கல்வியே சிறந்த செல்வம் என்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அது கொடுக்கக் கொடுக்கக் குறைவுபடாhiதது; நெருப்பாலும், நீராலும் அழியாதது; திருடரால் களவாடப்பட முடியாதது. "கல்வியா? செல்வமா? வீரமா?' என்ற கேள்விகளில் முதலில் நிற்பது கல்வியே.
இந்தக் கல்வி நெடுங்காலமாக மக்களுக்கு மறுக்கப்பட்டே வந்தது. ஆட்சியாளர்களும், ஆதிக்க வெறியர்களும் அனைவருக்கும் கல்வியளிக்க விரும்பவில்லை. கல்வியினால் மக்கள் விழிப்புணர்வு பெற்றால் அது தங்களுக்கே ஆபத்தாகும் என்ற அச்சமே அதற்குக் காரணம்