rp

Blogging Tips 2017

அரசாணை - வழிகாட்டல் நெறிமுறை யார் வெளியிடலாம்?

நண்பர்களே
சில நாட்களுக்கு முன்னர் சமூக வலைதளங்கள்
கல்விசார் வலைதளங்கள் என எல்லா ஊடகங்களிலும்,
அரசாணை 62 பள்ளிக்கல்வித்துறை,நாள்-13.03.2015 க்கு வழிகாட்டு நெறிமுறைகளை
ஓர் உதவித்தொடக்கக்கல்வி அலுவலர்
ந.க.எண் ஏதுமின்றி ‘அன்புள்ள தலைமை ஆசிரியர்களே” என தொடங்கி
ஓர் கடித்ததை தன் கையொப்பம் இட்டு வெளியிட்டுள்ளார்
அது சார்ந்த சில சந்தேகங்கள்
1. அரசாணைக்கு வழி காட்டுதல் நெறிமுறைகள் வழங்க இயக்குனர் அவர்களுக்கு மட்டுமே அதிகாரம் உள்ள நிலையில் உதவிதொடக்ககல்வி அலுவலர் எவ்வாறு வெளியிடலாம்.

30.03.2015அன்று சென்னையில் ஜாக்டோ உயர்மட்டக்குழு கூட்டம் நடைபெறுகிறது


திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம் பட்டு , தமிழ்நாடு ஆசிரியர்கூட்டணிக்கிளை சார்பாக சங்க அலுவலகம் திறப்புவிழா


ஓய்வூதியர்கள் ஜூனுக்குள் சான்றுகள் அளிக்க வேண்டும்

ஓய்வூதியர்கள் மாவட்ட கருவூல அலுவலகத்தில் ஆஜராகி சான்றுகளை சமர்ப்பிக்குமாறு ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்தச் சான்றுகளை வழங்க ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
நேரில் ஆஜராக இயலாதவர்கள் வாழ்வுச் சான்றுடன் பிற ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:
நேரில் வருபவர்கள்: ஓய்வூதியர்கள் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்திற்கு வரும்போது ஓய்வூதிய புத்தகம், நடைமுறையில் உள்ள வங்கி சேமிப்புக் கணக்கு எண்,வங்கி வரவு புத்தகம்,வருமான வரி கணக்கு எண், குடும்ப அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் மறுமணம் புரியா சான்றுடனும் வர வேண்டும்.
நேரில் வர இயலாத ஓய்வூதியர்கள்: வாழ்வு சான்று உரிய படிவத்தில் மேற்கூறிய 5 ஆவணங்களின் நகல்களுடன், சான்றொப்பம், மறுமணம் புரியா சான்று உள்ளிட்டவைகளை அனுப்ப வேண்டும்.

பிளஸ் டூ வினாத்தாள் வெளியான விவகாரம்: ஓசூரில் மேலும் 4 ஆசிரியர்கள் கைது

ஓசூரில் வாட்ஸ்அப் மூலம் பிளஸ் டூ வினாத்தாள் வெளியான விவகாரத்தில் மேலும் ஆசிரியை உள்பட 4 ஆசிரியர்களை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
ஓசூரில் தனியார் பள்ளியில் கடந்த 18-ம் தேதி நடந்த பிளஸ் டூ கணிதத் தேர்வின்போது, அறை கண்காணிப்பு பணியிலிருந்த விஜய் வித்யாலயா பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன் ஆகியோர் வினாத் தாளை வாட்ஸ்அப் மூலம் சக ஆசிரியர்களான உதயகுமார், கார்த்திகேயன் ஆகியோருக்கு அனுப்பி மாணவர்களுக்கு உதவி செய்ததாக புகார் எழுந்தது.

வேலைவாய்ப்பு அலுவலக பதிவு விவரங்களை சரிபார்த்துகொள்ள இணைய முகவரி வெளியீடு


வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள நபர்கள், தங்களது பதிவுகளைhttp://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியில் சரிபார்த்துகொள்ளலாம் என காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் சண்முகம் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

அந்த செய்தி குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ள விவரம் வருமாறு: கடந்த 2010-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் செயல்பாடுகள்http://tnvelaivaaippu.gov.in/ என்ற இணையதள முகவரியின் மூலம் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு இன்று பணி நியமனக் கலந்தாய்வு

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,789 பேருக்கான பணி நியமனக் கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெறுகிறது.
அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் இணையதளம் மூலம் இந்தக் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.

ஒவ்வொரு மாவட்டத்திலும் 30 முதல் 50 பேர் வரை மட்டுமே இந்தக் கலந்தாய்வில் பங்கேற்கின்றனர். எனவே, முழு அடைப்பு நாளிலும் கலந்தாய்வை நடத்துவதில் பிரச்னை இருக்காது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகம் முழுவதும் 600 தாலுகா அலுவலகங்களில் வாக்காளர் அட்டை பெறும் வசதி: தேர்தல் அதிகாரி தொடங்கி வைத்தார்

மயிலாப்பூர் தாலுகா அலுவலகத்தில் உள்ள பொது சேவை மையத்தில் இன்று புதிய வாக்காளர் அட்டை மற்றும் திருத்தம் தொடர்பான ஆன்லைன் சேவையை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சந்தீப் சக்சேனா இன்று தொடங்கி வைத்தார்.
இந்த விழாவில் சென்னை மாவட்ட கலெக்டர் சுந்தர வள்ளி, எல்காட் இயக்குனர் அதுல்ஆனந்த், தேர்தல் இணை ஆணையர் அஜய் யாதவ், அதிகாரி ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்

கணினி பதிவாளர் பணியிடங்களை தொகுப்புதிய அடிப்படையில் நியமயணம் செய்துக்கொள்ள உத்தரவு

அகஇ - மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் கணினி பதிவாளர் பணியிடங்களை தொகுப்புதிய அடிப்படையில் நியமயணம் செய்துக்கொள்ள உத்தரவு - வழிமுறைகள் மற்றும் தெளிவுரைகள் வழங்கி மாநில திட்ட இயக்குனரின் செயல்முறைகள்

2012-டெட் மூலம் தேர்வான ஆசிரியர்களுக்கு தகுதி காண் பருவம் முடிதமைக்கான ஆணை=== வேலூர் மாவட்டம்- காவேரிபாக்கம் ஒன்றிய- உதவி தொடக்க கல்வி அலுவலரின் செயல்முறைகள்.....


CPS திட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எந்த துறையில் பணிபுரிபவர்கள் ஆக இருந்தாலும் வேறு துறைக்கு எந்த நிலையில் மாறினாலும் CPS NUMBER மாற்றம் செய்ய தேவையில்லை!


CPS திட்டத்தில் உள்ள அனைத்து அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் எந்த துறையில் பணிபுரிபவர்கள் ஆக இருந்தாலும் வேறு துறைக்கு எந்த நிலையில் மாறினாலும் CPS NUMBER மாற்றம் செய்ய தேவையில்லை!
வழிமுறைகள்:
1. பழைய பணியின் நியமன ஆணை,cps account slip, புதிய பணியின் நியமன ஆணை.புதிய பணியின் DDO LETTER 
2 . கடிதத்தில் பழைய பணியின் DDO NO AND EXTN (pues or Aided ) பிறகு மாற்றம் செய்ய வேண்டிய DDO NO AND EXTN (EDN) பள்ளியின் பெயர் குறிப்பிட வேண்டும். கீழே data center பதில் கடிதம்.........

8 ஆண்டுகளாக பணியிட மாறுதல் இன்றி அவதி -1000 கம்ப்யூட்டர் ஆசிரியர்களுக்கு பணியிட மாறுதல் அளிக்க கோரிக்கை

Annamalai University-Directorate of Distance Education (DDE)-DECEMBER 2014 RESULTS

CLICK HERE-Directorate of Distance Education (DDE)-DECEMBER 2014 RESULTS

அலுவலக பணியாளர்கள் சஸ்பெண்ட் கண்டித்து வரும் 31ல் ஆர்ப்பாட்டம்

ஓசூர் தேர்வு மையத்தில் நடந்த, முறைகேடு குற்றச்சாட்டுகளில், அலுவலக பணியாளர்களை சஸ்பெண்ட் செய்ததை கண்டித்து வரும், 31ம் தேதி கிருஷ்ணகிரி, சி.இ.ஓ., அலுவலகம் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என, பள்ளிக்கல்வி துறை நிர்வாக அலுவலர் சங்க மாநில தலைவர் தெரிவித்துள்ளார்.பள்ளிக்கல்வி துறை நிர்வாக அலுவலர் சங்கத்தின், கிருஷ்ணகிரி மாவட்ட அமைப்பின் அவரச ஆலோசனை கூட்டம் கிருஷ்ணகிரியில் நடந்தது. நாகராஜன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் முரளி

சென்னையில் 1100 தனியார் பள்ளிகளுக்கு சொத்து வரி வசூலிக்க முடிவு

சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரிதான் மிக முக்கிய வருவாயாகும். நடப்பு நிதியாண்டில் ரூ.600 கோடி வசூலிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் நேற்று வரை ரூ.525 கோடி சொத்து வரி வசூலிக்கப்பட்டுள்ளது. 30–ந்தேதிக்குள் இலக்கை எட்டுவோம் என்று வருவாய்த்துறை அதிகாரிகள் நம்பிக்கையுடன் முழுவீச்சில் செயல்பட்டு வருகின்றனர். மேலும் சென்னையில் உள்ள தனியார் பள்ளிகளுக்கும் சொத்து வரி வசூலிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

தொடக்கக் கல்வி - ஊராட்சி / நகராட்சி / உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் அஞ்சல் வழிக் கல்வி மூலம் பி.எட்., படிக்கும் நேர்வுகளில், கற்பித்தல் பயிற்சியினை அவர்கள் பணிபுரியும் பள்ளிகளிலேயே 6,7 மற்றும் 8 வகுப்புகளில் மேற்கொள்ள அரசு உத்தரவு

TN GOVT LTR NO.31874/ELE/13-4,DT.13.3- B.ED Teaching Practice ll b done in same scl in 6, 7 & 8 for SGT who r working in PU/MUN/Aided Scls - Orders Click Here...

60% முதல் 80% வரை மதிப்பெண்கள் பெறும் மாணவர்கள் என்ன படிக்கலாம்?

+2 முடித்தவுடன் இவர்கள் என்ன மாதிரியான படிப்பைத் தேர்ந்தெடுக்கலாம் என்று பார்க்கும்போது, எவர்கிரீன் படிப்புகளான மெடிக்கல், இன்ஜினியரிங் தாண்டி, ஏராளமான வித்தியாசமான தேர்வுகள் உள்ளன என்றாலும், பாப்புலரான இந்த இரண்டு வகைகளையும் நாம் போகிற போக்கில் விட்டுவிட முடியாது. எனவே, முதலில், இவை இரண்டையும் பார்த்துவிட்டு, பிறகு மற்றவற்றைப் பட்டியலிடுவோம். இன்ஜினியரிங் படிப்பைப் பொறுத்தவரை, தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகள் மற்றும் அவற்றில் உள்ள இடங்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், விண்ணப்பித்த அனைவருக்குமே சீட் கொடுத்தும், மீதம் காலியாக இருக்கிறது என்பதுதான்

புதிய ஓய்வூதிய திட்டத்தில் ( CPS )உள்ளவர்களுக்கு இயலாமை ஓய்வூதியம் (Invalid Pension ​) மற்றும் பணிக்கொடை (Gratuity )வழங்கும் மத்திய அரசு -RTI -கடிதம்

நன்றி-திரு-பிரடெரிக் ஏங்கல்ஸ் -திண்டுக்கல்
CLICK HERE- RTI LETTER REGARDING INVALID PENSION & GRATUITY-CPS-

ஓய்வு ஊதியம் வழங்குவதில் அரசுகளுக்கு இடையே பாரபட்சம்

அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 6-இல்தான் ஊதியம்!

தொடர் அரசு விடுமுறை காரணமாக, தமிழகத்தில் அரசு ஊழியர்கள்,ஆசிரியர்களு க்கு இந்த மாத ஊதியம் ஏப்ரல் 6-ஆம் தேதி தான்கிடைக்கும் என கருவூலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தேசிய திறனாய்வுத் தேர்வு: முடிவுகள் வெளியீடு

கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய திறனாய்வுத் தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டுள்ளன.
இந்தத் தேர்வு முடிவுகளை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் மாணவர்கள் அறிந்துகொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

மாணவர்கள் பிட் அடித்ததால் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த 30 ஆசிரியர்கள் தேர்வு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலையில் 40 ஆசிரியர்களுக்கு மெமோ கொடுக்கப்பட்டுள்ளது.

பிளஸ்&2 தேர்வு கடந்த 5ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. ஓசூரில் உள்ள தனியார் பள்ளியில் தேர்வு அறையில் இருந்த அரசு பள்ளி ஆசிரியர்கள் வாட்ஸ்அப் மூலம் வினாத்தாளை லீக் அவுட் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதைத்தொடர்ந்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி இடமாற்றம் செய்யப்பட்டார். இதனால் மாநிலம் முழுவதும் தேர்வு நடத்தும் முறைகளில் கடுமையான விதிமுறைகள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

வாட்ஸ்அப்பில் வினாத்தாள் வெளியான விவகாரம் போலீஸ் காவல் முடிந்து ஆசிரியர்கள் சிறையிலடைப்பு

ஓசூரில் பிளஸ்&2 கணக்கு வினாத்தாள் வாட்ஸ் அப்பில் வெளியான சம்பவத்தில் பள்ளி நிர்வாகத்தினர், ஆசிரியர்கள் உள்பட மேலும் சிலர் கைதாகின்றனர். போலீஸ் காவலில் விசாரிக்கப்பட்ட 4 ஆசிரியர்களும் நேற்று மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட் டம், ஓசூரில் பிளஸ்&2 கணக்கு தேர்வின் போது வாட்ஸ் அப்பில் வினாத் தாளை வெளியிட்டதாக ஸ்ரீவிஜய் வித்யாலயா மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் பள்ளி நிர்வாகிகள் உள்பட மேலும் பலருக்கு தொடர்பு உள்ளது

NMMS Nov - 2014 தேசிய திறனாய்வு தேர்வு முடிவுகள் வெளியீடு

Result of the National Talent Search Examination - November 2014

ஆசிரியர்களுக்கு அவசர கதியில் 'கவுன்சிலிங்': கல்வித்துறை மீது சந்தேகம்

புதிய முதுகலை ஆசிரியர்களுக்கு, பொதுத் தேர்வு நடக்கும் நேரத்தில் அவசர அவசரமாக கலந்தாய்வு நடத்துவது, கல்வித் துறையின் மீது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக, ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளிகளில், முதுகலை ஆசிரியர் காலியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியமான, டி.ஆர்.பி., போட்டித் தேர்வு நடத்தியது. இதில் தேர்வான, 1,789 பேருக்கு பணி நியமனம் வழங்குவதற்கான, 'ஆன் - லைன் கவுன்சிலிங்' நாளை, மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி அலுவலகங்களில் நடக்கிறது. காவிரியின் குறுக்கே, கர்நாடகா அணை கட்டும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை தமிழகத்தில், 'பந்த்' அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், பஸ், ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டால், கவுன்சிலிங்குக்கு உரிய நேரத்தில் வர முடியுமா என்று தேர்வானவர்கள் பலர் குழப்பம் அடைந்து உள்ளனர்.

'ஆங்கிலம் முதல்தாள் எளிது': 10ம் வகுப்பு மாணவர்கள் கருத்து

திண்டுக்கல்: நேற்று நடந்த பத்தாம் வகுப்பு ஆங்கிலம் முதல் தாள் தேர்வு எளிதாக இருந்ததால் 'சென்டம்' எடுக்க வாய்ப்புள்ளதாக, ஆசிரியர், மாணவர்கள் தெரிவித்தனர்.

ஆர்.வர்ஷினிதேவி, புனித வளனார் மகளிர் மேல்நிலைப்பள்ளி, திண்டுக்கல்: ஒரு மதிப்பெண்ணில் ஒருசில கேள்விகளை தவிர மற்றவை எளிதாக இருந்தது. புத்தகத்தில் இருந்து நேரடியாக கேள்விகள் கேட்கப்பட்டதால் பதில் அளிப்பதில் சிரமம் இல்லை. ஆசிரியர்கள் கூறிய முக்கிய வினாக்கள் அதிகளவில் வந்தன.

ஏப்ரல் 15 முதல் வேலைநிறுத்தம்: சத்துணவு ஊழியர் சங்கம் அறிவிப்பு

ஏப்ரல் 15 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் அறிவித்துள்ளது.
சங்க மாநில செயலாளர் பேயத்தேவன் கூறியதாவது: உணவு சமைப்பதற்கான முன் மானியம் வழங்குவதில் கால தாமதம் செய்வதால் கடன் வாங்கி உணவு சமைக்க வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது. ஒன்று முதல் 5 ம் வகுப்பு வரை ஒரு குழந்தைக்கு ரூ. 1.70 பைசா என்றும்,

தமிழக அரசு- நிதிநிலை அறிக்கை-ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் அடிப்படையில் செலவு விவரங்கள் கணிக்கப்பட்டுள்ளன.

அரசு ஊழியர்களின் ஊதியத்துக்கு ரூ.41,215 கோடி -ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படும் என்று கருதப்படுவதன் அடிப்படையில் செலவு விவரங்கள் கணிக்கப்பட்டுள்ளன.
தமிழக அரசு ஊழியர்களின் மாத ஊதியத்துக்காக ரூ.41,215 கோ டி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணித வினாத்தாள் வெளியான விவகாரம்: மறு தேர்வு நடத்த ஏன் உத்தரவிடக் கூடாது?

பிளஸ் 2 பொதுத் தேர்வின் கணிதப் பாடத்துக்கு மறு தேர்வு நடத்த ஏன் உத்தரவிடக் கூடாது எனப் பதில் அளிக்குமாறு கல்வித் துறை இயக்குநரிடம் விளக்கம் பெற்று வர, அரசு வழக்குரைஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த மாணவி வி.ரீனா சார்பில் அவரது தந்தை என்.வீரண்ணன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: எனது மகள் ரீனாநிகழ் கல்வியாண்டில் (2014-15) பிளஸ் 2 (உயிரியல் - கணிதப் பாடப்பிரிவு) படிக்கிறார். பிளஸ் 2 பொதுத் தேர்வு கடந்த 5-ஆம் தேதி தொடங்கியது.மாநிலம் முழுவதும்

ஈடுசெய் விடுப்பு விண்ணப்பம் FORMAT

'சஸ்பெண்ட்' நடவடிக்கையால் ஆசிரியர் உஷார்: 'பிட்' மாணவர்கள் மீது பிடியை இறுக்குகின்றனர்

மாணவர்கள், 'பிட்' அடிப்பதை கண்டுபிடிக்காமல் விட்டால், 'சஸ்பெண்ட்' உத்தரவு பாயும் என்பதால், தேர்வுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர், உஷார் அடைந்துள்ளனர். முறைகேடுகளில் ஈடுபடும் மாணவ, மாணவியரை, தயவு, தாட்சண்யம் இன்றி, நடவடிக்கை எடுக்கும் பணியில் இறங்கி உள்ளனர். மாணவர்கள், 'பிட்' அடிப்பதை, அறை கண்காணிப்பாளர் பார்த்துவிட்டால், 'பிட்'டை பறித்துக் கொண்டு, மாணவர்களின் எதிர்காலம் கருதி, தொடர்ந்து தேர்வெழுத அனுமதிப்பர். பறக்கும் படை குழுவினரிடம் பிடிபடும் மாணவர்கள், உடனே, தேர்வு அறைகளில் இருந்து வெளியேற்றப்படுவர்;

சொன்னபடி செய்யும் தேர்வுத்துறை : கிலியில் ஆசிரியர்கள்

மாணவர்கள் பிட் அடிப்பதை கண்டுபிடிக்காமல் விட்டால், சஸ்பெண்ட் உத்தரவு பாயும் என்பதால், தேர்வுப் பணிகளில் ஈடுபடும் ஆசிரியர்கள் உஷார் அடைந்துள்ளனர்.

முறைகேடுகளில் ஈடுபடும் மாணவ, மாணவியரை, தயவு தாட்சண்யம் இன்றி நடவடிக்கை எடுக்கும் பணியில் இறங்கி உள்ளனர். மாணவர்கள் பிட் அடிப்பதை அறை கண்காணிப்பாளர் பார்த்துவிட்டால் பிட்டை பறித்துக் கொண்டு, மாணவர்களின் எதிர்காலம் கருதி தொடர்ந்து தேர்வெழுத அனுமதிப்பர்

65 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை மாநகராட்சி வசம் ஒப்படைக்க உத்தரவு

கோவை மாநகராட்சி விரிவாக்கப்பகுதியில், ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள 65 துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளை, மாநகராட்சி வசம் ஒப்படைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் மேல்நிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள், துவக்கப் பள்ளிகள் உள்ளன. பள்ளிகளில் முதல் வகுப்பில் இருந்து, பிளஸ் 2 வரையிலும் தமிழ்வழி மற்றும் ஆங்கில வழிக்கல்வி போதிக்கப்படுகிறது. பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாணவர்கள் அதிக மதிப்பெண் பெற்று மாவட்ட அளவிலும், மாநில அளவிலும், ரேங்க் பெறுகின்றனர். மாநகராட்சி பள்ளியிலும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்பட்டு, பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சி பெறுகின்றன.

கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அதிகாரிகள், பெற்றோர்களுக்கு மிரட்டல்


மார்க்கெட் மாமூல் போல இ&பேமென்ட் மாமூல்


கலங்கடிக்கும் கல்வித் துறை ஊழல்

டெட் என்கிற ‘கொல்’கை முடிவு

தமிழகத்தில் தகுதித் தேர்வு (டெட்)நடத்துவதன் மூலம் கிராம பகுதியை சேர்ந்தவர்கள் பாதிக்கப்படுகின்றனர். மற்ற மாநிலங்களில் முறையாக நடத்தும் போது இங்கு மட்டும் வெயிட்டேஜ், இட ஒதுக்கீடு கிடையாது, 60 சதவீத மதிப்பெண் எடுக்க வேண்டும் என்று கட்டுப்பாடுகளை தமிழ அரசு வைத்துள்ளது. வேறு எந்த மாநிலத்திலும் இது போல இல்லை. இது கொள்கை முடிவு என்று அரசு கூறுகிறது. ஆனால் இது ஆசிரியர்களை ‘கொல்லும்‘ முடிவு என்று ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

டிரான்ஸ்பர் விஷயத்தில் ஆசிரியர்களுக்கு அல்வா

திருநெல்வேலி, சென்னை, கன்னியாகுமரி போன்ற மாவட்ட பள்ளிகளில் உள்ள காலி இடங்களுக்கு மாறுதல் கேட்டால் கிடைக்காது. அதற்கு அமைச்சர், எம்எல்ஏ மற்றும் செல்வாக்கு உள்ள அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சியின் பிரமுகர்கள் சிபாரிசு செய்ய வேண்டும். அதுவும் ‘கரன்சிகள்’ வெயிட்டாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் உடனே டிரான்ஸ்பர் கிடைக்கும். இல்லாவிட்டால் ஆசிரியர்கள் இந்த இடத்தில் வேலை பார்க்கலாம் என்பதை நினைத்தே பார்க்க முடியாது. தமிழ்நாட்டுக்கே அல்வா தயாரித்து அளித்து, மக்களின் நாவை கட்டி போட்டு வைத்துள்ளது நெல்லை. ஆனால், டிரான்ஸ்பர் விஷயத்தில் ஆசிரியர்களுக்கு அல்வா கொடுப்பது கல்வித் துறையில் சர்வசாதாரணம்.

பட்ஜெட்டில் 'பாஸ் மார்க்' கூட வாங்காத கல்வித்துறை

பட்ஜெட்டில், பள்ளிக் கல்வித் துறையில் வளர்ச்சித் திட்டங்கள், நூலக வளர்ச்சி, புதிய ஆசிரியர் நியமனம், புதிய கணினி ஆய்வகங்கள் அமைத்தல், மாணவர்களுக்கு மின்னணு அடையாள அட்டை வழங்குதல் உள்ளிட்ட, புதிய அம்சங்கள் எதுவும் இடம் பெறவில்லை. 
இலவச பொருட்கள்:
கடந்த ஆண்டை விட 3,204.79 கோடி ரூபாய் அதிகமாக, இந்த ஆண்டு பட்ஜெட்டில், மொத்தம், 20,936.09 கோடி ரூபாய் பள்ளிக் கல்வித் துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

ஏழை மாணவர்களுக்கு கல்வி உரிமை சட்டத்தை முழுதாக அமல்படுத்த தனியார் பள்ளிகள் மறுப்பு


கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், நாடு முழுவதும் உள்ள தனியார் பள்ளிகளில், 21 லட்சம் இடங்கள் உள்ள நிலையில், அதில், 29 சதவீத இடங்களே நிரப்பப்படுகின்றன. கண்காணிப்பு இல்லாதது; இதுபோன்ற வசதி இருக்கிறது என்பது தெரியாதது; தனியார் பள்ளிகளின் பணத்தாசை போன்றவற்றால், இந்த உயரிய திட்டம் பாழாகிறது. ஏராளமான ஏழை மாணவர்களுக்கு தரமான கல்வியும் கிடைக்காமல் போகிறது.

No Need Notes of lesson for SABL Classes : RTI Letter

ஈடுசெய் விடுப்பு -தகுதியுள்ள விடுப்பு அனுபவிக்க பட்டியல்

பலிகடா ஆசிரியரா? இன்றைய தினமணி தலையங்கம்

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூர் பகுதியில் பிளஸ் 2 தேர்வறைக் கண்காணிப்பாளர்கள் இருவர் கணித வினாத் தாளைப் புகைப்படம் எடுத்து, அதை கட்செவி அஞ்சலில் (வாட்ஸ்அப்) அனுப்பிய விவகாரம் தமிழ்நாட்டில் பல தொடர் நடவடிக்கைகளுக்கு வித்திட்டுள்ளது.
இந்தச் சம்பவத்தில் 4 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டிருப்பதோடு, அந்த ஆசிரியர்கள் அங்கே தேர்வறைக் கண்காணிப்பாளர் களாக வந்தது எப்படி என்பதில் தொடங்கி, இதில் யாருக்கெல்லாம் தொடர்பு, எந்தெந்தத் தனியார் கல்வி நிறுவனங்கள் இதில் ஈடுபட்டன, இதில் மாவட்டக் கல்வி அலுவலருக்கு என்ன பங்கு என்பதாக விசாரணை வளையம் விரிந்துகொண்டே செல்கிறது. இன்னும் சிலர் பணியிடை நீக்கம் செய்யப்படலாம், மேலும் சில கைதுகள் நடக்கலாம்.

பள்ளிக் கல்வியில் தமிழகம் உச்ச நிலைக்கு செல்லும்: ஓபிஎஸ் நம்பிக்கை


2015-2016 ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் பள்ளிக்கல்வித் துறைக்கு 20,936.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த முயற்சிகள் அனைத்தும் தேசிய அளவில் பள்ளிக் கல்வியில் தமிழகத்தை உச்ச நிலைக்கு நிச்சயமாகக் கொண்டு செல்லும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம் என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

2015-16-க்கான தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்த முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் பள்ளிக்கல்வி - உயர் கல்வி தொடர்பாக வெளியிட்ட அறிவிப்புகள்:

தமிழக பட்ஜெட் :107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்!!

107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் 2015-16ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தமிழக முதல்வரும், நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
தமிழக பள்ளிக் கல்வித்துறைக்கு ரூ.20,936 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். அரசுப் பள்ளிகளில் 100% கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளன.பள்ளி கட்டமைப்பை மேம்படுத்த ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

CRC-பயிற்சி நாட்கள்- ஈடுசெய் விடுப்பு அனுமதி -அரசாணை-62 குறித்த ஓர் விளக்கம்-ரக்‌ஷித்.கே.பி மாநில துணைத்தலைவர் TNTF


தமிழக பட்ஜட்-பள்ளி கல்விதுறைக்கு ரூ.20,936 கோடி

சென்னை : 107 தொடக்க பள்ளிகள் நடுத்தர பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும். அரசு பள்ளிகள் அனைத்திலும் 100 சதவீதம் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. ரூ.450 கோடி செலவில் பள்ளிகளில் கட்டமைப்பு. பள்ளி கல்வித் துறைக்கு ரூ.20,936 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

சிறப்பு கல்வி உதவித்தொகைக்காக ரூ.361 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்புக் வழங்க ரூ.1037.62 கோடி நிதி. உயர்கல்வித்துறைக்காக ரூ.3696 கோடி நிதி. சுற்றுலாத்துறைக்கு ரூ.183 கோடி நிதி. விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறைக்கு ரூ.149.70 கோடி நிதி ஒதுக்கீடு.

அரபு எண்ணை தமிழ் எண்ணாக்கும் வினா: 10ம் வகுப்பு மாணவர்கள் திணறல்

பத்தாம் வகுப்பு, தமிழ் இரண்டாம் தாள் தேர்வில், அரபு எண்களை, தமிழ் எண்ணாக எழுதும் வினா, போட்டித் தேர்வு வினா போல் கேட்கப்பட்டிருந்தது. இதனால் மாணவர்கள் திணறினர்.
பத்தாம் வகுப்புக்கு, நேற்று, தமிழ் இரண்டாம் தாளுக்கு தேர்வு நடந்தது. இதில், ஒரு மதிப்பெண் கேள்விகள் புத்தகத்தில் இல்லாத, உள்பக்க கேள்வி களாகவும், கடினமானதாகவும் இருந்தன.

புத்தகத்தில் உள்ளது:
ஒரு மதிப்பெண்ணுக்கான, ஐந்தாவது கேள்வியாக, 'தொகைச் சொல்லை விரித்து எழுதுக?' என்ற கேள்வி, பாடத்திட்டத்தில் இல்லை என்று சில மாணவர்கள் கூறினர்.ஆனால், புத்த கத்தில் உள்ளது தான் என, தமிழாசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

சமூகவலைதளங்களில் கருத்து சுதந்திரத்திற்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

சமூகவலைதளங்களில் கருத்து சுதந்திரத்திற்கு தடை இல்லை: உச்ச நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட கருத்து சுதந்திரம் தொடர்பான வழக்கில், சட்டப் பிரிவு 66-ஏ என்பது அரசியல் சாசனத்துக்கு எதிரானது என உச்ச நீதி மன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. சமூக வலைதளங்களான பேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட பக்கங்களில் வெளியிடப்படும் கருத்துகள், விமர்சனங்கள் அவதூறாக இருந்தால் சம்பந்தப்பட்டவரை கைது செய்ய வழிவகை செய்யும் தகவல் தொழில்நுட்ப சட்டப் பிரிவு 66ஏ முறையானதுதானா

பாடம் சொல்லிக் கொடுக்க வேண்டிய ஆசிரியர்களை போராட்டத்தில் குதிக்க வைக்கும் அரசு-தினகரன்

*கோரிக்கைகளுக்காக கையேந்த வைப்பதா? 
*பேச்சுவார்த்தைக்கு அழைத்து அவமதிப்பதா?
*எத்தனை முறை கேட்டும் பாராமுகம் காட்டுவதா?

ஒரு கட்டிடம் வலுவாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு அஸ்திவாரம் முக்கியம். ஒரு சமுதாயம் அறிவுசார்ந்த, இளமையான, சுறுசுறுப்பான சமுதாயமாக இருப்பது மாணவர்கள் கையில்தான் இருக்கிறது. அந்த மாணவர்களை உருவாக்கும் ஆசிரியர்கள் எந்த நிர்ப்பந்தமும் இல்லாமல் இருக்க வேண்டும். எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் இந்த ஆசிரியர்களை பணத்துக்காக, பணியிட மாற்றத்துக்காக அரசிடம் கையேந்த வைக்கக் கூடாது. அப்படி ஒரு நிலைமைதான் தமிழகத்தில் எழுந்துள்ளது. ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்கு பதில் போராட்டம் நடத்தும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஆசிரியர்கள் வைக்கும் ஒவ்வொரு கோரிக்கையும் வலுவான, ஒழுக்கமான சமூகத்தை உருவாக்கும் நோக்கிலேயே இருக்குமே தவிர.. அதை சிதைப்பதாக இருக்காது.

சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர் நியமனத்தில் ஊழல் : இளங்கோவன் புகார்


சிறுபான்மையினர் பள்ளி ஆசிரியர் நியமனத்தில் ஊழல் நடந்துள்ளதாகஈ.வி.கே.எஸ். இளங்கோவன் புகார் தெரிவித்துள்ளார். 

தென் மாவட்டங்களில் கல்வித்துறை அதிகாரிகள் வசூல் வேட்டைநடத்துகின்றனர் என்றும், லஞ்சம் கேட்டு கல்வி அதிகாரிகள் பேசிய ஒலிநாடாதம்மிடம் உள்ளது என்றும் இளங்கோவன் தெரிவித்துள்ளார். ஒலிநாடாவைஆதாரமாக வைத்து கல்வி அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கைவிடுத்துள்ளனர்.

ஆசிரியர்கள் பிரச்னைக்கு காரணம் அரசா? அதிகாரிகளா? -DINAKARAN

அரைக்காசு உத்தியோகம் என்றாலும் அது அரசாங்க உத்தியோகம் என்றால்தான் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் இருக்கும். ஆனால் அரசின் புதிய கொள்கைகளால் ஆசிரியர்கள் அந்த மதிப்பை இழந்துள்ளனர். 
கூடவே அரசிடம் நல்ல பெயர் வாங்குவதற்காக உயரதிகாரிகள்நடத்தும் லீலைகளால் அதிகம் பாதிக்கப்படுவது ஆசிரியர்கள்தான். அது பென்ஷன்திட்டத்தில் இருந்து பதவி உயர்வு வரை அனைத்திலும் முறைகேடு, ஊழல் புகுந்துவிளையாடுகிறது. ஆசிரியர் சங்கங்கள் கூட்டாக கோரிக்கை விடுத்தாலும்,போராட்டம் நடத்தினாலும் அதைப் பற்றி யாரும் கண்டுகொள்வதில்லை. எனவே,ஆசிரியர்கள் தினந்தோறும் விரக்தியுடனே பணிக்கு சென்று திரும்புகின்றனர். 
எனினும் கல்வி என்று வந்துவிட்டால் தங்கள் கடமையில் இருந்து அவர்கள்தவறுவதே இல்லை. எப்படியாவது தங்கள் பள்ளி பொதுத் தேர்வில் தேர்ச்சி 100 சதவிதம் இலக்கை எட்ட வேண்டும் என்று நினைத்து செயல்படுகின்றனர். ஆனால்,அவர்களின் கோரிக்கையை மட்டும் அரசும், அவர்களுக்கு ஒத்து ஊதும் அதிகாரிகளும் ஏனோ கண்டுகொள்வதே இல்லை என்கிற குறை மட்டும்தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

60 ஆயிரம் ஆசிரியர்கள் பாதிப்பு: அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள்6வது ஊதிய குழுவால் பாதிக்கப்பட்டதுடன் பென்ஷன் திட்டத்திலும்பாதிக்கப்பட்டுள்ளனர். பென்ஷன் திட்டத்தில் இடைநிலை ஆசிரியர்கள் 40,000பேரும்,

6 ஆசிரியர் 'சஸ்பெண்ட்;' 50 பேருக்கு 'மெமோ!' சிக்கும் மாணவர் எண்ணிக்கை 2 மடங்காக உயர்வு?

பிளஸ் 2 தேர்வில், முறைகேடுகள் மற்றும் 'பிட்' அடித்தவர்களை பிடிக்காதது தொடர்பாக, ஆறு ஆசிரியர்கள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில், 50 ஆசிரியர்களுக்கு, 'மெமோ' கொடுக்கப்பட்டுள்ளது. 
பிளஸ் 2 தேர்வில், 'பிட்' வைத்திருப்பதை கண்டுபிடிக்காத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த, இரு தினங்களில், தேனியில், மூவர்; தஞ்சையில், ஒருவர்; நாகை

'ஓ.பி.எஸ்., நண்பேண்டா' என்ற டி.இ.ஓ., 'டம்மி' பதவிக்கு தூக்கி வீசப்பட்டார்

கோபிசெட்டிபாளையம்: 'முதல்வர், ஓ.பி.எஸ்., நண்பர்' என கூறிக்கொண்டு, அதிகார தோரணையுடன் வலம் வந்து, பல குற்றச்சாட்டுகளுக்கு ஆளான, கோபி கல்வி மாவட்ட அலுவலர், சிவாஜியை, 'டம்மி' பதவிக்கு தூக்கி அடித்து, பள்ளிக்கல்வி இயக்குனர், கண்ணப்பன் உத்தரவிட்டு உள்ளார்.
கடந்த 2013, ஜூலை 25ல், கோபி கல்வி மாவட்ட அலுவலராக சிவாஜி பொறுப்பேற்றார். இவர் வந்ததில் இருந்து, ஆசிரியர் பணி நிரவல், கவுன்சிலிங் என, எதுவுமே முறையாக நடக்கவில்லை.

பள்ளிக் கல்வித்துறை செயலர் நேரில் ஆஜராக ஐகோர்ட் உத்தரவு

பள்ளிக் கல்வித்துறை செயலர் சபீதா ஏப்ரல் 1-ம் தேதி நேரில் ஆஜராக ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. 
தமிழ்நாடு பார்வையற்ற ஆசிரியர்கள் சங்கத்தினர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தனர். பார்வையற்றோரை ஆசிரியர் பணியிடங்களில் 2009-ல் நியமிக்காததை எதிர்த்து மனு ஒன்றை தாக்கல் செய்தனர்.

ஆசிரியர் தகுதி தேர்வை, இனி சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின் கீழ் எழுத வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்ககம்அதிரடி உத்தரவு .

புதுச்சேரியில் உள்ள நான்கு பிராந்தியங்களிலும் ஆசிரியர் தகுதி தேர்வை, இனி சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தின் கீழ் எழுத வேண்டும் என, பள்ளிக்கல்வி இயக்ககம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
மத்திய அரசின் அடிப்படை கல்வி சட்டத்தின்படி, இனி ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி வெற்றிப் பெற்றவர்களே ஆசிரியராக முடியும்.

CRC Special CL Guidelines


11 முதல் 19 வரை உள்ள எந்த இரு எண்களையும் ஒன்றுடன் ஒன்று பெருக்கும் முறை

கடினமான கணக்குகளையும் எளிதில் கண்டுபிடிக்கும் சுலபமான வழிகளில் தற்போது 11 முதல் 19 வரை உள்ள எந்த இரு எண்களையும் ஒன்றுடன் ஒன்று பெருக்கும் முறையை இப்போது காணலாம். இதற்காக செய்ய வேண்டி யது மிகச்சிறிய நான்கு படிகள் தான்.

==> முதலில் பெருக்க வேண்டிய எண்களில், முதல் எண்ணை முழுமையாகவும், இரண்டாவது எண்ணின் கடைசி எண்ணையும், கூட்டிக்கொள்ள வேண்டும்.

தமிழக பட்ஜெட் நாளை தாக்கல் புதிய ஓய்வூதிய திட்டம் கைவிடப்படுமா? அரசு ஊழியர், ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு

தமிழக சட்டப்பேரவையில் 2015-16-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் நாளை தாக்கல் செய்கிறார். புதிய ஓய்வூதியத்தை கைவிடுவது குறித்து பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு அரசு ஊழியர் மற்றும்

ஆசிரியர்களிடையே எழுந்துள்ளது. தமிழக சட்டப்பேரவையில் இந்த
ஆண்டுக்கான முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் கடந்த பிப்ரவரி 17-ம் தேதி தொடங்கியது. ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது 4 நாட்கள் விவாதம் நடந்தது. அதையடுத்து

பள்ளி திறக்கும் நாளில் இலவச பஸ் பாஸ்: விண்ணப்பம் வழங்கும் பணி துவக்கம்

முழு ஆண்டுத்தேர்வுகள் முடிந்து, கோடை விடுமுறைக்கு பின், பள்ளிகள் திறக்கும் முதல் நாளிலேயே, பள்ளி மாணவ, மாணவியருக்கு இலவச பஸ் பாஸ் வழங்குவதற்காக, அரசு பள்ளிகளில் விண்ணப்பம் வழங்கி, பூர்த்தி செய்து பெற்று வருகின்றனர்.
தமிழக அரசு, ஏழை மாணவ, மாணவியருக்கு உதவும் நோக்கில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவியர் அனைவருக்கும் சத்துணவு, இலவச கல்வி, சீருடை, நோட்டு மற்றும் புத்தகம், காலணி, உபகரணங்கள், சைக்கிள், லேப்-டாப் உள்ளிட்ட அனைத்தையும் இலவசமாக வழங்குகின்றன. கிராமப்புறங்களில் இருந்து நகர் பகுதிக்கு வருவோர், நகரின் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திலுள்ள பள்ளிக்கு மாணவ, மாணவியர், அரசு டவுன் பஸ்களில் வந்து செல்ல, இலவச பஸ் பாஸ்

தெரிந்து கொள்ளுங்கள் - அரசாணைகள் தொகுப்பு விபரம் கேள்வி பதில்

ஆசிரியர் வருங்கால வைப்புநிதியில் (TPF) இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் தற்காலிக முன்பணமாக பெறலாமா?
அரசாணை நிலை எண்.381 நிதித்துறை நாள்.30.9.2010ன்படி ஆசிரியர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருந்தாலும் தற்காலிக முன்பணமாக ரூபாய் 2,50,000, மட்டுமே பெற முடியும்.
-----------------------
அரசுப்பணிகளில் மகளிர்க்கு எத்தனை சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது?
அரசாணை நிலை எண்.89 பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை நாள்.17.2.89ன்படி மாநில அரசுப்பணிகளில் ஒவ்வொரு பதவியிலும் 30%மகளிர் நியமனம் செய்யப்பட வேண்டும். மீதம் உள்ள 70% பொதுவானது ஆகும்.
-----------------------
அரசுப்பணியில் சேர்ந்த தகுதிகாண் பருவத்தினருக்கு ஈட்டிய விடுப்பு எவ்வாறு இருப்பு வைக்கப்படுகிறது?
அரசாணை நிலை எண்.157, பணியாளர் நிர்வாக சீர்திருத்த துறை நாள்.24.6.94ன்படி தகுதிகாண் பருவத்தினருக்கு ஒவ்வொரு முடிவுற்ற 2 மாதங்களுக்கும் 2 1/2 நாள் என்ற அளவில் ஈட்டிய விடுப்பு இருப்பு வைக்கப்படுகிறது.

2015-2016 ஆம் கல்வியாண்டில் நடுநிலைப்பள்ளிகளை அரசு உயர் நிலைப் பள்ளியாகத் தரம் உயர்த்துதல் -பள்ளி சார்ந்த விவரங்கள் கோருதல்

ஆரம்பக்கல்வி பதிவேடு புதிப்பித்தல் - மாநில திட்ட இயக்குனர் அவர்களின் செயல்முறைகள்

CLICK HERE FOR SSA SPD PROCEEDINGS

ஒசூர் கல்வி மாவட்ட அலுவலர் உள்பட 4 பேர் பணியிடை நீக்கம்.

பிளஸ் 2 வினாத்தாள் விவகாரம், விஸ்வரூபம் எடுத்துள்ளது. நீண்ட விசாரணைக்குப் பின், ஓசூர் கல்வி மாவட்ட அலுவலர், வேதகன் தன்ராஜ் உட்பட நான்கு பேர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள தனியார் பள்ளி ஆசிரியர்கள் மகேந்திரன், கோவிந்தன், உதயகுமார், கார்த்திகேயன் ஆகியோர், 'வாட்ஸ் அப்' மூலம், பிளஸ் 2 கணித வினாத்தாளை அனுப்பியது தொடர்பான விவகாரம், உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

தீவிர கண்காணிப்பு:

பிளஸ் 2 தேர்வு: வேதியியல் பாடத்தில் 2 ஒரு மதிப்பெண் வினாக்களில் பிழை

பிளஸ் 2 வேதியியல் பாடத் தேர்வில் ஒரு மதிப்பெண் பகுதியில் 2 வினாக்கள் பிழையுடன் இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

பிளஸ் 2 தேர்வில் திங்கள்கிழமை வேதியியல், கணக்குப் பதிவியல் பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது.

வேதியியல் பாடம் ஏ வகை வினாத்தாள் வரிசையில் 10-ஆவது கேள்வி, 22-ஆவது கேள்வி ஆகியவை பிழையுடன் இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

அணு வேதியியல், வெப்ப இயக்கவியல் பகுதிகளிலிருந்து இந்தக் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.

தற்போது உள்ள நடைமுறைக்கு ஏபில் அட்டை தேவையா? ஏபில் ஏன்?

1.மாணவர்கள் தன் சுய வேகத்தில் கற்க வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டது.
2. வகுப்புகளுக்கு முக்கியத்துவம் இல்லை. மாணவர்களின் அடைவுத்திறனே முக்கியம்
3. இதனால் 5ஆம் வகுப்புக்குள் எழுத்துக்கள் தெரியாத மாணவர்களே இருக்க முடியாது. அதாவது மிகவும் பின்தங்கி இருக்கும் 5 ஆம் வகுப்பு மாணவன் தன் திறன் 3ஆம் வகுப்பிற்குண்டான திறன் எனில் அவன் 3ஆம் வகுப்பு படிக்கலாம். அதற்காகதான் ஏணிபடிகள்.

4. ஒரு 2 ஆம் வகுப்பு மாணவன் திறன் இருந்தால் நேரடியாக ஏணிப்படிகளை முடித்து 3 ஆம் வகுப்பிற்கு கூட செல்ல முடியும்.

இப்படி மாணவர்களின் குறைந்த பட்ச கற்றல் அடைவை உறுதி செய்ய அப்போதைய Chennai Corporation Commissioner Mr.விஜயகுமார் IAS அவர்களால் உருவாக்கப்பட்டது.
ஏபில் ஏன் வேண்டாம்?
பின்னர் தமிழக மக்களால் சரியாக புரிந்துகொள்ளமுடியாமல்
இந்த ஏபில் முறையை ஜோக் செய்யும் அளவுக்கு சென்றது.
” உங்கள் மகள் என்ன படிக்கிறாள்? என்று கேட்டால் ...
1 ஆம் வகுப்பு ஆங்கிலம
2 ஆம் வகுப்பு கணிதம்
3 ஆம் வகுப்பு அறிவியல்
4 ஆம் வகுப்பு சமூகஅறிவியல்
மற்றும் தமிழ்
ஆனால் படிப்பது 5 ஆம் வகுப்பு ?.....................
இதனால் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்தது.
விழித்துக்கொண்ட அரசு என்ன செய்வது என்று புரியமால் கல்வி முறையை புரிய வைப்பதற்கு பதிலாக
அந்த அந்த குழந்தைகள் அந்த அந்த வகுப்பு பாடங்களை படிக்க வேண்டும் என கூறி ஏபில் முறையை புரிந்து கொள்ளாமல் ஒட்டு மொத்தமாக ஒரு நல்ல முறைக்கு வேட்டு வைத்தனர்.
இதன் மூலம் அவரவர்கள் கற்கும் வேகத்தில் கற்கலாம் என்ற இந்த ஏணிப்படியின் முறை அழிக்கப்பட்டது.

முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மார்ச் 28-இல் பணி நியமன கலந்தாய்வு - மூன்றே மாதங்களில் பணி நியமனம்:

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தேர்வு செய்யப்பட்ட 1,789 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு வருகிற 28-ஆம் தேதி பணி நியமன கலந்தாய்வு நடைபெற உள்ளது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் சனிக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

அரசு மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக இருந்த முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 1,789 பேருக்கான பணி நியமன கலந்தாய்வு இணையதளம் மூலமாக வருகிற 28-ஆம் தேதி நடைபெறுகிறது

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு பணியில் ஈடுபவர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பு.... (முறைகேட்டில் எந்த மாணவனாவது பிடிபட்டால் Hall Supervisors should be suspended immediately) கல்வித்துறை புதிய உத்தரவு


INSTRUCTIONS TO ALL CHIEFEDUCATIONAL S :

1. WHEREVER malpractices were found and booked by some person, other than Hall
Supervisors for the past 8 days, the Hall Supervisors should be suspended immediately.
The list mentioned above, should be provided by 4.00 PM, on 21.03.2015 - to the Director
of Government Examinations, Chennai – 6.

பிளஸ்2 பரீட்சை முறைகேட்டில் யார் யாருக்கு தொடர்பு? 4 ஆசிரியர்கள் கைது; கல்வி அதிகாரிகள் விசாரணை; 118 ஆசிரியர்கள் பணி இடமாற்றம்; ஆசிரியர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதா?

தமிழ்நாட்டில் தற்போது பிளஸ்–2 பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. ‘வாட்ஸ் அப்’பில் கணித வினாத்தாள் கடந்த 18–ந் தேதி கணிதத் தேர்வு நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள பரிமளம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில் 323 மாணவ–மாணவிகள் தேர்வு எழுதினார்கள்.

அங்குள்ள ஒரு வகுப்பறையில் கண்காணிப்பாளராக பணியில் இருந்த ஆசிரியர் மகேந்திரன், கணித வினாத்தாளை தனது செல்போனில் புகைப்படம் எடுத்து, அதை ‘வாட்ஸ் அப்’ மூலம் சக ஆசிரியரான உதயகுமாருக்கு அனுப்பினார். தொடர்ந்து அந்த வினாத்தாள் கோவிந்தன், கார்த்திகேயன் ஆகியோருக்கும் ‘வாட்ஸ் அப்’ மூலம் அனுப்பப்பட்டது.

மாணவர்கள் காப்பி அடித்தால் ஆசிரியர் மீது நடவடிக்கையா? பட்டதாரி ஆசிரியர் கழகம் கண்டனம்

தனியார் பள்ளிகளுக்கான பாட புத்தகம் விலை 50 சதவீதம் உயர்வு: பள்ளிகள், பெற்றோர் அதிர்ச்சி

தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு வினியோகிக்கும் பாடப் புத்தகங்கள் விலையை 50 சதவீத்திற்கும் மேல் உயர்த்தி தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிக் கழகம் உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தனியார் ஆங்கில மீடியம் பள்ளிகளில் 15 லட்சத்திற்கும் மேல் மாணவர்கள் படிக்கின்றனர். இவர்களுக்கான பாடப் புத்தகங்கள் தற்போது தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் வினியோகம் செய்யப்படுகிறது. இக்கல்வியாண்டில் ஒன்று முதல்

புதிய கல்விக் கொள்கை ஆலோசனை: 8வது வகுப்பு வரையில் கட்டாய தேர்ச்சிக்கு மாநிலங்கள் எதிர்ப்பு

மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை ஆலோசனையில், 8ம் வகுப்பு வரையிலான கட்டாய தேர்ச்சி முறைக்கு பல்வேறு மாநில அரசுகளும் எதிர்த்து தெரிவித்துள்ளன. பள்ளிக் கல்வியிலும், உயர் கல்வியிலும் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து, புதிய கல்விக் கொள்கை உருவாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான, மனித வள மேம்பாட்டு துறை அமைச்சகம் சார்பில் மாநில கல்வித்துறை அமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது.

வங்கி கணக்கில் குறைந்தபட்சம் தொகை இல்லாவிட்டால் அபராதம்; ஏப்ரல் 1 முதல் அதிகரிக்கிறது!


web stats

web stats