rp

Blogging Tips 2017

தேர்வு எழுத 8.47 லட்சம் பேர் விண்ணப்பம் டிஇடி ஹால்டிக்கெட் தயார்

டிஇடி தேர்வு எழுத விண்ணப்பித்துள்ள 8 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு ஹால்டிக்கெட் தயாரிக்கும் பணியில் டிஆர்பி ஈடுபட்டு வருகிறது. இதை, அடுத்த வாரம் தபாலில் அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த டிஇடி தேர்வை ஏப்ரல் மாதத்துக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து ஏப்ரல் 29, 30 தேதிகளில் டிஇடி தேர்வு நடக்க உள்ளது.

50 ஆண்டு அரசுப்பள்ளி : கவுரவிக்கிறது கல்வித்துறை.

50 ஆண்டுகளாக இயங்கும் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளை கவுரவிக்க, கல்வித்துறை முடிவு செய்துள்ளது.அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. சில பள்ளிகள், அப்பகுதியினரின் ஒத்துழைப்போடு சிறப்பாக செயல்படுகின்றன. இதில், ௫௦ ஆண்டுகள் பழமையான பள்ளிகளும் உண்டு; இப்பள்ளிகளை கவுரவிக்க கல்வித்துறை முடிவு

தமிழகம் முழுவதும் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு ஏப்ரல் 10 முதல் தொடங்குகிறது.

அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பி வைத்துள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகள் தொடர்ந்து 30 வேலை நாட்களில் எவ்வித முன்னறிவிப்பின்றி ஒரு குழந்தை பள்ளிக்கு வராமல் இருந்தால் அக்குழந்தையை இடைநின்ற குழந்தையாக கருத வேண்டும்.
பள்ளியே செல்லா குழந்தைகள், எட்டாம் வகுப்பு முடிக்காமல் இடை நிற்பவர்கள் கண்டறியப்பட வேண்டும்.
மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றியங்களிலும் எந்தவொரு குடியிருப்பும் விடுபடாமல் வீடு வாரியாக கணக்கெடுப்பு பணி நடைபெற வேண்டும்.

மாடல் தயாரித்து கற்றல் : நடுநிலைப்பள்ளிகளில் அறிமுகம்

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்களே செயல்திட்ட மாடல்களைதயாரித்து, கற்கும் முறை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிகளில் 'செயல் திட்டவழிக் கற்றல்' திட்டத்தை தொடக்கக் கல்வித்துறை செயல்படுத்தி உள்ளது. 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் தாங்களே அறிவியல், கணித பாடங்களுக்குரிய செயல்திட்ட மாதிரிகளை தயாரித்து கற்க உள்ளனர். இதற்காக மாவட்டத்திற்கு 35 நடுநிலைப் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.ஒரு பள்ளிக்கு 3 ஆயிரம் ரூபாய் வீதம் மாவட்டத்திற்கு

1990 - 91 ஆம் ஆண்டு தொகுப்பு ஊதியத்தில் பணியாற்றிய காலத்தில் ஈட்டிய விடுப்பினை கணக்கில் சேர்த்துக் கொள்வது பற்றிய திருவண்ணாமலை மாவட்ட தொடக்க கல்வி அலுவலரின் ஆணை !! தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் கோரிக்கை ஏற்பு

ஊதியக்குழு ஆய்வுக்குழு முன்பு கோரிக்கைகள் சமர்பிக்க அனைத்துசங்க நிர்வாகிகளுக்கு அழைப்புக்கடிதம்

பென்ஷன் திட்ட ஆய்வு காலாவதியானது கமிட்டி

பழைய ஓய்வூதிய திட்டத்தை ஆய்வு செய்யும் கமிட்டியின், கால அவகாசம் முடிந்து, 11 நாட்களாகிறது. ஆயுட்காலத்தை அரசுநீட்டிக்காததால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய கோரி, அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், இரு ஆண்டுகளுக்கு முன், தொடர் போராட்டம் நடத்தினர்.
2016, சட்டசபை தேர்தலுக்கு முன், பிப்.,19ல், பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வருவது குறித்து ஆய்வு செய்ய, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தஷீலா நாயர் தலைமையில், நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அமைக்கப்பட்டு, ஓர் ஆண்டை தாண்டிய நிலையில், இன்னும் அறிக்கை தாக்கல் செய்யவில்லை. மூன்று மாதத்திற்கு ஒருமுறை, குழுவின் ஆயுட்காலம் முடிவதும், பின், ஆயுள் காலத்தை நீட்டிப்பதும் வழக்கமாக உள்ளது. வழக்கம் போல், டிச.,25ல், குழுவின் ஆயுட் காலம் முடிந்தும், நீட்டிக்கப்படவில்லை.

எஸ்.பி.ஐ.,அதிரடி - கணக்கு முடிக்க : ரூ.575 கட்டணம்

பாரத ஸ்டேட் வங்கியில் உள்ள கணக்கை முடித்துக் கொள்ள, 575 ரூபாய் அபராதம்வசூலிக்கப்படுவது, வாடிக்கையாளர்களை அதிர்ச்சிஅடைய வைத்து உள்ளது.  பொதுத் துறை வங்கியான, எஸ்.பி.ஐ., எனப்படும், பாரத ஸ்டேட் வங்கி, வாடிக்கையாளர்களின், குறைந்தபட்ச இருப்புத் தொகை வரம்பை சமீபத்தில் உயர்த்தியது.இதன்படி, மாநகரங்களில், 5,000; நகரங்களில், 3,000; சிறிய நகரங்களில், 2,000, கிராமங்களில், 1,000 ரூபாய் என, இருப்புத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

TET-2017 வெயிட்டேஜ் முறையில் மாற்றம் இருக்காது : அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் தகுதி தேர்வில் வெயிட்டேஜ் முறையில் மாற்றம் இருக்காது என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கல்வி குறித்த தகவலை வழங்க புதியஇணையதளத்தை தொடங்க உள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஆசிரியர் வருங்கால வைப்பு நிதி தற்போது பொது சேமநலநிதியாக மாற்றம்.... இணையத்தில் சரிபார்த்துக்கொள்ளவும்.

CLICK HERE TO VIEW and download the statement
Image may contain: text

தமிழ், ஆங்கிலத்தில் 'சென்டம்' ரத்து : 10ம் வகுப்பு தேர்வில் அதிரடி.

சமீபத்தில் முடிந்த, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், தமிழ், ஆங்கில பாடங்களுக்கு, 'சென்டம்' என்ற நுாற்றுக்கு நுாறு மதிப்பெண், ரத்து செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் முடிந்த, 10ம் வகுப்பு தேர்வு விடைத்தாள் திருத்தம், ஏப்., 1ல் துவங்கியது.

ஜூன் 1-ம் தேதிக்குள் ஆசிரியர் நியமன பணிகள் முடிக்கப்படும், ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் ஏப்ரல் 3-வது வாரத்தில் வழங்க ஏற்பாடு

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப் பங்களை பரிசீலனை செய்யும் பணி ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. விண்ணப்பதாரர்களுக்கு ஏப்ரல் 3-வது வாரத்தில் ஆன்லைனில் ஹால் டிக்கெட் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு ஏப்ரல் 29, 30 தேதிகளில் நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இதற்கான விண்ணப்ப படிவங்கள் கடந்த மார்ச் 6 முதல் 22-ம் தேதி வரை தமிழகம் முழுவதும் பல்வேறு மையங்களில் விற்பனை செய்யப்பட்டன. பூர்த்தி செய்யப் பட்ட விண்ணப்ப படிவங்கள் மார்ச் 23-ம் தேதி வரை பெற்றுக்கொள்ளப்பட்டன.

படித்துக்கொண்டிருக்கும் போது அரசுப் பணியில் சேர்ந்த அரசு ஊழியர் அனுமதி பெற்று விடுப்பு எடுத்து படிப்பை முடிக்கலாம்-அரசாணை-732


தனியார் பள்ளி ஆசிரியர்கள் (non-minority) மற்றும் அரசுபள்ளி ஆசிரியர்கள், 2012 வரை சீனியாரிட்டி முறையில் பணி அமர்த்தப்பட்ட ஆசிரியர்களிடம் கடைசி தகுதிதேர்வு என எழுதி வாங்ககூடாது என்பதற்கான தடை ஆணை


தொடக்கக் கல்வி - 50 வருடங்களுக்கு மேல் இயங்கும் பள்ளிகள் மற்றும் முன்னாள் முதலமைச்சர்களால் துவக்கப்பட்ட இதர சிறப்பு வாய்ந்த பள்ளிகளின் விவர பட்டியல் சமர்ப்பிக்க உத்தரவு -நாள் 05/04/2017

தொடக்கக்கல்வி - உயர்தொடக்கநிலை பள்ளிகளில் "PROJECT BASED LEARNING" செயல்படுத்த நிதி ஒதுக்கி இயக்குனர் உத்தரவு - செயல்முறைகள் !!


ஏப்ரல் மாதம் தலைமை ஆசிரியர்கள் கவனத்தில் கொள்ளவேண்டியவை:

1. ஏப்ரல் மாத MR இரண்டு படிவம்.

2. CCE பதிவேடுகள் முடித்தல்.

3. ஏப்ரல் இரண்டாவது வாரத்தில்  SHAALA SIDDHI Form Update.

4. ஏப்ரல் 21 மூன்றாம் பருவத் தேர்வு தொடக்கம்.

5. ஏப்ரல் 22 சனிக்கிழமை   பள்ளி வேலை நாள்.

6. மே மாதம் சம்பளப்பட்டியல்.

கூடுதல் காப்பு வைப்பு தொகை வசூலிக்கிறது மின் வாரியம்

செக்யூரிட்டி டிபாசிட்' என அழைக்கப்படும், காப்பு வைப்பு தொகை, கூடுதலாக வசூலிக்கப்படுவது குறித்த விபரத்தை, மின் வாரியம் அதிகாரப் பூர்வமாக வெளியிட்டுள்ளது. 

தமிழ்நாடு மின் வாரியம், புதிய மின் இணைப்பு வழங்கும் போது, 'செக்யூரிட்டி டிபாசிட்' என்ற பெயரில், குறிப்பிட்ட தொகையை வசூலிக்கும். மின் பயன்பாட்டை பொறுத்து, வீடு உள்ளிட்ட தாழ்வழுத்த இணைப்புகளுக்கு, இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை, செக்யூரிட்டி டிபாசிட் மாற்றம் செய்யப்படும். நடப்பு நிதியாண்டு துவங்கியதை அடுத்து, கூடுதல் செக்யூரிட்டி டிபாசிட் வசூல் விபரத்தை, மின் வாரியம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. 
சென்னை: ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்கா விட்டால் அபராதம் விதிக்க வழி செய்யும் மத்திய அரசின் மோட்டர் வாகன விதியை ரத்து செய்து சென்னை
உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

மோட்டார் வாகன சட்டத்தின் குறிப்பிட்ட விதிமுறைகள் தொழில் நடைமுறைக்கு சிரமமாக இருப்பதாக கூறி வாகனப்பயிற்சி பள்ளி உரிமையாளர்கள் சங்கம் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கம் இரண்டும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

200 ரூபாய் நோட்டு வெளியிட ரிசர்வ் வங்கி திட்டம்

மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு பழைய 500,1000 ரூபாய் நோட்டுகள் செல்லாமல் போனது. இதையடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சடித்து புழக்கத்தில் விடப்பட்டது. பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பிறகு புழக்கத்தில் இருந்த பணத்தை குறைத்து டிஜிடல் பணப்பரிவர்தனையை அரசு ஊக்குவிக்கத் தொடங்கியது.

ஏப்ரல் - 2017 மாத அட்டவணை

அரசு பேருந்துகளில் பயணிக்கும் மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய அரசுக்கு உத்தரவு: உயர்நீதிமன்றம்

அரசு பேருந்துகளில் பயணிக்கும் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையை அடுத்த தாம்பரம் அருகே சேலையூரில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ருதி (7), கடந்த 2012-ஆம் ஆண்டு ஜூலை 25-இல் பள்ளிக்கு சொந்தமான பேருந்தில் ஓட்டை வழியே கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

மே 14-க்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த முடியாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு: தேர்தல் ஆணையத்திற்கு உயர் நீதிமன்றம் கண்டனம்

சென்னை: நீதிமன்ற உத்தரவுப்படி வரும் மே மாதம் 14-ஆம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்த இயலாவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க நேரிடும் என்று தமிழக தலைமை தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
வரும் ஏப்ரல் 24-ஆம் தேதிக்குள் தமிழக உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டுமென்று கோரி பாடம் நாராயணன் என்ற சமூக ஆர்வலர் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார்.

பாதுகாப்புப் பெட்டக வசதி, காசோலைகளுக்கான கட்டணம் உயர்வு: பாரத ஸ்டேட் வங்கி அறிவிப்பு

பாரத ஸ்டேட் வாடிக்கையாளர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு பெட்டக வசதி, காசோலை வசதி உள்ளிட்ட பல்வேறுசேவைகளுக்கான கட்டணங்களையும் உயர்த்தியுள்ளது.
இதுகுறித்து அந்த வங்கியின் இணையதளத்தில் வெளியிடப்பட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: பாதுகாப்பு பெட்டகத்துக்கான வாடகைக் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பெட்டகத்தை கட்டணமின்றி பயன்படுத்தும் எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, பாதுகாப்பு பெட்டகத்தை ஆண்டுக்கு 12 முறை மட்டுமே இலவசமாக பயன்படுத்தலாம். அதற்கு மேல் பயன்படுத்தும் வாடிக்கையாளரிடம் ஒவ்வொரு முறையும் ரூ.100 கட்டணத்துடன் சேவை வரியும் வசூலிக்கப்படும்.

NEW EDUCATIONAL POLICY 2016

1. நான்காம் வகுப்பு வரை மட்டுமே கட்டாயத் தேர்ச்சி.

2. ஐந்தாம் வகுப்பில் திறன் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ஆறாம் வகுப்புக்குச் செல்ல முடியும்.

3. ஐந்தாம் வகுப்பில் தேர்ச்சிபெறாத மாணவர்கள்  தொழிற்கல்வி பிரிவுக்கு மாற்றப்படுவர்.


4. தொழிற் பயிற்சி பெற வழிகாட்டல் குழு அமைக்கப்படும்.

5. கல்வி உரிமைச் சட்டப்படி எட்டாம் வகுப்பு வரை தேர்ச்சி முறை ரத்து.

ஜூன் வரை வெயில் வாட்டும்; இயல்பை விட அதிகரிக்கும்

கோடை வெயில் காரணமாக, அடுத்த இரு மாதங்களுக்கு வெப்பம் அதிகரிக்கும்' என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. 

குளிர் காலத்தின் பின் பருவம் முடிந்து, மார்ச், 1 முதல் கோடை வெயில் துவங்கியது. இதில், டெல்டா மாவட்டங்கள், வடக்கு மாவட்டங்களில் துவக்கம் முதலே வெப்பம் அதிகமாக உள்ளது. தென் மாவட்டங்களில் சில பகுதிகளில், 40 டிகிரி செல்சியஸ்; சென்னை உள்ளிட்ட வடகிழக்கு மாவட்டங்களில், 35 டிகிரி செல்சியஸ் வரை, வெப்பம் பதிவானது. ஆனால், தென் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்களில் ஓரளவு மழை பெய்துள்ளது.  

SHAALA SIDDHI - Tamil Tutorial

"SHAALA SIDDHI" இணையதளத்தில் எவ்வாறு பள்ளி விவரங்களை பதிவேற்றம் செய்வது?

 வீடியோ தமிழில் காண 1 - Click Here
வீடியோ தமிழில் காண 2 - Click Here
வீடியோ தமிழில் காண 3 - Click Here
வீடியோ தமிழில் காண 1 (Old)- Click Here

EXCEL FORMAT - Click Here
Dashboard Form - Click Here

'Shaala Siddhi' Website Link - Click Here 

TPF TO GPF Account Slip Soon will publish

ஆசிரியர் சேமநலநிதி 2014 -2015 வருட கணக்கீட்டுத்தாள்
இந்த வாரத்தில் வெளியாக வாய்ப்பு.மாநிலக் கணக்காயர் அலுவலகத்தில்( AG'S) இருந்து  திருத்தம் செய்யப்பட வேண்டிய மாநகராட்சி /நகராட்சி ஆசிரியர்கள் கணக்கீட்டுத்தாள் விபரங்கள் சரிசெய்யப்பட்டு NIC இல் (National information centre) விபரங்கள் சனிக்கிழமை (01/04/2017)
அன்று ஒப்படைக்கப் பட்டதால் உடனடியாக வெளியாக வாய்ப்பு.

தங்களின் சேமநலநிதி எண் மற்றும் பிறந்ததேதியை உள்ளீடு செய்து 2014 -15 கணக்கீட்டுத்தாளை பதிவிறக்கம் செய்யலாம்.

வங்கிக் கணக்கில் தினமும் ரூ.5000 வைத்திருப்பது அவசியமா? அறிய வேண்டிய மகிச்சியான தகவல்.

வங்கிக் கணக்கில் 'குறைந்த சராசரி இருப்புத்' தொகையாக ரூ.5 ஆயிரம் முதல் ரூ.1000 வரை வைத்திருக்க வேண்டியதை எஸ்பிஐ வங்கி கட்டாயமாக்கியுள்ளது.

இதே சில தனியார் வங்கிகள் உதாரணமாக ஐசிஐசிஐ வங்கியில் குறைந்த சராசரி இருப்புத் தொகையாக ரூ.10 ஆயிரம் வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயம். தவறுவோருக்கு அபராதம் வசூலிக்கப்படும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

01-04-2017 அன்று ஆம்பூர் நகரில் நடைபெற்ற வேலூர் மாவட்ட ஆயத்தகூட்டம்



01-04-2017 அன்று நடைபெற்ர திருவண்ணாமலை மாவட்ட ஆயத்தக்கூட்டம் மற்றும் த்கண்டராம்பட்டு வட்டார முப்பெரும் விழா





SHAALA SIDDHI - பள்ளித்தரங்கள் மற்றும் மதிப்பீட்டு திட்டதகவல்கள் வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது எவ்வாறு -ஓர் வீடியோ விளக்கம் (TAMIL VIDEO)


தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் புத்தகங்களை செல்போனில் டவுன்லோடு செய்யலாம்: பள்ளி கல்வித்துறை ஏற்பாடு.

பள்ளி கல்வி துறை சார்பில் நடைபெற்ற விரிவுரையாளர்கள் பணியிடங்களுக்கான நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சி அம்பத்தூரில் நேற்று நடைபெற்றது.நிகழ்ச்சியை தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசியதாவது:

துறைத்தேர்வுக்கு விண்ணப்பிக்க ஏப்.7 வரை அவகாசம்.

தமிழக அரசின் பல்வேறு துறை களில் பணியாற்றும் ஊழியர்கள்மற்றும் அதிகாரிகள், அதே போல், அரசு பள்ளிகளில் பணி புரியும் ஆசிரியர்கள் ஆகி யோரின் பதவி உயர்வுக்காக ஆண்டுக்கு 2 தடவை (மே, டிசம்பர்) துறைத்தேர்வுகள் நடத்தப்படுகின்றன.

பெரிய அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள அரசு உதவி பெறும் பள்ளி TET நிபந்தனை ஆசிரியர்கள்!!! - தினத்தந்தி ஆங்கில நாளிதழ்.

பள்ளிக்கு தாமதமாக வரும் ஆசிரியருக்கு 17.A வின்படி நடவடிக்கை எடுக்கவேண்டும் - தொடக்கக்கல்வி இயக்குநர்

31/03/2017 பிற்பகல் காணொலிக்காட்சி மூலம் தொடக்கக்கல்வி இயக்குநர் தமிழகத்தில் உள்ள எல்லா AEEO களுக்கும் meeting நடத்தி சில விபரங்கள் கூறியுள்ளார்.* (கூட்டம்2.00 to 4.30 வரை நடந்தது.)

➡காலையில் AEEO ஏதேனும் ஒரு பள்ளியில் இறைவணக்க கூட்டத்தில் கலந்துகொள்ளவேண்டும்.இல்லையேல் AEEO மேல்நடவடிக்கை எடுக்கப்போவதாக கூறியுள்ளார்.

➡பள்ளிக்கு தாமதமாக வரும் ஆசிரியருக்கு 17.A படிநடவடிக்கை எடுக்கவேண்டும் எனக்கூறினார்.

➡புத்தக பூங்கொத்து படிக்கும் நிலையில் இருக்க வேண்டும் எனவும் வெள்ளிக்கிழமைக்குள் சரியாக இருக்கவேண்டும்.

தொடக்கக்கல்வி -ஊராட்சி ஒன்றிய /நகராட்சி /அரசு பள்ளி ஆசிரியர்கள் 01.01.2017 நிலவரப்படி பதவி உயர்வுக்கு தகுதியான தேர்ந்தோர் பட்டியல் -தயாரித்தல் -அறிவுரைகள் -வழங்குதல் -சார்ந்து

CLICK HERE TO DOWNLOAD-DEE-2017 PANEL PREPARATION REG

எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் கவனிக்க வேண்டிய 7 முக்கிய விஷயங்கள்

ஏடிஎம்-மில் பணம் எடுப்பதற்கான புதிய கட்டணம், குறைந்த பண இருப்பு இல்லாவிட்டால் அபராதம் என எஸ்பிஐ வங்கி கொண்டு
வந்துள்ள மிக முக்கிய கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வருகின்றன.
நீங்கள் எஸ்பிஐ வங்கியில் கணக்கு வைத்திருப்பவராக இருந்தால், நிச்சயம் இந்த தகவல்களை அறிந்திருக்க வேண்டும்.
குறைந்த பண இருப்பு
பெரு நகரங்களில் இருக்கும் வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கிக் கணக்கில் குறைந்தது 5 ஆயிரம் ரூபாயை இருப்பாக வைத்திருக்க வேண்டும். ஊரக, பாதி ஊரக மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கியின் வாடிக்கையாளர்கள் முறையே ரூ.3,000, ரூ.2,000 மற்றும் ரூ.1,000 என இருப்பு வைக்க வேண்டியது அவசியம்.

ஆய்வக உதவியாளர் பணியிடங்கள்: மாவட்ட வாரியாக சான்றிதழ் சரிபார்ப்பு மையங்கள் அறிவிப்பு !!

ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு மாவட்ட வாரியாக சான்றிதழ்
சரிபார்ப்பு மையங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் அனுமதிக்கப்பட்ட ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான நேரடி நியமனத்திற்கான எழுத்துத் தேர்வு முடிவுகள் கடந்த மார்ச் 24 -ஆம் தேதி இணையதளத்தில்வெ ளியிடப்பட்டது.

web stats

web stats