rp

Blogging Tips 2017

TET இலவச ஒரு நாள் பயிலரங்கம்

TET இலவச ஒரு நாள் பயிலரங்கம்!


·         ஏப்ரல் 1, சென்னை தி. நகர் ஹிந்தி பிரசார சபாவில், காலை 9.30 மணி முதல் 1 மணி வரை மாணவர் பயிற்சியாளர் நடிகர் தாமு, மற்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு பிரிவு வல்லுனர்கள் கலந்துகொள்ளும் இலவச ஒரு நாள் பயிற்சி முகாமில் பி.எட்., பட்டதாரி ஆசிரியர்கள், டி.டி.எடி. பிரிவு ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதவிருக்கும் ஆசிரியர்கள் கலந்துகொள்ளலாம்.

·         மொத்தம் 1000 பேர் மட்டுமே அனுமதி!!


·         உங்கள் அனுமதிச் சீட்டைப் பெற:

              www.vetripadikal.com/event-ticket/


நிகழ்ச்சி நிரல்:

·         காலை 9.30 மணி 11- TET தேர்வு கடந்து வந்த பாதை, தேர்வுகுறித்த கேள்வி - பதில் விவாதங்களில் வல்லுனர்கள் பங்கேற்பார்கள்.


·         காலை 11 - 11.30 - மாதிரி தேர்வு



·         காலை 11.30 - 1 மணி  நடிகர் மற்றும் மாணவர் பயிற்சியாளர் திரு. தாமு அவர்களின் புதுமையான தன்னம்பிக்கை பயிற்சி உரை.

EMIS-Mobile android application-இல் புதிய வெர்ஷன் வந்துள்ளது. பிளே ஸ்டோரில் அப்டேட் செய்துகொள்வும்

EMIS-Mobile android application-இல் புதிய வெர்ஷன் வந்துள்ளது. பிளே ஸ்டோரில் அப்டேட் செய்துகொள்ளவும்.
நன்றி
எஸ்.தாமரைச்செல்வன்
Emis team
9444414417

23/03/2018 அன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்த வ

திருவண்ணாமலை வட்டார வளமையத்திற்க்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் நாளை நடைபெறும் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டத்தில்

1.பள்ளி மேம்பாட்டுத்திட்டம் தயார் செய்தல்

2.சமூக தணிக்கை

ஆகிய இரு நிகழ்வுகளையும் ஒரே நாளில் நடத்தி அந்நிகழ்விற்க்கான செலவினமாக ரூபாய். 540/- மட்டும் செலவு செய்திட தெரிவிக்கப்படுகிறது.

பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கமான TNSchoolEducation பக்கத்தில் அனைத்து ஆசிரியர்களும்  பங்கேற்க  பள்ளிக்கல்வித்துறை செயலர் அறிவுரை.

வணக்கம் ,
பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கமான TNSchoolEducation பக்கத்தில் அனைத்து ஆசிரியர்களும்  பங்கேற்க  பள்ளிக்கல்வித்துறை செயலர் அறிவுரை.

பள்ளிக்கல்வித்துறை செயலர் அவர்களின் தலைமையில் 17.03.2017 அன்று நடைபெற்ற கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறையின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கம் "TNSchoolEducation" எனவும், பேஸ்புக் பக்கத்தை பயன்படுத்தும் அனைத்து ஆசிரியர்களையும் இதில் பங்கேற்கவும்  அறிவுரை கூறியுள்ளார்.பேஸ்புக் பக்கம் இல்லாதவர்கள் புதிய பேஸ்புக் பக்கத்தை உருவாக்கி அதில் இணையவும் அறிவுரை கூறியுள்ளார்.

பள்ளிக்கல்வி துறையின் முக்கிய நிகழ்வுகள்,அறிவிப்புகள் மற்றும் மாணவர்களுக்கான பாட சம்மந்தமான வீடியோக்கள்,புகைப்படங்கள்,இந்த பக்கத்தில் பகிரலாம்.ஆசிரியர்களின் புதிய முயற்சிகள், பள்ளி மற்றும் மாணவர்களின் ,புகைப்படங்கள் , விடியோக்கள் பதிவேற்றம் செய்யலாம்.தொழில்நுட்ப உதவிகளுக்கு  தொடர்பு எண்கள் மகேஷ்-9444322538, ரவிக்குமார்-9788268911, தாமரைச்செல்வன்-9444414417

https://www.facebook.com/ tnschools

நன்றி 
எஸ்.தாமரைச்செல்வன், 
மாநில தகவல் மேலாண்மை முறைமை (EMIS),
பள்ளிக்கல்வித்துறை ,
சென்னை,
9444414417,

பெருக்கல் எளிய முறை வீடியோ


https://youtu.be/EPrDQJbKFpM

ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதினை 62 ஆக அதிகரிக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசு

நாடாளுமன்றத்தில் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதினை மாற்றுவதற்கு அரசு ஒப்புதல் அளித்து உள்ளதா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.  

  இதற்கு மத்தியபணியாளர்களுக்கான இணை மந்திரி ஜிதேந்திரா சிங் இன்று அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில்,மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயது 60ல் இருந்து 62 ஆக அதிகரிப்பதற்கான திட்டம்எ துவும் இல்லை என கூறினார்.  நாட்டில் 48.41 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பணியில் உள்ளனர்.

கேரள மாநில பழம்-பலாப்பழம் என அறிவிப்பு

கரும்பலகையில் எழுதும் அளவு குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் செயல்முறைகள்

பள்ளிகளில் உள்ள கரும்பலகையில் ஆசிரியர்கள் எவ்வாறு எழுத வேண்டும்- கல்வித்துறை அறிவுரை

Image may contain: text

இல்லை என்ற விவரம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

தமிழகத்தில் சுமார் ஆயிரம் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்களே
இல்லை என்ற விவரம் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது. இதை சுட்டிக் காட்டி, இதுதான் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கையா என்று பாமக இளைஞரணித் தலைவரான அன்புமணி எம்.பி. கேள்வி எழுப்பியிருக்கிறார். மேலும் தமிழக கல்வித் துறை இரு மாநிலங்களாக பிரிந்து கிடக்கின்றன என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

தமிழ்நாட்டில் 918 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிக்கூடங்களில் தலைமை ஆசிரியர்கள் இல்லை என்று கருப்பையா என்பவர் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின்படி பெற்ற புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்திருப்பதாக தி இந்து ஆங்கில நாளிதழ் செய்தி வெளியிட்டிருக்கிறது.

ஆண்டு விழாக்கள் மாலை 6 மணிக்குள் முடிக்க இயக்குநர் உத்திரவு

மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவியர் உதவித்தொகை ஆண்டு வருமானம் 25000 என்பது 72000 என கணக்கிட்டு விண்ணப்பிக்க வேண்டும்


ஒரு ஆசிரியர் தமது பணிக்காலத்தில் எத்தனை முறை பதவி உயர்வு பணித்துறப்பு (தற்காலிக உரிமை விடல்)மேற்கொள்ள முடியும்? RTI தகவல்

SPD PROCEEDINGS- SALEM DT- BLOCK LEVEL TEAM VISIT-REG

CLICK HERE

DSE PROCEEDINGS-தமிழக அரசு வழங்கும் மேல்நிலைக் கல்வி முடித்தவுடன் மாணவர்களின் எதிர்கால மேற்படிப்பு என்னென்ன? இயக்குநரின் செயல்முறைகள்


பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய குழு அமைக்க வேண்டும் : தமிழக அரசுக்கு உத்தரவு!!!

சென்னை  : தமிழகத்தில் பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்ய குழு அமைக்க
வேண்டும் என்று மாற்றம் இந்தியா அமைப்பு தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, பள்ளிகளை ஆய்வு செய்ய மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்றும் 2005ல் தேசிய கட்டட விதிகளின் படி பள்ளியில் கட்டிடங்கள் இருக்கிறதா என ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது*

ஒவ்வொரு பள்ளியிலும், அடுத்த வகுப்புக்கு மாறும், பழைய மாணவர்களின் புத்தகங்களை சேகரித்து வைத்து, அடுத்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

புதிய கல்வி ஆண்டு துவங்கும் போது, பள்ளிகளில் சேரும் புதிய மாணவர்களுக்கு, புதிதாக புத்தகம் வாங்க உத்தரவிடப்படுகிறது. ஆண்டு தோறும் புதிய புத்தகங்கள் அச்சிடுவதால், காகிதத்துக்கு அதிக தேவை ஏற்படுவதாகவும், அதனால், மரங்கள் அதிக அளவில் வெட்டப்படுவதாகவும், டில்லி பசுமை தீர்ப்பாய முதன்மை அமர்வில், ஸ்ரீகாந்த் கடே என்பவர், வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதையடுத்து, மாநில அரசுகள் பிறப்பித்த உத்தரவின்படி, அனைத்து பள்ளிகளிலும், பழைய புத்தகங்களை சேகரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, தொடக்கக்கல்வி இயக்குனர் கருப்பசாமி, அனைத்து தொடக்க பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள, சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: மரங்களின் அழிப்பை குறைக்கும் வகையில், புத்தகங்கள் அச்சிடுவதையும் குறைக்க வேண்டியுள்ளது.

எனவே, ஒவ்வொரு பள்ளியிலும், அடுத்த வகுப்புக்கு மாறும், பழைய மாணவர்களின் புத்தகங்களை சேகரித்து வைத்து, அடுத்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்க வேண்டும். இதற்காக புத்தக வங்கியை துவங்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

19.03.2018 அன்று நடைபெறவிருந்த நடுநிலைப்பள்ளி /தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்/பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தற்காலிகமாக தள்ளிவைப்பு

காலிப்பணியிடங்கள் சரியாக தயாரிக்கப்படவில்லை  என மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு புகார் வந்த அடிப்படையில் காலிப்பணியிடங்கள் சரி செய்த பின்னர் கலந்தாய்வு நடைபெறவேண்டும் என்ற கருத்திற்கிணங்க 19.03.2018 அன்று நடைபெறவிருந்த நடுநிலைப்பள்ளி /தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர்/பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு தற்காலிகமாக தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

web stats

web stats