WhatsApp-ல் புதிதாக சில எழுத்துருக்களைப் பயன்படுத்தும்படி அதன் நிரல்மூலத்தை மாற்றி அமைத்ததுள்ளனர்.
இது நம்மில் பலருக்கும் தெரியாது. இந்த வசதியைப் பற்றிய விவரம், வாட்சாப் செயலியின் திரையில் எங்குமே தெரியாது.
அதனை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை இப்போது நான் இங்கு விளக்கப் போகிறேன்.
தடிப்பெழுத்து : சொற்களுக்கு முன்னும் பின்னும் விண்மீன் குறியைச் (*) சேர்த்தால், அந்தச் சொற்கள் தடிப்பானத் தன்மையைப் பெறும்.
எ.கா:
balabarathi *பாலபாரதி* என்று எழுதினால்
பாலபாரதி என்று தடிப்பாகத் தோன்றும்.
• சாய்வெழுத்து : சொற்களுக்குமுன்னும் பின்னும் அடிக்கோட்டைச் (_) சேர்த்தால் அந்தச் சொல் சாய்வாகத் தோன்றும்.
எ.கா. பாலபாரதி என்று எழுதினால்
பாலபாரதி என்று சாய்வாகத் தோன்றும்.
• நடுக்கோடு : சொற்களுக்கு முன்னும் பின்னும் ‘தில்டே’ எனும் குறியைச் (~) சேர்த்தால் அந்தச் சொல் நீக்கப்படவேண்டிய சொல்லைப்போல் நடுக்கோட்டுடன் தோன்றும். எ.கா. பாலபாரதி
பாலா என்று எழுதினால், ‘பாலபாரதி’ எனும் சொல் நீக்கப்பட்டு 'பாலா' என்று எழுதப்பட்டதைப்போலத் தோன்றும் : பாலபாரதி பாலா
வார்த்தைகளுக்கு மட்டும் அல்ல, வாக்கியங்களுக்கு முன் பின்னும் இதனை சேர்ப்பதால் எழுத்துருக்களில் மாற்றம் கொண்டுவர முடியும்.
இதனைக் கொண்டு நாம் குறிப்பிட்டு காட்டவேண்டிய வார்த்தைகளை அப்படியே காட்டலாம்.
No comments:
Post a Comment