் சேவைக்கு பிஎஸ்என்எல் புதிய சலுகை

  பி.எஸ்.என்.எல் 2ஜி மற்றும் 3ஜி நெட் சேவை பயன்படுத்துவோர் தாங்கள் பயன்படுத்தாத டேட்டாக்களை அடுத்த ரீசார்ஜில் சேர்த்துக் கொள்ளும் முறையை பி.எஸ்.என்.எல் மீண்டும் அறிமுகம் செய்துள்ளது. இது குறித்து பி.எஸ்.என்.எல் நுகர்வோர் துறை இயக்குநர் என்.கே. குப்தா கூறுகையில், பி.எஸ்.என்.எல் ப்ரீ பெய்ட் கார்டு மூலம் 2ஜி மற்றும் 3ஜி இணைய சேவையை

2வருட பிஎட் பாடங்கள் விவரம் இதோ 4 செமஸ்டர் முறை


Course Structure for the NCTE Two-Year B.Ed. Programme Semester Wise Distribution of the
Courses Semester 1
Course 1 Childhood and Growing Up 100 marks
Course 2 Contemporary India and Education 100 marks
Course 4 Language across the Curriculum (1/2)50 marks
Course 5 Understanding Disciplines and Subjects-(1/2) 50 marks

Course EPC1Reading and Reflecting on Texts (1/2)50 marks
Engagement with the Field: Tasks and Assignments for
Courses 1,2,4 &52-Year B.Ed Curriculum
Semester 2
Course 3 Learning and Teaching100 marks
Course 7a Pedagogy of a School Subject –Part I (1/2)50 marks
Course 8a Knowledge and Curriculum –Part I (1/2)50 marks
Course 9 Assessment for Learning 100 marks
Course EPC2 Drama and Art in Education (1/2)50 marks
Engagement with the Field: Tasks and Assignments for Courses 3, 7a, 8a &9

தற்கொலை மிரட்டல் விடுத்த தலைமையாசிரியர் சஸ்பெண்ட்

பள்ளிக்கு செல்லாமல் இருந்ததை கண்டித்ததால் தற்கொலை மிரட்டல் விடுத்த தலைமை ஆசிரியையை ஆதிதிராவிட இணை இயக்குனர் சஸ்பெண்ட் செய்துள்ளார்.

          வேலூர் மாவட்டம் கணியம்பாடி ஒன்றியம் துத்திகாடு ஊராட்சியை சேர்ந்த தெள்ளை மலை கிராமத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நடுநிலைப்பள்ளியில் கடந்த மாதம் 28ம் தேதி அணைக்கட்டு எம்எல்ஏ கலையரசு ஆய்வு செய்தார்.

ஜூன் 15 முதல் பிளஸ் 1 வகுப்பு மாணவர் சேர்க்கையை உடனே துவங்க உத்தரவு

 பத்தாம் வகுப்பு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மற்றும் தேர்வு முடிவின் மதிப்பெண் மூலம், பிளஸ் 1 வகுப்புக்கு உடனடியாக மாணவர் சேர்க்கை நடத்தவும், ஜூன், 15ல் வகுப்புகளை துவங்கவும், பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
 தற்காலிக சான்றிதழ்:

நாளை 10ம் வகுப்பு 'ரிசல்ட்':'104'ல் ஆலோசனை துவக்கம்

தமிழகத்தில், 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள், நாளை வெளியிடப்படுகின்றன. தற்காலிக மதிப்பெண் சான்றிதழ், மே 29ம் தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து, தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள், மே 21ம் தேதி, காலை 10:00 மணிக்கு வெளியிடப்படும். தேர்வர்கள், தங்கள் பதிவு எண்

பத்தாம் வகுப்பு மறுகூட்டலுக்கு மே 22 முதல் 27 வரை பதிவு: உடனடி துணைத்தேர்வு ஜூன் 26ல் துவக்கம்

பத்தாம் வகுப்பு தேர்வில், மறு கூட்டலுக்கு, மே, 22 முதல் 27ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வுத்துறை இயக்குனர் தேவராஜன் வெளியிட்ட அறிக்கை: பத்தாம் வகுப்பு தேர்வில், விடைத்தாள் மதிப்பெண் மறு கூட்டலுக்கு, மே 22 முதல் 27ம் தேதி வரை, மாணவர்கள் தங்கள் பள்ளிகளிலும், தனித்தேர்வர்கள் தேர்வு மையப் பள்ளிகளிலும் விண்ணப்பிக்கலாம்.

10-ஆம் வகுப்புத் தேர்வு-தற்காலிகச் சான்றிதழ்

பத்தாம் வகுப்பு மாணவர்கள் மே 29-ஆம் தேதி முதல் பதிவிறக்கம் செய்யப்பட்ட தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை தாங்கள் பயின்ற பள்ளிகளில் பெற்றுக்கொள்ளலாம்.
தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேர்வு மையத்தின் தலைமையாசிரியரிடம் பதிவிறக்கம் செய்யப்பட்ட மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம்.

மாணவர்கள் ஜூன் 4-ஆம் தேதி முதல் இந்த தாற்காலிக மதிப்பெண் சான்றிதழை, பிறந்த தேதி, பதிவு எண் ஆகிய விவரங்களை அளித்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

பீகாரில் 40 ஆயிரம் போலி ஆசிரியர்கள்; விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு

பீகாரில் கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் ஒப்பந்த அடிப்படையில் 3 லட்சம் புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் அவர்களின் பட்டப்படிப்பு குறித்து எந்த ஆய்வும் மேற்கொள்ளப்படவில்லை.

உதவி பெறும்பள்ளிகளில் உள்ள உபரிப்பணியிடங்கள் தொடர்பாக இயக்குநர் கறார் உத்தரவு


TET 2015: இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு: பள்ளிக்கல்வி அமைச்சர்

தமிழக அமைச்சர் கே.சி.வீரமணி இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று பள்ளிக்கல்வி அமைச்சர் கே.சி.வீரமணி தெரிவித்தார்.
         மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் 8-ம் வகுப்பு வரையில் இடைநிலை ஆசிரியர் மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர வேண்டுமானால் ஆசிரியர் தகுதித் தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மட்டுமின்றி தனியார் பள்ளிகளுக்கும் இந்த விதிமுறை பொருந்தும்.

பிளஸ் 2-க்கு பிறகு: வரவேற்பு குறையாத ஆசிரியர் படிப்புகள்

வேலைவாய்ப்புச் சந்தையில் பல தலை முறைகளாக ஆசிரியர் பணிக்கான வரவேற்பு இன்னமும் அப்படியேதான் இருக்கிறது. ஆத்மார்த்தமான வேலை, திருப்தியான ஊதியம், வரையறுத்த வேலை நேரம், பாதுகாப்பான பணிச் சூழல், போதுமான விடுமுறை என்று அரசுப் பணிகளில் ஆசிரியர் உத்தியோகத்துக்கு இன்னமும் மவுசு குறைந்தபாடில்லை.

          ஆசிரியராக மாறுவதற்குப் பிளஸ் 2-க்கு பிறகு பயில வேண்டிய பட்டயம் மற்றும் பட்டப் படிப்புகள் மற்றும் போட்டித் தேர்வுகள் குறித்து விளக்குகிறார் பெரம்பலூரைச் சேர்ந்த கல்வித்துறை முன்னாள் அதிகாரி நா. ஜெயராமன்:

இக்னோ தொலைதூரக் கல்விக்கு ஜூன் 15 முதல் விண்ணப்பம்


இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் (இக்னோ) தொலைதூரக் கல்வி அடிப்படையில் கல்வி கற்க விரும்புவோர் ஜூன் 15-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இப்பல்கலைக்கழகத்தின் கொங்கு பொறியியல் கல்லூரி மையத்தின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.குப்புசாமி வெளியிட்ட அறிக்கை:

பொறியியல் கல்லூரி தரவரிசைப் பட்டியல் தயாராகிறது! நீதிமன்ற உத்தரவு எதிரொலி

 நீதிமன்ற உத்தரவின் எதிரொலியாக, மாணவர் தேர்ச்சி விகிதத்தின் அடிப்படையிலான பொறியியல் கல்லூரி தரவரிசைப் பட்டியல் தயாராகி வருகிறது. ஓரிரு நாள்களில் இந்தப் பட்டியலை வெளியிட அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.

ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போனில் பேசக்கூடாது: பள்ளிக்கல்வி இயக்குனர் சுற்றறிக்கை

 ஆசிரியர்கள் வகுப்பறையில் செல்போனில் பேசக்கூடாது என்றும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் மாணவர்களுக்கு வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.


பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் த.சபீதா அறிவுரையின்படி பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் மாணவர்கள் நலன் கருதி அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் வழியாக அனைத்து தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி உள்ளார்.

அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி: 6 முதல் 9ஆம் வகுப்பு வரை ரூ.200 கட்டணம் அரசு உத்தரவால் பெற்றோர்கள் மகிழ்ச்சி

 நிகழ் கல்வி ஆண்டு முதல் அனைத்து அரசுப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வி தொடங்க வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

           தனியார் பள்ளிகளிலும், சுயநிதிப் பள்ளிகளிலும் ஆங்கில வழிக் கல்வியில் தங்களது குழந்தைகளைச் சேர்ப்பதற்கு பெற்றோர்கள் கடும் போராட்டமே நடத்த வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில், அனைத்து அரசுப் பள்ளிகளிலும் நிகழ் கல்வியாண்டில் ஆங்கில வழிக் கல்வியை தொடங்க வேண்டும் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பால் பெற்றோர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

பள்ளிக்கல்வி - 2003 முதல் 2006 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு பணியில் சேர்ந்த நாள் முதல் காலமுறை ஊதியம் வழங்கினால் ஏற்படும் செலவின விவரம் கோரி இயக்குனர் உத்தரவு


தமிழக பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப்பட்டியல்-2015

தமிழக பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப்பட்டியல்-2015 என ஓர் இணையதளம் வெளியிட்டுள்ள பட்டியல் பாரீர்
( இங்கே கிளிக் செய்யவும்)

(பட்டியலுக்கும் tntf.in க்கும் சம்பந்தமில்லை இது ஓர் பகிர்வே அவரவர் தனிப்பட்ட விசாரனைக்கு பின் முடிவாற்றவும்)

18/05/2015 மாலை தொடக்கக்கல்வி இயக்குனருடன் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி ( பொறுப்பு) பொதுசெயலர் திரு.செல்வராஜ் சந்தித்து ஆசிரியர்கள் முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி மனு

 

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொறுப்பு பொதுசெயலர் திரு. செல்வராஜ் அவர்கள் சேல்ம் மற்றும் நாமக்கல் மாவட்ட ,வட்டார இயக்கப்பொறுப்பாளர்களுடன் தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களை நேற்று (18/05/2015 மாலை 5.00 மணியளவில் சந்தித்தார்
அப்போது
1.சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பளையம் வட்டாரத்தில் மலைசுழற்சி முறை சரியாக நடைமுறைப்படுத்தாமை குறித்து இயக்குனர் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டது.

சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கான எழுத்து தேர்வுக்கு 9 ஆயிரம் பேரின் மனுக்கள் நிராகரிப்பு விளக்கம் கேட்டு சீருடை பணியாளர் அலுவலகத்திற்கு படையெடுப்பு


போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலைக்கான எழுத்து தேர்வுக்குவிண்ணப்பித்தவர்களில் 9 ஆயிரம் பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அவர்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்கு படையெடுத்து விளக்கம் கேட்டனர்.

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு

சத்துணவுப் பணியாளர் காலியிடங்களை இந்த மாத இறுதிக்குள் நிரப்ப திட்டம்

இந்த மாத இறுதிக்குள் சத்துணவு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என சமூக நலத் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சத்துணவு மையங்கள்:
தமிழகம் முழுவதும் உள்ள 32 மாவட்டங்களில், 42 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன.மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக, 42,423 சத்துணவுப் அமைப்பாளர்கள்,42,855 சமையல் உதவியாளர்கள், 42,855 சமையலர்கள் உள்பட மொத்தம் ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 132 பணியிடங்கள் உள்ளன.தற்போதைய நிலவரப்படி, சத்துணவுப் அமைப்பாளர்கள் 33,136 பேரும், சமையல் உதவியாளர்கள் 33,772 பேரும், சமையலர்கள் 30,297 பேரும் பணிபுரிந்து வருகின்றனர். இதில் 30,925 பணியிடங்கள் காலியாக உள்ளன.

1,800 'டுபாக்கூர்' நர்சிங் பள்ளிகள் மூடல்

தமிழகத்தில், மத்திய, மாநில அரசுகள் அனுமதி பெற்றதாக, போலி விளம்பரங்களுடன், ஏழை மாணவர்களை குறிவைத்துச் செயல்படும், 1,800, 'டுபாக்கூர்' நர்சிங் பயிற்சி பள்ளிகளை, தமிழக அரசு இழுத்து மூடுகிறது.தமிழகத்தில், நர்சிங் பயிற்சி அளிக்கும் கல்லூரிகள், பள்ளிகள் அரசின் முறையான அனுமதி பெறுவதோடு, தமிழ்நாடு நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்ய வேண்டும். இத்தகைய பள்ளி, கல்லூரிகளில் படித்து வெளியேறுவோர், நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்து பணியாற்றலாம்.
நர்சிங் கவுன்சில் அனுமதி இல்லாமல், தமிழகத்தில், மத்திய, மாநில அரசுகளின் அங்கீகாரம் பெற்றதாகவும், 'பாரத் சேவாக் சமாஜ்' அங்கீகாரம் பெற்றதாகவும்,

ஆங்கிலம் கற்று தராததால் தொடக்கப் பள்ளிகளுக்கு மூடுவிழா? மாணவர்களை சேர்க்க வீடு வீடாக கெஞ்சும் ஆசிரியர்கள்

 அரசு தொடக்கப் பள்ளிகள் மற்றும் பாலர் பள்ளிகளில், ஐந்தாம் வகுப்பு வரை, ஆங்கில ஆசிரியர்களே இல்லாத காரணத்தால், பெற்றோர் அரசுப் பள்ளிகளில் பிள்ளைகளை சேர்க்க முன்வரவில்லை. ஆசிரியர்கள் வீடு, வீடாக சென்று பெற்றோரைச் சந்தித்து மாணவர்களை சேர்க்க வேண்டிய பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும், ஜனவரி முதல் ஜூன் வரை, தனியார் மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க, அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், தனியார் பள்ளித் தாளாளர் முதல் அலுவலக உதவியாளர் வரை, வீடு, வீடாகச் சென்று சிபாரிசு கேட்கும் நிலை உள்ளது. இதனால், தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க, லட்சக்கணக்கில் பணம் செலவாகிறது.

இலவச மாணவர் சேர்க்கைக்கு காலக்கெடு நீட்டிப்பு

தனியார் பள்ளிகளில், 25 சதவீத இலவச ஒதுக்கீட்டில் விண்ணப்பம் பெறுவதற்கான காலக்கெடு, ஜூன், 15 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.இதுகுறித்து, மெட்ரிக் பள்ளி இயக்குனர் மற்றும் குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட மாநில முதன்மை தொடர்பு அலுவலர் பிச்சை கூறியுள்ளதாவது:

அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் தொகுப்பு ஊதியத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டர்கள் நியமனம்

அனைவருக்கும் கல்வி இயக்கத்தில், தொகுப்பு ஊதிய அடிப்படையில், கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடங்களை, நிரப்பிக் கொள்ளலாம்' என, உத்தரவிடப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, அனைவருக்கும் கல்வி மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் பூஜாகுல்கர்னி, அனைத்து மாவட்ட கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலர்கள், தங்களது கட்டுப்பாட்டில் உள்ள அலுவலகங்களில், காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடங்களில், கம்ப்யூட்டர் விவரம் பதிவாளரை, தொகுப்பு ஊதியத்தில் நியமனம் செய்துக் கொள்ளலாம். கம்ப்யூட்டர் ஆபரேட்டர் பணியிடம், முற்றிலும், தற்காலிகமாக நேரடி நியமனம் செய்ய வேண்டும். இந்த பணி நியமனத்துக்கு, 1.6.2015ம் தேதி, 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என, அறிவுறுத்தப்படுகிறது.

பள்ளிகளுக்கு இலவச 'சிடி'

'தமிழக அருங்காட்சியகங்கள் விவரம் அடங்கிய, 'சிடி,' அனைத்து பள்ளிகளுக்கும் இலவசமாக வழங்கப்படும்,'' என, தொல்லியல் துணை கண்காணிப்பாளர் மூர்த்தீஸ்வரி தெரிவித்தார். இதுகுறித்து, அவர் கூறியதாவது:மத்திய அரசின் தொல்பொருள் ஆய்வுத் துறை, கோட்டை அருங்காட்சியகம் சார்பில், 'தமிழக அருங்காட்சியகங்கள்' என்ற தலைப்பில், 'சிடி' தயாரிக்கப்பட்டு உள்ளது.

25 ஆயிரம் ஆசிரியர்களுக்கு கல்வித்துறை கெடு

அனைத்து ஆசிரியர்களும் இன்னும் ஓர் ஆண்டில் ஆசிரியர்களின் 'டெட்' தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாவிட்டால் வேலை பறிபோகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 'மத்திய அரசின் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் 'டெட்' தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்' என மத்திய அரசின் தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.இதை எதிர்த்து ஆசிரியர்கள் பலர் நீதிமன்றத்துக்கு சென்றனர்.

தேர்வு நடைமுறையில் குழப்பம்: ஆய்வக உதவியாளர் பணிக்கான அறிவிப்பை ரத்து செய்யக்கோரி வழக்கு

 தேர்வு நடைமுறையில் குழப்பம் இருப்பதாக கூறி ஆய்வக உதவியாளர் பணிக்கான அறிவிப்பை ரத்து செய்யக்கோரி தொடர்ந்த வழக்கில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ஆய்வக உதவியாளர் பணி

நெல்லை பாளையங்கோட்டை காமராஜர்நகரை சேர்ந்தவர் ஆறுமுகராஜா. இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறி இருப்பதாவது:-

எல்.கே.ஜி., இலவச சேர்க்கைக்கு அரசு உதவி மறுப்பு : 1 முதல் 9ம் வகுப்பு வரையே சேர்க்க முடியும்

'தமிழகத்தில், கல்வி உரிமைச் சட்ட விதிகளுக்கு முரணாக, எல்.கே.ஜி., - யு.கே.ஜி., மாணவர் சேர்க்கைக்கு, நிதி அளிக்க முடியாது' என, மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இட ஒதுக்கீடு:
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி ஏழைகள், நலிவடைந்த பிரிவினரின் குழந்தைகளுக்கு, தனியார் பள்ளிகளில் ஒவ்வொரு கல்வி ஆண்டும், 25 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.இதில், 2013 - 14ம் கல்வியாண்டில், 49 ஆயிரத்து, 864 பேர்; 2014 - 15ல், 86 ஆயிரத்து,

பள்ளி திறந்த முதல் நாளில் புத்தகத்துடன் சீருடை: பொறுப்புகளை பட்டியலிட்டது கல்வித்துறை

 வரும் கல்வி ஆண்டில், பள்ளிகள் துவங்கும் முதல் நாள் அன்றே, மாணவ, மாணவியருக்கு விலையில்லா பாடநூல், சீருடை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பொறுப்புகளை மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, கல்வித்துறை பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது.
          வரும், 2015-16ம் கல்வி ஆண்டில், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களின் முக்கிய பணிகளும், பொறுப்புகளும் குறித்து, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்ககம், அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள சுற்றிக்கை விபரம்: பள்ளி திறக்கப்படும் முதல் நாள் அன்றே அனைத்து மாணவ, மாணவியருக்கும் விலையில்லா பாடநூல், சீருடை, நோட்டு புத்தகம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி திறப்பதற்கு ஓரிரு நாட்களுக்கு முன்பாகவே, பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்த வேண்டும்.

பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழை நேரடியாக பதிவிறக்கம் செய்யும் வசதி அறிமுகம்.

பிளஸ் 2 தேர்வுக்கான தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை, மாணவ, மாணவியர், நேரடியாக பதிவிறக்கம் செய்யும் வசதி, இன்று(மே 18) முதல் அறிமுகமாகிறது.

           பிளஸ் 2 தேர்வு முடிவுகள், கடந்த 7ம் தேதி வெளியானது. இந்த ஆண்டு தேர்வு முடித்தோருக்கு, நேரடியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்காமல், முதற்கட்டமாக கல்லூரிகளைப் போன்று, தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் அறிமுகமாகி உள்ளது.

இந்த சான்றிதழ், மே 7ம் தேதி முதல், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் பதிவிறக்கம் செய்யப்பட்டு, மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டன.

அரசு ஊழியர் தற்காலிக பணிநீக்க நடவடிக்கையில் தலையிட முடியாது: ஐகோர்ட்

கடுமையான குற்றச்சாட்டுகள் இருப்பதால் அரசு ஊழியர் தற்காலிக பணிநீக்க நடவடிக்கையில் தலையிட முடியாது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

       தமிழக அரசின் வணிக வரித்துறை உதவி கமிஷனராக பணியாற்றியவர் மதியழகன். இவர் கடந்த ஆண்டு ஏப்ரலில் ஓய்வுபெற வேண்டும். ஆனால் அவர் மீது நிலுவையில் இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் தாக்கல் செய்த வழக்கை காரணம் காட்டி பணியில் இருந்து அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.

சிவில் சர்வீசஸ் முதல்நிலைத் தேர்வு அறிவிப்பு திடீரென ஒத்திவைப்பு.

ஐ.ஏ.எஸ். - ஐ.பி.எஸ். உள்ளிட்ட பதவிகளுக்கான சிவில் சர்வீசஸ் முதல் நிலைத்தேர்வு அறிவிப்பு, திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
         ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., - ஐ.ஆர்.எஸ்., உள்ளிட்ட, 36 வகை மத்திய அரசு பதவிகளுக்கான முதல்நிலைத் தேர்வு, ஆண்டுதோறும் மே மாதம் அறிவிக்கப்படும். இந்த ஆண்டுக்கான தேர்வு, மே, 16ம் தேதி அறிவிக்கப்பட்டு, ஆகஸ்ட் 23ல் முதல்நிலைத் தேர்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், நேற்று முன்தினம் திட்டமிட்டபடி அறிவிப்பு வெளியாகவில்லை. இதுகுறித்து, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் (யு.பி.எஸ்.சி.,) வெளியிட்ட அறிவிப்பில், மே 16ம் தேதி தேர்வுக்கான அறிவிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மினிமம் லெவல் மெட்டீரியல் மட்டும் பயன்படுத்தி பாடம் நடத்த கல்வித்துறை உத்தரவு.

அரசு பள்ளிகளிலும், தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க கல்வி ஆண்டு துவக்கம் முதலே (ஜூன் 1) முக்கிய கேள்விகள் அடங்கிய சிடி போன்ற மினிமம் லெவல் மெட்டீரியல் மட்டும் பயன்படுத்தி, பாடம் நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது, கல்வி அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

             கடந்த வாரத்தில், முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பிளஸ்2 தேர்வு முடிவுகள் ஆய்வு, விலையில்லா பொருட்கள் வினியோகம், நிலுவை வழக்குகள் குறித்த ஆய்வு கூட்டம் சென்னையில் பள்ளிக்கல்வித்துறை செயலர் சபிதா தலைமையில் நடந்தது. இதில், அனைத்து இயக்குனர்கள் மற்றும் இணை இயக்குனர்கள் பங்கேற்றனர்.

பள்ளிக்கல்வி - ஆசிரியர் தகுதித் தேர்வு - இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் பணியிடத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் 15.11.2011 முதல் 5 ஆண்டுகளுக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என அரசு மாற்றம் செய்து உத்தரவு

ஆசிரியைக்கு உடல்நலம் பாதிப்பு: பணியில் இருந்து விடுவித்து பணப்பலன்களை வழங்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு


கன்னியாகுமரியை சேர்ந்தவர் ஏசுதாஸ். இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனு கூறி இருந்ததாவது:- என் மனைவி அல்போன்ஸ், நட்டலம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக அவரால் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை.

பிளஸ் 2 தேர்வு -10 நாட்களில் விடைத்தாள் நகல்கள் 'ஸ்கேன்' செய்யப்பட்டு தேர்வுத் துறை வெப்சைட்டில் பதிவேற்றம் செய்யப்படும்-இணை இயக்குனர் அமுதவல்லி .

விடைத்தாள் நகல், மறுகூட்டல் கோரி ஒரு லட்சம் விண்ணப்பங்கள்

'தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டலுக்காக ஒரு லட்சம் விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன,'' என மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மைய (எஸ்.சி.இ.ஆர்.டி.,) இணை இயக்குனர் அமுதவல்லி தெரிவித்தார்.
பிளஸ் 2 தேர்வு விடைத்தாள் நகல் மற்றும் மறுகூட்டல் பணிகளுக்காக (ஜெராக்ஸ்)இவரை சிறப்பு அதிகாரியாக தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் நேற்றுமுன்தினம் நியமித்தார். மதுரை வந்த அமுதவல்லி கூறியதாவது: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு தற்காலிக மதிப்பெண் சான்றுகள் வழங்கப்படுகின்றன.

அரசுப் பணிகளுக்கான அனைத்துத் தேர்வுகளின் மதிப்பெண் பட்டியலைவெளியிட வேண்டும்: டி.என்.பி.எஸ்.சி.க்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

 அரசுப் பணிகளுக்கான அனைத்து எழுத்துத் தேர்வுகளின் மதிப்பெண் பட்டியலையும் வெளியிட வேண்டும் என்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு (டி.என்.பி.எஸ்.சி.) சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தனியார் பள்ளிகளுக்கு ரூ.97 கோடி வழங்க அரசாணை

 தமிழகத்தில் அனைவருக்கும் இலவச கட்டாயக் கல்விச் சட்டம் 2009ன் படி, தமிழக தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களை நலிந்த மற்றும் வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கு வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இதன்படி, சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளின் நுழைவு வகுப்புகளில் உள்ள 25% இடங்கள் நிரப்பப்பட்டது.
இதில் கடந்த 2012-13, 2013-14, 2014-15 ஆகிய 3 கல்வியாண்டுகளில், தமிழக பள்ளிகளில் இந்த ஒதுக்கீட்டில் சேர்க்கப்பட்ட மாணவர்களின் கல்விக் கட்டணம் சுமார் ரூ.150 கோடி நிலுவையில் இருப்ப தாக தனியார் பள்ளிகள் அரசு மீது குற்றம் சாட்டின. இந்தாண்டு நிலுவைக் கல்விக் கட்டணத்தை அரசு அளித்தால் மட்டுமே, 25சதவீத ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை நடத்த முடியும் என்றும் அறிவித்தன.

இதன் தொடர்ச்சியாக தனியார் பள்ளிகள் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தவும் முடிவு செய்தது. இந்நிலையில் 15.5.2015 தேதியிட்ட அரசாணை எண் 102ன்படி, தமிழக அளவில் 25 சதவீத ஒதுக்கீட்டில் தனியார் பள்ளிகளில் சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணம் ரூ.97 கோடி வழங்கப்படுவதாக வெளியிடப்பட்டுள்ளது

தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவு இலவச பஸ் பாஸ் பறிமுதல் செய்யப்படும் :

பஸ்களில் மாணவர்கள் படிக்கட்டு பயணத்தை தவிர்க்க விழிப்புணர்வு
பஸ்களில் பள்ளி மாணவர்கள் படிக்கட்டு பயணத்தை தவிர்க்க விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவின் படி, பள்ளி மாணவர்கள் பஸ்களில் படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் செய்வதை தவிர்க்க உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டது.

பசுவைப் பற்றி கட்டுரை எழுத தெரியாத மக்கு வாத்தியார்: ஐகோர்ட் ஆவேசம்

இளைய சமுதாயத்துக்கு கல்விக் கண்ணை திறந்து வைக்கும் பணியில் உள்ள ஆசிரியரால் பசுமாட்டைப் பற்றி ஒரு பக்க அளவில் கட்டுரை எழுத முடியாததை கண்டு கொதித்துப் போன ஜம்மு-காஷ்மீர் மாநில ஐகோர்ட் அம்மாநில கல்வித்துறையில் உள்ள ஓட்டை உடைசலை கண்டு கொதிப்படைந்துள்ளது.

         தெற்கு காஷ்மீர் பகுதியைச் சேர்ந்த முஹம்மது இம்ரான் உசேன் என்பவரை அம்மாநில அரசுப் பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒருவர் ஜம்மு-காஷ்மீர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அடிப்படை கல்வியை டெல்லியிலும், ஆசிரியர் பயிற்சியை நாகலாந்திலும் முடித்ததாக கூறும் முஹம்மது இம்ரான் உசேன்,

தமிழக பாட திட்டம் தரம் உயர்கிறது: தேசிய புத்தகங்களுடன் ஒப்பிடும் பணி துவக்கம்

மத்திய பாடத்திட்டத்தின் படி, தமிழக பாடத்திட்டத்தை தரம் உயர்த்த தமிழக பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்த முதற்கட்ட ஆய்வுப்பணி துவங்கி உள்ளது.
முதற்கட்ட பணி...:

தமிழகத்தில், ஒன்றாம் வகுப்பு முதல், ஒன்பதாம் வகுப்பு வரை, சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அமலாகியுள்ளது. இப்பாடத்திட்டப்படி, முப்பருவ முறை கற்பித்தல் மற்றும் தேர்வு முறை அமலில் உள்ளது. இதேபோன்று, 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை, பாடத்திட்டத்தை மத்திய அரசின் பாடத்திட்டத்துக்கு ஈடாக மாற்றியமைக்க,

பள்ளிக்கல்வி பணிகளை முடக்கிய வழக்குகளை முடிக்க உத்தரவு:

 500க்கும் மேற்பட்ட வழக்குகளால் கல்வி துறை ஸ்தம்பிப்பு--பள்ளி கல்வித் துறை பணிகளை முடக்கியுள்ள, 500 வழக்குகளை, ஓரிரு மாதங்களில் முடிக்க நடவடிக்கை எடுக்குமாறு, கல்வித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பள்ளி கல்வித்துறையின் கீழ், தொடக்கக் கல்வி, பள்ளி கல்வி, மெட்ரிக், மாநில சர்வ சிக் ஷ அபியான், ராஷ்டிரிய மத்யமிக் சிக் ஷ அபியான், தேர்வுத்துறை, தமிழ்நாடு பாடநூல் கழகம், பொது நூலகத்துறை, தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மற்றும் மாநில ஆசிரியர் கல்வியியல் பயிற்சி நிறுவனம் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட இயக்குனரங்கள் உள்ளன.

சென்னை அரசு பள்ளியில் சேர மாணவர்கள் அச்சம்: தலைமை ஆசிரியர், கழிப்பறை, குடிநீர் இல்லை

-தலைமை ஆசிரியர், கழிப்பறை வசதி, குடிநீர் வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமல், சென்னையில் ஒரு அரசு பள்ளி உள்ளது. இப்பள்ளியில், மாணவர்களை சேர்க்க, பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர். இதுவரை ஒரு விண்ணப்பம் கூட யாரும் வாங்கவில்லை.

தேர்ச்சி விகிதம் குறைவு:

சென்னை, எழும்பூர் ரயில் நிலையம் அருகில், கல்வித்துறையின் வடக்கு, தெற்கு மாவட்ட கல்வி அதிகாரி மற்றும் சென்னை மெட்ரிக் பள்ளி ஆய்வாளர் அலுவலகங்கள் உள்ளன. அதே கட்டடத்தில், அம்பேத்கர் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், மாணவர் தேர்ச்சி விகிதம் மிகக்குறைவாக உள்ளது.

ரேசன் கார்டுதாரர்களிடம் மொபைல் எண் சேகரிக்க உத்தரவு

ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கும் திட்டத்தில், கார்டுதாரர் மொபைல் எண் மற்றும் தற்போதைய வயது விவரங்களை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. வழக்கமான ரேஷன் கார்டுக்கு மாற்றாக, 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. உடற்கூறு பதிவுகளை உள்ளடக்கிய ஆதார் பதிவு பணி நிறைவு பெற்றதும், அதன் புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டு, 'ஸ்மார்ட்' கார்டு தயாரிக்க திட்டமிடப்பட்டது. ஆதார் பணி நிறைவு பெறாததால், மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு உள்தாள் இணைக்கப்பட்டுள்ளது.

web stats

web stats