rp

Blogging Tips 2017

Flash News: கனமழை விடுமுறை

கனமழை காரணமாக 21.11.2014 அன்று நெல்லை மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் மாணவர்களுக்கு 1000 கோடி கல்வி உதவித்தொகை

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 2014-15ம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு ^1000 கோடி மதிப்பிலான கல்வி உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் கூறினார். ஆதிதிராவிடர் நலத்துறை, பழங்குடியினர் நலத்துறை மற்றும் தாட்கோ தொடர்பான, 2014-15ம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளின் முன்னேற்றம் குறித்த ஆலோசனை கூட்டம் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தலைமையில் நேற்று சென்னையில் நடைபெற்றது.

2001ம் ஆண்டு குரூப்-1 தேர்வு விவகாரம்; டி.என்.பி.எஸ்.சி.,க்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு


’கடந்த 2001ல், சர்சைக்குரிய டி.என்.பி.எஸ்.சி., குரூப் - 1 தேர்வெழுதிய, 800 பேரின் விடைத்தாள்களையும் சீலிடப்பட்ட உறையில் வைத்து தாக்கல் செய்ய வேண்டும்’ என, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு (டி.என்.பி.எஸ்.சி.,) சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.


கடந்த 2001ல், டி.என்.பி.எஸ்.சி., சார்பில் குரூப் - 1 தேர்வு நடத்தப்பட்டது. இவர்களில் 83 பேர், துணை கலெக்டர், வணிக வரித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்த தேர்வில் முறைகேடு நடந்ததாகக் கூறி, இவர்களின் பணி நியமனத்தை ரத்து செய்யும்படி, நடராஜன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

தமிழக அரசின் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் இணைந்த அரசு ஊழியர்களுக்கு முறைப்படி ஓய்வூதியம் வழங்காமல் கிடப்பில் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு

தமிழக அரசின் புதிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்த அரசு ஊழியர்களுக்கு முறைப்படி ஓய்வூதியம் வழங்காமல் கிடப்பில் வைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 2003-ம் ஆண்டு மார்ச் மாதத்துக்கு பிறகு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்களுக்கு ஏற்கெனவே இருந்த ஓய்வூதிய திட்டம் மாற்றப்பட்டு 01-04-2003 முதல் புதிய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வந்தது. இந்த புதிய ஓய்வூதிய திட்டத்தின்படி அரசு ஊழியர்களின் ஊதியத்திலிருந்து மாதம்தோறும் 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். இதற்கு நிகரான தொகையை அரசும் தனது பங்களிப்பாக வழங்கும்.

பள்ளிக்கல்வி - பகுதி நேர ஆசிரியர்களுக்கு 01.04.2014 முதல் மாத தொகுப்பூதியத்தில் ரூ.2000/- உயர்த்தி தமிழக அரசு உத்தரவு

GO.186 SCHOOL EDUCATION DEPT DATED.18.11.2014 - PART TIME INSTRUCTORS SALARY RAISED FROM RS.5000/- TO RS.7000/- FROM 01.04.2014 REG ORDER CLICK HERE...

மனவளர்ச்சி குறைபாடுள்ள குழந்தையா? மத்திய அரசு ஊழியர்களுக்கு சலுகை

'மதி இறுக்கம் என அழைக்கப்படும், மனவளர்ச்சி குறைபாடுடைய குழந்தைகள் இருக்கும் அரசு ஊழியர்களுக்கு, வழக்கமான இடமாற்றத்திலிருந்து விலக்கு அளிக்க வேண்டும். அவர்களை தானாக முன்வந்து ஓய்வு பெறும்படி கட்டாயப்படுத்தக் கூடாது' என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்திய சி.பி.எஸ்.இ. சான்றிதழ்களை பிரிட்டன் பல்கலைகள் இனி ஏற்கும்!

இந்திய கல்வி அமைப்பான சி.பி.எஸ்.இ. வழங்கும் பிளஸ் 2 சான்றிதழை ஏற்றுக்கொள்ள, பிரிட்டன் பல்கலைக்கழகங்கள் முடிவுசெய்துள்ளன. இதன்மூலம், சி.பி.எஸ்.இ. படித்த மாணவர்கள், பிரிட்டன் பல்கலைகளில், இளநிலைப் படிப்புகளில் எளிதாக சேரும் நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும், பிரிட்டன் சென்று படிக்க விரும்பும் இந்திய மாணவர்கள் எதிர்கொள்ளும் விசா பிரச்சினையிலும், உதவ தயாராக இருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மத்திய மனிதவள அமைச்சக வட்டாரங்கள் கூறியுள்ளதாவது: தற்போதுவரை, இந்தியாவில் வழங்கப்படும் CBSE சான்றிதழ்கள், பல பிரிட்டன் கல்வி நிறுவனங்களால் ஏற்கப்படுவதில்லை. எனவே, இப்பிரச்சினைக் குறித்து, ஏற்கனவே, பிரிட்டனிடம் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. தற்போது அதற்கான ஒரு சாதகமான முடிவு பெறப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து பிரிட்டன் பல்கலைகளும், CBSE சான்றிதழ்களை அங்கீகரித்து ஏற்றுக்கொள்ளும்.

கல்வித்துறை சீர்திருத்தங்கள் மூலம் இந்தியாவின் தலைவிதியை மாற்றியமைக்க வேண்டும்: ஸ்மிருதி இரானி

உயர் கல்வித்துறையில் உள்ள ஒழுங்குமுறை அமைப்புகளை மறு ஆய்வு செய்து வருவதாக மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி தெரிவித்தார். இது தொடர்பாக அவர் புது தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசியதாவது:

உயர் கல்வித் துறையில் உள்ள பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி), அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) போன்ற ஒழுங்குமுறை அமைப்புகளை மறு ஆய்வு செய்து வருகிறோம்.

பிளஸ்–1 மாணவர்கள் 35 சதவீத மதிப்பெண் எடுத்தால் தான் தேர்ச்சி பள்ளி கல்வித்துறை செயலாளர் த.சபீதா பேட்டி

பிளஸ்–1 மாணவர்கள் ஒவ்வொரு பாடத்திலும் தலா 35 சதவீத மதிப்பெண் பெற்றால்தான் தேர்ச்சி. அதற்கு அதிகமாகவோ, குறைவாகவோ தேர்ச்சி என்று அறிவிக்கும் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிளஸ்–1 தேர்ச்சி மதிப்பெண்ணில் வேறுபாடு

IGNOU - Hall Ticket December-2014, Term End Examination

IGNOU TERM END HALL TICKET CLICK HERE

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு பெருந்துறை நகரில் மிகச்சிறப்பாக நடைபெற்றது

அரசு பள்ளியில் 10 மதிப்பெண் வாங்கினால் பிளஸ் 1 'பாஸ்': உதவிபெறும் பள்ளியில் 60 வாங்க வேண்டுமாம்

பிளஸ் 1 தேர்ச்சி மதிப்பெண் நிர்ணயத்தில், பள்ளிகளுக்கிடையே, அதிக முரண்பாடு இருப்பது, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம், அம்பலமாகி உள்ளது. அரசு பள்ளிகளில், பாடத்திற்கு, 10 மதிப்பெண் வீதம் வாங்கினால், பிளஸ் 1 பாஸ் எனும் நிலையில், அரசு உதவிபெறும் பள்ளிகளில், 40 முதல் 60 மதிப்பெண் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிறரின் உயிரை காப்பாற்றிய 7 சிறுவர், சிறுமிகளுக்கு வீர விருது!!!

ஆபத்தான சூழ்நிலையில், புத்திசாலித்தனமாக நடந்து, தன் உயிரை பணயம் வைத்து, மற்றவரின் உயிரை காப்பாற்றிய, ஏழு சிறுவர்கள், இரண்டு சிறுமியருக்கு, மாநில அரசு வழங்கும், வீர விருது வழங்கப்படுகிறது.

குழந்தைகள் மற்றும் மகளிர் நலத்துறை அமைச்சர், உமாஸ்ரீ கூறியதாவது: நாயிடமிருந்து தப்பிக்கும் போது, கால் இடறி, 25 அடி ஆழ் கிணற்றில் விழுந்த, 5 வயது சிறுவன் சைஜனை காப்பாற்றிய, ரிப்பன்பேட்டை கவடூரு கிராமத்தின் தீக் ஷித்; பள்ளிச்சுற்றுலாவின் போது, குளத்தில் மூழ்கிய இரு மாணவர்களை காப்பாற்றிய, மதுகிரியின்

இரண்டாவது மனைவிக்கும் 'பென்ஷன்' உண்டு; சென்னை உயர் நீதிமன்றம்

இரண்டாவது மனைவிக்கு பென்ஷன் வழங்க மறுத்த, போக்கு வரத்து கழக பொது மேலாளரின் உத்தரவை, சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. ஈரோடு, தாராபுரத்தில், அரசு போக்குவரத்து கழக கிளையில், தொழில்நுட்ப அலுவலராக, பழனிசாமி என்பவர், பணியாற்றி வந்தார். 2011, ஆகஸ்டில், விபத்தில் சிக்கி, கோவை, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். செப்டம்பர், 13ல், இறந்தார்.

அகஇ - தொடக்க / உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு "பயிற்சிகளின் தாக்கம்" (TRAINING IMPACT) என்ற தலைப்பில் அனைத்து ஆசிரியர்களுக்கும் 22.11.2014 அன்று குறு வளமைய பயிற்சி நடைபெறவுள்ளது.

SPD - CRC - PRIMARY / UPPER PRIMARY TRAINING FOR ALL TEACHERS ON 22.11.2014 REG PROC CLICK HERE...


web stats

web stats