rp

Blogging Tips 2017

ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு நிலையிலும் கூடுதல் கல்விக்கான ஊதிய உயர்வு வழங்க வேண்டும்; உயர்நீதிமன்றம் உத்தரவு

சனிக்கிழமை பள்ளியா? மாணவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கக் கூடாது: ராமதாஸ்

சனிக்கிழமைகளிலும் பள்ளி இயங்குவதன் மூலம் மாணவர்களை மன அழுத்தத்திற்கு ஆளாக்கக் கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளம் வடியத் தொடங்கியிருப்பதைத் தொடர்ந்து  கடந்த 14 ஆம் தேதி முதல் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. ஒரு மாதத்திற்கும் மேலாக பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டிருந்த நிலையில், அந்த நாட்களை ஈடுகட்டும் வகையில் ஜனவரி  மாதம் வரை சனிக்கிழமைகளிலும் பள்ளிகள் செயல்படும் என தனியார் பள்ளிகள் அறிவித்துள்ளன

நிவாரண நிதி: அரசு ஊழியர்கள் ஊதியத்தை பிடிப்பதில் சிக்கல்


கருவூல 'சாப்ட்வேர்' குளறுபடியால் வெள்ள நிவாரண நிதிக்கு அரசு ஊழியர், ஆசிரியர்களின் ஒரு நாள் ஊதியத்தை பிடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு 'இ.சி.எஸ்.,' முறையில் ஊதியம் வழங்கப்படுகிறது. இதற்காக கருவூலங்களில் 'வெப் பேரோல் சாப்ட்வேர்' பயன்படுத்தப்படுகிறது.

தற்போது வெள்ள நிவாரண நிதிக்காக அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் பொதுத்துறை நிறுவன ஊழியர்களிடம் இருந்து ஒரு நாள் ஊதியத்தை பிடித்தம் செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது.

7 வது ஊதியக்குழு -குறைந்தபட்ச ஊதியம் ரூ.18 ஆயிரம் 7 வது ஊதியக்குழு நிர்ணயித்தது எப்படி?-

காய்கறி, பால், எண்ணெய், எரிபொருள், பொழுதுபோக்கு போன்றவற்றின் அடிப்படையில் 7 வது ஊதியக்குழு மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச அடிப்படை ஊதியமாக ரூ.18 ஆயிரம் நிர்ணயித்துள்ளது.இந்த ஊதியம் கணவர், மனைவி, 2 குழந்தைகள் என, 4 பேர் கொண்ட குடும்பம் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது.

இதில் ஆணுக்கு ஒரு யூனிட், பெண்ணுக்கு 0.80 யூனிட், 2 குழந்தைகளுக்கு தலா 0.60 யூனிட் என, குடும்பத்திற்கு மொத்தம்3 யூனிட்டாக கணக்கிடப்பட்டுள்ளது.தினமும் ஒரு யூனிட்டிற்கு 475 கிராம் அரிசி அல்லது கோதுமை, 80 கிராம் பருப்பு வகைகள்,

4 மாவட்டங்களுக்கு தேர்வு அட்டவணை: அண்ணா பல்கலை. வெளியீடு


வெள்ள பாதிப்புக்குள்ளான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான தேர்வுகள் டிசம்பர் 29 முதல் தொடங்க உள்ளன.தொடர் மழை- வெள்ள பாதிப்புகள் காரணமாக, பருவத் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகமும் ஒத்திவைத்தது.

மழை ஓய்ந்தவுடன் பருவத் தேர்வுகளுக்கான மறு தேதிகளை அறிவித்தது. அதில் இணைப்புக் கல்லூரிகளுக்கான முதலாமாண்டு (2013 நடைமுறை) முதல் பருவத் தேர்வுகளை இடைவெளிகள் எதுவுமின்றி டிசம்பர் 15 முதல் 21 வரை6 பாடங்களுக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டன.

ஆசிரியர்களைப் பயிற்சிக்கு அனுப்ப தலைமை ஆசிரியர்கள் எதிர்ப்பு

அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் ஆசிரியர்களைப் பயிற்சிக்கு அனுப்புவதற்கு தலைமை ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 மழை- வெள்ள பாதிப்பால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு ஒரு மாதத்துக்கு மேல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால், 22 நாள்கள் வேலை இழப்பு ஏற்பட்டது. பள்ளிகள் கடந்த திங்கள்கிழமையன்றுதான் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
 விடுமுறையை ஈடுசெய்வதற்காக சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை நடத்த வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது

ஆசிரியர்களைப் பயிற்சிக்கு அனுப்ப தலைமை ஆசிரியர்கள் எதிர்ப்பு


அனைவருக்கும் கல்வி இயக்கத் திட்டத்தின் கீழ் ஆசிரியர்களைப் பயிற்சிக்கு அனுப்புவதற்கு தலைமை ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
 மழை- வெள்ள பாதிப்பால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு ஒரு மாதத்துக்கு மேல் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால், 22 நாள்கள் வேலை இழப்பு ஏற்பட்டது. பள்ளிகள் கடந்த திங்கள்கிழமையன்றுதான் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

வருங்கால வைப்பு நிதி: செலவுக்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும்; தமிழக அரசு உத்தரவு

வருங்கால வைப்பு நிதியில் இருந்து அவசரத் தேவைக்காக எடுக்கப்படும் பணம், எந்த நோக்கத்துக்காகச் செலவிடப்பட்டது என்பதைத் தெரிவிக்க வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது.
       தமிழகத்தில் பணியில் உள்ள அனைத்து ஊழியர்கள்-ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு பொது வருங்கால வைப்பு நிதியாக, மாத ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. மொத்தமாகச் சேரும் பணம், அவர்கள் ஓய்வு பெறும் காலத்தில் வழங்கப்படுகிறது.

மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்கள்: பள்ளிகளுக்கு 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை விடுமுறை; பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவிப்பு

 மிலாது நபி, கிறிஸ்துமஸ், புத்தாண்டு விழாக்களையொட்டி 24-ந் தேதி முதல் ஜனவரி 1-ந் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தெரிவித்தார்.
மழை வெள்ள பாதிப்பு
மழை வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு 33 நாட்கள் விடுமுறை விடப்பட்டது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டது.

மீலாது நபி: அரசு விடுமுறை 24-க்கு மாற்றம்; வங்கிகள் 4 நாள்கள் செயல்படாது

மீலாது நபி டிசம்பர் 24-ஆம் தேதி வருவதையொட்டி, அன்று அரசு விடுமுறை விடப்படுகிறது என்று தலைமைச் செயலர் கே.ஞானதேசிகன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:

மிலாது நபியை ஒட்டி, அரசு விடுமுறை டிசம்பர் 23-ஆம் தேதி விடப்படும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால், கணக்கிடக் கூடிய பிறையானது டிச. 12-ஆம் தேதி தெரிந்தது. இதில் இருந்து 12-வது நாளான 24-ஆம் தேதியே மீலாது நபி கொண்டாடப்பட வேண்டும்

வருங்கால வைப்பு நிதி: செலவுக்கான காரணத்தைத் தெரிவிக்க வேண்டும்; தமிழக அரசு உத்தரவு

வருங்கால வைப்பு நிதியில் இருந்து அவசரத் தேவைக்காக எடுக்கப்படும் பணம், எந்த நோக்கத்துக்காகச் செலவிடப்பட்டது என்பதைத் தெரிவிக்க வேண்டுமென தமிழக அரசு தெரிவித்துள்ளது.

       தமிழகத்தில் பணியில் உள்ள அனைத்து ஊழியர்கள்-ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு பொது வருங்கால வைப்பு நிதியாக, மாத ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படுகிறது. மொத்தமாகச் சேரும் பணம், அவர்கள் ஓய்வு பெறும் காலத்தில் வழங்கப்படுகிறது.

NMMS தேர்வு ஜன. 23ல் நடக்கிறது

எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய வருவாய் வழி படிப்பு உதவி தொகை தகுதித்தேர்வு ஜன.,23ல் நடக்கிறது.ஒன்பதாம் வகுப்பு முதல்பிளஸ் 2 வரை தேசிய வருவாய் வழி படிப்பு உதவித்தொகை திட்டத்தின் கீழ், மாணவர்களுக்கு மாதந்தோறும் 500 ரூபாயை மத்திய அரசு வழங்குகிறது.

12ம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு

10ம் வகுப்புக்கான அரையாண்டுத் தேர்வு அட்டவணை வெளியீடு

1 முதல் 9 வகுப்பு வரை இரண்டாம் பருவத் தேர்வு நடைபெறும் ..... பள்ளி கல்வி இயக்குநர்.

டிசம்பர் 24ம் தேதி மிலாடி நபி விடுமுறை: தமிழக அரசு


டிசம்பர் 24ம் தேதி மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு அரசு விடுமுறை வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து அரசு
அலுவலங்கள், பள்ளிகள் மற்றும் வங்கிகளுக்கு 24ந் தேதி முதல் 27ம் தேதி வரை 4 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தமிழகபள்ளிக்கல்வித்துறையின் அரையாண்டு தேர்வு ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு


தமிழகபள்ளிக்கல்வித்துறையின் அரையாண்டு தேர்வு ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு
தமிழ்நாட்டில் அரையாண்டுத் தேர்வை ரத்து செய்ய முடியாது எனவும், சி.பி.எஸ்.இ பள்ளிகளில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்தி வைக்கமுடியாது எனவும் பொதுநல வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
www.tnkalvi.com

அரையாண்டுத் தேர்வு தேதி அறிவிப்பு

தமிழக பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு தேதிகள் அறிவிப்பு
மழை பாதிப்பு காரணமாக, ஜனவரி மாதத்திற்கு பள்ளி அரையாண்டு தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டிருந்தன. இதனிடையே, அரையாண்டு தேர்வுகள்,தமிழக பள்ளிகளில் ஜனவரி 11ந் தேதி தொடங்கி 27ம் தேதி வரைஅரையாண்டுத் தேர்வுகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து மொழிகளிலும் திருக்குறள் மொழி பெயர்க்கப்படும்; மத்திய அரசு


நாட்டிலுள்ள அனைத்து மொழிகளிலும் திருக்குறள் மொழி பெயர்க்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. திருக்குறள் ஒப்புவித்தல் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த தேர்ந்தெடுக்கப்பட்ட 133 மாணவர்கள் நாட்டிலேயே முதல் முறையாக நாடாளுமன்ற வளாகத்தில் கௌரவிக்கப்பட்டனர். நாடாளுமன்றத்தில் திருக்குறள் என்ற தலைப்பில் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 133 மாணவர்களும் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு முன் திருக்குறளை ஒப்புவித்தனர்.

SSA - பயிற்சி முக்கியம் பாடம் முக்கியமல்ல!


அனைவருக்கும் கல்வி இயக்கக திட்டம் என்ற, எஸ்.எஸ்.ஏ., மூலம், 8ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்கள்; அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டம் என்ற, ஆர்.எம்.எஸ்.ஏ., மூலம், 9, 10ம் வகுப்பு ஆசிரியர்கள்; மாநில கல்வியியல் ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம் மூலம், பிளஸ் 1, பிளஸ் 2 ஆசிரியர்களுக்கு, சிறப்பு பயிற்சிகள் தரப்படுகின்றன.

மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், செயல்முறை கற்றலை ஊக்குவிக்கவும், இந்த பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. சமீப காலமாக, பயிற்சி என்ற பெயரில், கருத்தரங்கு நடத்தி, மதிய சாப்பாடு கொடுத்து, பயண செலவுக்கு, 50 ரூபாயும் கொடுத்து அனுப்பும் சடங்காக, இது நடத்தப்படுகிறது.

தேர்வுத்துறைக்கு புதிய இயக்குனர்

தேர்வுத்துறைக்கு புதிய இயக்குனர்

தமிழக அரசு தேர்வு துறையின் புதிய இயக்குனராக, வசுந்தரா தேவி நியமிக்கப்பட்டுள்ளார்.

அரசுத் தேர்வுத்துறையின் இயக்குனராக பணியாற்றிய தேவராஜன், கடந்த ஜூலையில் ஓய்வுபெற்றதை அடுத்து, காலியாக இருந்த பதவிக்கு, தமிழ்நாடு ஆசிரியர் வாரிய உறுப்பினர் செயலர் வசுந்தரா தேவி நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் ஏற்கனவே, தேர்வுத்துறை இயக்குனராக பணியாற்றியுள்ளார்.ஆசிரியர் தேர்வு வாரிய இணை இயக்குனராக இருந்த உமா, பதவி உயர்வு பெற்று, ஆசிரியர் தேர்வு வாரிய உறுப்பினர் ஆகியுள்ளார்

முதலமைச்சர் நிவாரண நிதி - அரசு ஒரு நாள் ஊதியம் பிடித்தம் செய்வது எவ்வாறு?...... - வழிமுறைகள் - தெளிவுரை வழங்கி உத்தரவு!........

How to Deduct Chief Minister's Public Relief Fund Amount via Web Payroll?

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கான ஆசிரியர்களின் ஒரு நாள் சம்பள பணத்தை ஆன்லைன் சம்பள பில்லில் பிடிப்பது எப்படி? - விளக்கம்.

 

SC/ ST STUDENTS SCHOLARSHIP ONLINE ENTRY

CLICK HERE - SC/ ST SCHOLARSHIP ONLINE ENTRY

தேர்வுகளை, முன்கூட்டியே நடத்த, கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை.

நடப்பு கல்வியாண்டு, பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு பொது தேர்வுகளை, முன்கூட்டியே நடத்த, கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.வரும், 2016ல், தமிழக சட்டசபை தேர்தல் வருவதால், பொதுத் தேர்வுகளை, முன்கூட்டியே நடத்த, கல்வித் துறை அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.தமிழகத்தில், சென்னை உட்பட, 32 வருவாய் மாவட்டங்களில், பிளஸ் 2க்கு

லேப்-டாப் கணக்கெடுப்பு: தலைமை ஆசிரியர்கள் அதிர்ச்சி.

அரசு பள்ளிகளில் வினியோகிக்க வழங்கிய அரசின் இலவச லேப்- டாப் பதுக்கப்படுவதாக எழுந்த தகவலால் கணக்கெடுக்க பள்ளிக்கல்வித்துறைஉத்தரவிட்டுள்ளது.பிளஸ் 2 மாணவர்களுக்கு 2011 முதல் அரசின் இலவச லேப்- டாப் வழக்கப்படுகிறது. ஒவ்வொரு கல்வியாண்டிலும், பிளஸ் 2 முடித்தவர்களுக்கு வழங்கப்பட்டது.

ஜேக்டோ கூட்டம் முடிவுகள் முழு விவரம்

ஜேக்டோ கூட்டம் முடிவுகள்

1. டிசம்பர் மாவட்ட மறியல் மழை வெள்ள பாதிப்பால் ஜனவரி 30, 31, மற்றும் பிப்ரவரி முதல் தேதிக்கு மாற்றம்.

2. மாவட்ட ஜேக்டோ கூட்டத்தை உடனடியாக கூட்டுதல்

3. மாநில உயர்மட்ட ஜேக்டோ அடுத்த கூட்டம் வருகிற ஜனவரி 10ந் தேதி திருச்சியில் கூட்டுவது என முடிவாற்றப்பட்டது.

4. ஜனவரி 27, 28, 29 ஆகிய தேதிகளில் ஆசிரியர் சந்திப்பு

5. அரசு உத்தரவிடாமல் சில மாவட்டங்களில் அக்டோபர் 8 வேலை நிறுத்த ஊதியம் பிடித்ததை இயக்குநரிடம் முறையிடுவது
   
6. அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் மாநில திட்ட இயக்குனரின் ஆசிரியர் விரோதபோக்கு குறித்து நேரிடையாக இன்றே சந்தித்து முறையிடுவது  உள்ளிட்ட முடிவுகள் முடிவாற்றப்பட்டன

17/12/15 ஜாக்டோ உயர் மட்டக்குழு கூட்ட முடிவுகள்

தமிழகத்தில் ஏற்பட்ட கடும் மழை பாதிப்பு காரணமாக ஏற்கனவேடிசம்பர் மாதம் நடத்துவதாக அறிவித்த ஜாக்டோவின் மறியல் போராட்டம் ,  2016 ஜனவரி  30,31,பிப்ரவரி1 ஆகிய நாட்களில் (ஜாக்டோவின் மறியல் போராட்டம்) நடைபெறும் என மாநில ஜாக்டோ முடிவு பொதுக்குழுக்கூட்டம் முடிவாற்றியது.இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநில பொருளாளர் திரு.அலெக்சாண்டர்,மாநில துணைத்தலைவர் திரு.கே.பி.ரக்‌ஷித்,மற்றும் தலைமை நிலையச்செயலர் திரு.சாந்தகுமார் ஆகியோர் பங்கேற்றனர் tntf.in

பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வு விடுமுறை எப்போது?

 பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வுகள் ஜனவரி முதல் வாரத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான விடுமுறை எப்போது விடப்படும் என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு, ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தனியார் பள்ளிகளுக்கும் இது பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது .

புதிய பென்ஷன் திட்ட பணப்பலன் முதல்வரின் தனிப்பிரிவு கைவிரிப்பு: 4.20 லட்சம் ஊழியர்கள் அதிர்ச்சி


ராமநாதபுரம்:புதிய பென்ஷன் திட்டத்தில் பணப்பலனுக்கான அரசாணை இல்லை என, முதல்வரின் தனிப்பிரிவு கைவிரித்தது. இதனால் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்த 4.20 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.தமிழகத்தில் 2003 ஏப்., 1 க்கு பின் பணியில் சேர்ந்த 4.20 லட்சம் ஊழியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்க்கப்பட்டனர். இந்த திட்டத்தில் ஊழியர்களின் ஊதியத்தில் குறிப்பிட்ட தொகையை பிடித்து, மத்திய ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்தில் செலுத்த வேண்டும்.

வங்கி கணக்கு தொடங்க 'பான்' எண் கட்டாயம்: அருண்ஜெட்லி தகவல்!

அனைத்து வகையான வங்கி கணக்கு தொடங்குவதற்கும் 'பான்' எண் கட்டாயமாக்கப்படுகிறது என மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாடாளுமன்ற துணை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு அவர் பதிலளித்து பேசுகையில், ''உணவு கட்டணம், வெளிநாட்டு பயண டிக்கெட் போன்றவற்றுக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக செலவழித்தால் 'பான்' எண் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்படுகிறது.

திருக்குறள் திறனாய்வுப் போட்டியில் தேர்வான மாணவர்கள், தமிழறிஞர்களுக்கு தில்லியில் நாளை பாராட்டு விழா

திருக்குறள் திறனாய்வுப் போட்டியில் தேர்வான மாணவர்களுக்கும், தமிழ் மொழி மேன்மைக்குப் பாடுபடுவதற்காக தமிழறிஞர்களுக்கும் தில்லியில் வியாழக்கிழமை (டிசம்பர் 17) பாராட்டு விழா நடத்தப்படுகிறது.
 திருவள்ளுவர் மாணவர்கள், இளைஞர் மன்றங்கள் அமைப்பு சார்பில் நடத்தப்படும் இவ்விழா நாடாளுமன்ற இணைப்புக் கட்டட பிரதான அரங்கில் நடைபெறுகிறது.
 இதுகுறித்து, திருவள்ளுவர் மாணவர்கள், இளைஞர் மன்றங்கள் அமைப்பின் தேசியத் தலைவரும் உத்தரகண்ட் மாநிலங்களவை பாஜக உறுப்பினருமான தருண் விஜய் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

ரூ.2 லட்சத்தை தாண்டுகிறதா? 'பான்' எண் அவசியம்

 புதுடில்லி:கறுப்பு பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், இரண்டு லட்சம் ரூபாய்க்கு அதிகமான, அனைத்து நிதிப்பரிவர்த்தனைகளுக்கும், 'பான்' எனப்படும், நிரந்தர கணக்கு எண், விரைவில்கட்டாயமாகிறது.

லோக்சபாவில் நேற்று, துணை மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்தின் போது, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:இரண்டு லட்சம் ரூபாய்க்கு அதிகமாக மேற்கொள்ளப்படும் அனைத்து நிதிப் பரிவர்த்தனைகளுக்கும், பான் எண் கட்டாயம் என்ற அறிவிப்பு, விரைவில் வெளியாகும். உள்நாட்டில் கறுப்பு பணத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்த நடவடிக்கை

மாணவர்களை சேர்க்க மறுக்கும் அரசு பள்ளிகள்!

 பல்வேறு காரணங்களுக்காக, தனியார் பள்ளிகளிலிருந்து இடையில் நிற்கும் மாணவர்களை, அரசு பள்ளிகளில் சேர்க்க மறுப்பதால், அவர்கள் படிப்பை தொடர முடியாத நிலை ஏற்படுகிறது.

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் செப்டம்பர், 31 ம் தேதி வரை, மாணவர் சேர்க்கை நடடக்கிறது. ஆனாலும், கட்டாயக் கல்விச்சட்டத்தின் படி, 14 வயது வரையுள்ள மாணவர்களை, பள்ளியில் சேர்க்க எவ்வித மறுப்பும் தெரிவிக்கக்கூடாது என, வலியுறுத்தப்படுகிறது.

ஆர்.எம்.எஸ்.ஏ., புத்தகங்கள் விலை ஆயிரம் ரூபாய் கூட இருக்காது!!

 தமிழகத்தில் அனைவருக்கும் இடைநிலைக் கல்வி இயக்கம் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) சார்பில் பள்ளிகளுக்கு வழங்கப்பட்ட, ரூ.7500 மதிப்பிலான புத்தகங்களின் உண்மை மதிப்பு ரூ.ஆயிரம் கூட இருக்காது என சர்ச்சை எழுந்துள்ளது.

ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில், ஆறு முதல் 9ம் வகுப்பு வரை அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளுக்கு ஆண்டுக்கு ரூ.50 ஆயிரம் பள்ளி மானியமாக வழங்கப்படுகிறது. இதில், பள்ளி நுாலகங்களுக்கு ரூ.7500க்கு புத்தகங்கள் வாங்க அத்திட்ட அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

How to apply NMMS exam

பள்ளிக்கல்வி - சுகாதார முன்னெச்சரிக்கைகள் - பள்ளிக்கு முன்பாக சுகாதாரமற்ற முறையில் விற்கப்படும் உணவு பொருட்களை மாணவர்கள் வாங்கி உண்ணக்கூடாது என ஆசிரியர்கள் அறிவுறுத்த வேண்டும் - இயக்குநர் செயல்முறைகள்!!

பொது நிவாரண நிதி வழங்குதல் - விருப்ப விண்ணப்பம் .

முதலாம் ஆண்டு என்ஜினீயரிங் மாணவர்கள் தேர்வை தள்ளி வைக்க முடியாது: ஐகோர்ட்டு உத்தரவு

அப்துல்கலாம் விஷன் இந்தியா அறக்கட்டளையின் அறங்காவலர் குமார். ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது:–‘வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததால், தமிழகத்தில் கனமழை பொழிந்து, பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் இன்றும் மின்சார இணைப்பு இல்லாமல் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகம், வருகிற 15–ந்தேதி முதல், என்ஜினீயரிங் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ‘செமஸ்டர்’ தேர்வுகள் நடத்தப்படும் என்று கடந்த 10–ந்தேதி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த செமஸ்டர் தேர்வை

டி.என்.பி.எஸ்.சி., பணியிடங்களுக்கு பணம் வசூல்; மாணவர்களே‘உஷார்’.

டி.என்.பி.எஸ்.சி., குரூப்-2, வி.ஏ.ஓ., தேர்வு எழுதும் மாணவர்களிடம் வேலைவாங்கிதருவதாககூறி ஒரு சிலர் பணம் பறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகபுகார் எழுந்துள்ளது. தமிழக அரசு போட்டித் தேர்வுகள் மூலம் அரசு பணியிடங்களை நிரப்பி வருகிறது. தற்போது குரூப்-2ஏ மற்றும் வி.ஏ.ஓ., பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

வைகுண்ட ஏகாதசி: திருச்சியில் வரும் 21ஆம் தேதி உள்ளூர் விடுமுறை

வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு வரும் 21 ஆம் தேதி திருச்சியில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது

சிறுபான்மை சமுதாயத்தில் இருந்து மத்திய அரசு பணிகளுக்கு 9 சதவீத ஊழியர்கள் தேர்வு: அரசு தகவல்

சிறுபான்மை சமுதாயத்தில் இருந்து 2014-15 நிதியாண்டில் மத்திய அரசுத் துறைகளுக்கு சுமார் 9 சதவீத பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

ரூபாய் நோட்டுகளில் எழுதியிருந்தால் செல்லாது: வதந்தி என ரிசர்வ் வங்கி விளக்கம்

 இந்திய ரூபாய் நோட்டுகளில் உள்ள வெள்ளைப் பகுதியில் ஏதாவது எழதப்பட்டிருந்தால் அவை செல்லாது சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மையல்ல என ரிசர்வ் வங்கி விளக்கம் அளித்துள்ளது.

இந்திய ரூபாய் நோட்டுகளில் ஏதாவது கிறுக்கப்பட்டிருந்தால் அவை வரும் ஜனவரி முதல் செல்லாது என்ற தகவல் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

31 ஆயிரம் மாணவர்களுக்கு புதிய சீருடைகள்: சமூக நலத்துறை

வெள்ளத்தால் சீருடைகளை இழந்த 31 ஆயிரம் மாணவர்களுக்கு புதிய சீருடைகள் அனுப்பப்பட்டுள்ளன என சமூக நலத் துறையினர் தெரிவித்தனர். தொடர் மழை, வெள்ளம் காரணமாக, கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தன. வெள்ளத்தால் மாணவர்களின் புத்தகங்கள், சீருடை உள்ளிட்ட கல்வி உபகரணங்களும் பறிபோயின. இதையடுத்து, தமிழக அரசின் சார்பில் சீருடைகள், புத்தகங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் ஒரு நாளுக்கு அதிகமான ஊதியத்தையும் அளிக்கலாம் - தன்னார்வமாகவே இருக்க வேண்டும் : தமிழக அரசு அறிவிப்பு

முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு, ஒரு நாளைக்கு அதிகமான ஊதியத்தையும் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அளிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் தங்களது ஊதியத்தை அளிப்பது தொடர்பாக, தலைமைச் செயலாளர் கே.ஞானதேசிகன் வெளியிட்ட அறிவிப்பு:

முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு, தன்னார்வமாக ஒரு நாள் ஊதியத்தை அளிக்க விரும்பும் ஊழியர்கள், அதற்கான விருப்பத்தை எழுத்துப்பூர்வமாக சம்பந்தப்பட்ட சம்பளம் வழங்கும் அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும். சம்பளம் வழங்கும் அலுவலர், டிசம்பர் மாதத்துக்கான ஊதியத்தை 31 நாள்களைக் கொண்டு வகுத்து ஒரு நாள் ஊதியத்தை கணக்கிடுவார்.

பணியில் இருந்து கொண்டே ஒரே நேரத்தில் இரு படிப்பை முடித்த ஆசிரியைக்கு பதவி உயர்வு கிடையாது: உயர் நீதிமன்றம் உத்தரவு

பணியில் தொடர்ந்தவாறு ஒரே நேரத்தில் பி.எட். மற்றும் முதுநிலை ஆங்கில இலக்கிய பட்டப்படிப்பை முடித்த ஆசிரியைக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க மறுத்தது சரிதான் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசு மேல்நிலைப் பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணிபுரிந்து வருபவர், தனக்கு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க உத்தரவிடக் கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அவர் மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்ததால், அவர் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவை விசாரித்து நீதிபதிகள் வி.ராமசுப்பிரமணியன், என்.கிருபாகரன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:

தேசிய வழிபாடு நகரமாகிறது சபரிமலை

 சபரிமலை: சபரிமலையை தேசிய வழிபாடு நகரமாக்கும் அறிவிப்பு, ஓரிரு நாளில் வெளியாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

சபரிமலை அமைந்துள்ள இடம், பெரியாறு புலிகள் சரணாலயத்துக்கு உட்பட்ட பகுதியில் வருகிறது. இங்கு, எந்த பணி நடத்த வேண்டுமென்றாலும், வனத்துறையின் அனுமதி பெற வேண்டும். பல திட்டங்களுக்கு வனத்துறை அனுமதி கொடுக்காமல் கிடப்பில் கிடக்கிறது.

அரையாண்டு தேர்வு ரத்து? அரசு தீவிர ஆலோசனை

வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லுாரிகள், ஒரு மாதத்துக்கு பின், இன்று செயல்பட துவங்கின.

இம்மாவட்ட பள்ளிகளில், ஜனவரி முதல் வாரத்தில், அரையாண்டு தேர்வு நடக்கும் என, கன மழைக்கு முன் அரசு அறிவித்திருந்தது. தற்போது, அதை நடத்த முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இன்னும், 10 நாட்களில், மிலாது நபி மற்றும் கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிறது. எனவே, அரையாண்டு தேர்வு மற்றும் கிறிஸ்துமஸ் கால விடுமுறை குறித்து, அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வரவில்லை.இந்நிலையில், அரையாண்டு தேர்வு பற்றி, அரசு தரப்பில் தீவிர ஆலோசனை துவங்கி உள்ளது

வெள்ளம் பாதித்த 4 மாவட்டங்களுக்கு அண்ணா பல்கலை தேர்வுகள் ஒத்திவைப்பு

 வெள்ளம் பாதித்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் உள்ள 148 பொறியியல் கல்லூரி தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டதாக அண்ணா பல்கலை கழகம் அறிவித்துள்ளது. மேலும் 4 மாவட்ட பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான தேர்வு 28-ல் தொடங்கும். தேர்வுகளுக்கான அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும் என அண்ணா பல்கலை கழகம் தெரிவித்துள்ளது. முன்னதாக வெள்ளம் பாதித்த கல்லூரிகளில் மட்டும் தேர்வுகளை ஒத்திவைக்குமாறு அண்ணா பல்கலை கழகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மழை வெள்ள பாதிப்புகளால் தேர்வை தள்ளிவைக்க அண்ணா பல்கலை கழகத்திற்கு உத்தரவிட கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு நீதிமன்ற உத்தரவின்படி மாலையில் பல்கலை கழக நிர்வாகம் பதில் அளித்தது. அதில் நாளை தொடங்கும் தேர்வுகள் டிசம்பர் 28 முதல் ஜனவரி 8-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாக பல்கலை கழகம் கூறியிருந்தது.

வெள்ளம் பாதித்த 4 மாவட்டங்களில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன: புதிய சீருடை, புத்தகம் வழங்கப்பட்டது

சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த நவம்பர் மாதம் 12–ந்தேதி முதல் தொடர் மழை பெய்ததால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.இடையில் நவம்பர் 19, 20, 21, 23 ஆகிய 4 நாட்கள் மட்டும் பள்ளிகள் இயங்கின.தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1–ந்தேதி பெய்த 100 ஆண்டு வரலாற்று சாதனை மழையால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களும் வெள்ளத்தில் மிதந்தன. ஏராளமான மாணவ–மாணவிகளின் நோட்டு, புத்தகங்கள் வெள்ளத்தில் சேதம் அடைந்தன. இதனால் நேற்று வரை பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படவில்லை.பெரும்பாலான பள்ளி, கல்லூரிகள் நிவாரண முகாம்களாக மாற்றப்பட்டதாலும்,

மனோன்மணியம் பல்கலைக்கழக அஞ்சல் வழிக்கல்வித்தேர்வுகள் மறுதேதி குறிப்பிடாமல் தள்ளிவைப்பு


7–வது சம்பள கமிஷன் அறிக்கையை அமல்படுத்துவது 6 மாதம் தாமதமாகும்?: குறைபாடுகளை நீக்க தீவிர ஆலோசனை

 மத்திய அரசு ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு தடவை சம்பள விகிதம் சீரமைக்கப்படும்.இதற்காக மத்திய அரசு ‘‘சம்பள கமிஷன்’’ ஏற்படுத்தி ஆய்வு செய்து, அதனிடம் அறிக்கை பெற்று நடவடிக்கை எடுக்கும் .மத்தியில்பா.ஜ.க. ஆட்சி அமைந்ததும் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளத்தை, விலைவாசி உயர்வுக்கு ஏற்ப சீரமைக்க 7–வது சம்பள கமிஷன் அமைக்கப்பட்டது.

நடப்பு கல்வியாண்டில் அரையாண்டு தேர்வை நடத்தக்கூடாது: தலைமை நீதிபதியிடம், வக்கீல் மனு

சென்னை ஐகோர்ட்டில் தலைமை நீதிபதி, புஷ்பா சத்தியநாராயணன் ஆகியோர் நேற்று காலையில் வழக்குகளை விசாரிக்கத் தொடங்கினார்கள். அப்போது, மாற்றுத்திறனாளி வக்கீல் முகமது நசரூல்லா ஆஜராகி ஒரு மனுவை நீதிபதிகளிடம் கொடுத்தார். அந்த மனுவில் கூறி இருப்பதாவது:–
தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இந்த கனமழையினால், சென்னை,காஞ்சீபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட பல மாவட்டங்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியுள்ளது. குடிநீர், உணவு, உடை, இருப்பிடம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை மக்கள் இழந்து கடுமையாக அவதிப்படுகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில்

சனிக்கிழமை வகுப்புகள் நடத்துவது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரே முடிவு செய்து கொள்ளலாம் - பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா


பள்ளி கல்வித்துறை செயலாளர் சபீதா கூறியதாவது:–
10–ம் மற்றும் 12–ம் வகுப்பு பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும். விடுமுறை காலம் அதிகமானதால் அதனை ஈடுசெய்யும் வகையில் பாடங்களை முடிக்க சிறப்பு வகுப்புகள் நடத்திக்கொள்ளலாம். தேவைப்பட்டால் வகுப்பு நேரத்தை பள்ளிகள் தங்கள் தேவைக்கு ஏற்ப அதிகரித்து கொள்ளலாம்.

இது தவிர, சனிக்கிழமை வகுப்புகள் நடத்துவது குறித்து அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியரே முடிவு செய்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

FLASH NEWS : G.O Ms : 117 - கனமழை - முதலமைச்சர் நிவாரண் நிதிக்கு அரசு ஊழியர்களின் ஒருநாள் ஊதியம் பிடித்தம் செய்ய உத்தரவு

பொதுத்தேர்வு பட்டியல் நாளை வரை அவகாசம்



திருப்பூர்: வரும், 2016, மார்ச் மாதம், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகிறது.

நடப்பு கல்வியாண்டில், பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மாணவ, மாணவியர் பெயர் பட்டியலை, பள்ளிகள் வாரியாக தயாரித்து, தயார் நிலையில் வைத்திருக்க, பள்ளி கல்வித்துறை ஏற்கனவே, தலைமை ஆசிரியர்களுக்கு

10, 12ம்வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி புத்தகம்



சென்னை: பொதுத்தேர்வு எழுத உள்ள 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி நேரத்திலேயே சிறப்பு வகுப்புகள் நடத்தப்படும்.

அவர்கள் தேர்வை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் சிறப்பு பயிற்சி புத்தகம்

பள்ளிகள் திறந்தன; சனிக்கிழமைகளிலும் இயக்க போவதாக தகவல்



சென்னை: மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் 33 நாட்கள் விடுமுறைக்கு பிறகு இன்று பள்ளிகள் திறந்தன.

ஒரு மாத காலமாக விடப்பட்ட விடுமுறையை ஈடுகட்ட இனி சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை இயக்க பள்ளி கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் இத்தகவலை

கடல் நீர்மட்டம் உயர்வால் மெதுவாக சுழலும் பூமி



டொரான்டோ: 'கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், பூமியின் சுழற்சி வேகம் குறைந்து வருகிறது' என, ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, கனடாவின் அல்பெர்டா பல்கலை பேராசிரியர், மேத்யூ டம்பெரி கூறியதாவது: புவி வெப்பம் அதிகரித்து வருவதால், துருவப் பகுதிகளில் உள்ள

மழையால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் பள்ளிகள் சனிக்கிழமைகளில் செயல்படும்-பள்ளிக்கல்வி இயக்குனர்

மழையால் பாதிக்கப்பட்டு விடுமுறை விடப்பட்ட மாவட்டங்களில் பள்ளிகள் சனிக்கிழமைகளில் இயங்கும்.மேலும் தினமும் சிரப்பு வகுப்புகள் நடத்தப்படும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார்

பாடம் நடத்தாத ஆசிரியர்கள் விளக்கம் கேட்டு 'நோட்டீஸ்'

சரிவர பாடம் நடத்தாத ஆசிரியர்கள், ஏழு பேரிடம் விளக்கம் கேட்டு, முதன்மைக் கல்வி அலுவலர், 'நோட்டீஸ்' கொடுத்துள்ளார். வேலுார் மாவட்டம், பள்ளிகொண்டா அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில், தமிழ், ஆங்கிலம் மற்றும் உருது மொழிக்கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது; 21 ஆசிரியர்கள் உள்ளனர்.

பள்ளி, கல்லூரிகள் இன்று திறப்பு மாணவர்களுக்கு இலவச புத்தகம் தயார்


சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் கடலுார் மாவட்டங்களில், 34 நாள் விடுமுறைக்கு பின், இன்று, பள்ளிகள் திறக்கப்படுகின்றன. வெள்ளத்தில் புத்தகங்களை பறிகொடுத்த அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு, புத்தகங்கள் மற்றும் சீருடைகள் இலவசமாக வழங்கப்பட உள்ளன.

3 மாவட்ட பள்ளி மாணவர்களுக்கு இன்று முதல் மருத்துவப் பரிசோதனை


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள மாணவர்களுக்கு தொற்றுநோய்கள் குறித்த பரிசோதனை திங்கள்கிழமை முதல் மேற்கொள்ளப்பட உள்ளது. அனைவருக்கும் நிறைவடையும் வரை பரிசோதனை தொடரும்.
மழை, வெள்ள பாதிப்பைத் தொடர்ந்து, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் சுமார் ஒரு மாதத்துக்குப் பின்னர் திங்கள்கிழமை திறக்கப்பட உள்ளன. 

4 மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு அண்ணா பல்கலை. சிறப்புச் சலுகை

 தேர்வுகளை ஜனவரிக்கு ஒத்திவைக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தைத் தொடர்ந்து, மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 4 மாவட்டங்களில் உள்ள 148 பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறப்புச் சலுகையை அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி, முதலாமாண்டு முதல் பருவத் தேர்வை எழுதுவோர் விருப்பப்பட்டால் இப்போது எழுதலாம். இல்லையெனில், இரண்டாம் பருவத் தேர்வுக்குப் பின்னர் ஏப்ரல்-மே மாதங்களில் முதல் பருவப் பாடங்களை எழுதிக் கொள்ளலாம். 

வகுப்பறையில் பூச்சி தொல்லை ஆசிரியர்கள் சோதிக்க உத்தரவு

சென்னை:'வகுப்பறையில் பூச்சிகள் இருக்கிறதா என்பதை ஆய்வு செய்த பிறகே, மாணவர்களை அனுமதிக்க வேண்டும்' என, தலைமை ஆசிரியர்களுக்குஉத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் இன்று, பள்ளி, கல்லுாரிகள் திறக்கப்படுகின்றன. இந்நிலையில், அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும், கல்வித்துறை அதிகாரிகள் சுற்றறிக்கை அனுப்பியுள்ளனர்.
அதன் விவரம்:

பிளஸ் 2 பொதுத்தேர்வு எப்போது? மாணவர்கள் குழப்பம்

பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்புக்கான பொதுத் தேர்வு தேதியை அறிவிக்காததால், தேர்வு தாமதமாகுமோ என, மாணவர்கள் குழப்பம் அடைந்துஉள்ளனர்.
பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, ஒவ்வொரு ஆண்டும், மார்ச்சில் பொதுத் தேர்வு நடக்கும். ஆனால், நடப்பு கல்வி ஆண்டில்,ஏப்ரலில் சட்டசபைக்கு தேர்தல் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதால், பிப்ரவரியில் இருந்து தேர்தல் சார்ந்த பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டியுள்ளது. எனவே, பொதுத் தேர்வை விரைவில் முடிக்க வேண்டும்.

தொடர் விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறப்பு:பள்ளிகளை திறக்க வேண்டியது தலைமை ஆசிரியர்களின் பொறுப்பு'

தொடர் விடுமுறை முடிந்து இன்றுபள்ளிகள் திறப்பு:

பள்ளிகளை திறக்க வேண்டியது தலைமை ஆசிரியர்களின் பொறுப்பு'

'எந்த நிலையில் இருந்தாலும், பள்ளிகளை நாளை திறந்து இயல்பு நிலையை காட்ட வேண்டும்' என, ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனால், சுத்தம் செய்யப்படாத பள்ளிகளில், மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படுமோ என, பெற்றோர் அச்சம் அடைந்துள்ளனர். நான்கு மாவட்டங்களை புரட்டிப்போட்ட வெள்ளப்பெருக்கை தொடர்ந்து, பள்ளிகளுக்கு அறிவிக்கப்பட்ட தொடர் விடுமுறை, நேற்றுடன் முடிவுக்கு வந்தது

'எல்நினோ' என்றால் என்ன?

 .எல்நினோ என்பது ஸ்பானிஷ் மொழிச் சொல். இதற்கு 'சிறு பையன்' என்று பொருள். பரந்த வெப்ப மண்டல பசிபிக் பெருங்கடல், உலகிலேயே அதிக சூரிய ஒளியை பெறுகிறது. இந்த ஒளி, வெப்பமாக கடலினுள் சேர்த்து வைக்கப்படுகிறது. பொதுவாக, பசிபிக் காற்று கிழக்கிலிருந்து மேற்காக வீசி, இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதி,

சென்னையில் 29 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை

சென்னையில் 29 பள்ளிகளுக்கு மட்டும் இன்று  விடுமுறை

விடுமுறை விடப்படும் 29 பள்ளிகள் விவரம்:
சென்னையில் 29 பள்ளிகளைத் தவிர மீதமுள்ள பள்ளிகள், கல்லூரிகள் திங்கள்கிழமை வழக்கம்போல் செயல்படும் என சென்னை மாவட்ட ஆட்சியர் எ.சுந்தரவல்லி தெரிவித்துள்ளார். இந்த 29 பள்ளிகளுக்கும் திங்கள்கிழமை மட்டும் ஒருநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் பள்ளிகளின் விவரம்:-

தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி-2016 ஆம் ஆண்டு டைரி காலண்டர் அறிவிப்பு


தமிழ்நாடு ஆசிரியர் கூட்டணி மாநில பொதுக்குழு அழைப்பு

தொடருமா எஸ்.எஸ்.ஏ திட்டம்?

வங்கிகளுக்கு 4 நாள் தொடர் விடுமுறை

டிச., 23ல், மிலாடி நபி; 25ல், கிறிஸ்துமஸ் பண்டிகைகள் வருகின்றன. 26ல், நான்காவது சனிக்கிழமை விடுமுறை; 27ல், ஞாயிறு விடுமுறை என, வங்கிகளுக்கு தொடர் விடுமுறை வருகிறது. இதற்கிடையே, 23ல் அறிவிக்கப்பட்ட மிலாடி நபி, 24க்கு மாற்றுப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அப்படி மாற்றி அறிவித்தால், 24 முதல், 27 வரை, 4 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது.
இதுகுறித்து, கனரா வங்கி மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது: 'மிலாடி நபி விடுமுறை, டிச., 23' என, வங்கிகளுக்கு அறிவிக்கப்பட்டு உள்ளது. இதில், இதுவரை மாற்றம் இல்லை. அதனால், 24ல், வங்கிகள் இயங்கும். 25 முதல் 27 வரை விடுமுறை. தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பேரிடர் பாதிப்பை தொடர்ந்து, தொடர் விடுமுறை ரத்தாக வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

TNPSC DEPARTMENTAL EXAM TIMETABLE DEC 2015


திருவள்ளூர் மாவட்டத்தில்இன்று 5பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று  (14/12/16 )  ஐந்து பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை வழங்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் வீரராகவ ராவ் கூறியுள்ளார். பூந்தமல்லி ஆண்கள் மற்றும் பெண்கள் உயர்நிலைப்பள்ளிகள், பூந்தமல்லி பார்வையற்றோர் பள்ளி, போரூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, பூதம்பேடு பஞ்சாயத்து பள்ளிக்கு  விடுமுறை வழங்கப்படுகிறது.மற்ற பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் வழக்கம் போல் செயல்படும் என கலெக்டர் கூறியுள்ளார்.

NMMS தேர்வு ONLINE - இல் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீடிப்பு



web stats

web stats