rp

Blogging Tips 2017

ஊதியக்குழு ஆய்வு கமிட்டி உறுப்பினர்களை சந்தித்து நமது இயக்க கோரிக்கை மணு அளிப்பு

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் இயக்க தலைவர் அய்யா திரு செ.முத்துசாமி அவர்களின் தலைமையில் பொது செயலாளர் திரு.செல்வராஜ் அவர்கள் ,மாநில பொருளாளர் திரு.ரக்‌ஷித் அவர்கள் , இளைஞரணி செயலர் நாகராஜன் , துணைப்பொது. செயலர் சாந்தகுமார், சுவாமிநாதன், இராமனூசம் அவர்களுடன் தலைமை செயலகம் சென்று , 7 th pay committee members யிடம் நமது இயக்கம் சார்பில் ஊதியக்குழு மாற்ரம் சார்பாக அமுல்படுத்தப்பட வேண்டிய கோரிக்கைகள் சமர்பிக்கப்பட்டன. மாண்புமிகு கல்வி அமைச்சர் அவர்கள் , கல்வி செயலாளர் அவர்கள் , நிதித் துறை செயலர் , பணியாளர் மற்றும் நிர்வாக துறை செயலர் , உள் துறை செயலர் , மற்றும் உறுப்பினர் செயலர் உள்ளிட்ட ஊதிய கமிஷன் உறுப்பினர்களை தனித்தனியாக சந்தித்து கோரிக்கைகள் வழங்கபட்டன. அனைத்து பெரு மக்களும் நமது கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டனர்.

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பாக மதிப்பிற்குரிய கல்வி செயலர் அவர்களுடன் சந்திப்பு

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் சார்பாக மதிப்பிற்குரிய கல்வி செயலரை சந்தித்து கோரிக்கைகள் வைக்கபட்டன
                          (1) உயர்கல்வி பயின்றவருக்கு பின் அனுமதி ஆணை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கை அவர்கள் ஏற்று கொண்டு இந்த மாதத்திற்குள் அதற்கான ஆணை வெளியிடபடும் என்றார் . ...
         (2) அடுத்துதாக வரும் கல்வியாண்டில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி போன்று ஏப்ரல் 20 அன்று தொடக்கக் கல்வி துறையும் விடுமுறை அளிக்க வேண்டும் என்று கேட்டோம் . உடனே , அவர்கள் முழு மனதோடு சின்ன குழந்தைகளின் நிலையை கருத்தில் கொண்டு இந்த ஆண்டு முதல் இது நடைமுறைக்கு கட்டாயம் வந்துவிடும் என்று உறுதி கூறி உள்ளார்கள் என்பதை இயக்க பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறோம்.   

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மே 2 அன்று நடைபெறவிருந்த செயற்குழு மற்றும் பொதுக்குழு மே 3 ந் தேதி நடைபெறும்.

கல்வி அமைச்சர் மாண்புமிகு கே.ஏ.செங்கோட்டையன் அவர்கள்  தலைமையிலான அனைத்து சங்க பிரதிநிதிகள்,கல்வித்துறை அலுவலர்கள்  ஆலோசனைக்கூட்டம்  சென்னையில்   மே2 அன்று நடைபெறுவதால் நமது தமிழ்நாடு  ஆசிரியர் கூட்டணியின் மே 2 அன்று நடைபெறவிருந்த மாநில  செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம்  மே 3 ந் தேதி  அன்று நடைபெறும் என அறிவிக்கப்படுகிறது

கல்வி அமைச்சர் தலைமையில் அனைத்து ஆசிரியர் சங்க நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மே-2 அன்று நடைபெறுகிறது

கல்வி அமைச்சராக  மாண்புமிகு கே.ஏ செங்கோட்டையன் அவர்கள் பொறுப்பேற்ற உடன் நமது இயக்க நிறுவனர் திருமிகு செ மு அவர்கள் தலைமையில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தோம் .அப்போது  . செ.மு அவர்கள்  நாவலர் நெடுஞ்செழியன்,கல்வி அமைச்சராக பொறுப்பேற்றவுடன் அனைத்து இயக்கபிரதிநிதிகளை அழைத்து கோரிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்தி பிரச்சினைகல் கேட்டு சிலவற்றினை உடனடியாக தீர்வுகண்டார்.அதேபோன்று தாங்களும் ஒரு கூட்டம் நடத்த வேண்டு என கோரிக்கை வைத்தார் ,அதேபோல் நடத்துவதாக  உறுதி கூறினார் அமைச்சர்

அவ்வாறே, வரும் மே-2செவ்வாய் க்கிழமை சென்னை தி.நகர்,சர் பிட்டி தியாகராஜர் கலையரங்கில்  பிற்பகல் 2.00 மணிக்கு அனைத்து ஆசிரியர் இயக்கங்கள்: சார்பாக் பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் ஆலோசனைக்கூட்டம் நடைபெற உள்ளது. அன்றையதினம் சங்க பிரதிநிதிகள் தங்களது கோரிக்கைகளை நிதி சார்ந்தவை, நிர்வாகம் சார்ந்தவை என இரண்டு பிரிவாக பிரித்து வந்து தெரிவிக்குமறு இன்று பள்ளிக்கல்வி இயக்குனர் அவர்களிடமிருந்து முறைப்படி அழைப்பு கிடைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் இயக்க நிறுவனர் திருமிகு செ.மு அவர்கள் தலைமையில் மாநில பொறுப்பாளர்கள் கலந்துகொள்ல உள்ளனர்

கல்வி அமைச்சர் அவர்களுடன் அவரது இல்லத்தில் நமது இயக்கப்பொறுப்பாளர்கள் சந்திப்பு-கோரிக்கைகள் குறித்து நீண்ட நேர ஆலோசனை

மாண்புமிகு கல்விதுறை அமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்து சுமார் ஒரு மணிநேரம் கல்வி வளர்ச்சி, ஆசிரியர் பிரச்சினை குறித்து நமது சங்க பொறுப்பாளர்கள் சந்தித்து பேசிய போது
 


கல்விதுறை இயக்குனர்கள் திரு கார்மேகம் , திரு இளங்கோவன் , திரு இராமேஸ்வர முருகன் அவர்களை நமது சங்க பொறுப்பாளர்களை சந்தித்த போது

விரைவில் கல்விதுறையில் நடக்க போகின்ற மாற்றங்கள்

. (1) உயர்கல்வி பயில இனி அனுமதி வாங்க வேண்டிய அவசியம் இல்லை.    (2) சூன் 15 க்குள் அனைத்து ஆசிரியர்களுக்கும் பயிற்சி .
  (3) இனி அரசு பள்ளியில் ஆங்கில மீடியம் இல்லை
 (4) விலையில்லா பொருள்கள் அனைத்தும் இந்த ஆண்டு முதல் பள்ளியிலே வழங்கபடும். ...
(5) 6,7,8 மாணவர்களுக்கு கணினி கல்வி கட்டாயம்
(6).  பணி நிரவல் உண்டு.
(7) பள்ளியில் 100 நாள் வேலை பார்பவர்கள் மூலம் நாள்தோறும் சுத்தம் செய்தல்.
 (8) PTA குழுவில் சில மாற்றங்கள். (9) வருகிற கல்வியாண்டு முதல் ஏப்ரல் 20 ந்தேதி முதல் தொடக்கப்பள்ளிக்கு விடுமுறை.
 (10) CRC க்கு கொடுத்த சிறப்பு தற்செயல் நிறுத்தம் ..
(11)” வாழ்ஜ வளமுடன்” வேதாத்திரி மகரிஷி அறக்கட்டளையுடன் இணைந்து அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் யோகா பயிற்சி அளிக்க விரைவில் நடவடிக்கை
(12) வாரத்தில் ஒருநாள் மட்டும் கூட்டு பிராத்தனை வழிபாடு ,பிற நாட்களில் தினமும் நன்னெறிக்கல்வி,ஒழுக்க போதனைகள்.போன்றன



..                  கோ.நாகராஜன் , மாவட்ட செயலர் , திருச்சி. தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி.

G.O - 105-நாள்-26.04.2017- நிதித்துறை : 4% அகவிலைப்படி உயர்வுக்கான அரசானை வெளியீடு

CLICK HERE -4 % DA-G.Os of Finance Department - Tamil Version

 CLICK HERE-4 % DA-G.Os of Finance Department - English Version

G.O.No.108 Dt: April 27, 2017 -PENSION - Dearness Allowance to the Pensioners and Family Pensioners - Revised rate admissible from 1st January 2017 - Orders - Issued.

Click here G.O.No.108 Dt: April 27, 2017  -PENSION - Dearness Allowance to the Pensioners and Family Pensioners - Revised rate admissible from 1st January 2017 - Orders - Issued

Direct Recruitment of Graduate Assistants - 2016 - Notification / Advertisement

Click here Click here for Notification / Advertisement


Click here Click here for Application Form for the candidates who were 
previously selected by the Board for B.T Assistant post but did not join the 

பொது மாறுதல் கலந்தாய்வு- ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் உதவி ஆசிரியர்களின் கவனத்திற்கு....

🥀 2017-18 இல் மாறுதல் கோரும் ஆசிரியர்கள் புதிய விண்ணப்பப்படிவத்தினைப் பூர்த்தி செய்து 05.05.17 மாலைக்குள்
அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

🥀 மாறுதல் கோரும் தொடக்க / நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் ஒன்றியத்திற்குள் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.

🥀 பட்டதாரி / இடைநிலை/உடற்கல்வி ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள், ஒன்றியம் விட்டு ஒன்றியம், மாவட்டம் விட்டு மாவட்டம் விண்ணப்பிக்க ஒரே படிவத்தில் தேவையான மாறுதல் இனங்களில் ✔ (டிக்) குறியீடு இட்டு விண்ணப்பித்தல் வேண்டும்.

CHIEF MINISTER'S BEST PRACTICES AWARD - 2017


DEE-Transfer சுற்றறிக்கை-2 AEEO tranfer & application

DEE- TRANSFER 2017 -சுற்றறிக்கை-2

தொடக்கக்க்கல்வி மாறுதல் விண்ணப்பம் -3 பக்கம்

CLICK HERE-PDF FORMATE

CLCK HERE  -WORD FORMATE

இயக்குனர்கள் மாற்றம்

1. பள்ளி கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், ஆர்எம்எஸ்ஏ இயக்குனராக மாற்றம்

2. தொடக்க கல்வித்துறை இயக்குனர் இளங்கோவன், பள்ளி கல்வித்துறை இயக்குனராக மாற்றம்

3. ஆர்.எம.எஸ்.ஏ இயக்குனர் அறிவொளி, ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனராக மாற்றம்

4. ஆசிரியர் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் ராமேஸ்வர முருகன், முறைசாரா கல்வி இயக்குனராக மாற்றம்

5. முறைசாரா கல்வி இயக்குனர் பழனிசாமி, பாடநூல் கழகத்தில் செயலராக மாற்றம்

6. பாடநூல் கழக செயலாளர் கார்மேகம், தொடக்க கல்வித்துறை இயக்குனராக மாற்றம்.....


web stats

web stats