rp

Blogging Tips 2017

LKG & UKG தொடர்பான இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்


2019 - இடைக்கால மத்திய பட்ஜெட்*வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 2.50 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்வு*

*2019 - இடைக்கால மத்திய பட்ஜெட்*வருமான வரி விலக்கு உச்ச வரம்பு 2.50 லட்சத்திலிருந்து ரூ.5 லட்சமாக உயர்வு*

*வருமான வரி விலக்கு உச்சவரம்பு உயர்வால் 3 கோடி பேருக்கு பலன்*

*நிலையான கழிவு 40,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாயாக உயர்வு*

*ரூ.2 கோடி வரையிலான வருவாய்க்கு நீண்டகால மூலதன ஆதாய வரியிலிருந்து விலக்கு- பியூஷ் கோயல்*

*டெபாசிட்டில் கிடைக்கும் ரூ.50 ஆயிரம் வரையிலான வருவாய்க்கு இனி வரி இல்லை*

*இனிமேல் வீட்டுக்கடனுக்கான வட்டிசலுகை 2வீடுகளாக உயர்த்தப்படும்*

*இதுவரை ஒரு வீட்டுக்கடனுக்கான வட்டிக்கு மட்டுமே வரி விலக்கு தரப்பட்டது*

*வீட்டு வாடகைக்கான வரி விலக்கு 1,80000 ரூபாயிலிருந்து 2,40000 ரூபாயாக அதிகரிப்பு*

posted from Bloggeroid

18/04/2014ல் மரணமடைந்த ஆசிரியருக்குபிடிக்கப்பட்ட CPS தொகை முடிவுசெய்து ஒப்படைக்க ஆணை- ஓய்வூதியம் ஏதுமில்லை

மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு 2 மதிப்பெண்கள் அளிக்கும் முறை - அடுத்த கல்வியாண்டில் அறிமுகம்

மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் 2 மதிப்பெண்கள் அளிக்கும் முறை வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்த உள்ளதாகத் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நாடு முழுவதும் பொறியியல் படிப்புப் படித்த 80 இலட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளதாகவும், தமிழகத்தில் ஒரு இலட்சத்து 68ஆயிரம் பேர் பொறியியல் படிப்பு முடித்துவிட்டு வேலையில்லாமல் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், மரம் வளர்க்கும் மாணவருக்கு ஒரு பாடத்துக்கு 2 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 12 மதிப்பெண்கள் வழங்கும் முறையை அடுத்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்

பள்ளி நாட்காட்டி பிப்ரவரி 2019

3 BEO சஸ்பெண்ட் - CEO அதிரடி உத்தரவு

புதுக்கோட்டை  மாவட்டத்தில் உயர் அதிகாரிகளின் உத்தரவினை செயல்படுத்தாத மற்றும் கீழ்ப்படியாத கந்தர்வக்கோட்டை வட்டார கல்வி அதிகாரிகள் அலெக்சாண்டர், வெங்கடாசலம்  மற்றும் அரிமளம் வட்டாரக்கல்வி அதிகாரி ஞானக்கனி ஆகிய 3 பேரையும் , மாவட்ட  முதன்மை கல்வி அதிகாரி வனஜா சஸ்பெண்ட் செய்து நேற்று உத்தரவிட்டார்.  இந்த சம்பவம் வட்டார கல்வி அதிகாரிகள் மற்றும் அலுவர்கள் மத்தியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு கட்டாயத் தேர்ச்சி: சட்டத் திருத்தம் மத்திய அரசிதழில் வெளியீடு.*

ஐந்து மற்றும் எட்டாம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி நடைமுறைக்கான சட்டத் திருத்தம் மத்திய அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. இலவச மற்றும் கட்டாயக் கல்வித் திட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கும் தேர்வு நடத்த மத்திய அரசு முடிவு செய்து அதற்கான சட்டத் திருத்தத்தை அண்மையில் கொண்டுவந்தது.

இந்த திருத்தச் சட்டம் இப்போது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது, 1 முதல் 8-ம் வகுப்பு வரையில் அனைத்து மாணவர்களையும் கட்டாயத் தேர்ச்சி செய்யும் முறை அமலில் உள்ளது. இதனால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகவும், 5 ஆம் வகுப்பு மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்றும், மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாகக் கூறிவந்தது. இது குறித்த அறிவிப்பையும் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்திருந்தார்.

இருப்பினும், இந்த நடைமுறையால் கிராமப்புற மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என்றும், பெரும்பாலான குழந்தைகள் கல்வியைப் பாதியிலேயே நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்றும், தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்கள் கருத்துத் தெரிவித்திருந்தன. அதே நேரத்தில் இலவச மற்றும் கட்டாயக் கல்வியை நடைமுறையில் கொண்டுள்ள தமிழகம், இந்த புதிய மாற்றத்தை மேற்கொள்ளக்கூடாது எனவும், 8-ஆம் வகுப்பு வரையில் இலவசக் கல்வி அளிக்க வேண்டும் எனவும் கூறிவந்தது. இருப்பினும், மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், 8-ஆம் வகுப்பு வரை கட்டாயமாக தேர்ச்சி பெறச் செய்வதினால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுகிறது.

அதனால், 8 ஆம் வகுப்பிற்கு பொதுத் தேர்வு கட்டாயம் வைக்க வேண்டும் என தொடர்ந்து கூறிவந்தார். இந்நிலையில், கடந்த 11-ஆம் தேதியிட்ட மத்திய அரசின் அரசிதழில் இத்தகவல் வெளியாகியுள்ளது. அதில் 5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கு ஆண்டின் இறுதியில் கட்டாயத் தேர்வு நடத்தப்பட வேண்டும். இதில் தோல்வியடையும் மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில், தேர்வு முடிவு வெளியான இரண்டு மாதங்களில் உடனடித் தேர்வு நடத்தவேண்டும்.

அதிலும் மாணவர் தோல்வியடைந்தால் அவர்களை அடுத்த வகுப்புக்கு அனுமதிக்காமல், 5 அல்லது 8-ஆம் வகுப்பிலேயே மீண்டும் தொடர அனுமதிக்கவேண்டும். அதே நேரம், ஒரு மாணவர் தொடக்கக் கல்வியை முடிக்கும் வரை, எந்தக் காரணம் கொண்டும் அவரை பள்ளியைவிட்டு வெளியில் அனுப்பக் கூடாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறையில் தமிழில் நடைபெறும் தேர்வுகளில் வடமாநிலத்தவர் தேர்வாவது எப்படி? - நீதிபதி கேள்வி

தமிழில் நடைபெறும் தேர்வுகளில் வடமாநிலத்தவர் தேர்வாவது எப்படி  என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. 2014 ரயில்வே தேர்வின்போது சான்றளிப்பவர் கையெழுத்து இல்லை எனக் கூறி, தமிழர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டதாகவும், சான்றளிப்பவரின் கையெழுத்து இல்லாத நிலையிலும் வட மாநிலத்தவர் விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதாகவும் மனுதாரர் தெரிவித்திருந்தார். புகைப்படம் ஒட்டியும், ஒட்டாமலும் 2 விதமான தேர்வு அனுமதிச் சீட்டுகள் வழங்கி மோசடி நடைபெற்றதாகவும், பல கோடி ரூபாய் அதிகாரிகளுக்கு கைமாறி வட மாநிலத்தவர்கள் வேலைவாய்ப்பை பெற்றதாகவும் மனுவில் கூறப்பட்டிருந்தது. விசாரணையின் போது தபால் துறையிலும் இதேபோன்ற முறைகேடு புகார் எழுந்ததாக கூறிய நீதிபதி, தமிழில் நடைபெறும் தேர்வுகளில் வடமாநிலத்தவர் தேர்வாவது எப்படி? என கேள்வி எழுப்பினார். இதனை சாதாரணமான ஊழலாக எடுத்துக் கொள்ள முடியாது என்ற அவர், இதேமுறையில் வடமாநிலங்களில் தமிழர்கள் தேர்வாகியிருந்தால் தேசியப் பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் என்றார். இந்த வழக்கில் பதில் அளிக்க சி.பி.ஐ. தரப்பில் அவகாசம் கோரப்பட்டதையடுத்து விசாரணையை அவர் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தார்.
********************

அரசு ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு பிப்ரவரி 4-ல் ஊதியம்

ஜாக்டோ-ஜியோ போராட்டம் எதிரொலியாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் பிப்.4-ஆம் தேதி வழங்கப்படவுள்ளதாக அரசுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள்மீது நடவடிக்கை எடுக்கும் பொருட்டு, கருவூலத் துறையிலிருந்து வங்கிகளுக்கு அனுப்பப்பட்ட சம்பளப் பட்டியல் திரும்பப் பெறப்பட்டது. அதைத் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு அவர்கள் வேலைக்கு வராத நாள்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டு, திருத்தப்பட்ட சம்பளப் பட்டியல் வங்கிகளுக்கு அனுப்பும் பணி தற்போது தொடங்கியுள்ளது.

இதனால், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், ஈடுபடாதவர்கள் என அரசு ஊழியர்கள்- ஆசிரியர்கள் அனைவருக்கும் ஜனவரி மாத ஊதியத்தை 31-ஆம் தேதி அளிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. திருத்தப்பட்ட சம்பளப் பட்டியல் அனுப்பப்பட்டு அனைத்து ஊழியர்களுக்கும் ஜனவரி மாதத்துக்கான சம்பளம் பிப்.4-ஆம் தேதி வழங்கப்படும்.

பள்ளி கல்வி துறை அதிகாரிகள் ,ராமேசுவர முருகன் , அறிவொளி, லதா, சங்கீதா, சித்ரா, அமலன் ஆகியோர் மீது வழக்கு!!

பள்ளி கல்வி துறை அதிகாரிகள் ,ராமேசுவர முருகன் , அறிவொளி, லதா, சங்கீதா, சித்ரா, அமலன் ஆகியோர் மீது வழக்கு!!

*பள்ளி கல்வி துறை இயக்குனர் ராமேசுவர முருகன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை  நடத்திய சோதனையில் தகவல்.

*உலகமெல்லாம் தமிழ் திட்டத்துக்கு அரசு ஒதுக்கிய நிதியை சுருட்டியதாக குற்றச்சாட்டு.
*கனவு ஆசிரியர், தேன் சிட்டு பத்திரிகை நடத்தியதில் பல லட்சம் மோசடி என வழக்கு* 

*'EDUSAT' செயற்கைகோள் வாங்கியதிலும் முறைகேடு செய்ததாகவும் வழக்குப்பதிவு .

G.O 151- DATE- 31.10.2018- PUBLIC SERVICES -ISSUING OF ABATEMENT ORDERS/ ORDERS OF DROPPING OF ACTION CONSEQUENT ON THE DEATH OF THE GOVERNMENT SERVANTS/ TRIBUNAL FOR DISCIPLINARY PROCEEDINGS CRIMINAL CASE IS PENDING -SIMPLIFYING THE PROCEDURE -ORDERS -ISSUED








G.O 173 -DATE-19.12.2018- PUBLIC SERVANTS -ALLEGATION OF CORRUPTION -PETITIONS RECEIVED-GUILDLINESS ISSUED


G.O 173 -DATE-19.12.2018- PUBLIC SERVANTS -ALLEGATION OF CORRUPTION -PETITIONS RECEIVED-GUILDLINESS ISSUED

  


  



 

EMIS update செய்யப்பட்டு புதிய வடிவில் பல தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளது.



EMIS Website update செய்யப்பட்டு புதிய வடிவில் பல தகவல்கள் சேர்க்கப்பட்டுள்ளது.

EMIS WEBSITE CLIK HERE

EMIS NEW FEATURES CLICK HERE



ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட 17B நடவடிக்கைகள் அனைத்தும் ரத்து.. தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவிப்பு..

 



தென்காசி கல்வி அலுவலருக்கு 10 ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு.* *தென்காசி கல்வி அலுவலரைப் போன்ற அதிகாரிகள் தான் கல்வித்தரம் குறைய காரணம் - நீதிபதி.*

தனக்கு தலைமை ஆசிரியராக 2.6.2018-ல் பதவி உயர்வு வழங்கியதை அங்கீகரிக்க மறுத்து தென்காசி மாவட்ட கல்வி அலுவலர் 19.9.2018-ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து தனது பதவி உயர்வை அங்கீகரித்து பணப்பலன்கள் வழங்க உத்தரவிட வேண்டும் என வசந்தி ஹாசி ராணி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இன்று இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியன்,
" பணியில் சேராமல் ஓய்வு பெற்றவருக்கு பணி விடுவிப்பு கடிதம் கேட்கக்கூடாது என ஏற்கெனவே ஒரு வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் தென்காசி கல்வி அலுவலரும் ஒரு எதிர்மனுதாரராக உள்ளார். அதன் பிறகும் அந்த வழக்கின் நகல் கேட்டு மனுதாரரை அலைகழித்துள்ளார்.

இந்தியாவில் கல்வியில் தமிழகம் 2-ம் இடத்தில் இருந்தது. தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்துக்கு அடுத்து 18-வது இடத்தில் உள்ளது. தென்காசி கல்வி அலுவலரைப் போன்ற அதிகாரிகள் தான் கல்வித்தரம் குறைய காரணமாக உள்ளனர்.

இதுபோன்ற செயல்களை தடுத்து நிறுத்தாமல் பார்த்துக்கொண்டு சும்மாயிருக்க முடியாது. இதனால் தென்காசி மாவட்ட கல்வி அலுவலருக்கு 10 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இப்பணத்தை அவர் பத்து நாளில் தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு வழங்க வேண்டும். இதை கல்வி அலுவலரின் பணிப்பதிவேட்டில் குறிப்பிட வேண்டும். மனுதாரருக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்கியதை 2 வாரத்தில் அங்கீகரித்து பணப்பலன்களை வழங்க வேண்டும்.
என உத்தரவிட்டார்.

posted from Bloggeroid

அரசு ஊழியர்கள் அதிக ஊதியம் வாங்குகிறார்களா? - The Hindu தலையங்கம்

/ நன்றி தி இந்து நாளிதழ்/
அனைத்து ஊடகமும் இப்படி நடுநிலையாக மாறுங்கள்.

*அரசு ஊழியர்கள் அதிக ஊதியம் வாங்குகிறார்களா? - The Hindu தலையங்கம*

அரசுப் பணியாளர்களில் உயர் அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உரிமைகளும், ஊதியமும் அடிநிலை ஊழியர்களுக்குக் கிடைப்பதில்லை. எனவே, கீழடுக்குகளில் உள்ளோர் போராடும்போது, அதிகார அமைப்புகள் அனைத்தும் அவர்களுக்கு எதிராகத் தங்களின் பிரச்சாரங்களை முடுக்கிவிடுகின்றன. அதன் மூலம் அந்த வாய்ப்புகூடக் கிடைக்காத இதர பகுதி மக்களை அவர்களுக்கு எதிராகத் திருப்பிவிடுவதில் வெற்றிபெற்றுவிடுகின்றன.

அரசு என்பது அமைச்சர்களும் உயர்மட்ட அதிகாரிகளும் மட்டுமல்ல; அரசின் எந்தவொரு திட்டத்தையும் அடிமட்டத்தில் செயலாக்குபவர்கள் ஊழியர்களே. கொள்கை வகுத்தலும், திட்டமிடுதலும், நிதி ஒதுக்குதலும் மட்டுமே அரசின் உயர்மட்டத்தில் நடைபெறுகின்றன. அமல்படுத்தும் முழுச் சுமையும் ஊழியர்கள் தலையிலேயே சுமத்தப்படுகிறது. உதாரணமாக, சுகாதாரத் துறையில் பல்வேறு அடுக்குகள் இருந்தபோதும், இறுதியாக ஒரு பகுதியைச் சுகாதாரமாக வைத்திருப்பது அங்குள்ள குப்பைகளையும், சாக்கடைகளையும் அகற்றும் பணியில் ஈடுபடும் தொழிலாளர்களே. அந்தப் பணியைச் செய்யவில்லை என்றால் திட்டமிடல், நிதி ஒதுக்குதல், கண்காணித்தல் என்கிற எந்த அடுக்கினாலும் பலன் இல்லை.

ஊழியர்களின் எண்ணிக்கை

இந்தியாவில் ஏராளமான அரசு ஊழியர்கள் தேவையின்றி இருப்பது போன்ற பிரச்சாரங்கள் தொடர்ச்சியாகச் செய்யப்பட்டுவருகின்றன. ஒரு நாட்டின் மக்கள்தொகைக்கும் ஒவ்வொரு துறையிலும் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கைக்கும் உள்ள விகிதமே அந்த நாடு மேம்பட்ட சேவையை வழங்குகிறதா என்பதற்கான அளவுகோல். 2011-ம் ஆண்டுக் கணக்கின்படி இந்தியாவில் ஒரு லட்சம் பேரில் 1,622.8 அரசு ஊழியர்கள் பணிசெய்கிறார்கள். இந்த எண்ணிக்கை தற்போது குறைந்திருக்கக் கூடும். 2011-ம் ஆண்டின் கணக்கெடுப்புப்படி அமெரிக்காவில் ஒரு லட்சம் பேரில் 7,681 பணியாளர்கள் சேவை செய்கின்றனர். மத்திய அரசுப் பணியாளர்களைப் பொறுத்தமட்டில் 2011-ம் ஆண்டு 24.63 லட்சம் பேர். மாநில அரசு ஊழியர்கள் 72.18 லட்சம் பேர். இந்த எண்ணிக்கையில் ரயில்வேயில் பணிபுரியும் 14 லட்சம் பேரும் அடங்குவர். அதாவது, ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு 125 மத்திய அரசு ஊழியர்கள் மட்டுமே இருப்பார்கள்.
சமூக மாற்றத்தில் அரசின் சேவையை மக்களிடம் கொண்டுசேர்க்கும் திறன் மிக முக்கியமானது. கல்வி, மருத்துவம், சுகாதாரம் ஆகியவற்றில் முன்னேற்றம் ஏற்பட்ட நாடுகள் அல்லது மாநிலங்கள் அனைத்தையும் எடுத்துக்கொண்டால், அவற்றின் ஊழியர் விகிதம் அதிகமாகவே உள்ளது. தமிழ்நாட்டில் மொத்த மக்கள்தொகை ஏறத்தாழ 8 கோடி. தமிழகத்தில் உள்ள மாநில அரசு ஊழியர்களின் எண்ணிக்கை சுமார் 12 லட்சம். அதாவது, ஒரு லட்சம் பேருக்கு வெறும் 1,500 ஊழியர்கள் மட்டும்தான்.

நேரடியாக ஊழியர்களின் எண்ணிக்கை அதிகமானால் மாநிலங்களின் வளர்ச்சி, மனிதவளக் குறியீடு இவை உயர்ந்துவிடும் என்பதல்ல இதன் பொருள். அதேசமயம், இதற்கு ஒரு முக்கியத்துவம் உண்டு என்பதை மறுக்க முடியாது. அரசின் அறிக்கைகள் பல நேரங்களில் மக்களைத் தூண்டும் வகையிலும், படித்தவர்களைக்கூடத் திசைதிருப்பும் வகையிலும் அமைந்துவிடுகின்றன. குறிப்பாக, போராட்டங்கள் நடைபெறும்போது கொடுக்கப்படும் புள்ளிவிவரங்கள், போராடுபவர்களுக்கு எதிரான பகையையும், வன்மத்தையும் உருவாக்கும் நோக்கத்தோடு முன்வைக்கப்படுகின்றன.

பொய்ப் பிரச்சாரம்

தமிழ்நாடு அரசின் வரவு - செலவுத் திட்டத்தில் 71% ஊழியர்களின் சம்பளத்துக்கே கொடுக்கப்படுகிறது என்கிற தோற்றத்தை உருவாக்குகிறது அரசு. உண்மையில், இந்தத் தொகை 50%-க்கும் குறைவாகும். 7-வது ஊதியக் குழு குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000-மாவது இருக்க வேண்டும் என்று ஆலோசனை கூறியுள்ளது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு 2017-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 10-ம் தேதியன்று அரசு ஊழியர்களின் சம்பளம் மாற்றியமைக்கப்பட்டிருக்கிறது. அப்போது முதல்வர் பழனிசாமி புதிய சம்பள விகிதத்தின்படி குறைந்தபட்ச ஊதியம் ரூ. 6,000-த்திலிருந்து ரூ. 15,700 ஆகவும், அதிகபட்ச ஊதியம் ரூ.77,000-லிருந்து ரூ.2,25,000ஆகவும் உயரும் என்றும் அறிவித்தார்.

அதாவது, உயரதிகாரி ஒருவருக்கு வழங்கப்பட்ட ஒரு மாத ஊதிய உயர்வு, கீழ்நிலையில் உள்ள 15.4 பேரின் உயர்வுக்குச் சமமாகும். அதேபோல கீழ்நிலையில் உள்ள ஒருவரின் மாதச் சம்பளத்தைப் போல, மேல்நிலையில் உள்ள ஒருவருக்குக் கிடைத்த மாத உயர்வு மட்டும் 9.42 மடங்காகும். இந்த ஒரு உதாரணம் மட்டும் ஒட்டுமொத்த நிலைமையை உணர்த்துவதாக இருக்கும். ஆரம்ப நிலையில் கீழ்மட்டத்தில் இருக்கும் ஒருவரின் சம்பளமும், உயர்மட்டத்தில் இருக்கும் ஒருவரின் சம்பளமும் 1:14.33 என்ற விகிதத்தில் உள்ளது. இந்த மிகப்பெரிய ஏற்றத்தாழ்வுதான் ஒட்டுமொத்தமான சம்பள விகிதம் மிக அதிகம் என்ற தோற்றத்தை ஏற்படுத்துகிறது.

இதைப் பயன்படுத்தியே அதிகாரப் பணி நிலையில் உச்சத்தில் இருப்பவர்கள், கீழ்மட்டத்தில் இருப்பவரது நியாயமான கோரிக்கைகளை மறுக்கிறார்கள். அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒருமுறையே சம்பள உயர்வு வழங்கப்படுகிறது. அந்தச் சம்பள உயர்வில் குறிப்பிட்ட பகுதியை மறுப்பது ஆறாவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்தும்போது ஜெயலலிதா தொடங்கியது. இதைத்தான் வழக்கம் என்று சொல்லி அமைச்சர் ஜெயக்குமார் நியாயப்படுத்துகிறார். ஊதிய உயர்வு அளிப்பது என்று முடிவுசெய்துவிட்ட பிறகு, ஒரு தேதியைக் குறிப்பிட்டு அதிலிருந்து ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது என்று பொதுவாக அறிவித்துவிட்டு, பல மாதங்கள் அந்த உயர்வுக்கான பணத்தைச் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்குக் கொடுக்காமல் இருப்பது ஏமாற்றமாகும். ஆரம்பத்தில் தனியார் முதலாளிகள் செய்த இத்தகைய நடவடிக்கையை வேடிக்கை பார்த்த அரசுகள் இப்போது தாங்களும் அதே காரியத்தைச் செய்வது கொடுமையானது.

மறுக்கப்படும் நிலுவைகள்

கடந்த 6-வது ஊதியக் குழு பரிந்துரையின்போது 12 மாதங்கள் அரசு ஊழியர்களின் நிலுவைத் தொகையைத் தர மறுத்த அரசாங்கம், அதே நடைமுறையை இந்த முறை 21 மாதங்களுக்கு நீட்டித்து நியாயப்படுத்தவும் செய்கிறது. ஆனால், ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் நீதித் துறை அதிகாரிகள் இந்த 33 மாத நிலுவைத் தொகையையும் பெற்றுவிட்டார்கள். தனியார் நிறுவனங்கள் போதுமான சம்பளம் தரவில்லை என்பதைத் தட்டிக்கேட்டுச் சரிசெய்ய வேண்டிய அரசாங்கம், அவர்கள் குறைவாகக் கொடுக்கிறார்கள், நாங்கள் அதிகமாகத் தருகிறோம் என்ற வாதத்தை முன்வைக்கிறது. போராடும் ஊழியர்களுக்கு எதிராகப் பொதுமக்களையும், இதர வேலை தேடும் பிரிவினரையும் தூண்டிவிடுகிறார்கள்.

இப்போது மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்பது உண்மையே. ஆனால், இதற்கு முழுக் காரணம் அரசு மட்டும்தான். உரிய காலத்தில் சம்பந்தப்பட்டவர்களோடு அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்க வேண்டும். மாநில அரசின் இன்றைய நிதிநிலைக்குக் காரணம் மத்திய அரசு வரிவருவாயைப் பெரும் பகுதி அள்ளிக்கொண்டு போனதுதான். அதைக் கேட்பதற்கும், பெறுவதற்கும் செய்யாமல், அரசு ஊழியர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மாநில அரசாங்கம் மேற்கொண்டிருக்கிறது.

posted from Bloggeroid

#Breaking : பள்ளி கல்வி துறை இயக்குனர்கள் அறிவொளி, லதா, ராமேசுவர முருகன், கருப்புசாமி மீது லஞ்ச புகார் எதிரொலி - சிக்கிய ஆதாரங்களை வைத்து 4 இயக்குனர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கேட்டது லஞ்ச ஒழிப்பு துறை

#Breaking : பள்ளி கல்வி துறை இயக்குனர்கள் அறிவொளி, லதா, ராமேசுவர முருகன், கருப்புசாமி மீது லஞ்ச புகார் எதிரொலி - சிக்கிய ஆதாரங்களை வைத்து 4 இயக்குனர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி கேட்டது லஞ்ச ஒழிப்பு துறை

* முதற்கட்டமாக, அறிவொளி, லதா மீது வழக்கு தொடர அரசு அனுமதி

* ராமேஸ்வர முருகன் பெற்ற லஞ்சப்பணத்தில் நகைக்கடை ஒன்றை நடத்தி வருவது விசாரணையில் அம்பலம். நகைக்கடையிலும் விரைவில் சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு

DSE PROCEEDINGS-ஆய்வக உதவியாளராக நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு பணிவரன்முறை செய்தல் தொடர்பாக தெளிவுரை வழங்குதல் - பள்ளிக் கல்வி இணை இயக்குநர் செயல்முறைகள்

ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ்; இன்று முதல் பணிக்கு செல்ல முடிவு; போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் திரும்பப்பெற வலியுறுத்தல்

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்டு வந்த வேலை நிறுத்தப் போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது.

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் சார்பில் சென்னை திருவல்லிக்கேணியில் இன்று மாலை நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்தில், வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெறுவதாக முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

இதனை ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் செய்தியாளர்கள் முன்னிலையில் அறிவித்தார். இது குறித்து ஜாக்டோ -ஜியோ நிர்வாகி வின்சென்ட் பால்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்தை ஏன் திரும்பப் பெறுகிறோம் என்றால், விரைவில் பொதுத் தேர்வெழுதும் மாணவ, மாணவிகளுக்கு செய்முறைத் தேர்வுகள் தொடங்க உள்ளன. எனவே, பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டும், அவர்களது பெற்றோரின் மன உணர்வைக் கருத்தில் கொண்டும் எங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பது என்று முடிவு செய்யப்பட்டது.

முதல்வர் மற்றும் நீதிமன்றம் வலியுறுத்தலை ஏற்றும், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டும் இந்த போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது. எங்களது கோரிக்கைகள் குறித்து அரசுத் தரப்பில் எங்களை அழைத்துப் பேசவில்லை. கோரிக்கைகளுக்காக போராடிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும், காவல்துறையினர் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும், முதல்வர் எங்களை அழைத்துப் பேசி கோரிக்கைகள் குறித்துக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும் அவர் பேசுகையில், ஏன் எங்களை அழைத்துப் பேச முதல்வர் மறுக்கிறார்? எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த என்ன முட்டுக்கட்டை இருக்கிறது என்று நீதிபதிகள் கூட கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அழைத்துப் பேசாமல் அவர்கள் மீது கடும் நடவடிக்கையை எடுத்து வருகிறது அரசு. ஆனால் பொதுமக்கள் நலன் கருதி, முதல்வர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் வலியுறுத்தலை ஏற்று ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் இன்று போராட்டத்தைத் திரும்ப பெறுகிறோம். நாளை முதல் அரசு ஊழியர்கள் பணிக்குத் திரும்புவார்கள் என்று அறிவித்தார்.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டது

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான சிறப்பு பயிற்றுநர்கள் போராட்டம் தற்காலிக வாபஸ் பெறப்பட்டது. பணி நியமனம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 8 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். அரசுத்தரப்பில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது. 

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்டச்செயளாலர் கவனத்திற்கு

*தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாவட்டச்செயளாலர் கவனத்திற்கு*


*நேற்று ஜாக்டோ-ஜியோவின் உயர்மட்டக்குழு கூடி வேலைநிறுத்தப்போராட்டம் தற்காலிகமாக திரும்பப் பெறப்பட்டுள்ளது*.


*இந்த போராட்டத்தில் கைது செய்யப்பட்டு* *சிறையில் இருப்போர்,ஜாமீனில்* *விடுவிக்கப்பட்டோர்,*தற்காலிக பணிநீக்கத்தில் இருப்போர்,* *ஜாமீனில் விடுவிக்கப்பட்டு பணியில் சேராதோர்*
*மேலும் ஒழுங்கு நடவடிக்கைக்கு உட்பட்டோரின் சம்பந்தமான விபரங்கள் பணிநீக்க ஆணை முதலியவற்றை அந்தந்த மாவட்டச் செயலாளர்கள்* *தங்கள் மாவட்டத்திற்குட்பட்ட (எதுவும் விடுபடாமல்)அனைத்து விபரங்களையும் சேகரித்து உடனே தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் அவர்களின் நாமக்கல் முகவ்ரிக்கு விரைவு தபாலில் உடன் அனுப்பி வைக்கவும்...*

*இன்று மாலைக்குள்*
*ஜாக்டோ ஜியோ போராட்ட வழக்கு தொடர்பான பணிநீக்கம்* *தொடர்பான ஆணை நகல் மற்றம் நடவடிக்கை தொடர்பான நகல்களை தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநிலபொதுசெயலர்,மற்றும் மாநிலபொருளர் அவர்களின் Whatsapp எண்ணிற்கு உடன் அனுப்பவும்..*

*இவண்*
*செ.முத்துசாமிEx.MLC.*
*மாநிலத்தலைவர்*
*தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி*
*ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழுஒருங்கிணைப்பாளர்்*

முதல் ஆண்டு அரியர் இருந்தால் இறுதி ஆண்டு படிக்க முடியாது: அண்ணா பல்கலை

2017ஆம் ஆண்டு புதிய தேர்வு முறைப்படி முதல் ஆண்டு முதல் செமஸ்டரில் ஒரு பாடத்தில் தேர்ச்சியடையாமல் அரியர் வைத்திருந்தால் அதனை அடுத்து வரும் பருவத்தில் எழுத முடியாது. ஓராண்டு காத்திருந்து மூன்றாவது பருவத்தில்தான் எழுத முடியும் என்ற நிலை இருந்தது. இந்த புதிய கட்டுப்பாடால், கல்வியாண்டிற்குள் அனைத்து பாடத் தேர்வுகளிலும் தேர்ச்ச பெற முடியாது எனக்கூறி அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் இதற்கென ஒரு குழு அமைக்கப்பட்டு, 2017 தேர்வு நடைமுறைகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. இதன்படி அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் தோல்வியடைந்த தேர்வை, அடுத்தடுத்த செமஸ்டர்களில் எழுதலாம். கட்டுப்பாடு தளர்த்தபட்டதால், இனி மாணவர்கள் ஒரு செமஸ்டரில் எத்தனை அரியர் வேண்டுமானலும் எழுத முடியும். இந்த திருத்தத்திற்கு அண்ணா பல்கலைக்கழக கூட்டமைப்பு ஒப்புதல் வழங்கியதும் உடனடியாக அமலுக்கு வருகிறது.

web stats

web stats