rp

Blogging Tips 2017

'சென்டம்' குறைவதால் இன்ஜி.,க்கு தொழிற்கல்வி மாணவர்கள் முந்த வாய்ப்பு

பிளஸ் 2 கணிதம் மற்றும் அறிவியல் பிரிவில், 'சென்டம்' பெறுவோர் எண்ணிக்கை மற்றும் அதிக மதிப்பெண் பெறுபவர்கள் எண்ணிக்கை சரியும் என்பதால், தொழிற்கல்வி மாணவர்கள், இன்ஜி., 'கட் - ஆப்' மதிப்பெண்ணில், முன்னணி பெற வாய்ப்புள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்து, நேற்று முதல் விடைத்தாள் திருத்தம் துவங்கி உள்ளது. கணிதம், வேதியியல் மற்றும் இயற்பியலுக்கு, சில கேள்விகளுக்கு, 'போனஸ்' மதிப்பெண்கள் வழங்கப்பட்டு உள்ளன. ஆனாலும், இந்த முறை மாணவர்கள் அதிக மதிப்பெண் பெறுவது கடினம் என்றே கூறப்படுகிறது.

ஐஐடி நிறுவனங்களில் கல்விக் கட்டணம் இருமடங்காக உயர்வு.

புது தில்லி:ஐஐடி கல்விக் கட்டணத்தை இருமடங்காக உயர்த்தியுள்ளதாக ஐஐடி கல்வி நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.கல்விக் கட்டணம் ரூ.90 ஆயிரத்தில் இருந்து ரூ.2 லட்சமாகஉயர்த்தியுள்ளதாக  ஐஐடி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக உள்ள மாணவர்களுக்கு ஐஐடி சலுகையை அறிவித்துள்ளது.

பிளஸ்-2 கணித தேர்வில் தவறான வினாவுக்கு 6 கருணை மதிப்பெண்: அரசு தேர்வுத்துறை உத்தரவு.

பிளஸ்-2 கணிதத் தேர்வில் தமிழ்வழி வினாத்தாளில் தவறாக கேட்கப்பட்டிருந்த வினாவுக்கு விடையளிக்க முயற்சி செய்திருந்தாலே 6 கருணை மதிப்பெண் (கிரேஸ் மார்க்) வழங்க வேண்டும் என்று அரசு தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது.

தொடக்கக் கல்வி - SSA HEAD - 1581 பட்டதாரி மற்றும் 3565 இடைநிலை ஆசிரியர்களின் ஒருவருட தொடர் நீட்டிப்பு ஆணை- முதன்மை செயலாளர் ஆணை


தொடக்கக்கல்வி - வேலூர் மாவட்டம் - எட்டாம் வகுப்பு மூன்றாம் பருவத் தேர்வு அட்டவணை

Dearness Allowance from Jan 2016 to Central Government Employees and Pensioners- Fin Min

கால்நடை பல்கலை கழகத்தில் ஜூன் முதல் வாரம் விண்ணப்பம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை துணைவேந்தர் எஸ்.எஸ்.திலகர் சென்னையில், நேற்று கூறியதாவது: மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை சார்பில், வெளியிடப்பட்டுள்ள கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசை பட்டியலில், தமிழகத்தில், ஒரு தனியார் பல்கலைக் கழகம் உட்பட, 13 பல்கலைக் கழகங்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளன. அவற்றில்,

சேலம் வினாயகா மிஷன் தொலைதொடர்பு பல்கலைகழகத்தில் பயிலும் அனைத்து பாடங்களும் அரசு பணிக்கு ஏற்றது.பதவி உயர்வுக்கு ஏற்றது.....பள்ளிக்கல்வி இயக்ககம் துணை இயக்குநர்(மின் ஆளுமை )RTI தகவல்.....

நெட் தேர்வு ஏப்ரல் 12 முதல் விண்ணப்பிக்கலாம்

மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் மூலம் நடத்தப்படும் நெட் தேசிய அளவிலான தகுதித் தேர்வு ஜூலை மாதம் 10-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது.
வருகிற 12-ஆம் தேதி முதல் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வானது ஜூலை 10-ஆம் தேதி நடத்தப்பட உள்ளது. இதற்கு http://cbsenet.nic.in/cbsenet/welcome.aspx என்ற இணையதளம் மூலம் வருகிற 12-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். ஆன்-லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பிக்க மே 12 கடைசித் தேதியாகும். தேர்வுக் கட்டணத்தை மே 13-ஆம் தேதி வரை செலுத்த முடியும்.

PENSION – Contributory Pension Scheme – Settlement of accumulation under Contributory Pension Scheme in respect of CPS subscribers retired/resigned, died and terminated from service - Orders Issued – Clarification sought – Regarding.

Letter No.185[S(E)]/Fin (PGC) /2016-1 Dt: April 01, 2016    Download Icon(96KB)

வாக்குப் பதிவு தினத்தன்று சம்பளத்துடன் விடுமுறை.

சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு நாளான மே 16-ஆம் தேதி சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது.1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 135பி பிரிவின் அடிப்படையில், தொழில் நிறுவனங்கள், கடைகள், வர்த்தக நிறுவனங்கள் (தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட), உணவு நிறுவனங்கள்,

முதுகலை பட்டதாரிகள் பணியிடம் ஓர் ஆண்டுக்கு நீட்டிப்பு !!!


ஏப்.15-க்கு மேல் எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி

எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத் தும் பணியை ஏப்ரல் 15-ம் தேதிக்கு மேல் தொடங்க அரசு தேர்வுத்துறை முடிவு செய்து உள்ளது.

10-ம் வகுப்பு பொதுத் தேர்வு மார்ச் 15-ம் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 10 லட் சத்து 72 ஆயிரம் மாணவ-மாணவி கள் தேர்வில் கலந்து கொண்டுள் ளனர். தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய தேர்வுகள் முடிவடைந்த நிலையில் அறிவியல் தேர்வு நாளை (வியாழக்கிழமை) நடை பெறுகிறது. 11-ம் தேதி நடைபெறும் சமூக அறிவியல் தேர்வுடன் எஸ்எஸ்எல்சி தேர்வுகள் முடிவடையும்.

சிறந்த கல்வி நிறுவனங்கள் எவை?

சிறந்த 10 அரசு மற்றும் தனியார் பல்கலை.கள், ஐ.ஐ.டி. மற்றும் ஐ.ஐ.எம்.களின் தர வரிசை பட்டியலை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது

பல்கலைகள்:
1)இந்தியன் இன்ஸ்டியூட் ஆப் சயின்ஸ், பெங்களூரூ. 
2)இன்ஸ்டியூட் ஆப் கெமிக்கல் டெக்னாலஜி , மும்பை.
3)ஜவஹர்லால் பல்கலை, புதுடில்லி.
4)ஐதராபாத் பல்கலை. ஐதராபாத்.
5)தேஜ்பூர் பல்கலை,. தேஜ்பூர்.

யாருக்கு எவ்வளவு சொத்து? சொல்லுங்க; மத்திய அரசு ஊழியர்களுக்கு கெடு

 லோக்பால் சட்டத்தின் படி மத்திய அரசு ஊழியர்கள் தங்களின் இரண்டு ஆண்டு காலத்தில் குவித்த சொத்து விவரங்கள் அனைத்தையும் ஏப். 15-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய அரசில் 50லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்ட விதிமுறை கீழ் வர உள்ளனர்.இதையடுத்து புதிய விதிமுறைகளின் கீழ் சொத்துவிவரங்கள் வெளியிடும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது. 

தேர்தல் பணியில் ஈடுபடுவோருக்கு தபால் வாக்கு படிவங்கள் விநியோகம்

தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள், காவல் துறையினர் ஆகியோருக்கு தபால் வாக்கு அளிப்பதற்கான தபால் வாக்கு படிவம்-12 விநியோகிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் மே 16ல் ஒரே கட்டமாக தமிழக சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின் படி, மாவட்ட தேர்தல் நிர்வாகம் சார்பில் தேர்தல் பறக்கும் படை, கண்காணிப்புக்குழுவினர் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்து கண்காணித்து வருகின்றனர்.

தங்களுடைய மாதச்சம்பளம் & PF எந்த தேதியில் தங்களுடைய கணக்கில் வந்து சேரும் என்பதனை அறியும் வழி

தங்களுடைய மாதச்சம்பளம் எந்த தேதியில் தங்களுடைய கணக்கில் வந்து சேரும் என்பதனை அறிய கீழே உள்ள link தொடுங்கள்

Click Here

ஏஐசிடிஇ அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகள் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியீடு

அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ) அங்கீகாரம் பெற்ற பொறியியல் கல்லூரிகளின் பட்டியல் ஒரு வாரத்தில் வெளியிடப்பட உள்ளது. இதன்மூலம் புதிய கல்லூரிகள், பொறியியல் படிப்பில் உள்ள இடங்கள் பற்றிய விவரங்களை மாணவர்கள் தெரிந்துகொள்ளலாம்.தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழக கல்லூரிகள், அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், தனியார் சுயநிதி பொறியியல் கல்லூரிகள் உட்பட 583 பொறியியல் கல்லூரிகள் உள்ளன.

பி.எப்., புதிய விதிகள் மே 1ல் அமல்

பி.எப்., பணம் திரும்பப் பெறுவது தொடர்பான புதிய விதிமுறைகள் மே 1ம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது. புதிய விதிகளின்படி பி.எப்., திரும்பப் பெறுவதற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போதுள்ள சூழ்நிலையில் பணியாளர்கள் தங்களது 54வது வயதில் பி.எப்., பணத்தை திரும்பப் பெற விண்ணப்பிக்க முடியும்.

Release of E-filing of Income Tax Returns (ITR) and other forms

தரவரிசை பட்டியலில் சென்னை ஐ.ஐ.டி., முதலிடம் அண்ணா பல்கலைக்கு இடமே இல்லை

இந்தியாவில் உள்ள பல்கலைகளின் தரவரிசை பட்டியலை முதல்முறையாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதில், சென்னை ஐ.ஐ.டி., முதலிடம் பெற்றுள்ளது. அண்ணா பல்கலை பட்டியலில் இடம் பெறவில்லை.
உலக அளவில், பல்கலைகளின் செயல்பாடுகளை, பல்வேறு தகுதிகளின் அடிப்படையில், இங்கிலாந்தை சேர்ந்த,' குவாக்வாரெல்லி சைமண்ட்ஸ்' நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச அளவில் தரவரிசை பட்டியலை வெளியிடும். இதில், இந்திய பல்கலைகள் இடம் பெறுவதில்லை என குறை இருந்தது.எனவே, இந்த பிரச்னையை போக்க,'இந்திய பல்கலைகளை மத்திய அரசே தரம் பிரித்து, தர வரிசை பட்டியலை வௌியிடும்' என, கடந்த ஆண்டு மத்திய அமைச்சர் ஸ்மிர்தி இரானி அறிவித்தார். 

கம்ப்யூட்டர் மூலமாக வருமான வரி கணக்கு தாக்கல் தொடங்கியதுஜூலை 31-ந்தேதி வரைவருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம்

2016-17 வரிவிதிப்பு ஆண்டுக்கான வருமான வரி கணக்கை குறிப்பிட்ட நிறுவனங்கள், தனிநபர்கள் கம்ப்யூட்டர் மூலமாக தாக்கல் செய்வது நேற்று தொடங்கியது

கம்ப்யூட்டரில் மத்திய வருமான வரி துறையின் இணையதளத்தில் ஐ.டி.ஆர்.1 (சஹாஜ்) என்ற படிவத்தை பயன்படுத்தி மாதச்சம்பளம் பெறும் தனிநபர்கள், வட்டி வருமானம் பெறுகிறவர்கள் வருமான வரி கணக்கை தாக்கல் செய்யலாம்.

மத்தியஅரசு ஊழியர்கள் சொத்துக்கணக்கை காட்ட வேண்டும் !!!

லோக்பால் சட்டத்தின் படி மத்திய அரசு ஊழியர்கள் தங்களின் இரண்டு ஆண்டு காலத்தில் குவித்த சொத்து விவரங்கள் அனைத்தையும் ஏப். 15-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மத்திய அரசில் 50லட்சத்திற்கும் அதிகமான ஊழியர்கள் உள்ளனர். இவர்கள் ஊழலுக்கு எதிரான லோக்பால் சட்ட விதிமுறை கீழ் வர உள்ளனர்.இதையடுத்து புதிய விதிமுறைகளின் கீழ் சொத்துவிவரங்கள் வெளியிடும் அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டது.

அகஇ - 2016 SLAS- மாணவர்களுக்கு ஏற்பட்ட இடர்பாடுகளை ஆராய உத்தரவு - பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - மாநில திட்ட இயக்குனரின் அறிவுரைகள் - செயல்முறைகள்

ஏ.டி.எம். கார்டு இல்லாமலேயே பணம் எடுக்கலாம்; இந்தியாவிலேயே முதல்முறையாக ஆதார் ஏ.டி.எம். அறிமுகம்

இந்தியாவிலேயே முதல்முறையாக ஆதார் ஏ.டி.எம். அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி மூலம் வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம். கார்டு இல்லாமலேயே பணத்தை எடுக்க முடியும்.

மகாராஷ்டிராவை சேர்ந்த டி.சி.பி. வங்கி அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த புதிய வசதியின் மூலம் பணம் எடுக்க ஆதார் அட்டையில் உள்ள 12 எண்களை ஏ.டி.எம். இயந்திரத்தில் டைப் செய்தால் போதும். பிறகு, நமது கைரேகையை அதில் பொருத்தப்பட்டுள்ள ஸ்கேனரில் பதிவு செய்தால் பணப் பரிமாற்றம் செய்ய நமக்கு அனுமதி அளிக்கும்.

web stats

web stats