rp

Blogging Tips 2017

ரூ.7 லட்சம் வரை விலை போகும் பி.காம் படிப்பு!

தமிழகம் முழுவதும் கலை, அறிவியல் படிப்புகளுக்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் கூட்டம் அலைமோதுகிறது. ' பொறியியல் படிப்புகளைவிடவும், பி.காம் உள்ளிட்ட கலைப் பிரிவு பாடங்களை நோக்கியே மாணவர்கள் அணிவகுக்கிறார்கள்' என்கின்றனர் கல்வியாளர்கள். 

தொடக்கக்கல்வித்துறையில் 01/06/2016 ன்படி காலிப்பணியிட விவரம் கேட்பு-கலந்தாய்வுக்கு ஆயத்தமா?


முனைவர் பட்டம் பெற்றிருந்தாலும் தகுதித்தேர்வு கட்டாயம்.

RTI - LETTER PROMOTED PG'S APPOINTED IN THE PAST YEARS - த.அ.உ.சட்டம் 2005 - பள்ளிக்கல்வித்துறையில் ஏற்படும் முதுகலை ஆசிரியர் காலிப் பணியிடங்களுக்கு 50% நேரடி நியமனமும், 50% பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகிறது என தகவல்


4ம் வகுப்பு மாணவர்கள் சரியாக படிக்கவில்லை என கூறி 15 மாணவர்களுக்கு ஆசிரியர் வைஜெயந்திமாலா கற்பூரத்தால் சூடு வைப்பு

உளுந்தூர்பேட்டையை அடுத்த பாலி கிராம ஊராட்சிய ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வகுப்பில் பின் தங்கிய நிலையில் பயின்ற மாணவ, மாணவியருக்கு ஆசிரியை கற்பூரத்தால் சூடு வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான புகாரின் அடிப்படையில், தலைமையாசிரியர் வரதராஜன் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆசிரியை வைஜெயந்தி மாலாவை போலீஸ் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது.

தொடக்கக்கல்வி - பழுதடைந்த பள்ளி கட்டிடங்களை MG நிதி கொண்டு உடனடியாக சரிசெய்ய வேண்டும் - மிகவும் பழுதடைந்த கட்டிடங்களை இடிக்க வேண்டும் - இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள்

தொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்கள் ஆசிரியர்களின் , பணி மற்றும் பணப்பலன்கள் உள்ளிட்ட அனைத்து கோப்புகள் மீதும் உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ளவும், பணிப்பதிவேட்டில் உடனுக்குடன் பதிவு 13.06.2016 முதல் 21.06.2016க்குள் முடிக்க இயக்குனர் உத்தரவு


ஜூன் 12 உலக குழந்தை தொழிலாளர் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு அனைத்து தலைமையாசிரியர்கள்/ஆசிரியர்கள்/அலுவலர்கள் "குழந்தை தொழிலாளர் ஒழிப்பு உறுதிமொழி" ஏற்க இயக்குனர் உத்தரவு

தமிழகத்தில், 10 ஆயிரம் தனியார் பள்ளி களுக்கு, அங்கீகாரம் வழங்காமல் கல்வித்துறை மவுனம் சாதித்து வருகிறது-தினமலர்

தமிழகத்தில், 10 ஆயிரம் தனியார் பள்ளி களுக்கு, அங்கீகாரம் வழங்காமல் கல்வித்துறை மவுனம் சாதித்து வருகிறது. அந்தப் பள்ளிகளைச் சேர்ந்த வாகனங்களின் உரிமங்களும், போக்குவரத்து துறையால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. அதனால், இந்தப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோருக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல், நிர்வாகத்தினர் தவித்து வருகின்றனர். அத்துடன், பல லட்சம் மாணவர்களின் எதிர்காலமும் கேள்விக்குறியாகி உள்ளது.

LAW ADMISSION NOTIFICATION 2016-2017 | சட்டபடிப்புகளில் சேர விண்ணப்பங்கள் ஜூன் முதல் 13 வழங்கப்படுகிறது.

ஏழாவது ஊதியக் குழு நாளை இறுதி வடிவம்

 ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகளுக்கு, இறுதி வடிவம் கொடுக்க, நாளை சிறப்பு கூட்டம் நடக்க இருக்கிறது.
அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் பணி சார்ந்த பரிந்துரைகள் வழங்க அமைக்கப்பட்ட ஏழாவது ஊதியக் குழு,

வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணி தேர்தல் ஆணையம் உத்தரவு

தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் செம்மைப்படுத்தும் பணியை (நேஷனல் எலக்டர் ரோல் பியூரிபிகேஷன்) ஜூன் 11ல் துவங்க வேண்டும்' என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

காலத்திற்கேற்ப மாறாத பாடத்திட்டம்

மத்திய அரசின் நுழைவுத்தேர்வுகளில், தமிழக மாணவர்கள் தேர்ச்சி பெற, பாடத்திட்டத்தை மாற்ற வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்துள்ளது.தமிழகத்தில், 2011ல், மெட்ரிக், மாநில பாடத்திட்டம், ஆங்கிலோ இந்தியன் மற்றும் ஓரியண்டல் போன்ற பாடத்திட்டங்கள் நீக்கப்பட்டு, அனைவருக்கும் சேர்த்து, சமச்சீர் கல்வி திட்டம் அமலுக்கு வந்தது

இப்படி தான் இருக்கும் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு:அக்டோபரில் கிடைக்க வாய்ப்பு

தமிழகத்தில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கும் பணியை, அக்., மாதம் முதல் துவக்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது. ரேஷன் கடையில் வழங்கப்படும் இலவச அரிசி, குறைந்த விலையில் விற்கப்படும் பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வினியோகத்தில் , முறைகேடு நடக்கிறது. 

இதைத் தடுக்க, ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க, தமிழக அரசு முடிவு செய்தது. இதை, அக்., முதல் செயல்படுத்த, உணவுத் துறை காலக்கெடு நிர்ணயித்து உள்ளது.

திட்டம் செயல்படுத்தும் முறை

கவுன்சிலிங் எப்போது? ஏக்கத்தில் ஆசிரியர்கள்

ஆசிரியர்களுக்கான பணிமாறுதல் கவுன்சிலிங், இன்னும் அறிவிக்கப்படாததால், மாணவர்களின் கல்வி பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.தொடக்கப் பள்ளி முதல், மேல்நிலைப் பள்ளிவரை, இடைநிலை, பட்டதாரி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பள்ளிக்கல்வித் துறை சார்பில், ஆண்டுதோறும், பணி மாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.

ஜூன் 27ல் இன்ஜி., பொது கவுன்சிலிங் அண்ணா பல்கலை அறிவிப்பு

இன்ஜினியரிங் படிப்புகளுக்கான, முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை பொது கவுன்சிலிங், ஜூன், 27ல் துவங்கும்' என, அண்ணா பல்கலை அறிவித்துள்ளது.தமிழகத்தில், அண்ணா பல்கலையின் இணைப்பில் உள்ள, 550 இன்ஜி., கல்லுாரிகளில், பி.இ., - பி.டெக்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு, தமிழக அரசு சார்பில் பொது கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. 

டி.என்.பி.எஸ்.சி குரூப் 2-ஏ தேர்வு முடிவுகள் வெளியீடு

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 2-ஏ தேர்வு முடிவுகளை  வெளியிட்டுள்ளது. தேர்வாணையத்தின் இணையதளத்தில் (www.tnpsc.gov.in) இந்த முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் வெ.சோபனா புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிவிப்பு:

அரசாணை வெளியிட்டும் பலனில்லை-புது பென்ஷன் பலன்களை பெறமுடியாமல் ஓய்வூதியர்கள் பரிதவிப்பு

நன்றி திரு . பிரடெரிக்ஏங்கல்ஸ்

காலை சிற்றுண்டி பள்ளிகளில் பயிற்சி

பள்ளிகளில், காலை சிற்றுண்டி சமைப்பது தொடர்பாக, சத்துணவு அமைப்பாளர்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட உள்ளது.அ.தி.மு.க.,வின் தேர்தல் வாக்குறுதியின் படி, அரசு ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு, காலை சிற்றுண்டி வழங்குவதற்கான அரசு உத்தரவு, விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியருக்கு 'ஆப்சென்ட்': திருவண்ணாமலை சி.இ.ஓ., பொன்குமார் அதிரடி

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருகே, பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியருக்கு வருகை பதிவேட்டில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் 'ஆப்சென்ட்' போட்டார்.திருவண்ணாமலை மாவட்டம், தானிப்பாடி அருகே மேல்முத்தானூர் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு, நேற்று காலை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பொன்குமார் திடீரென சென்றார். அங்கு ஆய்வு நடத்தியதில், தலைமை ஆசிரியர் முருகேசன் பள்ளிக்கு வரவில்லை என தெரிந்தது.

அரியலூர்: தலைமை ஆசிரியை சஸ்பெண்ட்

அரியலூர்: அரியலூர் மாவட்டம் சாலைக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பள்ளி மாணவர்களை கழிவறையை சுத்தம் செய்யக்கூறியதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தலைமை ஆசிரியை புனிதவதியை சஸ்பெண்ட் செய்து மாவட்ட கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்

தொடக்க கல்வி-உதவி தொடக்க கல்வி அலுவலர்/கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பள்ளிகள் ஆண்டாய்வு,பள்ளி

CLICK HERE-DEE - 2016-17AEEO / AAEEO's ANNUAL INSPECTION REG DIRECTOR CIRCULAR REG

பள்ளிக்கல்வி - தேர்வுநிலை பெற்ற ஆசிரியர்களுக்கு மாவட்டம்தோறும் சிறப்பு முகாம் - இயக்குனர் செயல்முறைகள்

ஓராண்டிற்கு குறைவான பணி-மகப்பேறு விடுப்பு அனுமதித்தல் சார்பான தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள் நாள்:09.01.1996

click here to view

புதிய இலவச பஸ் பாஸ் வழங்கும் வரை மாணவர்கள் பழைய பயண அட்டைகளை பயன்படுத்த அனுமதிக்கலாம்: அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தல்

நடப்பு கல்வி ஆண்டுக்கான பேருந்து இலவச பயண அட்டை வழங்கப்படும் வரை கடந்தாண்டு தரப்பட்ட இலவச பயண அட்டைகளை பயன்படுத்த மாணவர்களை அனுமதிக்கலாம் என்று போக்குவரத்துத்துறை அதிகாரி களுக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அரசு தரப்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழக அரசு தலைமைச் செயலாளர் மாற்றம்: ஞானதேசிகனுக்கு பதிலாக ராம்மோகன் ராவ் நியமனம்

தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த ஞானதேசிகன் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, புதிய தலைமைச் செயலாளர் பொறுப்பிற்கு ராம்மோகன் ராவ் நியமிக்கப்பட்டுள்ளார்.

ராம்மோகன் ராவ் முதல்வரின் தனிப்பிரிவு செயலாளராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளாட்சித் தேர்தலில் அமலுக்கு வருகிறது பெண்களுக்கான 50% இடஒதுக்கீடு.

வருகிற அக்டோபரில் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாக பெண்களுக்கான 50 சதவீத இடஒதுக்கீடு அமல்படுத்தப்பட உள்ளது. இதற்காக பெண்களுக்கான வார்டுகளை பிரிக்கும் பணியில், ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.தமிழகத்தில் முதன்முறையாக உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவீத இடங்களுக்கு பெண்கள் போட்டியிட உள்ளனர்.

அனைத்து பள்ளிகளுக்கும் தரவரிசைப் பட்டியல்: மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு

நாட்டில் உள்ள அனைத்து பள்ளி களையும் ஆராய்ந்து, தரவரிசைப் பட்டியல் வெளியிட மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்துள்ளது.
இதற்கான யோசனையை இத்துறையின் அமைச்சரான ஸ்மிருதி இரானியிடன் அவரது உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை ஏற்றுக்கொண்ட ஸ்மிருதி இரானி, பள்ளிகளுக்கு தரவரிசைப் பட்டியல் வெளியிடும் பணியை இந்த ஆண்டே தொடங்க உத்தர விட்டுள்ளார்.

அலட்சிய ஆசியர்கள் நீக்கம்!


அர்ப்பணிப்பு உணர்வோடு மாணவர்களுக்கு கல்வியையும் அறத்தையும் போதித்த ஆசிரியர்கள் வாழ்ந்தது அந்தக் காலம். இன்று, ஆசிரியர் பணியும் ஒரு அரசு வேலை என்று நினைத்து மாத ஊதியத்தை மட்டுமே மனதில்கொண்டு வாழ்வோர் நிறைந்திருப்பது இந்தக் காலம். எல்லா ஆசிரியர்களையும் அப்படி பொருப்பில்லாதவர்களாகச் சித்தரித்துவிட முடியாது. இன்னும் ஆசிரியர் தொழிலை அர்ப்பணிப்புணர்வோடு செய்கிறவர்கள் பெரும்பான்மையோராக இருந்தாலும் ஒருசிலர் பொருப்பற்று நடந்து கொள்கிறார்கள்.

அப்படி மாணவர்களையும் பெற்றோர்களையும் அலட்சியப்படுத்தி ஆசிரியைகள் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட எழிச்சூரில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில், 160 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 9 ஆசிரியர்கள் பணிபுரிகிறார்கள். இந்நிலையில், முதலாம் வகுப்பு சேர்க்கைக்கு வரும் குழந்தைகளை பள்ளியில் சேர்க்காமல், பல்வேறு காரணங்களைக்கூறி அலட்சியமாக அப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆனந்தி மற்றும் உதவி தலைமை ஆசிரியர் தான்சி பெர்னாண்டோ இருவரும் பெற்றோர்களை அலைக்கழித்ததாக புகார் எழுந்துள்ளது.

மேலும் 8ம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு டீ.சி. வழங்கப்படாமல் தாமதமாக்குகிறார்கள். இதனால், மற்ற பள்ளியில் சேர முடியாமல் மாணவர்கள் தவித்துவருகின்றனர். எனவே, பெற்றோர்களும் ஊர் மக்களும் பள்ளியைப் பூட்டிவைத்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஓரகடம் போலீசார் மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பூட்டை உடைத்து பள்ளியைத் திறந்து வைத்தனர்.

இதற்கிடையே, தலைமை ஆசிரியர்களுக்கும் கிராமப் பெண்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. தலைமை ஆசிரியரை பணிநீக்கம் செய்யுமாறு கிராம மக்கள் குரல் எழுப்பினர். இதையடுத்து, பள்ளி தலைமை ஆசிரியரையும் உதவி தலைமை ஆசிரியரையும் மாவட்ட ஆட்சியர் கஜலட்சுமியின் பரிந்துரையின்பேரில் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி பணிநீக்கம் செய்ய உத்தரவிட்டார்.

இவர்கள் இருவரும் ஏற்கனவே அப்பள்ளியில் கடந்த 2013ம் ஆண்டு 2 மாணவர்களை விஷப் பூச்சி ஒன்று கடித்தபோது, முதலுதவி செய்யாமல் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியமாக இருந்ததால் பணிநீக்கம் செய்யப்பட்டு, மீண்டும் அப்பள்ளியிலேயே பணியமர்த்தப்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பள்ளியின் சக ஆசிரியர்களிடையேயும் இவர்கள் இருவரும் பனிப்போரில் ஈடுபட்டு வந்தனர். இப்பிரச்னையில் ஆசிரியர்கள் இருவர்மீது துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என குன்றத்தூர் ஒன்றிய உதவி தொடக்கக் கல்வி அலுவலர் ரமேஷ் கூறியுள்ளார்.

கூடுகிறது ஊதியக்குழு: அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு

அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் பணிசார்ந்த பரிந்துரைகள் வழங்க அமைக்கப்பட்ட ஊதியக்குழு வருகிற 11ம் தேதி கூடுகிறது. 7வது ஊதியக்குழுவான இது, ஏற்கனவே அரசு ஊழியர்களின் ஊதிய உயர்வுகுறித்து பரிந்துரைக்க முடிவுசெய்துள்ளது. அமைச்சரவைச் செயலர் பி.கே.சின்ஹா தலைமையிலான இந்தக் குழு, தனது பரிந்துரைகளை இறுதிசெய்து அரசுக்கு அளிக்கவிருக்கிறது. இது, தனது பரிந்துரையில் ரூ.21 ஆயிரம் முதல் ரூ.2.7 லட்சம் வரை அரசு ஊழியர்களுக்கு ஊதியம் அளிக்க மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது. இந்த உயர்வானது கீழ்மட்ட ஊழியர்களுக்கு ரூ.3,000 அதிகமாகவும், உயர்மட்ட ஊழியர்களுக்கு ரூ.20,000 அதிகமாகவும் இருக்கும். இந்த உயர்வின் காரணமாக, 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 52 லட்சம் ஓய்வூதியம் பெறுவோரும் பயனடைவார்கள்.

பத்தாம் வகுப்புக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் நியமனம்?

தமிழக பள்ளிக் கல்வித்துறையில் இதுவரை உள்ள நடைமுறைகளில் மாற்றங்களை கொண்டு வருவது குறித்து அரசு ஆலோசித்து வருகிறது. பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு முதுநிலை் பட்டதாரி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு பாடம் நடத்தி வருகின்றனர்.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் திருச்சி மாவட்ட கிளையின் சார்பாக நடைபெற்ற மாவட்ட தேர்தல் பற்றியும் , புதிய நிர்வாகிகள்-பத்திரிக்கைசெய்தி


பள்ளிக்கு வராத தலைமையாசிரியர் பணியிடை நீக்கம், கல்வி அதிகாரிகள் நடவடிக்கை

பணிபுரியும் தொடக்கப்பள்ளியிலேயே b.ed கற்பித்தல் பயிற்சி எடுக்கலாம் என்பதற்கான அரசாணை

click here to download the go

G.O.165 Dt:01.06.16 MEDICAL AID – NHIS 2014 for Pensioners (including spouse) /Family Pensioners – List of Addl Hospitals covered under this scheme and Addl Specialties included in the Hospitals already empanelled under this Scheme – Approved

click here to download the GO

4 ஆண்டு பி.ஏ., - பி.எட்., படிப்புக்கு அங்கீகாரம்.

ஒருங்கிணைந்த, பி.ஏ.,- பி.எட்., மற்றும் பி.எஸ்சி., -பி.எட்., நான்கு ஆண்டு படிப்புகளுக்கு அங்கீகாரம் வழங்குவது குறித்து பரிசீலிக்கும்படி, தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.புதுச்சேரி, திருக்கானுார், வாழப்பாடியார் நகரில் உள்ள, உஷா லட்சுமணன் கல்வியல் கல்லுாரி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு:
கிராமப்புற ஏழை மாணவர்களுக்கு உயர் கல்வி வழங்கும் வகையில், 1999- 2000ல் எங்கள் கல்லுாரி துவங்கப்பட்டது. 2004- 05ல் பி.எட்., படிப்புக்கு தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சில் அங்கீகாரம் வழங்கியது

S.S.A-Inservice Training for Teachers-TRAINING TOPICS 2016-17


தனித்தேர்வர்களுக்கு செய்முறை தேர்வு கட்டாயம்.

தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
வரும், 2017 மார்ச் மாதம், 10ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள நேரடி தனித்தேர்வர்கள்; ஏற்கனவே பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி, அறிவியலில் தேர்ச்சி பெறாதவர்கள்; புதிய பாடத்திட்டத்தில், அறிவியல் செய்முறை பயிற்சிக்கு இதுவரை பதிவு செய்யாத தனித்தேர்வர்கள், பொதுத்தேர்வுக்கு முன், செய்முறை பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

வார இறுதி நாட்களில் தேர்வு: பி.எட்., மாணவர்கள்கொதிப்பு.

பி.எட்., கல்லுாரிகளின் பருவ தேர்வு முறைமாற்றப்பட்டு, வார இறுதி நாட்களில் மட்டும் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முடிவுக்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.தமிழகத்தில், 790 பி.எட்., கல்லுாரிகள் செயல்படுகின்றன.

சி.பி.எஸ்.இ.,க்கு மாற விரும்பும்500 பள்ளிகளுக்கு என்.ஓ.சி., நிறுத்தம்

மெட்ரிக் பள்ளிகளில் இருந்து, சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்துக்கு மாற விண்ணப்பித்த, 500 பள்ளிகளுக்கு தடையில்லா சான்று வழங்குவதை, தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ளது.தமிழகத்தில், 2011 முதல் சமச்சீர் கல்வி பாடத்திட்டம் அமல்படுத்தப்படுகிறது. இந்த பாடத்திட்டத்தின் தரம் குறித்து கல்வியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளனர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்: மருத்துவ படிப்புகளுக்கு 8/16/2016 முதல் விண்ணப்பிக்கலாம்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் மருத்துவப் படிப்புகளில் (MBBS, B.D.S, B.Pharm, B.Sc Nursing, B.P.T, B.O.T ) சேர ஜூன் 8-ம் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என பல்கலைக்கழக பதிவாளர் கே.ஆறுமுகம் அறிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
  அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரியில் 2016-17 ஆண்டுக்கான மருத்துவம் (MBBS), பல் மருத்துவம் (BDS) ஆகிய படிப்புகளில் சேர ஆன்லைன் (Online) மூலம் 8-6-2016 முதல் 20-6-2016 வரை விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணம் ரூ.1500 ஆகும்.

போலி சான்றிதழ் கொடுத்தஆசிரியைக்கு 3 ஆண்டு சிறை

போலி சான்றிதழ் கொடுத்து,பணியில் சேர்ந்த ஆசிரியைக்கு,மூன்று ஆண்டு சிறை தண்டணை விதித்து,அரியலுார் கோர்ட் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.அரியலுாரை சேர்ந்தவர் தனபால் மனைவி ராஜாமணி, 36.இவர், 2000ம் ஆண்டு,மணக்கால் ஆதிதிராவிடர் துவக்கப் பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார்.

00 சதவீத தேர்ச்சிக்காக மாணவர்களை கட்டாயப்படுத்தி பள்ளியில் இருந்து வெளியேற்றக்கூடாது: மதுரை ஐகோர்ட்டு அறிவுரை

விருதுநகர் மாவட்டம் சிவகாசி தாலுகா பி.பாறைப்பட்டியைச் சேர்ந்தவர் சுந்தரி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர், மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
  என் மூத்த மகன், எஸ். அம்மாபட்டியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த கல்வி ஆண்டின் போது எஸ்.எஸ்.எல்.சி. படித்து வந்தான். அரையாண்டுத்தேர்வில்

கட்டண நிர்ணயம் எப்போது? தலைவர் பதவி காலியாக இருப்பதால் தனியார் பள்ளிகள் வசூல் வேட்டை by PALANIVANJI

தனியார் பள்ளி கட்டண நிர்ணயக் குழுவின் தலைவர் பதவி கடந்த 5 மாதங்களாக காலியாக உள்ளது. இதை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தனியார் பள்ளிகள் வசூல் வேட்டையில் இறங்கியுள்ளன. இதனால் பெற்றோர்கள் மத்தியில் கட்டணங்களை தீர்மானிக்கும் கட்டண நிர்ணயக்குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி நியமிக்கப்படுவாரா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தேர்வு நிலை அந்தஸ்தை பெற, கவனிப்பை எதிர்பார்க்காத கல்வி அதிகாரி:'வாட்ஸ் ஆப்'பில் குவியும் வாழ்த்துகள்

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஊதியம் பெறுதல், இடமாறுதல், 'பென்ஷன்' போன்றவற்றுக்கு அதிகாரிகளை கவனித்தே உத்தரவு பெறும் நிலையில், எதையும் எதிர்பார்க்காமல் உத்தரவிட்ட அதிகாரிக்கு, 'வாட்ஸ் ஆப்'பில் வாழ்த்துகள் குவிகின்றன.

அரசு பள்ளிகளில் விசாரணை.

அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு செலவுக்கு மத்திய, மாநில அரசுகள் மூலம் நிதிவழங்கப்படுகிறது. மாணவ, மாணவியருக்கு இலவசமாக பாடப்புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் உள்ளிட்ட பொருட்களும் தரப்படுகின்றன.

அரசின் நிதியில், ஆசிரியர்களுக்கான சம்பளமும் தரப்படுகிறது.ஆனால், சில, அரசு மற்றும் அரசு உதவி பெறும்பள்ளிகளில், நன்கொடை மற்றும் பலவித கட்டணங்கள் வசூலிப்பதாக, புகார்கள் எழுந்துள்ளன. இதற்கு, ரசீதும் தருவதில்லை.

மாணவர்களுக்கு மாற்றுச்சான்றிதழ் வழங்க பள்ளிக்கு வராத தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் !!

பணிபுரியும் தொடக்கப்பள்ளியில் கற்பித்தல் பயிற்சி எடுக்க பாரதிதாசன் பல்கலைகழக அனுமதி கடிதம்,

பணிபுரியும் தொடக்கப்பள்ளியில் கற்பித்தல் பயிற்சி எடுக்க பாரதிதாசன் பல்கலைகழக அனுமதி கடிதம், Guide teacher  அந்த பள்ளியில் பணிபுரியும் b.ed முடித்தவராக இருத்தல் வேண்டும்,இல்லையெனில்  .அருகாமை பள்ளியில் பணிபுரியும் b.ed முடித்த ஆசிரியரை கொண்டு கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ளலாம்.

பள்ளிக்கு வந்தால் ரூ.1,000 பரிசு அசுத்தும் தலைமையாசிரியர்!

அரசு தொடக்கப் பள்ளிகளில், மாணவ, மாணவியர் சேர்க்கை குறைந்து வருகிறது. இந்த சூழ்நிலையில், பெற்றோர் தங்கள் குழந்தைகளை, அரசு பள்ளியில் சேர்ப்பதை ஊக்கப்படுத்தும் வகையில், தலைமையாசிரியர் ஒருவர், 1,000 ரூபாய் பரிசு வழங்கி அசத்தி வருகிறார்.

மாநிலபொதுக்குழு ,செயற்குழு அழைப்பு கடிதம்

பொதுசெயலரின் செ.மு அவர்களின் பயண திட்டம்-பணிகள்


தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலத்தேர்தல் முழு விவரம்


முதியோர் பென்ஷன் விதிமுறை தளர்வு: குவியும் மனுக்களால் அதிகாரிகள்திணறல்

உழைக்க முடியாத, ஆதரவற்ற நிலையில் உள்ள முதியோர், விதவைகள், கணவனால் கை விடப்பட்டோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கு, சமூக பாதுகாப்புத் திட்டத் தின் கீழ், மாதம், 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகிறது;
மாநிலம் முழுக்க, 35 லட்சம் பேர் பயன் பெற்று வந்தனர். இத் திட்டத்தில், தகுதி இல்லாதோர் வசதி படைத்தோர் கூட, பென்ஷன் பெற்றதால், அரசு, நிதி வீணாகிறது என்ற சர்ச்சை எழுந்தது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. வகுப்பு வாரியாக கட்டணம் வசூலிக்கும் பள்ளி நிர்வாகங்கள், ரசீது தராமல் ஏமாற்றுவதாக பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் உள்கட்டமைப்பு செலவுக்கு மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் மூலம் நிதி ஒதுக்கப்படுகிறது. 

பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை குறைந்தது...சாதனையா, வேதனையா? வெள்ளத்தில் தொலைந்த குடிசைகளால் மாறியது வாழ்க்கை!

வெள்ளத்தின் போது, அடையாறு, கூவம் ஆற்றையொட்டிய பகுதிகளில் இருந்த குடிசைகள் அகற்றப்பட்டு, ஆக்கிரமிப்பாளர்கள் மறு குடியமர்வு செய்யப்பட்டதால், சென்னையில் பள்ளி செல்லா குழந்தைகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து உள்ளது.

இளைஞர்களுக்கான முதல்வர் விருது விண்ணப்பிக்க ஜூன் 20 கடைசி நாள்.

சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களுக்கு வழங்கப்படும், முதல்வர் மாநில இளைஞர் விருதுக்கு, ஜூன், 20க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில், 15 முதல், 35 வயது உடைய, சமுதாய தொண்டாற்றி, குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தி, உள்ளூர் மக்களிடம் நல் மதிப்பை பெற்றிருக்க வேண்டும்.

TET Exam நிபந்தனை - கால அவகாசம் முடிய, மூன்று மாதங்களே உள்ள நிலையில்கா த்திருக்கும் ஆசிரியர்கள்

தமிழக அரசுப் பள்ளிகளில், 'டெட்' (ஆசிரியர் தகுதித்தேர்வு) நிபந்தனையுடன் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு காலஅவகாசம் நிறைவு பெறும் நிலையில், அரசின் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். 

         தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சில் அறிவுறுத்தலின் படி, தமிழகத்தில், 'டெட்' தேர்வுக்கான நடைமுறைகள், 2010ல் அமல்படுத்தப்பட்டன. 2010 ஆக., 23ம் தேதிக்கு பின், அரசுப் பள்ளிகளில் பணியில் சேர்ந்தவர்களுக்கு, 'டெட்' தேர்வு கட்டாயமாக்கப்பட்டது.

ANNA UNIVERSITY: TO KNOW THE STATUS OF YOUR ENGINEERING APPLICATION

CLICK HERE TO KNOW THE STATUS......

பிஹாரில் 2 பேரின் தேர்வு முடிவை ரத்து செய்தது தேர்வு வாரியம்.

 பிஹாரில் பிளஸ் 2 தேர்வில் முக்கிய இடம் பிடித்த மாணவர்களுக்கு நடத்தப்பட்ட மறு தேர்வின் அடிப்படையில், 2 மாணவர்களின் தேர்வு முடிவை மாநில பள்ளி தேர்வு வாரியம் (பிஎஸ்இபி) நேற்று ரத்து செய்தது. 

Interest Rate For General Provident Fund

(PUBLISHED IN PART I SECTION OF GAZETTE OF INDIA)

F.No.5(1)-B(PD)/2016
Government of India
Ministry of Finance
Department of Economic Affairs
(Budget Division)

New Delhi, Dated the 2nd June, 2016


RESOLUTION


It is announced for general information that during the year 2016-2017, accumulations at the credit of subscribers to the General Provident Fund and other similar funds shall carry interest at the rate of 8.1% (Eight point one per cent) w.e.f. 1st April, 2016 to 30th June, 2016. This rate will be in force w.e.f. 1st April, 2016. The funds concerned are:-


1. The General Provident Fund (Central Services)
2. The Contributory Provident Fund (India)
3. The All India Services Provident Fund
4. The State Railway Provident Fund
5. The General Provident Fund (Defence Services)
6. The Indian Ordnance Department Provident Fund
7. The Indian Ordnance Factories Workmen’s Provident Fund.
8. The Indian Naval Dockyard Workmen’s Provident Fund
9. The Defence Services Officers Provident Fund
10. The Armed Forces Personnel Provident Fund.


2. Ordered that the Resolution be published in Gazette of India.


/sd/-
(H.K. Srivastav)
Director (Budget)

WhatsApp-ல் புதிதாக சில எழுத்துருக்களைப் பயன்படுத்தும் வசதி

WhatsApp-ல் புதிதாக சில எழுத்துருக்களைப் பயன்படுத்தும்படி அதன் நிரல்மூலத்தை மாற்றி அமைத்ததுள்ளனர்.
இது நம்மில் பலருக்கும் தெரியாது. இந்த வசதியைப் பற்றிய விவரம், வாட்சாப் செயலியின் திரையில் எங்குமே தெரியாது. 
அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இப்போது நான் இங்கு விளக்கப் போகிறேன்.

தடிப்பெழுத்து : சொற்களுக்கு முன்னும் பின்னும் விண்மீன் குறியைச்  (*) சேர்த்தால், அந்தச் சொற்கள் தடிப்பானத் தன்மையைப் பெறும். 
எ.கா:
balabarathi    *பாலபாரதி* என்று எழுதினால் 
  பாலபாரதி என்று தடிப்பாகத் தோன்றும்.

• சாய்வெழுத்து : சொற்களுக்குமுன்னும் பின்னும் அடிக்கோட்டைச் (_) சேர்த்தால் அந்தச் சொல் சாய்வாகத் தோன்றும். 
எ.கா. பாலபாரதி  என்று எழுதினால் 
பாலபாரதி என்று சாய்வாகத் தோன்றும்.

• நடுக்கோடு : சொற்களுக்கு முன்னும் பின்னும் ‘தில்டே’ எனும் குறியைச் (~) சேர்த்தால் அந்தச் சொல் நீக்கப்படவேண்டிய சொல்லைப்போல் நடுக்கோட்டுடன் தோன்றும். எ.கா.  பாலபாரதி 
பாலா என்று எழுதினால், ‘பாலபாரதி’ எனும் சொல் நீக்கப்பட்டு 'பாலா' என்று எழுதப்பட்டதைப்போலத் தோன்றும் : பாலபாரதி பாலா

வார்த்தைகளுக்கு மட்டும் அல்ல, வாக்கியங்களுக்கு முன் பின்னும் இதனை சேர்ப்பதால் எழுத்துருக்களில் மாற்றம் கொண்டுவர முடியும்.

இதனைக் கொண்டு நாம் குறிப்பிட்டு காட்டவேண்டிய வார்த்தைகளை அப்படியே காட்டலாம்.


நல்லாசிரியர் விருது முறைகேடு- முதன்மைக்கல்வி அலுவலர்கள்நேரில் ஆஜராக கோர்ட் உத்திரவு

ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு- உண்மை நிலைமை என்ன? பொதுசெயலர் செ.மு- இயக்குனர் சந்திப்பு

தொடக்கக் கல்வி இயக்குநர் முனைவர் ரெ.இளங்கோவன் அவர்களை 03.06.2016 அன்று பொதுசெயலர்   செ.முத்துசாமி அவர்கள் இயக்குனர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து ஆசிரியர்கள் பிரச்சினை குறித்து கோரிக்கைகள் சமர்பித்து நடவடிக்கைகள் மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது .

அப்போது  பொது மாறுதல் கலந்தாய்வு விரைவில் நடத்தவும் சென்ற ஆண்டு மாறுதல் பெற்று இன்னமும் விடுவிக்கப் படாமல் உள்ள ஆசிரியர்களை உடன் விடுவிக்கவும் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் வலியுறுத்தப்பட்டது .அதற்கு இயக்குனர் மாறுதல்கலந்தாய்வு குறித்து

8-ஆம் வகுப்புக்கு பிறகு ஐடிஐ முடித்தால் 10-ஆம் வகுப்பு முடித்ததற்குச் சமம்...!!

எட்டாம் வகுப்பு கல்விக்குப் பிறகு தொழில்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) மாணவர்கள் சேர்ந்து படித்து முடித்தால், அவர்களின் கல்வித் தகுதி 10ஆம் வகுப்புக்குச் சமமானதாக இனி மதிக்கப்படும் என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வு பல ஆண்டுகளாக உதவித்தொகை இல்லை. !!!

தேசிய வருவாய் வழி திறனாய்வு தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பல ஆண்டுகளாக உதவித்தொகை வழங்கப்படவில்லை. இதனால் அவர்கள் தவிக்கின்றனர்.

விடைக்குறிப்பு, மதிப்பெண் ஒதுக்கீடு பட்டியல் அரசு தேர்வுத்துறை வெளியிட கோரிக்கை ...!!

பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., போல், விடை குறிப்பு மற்றும் திருத்த முறையை வெளியிட வேண்டும்' என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மத்திய அரசின் தன்னாட்சி பெற்ற அமைப்பான, சி.பி.எஸ்.இ., பாடத்திட்டம், நாடு முழுவதும் உயர்கல்வி நிறுவனங்களால் முன்னுரிமை கொடுத்து ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது

ஒப்பந்தத்தை மீறியதால் பிலிப்கார்ட், ரோட் ரன்னர்' உட்பட 6 நிறுவனங்களுக்கு ஐ.ஐ.டி.,கேம்பஸ் இண்டர்வியூக்கு தடை!!!

பிரபல, 'ஆன்லைன்' வர்த்தக நிறுவனமான, 'பிலிப்கார்ட்' மற்றும் புதிய நிறுவனமான, 'ரோட் ரன்னர்' போன்ற நிறுவனங்களுக்கு, 'கேம்பஸ் இன்டர்வியூ' எனப்படும், வளாக நேர்காணலில் பங்கேற்க, உயர்கல்வி நிறுவனங்களான, ஐ.ஐ.டி., மற்றும் என்.ஐ.டி., கவுன்சில் தடை விதித்துள்ளன.

நேர்காணல்சென்னை, பெங்களூரு,கவுகாத்தி, காரக்பூர், டில்லி, மும்பை ஐ.ஐ.டி.,க்களில் வேலைவாய்ப்புக்கான வளாக நேர்காணல் நடத்த, வணிக நிறுவனங்களுக்கு, அகில இந்திய ஐ.ஐ.டி., வேலைவாய்ப்பு கமிட்டி அனுமதி அளிக்கும்.

உள்ளாட்சி தேர்தலுக்குள் முன்பாக மகப்பேறு விடுப்பு உயர்வு ?

உள்ளாட்சி தேர்தலுக்கு முன், மகப்பேறு விடுப்பை ஒன்பது மாதமாக அறிவிக்க, பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறை அதிகாரிகள்,
அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர். அரசு துறைகளில் பணிபுரியும் பெண்கள், தங்களது பச்சிளம் குழந்தைகளை பேணிப் பாதுகாக்க,தற்போது, ஆறு மாதம் மகப்பேறு விடுப்பு வழங்கப்படுகிறது.

தேர்வு நிலை பெற கல்வி சான்றுகள் உண்மைத்தன்மை சான்றுதேவையில்லை (RTI) பதில் .

இலவசக் கல்வித் திட்டத்தில் மாணவர் சேர்க்கை : சென்னைப் பல்கலைக்கழக அறிவிப்பு.

""ஒரு ரூபாய் செலவில்லாமல்"" ,குறைதீர்ப்பு கூட்டத்திலேயே தேர்வு நிலை ஆணை வழங்கிய - மதுரை கிழக்கு உதவிதொடக்கக்கல்வி அலுவலகம்...!!

குறைதீர்ப்புக் கூட்டத்திலே ஆசிரியர்களின் குறைகளை உடனடியாக தீர்த்த உதவி தொடக்கக்கல்வி அலுவலர்!!!

ஆசிரியர்களின் குறைதீர்ப்புக் கூட்டம் தமிழகத்தின் பெரும்பான்மையாக பெயரளவிலே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மதுரையிலும் அவ்வாறே நடைபெற்றுக் கொண்டிருந்தது.ஆனால்தற்போது தேர்வுநிலை ஊதியத்திற்கான விண்ணப்பம் அளிப்பதற்காக 50க்கும் மேற்பட்ட இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்கள் ,மதுரை கிழக்கு உதவிதொடக்கக்கல்வி அலுவலகம் சென்றிருந்தனர்.

web stats

web stats