rp

Blogging Tips 2017

புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட எஸ்பிஐ கிரெடிட், டெபிட் கார்டுகள் அறிமுகம்

புதிய தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட டெபிட், கிரெடிட் கார்டுகளை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
        பாரத ஸ்டேட் வங்கி ‛எஸ்பி இன் டச்’ என்ற டெபிட் கார்டு, ‛எஸ்பிஐ சிக்னேச்சர்’ என்ற கிரெடிட் கார்டுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னை ஐஐடி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐஐடி தலைவர் (நிர்வாகம்) பேராசிரியர் பி.ஸ்ரீராம், பாரத ஸ்டேட் வங்கியின் பொது மேலாளர் ஜி.ரீட்டா, ஐஐடி பதிவாளர் வி.ஜி.பூமா ஆகியோர் இக்கார்டுகளை அறிமுகப்படுத்தினர்.

10ம் வகுப்பு துணை தேர்வு அட்டவணை

10ம் வகுப்பு துணை தேர்வு அட்டவணை
26-6-15-மொழிப்பாடம்1
27-6-15-மொழிப்பாடம்2
29-6-15-ஆங்கிலம் 1
30-6-15-ஆங்கிலம்2
1-7-15-கணக்கு
2-7-15-அறிவியல்
3-7-15-சமூக அறிவியல்
தேர்வு காலை 9மணி முதல் 12
விண்ணப்பிப்பதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்

ஜூன் 22 முதல் ஜூலை 3 வரை பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: மே 20 வரை விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வுகளுக்கு மே 20-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

        தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த மே 7-ஆம் தேதி வெளியிடப்பட்டன. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய இந்தத் தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கான சிறப்பு துணைத் தேர்வு ஜூன் 22-ஆம் தேதி முதல் ஜூலை 3-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி:

'கவுன்சிலிங்' செல்வதற்குள் அசத்தலாக ஓர் 'TNEA COUNSELLOR ஆப்ஸ்' : கோவை மாணவியின் சேவை

பிளஸ் 2 முடிவு வெளியானதும், இன்ஜி., துறையில் கால்பதிக்க நினைக்கும் மாணவர்களுக்கும், அவர்கள் பெற்றோருக்கும் இருக்கும், ஒரே தலைவலி 'கவுன்சிலிங்'.'கட் ஆப்' மதிப்பெண்ணுக்கு ஏற்ப, எந்த கோர்ஸ், எந்த காலேஜில் கிடைக்கும் என்பதை அறியவே, ஒரு மாதமாகிவிடும். ஆனால், கோவையை சேர்ந்த பிளஸ் 2 மாணவி, இதை ஒரு சில நொடிகளிலே தெரிவிக்கும் புதிய, 'ஸ்மார்ட்போன்' அப்ளிகேஷனை கண்டுபிடித்துள்ளார்.
வித்யா நிகேதன் பள்ளி மாணவியான பியோனா விக்டோரியா, பிளஸ் 2 முடித்து, தற்போது இன்ஜி., கவுன்சிலிங்குக்காக காத்துக் கொண்டிருக்கிறார். அப்பா ஸ்டான்லி, அம்மாநிர்மலா, இருவரும் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகின்றனர்.தனது

கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு பதவி பெற கருணை அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்களுக்கு உரிமை உள்ளது ஐகோர்ட்டு உத்தரவு

கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு பதவி பெற கருணை அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்களுக்கு உரிமை உள்ளது ஐகோர்ட்டு உத்தரவு
        கல்வித் தகுதிக்கு ஏற்ப அரசு பதவியை பெறுவதற்கு கருணை அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்களுக்கு உரிமை உள்ளது என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கருணை பணி

சென்னை ஐகோர்ட்டில், வி.பாபு என்பவர் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், ‘அரசு பணியில் இருந்து என் தந்தை இறந்ததை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு வாகன பராமரிப்பு துறையில் கருணை அடிப்படையில் எனக்கு காவலாளி பணி 2008-ம் ஆண்டு வழங்கப்பட்டது. நான் பணியில் சேரும்போது,

கம்ப்யூட்டர் துறையில் அதிக வேலைவாய்ப்பு: அறிவியல் ஆலோசகர் பேச்சு

 "கம்ப்யூட்டர் துறையில் பொறியியல் படித்த மாணவர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன,” என அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் பேசினார்.

        ராமநாதபுரம் செய்யது அம்மாள் பொறியியல் கல்லூரியில் நடந்த தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கில் அவர் பேசியதாவது: பொறியியல் படித்த மாணவர்கள் வெளிநாடுகளில் தகவல் தொழில்நுட்ப துறையில் (ஐ.டி., ) பணிபுரிய விரும்புகின்றனர். ஆனால், இந்தியாவில் பொறியியல் பட்டதாரிகள் அனைத்து துறைகளிலும் வேலைவாய்ப்பு பெறும் வகையில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டும்.

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு நாளை முதல் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்: நேரடி விண்ணப்ப விநியோகம் இல்லை

கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு நாளை முதல் இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம்: நேரடி விண்ணப்ப விநியோகம் இல்லை
    கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புகளுக்கு ஞாயிற்றுக்கிழமை (மே 17) முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.
   இந்தப் படிப்புகளுக்கு இணையதளம் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும், நேரடி விண்ணப்ப விநியோகம் கிடையாது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஐந்தரை ஆண்டு கால்நடை மருத்துவ அறிவியல் படிப்பு (பி.வி.எஸ்சி.), பி.டெக். உணவுத் தொழில்நுட்பம், பி.டெக். கோழியின உற்பத்தித் தொழில்நுட்பம், பி.டெக் பால்வளத் தொழில்நுட்பம் ஆகிய மூன்று படிப்புகளில் சேருவதற்கு மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

2 அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு அனுமதி


திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு, இறுதி அனுமதி கிடைத்துள்ளது. கூடுதல் இடங்கள் கிடைத்த நான்கு கல்லூரிகளில், மாணவர் சேர்க்கைக்கு இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.


தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லூரிகளில், 2,555 எம்.பி.பி.எஸ்., இடங்கள் உள்ளன. விழுப்புரம், திருவாரூர் மருத்துவ கல்லூரிகள் துவக்கப்பட்டு, ஐந்து ஆண்டுகள் ஆகும் நிலையில், இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ.,யின் இறுதி அனுமதி சமீபத்தில் கிடைத்துள்ளது. இதனால், ஆண்டுதோறும் அனுமதி பெற வேண்டிய அவசியம் இல்லை. சென்னை, ஸ்டான்லி, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரிகள் உட்பட, ஒன்பது கல்லூரிகளில், அவ்வப்போது, கூடுதல் எம்.பி.பி.எஸ்., இடங்கள் பெறப்பட்டன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கு, ஆண்டுதோறும்

மகப்பேறு விடுப்பு.புதிய வழிகாட்டு நெறிமுறை -

பெண் அரசு ஊழியர்களுக்கு ஆறு மாதம் மகப்பேறு விடுப்பு அளிப்பது தொடர்பான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது குறித்து பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை (பயிற்சி) முதன்மைச் செயலாளர் அனிதா ப்ரவீன் அனைத்துத் துறை செயலாளர்கள், நீதிமன்றங்கள் உள்ளிட்டவற்றுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

       அரசுப் பணியில் நிரந்தரமாக பணியாற்றும் இளம் தாய்மார்களுக்கு ஆறு மாத கால மகப்பேறு விடுப்பு அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு இரண்டு குழந்தைகளுக்கு குறைவாக இருந்தால் இந்த விடுப்பினைப்

நாகையில் வாகனத்தை நிறுத்தாததால் ஆசிரியையை தாக்கிய போலீஸ்காரர்

நாகையை அடுத்த தெற்கு பொய்கைநல்லூர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன் மனைவி சர்மிளா (வயது 38). இவர் நாகையில் உள்ள அரசு பெண்கள் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.
              இவர் நேற்று பணி முடிந்து மோட்டார் சைக்கிளில் நாலுகால் மண்டபம் அருகில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து போலீஸ்காரர் காளிதாஸ் திடீரென சர்மிளாவின் மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்தி, கீழே தள்ளி தாக்கியதாக கூறப்படுகிறது. இதனை கண்ட அந்த வழியே சென்ற பொதுமக்கள் பெண்ணை தாக்கிய போலீஸ்காரர் காளிதாசிடம் வாக்குவாதம் செய்து தாக்கினர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஓபிசி (OBC )சான்றிதழ் - சில தகவல்கள்

மத்திய அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில், பிற்படுத்தப்பட்டோ ருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு 1993 முதல் வேலை வாய்ப்பிலும், 2007
முதல், மத்திய அரசின் கல்வி நிலையங்களான அய்.அய்.டி, அய்.அய்.எம் போன்ற உயர்கல்வி நிறு வனங்களில் நடைமுறைப்படுத்தப்படு கிறது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.

       இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப் பிப்பதற்கும், கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கும், பிற்படுத்தப்பட்ட சமுதாய மாணவர்கள், அதற்கான ஜாதி சான்றிதழ் அனுப்பவேண்டும். அதற்குப் பெயர் தான் ஓபிசி சான்றிதழ்.

த.அ.உ.சட்டம் - பட்டதாரி ஆசிரியரின் அடிப்படைக் கல்வித் தகுதி பி.எட்., என்பதால் ஊக்க ஊதியம் பெற வழிவகை இல்லை என தகவல்

RTI - B.ED INCENTIVE FOR BTs REG ORDER CLICK HERE...

ஆதிதிராவிடர் நலம் - 468 இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படவுள்ளதாக தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் நல இயக்குநர் தகவல்

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் திரு. தாஸ் அவர்கள் நமது பொதுசெயலர் திருமிகு செ.மு அவர்களை சந்தித்து உடல் நலம் விசாரித்தார்

இன்று தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் திருமிகு செ.முத்துசாமி அவர்களை தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுசெயலர் திரு .தாஸ் அவர்கள் நாமக்கல் இல்லத்தில் சந்தித்து அவரது உடல் நலம் விசரித்தார்.அப்போது தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில நிர்வாகிகள் உடன் இருந்தனர்.




பள்ளிக்கூட வாகனங்களில் கடைப்பிடிக்க வேண்டிய 22 விதிமுறைகள் தமிழக அரசின் 3 துறைகள் இணைந்து உத்தரவு

இந்த கல்வியாண்டு முதல் பள்ளிக்கூட வாகனங்கள் கடைப்பிடிக்க வேண்டிய 22 விதிமுறைகளை தமிழக அரசின் 3 துறைகள் வெளியிட்டு உள்ளன.

22 விதிமுறைகள்

மாணவர்களை, அவர்களது வீட்டில் இருந்து பள்ளிக்கூடங்களுக்கும், பள்ளிக்கூடங்களில் இருந்து வீடுகளுக்கும் ஏற்றிச்செல்வதற்கு பயன்படுத்தப்படும் பஸ்-வேன் போன்ற வாகனங்கள் கடைபிடிக்க வேண்டிய 22 விதிமுறைகள் அடங்கிய பட்டியலை தமிழக அரசின் போக்குவரத்துத்துறை, பள்ளிக்கல்வி மற்றும் வருவாய் துறைகள் இணைந்து வெளியிட்டுள்ளன.

பாலிடெக்னிக்விண்ணப்பம் விற்பனை துவக்கம்

 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பம், வரும் 18ம் தேதி முதல், விற்பனை செய்யப்படும்' என, அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தில் உள்ள, 41 அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு, பட்டயப் படிப்பு பொதுப் பிரிவு, சிறப்பு ஒதுக்கீடு மற்றும் குறிப்பிட்ட சில பாலிடெக்னிக் கல்லுாரிகளில் நடைபெறும்,

தற்காலிக மதிப்பெண் சான்றிதழால் பதிவில் சிக்கல்

 பிளஸ் 2 தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் மூலம், பள்ளிகளில், வேலைவாய்ப்புக்கு பதிவு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.இந்த ஆண்டு கல்லுாரிகளில் வழங்கப்படும் தற்காலிக பட்டப் படிப்பு சான்றிதழ் போல், பிளஸ் 2 மாணவர்களுக்கும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை, பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது

பிளஸ் 2 மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்: முதல் நாளில் 80 சதவீதம் பேருக்கு விநியோகம்

பிளஸ் 2 மாணவர்களுக்கு தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ் விநியோகம் வியாழக்கிழமை தொடங்கியது. முதல் நாளிலேயே 80 சதவீத மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாக தலைமை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.  8.8 லட்சம் மாணவர்கள்: தமிழகம், புதுவையில் 8 லட்சத்து 86 ஆயிரம் பேர் இந்தாண்டு பிளஸ் 2 தேர்வு எழுதினர்.  மே 7-ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

             அப்போது மதிப்பெண் விவரங்களை மாணவர்கள் இணையதளம் மூலம் தெரிந்து கொண்டனர். இந்த நிலையில், மாணவர்கள் கல்லூரிகளில் சேர்வதற்கான விண்ணப்பங்களுடன் மதிப்பெண் சான்றையும் சமர்ப்பிக்க வேண்டும் என்பதால் இந்த ஆண்டு, முதல் முறையாக தாற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை வழங்க தமிழக அரசு முடிவு செய்தது

மறுமதிப்பீட்டில் மதிப்பெண் குறைந்தால் அதுவே இறுதியானது

 'பிளஸ் 2 தேர்வில், மறு மதிப்பீட்டில் மதிப்பெண் குறைந்தால், அதுவே இறுதியானது' என, தேர்வுத் துறை அறிவித்துள்ளது.பிளஸ் 2 தேர்வில், இயற்பியலில் கடந்த ஆண்டை விட, 95 சதவீதம் குறைவானோர், 'சென்டம்' எடுத்தனர்.

         வேதியியல், விலங்கியல், உயிரியல், கணினி அறிவியல், வணிகவியல், கணித பதிவியல் பாடங்களிலும், 'சென்டம்' எடுத்தோர் எண்ணிக்கை பெருமளவு குறைந்தது.இந்நிலையில், ஏராளமான மாணவர்கள் மறு கூட்டல், விடைத்தாள் நகல் மற்றும் மறுமதிப்பீடு செய்ய முடிவு செய்துள்ளனர்.

தேர்வுத் துறை வெளியிட்டுள்ள நிபந்தனைகள்:

பிளஸ் 2 சான்றிதழ் பிழை திருத்த தலைமையாசிரியர்க்கு அதிகாரம்

 பிளஸ் 2 முடித்தவர்களுக்கு, தற்காலிக மதிப்பெண் வழங்கும் போது, அதில் எழுத்துப் பிழை இருந்தால், தலைமையாசிரியரே திருத்தம் செய்ய அதிகாரம் வழங்கப்பட்டு உள்ளது. அதேநேரம், 'மதிப்பெண் சான்றில், மதிப்பெண் விவரத்தில், 'கை' வைக்கக் கூடாது' என, உத்தரவிடப்பட்டு உள்ளது.

           பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழில் மாணவர் பெயர், பள்ளி, முகவரி, மதிப்பெண், பிறந்த தேதி உள்ளிட்டவற்றில், எழுத்துப்பிழை, அச்சுப்பிழை வருவதால், இந்த ஆண்டு கல்வித் துறை மாற்றுத்திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களும் எந்த வித புகாருக்கும் இடம் அளிக்காமல் சிறப்பாக நடத்தவேண்டும்; முதன்மை செயலாளர் த.சபீதா

 தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பள்ளிக்கூடங்களும் எந்த வித புகாருக்கும் இடம் அளிக்காமல் சிறப்பாக நடத்தவேண்டும் என்று அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா அறிவுரை வழங்கினார்.
கல்வி அதிகாரிகள் கூட்டம்
வருகிற ஜூன் 1-ந்தேதி தமிழ்நாடு முழுவதும் அனைத்து பள்ளிக்கூடங்களும் திறக்கப்பட உள்ளன. பள்ளிக்கூடங்கள் திறக்கும் முன்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளையும், அனைத்து மாவட்ட மெட்ரிகுலேசன் ஆய்வாளர்களையும் அழைத்து சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் நேற்று கூட்டம் நடத்தப்பட்டது.

பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் கவனத்திற்கு Chartered Accountant (CA Course) படிப்பது எப்படி?

CA படிப்புக்கென தனிப்பட்ட முறையில் எந்த ஒரு கல்லூரி மற்றும் கல்வி நிறுவனங்களும் கிடையாது.
எனவே இதை எப்படி படிப்பது?
இதற்கென பாராளுமன்றத்தால் சட்டம் இயற்றப்பட்டு The Institute of Chartered Accountants of India Act,1949 என்ற சட்டத்தின்படி The Institute of Chartered Accountants of India (ICAI) என்ற அமைப்பின்கீழ் செயல்படும் சட்டபூர்வ அமைப்பாகும். அதன் தலைமை இடம் புது டெல்லியிலும், அதன் கிளைகள் 144 இடங்களிலும் செயல்பட்டு வருகிறது.

CA - படிக்க விரும்பும் மாணவர்கள் ICAI கிளைகள் மூலமாக அல்லது www.ICAI.org என்ற இணையதளம் மூலமாக பதிவு செய்து தொலைதூர கல்வியாகத் (Correspondence Course) தான் படிக்க முடியும்.

பள்ளிக்கல்வித் துறை- 'பயோ மெட்ரிக்' திட்டத்தால் பைல் தேக்கம் குறைந்தது


பள்ளிக்கல்வித் துறையில், 10 இயக்குனரகங்கள் உள்ளன. இதில், தேர்வுத் துறையில், முதன்முறையாக ஊழியர் மற்றும் அதிகாரிகளுக்கு, 'பயோ மெட்ரிக்' திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதனால், பணிமுடியும் முன், 'எஸ்கேப்' ஆகும் ஊழியர் எண்ணிக்கை குறைந்து, அலுவலக பணி நேரம் அதிகரித்து உள்ளது.
தமிழக அரசு அலுவலகங்களில், பணியாளர்கள் தங்கள் விருப்பத்துக்கு ஏற்ப அலுவலகம் வந்து விட்டு, வராத நாட்களுக்கும் கையெழுத்து போட்டு, மோசடி நடப்பதாக புகார் எழுந்தது. எனவே, அரசுத் துறை அலுவலகங்களில், 'பயோ மெட்ரிக்' என்ற விரல் ரேகை பதிவு முறை அறிமுகப்படுத்த உத்தரவிட்டது. அந்த வகையில், தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன்

உள்ளாட்சி அமைப்புகளிடம் அரசுப் பள்ளி கழிப்பறை பராமரிப்பு பணிகள்: அரசு உத்தரவு

 அரசுப் பள்ளிகளின் கழிப்பறை பராமரிப்பு பணிகளை, உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைத்து, அரசு உத்தரவிட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில், போதுமான கழிப்பறை வசதியில்லை. இருக்கும் பள்ளிகளிலும், முறையான பராமரிப்பு இல்லாததால், சுகாதாரக்கேடு ஏற்பட்டு, மாணவர்கள் அவதிப்படுகின்றனர்.

அனைத்து அரசுப் பள்ளிகளிலும், கழிப்பறையை உறுதிசெய்ய வேண்டும் என சமீபத்தில் உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது. இந்நிலையில், அரசுப் பள்ளிகளின் கழிப்பறை பராமரிப்பு பணியை, உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைத்து, அரசு உத்தரவிட்டுள்ளது.

TNOU ‌பி.எ‌ட். படி‌‌ப்புக‌ளி‌‌ல் சே‌ர்வத‌ற்கான ‌வி‌ண்ண‌‌ப்ப‌ங்க‌ள் ஜூ‌ன் 9ஆ‌ம் தே‌தி முத‌ல் வழ‌ங்க‌ப்படு‌ம்

த‌மி‌ழ்நாடு ‌திற‌ந்த‌நிலை ப‌ல்ககலை‌க்கழக‌த்‌தி‌ல் (TNOU) ‌பி.எ‌ட். படி‌‌ப்புக‌ளி‌‌ல் சே‌ர்வத‌ற்கான ‌வி‌ண்ண‌‌ப்ப‌ங்க‌ள் ஜூ‌ன் 9ஆ‌ம் தே‌தி முத‌ல் வழ‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று அ‌றி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது.
                த‌மி‌ழ்நாடு ‌திற‌ந்த‌நிலை ப‌ல்ககலை‌க்கழக‌த்‌தி‌ல் (TNOU) ‌பி.எ‌ட். படி‌‌ப்புக‌ளி‌‌ல் சே‌ர்வத‌ற்கான ‌வி‌ண்ண‌‌ப்ப‌ங்க‌ள் ஜூ‌ன் 9ஆ‌ம் தே‌தி முத‌ல் வழ‌ங்க‌ப்படு‌ம் எ‌ன்று அ‌றி‌வி‌‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. இதுதொட‌ர்பாக தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக‌ம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு: இன்று முதல் விண்ணப்பம் விநியோகம்

தொடக்கக் கல்வி ஆசிரியர் பட்டயப் படிப்பு சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் வியாழக்கிழமை (மே 14) முதல் விநியோகிக்கப்பட உள்ளன. மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்கள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகங்களில் ஜூன் 4-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும்.

         இதற்கான கட்டணம் ரூ. 500 செலுத்தி விண்ணப்பத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ. 250 செலுத்தினால் போதுமானது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூன் 4 கடைசித் தேதியாகும்.

தனியார் நர்சரி பள்ளி மோகத்தால் மூடப்படும் அபாயத்தில் அங்கன்வாடி மையங்கள்


பெற்றோர்களின் நர்சரி பள்ளி மோகத்தாலும், அரசின் அக்கறையின்மையாலும் தமிழகத்தில் அங்கன்வாடி மையங்கள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன.
மேலும்,குழந்தைகள் வருகை விகிதம் குறைவதால் ஆயிரக்கணக்கான முதன்மை மையங்கள், குறுமையமாக மாற்றப்படுவதாக ஊழியர்கள் கூறுகின்றனர்.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் 96 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள் செயல்படுகின்றன. குழந்தைகளுக்கு முன்பருவ கல்வியை அளிக்கும் இந்த மையங்களில் மொழிப்பயிற்சி, கதை, நடனம், பாடல், விளையாட்டு, சத்துணவு என அத்தனை அம்சங்களும் இடம்பெற்றுள்ளன.

பெரியார் மணியம்மை பல்கலை.யில் ஒருங்கிணைந்த பி.எஸ்ஸி., பி.எட். படிப்பு

தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் நான்கு ஆண்டு கால ஒருங்கிணைந்த பி.எஸ்ஸி., பி.எட். பட்டப்படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்தப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் நல். ராமச்சந்திரன் புதன்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: தமிழகத்திலேயே முதல் முதலாக தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் வருகிற கல்வியாண்டில் (2015 - 16) நான்கு ஆண்டு கால ஒருங்கிணைந்த பி.எஸ்ஸி., பி.எட். என்ற புதிய பட்டப்படிப்பு தொடங்கப்படுகிறது. இது, தேசிய ஆசிரியர் கல்விக் குழுமத்தின் (என்.சி.டி.இ.) அங்கீகாரம் பெற்றது

பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியல்: பரிசீலிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தரவரிசைப் பட்டியலை இணையதளத்தில் வெளியிடக் கோரும் மனுவைப் பரிசீலிக்க அண்ணா பல்கலைக்கழகப் பதிவாளருக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை புதன்கிழமை உத்தரவிட்டது.

கன்னியாகுமரி மாவட்டம், கொட்டாரத்தைச் சேர்ந்த ஜி.வி.வைரம் சந்தோஷ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம் இவ்வாறு உத்தரவிட்டது. மனு விவரம்:

பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள் பொறியியல் கல்லூரிகளின் தரத்தை அறிந்து கொள்ள விரும்புவர். தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் தேர்ச்சி விகிதம், கல்வித் தரம், பல்கலைக்கழக தர வரிசை ஆகியவற்றை வெளியிட அண்ணா பல்கலைக்கழகத்துக்கு உரிமை உள்ளது

பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி:இதுவரை 80 ஆயிரம் பேர் விண்ணப்பம்

பிளஸ் 2 விடைத்தாள் நகல், மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வியாழக்கிழமையுடன் முடிவடைய உள்ள நிலையில், 80 ஆயிரத்துக்கு அதிகமானோர் விண்ணப்பத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவு மே 7-ஆம் தேதி வெளியிடப்பட்டது. 8 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதிய இந்தத் தேர்வில் 90.6 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர். இயற்பியல், வேதியியல், உயிரியல் உள்ளிட்ட தேர்வுகள் சற்றே கடினமாக இருந்ததால், அந்தப் பாடங்களில் முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு வெகுவாகக் குறைந்தது. மேலும், எம்.பி.பி.எஸ்.- பி.இ. படிப்புகளில் சேருவதற்கான கட்-ஆஃப் மதிப்பெண்ணும் குறைந்துள்ளதால், கடந்த ஆண்டைப் போன்றே ஏராளமானோர் விடைத்தாள் நகல், மறுகூட்டலுக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.

+2 பொதுத்தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழுடன் மாற்றுச்சன்றிதளையும் வழங்க வேண்டும் - அரசுத்தேர்வுகள் இயக்குனர்

+2 பொதுத்தேர்வு தற்காலிக மதிப்பெண் சான்றிதழுடன் மாற்றுச்சான்றிதழையும் வழங்க வேண்டும். அதில் மாணவர்களுக்கு வழங்கும் பிரதியில் மதிப்பெண் சான்றிதழ் வரிசை எண் என்ற இடத்தில் REFER ORGINAL CERTIFICATE என எழுத வேண்டுமென அரசுத்தேர்வுகள் இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.
 
 
 CLICK HERE TO VIEW THE LETTER.....

டி.இ.ஓ., தேர்வு முடிவு வெளியீடு


DEO Exam - 2014 Result - Click Here 

மாவட்டக் கல்வி அதிகாரி - டி.இ.ஓ., பதவிக்கான முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன; மெயின் தேர்வு, ஆக., 6ம் தேதி முதல், மூன்று நாட்கள் நடக்கிறது. கல்வித் துறையில், டி.இ.ஓ., பதவியில், 11 காலி இடங்களை நிரப்ப, 2014 ஜூன் 8ம் தேதி, முதல்நிலை எழுத்துத்தேர்வை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., நடத்தியது. இதில், ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

இன்ஜி., கல்லூரிகளில் ஐ.டி., இடங்கள் குறைப்பு:பல இடங்களில் எம்.சி.ஏ., பாடப்பிரிவு ரத்து


தமிழகத்தில், அண்ணா பல்கலைக்குட்பட்ட பல பொறியியல் கல்லூரிகளில், ஐ.டி., படிப்புகள் குறைக்கப்பட்டுள்ளன. சில கல்லூரிகளில் எம்.சி.ஏ., - எம்.டெக்., படிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அண்ணா பல்கலை இணைப்பில், 580 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளுக்கு ஆண்டுதோறும் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் மற்றும் அண்ணா பல்கலை சார்பில் இணைப்பும் புதுப்பிக்கப்படும். வரும் கல்வி ஆண்டுக்கான, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரப் பட்டியல் அண்ணா பல்கலைக்கு வந்துள்ளது.

தவறு, தவிர்க்க மாணவர்களுக்கு ஒரே மதிப்பெண்,டி.சி.,

சில தவறு, குளறுபடி தவிர்த்து பிளஸ் 2 முடித்தவர்களுக்கு ஒரே மதிப்பெண் பட்டியல் வழங்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

2014-15ம் கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் ஆன் -லைனில் 'ரிசல்ட்' பார்த்து மதிப்பெண்களை தெரிந்து கொண்டனர். முன்கூட்டியே கல்லூரிகளில் அட்மிஷன் துவங்க ஏதுவாக தற்காலிக மதிப்பெண், டி.சி.,வழங்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மதிப்பெண் பட்டியல் அடங்கிய சான்றிதழை (புரோவிஷனல்) ஆன்-லைனில் 'பிரின்ட் அவுட்' எடுத்து, தலைமை ஆசிரியர்கள் கையெழுத்திட்டு வழங்க வேண்டும். மதிப்பெண்

அதேஇ - +2 பொதுத் தேர்வு 2015 - தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் (PROVISIONAL MARK CERTIFICATE) விநியோகித்தல் - இயக்குனர் செயல்முறைகள்



பத்தாம் வகுப்பு தேர்வில் தமிழ் பாடம் கட்டாயம் : பள்ளி கல்வித்துறை அதிரடி

 பள்ளி கல்வித்துறை இயக்குநர் கண்ணப்பன் சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் பள்ளி கல்வித்துறையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளிலும் பகுதி 1ல் உள்ள தமிழ் பாடத்தை கட்டாயமாக மாணவர்கள் பயில வேண்டும். நடப்பு கல்வியாண்டில் 1ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை பகுதி 1ல் உள்ள தமிழ் மொழி பாடத்தை கட்டாயமாக ஆசிரியர்கள் கற்பிக்க வேண்டும். 

குரூப்-2 தேர்வுக்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாமா? - விளக்கம்

 துணை வணிக வரி அதிகாரி, சார்-பதிவாளர், உதவி தொழி லாளர் ஆய்வாளர், சிறைத்துறை நன்னடத்தை அதிகாரி, உள்ளாட்சி நிதி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி நிர்வாக அலுவலர் (கிரேடு-2) உள்ளிட்ட பல்வேறு விதமான பணிகளில் 1,241 காலியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அண்மையில் அறிவிப்பு வெளியிட்டது.
          குரூப்-2 தேர்வுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு பணிகளுக்கு தக்கவாறு நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில், குரூப்-2 தேர்வுக்கு தாங்கள் விண்ணப்பிக்கலாமா என்ற சந்தேகம் பிஇ, பிடெக் பட்டதாரிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:

மாட்டிற்கு ஹால் டிக்கெட் வழங்கிய அதிகாரிகள்:தேர்வறைக்குள் அனுமதிக்க மறுத்ததால் சர்ச்சை

காஷ்மீரில் பசுமாட்டிற்கு ஹால் டிக்கெட் வழங்கிய அதிகாரிகள், அதை தேர்வுக்கூடத்திற்குள் அனுமதிக்க ‌மறுத்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
           தொழிற்படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு எழுத பசுங்கன்று ஒன்றுக்கு அப்துல் ரஷித்பட் என்பவர் ஹால் டிக்கெட் கேட்டு விண்ணப்பிக்க, அதனை சரிபார்க்காமல் அதிகாரிகளும்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில சிறப்பு செயற்குழு-24.05.2015 அன்று நடைபெறும்

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில அவசர செயற்குழு அழைப்பு 

பேரன்பு கொண்ட இயக்க சகோதரர்களே,
தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணியின் மாநில அவசர செயற்குழு கீழ்க்கண்ட நிகழ்ச்சிநிரலில் கண்டவாறு நடைபெற உள்ளது.செயற்குழுவிற்கு அனைத்து செயற்குழு உறுப்பினர்களும் மாநில பொறுப்பாளர்களும் தவறாது கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
        தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில அவசர செயற்குழு
   நாள்-24.05.2015  நேரம்
   காலை -10.00 மணி
  இடம் –டாகடர் சுப்ரமணியம் மாளிகை,மோகனூர் சாலை,நாமக்கல்.
தலைமை- திரு.கு.சி.மணி அவர்கள் ,மாநிலத்தலைவர்
                   கூட்டப்பொருள்
1.பொதுச்செயலர் அவர்களின் 60 ஆண்டுகால முழுநேர   
  இயக்கப்பணிக்கு    நன்றிபாராட்டும் விதமாக 02.05.2015 அன்று 
  மாநில    பொதுக்குழுமுடிவாற்றியபடி- நமதுபொதுசெயலர்
  அவர்களின்  மருத்துவ செலவினை இயக்கமே ஏற்று நிதி 
  வழங்குதலை    ஓர் விழாவாக நடத்துவதற்கான நடவடிக்கை 
  மேற்கொள்ளுதல்
2. ஜாக்டோ உயர்மட்டக்குழு முடிவுகள்
3. 2015 ஆண்டு உறுப்பினர் சேர்க்கை
4. 2015 –ஆசிரியர் பேரணி இதழ் சந்தா சேர்க்கை
5. மாநிலதேர்தல் மற்றும் மாவட்டத்தேர்தல் அறிக்கைகள் சமர்பித்தல்
டெல்லி பிரதிநிதிகள் மாநாடு குறித்த ஆலோசனை
     மற்றும்
7.ஆசிரியர் சார்ந்த பிற பிரச்சினைகள்
                                          இப்படிக்கு.
                                         க.செல்வராஜ்
                                      பொதுசெயலர்(பொறுப்பு)
 

ஜெ., மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை-ஜெ., சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேரும் விடுதலை செய்வதாக நீதிபதிகுமாரசாமி அறிவித்தார்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கின் மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பை கர்நாடக ஐகோர்ட் நீதிபதி குமாரசாமி அறிவித்தார்.

ஜெ., மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை என அவர் மீதான தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தார். ஜெ., சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகிய 4 பேரும் விடுதலை செய்வதாக நீதிபதி அறிவித்தார். தீர்ப்பை கேட்ட அ.தி.மு.க,. வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

3 நிமிடத்தில் தீர்ப்பை வாசித்துவிட்டு நீதிபதி குமாரசாமி, தனது அறைக்கு திரும்பினார்.

ஜெயலலிதா விடுதலை; மேல்முறையீடு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உள்பட 4 பேரையும் விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பு வழங்குவதற்காக நீதிபதி குமாரசாமி இன்று காலை 10 மணிக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் வந்தடைந்தார்.

'இரண்டு ஆண்டு பி.எட்., படிப்பை அமலாக்காவிட்டால் அங்கீகாரம் ரத்து'

'இரண்டு ஆண்டு, பி.எட்., படிப்பை, வரும் கல்வி ஆண்டில் அமல்படுத்தாத நிறுவனங்களின் அனுமதி தானாக ரத்தாகும்' என, தேசிய ஆசிரியர் கல்வி யியல் பயிற்சி கவுன்சில் (என்.சி.டி.இ.,) எச்சரித்து உள்ளது. தமிழக அரசு, இதுகுறித்து இன்னும் முடிவு எடுக்காததால், கல்வி நிறுவனங்கள் குழப்பம் அடைந்துள்ளன.
வழிகாட்டுதல்
தமிழகத்தில், 589 ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளில், ஓராண்டு பி.எட்., மற்றும் எம்.எட்., படிப்பு கள் உள்ளன. சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, நாடு முழுவதும் ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளுக்கான புதிய வழிகாட்டுதலை, என்.சி.டி.இ., 2014ல் வெளியிட்டது

தேர்ச்சி குறைந்த பாடங்களின் ஆசிரியர்களைஇடமாற்றம் செய்ய கல்வித்துறையினர் முடிவு

பிளஸ் 2 தேர்வில், தேர்ச்சி குறைந்த பாடங்களின் ஆசிரியர்களை இடம்மாற்றம் செய்ய, பள்ளிக்கல்வித் துறை முடிவு செய்து உள்ளது.பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளிகள் மிகவும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. இதனால், சாதாரண, ஏழை, நடுத்தரக் குடும்ப மாணவ, மாணவியர் அரசு பள்ளிகளில் படித்தால், நல்ல மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
அதிக மதிப்பெண் கிடைக்காவிட்டால் பொறியியல், மருத்துவம், சி.ஏ., மற்றும் முன்னணி அறிவியல் பாடப் பிரிவுகளில், அரசு பள்ளி மாணவர்கள் படிக்க முடியாது. இதனால், சமூக அளவில் அரசு பள்ளி மாணவர்களின் எதிர்காலம், மிக மோசமாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இந்த ஆண்டு, பிளஸ் 2 தேர்வில், மாநில அளவில் மட்டுமின்றி, மாவட்ட அளவிலும் மாணவர்கள் முன்னணி இடத்துக்கு வராதது, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகளுக்கு, பல வகையிலும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

48 மணி நேரத்தில் 'பான்' எண் மத்திய அரசு விரைவில் நடவடிக்கை

'பான்' எண் அட்டைகளை, 48 மணி நேரத்தில் வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.வருமானவரித் துறையால் வழங்கப்படும், 'பெர்மனென்ட் அக்கவுன்ட் நம்பர்' என்பதன் சுருக்கம் தான், பான். வருமான வரி செலுத்துபவர்களும், வங்கிகளில், 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல், வரவு - செலவு மேற்கொள்பவர்களும், பான் எண்ணை கட்டாயம் தெரிவிக்க வேண்டும்.

நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்த, நிதியமைச்சர் அருண் ஜெட்லி, ஒரு லட்சம் ரூபாய்க்கு மேற்பட்ட, பொருட்கள், சேவை, கொள்முதல் மற்றும் விற்பனைக்கு, பான் எண்ணை தெரிவிக்க வேண்டும் என, அந்த எண்ணுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளித்தார்.இதன்மூலம், கறுப்புப் பணத்தை கட்டுப்படுத்தலாம் என்பது, அரசின் எண்ணம்.

எம்.பி.பி.எஸ்., விண்ணப்பம் இன்று முதல் வினியோகம்அரசு மருத்துவ கல்லூரிகளில் கிடைக்கும்

தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்பம், இன்று முதல் வினியோகிக்கப்படுகிறது. 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் மற்றும் சென்னை பல் மருத்துவக் கல்லூரியில் விண்ணப்பம் கிடைக்கும்.தமிழகத்தில், 19 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன.
சென்னையில், ஒரு பல் மருத்துவக் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரிகளில், அகில இந்திய ஒதுக்கீடு போக, 2,172 எம்.பி.பி.எஸ்., இடங்களும், 85 பி.டி.எஸ்., இடங்களும் மீதமுள்ளன.இதுதவிர, இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதிக்கு ஏற்ற வகையில், சுய நிதி கல்லூரிகளில் இருந்து,

'வேலை கிடைக்காது என்ற விரக்தியில் பதிவை புதுப்பிக்காத 57 லட்சம் பேர்!'


அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருந்தால், வேலை கிடைக்காது என்ற விரக்தியில் 57 லட்சம் பேர் பதிவை புதுப்பிக்காமல் விட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், அரசு பணியிடங்களை வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் நிரப்ப சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழக அரசுக்கு சமூக நீதியில் அக்கறை இல்லாததால் வேலைவாய்ப்பு அலுவலகங்கள் ஆவணக் காப்பகங்களாக மாறி வருகின்றன. வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தால் எப்படியும் வேலை கிடைத்துவிடும் என்ற நிலை மாறி வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தால் நிச்சயம் வேலை கிடைக்காது என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

பிளஸ் 2; 80 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ்

பிளஸ் 2 தேர்வில் 80 சதவீதத்துக்கும் குறைவாக தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும் என ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பெ.அய்யண்ணன் தெரிவித்துள்ளார்.
பிளஸ் 2 தேர்வில் ஈரோடு மாவட்டம் 96.06 சதவீதம் தேர்ச்சி பெற்று மாநில அளவில் 3-ஆவது இடம் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு தேர்ச்சி சதவீதத்தில் முதலிடத்தில் இருந்த நிலையில், இந்த ஆண்டு 3-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில், அரசுப் பள்ளிகள் தான் காரணம் என்பது தெரியவந்தது

அரசு பள்ளிகளில் 'பயோ மெட்ரிக்' : கல்வித்துறை முடிவு -

'ஆசிரியர்களின் கவனக்குறைவு மற்றும் சரியாகப் பாடம் நடத்தாததே, பிளஸ் 2 தேர்வில், அரசு பள்ளிகளில் தேர்ச்சி குறைய காரணம்' என, கண்டறியப்பட்டுள்ளது. ஆசிரியர்கள், 'ஓபி' அடிப்பதைத் தடுக்க, 'பயோ மெட்ரிக்' வருகைப்பதிவை கட்டாயமாக்க, கல்வித்துறை முடிவு செய்து உள்ளது.
நடந்து முடிந்த, பிளஸ் 2 தேர்வில், மெட்ரிக் பள்ளிகளே மாநிலத்தில் முதல் மூன்று இடங்களையும்; மாவட்டத்தில் முதல் இடங்களையும் பிடித்தன. அரசு பள்ளி மாணவர்கள், மாவட்டங்களில் கூட முதலிடம் பிடிக்கவில்லை. இதேபோல், பள்ளிக்கல்வித் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள அரசு பள்ளிகள், 84.26 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன. தனியார் மெட்ரிக் பள்ளிகளை (97.67) விட, 13.41 சதவீதமும்; அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளை (93.42) விட, 9.16 சதவீதமும், அரசு பள்ளிகள் குறைந்துள்ளன.

தொடக்கக் கல்வி - ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் நீண்ட நாட்கள் விடுப்பில் உள்ள ஆசிரியர்கள் / எவ்வித தகவலின்றி பணிக்கு வராதவர்கள் மற்றும் தற்காலிக பணி நீக்கத்தில் உள்ள ஆசிரியர்களின் விவரம் 11.05.2015க்குள் அளிக்க இயக்குனர் உத்தரவு

DEE - TEACHERS WHO ARE AVAIL LONG LEAVE / UNDER SUSPENSION / LEAVE WITHOUT INTIMATION REG DETAILS CALLED - PROC & FORMAT CLICK HERE...

ஜூன் 19ல் மாணவர் தர வரிசைப்படி கல்லூரி பட்டியல் வெளியீடு

'கவுன்சிலிங்கில் முடிவெடுக்க வசதியாக, கடந்த ஆண்டில் மாணவர் தர வரிசைப்படியான கல்லூரிகள் பட்டியல், ஜூன், 19ம் தேதி வெளியிடப்படும்,'' என, தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் தெரிவித்துள்ளார்.

'ரேண்டம்' எண்: சென்னை, தி.நகரில் நடந்த, 'தினமலர் - உங்களால் முடியும்' நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

* கணிதம் - 100, இயற்பியல் - 50, வேதியியல் - 50 என, 'கட் - ஆப்' மதிப்பெண் கணக்கிடுவோம். ஒரே, 'கட் - ஆப்' என்றால், கணிதத்தில் அதிக மதிப்பெண் பார்க்கப்படும். அதில் சமம் என்றால், இயற்பியலில் அதிக மதிப்பெண் பார்ப்போம். அதுவும் சமம் என்றால், நான்காவது, 'ஆப்ஷனல்' பாட மதிப்பெண் கணக்கிடப்படும். அதுவும் சரியாக இருந்தால், பிறந்த தேதியில் மூத்தவரைப் பார்ப்போம்.

9, 10ம் வகுப்புகளுக்கு இலவச 'அட்லஸ்' புத்தகம்

தமிழகத்தில், தற்போது, ஆறாம் வகுப்பு முதல், எட்டாம் வகுப்பு வரை, மாணவர்களுக்கு இலவச, 'அட்லஸ்' புத்தகம் வழங்கப்படுகிறது. வரும் கல்வியாண்டில், ஒன்பது மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. தமிழக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி

பள்ளிகள் மூலம் கட்டாயமாகிறது ஆதார்

பள்ளிகள் மூலம், 'ஆதார்' எண் பதிவு செய்வதை, கட்டாயமாக்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஐந்து வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு, 'ஆதார்' எண் உருவாக்க வேண்டும். இதைத் தொடர்ந்து, மாணவ, மாணவியர், 'ஆதார்' எண் அளிக்க வேண்டும் என, பள்ளி நிர்வாகங்கள் அறிவுறுத்தி உள்ளன. இதுகுறித்து, 'ஆதார்' திட்ட இணை இயக்குனர் கிருஷ்ணாராவ் கூறியதாவது: 'ஆதார்' எண்ணை உருவாக்க, நிரந்தர மையம், பகுதி வாரியாக முகாம்கள் நடத்துவதோடு, சமூகத்தின் குறிப்பிட்ட பகுதியினருக்கு, 'ஆதார்' எண்ணை உருவாக்க, பல நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

17 புதிய மருத்துவ கல்லூரிகள்: மத்திய அரசு அறிவிப்பு

'நாட்டில், 17 புதிய மருத்துவக் கல்லூரிகள் துவக்கப்படும்,'' என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர், ஜே.பி.நட்டா லோக்சபாவில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:
நாடு முழுவதும் மக்களுக்கு, ஆரோக்கிய பராமரிப்பு வசதிகள் கிடைக்க வேண்டும். அதற்கு தேவையான அடிப்படை வசதிகளை
, மாநில அரசுகளுக்கு வழங்க, மத்திய அரசு தயாராக உள்ளது. அதன் அடிப்படை யில், 17 புதிய மருத்துவக் கல்லூரிகளை கட்டவும், 70 மருத்துவக் கல்லூரிகளை மேம்படுத்தவும், திட்டமிடப்பட்டுள்ளது.

அண்ணா பல்கலை கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி என்ன

அண்ணா பல்கலை கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி என்ன என்பது குறித்து, தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலர், ரைமண்ட் உத்தரியராஜ் விளக்கம் அளித்தார்.

சென்னை தி.நகரில் நேற்று நடந்த, 'தினமலர் - உங்களால் முடியும்' நிகழ்ச்சியில், அண்ணா பல்கலை பேராசிரியரும், தமிழ்நாடு இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கை செயலருமான ரைமண்ட் உத்தரியராஜ் பேசியதாவது: இன்ஜினியரிங்கில் அனைத்துப் பாடப்பிரிவு கள் நல்லவை தான். ஒன்பதாம் வகுப்பு முதல், நான்கு ஆண்டுகள் கடினமாகப் படித்து விட்டோம் என்றாலும், இன்ஜி., படிப்பில் சேர்ந்து, மேலும், நான்கு ஆண்டுகளும் மாணவர்கள் நன்றாகப் படிக்க வேண்டும். அடுத்த, நான்காண்டு கால கடின உழைப்பு மிக முக்கியம். படிப்பில் சேர்ந்து விட்டோம் என்று சாதாரணமாக இருக்கக் கூடாது

web stats

web stats