rp

Blogging Tips 2017

மேலாண்மை பயிற்சியால் தேர்வு பாதிக்கும்: ஆசிரியர்கள் புகார்


பள்ளி மேலாண்மை குழு பயிற்சியால் அரை ஆண்டு தேர்வு பாதிக்கப்படும்' என ஆசிரியர்கள் புகார் தெரிவித்துள்ளனர்

அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், அனைத்து துவக்க, நடுநிலைப்பள்ளிகளில் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களுக்கு மூன்று நாள் பயிற்சி அளிக்கப்படுகிறது.

885 ஆசிரியப்பயிற்றுநர்களை பள்ளிக்கு மாறுதல் செய்ய வேண்டும் என்ற தீர்ப்பின் நகல்.

ஆசிரியப்பயிற்றுநர்களை பள்ளிக்கு அனுப்பக்கோரி, அனைத்துவளமையபட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்க மாநில பொதுச்செயலாளர் மா.இராஜ்குமார் அவர்கள் தொடுத்த வழக்கில் 885 ஆசிரியப்பயிற்றுநர்களை பள்ளிக்கு மாறுதல் செய்ய வேண்டும் என்ற தீர்ப்பின் நகல்.
தீர்ப்புநகல் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்
நன்றி-அ.சுதாகர் மாவட்டத்தலைவர் அனைத்துவளமையபட்டதாரி ஆசிரியர்கள் முன்னேற்ற சங்கம், திண்டுக்கல்

சிரமம் இன்றி ஆதார் அட்டை பெறுவது எப்படி? - மக்கள்தொகை கணக்கெடுப்பு இணை இயக்குநர் விளக்கம்

சென்னையில் சிரமம் இன்றி ஆதார் அட்டையைப் பெறுவது எப்படி என்பது குறித்து தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரக இணை இயக்குநர் எம்.ஆர்.வி.கிருஷ்ணாராவ் விளக்கியுள்ளார்.
ஆதார் அட்டைக்காக பதிவு செய் வதில் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வரு கின்றன. இது குறித்த தெளிவான விவரங்களை மாநகராட்சி தெரி விக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் சிரமம் இன்றி ஆதார் அட்டை பெறு வது எப்படி என்பது குறித்து தமிழ் நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரக இணை இயக்குநர் எம்.ஆர்.வி.கிருஷ்ணாராவ் “தி இந்து”விடம் கூறியதாவது:
சென்னையில் எத்தனை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன?

கோவை, சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலை ப்பள்ளி தலைமை ஆசிரியை சஸ்பெண்ட் !

கோவை, சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் நேற்று முன்தினம், ஜாதி பெயரை சொல்லி தலைமை ஆசிரியை திட்டியதாகவும், தரக்குறைவாக நடத்துவதாகவும் கூறி சில மாணவர்கள், வகுப்புகளில் மேஜை, நாற்காலி, ஜன்னல் கண்ணாடியை உடைத்து சேதப்படுத்தினர்.

ஆசிரியர்கள் ஊதிய உயர்வு: தமிழக அரசு கைவிரிப்பு

செலவினத்தை காரணம் காட்டி இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க முடியாது என தமிழக அரசு கைவிரித்து விட்டது. இதனால் ஆசிரியர் சங்கங்கள் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளன.
தமிழக தொடக்க கல்வித்துறையில் இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.5,200, தர ஊதியம் ரூ.2,800, தனி ஊதியம் ரூ.750 வழங்கப்படுகிறது. மத்திய அரசின் கேந்திரிய வித்யாலயா பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.9,300, தர ஊதியம் ரூ.4,200 வழங்கப்படுகிறது.
மத்திய அரசு ஆசிரியர்களின் ஊதியத்தை போல் தமிழகத்திலும் வழங்க வேண்டுமென அனைத்

TNPSC DEPARTMNETAL EXAM 2015 TIME TABLE

CLICK HERE -TIME TABLE

Income Tax Utility - FY- 2014-15

CLICK HERE-INCOME TAX

thanks to Kalvi sms

மாணவர்கள் நலன் கருதி இந்த கல்வி ஆண்டில் இனிமேல் ஆசிரியர் இடமாற்றம் கிடையாது : பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு

அரையாண்டு தேர்வு வந்துவிட்டதால் மாணவர்கள் நலன் கருதிபள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் மாணவர்கள் நலன் கருதி இந்த கல்வி ஆண்டு வரை இனிமேல் ஆசிரியர்கள் மாறுதல் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

FLASH NEWS : குரூப் 2A தேர்வு முடிவுகள்

Result இங்கு கிளிக் செய்யவும்

FLASH NEWS: குரூப் 4 Hallticket வெளியிடப்பட்டது

குரூப் 4 Hallticket download செய்ய கிளிக் செய்யுங்கள்

ஊதியப் பிரிவு - தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர்களுக்கு, மத்திய அரசுக்கு இணையாக ஊதியம் வழங்க கோரி பெற நீதிமன்ற வழிக்காட்டுதல்கள் பரிசீலித்து மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க இயலாதென தமிழக அரசு மனுவை நிராகரித்துள்ளது.

Govt Letter No. 60473/CMPC/2014-1 Dt: December 10, 2014 Download Icon(2MB) W.P No. 33399/2013 filed by Thiru C.Kipson, General Secretary, Tamil Nadu All Teachers Association - Honble High Court of Madras, Judgement Order dated 12-9-2014 in W.P.No.33399/2013 - Consideration of the petitioner representation dated 16-09-2013 - regarding Click Here...

கல்வித்துறையில் கோர்ட் அவமதிப்பு வழக்குகள்:விரைந்து முடிக்க அரசு செயலர் சபீதா உத்தரவு

''கல்வித் துறையிலுள்ள கோர்ட் அவமதிப்பு வழக்குகளையும், நிலுவையில் உள்ள வழக்குகளையும் விரைந்து முடிக்க வேண்டும்,'' என அனைத்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி செயலாளர் சபீதா உத்தரவிட்டார்.கல்வித் துறையில் உள்ள கோர்ட் வழக்குகளின் தன்மை உட்பட பல்வேறு செயல்பாடுகள் குறித்து அனைத்து மாவட்ட முதன்மை

தற்காலிக கம்ப்யூட்டர் ஆசிரியர்நியமனம்: கல்வித்துறை உத்தரவு

அரசு மேல்நிலை பள்ளிகளில் காலியாக உள்ள கம்ப்யூட்டர் ஆசிரியர் பணியிடங்களை தற்காலிகமாக தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்குமாறு கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.அரசு மேல்நிலை பள்ளிகளில் பணிபுரிந்த கம்ப்யூட்டர் ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யும் பொருட்டு, ஆசிரியர்

கட்டாய கல்வியால் 89,954 பேர் சேர்ப்பு:மெட்ரிக் பள்ளி இயக்குனர் தகவல்

தமிழகத்தில், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், கடந்த ஆண்டு சேர்க்கப்பட்ட மாணவர்களுக்கான கல்விக் கட்டணம், 25.13 கோடி ரூபாயை அரசு தர வேண்டும் என்றும், இந்த ஆண்டு, 89,954 பேர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், கட்டாய கல்வி உரிமைச் சட்ட மாநில தலைமை

சி.பி.எஸ்.இ., பள்ளிகளில் தமிழ் கட்டாயம்


சி.பி.எஸ்.இ., பள்ளி வகுப்புகளில், தமிழுக்கு முக்கியத்துவம் தர, தமிழக பள்ளி கல்வித் துறை உத்தரவிட்டு உள்ளது.தமிழகத்தில் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், தமிழ் மொழிக்கு முக்கியத்துவம் தருவதில்லை. எனவே, 'வரும் கல்வியாண்டு முதல், சி.பி.எஸ்.இ., முதல் வகுப்பில் இருந்து, தமிழ் பாடத்தை,

பள்ளிக்கு தொடர் விடுமுறை எடுக்கும் மாணவர்கள்! பொதுத்தேர்வுக்கு அனுமதிப்பதில் சிக்கல்


பள்ளிக்கு வராமல் நீண்ட நாட்கள் விடுமுறை எடுத்துள்ள, 10 மற்றும் பிளஸ்2 வகுப்பு மாணவர்களை பொதுத்தேர்வு எழுத அனுமதிப்பதில் சிக்கல் எழுந்துள்ளதாக முதன்மை கல்வி அதிகாரி தெரிவித்துள்ளார்.

நீண்ட நாட்கள் பள்ளிக்கு வராமல் விடுமுறை எடுக்கும் ஒழுங்கீன மாணவர்களால், கோவை மாவட்ட பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் மிகுந்த

ஏழை மாணவர்களுக்கு ஒரு ரூபாய்க்கு டியூசன்: ஆசிரியை கல்விச் சேவை!


பழங்காலத்தில் குறைந்த செலவில் நிறைய படிக்க முடிந்தது. ஆனால் இன்று கல்வி வியாபாரமாக மாறி ஏழை எளிய மக்களை பயமுறுத்தும் வகையில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. தற் போது பெற்றோர் தங்கள் குழந்தைகளை நல்ல பள்ளி என்று தேடி சேர்ப்பது டன், தனி வகுப்புகளுக்கு (டியூசன்)

மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் திட்டம் இல்லை: மத்திய மந்திரி அறிவிப்பு



மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தும் திட்டம் இல்லை என்று பாராளுமன்றத்தில் மத்திய மந்திரி தெரிவித்தார். மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது, தற்போது 60 ஆக உள்ளது. அதை 62 ஆக

வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யாதவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு : மார்ச் 7-ந்தேதிக்குள் புதுப்பிக்க வேண்டும்

தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: முதல்-அமைச்சர் ஆணையின்படி, ஊரக தொழில்கள் மற்றும் தொழிலாளர் நலத்துறை அமைச்சரால் 11.7.2014 அன்று நடைபெற்ற தொழிலாளர் மற்றும்

தேர்தல் பணியில் ஆசிரியைகள்!


ஆசிரியர் பணியே அறப்பணி, அதற்கு உன்னை அர்ப்பணி என்றும், எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்றும், காலம் காலமாக தமிழ்நாட்டில் கூறப்படுகிறது. அந்த வகையில், ஆசிரியர் பணி என்பது, ஒரு தெய்வீகமான பணியாகத்தான் எல்லோராலும் போற்றப்படுகிறது. ஒரு மனிதனை அனைத்து குணநலன்களோடு, பொருளாதார ரீதியாக

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை பாதியில் நிறுத்தும் தனியார் பள்ளிகள்


மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்க மறுப்பதுடன், பாதியில் நிறுத்தும் அவலமும் நீடிக்கிறது. இதனால், சென்னை மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் அவர்களின் எண்ணிக்கை 700 ஆக

மாணவர்கள் நலன் கருதி இந்த கல்வி ஆண்டில் இனிமேல் ஆசிரியர் இடமாற்றம் கிடையாது.


பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு அரையாண்டு தேர்வு வந்துவிட்டதால் மாணவர்கள் நலன் கருதி பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மாணவர்கள் நலன் கருதி இந்த கல்வி ஆண்டு வரை இனிமேல் ஆசிரியர்கள்

மாநகராட்சி பள்ளியில் மாணவர்கள் ரகளை ஜாதி பெயரை கூறி தலைமை ஆசிரியை திட்டினாரா?


கோவையில், ஜாதி பெயரை கூறி ஆசிரியை திட்டினார் என்று கருதி மாநகராட்சி பள்ளியில் மாணவர்கள் ரகளையில் ஈடுபட்டு நாற்காலி, மேஜைகளை அடித்து உதைத்தனர். கோவை சித்தாபுதூர் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி பள்ளியில் 626 மாணவ, மாணவிகளும், சுமார் 30

அரசு உதவி பெறும் கலைமற்றும் அறிவியல் கல்லூரி முதல்வருடன் நடுநிலை பள்ளி மாணவர்கள் கலந்துரையாடல்

"என்னை போன்று அரசு பள்ளிகளில் 8வது படிக்கும் மாணவர்கள் பிற்காலத்தில் உங்களை போன்று கல்லுரி முதல்வர் ஆவது எப்படி?" மாணவியின் ருசிகர கேள்வியும் அதற்கு கல்லூரி முதல்வரின் பதிலும்.

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் (அரசு உதவி பெறும் பள்ளி) நடுநிலைப் பள்ளி விழாவில் தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லுரி (அரசு உதவி பெறும் கல்லுரி) முதல்வரிடம், "என்னை போன்று அரசு பள்ளிகளில் 8வது படிக்கும் மாணவர்கள் பிற்காலத்தில் உங்களை போன்று

சிவில் சர்வீசஸ் தேர்வு எழுத வயது வரம்பு குறைக்கப்படாது: மத்திய அரசு

சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுவதற்கான வயது வரம்பை குறைப்பதற்கான திட்டம் எதுவும் தற்போது இல்லை’ என, மத்திய அரசு தெரிவித்துள்ளது.
லோக்சபாவில் நேற்று, மத்திய பணியாளர் நலத் துறை இணை அமைச்சர், ஜிதேந்திர சிங் கூறியதாவது:
ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., போன்ற பணிகளுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுவோரின் வயது வரம்பை குறைக்க, அரசு திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இப்போதைக்கு அதுபோன்ற திட்டம் எதுவும் அரசின் பரிசீலனையில் இல்லை. அதேபோல், தேர்வு எழுதும் தவணையும் குறைக்கப்படாது. மேலும், ஆங்கில திறனறி தேர்வுக்கான மதிப்பெண்களும் தேர்ச்சியில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்க பள்ளிகளில் ‘பொங்கல்’ விடுமுறை நாளாக அறிவிப்பு

அமெரிக்காவின் நியூஜெர்சி மாகாணத்தில் உள்ள 2 ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு பொங்கல், விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டிரென்டன் நகரில் நடைபெற்ற நியூஜெர்சி மாகாண கல்வி வாரிய மாதாந்திர கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

மின் கட்டண உயர்வு எவ்வளவு? தமிழகத்தில் மின் கட்டணம் 15% அதிகரிப்பு

தமிழகத்தில் 15 சதவீத மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதையடுத்து, மாற்றியமைக்கப்பட்ட மின்கட்டணங்கள் வருமாறு
வீடுகளுக்கு 1 முதல் 100 யூனிட் வரை, யூனிட் ஒன்றுக்கு 40 காசு உயர்வு
101 முதல் 200 யூனிட் வரை, யூனிட் ஒன்றுக்கு 45 காசு உயர்வு

201 முதல் 500 யூனிட் வரை
முதல் 200 யூனிட்டுகளுக்கு, யூனிட் ஒன்றுக்கு 50 காசு உயர்வு
201 முதல் 500 யூனிட்டுகள் வரை, யூனிட் ஒன்றுக்கு 60 காசு உயர்வு
500 யூனிட்டுகளுக்கு மேல், யூனிட் ஒன்றுக்கு 85 காசு உயர்வு

தொழிற்சாலை யூனிட் ஒன்றுக்கு 85 காசு உயர்வு
வணிக நிறுவனங்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 1 ரூபாய் உயர்வு
தனியார் கல்வி நிறுவனங்களுக்கு யூனிட் ஒன்றுக்கு 85 காசு உயர்வு
அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்களுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ. 1.85 உயர்வு

ஏ.இ.இ.ஓ.,க்கள் 63 பேருக்கு தொடக்க கல்வித்துறை 'மெமோ'

ஆசிரியர் சேமநலநிதி கணக்கு தணிக்கை விவரங்களை சமர்பிக்காததால், தமிழகம் முழுவதும், 63 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, 'மெமோ' வழங்க, தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.தொடக்க மற்றும் நகராட்சி பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின், வருங்கால சேம நலநிதி கணக்கு மற்றும் ஐந்தாவது ஊதியக்குழு முடிவு இருப்பு தொகை தணிக்கை ஆகியவை, ஆண்டு தோறும், தமிழக தகவல் தொகுப்பு விவர மைய கமிஷனரிடம் சமர்ப்பிக்க வேண்டும்

மூன்றாம் பருவத்துக்கு டிசம்பர் 22 முதல் புத்தகங்கள் விநியோகம்

முப்பருவ முறையின் கீழ், மூன்றாம் பருவத்துக்கான புத்தகங்கள் தனியார் பள்ளிகளுக்கு வருகிற 22-ஆம் தேதி விநியோகிக்கப்பட உள்ளதாக தமிழ்நாட்டுப் பாடநூல்-கல்வியியல் பணிகள் நிறுவன வட்டாரங்கள் தெரிவித்தன.
முப்பருவ முறையின் கீழ் ஜூன் முதல் செப்டம்பர் வரை முதல் பருவமாகவும், அக்டோபர் முதல் டிசம்பர் வரை இரண்டாவது பருவமாகவும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை மூன்றாவது பருவமாகவும் பிரிக்கப்பட்டுள்ளது.

ஏ.இ.இ.ஓ.,க்கள் 63 பேருக்கு தொடக்க கல்வித்துறை 'மெமோ'

ஆசிரியர் சேமநலநிதி கணக்கு தணிக்கை விவரங்களை சமர்பிக்காததால், தமிழகம் முழுவதும், 63 உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு, 'மெமோ' வழங்க, தொடக்கக் கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.தொடக்க மற்றும் நகராட்சி பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களின்,

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில்(CPS) இணைய அவகாசம் தமிழக அரசு உத்தரவு

தமிழ்நாடு நிதித்துறை முதன்மைச் செயலாளர் க.சண்முகம் வெளியிட்டுள்ள

அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது: அரசுத் துறைகளிலும், ஆசிரியர் பணியிலும் கடந்த 2003-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதிக்குப் பிறகு சேர்ந்தவர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் சேரும்போது முகப்பு (இண்டக்ஸ்) எண் வழங்கப்படும்.

சமையல் எரிவாயு மானியம் பெறுவது எப்படி?

மத்திய அரசு அறிவித்தபடி சமையல் எரிவாயுவுக்கான (எல்பிஜி) நேரடி மானிய திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டது. முதற்கட்டமாக ஆந்திரம், கேரளம், அசாம், பஞ்சாப், புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் 54 மாவட்டங்களில் நடைமுறைக்கு வந்துள்ளது.
தமிழகத்தில் 2015 ஜனவரி 01 முதல் இந்தத் திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை எரிவாயு விநியோகஸ்தர்கள் வழங்கி வருகின்றனர். ஆன்லைன் மூலமாகவும் இந்தத் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.

பாரதி பிறந்த நாள்-பாரதி வாழ்க்கை வரலாறு!

1882 : டிசம்பர் 11 திங்கள் இரவு 9.30 மணி சித்திரபானு, கார்த்திகை 27ஆம் தேதி மூல நட்சத்திரத்தில் பாரதி ஜனனம். பிறப்பிடம் எட்டயபுரம் ஜமீன். தந்தை; சின்னச்சாமி அய்யர்; தாய்; லட்சுமி அம்மாள். இளமைப் பெயர் சுப்பிரமணியன். செல்லப் பெயர்; சுப்பையா.
1887 : தாய் மரணம். சுப்பையாவுக்கு வயது 5.
1889 : தந்தை மறுமணம்; சுப்பையாவுக்கு உபநயனம். இளைஞன் அருட்கவி பொழிகிறான்.
1893 : 11 வயதுச் சுப்பையாவை எட்டயபுரம் சமஸ்தானப் புலவர்கள் பெருஞ் சபையில் சோதித்து, வியந்து, பாரதி (கலைமகள்) என்ற பட்டம் அளிக்கின்றனர்.
1894 முதல் 1897 : திருநெல்வேலி ஹிந்து காலேஜில் ஐந்தாம் படிவம் வரை படிப்பு. தமிழ்ப் பண்டிதருடன் சொற்போர்கள்

உதவி தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான நிர்வாக பயிற்சி

CLICK HERE-ADMINISTRATIVE TRAINING FOR ALL AEEO'S ILL HELD AT CHENNAI SIEMAT MEETING HALL

DGE INSTRUCTION REGARDING HSC NOMINAL ROLL UPLOAD FROM 10.12.2014 TO 15.12.2014

CLICK HERE -DIR INSTRUCTIONS

Pension - Contributory Pension Scheme - Allotment of Contributory Pension Scheme Numbers to existing employees/newly joined employees - Further instructions - Regarding.

CLICK HERE- Letter No.63734/FS/T/PGC/2013_051214 Dt: December 05, 2014-CPS-employees/newly joined employees - Further instructions - Regarding.

15 நாட்கள் முன்பே துவங்கும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு: மாணவர்கள் கடும் அதிருப்தி

எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத்தேர்வு, 15 நாட்களுக்கு முன்னதாக துவங்குவதால், போதிய வகுப்பு கிடைக்காததாலும் மற்றும் திருப்புத் தேர்வு எழுத முடியாததாலும், மாணவர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.


அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகத்தின் மூலம் நடத்தப்படும் ப்ளஸ் 2, எஸ்.எஸ்.எல்.ஸி., பொதுத் தேர்வுகள், ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்படும். அதில், மார்ச் மாதம், ப்ளஸ் 2 தேர்வும், ஏப்ரல் மாதம் எஸ்.எஸ்.எஸ்.ஸி., தேர்வும், தனித்தனியாக நடத்துவதால், கூடுதல் செலவு ஏற்படுவதாக கூறி, நடப்பு கல்வியாண்டில், இரண்டு தேர்வையும், ஒரே நேரத்தில் நடத்த முடிவு செய்து, அதற்கேற்றார்போல், தேர்வு அட்டவணை வெளியாகியுள்ளது.

பள்ளிக்கல்வி - அரசு மேல்நிலைப்பள்ளிகளில் காலியாக உள்ள கணினி பயிற்றுநர் பணியிடங்களை ரூ.4000 தொகுப்பூதிய அடிப்படையில் நியமித்துக்கொள்ள அனுமதி வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது.

GO.268 SCHOOL EDUCATION DEPT DATED.05.12.2014 - COMPUTER INSTRUCTORS APPOINTED UNDER TEMPORARY BASIS ON RS.4000 SALARY REG ORDER CLICK HERE...

பள்ளிக்கல்வி - 2014-15ஆம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளை உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்துதல், மேல்நிலைப் பள்ளிகளிலிருந்து மகளிர் உயர்நிலைப் பள்ளிகளாக தனியாக பிரித்தல் விவர பட்டியல் வெளியீடு

GO.199 SCHOOL EDUCATION DEPT DATED.02.12.2014 - 2014-15 MIDDLE SCHOOLS TO HIGH SCHOOLS UPGRADED LIST CLICK HERE...

புதியதாக பதவியேற்ற பள்ளிக்கல்வி இயக்குனருக்கு தமிழ் நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் மனம் திறந்த வாழ்த்துக்கள் தெரிவித்தார்.

புதியதாக பள்ளிக்கல்வி இயக்குனராக பதவி ஏற்ற மதிப்புமிகு.கண்ணப்பன் அவர்களுக்கு தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திருமிகு.செ.முத்துசாமி, EX.MLC., அவர்கள் வாழ்வில் மேன்மேலும் உயர மனம் திறந்த வாழ்த்துக்களை அலைபேசி வழியாக தெரிவித்தார்.
தகவல் : சாந்தகுமார், தலைமை நிலைய செயலாளர்

அக இ - உயர்தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு "அறிவியல் சோதனைகள் மற்றும் செயல்திட்டம் - மேம்படுத்துதல்" என்ற தலைப்பில் வட்டார மைய அளவில் 06.01.2014 முதல் 08.01.2014 வரை நடைபெறவுள்ளது.

SPD - 3DAYS BRC LEVEL TRAINING "SCIENCE EXPERIMENT & PROJECT - IMPROVEMENT" FOR UPPER PRIMARY TEACHERS FROM 06.01.2015 TO 08.01.2015 REG PROC CLICK HERE...

தமிழ்நாடு பள்ளிக்கல்விப் பணி - இயக்குநர் மற்றும் அதனையொத்த பணியிட மாறுதல் - ஆணை வெளியிடப்படுகிறது

GO.279 SCHOOL EDUCATION DATED.08.12.2014 - DIRECTORS TRANSFER REG ORDER CLICK HERE...

புதியதாக 128 தொடக்கப்பள்ளிகள்-256 ஆசிரியர்பணியிடங்கள் உருவாக்கம்


கனிணி ஆசிரியர் சான்றிதழ் சரிபார்ப்பு டிச-24ல் தொடக்கம்


பொதுத்தேர்வு மாணவர்களுக்கு தாயார் பெயர் பதிவு கட்டாயம்: அரசு தேர்வுத்துறை புதுஉத்தரவு

பிளஸ் 2, 10ம்வகுப்பு பொதுத்தேர்வு எழுத உள்ள மாணவர்களின் விபரங்களை பதியும் போது தந்தை பெயருடன், தாய் பெயரையும் கட்டாயம் சேர்க்க வேண்டும்' என, அரசு தேர்வுகள்துறை இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5, 10ம்வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19ல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 32 மாவட்டங்களில் உள்ள பள்ளி வாரியாக எழுத உள்ளோர் விபரங்களை தேர்வுத்துறையின் தீதீதீ.tணஞீஞ்ஞு.டிண என்ற இணையதளத்தில் ஆன்-லைனில் பதிவேற்றம் செய்யப்பட உள்ளது. இதற்காக பள்ளிகளுக்கு அதற்கான சாப்ட்வேர் வழங்கப்பட்டுள்ளது. தந்தை பெயருடன், தாய் பெயரையும் சேர்க்க வேண்டும்

ஏ.டி.எம். கடிவாளம்: எப்படி தப்புவது?

நீங்கள் அடிக்கடி ஏ.டி.எம். செல்லக்கூடியவராக இருந்தால், இனி அந்தப் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும். ஏ.டி.எம். எனப்படும் தானியங்கிப் பணப் பட்டுவாடா மையங்களில் பணம் எடுப்பதற்கு கடிவாளம் போடத் தொடங்கிவிட்டது ரிசர்வ் வங்கி.
நீங்கள் உங்களின் கணக்கு உள்ள வங்கி ஏ.டி.எம்.மில் மாதம் 5 முறையும், மற்ற வங்கி ஏ.டி.எம்.களில் மாதம் 3 முறையும் மட்டுமே கட்டணமின்றிப் பணம் எடுக்க முடியும்.

அதற்குப் பிந்தைய பரிவர்த்தனை ஒன்றுக்கு ரூ. 20 செலுத்த வேண்டும். ஆரம்பகட்டமாக சென்னை போன்ற பெருநகரங்களில் நடைமுறைக்கு வந்துள்ள இந்த வழக்கம், பின்னர் மற்ற நகரங்களுக்கும் வரும் என்று கூறப்படுகிறது. சரி, இந்த ஏ.டி.எம். கட்டுப்பாட்டில் இருந்து தப்பிப்பது எப்படி?
இதோ சில யோசனைகள்..

web stats

web stats